அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கோபுரம் ஏறிக் கோழி மேய்ப்பானேன்?

சீனநாட்டுச் சர்க்கார் சீறினர் ஒரு காலத்தில், தமிழகத்துக்குத் தங்கள் நாட்டுச் செல்வம் போய்விடுகிறதே என்று, தமிழ்நாட்டவர், கடலில் கலம் செலுத்தி வாணிபம் நடத்திப் பெரும் பொருள் உட்டினர். அந்த வாணிபத் துறையினால், சீனா நாட்டுச் செல்வம் குறைந்து விடுவதாகக் கருதி, அந்நாட்டுச் சர்க்கார், தமது நாட்டவருக்குத் தடை விதித்தனர், தமிழகத்தோடு வாணிபம் செய்வதை நிறுத்த மேனாடுகள் எங்கும் சென்ற தமிழர், ஆகிலையும் சந்தனத்தையும், முத்துப் பவளத்தையும், இடை வகைகளையும் விற்றனர், தமிழகத்திலே கொண்டு வந்து பொருளைக் குவித்தனர். குவித்தவர் வாழ்ந்தனரோ? இல்லை! மன்னர்கள், செல்வத்தில் புரண்டனர், மதக்குருமாராக ஆரியர் அமர்ந்தனர், ஆரிய மார்க்கத்தைப் புராணங்கள் புகுத்திவிட்டன, அரசனும் மக்களும் வாரி வாரி இறைத்தனர் பொன்னையும் மணியையும், குன்றெல்லாம் கோயில், மலைகளெல்லாம் குடையப்பட்டன, எங்கும் இலயம், இலயமெங்கணும் விலையுயர்ந்த நகைகள், விமரிசையான திருவிழாக்கள், இதன் பயனாக விளைந்தது என்ன, மக்கள் உழைத்து, மன்னனிடம் தர, மன்னன் மகேசனிடம் தருவதாக எண்ணிக் கொண்டு மறையோரிடம் தர, மறையோர் உண்டு கொழுத்து ஊராள்வோனையும் மிரட்டும் நிலை பெற்றனர். மன்னர்கள், வெளிநாட்டிலிருந்து வந்த, பாடுபடாத கூட்டத்தாருக்குத் தருவதாகவா ஏன்ணினர்? இல்லை! பக்திக்காகத் தருவதாக எண்ணினர்! தாம் செய்யும் தான தருமம், இலயப் பணியாவும் பிரமாதமில்லை. இவை எம்மாத்திரம், இல்லையே என்னாத இயற்பகை என்ன, விளையா விதையை எடுத்தளித்த இளையான்குடிமாறனென்ன, கண்ணையே அப்பிய வேடர் குலத்தவனென்ன, தனத்தையும் தன்னையுமே அளித்த அமர்நீதி என்ன, இவர் போன்றார் பக்தியின் பொருட்டுச் செய்ததிலே பாவியேன் யான் பத்தாயிரத்தில் ஓர் பங்கும் செய்தேனில்லை, பரமனே, என்று எண்ணினர் - எண்ண வைத்தது பெரிய புராணம்.

பெரியபுராண காலத்துக்குப் பிறகு, 11, 12வது நூற்றாண்டுகளிலும் அதற்குப்பிறகும், செல்வம் சீரழிந்தது, பாடுபடுவோர் பட்டினி கிடந்தனர், பாடுபடாத பார்ப்பன குலம், நாடு ஆண்டவரை மிரட்டி நல்வாழ்வு வாழ்ந்தது. செல்வம் இருந்தும் சீரழிக்கப்பட்டு, உழைத்தும் பயன் காணாது குமுறும் மக்கள், வெளிநாடுகளிலே புரட்சி செய்திருப்பர் - இங்கோ, புண்ய கைங்கரியம் செய்கிறான் பூபதி, இதைக் குறைகூறுவதே பாபம், என்று மக்கள் வாயடக்கி வாழ்ந்தனர், இதற்குப் பெரிய புராணம் மிகமிகப் பயன்பட்டது - மன்னரை மாற்றான்முன் மண்டியிடச் செய்ய - மக்களை மதியிழக்கச் செய்ய! யாரார், ஆரியர் வாழ்வுக்கேற்றவிதமான ஆட்சி நடத்தினாரோ ஆவரெல்லாம் புகழப்பட்டனர் - இம் மன்னன் மனுதர்மத்தை அனுஷ்டிக்கிறான் என்று வீரராஜேந்திரனை விப்பிரர் புகழ்ந்தனர் என்று செப்பேட்டில் செதுக்கப்பட்டிருக்கிறது. காணும் கல்வெட்டுக்கள், எதைக் காட்டுகின்றன, நமது காவலர்கள், மக்கள் உழைத்துத் தேதடிய பொருளை எல்லாம், ஆரியருக்குக் காணிக்கையாகத் தந்த, கண்மூடிச் செயலைத்தான். கோயில் அமைப்பதும், அங்கு கொட்டுமுழக்கம் கூத்தாடுவோரும், குழலூதியும் அமைப்பது, திருப்பணி என்று பெரியபுராணம் தெரிவித்து - அத்தகைய செயல் புரிந்தோர், பரமனின் அருள் பெற்றனர் என்று பாடல்கள் பாடப்பட்டன. எனவே மன்னர்கள் கட்டு கோயிலை! வெட்டு திருக்குளம்! கொடு காணிக்கை! தான தருமங்களைத் தயங்காமல் செய்! சதுர்வேதி மங்கலங்களை ஏற்படுத்து என்று உத்தரவிட்டனர். ஊரெங்கும் கோயில்! கோயிலெல்லாம், அந்தக் கும்பல்!! தாளச்சத்தம், மேளச்சத்தம்! மக்களின் பட்டினிக் குரலை மன்னர் காதில் விழவொட்டவில்லை.

போர்முறையிலே புல்லர் கையாளும் திட்டம் ஒன்றுண்டு. அதாவது எதிரி உபயோகிக்கும் நீர் நிலையங்களிலே நஞ்சு கலந்து விடுவர், அங்கு நீர் பருகி எதிரி மாள்வர், அதுபோல, பெரியபுராணம் முதலிய ஏடுகள், தமிழகத்திலே தூவிய எண்ணங்கள், தமிழர் வாழ்விலே நஞ்சு புகுத்திவிட்டன, நசித்தது தமிழகம். தமிழ்நாட்டில் “சதுர்வேதி மங்கலங்கள்” அமைத்தனரே, அதைவிட வேறுஎன்ன சான்று வேண்டும், தமிழரின் செல்வம் ஆரியருக்குக் கொட்டி ஆழப்பட்டது என்பதை விளக்க.

மன்னர்கள் வரி கேட்பதிலோ, குறைவு கிடையாது. கடமை, குடிமை என்று இருவகை வரி, கடமை, அரசகாரியத்துச் செலவுக்காக, ஆஅதே அனைவரும் புகழும் இறிலொறு கடமை என்பது, குடிமை என்பது பலர் தெரிந்து கொள்ளாதது, அது இலய காரியத்துக்கும் ஆரிய சேவைக்குமான செலவுக்கென்று மன்னர் திரட்டியது. நிலத்துடன் நின்றுவிடவில்லை வரி, தொழிலுக்கு உண்டு, பொருளுக்கு உண்டு - சுங்கவரி இருந்தது.

ஏரி மீன்காசு - மீன்பிடிப்போருக்கு
இடைப்பட்டம் - இடு மேய்ப்போருக்கு
இடங்கை வரி - இடங்கை தொழிலாளருக்கு
கடை வரி - வியாபாரிக்கு
குசக்காணம் - குயவருக்கு
ஓடைக்குழி - ஓடம் விடுவோருக்கு
செக்குக் கடமை - வாணியருக்கு
வண்ணார்பறை - வண்ணாருக்கு
விற்படி - வேடருக்கு

என்ற முறையிலே தொழில்வரிகள் வசூலிக்கப்பட்டன. இரும்புகள், ஊப்பு ஆகியவற்றுக்கு வரி. பொருளை ஏற்றுமதி செய்தால் வரி, இறக்குமதிக்கு வரி, ஸ்தலதாயம், மார்க்கதாயம், மாமூலதாயம் என்ற வரிவகைகள். இவ்வளவு வரியும் கிடைத்தபோது வாட்டமேது மன்னனுக்கு! வாணிபர்கள் உட்டிய பொருளைக் குவித்த பிறகு, வளுமை எது நாட்டிலே! ஆனால் வளமான இந்நாட்டிலே சலியாத உழைப்பால் மக்கள் சேகரித்த செல்வமெல்லாம், எப்படிப் பாழாயின என்பதைச் செப்பேடுகளும், சிலாசாசனங்களும், கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன.

பெரியபுராணம், பரவிய நாட்டிலே, சிவனருளும் சேர்ந்து பரவிற்றோ? பஞ்சம் பரவிற்று! ஏன் பரவாது? கிடைக்கும் பொருளெல்லாம், சதுர்வேதி மங்கலத்தாருக்குச் செலவாகிவிடவே, மக்கள் பஞ்சத்தால் வாடலாயினர். பெரியபுராணத்தைப் படித்துப் பயன்காணவில்லை! தொண்டர் பெருமையை உணர்ந்து, ஊர்சுகப்படவில்லை! தமிழகத்திலே பஞ்சம் தலைவிரித்தாடிற்று! செல்வம் கொழித்த தமிழகத்திலே? பட்டினிக்குரல்! பல, வனகப்பஞ்சங்கள்! தங்கச் சிலைகள் கோயிலிலே! வைரமுடிகள் அவை தம் சிரங்களிலே! சிங்கத் தமிழர் செத்து வீழ்ந்தனர் பாதையிலே, பஞ்சத்தால்! சாந்தத்தையும் சீலத்தையும் பக்தியையும் உண்டாக்கிய ஐடன்றோ என்று கொண்டாடுகிறார்கள் பெரியபுராணத்தை. ஆனால், அதை நாட்டிலே பரப்பி, மக்களையும் மன்னரையும் நீறுபூசிகளாக்கிய பிறகு, நாடு செழித்ததோ, வளம் வளர்ந்ததோ? இல்லை! கிடைத்ததை எல்லாம், இலயத்திருப்பணிக்கும், ஆம்மையப்பன் திருவிழாவுக்கும் செலவிட்டு, மக்கள் ஒய்ந்தனர், பஞ்சமும் வந்துற்றது, அதுபோது சாய்ந்தனர் - சிவலோகம் சென்றனர், சோற்றுக்கில்லாதார் தொகை தொகையாக!

பஞ்சம்
1054 - இலங்கு
1116 - 1119 - தக்ஷிணம்
1124 - திருவத்தூர்
1160 - திருக்கடையூர், தஞ்சை
1201 - திருப்பாம்பரம், தஞ்சை
1241 - திருமங்கலக்குடி, தஞ்சை
1390-1 - திருப்பனங்காடு, வடாற்காடு
1391 - திருக்களார், தஞ்சை
1509 - கன்கனஹல்லி, பெங்களூர்

என்ற முறையிலே, இந்தத் தமிழகத்திலே பஞ்சம் தலை விரித்தாடிற்று. பஞ்சாட்சரம் ஜெபித்துக் கொண்டு இருந்த மக்கள் இந்தப் பஞ்சங்களைத்தானா பரமனிடமிருந்து பரிசுகளாகப் பெற வேண்டும்! பக்திப் பிரபாவத்தின் விளைவு இதுவாகவா இருக்க வேண்டும்! சைவம் தழைத்தது. தொண்டர் பெருமையைச் சேக்கிழார் செந்தமிழில் எடுத்துக்கூறியதால் என்று பூரிப்படையும் அன்பர்கள், இத்தனை பஞ்சங்களும், 11-வது நூற்றாண்டிலே பக்திப்பரவசத்திலே பொருளைப் பாழாக்கத் தொடங்கிய தமிழகம் 11-லிருந்து 15-வது நூற்றாண்டு வரையிலே, பஞ்சத்தில் சிக்கித் தவித்ததை, திருஅருளின் மாட்சிமையிலே ஒன்றாகக் கொள்வரோ!

சேக்கிழார் குறிப்பிடும் தலங்களிலே பெரும்பகுதி தஞ்சை மாவட்டமாக இன்றுள்ள சோழவளநாட்டிலே உள்ளன. இவரும் சோழனிடமே மந்திரி. சோழாடு சோறுடைத்து என்பது முதுமொழி. அந்நாடு, பஞ்சத்தால் நலிவதா? பணம் குவியாமலா இருந்தது? பணம் ஏராளம்! அவை கோயில்களிலே குவிந்து கிடந்தன. பார்போசா எனும் வரலாற்று ஏட்டாசிரியர் கூறுகிறார். “மாலிக்காபூர் என்ற ஆஸ்லாமிய வீரன் தென்பகுதியிலே வெற்றிகள் பல பெற்றுத் திரும்பும்போது 1310ல் 96,000 மணங்கு ஏடையுள்ள தங்கத்தைக் கொண்டு போனான்” என்று. 2000 ஓட்டகங்களின்மீது ஏற்றப்பட்டனவாம் அந்தப் பெரும் பொருள்! ஆகப் பொருள் இருந்தது. அதனை அருள்வாங்க அடியார்கள் காதைகளிலே கூறப்பட்ட முறைப்படி செலவிட்டனர். இலாபம், இலட்சக்கணக்கிலே மக்கள் செத்ததுதான். இத்தகைய நிலை ஏற்படக் காரணமாக இருந்தது, பக்திக்காக எதையும் செய்வதே பெருமை தொண்டர் திறம் என்று பெரிய புராணம் புரிந்த போதனைதான் என்று கூறுவது தவறா? பெரியுபராணத்திலே பக்திக்காக எதையும் செய்யும் சித்தம் படைத்தவர்களின் கதைகள்தானே உள்ளன. அந்த ஏட்டைப் புண்ய ஏடு என்றும், ஆண்டவனே அடி எடுத்துக் கொடுக்க, அருமை மந்திரியார் அழகுறப் பாடியது என்றும் கூறிவிடவே, மக்கள் அதிலே கண்ட கருத்துக்களைக் கூடுமானமட்டில், அவரவர் சக்தியானுசாரம் அனுஷ்டிக்க வேண்டும் என்ற உறுதிக்கொண்டனர், அதன் பயனாக, ஊரிலே நாசமே வந்துற்றபோதிலும், உசன் சேவை செய்தால்போதும், மக்கள் மடிந்தாலும் கவலையில்லை என்று இருந்தனர். பஞ்சம் தன் பசியைத் தீர்த்துக் கொண்டது. ஏற்கனவே தரப்பட்டுள்ள ‘போதை’ போதாதென்று ஏன் நண்பர் புலர் இராசமாணிக்கனாரும், அந்தத் திருப்பணியிலே உடுபடுகிறாரே! ஆண்டவன் முதலடி எடுத்துத் தந்தார், ஆகவே இது அருள்நூல் என்று நீறுபூசும் நிகண்டு தூக்கி சொன்னார், ஏடுபலபடித்த ஏன் நண்பர் நாடு நலிவதை மறந்து, இந்த ஏட்டிலே, கல்வெட்டும் சரித்திரமும் உண்டு, எனவே, இதனைத் தள்ளலாகாது என்று கூறமுன் வந்துவிட்டார். ஏக்காரணம் கொண்டு கூறியதாகவேனும் இருக்கட்டும், இதுபோல அவர் கூறியதால், பழைமையின் பிடியை, வர்ணாஸ்ரமத்தின் வலையை ஜாதிப்பித்தரின் நிலையை, முறையே பலமாக்குகிறார், வீசுகிறார், உயர்த்துகிறார் என்றுதானே ஏற்படும். இந்தக் காரியம் செய்ய இவ்வளவு பெரிய படிப்பு வேண்டாமே, ஆரஹரநமப்பார்வதி பதயே என்று கூவுமளவு, கரல் வலிவு கொண்டாலே போதுமே, என்றுதான் நான் கூறுகிறேன். கோபுரமேறி கோழிமேய்பானேன், குப்பை மேட்டிலேயே அந்தக் காரியத்தை எளிதாகச் செய்து விடாலமே என்று கூறுகிறேன்.

(திராவிடநாடு -13.1.46)