அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சுயராஜ்யமே சுயராஜ்யம்!

எழுத்துரிமை படும்பாடு
‘திராவிடநாடு’ தினசரிக்கு ஜாமீன்
காட்டப்படும் காரணங்கள்

10.10.50 அன்று சென்னை பிரதம மாகாண மாஜிஸ்டிரேட் முன்பு சி.என்.ஏ. ‘திராவிடநாடு’ தினசரியை அச்சிட்டு வெளியிடுபவராகப் பதிவு செய்துகொண்டார்.

அது போது பத்துநாட்களுக்குள் ரூ.1000 ஜாமீன் தொகையாகக் கட்ட வேண்டும் என்று, ஆளவந்தாரால், கட்டளையிடப்பட்டது.

இந்த ஜாமீன்தொகை கோரப்பட்டதற்கு, மேற்படி உத்தரவில் காட்டப்பட்டிருக்கும் காரணங்கள்:
1. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் சி.என்.அண்ணாதுரை, மந்திரிகள் வருகையின் போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்ட மூலம் சட்டம் அமைதி ஆகியவைகளில் தலையிடக்கூடும்.

2. இந்திய வகுப்பினரிடையும், இந்தியருக்கு விரோதமாகவும் துவேஷத்தையும், விரோத உணர்ச்சியும் உண்டாக்கலாம்.

3. சுதந்திர திராவிடஸ்தான் இலட்சியம் குறித்து பரப்பக்கூடும்.

எனவே, மேற்கூறிய காரணங்களால் வெளியிட விரும்பும் புதுப்பத்திரிகை, நாட்டின் பாதுகாப்புக்குப்பங்கம் விளைவிக்கும் வகையை சிருஷ்டிக் கூடுமென்று கருதுவதால், இந்திய பத்திரிகை, அவசரச்சட்டம் 7 வது பிரிவின் கீழ் ரூ.1000 ஜாமீன் கட்டவேண்டுமென, பிரதம மாகாண மாஜிஸ்டிரேட்டாகிய நான் கருதுகிறேன்.

(திராவிடநாடு 22.10.50)