அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இருவீரர் - ஒருதாசர்!

காந்தி, யார்? காந்தியார், யார் தெரியுமோ? தெரியார்.

ஒருவணாச்சிரம பித்தர் இந்துமத பக்தர் சாந்திர வெறியர் வைதீகப் பிரியர் கற்பனைக் கிறுக்கர் மனிதாபிமான எதிரி தொழிலாளர் துரோகி முதலிலாளித் தரகர் ஏகாதிபத்திய ஏவலர் தீண்டாதாரின் பகைவர் ஏழைகளின்வைரி பெண்சுதந்திர விரோதி என்ற வீரன் வெகுண்டுரைத்தான்.

“கோபம் வேண்டாமப்பா வீரா! நிதானம் எதிலும் பெரிது, பொறுமை வேண்டும்” என்றேன் நான்.
மிருகங்களிலே பொறுமையையே பூஷணமாகக் கொண்டுள்ள கழுதையைக் கண்டவர் அடிப்பர், கிட்டேவந்தால் கொலை என்று ரோஷத்தோடு உலவுகிறதே, புலி அது இருக்கும் திக்கையும் நெருங்குவதில்லை மக்கள். பொறுத்துப் பொறுத்து நாம் கண்ட என்ன தெரியுமோ, தோல் கடித்துவிட்டது! என்றால் வீரன்.” கடவுளைப் பற்றி எவ்வளவோ ஆபாசக் கருத்துகளைப் புராணீகன் கூறக்கேட்டும், நம்பி, மனதைக் கெடுத்துக் கொண்ட மக்கள், எதை நம்புவதும் ஆச்சரியமில்லையே தோழகர் எவ்வளவு மூடபக்தி இங்கு இல்லையானால் நாட்டு விடுதலைக்கு இந்தக் காந்தியார் கூறுவதும் கேட்டு மக்கள் நம்புவார்களா? நான் கேட்கிறேன் நீயேப் பதில் சொல்லு பார்ப்போம். காந்தியாருக்கு நாட்டிலே செல்வாக்குக் கிடைத்ததைப் போலே, எந்தத் தலைவருக்காவது கிடைத்ததா?” என்று கேட்டான் வீரன். “இல்லை!” என்றேன் நான் “இங்கு இல்லை! வெளிநாடுகளில்கூட காந்தியாருக்கு மக்கள் தந்ததைப்போல வேறு எந்தத் தலைவருக்கும், சுலபத்திலே அபாரமான செல்வாக்குக் கிடைத்ததில்லை.

உமைதான்! ஹிட்லர் முசோலினிகூட, தலைவராவதற்காகப் பட்ட கஷ்டங்களும், அடைந்த தொல்லைகளும் அபாரம். மேலும் அவர்கள் பலாத்காரத்தால் தலைவர்களானார்கள். காந்தியாரோ, கண்மடிக் கண்திறப்பதற்குள் தலைவரானார், சில மாதங்களுக்குள் மகாத்மாவானார், மக்களின் கண் கண்ட தெய்வமானர். அவர் வாக்கை வேதமெனக் கொண்டனர். அவரை வழிபட்டனர். துதித்தனர். துதியாதவரைத் துரோகி என்றனர். பணம் எவ்வளவு! பரிவாரம் எவ்வளவு! பத்திரிகை பலம் எத்துனை! காந்தியாருக்கு வந்ததுபோல் செல்வாக்கு யாருக்கும் வந்ததில்லை. காந்தியார் அரசியலிலே நுழைந்தது இன்று நேற்றல்ல. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவர் பிரேவிக்கும் போது இங்கு இரு இயக்கங்களே உன்னதமான நிலைமையில் இருந்தன. ஒன்று நிவுணர்கள், சட்ட ஞானிகள், மேனாட்டவரைச் சரிசமமாக வாதிட்டு வெல்லக்கூடிய விற்பன்னர்கள், கொண்ட லிபரல் (ஃடிஞஞுணூச்டூ) காட்சி. மற்றொன்று, வெளிநாட்டவனை விரட்ட, உயிரை இழக்கவும் சித்தமாகி, கொலை கொள்ள ஆகியவற்றுக்கும் துணிந்து, துப்பாக்கியும் கையுமாக மறைந்து திரிந்து, வெள்ளையார் உயிரைச் சூறையாடிய பயங்கர இயக்கத்தினர். (கூஞுணூணூணிணூடிண்t Mணிதிஞுட்ஞுணt) முன்னவரின் இடம் பாராளுமன்றம், பொதுமேடை பத்திரிகாலயம், மாளிகை, மண்டபம், கவர்னர் முதலியவர்களின் நிலையங்கள். புரட்சி இயக்கத்தவர் இரகசியமாக வேலைசெய்தனர். இன்ன அதிகாரியை இன்று இத்தனை மணிக்கு இன்ன இடத்திலே இன்னவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்ந்த்துவது என்ற இத்தகைய திட்டமே அவர்களுடையது. பெருவாரியான மக்கள் இந்த இரு இயக்கங்களிலும் சேரமுடியாது ஒதுங்கிநின்றனர். ஒன்றில் சேருவதோ உயிழிக்க நேரிடும், மற்றொன்றோ, மேதாவிகளின் கொலுமண்டபம்! எனவே, பாமரர் வாய்பிளந்து நின்றனர். படித்த கூட்டம் இருபிரிவாகி, இந்டீத இரண்டு இயக்கங்களிலும் வேலைசெய்து வந்தன.

வந்தார் காந்தியார் இரண்டிலும் சேரமுடியாது இருந்த கூட்டத்தைக் கூவி அழைத்தார், “மேதாவித் தனமும் வேண்டாம், உயிரை இழக்கும் ஆபத்தான போக்கும் வேண்டாம், என்னுடன் சேருங்கள், சுலபமான்வழி” என்று கூறினார், “படிப்பு வேண்டாம், பண்பு வேண்டாம், யுக்தி புத்தியுங்கூட வேண்டாம், என்னை நம்புங்கள் போதும்” என்றுரைத்தார். என்ன? என்ன? என்ற கேட்டனர் பாமரர். “பிரமாதம் ஒன்றுமில்லை. இதோ இந்தக் கைராட்டையைச் சுற்றுங்கள். வெள்ளையருடன் ஒத்துழைக்கவேண்டாம்” என்று கூறினார்.

லிபரல்கள் நுண்ணறிவுகேட்டனர், பயங்கர இயக்கத்தினர் உயிரை உயில் எழுதச் சொன்னார்கள். காந்தியாரோ, புத்தி, தீயாகம் இரண்டையும் கேட்கவில்லை, கூச்சலிடச்சொன்னார், ராட்டைச்சுற்றிச் சொன்னார், சிறைவாசம் செய்என்றார், இவ்வளவுதான் அவர் கேட்டது. பயங்கர இயக்கத்தில் இருந்தாலே, சிக்கிக் கொண்டால் தூக்குமேடை ஏறவேண்டும்! லிபரல் கட்சியிலிருந்தாலோ, சபை நடுவே நின்று சான்றோர் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷய விளக்கங் கூற வேண்டும். காந்தியக் கூட்டத்தில் சேருவதென்றாலோ, கைழதல் தேவையில்லை. யாரும் சேரலாம்! எவ்வளவு பாமரராக இருப்பினுஞ்சரியே! இந்தத்தந்திரமே காந்தியாருக்குக் கூட்டத்தைச் சேர்த்துக்கொடுத்தது.

இத்தகைய கூட்டத்தைச் சுலபத்திலே வசியப்படுத்தவும் அவரால் முடிந்தது. அதற்காக அவர் மதவேட மணிந்தார். அதுமக்களிடை மனமயக்கத்தை உண்டாக்கும் மார்க்கமாயிற்று. பார்ப்பனசமூகம், இவரைப் பயன் படுத்திற்று, இவரும் அதற்கு இணங்கினார். உடனே மோகனதாசர் மகாத்மாவானார், பத்திரிகைகள் பாடின, பிர்லா, பஜாஜ்கூட்டம் பணஉதவி செய்தன, நம் கண்முன்பாகவே புராணம் எழுதப்பட்டு, காந்தியார் கடவுளவதாரமாக்கப்பட்டார். ஆனால் இத்தகைய பணபலம், பார்ப்பன பலம், மதபலம், பத்திரிகை பலம், மகாத்மாபட்ட பலம், இவைகளுடன் ஆத்மசக்தி பெற்று, இருபத்தைந்து ஆண்டுகள் வேலைசெய்து, இலட்சக்கணக்கான மக்கள் கண்ணைமூடிக்கொண்டு பின்பற்றுகிறார்கள் என்ற பெருமையான பேச்சையும் பெற்று, ஆங்கில அரசாங்கமே அடங்குகிறது என்று ஜம்பம் பேசும் பூசாரிகளைப்பெற்று, காந்தியார் வேலை செய்து கண்டபலன் ‘ன்யம். சாதாரண ஆத்மாக்கள், இவ்வளவு அபாரமான செல்வாக்கோ, பணபலமோ, பெறாமல், கள்ளத்தனமாகப் பத்திரிகைகள் நடத்துவதும், காசுக்குவழியின்றித் திண்டாடுவதும், சர்க்கார் ஏவிய கொலையாளிகளிடம் சிக்குவதும் தப்பித்துக் கொள்வதும், வாழ்க்கையிலே சொல்லொணாக் கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு, விரோதிகளின் வலையை அறுத்தெரிந்து கொண்டு, கூரியவாள், கொடியசதி, மரணதண்டனை, கடுஞ்சட்டம் கூட இருந்து குடிகெடுக்கும் துரோகிகள் தந்ததொல்லை, இவ்வளவையும், சமாளித்து, இரவுபகல் உழைத்து, வறுமையில்வாடி, பட்டினியில் பதைத்து, நாடு கடத்தப்பட்டும், நள்ளிரவில் விரட்டப்பட்டும், மாறுவேடம் பூண்டுதிரிந்தும் பலப்பல ஆண்டுகள் கொடிய சிறையிலே ள்ளப் பட்டுக்கிடந்தும், பாடுபட்டு தமது இலட்சியங்களிலே பெற்றவெற்றியில், ஆயிரத்தில் ஓர்பங்கு, காந்தியார் பெற்றார் என்று, காந்தி பக்தர்கள், நெஞ்சிலே கை வைத்து, நேர்மையில் நாட்டம் வைத்து, கூறமுடியுமா என்று கேட்கிறேன்.

கடந்த ஜெர்மன் சண்டைக்குப் பிறகு, பலநூற்றாண்டுகளாக, அடிமைக்குழியிலே உழன்று, ஆபாசத்தின் இருப்பிடமாகி, மக்களைச் சித்திரவதை செய்யும் இடமாக இருந்த ரஷியாவை, சமதீர்மநாடாக்கி, “அன்று அவன் எழுதியது” என்ற அவலச்சொல்லை அழித்து, மக்களை ஒப்பப்பர் ஆக்கிய, வீரன் ங.ஐ.லெனின், சாதாரன ஆத்மா! அல்லலையே கண்ட ஆத்மா! ஆபத்தை அணைத்துக்கொண்டு வாழ்ந்த ஆத்மா! பசியும் பட்டினியும் அவனுக்குப் பரிவாரம்! அந்த “அன்னக்காவடி” செய்துகாட்டிய அற்புதத்தை ஆயிரம் மகாத்துமாக்கள் ஒற்றைக் காலால், ஊசிமுனைமேல் நின்று தவங்கிடந்தாலும் செய்து காட்ட முடியுமா? அத்தகைய லெனினுக்கு, அவரது வாழ்நாளிலே, காந்தியாருக்கு நமது மக்கள் தந்த அளவு ஆதரவு தரவில்லை! எங்கும் எதிர்ப்பு! எவ்வளவு அபத்து! ஜாரின் கொடுமை! பட்டாளங்களின் பதட்டம்! மதக்கிலுக்கர்களின் தொல்லை! சீமான்களின் சீற்றம்! தோழர்களின் சிலருடைய துரோகசிந்தனை! இன்னோரன்ன பிற இடையூறுகள்! தலைகாட்டினால், தண்டனை! பத்திரிகை வெளியிட்டால் சிறை! என்று கொடுமை இருந்தது.

இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம், என்றிருந்த ரஷியாவிலே, நெருப்பு மேடை மீது நின்று, முட்புதரிலே நடந்து, புரிக்குகையில் நழைந்து, பாம்புப்புற்றிலே கையை நுழைத்து இரும்பு முள்வேலியிலே, ஜாரின் ஆட்சியிலே, லெனின் வேலைசெய்து, உலகிலே உன்னதமான ஓர் புது அரசை மக்கள் மாட்சியை, நிறுவினார். லெனின் கண்ட ஆபத்திலே, கடுகளவும் காந்தியார் கண்டாரில்லை. அவர் கண்டதெல்லாம், 144! சிறை! சிறையிலே வழக்கமாக ஆரஞ்சுரசத்துக்கோ ஆட்டுப்பாலுக்கோ, நிலக்கடலைக்கோ, நேர்த்தியான படுக்கைக்கோ குறைகிடையாது. டாக்டர்கள் வருவர், பரிசோதிப்பர், சர்க்கார் அறிக்கை வெளியிடுவர்! கஸ்தூரிபாய் காண்பார், களிபார். பிர்லாவும் பஜாஜீம் போவார், பாதகாணிக்கை தருவர். இதற்கப் பெயர் சிறைவாசம்! இது காண்யார் கண்ட “தாங்கொணாக்” கஷ்டம்! லெனின் பட்ட கஷ்டத்தோடு இதனைச்சற்று ஒப்பிடுங்கள், நெஞ்சிருப்பின், நேர்மையிருப்பின், உண்மையை உரையுங்கள் இருவரிலே, எவரய்யா, கர்மவீரன், அஞ்சாநெஞ்சன் ஆற்றலுடையோன். பாதிரிகள் பயங்காட்டினர், பணகாரர் ஈட்டிகாட்டினர், லெனினுக்கு! இங்கே, மகாத்மாவே! என்று மதவாதிகள் மண்டியிட்டனர், சான்சொரூபியே என்று சீமான்கள் வாழ்த்தினர், இந்தியத் தலைவரே என்று சர்க்கார் அர்ச்சித்தனர். கலிகால அவதாரமே என்று மக்கள் பூசித்தனர்! மதவாதிகள் மண்டியிட, சீமான்கள் வாழ்த்த, சர்க்கார் அர்சிக்க மக்கள் பூசிக்க, கொலுவிற்றிருந்து, காந்தியார் கண்கள் பார்ப்போம். அதோ அந்த ரஷியாவை நினையுங்கள்! ரசாபாச மடம், நயவஞ்சகர்களின் நடனசாலை கொடுஙகோலனின் கொலுக்கூடம், மதக்கேடர்களின் -கூடாரம், மக்களைக் கசக்கிப் பிழியும் கவலைக்களம் ரஸ்புட்டினின் லீலாவிநோத கொலு மண்டபம், ஜராரின் தர்பார் கிரஹம்! ஒருலெனின் ஆத்மசக்தியோ, அந்தராத்மாவின் துணையோ பணமூட்டைப் பலமோ இன்றி உழைத்துக் கஷ்ட நஷ்டத்தைக் கனிரசம் சரும்ச்சாறு மெனக்கொண்டு பணியாற்றியதால், சமத்துவம் செழிக்கும் நாடாக்கி விட்டார், உலகம் பார்த்துக்கொண்டிருக்கையிலே! மலைபோல் திரண்டுகிடந்த மமதையைக் மாய்த்துச் சழுக்கரைச்சாய்த்து ஜாராட்சிசரியச் செய்து முதலாளித்வம் முறியச்செய்வது, புத்துலகு அமைத்துக்காட்டினார்! இவருடைய வெற்றி எங்கே! காண்யாரின் கதை எங்கே!! ஒப்பிட்டுப்பாருங்கள், உன்மை எதுவெனத் தெரியுங்கள்!

ஐரோப்பாவிலே ஓர் நோயாளியாக இருந்த துரக்கியை, நொடியிலே வல்லரசாக்கினாரே முஸ்தபா கமால், அவர் ஆஸ்ரம வாசியா, அந்தராத்மா வந்து வந்து பேசிடும் பேர்வழியா! துருக்கி, முஸ்தபாவின் சொல்கேட்டு, காந்தியாரின் சொல்கேட்டு இங்கு மக்கள் சொக்கிவிட்டதைப்போல சொக்கிவிட்டனரா? காந்தி
யாருக்கு உடனடியாக ஆதரவுகிடைத்தது போல் முஸ்தபாவுக்கக் கிடைத்ததா! இல்லை எதிர்ப்பு! எதிர்ப்பு! ஆபத்து! கஷ்டம்! சங்கடம்! சஞ்சலம்! இவைகளைக்கடந்தே வெற்றிபுரி சென்றார் வீரத்துருக்கி வல்லரசை நிறுவிக்காட்டினார். இத்தகைய வீரர்களுடன், காந்தியாரின் கதையைச்சற்று ஒப்பிட்டுத்தான் பாருங்கள் தோழர்களே, உண்மை விளங்கும்.

காந்தீயம், தனது கடைசிச்சொட்டு விஷயத்தை கக்குகிறது, சரியான, நெருக்கடி முற்றியுள்ள நேரமாக்கப்பார்த்து! தோழர் சுபாஷ் சந்திரபோஸ், போர் ஆரம்பமானதும், ஒரு காலநிர்ணயம் செய்து இதற்குச் சுயராச்யம் தரப்போகிறீர்களா? இல்லையேல் நாங்கள் யுத்தத்தை எதிர்க்கட்டுமா என்று பிரிட்டிஷாருக்கு எச்சரிக்கை, இறுதி அறிக்கை விடவேண்டும் என்று கூறினார், கபோதித்தனம் அவரது சேனையிலே இருந்ததென்ற போதிலும் கொஞ்சம் கண்ணியமானது காணப்பட்டது. காந்தியார் இப்போது கூறுவதிலே, கபோதித்தனமிருப்பதுடன், கண்ணியம் சூன்யமாக இருக்கக் காண்கிறோம்.

ஜெர்மனி, ரஷியாவிலே இராணுவ. முக்கியத்துவமுள்ள இடங்களைப் பிடித்ததும், சைபீரியா மார்க்கமாக ஜப்பான் தனது படைகளைக் கொண்டு ரஷியாவைப் பின்புறமாகத் தாக்குவதென்ற இரகசிய ஏற்பாடு ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் இருப்பதாக ஒரு வெளிநாட்டுப் பத்திரிகை எழுதுகிறது. வெறும் சரசமாக இருக்கட்டும், யூகமாக இருக்கலாம். ஆனால், காந்தியாரின் திட்டம் ரஷியாவிலே நெருக்கடி இருக்கிற நேரமாகப் பார்த்துத் துவக்கப்படுவதைப் பார்த்தால் ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் இரகசிய ஒப்பந்தம் இருப்பதாக எண்ணுவதைவிட அச்சுநாட்டுக்கும் காந்தியாருக்கும் ஒப்பந்தம் இருக்குமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. ரஷியாவிடம், கொஞ்சமும் அனுதாபமற்ற, ரஷியக் கோட்பாட்டை வைரிஎனக் கொண்டுள்ள சமதர்மிகளைப் பரமவிரோதிகளாகப் பாவிக்கும் ஒரு புண்ய புருஷர் இந்நாட்டிலே, காந்தியார் என்பது சகலருக்கு தெரிந்தே. காந்தியார் அதனை மறைக்கவுமில்லை, பெருமையாகவே பேசிக்கொள்கிறார். ஆகவே தான் அவர், இந்தச் சமயத்திலே “போர்க்” கோலம் கொண்டு வெளிவரப் போவதாகக் கூறினார். காந்தியாருக்கு ரஷியாவிடம் உள்ள கோபத்துக்கும் துவேஷத்துக்கும் காரணம், காந்தியார், இந்நாட்டு முதலாளித்துவத்தின் முதல் நம்பர் ஏஜண்ட், ரஷியக்கொள்கைகளுக்கு வைரி! எனவே, ஹிட்லருக்குள்ள கோபத்தைவிடக், காந்தியாருக்குச் சமதர்ம ரஷியாவிடம் கோபத்தைவிடக், காந்தியாருக்குச் சமதர்ம ரஷியாவிடம் கோபம் பொங்குகிறது, சிறுகிறார், துடிக்கிறார், தொல்லை கொடுக்க, குழப்பம் விளைவிக்க, தீவிரவாதிகளே! சமதர்மிகளே! பாட்டாளி மக்களே! உங்கள் கடமை என்ன ரஷியாவிலே நடக்கும் போர், உலக எதிர்காலத்தை நிர்ணயிக்கும் போரல்லவா! அங்கு இன்று சிந்தப்படும் இரத்தம், உலக எதிர்காலத்திற்காக! ரஷியர்கள் வீழ்ந்ததால், பாட்டாளிமக்களே! பலகாலும் நாம் பாடி ஆடிக் களித்த சமதர்மம் இல்லை! ஏழை என்றும் அடிமை என்றும் எவனுமில்லை என்றுரைக்கும் சக்தி இல்லை! ஒட்டப்பர் ஆவோம், இது உறுதி ஏழைகளின் இருதய ஒலிதானே சமதர்மம்! அதன் சித்திரமன்னோ சோவியத் ரஷியா! அதை ஒழிக்கவன்றோ சுவஸ்திகக் கொடியோன் துள்ளுகிறான் அவனை அடக்கவன்றோ நேசநாடுகள் முனைகின்றன. அவர்கள் நடத்தும் யுத்த முயற்சியைக் குலைக்க வன்றோ காந்தியார், இச்சமயத்திலே போர் தொடுப்பேன் என்று கூறுகிறார்! இது தகுமா? படுகுழியை வெட்டச் செய்து வெட்டுபவரையே அதில் விழவைக்கிறாறா! இதைக் கேட்பதா?

காந்தியாரின் புதிய போர்ப்பாட்டு, வெத்துவேட்டு என்பதைப் பற்றியோ, அது துவக்கினதும் துவண்டு போகும் என்பதையோ, நான் தெரிந்துகொள்ளாமலில்லை. சாதாரண காலத்திலேயே சரிந்துபோன அவரது சத்யாகரகம் சண்டை காலத்திலே பூத்ததும் கருகிவிடத்தான் போகிறது! நாட்டுக்கே காங்கிரஸ் ஒன்றுதான் ஜெநாயகம் ஆட்சி என்ற நாளிலேயே, அவரது போர், கலிந்து, மெலிந்துமாய்ந்ததுபோது, நாட்டுக்குரியவன் கானிருக்க, நடுவே வந்தவனே நீ ஏன் நாட்டிய மாடுகிறாயா? என்று ஆரியக்காங்கிரசை முஸ்லீமும் திரரவனும் கேட்டும் இந்தநாளிலே, காந்தியாரின் சத்யாகிரக தத்தி விளையாடி, தலைகீழே சாய்ந்து விடும். கபடக்கருவிலே தோன்றி, கத்தியால் கீறி வெளியாக்கப்பட்டு, கீழே விழுந்ததும், முடமாகி, வளரும்போதே சவலையாகி, பார்த்துக்கொண்டிருக்கையிலேயே குழிபுகும் அக்குழந்தை, அதிலே என்ககுச் சந்தேகங்கிடையாது. ஆனால் காந்தியாரின் சுயசொரபம். வெளிபட்ட இது ஓர் சந்தர்ப்பமாக இருக்கிறது பாரிர் என்பதற்கே இதனைச் சொன்னேன், வேறில்லை.

(திராவிடநாடு - 26.7.42)