அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கண்ணன் காட்டிய வழி!

“குருக்ஷேத்திரத்தில் கர்னனின் ரதம் பூமியில் சிக்கிக்
கொண்டு விட்டது. கர்னன் கீழே இறங்கி அதைச்செப்பனிடக் கொண்டிருந்தபோதும் அர்ச்சுனன் விடாமல் பாணங்களை வர்ஷித்துக்கொண்டேயிருந்தான். இது தர்மமா? என்று கர்னன் கிருஷ்ண பகவானைக்கேட்டான். “துர்யோதனுடன் சேர்ந்து கொண்டு நாள் தவறாமல் அதர்ம காரியங்களையே செய்து கொண்டிருந்த உனக்கு என்ன தர்மம் புரியும்” என்று பகவான் பதிலளித்தார்.”

‘பகவான்’ அளித்த இந்தப்பதில், ‘பாரததேவி,’ டெயிலி ஹெரால்டு என்ற, பிரிட்டிஷ் பத்திரிகைக்கு அளித்து, கர்னன் இது தர்மமா? என்று கேட்டது போல், ஹெரால்டு கேட்பதாகக் கூறுகிறது.

டெயிலிஹெராய்ல்டு, பிரிட்டிஷ் தொழிற்கட்சிப் பத்திரிகை. பிரிட்டிஷ் தொழிற்கட்சியைக் காங்கிரஸ் தூபதீப நைவேத்தியமிட்டுத் தொழுதுவந்தது. பிரிட்டிஷ் தொழிற்கட்சி மட்டும் அதிகாரத்தில் அமர்ந்தால், அடுத்த தபாலிலே, - விமானத் தபால்போலும் - சுயராச்யம் இந்தியாவுக்கு அனுப்பப்படும், முகவரி, காந்தி, வர்தா, என்றிருக்கும் என்று காங்கிரஸ் மனப்பால் குடீத்துவந்தது. இப்போது அந்தப் பிரத்தம் தெளிய மருந்துகிடைத்திருக்கிறது. காங்கிரஸிதுவக்கப் போவதாகக்கூறும் சண்டித்தனத்தைக் கண்டித்து ஹெரால்டு எழுதியிருக்கிறது, காரசாரமாக, கனல் எழ! உங்களுக்காக வாதிட்டுவந்த எங்களைக் காட்டிக்கொடுக்கும் தோழர்களே! என்று அர்ச்சித்துவிட்டு, பாட்டாளி மக்களைப் பாழ்ப்படுத்ம் போக்கிலே, நாற்புறமும் ஆபத்து ‘ழ்ந்துள்ள வேளையிலே, நாட்டிலே குழப்பத்தை விளைத்து, நாசகால நாஜியருக்கும் ஜப்பானியருக்கும் நாட்டைக் காட்டிக்கொடுக்கத் துணிகிறீர்களே, இதுதர்மா? என்று ஹெரால்டு கேட்கிறது. இந்த இடி, தேவியின் மூளையைக் குழப்பித்தான் விட்டது! எனவே, பாரதத்தைப் பரணையிலிருந்து எடுத்து, குருக்ஷேத்திர களத்தைக் தேடிப் பிடித்து, தேரைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கும் கர்னனை, பாணங்களால் தாக்கிய பார்த்திபனும், அவளுக்குத்தேரோட்டிய கண்ணனும், கண்ணன் கர்னன் சம்வாதமும், கண்ணன் தந்த பதிலும், ஆகியவற்றினைக்கூறி, அன்று கர்னனுக்குக் கண்ணன் என்பதில் கூறினானோ, அதே பதில்தான் நான் உனக்குக் கூறுகிறேன் என்று தேவி கூறுகிறாள். கண்ன் காட்டிய வழி செல்வதே கடமை என்பது காந்தீயர்களின் கோட்பாடல்லவா! “தேவியும் அதிலேயே திருஷ்டி உள்ளவள்! காந்தீயர்களுக்குக் கண்ணன் காட்டியவழி பிடிப்பதிலே நமக்கு ஆச்சரிய மேற்பட்டதில்லை. கண்ணன் காட்டியவழி கவர்ச்சிமிக்கது. பாலபருவத்திலே பால் தயிர் வெண்ணைகளைப் பருவத்திலே கட்டழகினாளான கோபியர்கள் பிறக, ராஜதந்திர ரசக்கூடம், இவை அவர் காட்டிய வழிகள். பலருக்க ஆனந்தமே தரும் இந்த வழிகள் கூறும்போது, நாம் தாங்கொணாக கோபமே கொள்வோம். ஏன்? சூதுக்கும், அவர்கூறினதற்கும் சொல் அமைப்பிலே வித்யாசமுண்டேயன்றி, சூக்ஷமத்திலே வித்யாசம் கண்டோமில்லை.

களத்திலே தேர் கெட்டுவிட்டது! கர்ணன் தேரைச் செப்பனிடுகிறான். அந்தவேளையிலே அவன் மீது சணைதொடுக்கிறான். கன்னியர் வேட்டையில் கை தேர்ந்த அர்சுனன். இது ஆண்மைக்கு அத்தாட்சியா அன்றி விராடநகரிலே அர்ச்சுனன் அணிந்திருந்த பேடி உருவம் மாறியும், உள்ளம் அத்தன்மையாகவே, இருக்கிறது என்பதைக் காட்டுகிறதா என்று இதிகாசபுலமை மிக்கோரேனும் பதில்கூறமட்டுமே பார்ப்போமே. அத்தகைய செயலைக்கொண்ட கர்னன் கண்ணனைக் கேட்கிறான். இது தர்மமா என்று. அங்கே உள்ள வீரத்தைக் காண்மின். போரிடும் அர்ச்சுனனைக் கேட்து வீரன் எதிரியிடம் வேண்டிக்கொள்வதாகும். ஆண்மைக்கு அது அழகாகாது என்று, நான் யாவருக்கும் பொதுமான சகல வேதமும் உணர்ந்தோன் என்று பேசிக்கொண்டிருக்கிறாயே, காண்ணா! இதுதர்மமா, நீயேகூறு, என்று கலங்கா உள்ளம் படைத்தவன் கேட்கிறான்.

நீ துரியனுடன் சேர்ந்து துர்க்கிருத்யங்கள் செய்து வந்தவன், உனக்குத் தர்மம் என்ன தெரியும் என்ற சொல்லாம்மை விடுகிறார் கண்ணன்! எந்தக் கண்ணன்? கர்ணன், பாண்டவ புதல்வன் என்பதைத் தெரிந்து அவனுக்கும் தெரிவித்து ஆனால் பாண்டவரிடம் அது பற்றி கூறாது மறைத்துவைத்த கண்ணன். வேதியவடிவோன அவனிடம் போய், கவசகுண்டலங்களைத் தானம் வாங்கிய கண்ணன், உனக்குத் தர்மம் என்னதெரியும் என்று தோழனுக்குத் தர்மம் என்னதெரியும் என்று தோழனுக்குத் துரோகம் செய்யேன்! கூடப்பிறந்தவருடன் இன்று கூடிக் கொண்டால், இதுவரை ஆதரித்த துரியனுக்குத் தீங்கிழைத்த
வனாவேன், அதுகூடாது கேட்போருக்கு இல்லையெனாது தருவேன், என்புன்னியம் வேண்டுமா கவசகுண்டலம் வேண்டுமா, எதைத் தருவதாக வாக்களித்தேனோ அதைத்தர அட்டியில்லை என்று கூறிடும், இத்தனை தர்மஙகளைத் தெரிந்து அதன்படி நடந்து, வீரர்க்கோர் விளக்கெனவும் நட்புக்கோர் எடுத்துக்காட்டாகவும், வள்ளல் தன்மைக்கு வைரமணிபோலும் விளங்கிய கர்ணன் போர்க்களத்திலே அதர்மமான முறையிலே கணைவிட்ட அர்சுனனுக்குத் தேரோட்டியதுடன் உனக்கு என்ன தர்மம் தெரியும்? என்று, கேட்டான் கண்ணன். இது மனித நீதிப்படி சரியா என்பதை நேயர்கள் யோசிக்கக் கேட்டுக்கொள்கிறோம், அன்று அவர் அளித்த பதில், நேரடியானதுமல்ல, நேர்மையானதுமல்ல, நெஞ்சில் இரக்கமற்றது. நயவஞ்சகம் குடிகொண்ட உள்ளத்திலிருந்து கிளம்பிய நச்சுமொழி அதனையே பாரததேவி, ஹெரால்டுக்கப் பதிலாக தருகிறது. வேறுஎப்படி இருக்கமுடியும்1 இனப்பற்று இலேசில் போகாது! அன்று தொட்டு இன்று வரை உள்ள ஆரியநோக்கு, அப்பழுக்கின்றின்தான இருக்கிறது. ஆனதுபற்றியே, ஆங்கில ஏடு, நாட்டுக்கு ஆபத்தைத் தேடுகிறாயே நண்பர், இது தர்மமா என்று கேட்க, உனக்கென்னதர்மம் தெரியும் என்று பாரத தேவி பதைத்துக்கேட்கிறது. பொருளுமில்லை அழிவுமில்லை, அதன் பதிலிலே! கேட்டகேள்விக்கு, வசையையே பதிலாக அளிக்கிறது. தேம்புவதும் திட்டுவதும் தேவியின் திருக்குணம் போலும்!

ஹெரால்டுக்கத் தர்மம் தெரியவில்லை என்றே வைத்துக்கோள்வோம், கங்கிரஸின் காதலைப் பன்முறை பெற்றவராம், காந்தியாரிடம் இன்றும் மதிப்பும் கொண்டவராம், நளினி ரன்ஜன் சர்க்கார், அவர்கொடுத்திருக்கிறாரே சாட்டை அதற்கென்ன செவ்வாய் அம்மை அமெரிக்காவிலே அபிமானம் தோன்றினால், நாட்டுக்கு யோகம் சித்திக்கும் என்று கூறினாயே, இதுவே அமெரிக்கப் பத்திரிகைகள் அவ்வளவு காந்திய போக்கைக் கண்டித்து விட்டதுடன், இந்தக் குழந்தை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம் என்று ஏழுதி விட்டனவே, இந்த இடிக்கு எந்த மருந்துண்டு தேரபோகிறோம்! என்று கேட்கிறோம்.

முஸ்லீம் லீக்முரசு, டான் “காங்கிரசிலே ரஸ்படினிசம் (மாயாஜாலப் பரசிமனப்பான்மை) மேலோங்கி இருக்கும் வரையில், காங்கிரஸ் நன்னெறியைக் கடைப்பிடிக்குமென்றோ, யோக்கியமான வழியில் செல்லுமென்றோ நம்பிக்கை கொள்வதற்கில்லை காங்கிரஸ், மூடநம்பிக்கை, மோசடி, ஆகியவற்றினால் ஊட்டிவளர்க்கப்பட்டது. நயவஞ்சகமெனும் குருதியே அதன் நாடி நரம்புகளிலே ஓடுகிறது” - என்று 19-ந் எழுதுகிறது. இதுதான் சரியான, தெளிவான படப்பிடிப்பு! கண்ணன் கதையும் கர்னன் வதையும் கூறி கண்கசக்குவதை விட்டு, இந்தக் கண்டனத்தைக் கேள் தேவி, நெஞ்சில் வீரமிருப்பின் பதில் கூறு. ரஸ்புட்டீனிசம் காங்கிரசிலே குடிகொண்டில்லையா அவர் ஓர் அவதார புருஷர், ஆஸ்ரமத்திலேயே இருப்பார், ஆரஞ்சுரசமே பருகுவார், அணங்குகளே அந்த அரை ஆடை அண்ணலின் அருகிருந்து உபசகரம் செய்வார், அவரிடம் அந்தராத்மா வந்து வந்து பேசு என்ற இந்த வர்ணனைகளை, அவருடைய முகத்திலே யாரிடமும் காணமுடியாத தேஜஸ்தாண்டவமாடுகிறது, அவர் கண்களின் ஒளி பட்டதும் பாவங்கள் பஸ்மீகரமாகிறது, பாவையர் அவரிடம் காட்டும் பாசமோ சொல்லிமடியாது, பரமனின் பிரதிபிம்பமே அவர் என்று ஜார்காலத்திலே ரஸ்புட்டீனைப்பற்றி வாணி சிரிக்கப்பட்டதற்கும், வித்யாசமிருக்கிறதா!

இந்தியரஸ்புடீனின் போக்கைக் கண்டிக்காதவர்யார். நூன் கொடுத்தார் சரியா னசவுக்கு! டாக்டர் அம்பேத்கார் காந்தியாட்டத்தைக் கண்டதுண்டமாக்குக என்று கர்ஜனை செய்கிறார், இந்த வீண்விளையாட்டை நிறுத்துமய்ய, விபரீதம் விளையுமுன் என்று ஜனாப்ஜின்னா எச்சரிக்கை விடுத்திருக்கிறார், வடநாட்டு முதலாளிகளின் கைப்பாவையின் இந்த கோணற்கூத்தை அடக்கியே தீரவேண்டும் என்று பெரியார் கூறுகிறார், இவர்கள், இனதர்மம் தெரிந்தவர்களே, உன் இனமும் அதன் இயல்பும், அன்று முதல் இன்றுவரை ஆரிய தினம் நாட்டுக்கோர் நெருக்கடி என்றதும், நரிக் குணங்களைக்கொண்டு, இரத்தம் உரிய நடமாடியவராலும் நன்கு அறிவர். அவர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறு பார்ப்போம், அதையுங் கேட்போம்!

பிரிட்டிஷ் சர்க்கார்மட்டும், அதன் ஈட்டிமுனைகளை உனக்கு அபயஸ்தமாக்காது இருப்பின், காங்கிரசே காந்தீயமே, உனது கல்லறைமீது புல்முளைத்துப் போயிருக்கும். இன்றுங்கூட, நாட்டுக்கே கேடுவரும் காரியத்தைச் செய்யத்துணியும் காங்கிரசை, உங்கள் இஷ்டப்படி அடக்கி, நாட்டை பஞ்சாங்கப் படையிடமிருந்து மீட்டுக்கொள்க, என்று ஒருவார்த்தை பிரிட்டிசர்க்கார் கூறி, நாட்டை உள்நாட்டுக்குழப்பத்தனின்று காப்பாற்றும் பொறுப்பை லீக்-திராவிட நாட்டுப் படையிடம் ஒப்புவித்துவிட்டால், நொடியிலே உன்கொட்டம் அடக்கப்பட்டு விடும், என்று காங்கிரசாருக்கு நளம் கூறுகிறோம்.

பிரிட்டிஷார் மீதுள்ள கோபம், இன்றைய காங்கிரஸ் 5 பட்டத்துக்கக் காரணமல்ல! நாட்டிலே, இன எழுச்சி ஏற்பட்டுவிட்டது. அதனைத் தடுக்கவேண்டும், பிரிட்டனை மிரட்டி இந்தக் காங்கிரசாட்சி நிறுவவேண்டுமென்பதே காங்கிரசின் நோக்கம். இது ஈடேறாது என்றபோதிலும், சலசலப்புச் செய்துபார்ப்போம், கிடைத்தவரையில் இலாபம் என்ற முறையிலே காந்தியார் கிளம்புகிறார், பார்ப்போம் அவரது ஆட்டத்தின் போக்கை.

(திராவிடநாடு - 26.7.1942)