அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பெரியார் - ஆச்சாரியார் சந்திப்பு!

வாங்கோ! வாங்கோ! வணக்கம்! சங்கரய்யா, அந்த மாலையை எடு இப்படி!

அதெல்லாம் வேண்டாம் சௌக்யிந்தானே! உடம்பு இளைத்த மாதிரி இருக்கே என்ன விஷயம்?

ஒன்றுமில்லை வெய்யில் கஷ்டந்தான்! காப்பி சாப்பிடுங்கோ முதலிலே, கோயம்புத்தூரிலிருந்துதானே வருகிறீர்.

ஆமாம்! நல்ல கூட்டம் என்னால் முடிகிறதா பேச நீங்க ஆர்குமெண்டாகப் பேசுவீர்கள்
ஆர்குமெண்ட் பூராவும், நீங்கள் ஏற்கனவே தயாரித்ததுதான், புதுசா ஒண்ணுமில்லை
பத்திரிகையிலே படிச்சேன்

நான் பேசினது சரிதானே, குடுமபத்திலே சொத்து பிரித்துககொள்ள வேண்டுமென்று பிள்ளை சொன்னால், பிரிக்காமே இருக்க முடியுமோ. இது தெரியாமே இந்த சத்தியமூர்த்திக் கூட்டம் எதிர்க்கிறது

இதென்ன எதிர்ப்பு! உங்கள் பேச்சு, இந்து, மித்திரன், கல்கி இவ்வளவு பத்திரிகைகளின் ஆதரவு இவைகளை எதிர்த்து அவர்கள் என்ன செய்ய முடியும்?

என்னத்தைச் செய்வா! ஜவார்லாலை அழைப்பா, அவன் வந்து கத்துவான் வேறே என்ன நடக்கும் பாயிண்டுகளுக்குப் பதில் கூற முடியுமோ அவாளாலே!

எப்படி முடியும்? இந்தச் சமயத்திலே, பெரிய மனுஷனாகலாமென்று அவர்களுக்கு ஆசை. அதற்காக எதிர்க்கின்றனர்.

அதுதான் சூஷமம்! நான் கூடத்தான், முதலிலே பாகிஸ்தானை எரிர்த்தேன் பஞ்சமா பாதகம் என்று பயங்காட்டினேன் அந்த பழஞ்சோற்றை எடுத்துக்கொண்டு, பலதுகள் பேசுகின்றன. நான் என்ன பேசியும் என்ன முடிந்தது? ஜின்னா, கிகிடுவென உச்சஸ்தானத்துக்குப் போயேவிட்டார். அந்த ஆசாமியைச் சரிப்படுததாமே, ஒரு காரியமும் செயய முடியாது.

கட்டாயம் முடியாது நான் அதைத்தானே மூன்று வருஷமாகச் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

நானும் அந்தப்பாவிகளுக்குச் சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. பாகிஸ்தான் கொடுத்விட்டால், முஸ்லீம்கள் ஆப்கனிஸ்தானோடு சேர்ந்து கொள்வார்களாம்!

நல்லபதில் கொடுத்திருந்துர்களே, மித்ரனிலே படித்தேன். பாகிஸ்தான் கொடுக்காவிட்டாலும் இது நடகுமே, என்று சரியான சூடு கொடுத்திருக்கிறீர்கள்

எல்லாம், பழய விடுதலை தான்!

ரொம்ப சந்தோஷம்! எவ்வளவோ காரணங்கள் சொல்லியிருக்கிறேன் பிரிவினைக்கு, நீங்கள் பார்த்தால் தெரியும்

பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். சாரணங்கள் மணி மணியாக இருப்பதால்தான், நன் உள்பட காங்கிரஸ் பூராவும் எதிர்த்தும், இந்துமித்ரன் உதிர்த்தும், பாகிஸ்தான், முஸ்லீம்களை வசியப்படுத்திவிட்டது. அந்தந்த இனம் சுதந்திரமாக வாழவேண்டுமென்று விரும்புவதுதானே இயற்கை, அதுதான் சுய நிர்ணயம். முஸ்லீம்கள் அதைத்தான் கேட்கிறார்கள், அதை எப்படித் தடுக்க முடியும்?

ஒருக்காலும் முடியாது! இன எழுச்சி உண்டாகிவிட்டது. அதைத் தடுக்க முடியவே முடியாது கொஞ்ச நாளைக்கு மூடிவைக்கலாம். ஆனால் வெள்ளம் கரையை உடைத்துக்கொண்டு ஓடிவருவதுபோல இனைஎழுச்சியும் பெருகிவிடும் நான் பார்க்கிறேனே கண்ணாலே ஆயிரம் அபுல்கலாம் அஜாதும் சரி, ஒரு ஜின்னாவும் சரி, முஸ்லீகள் உயிர் பூராவும் ஜின்னாபேரில் வைத்திருக்கிறார்கள்.

வாஸ்தவமான பேச்சு! அபுல்கலாம் அசாதையே நான் கேட்டேனே, முஸ்லீம்கள் இவ்வளவு பேர், லீகில் சேராதபடி ஏனய்ய உன்னாலே தடுக்க முடியவிலிலை, என்று கேட்டேன்.

என்ன பதில் சொன்னார்?

பதில் என்னத்தைச் சொல்கிறது. பேந்தப் பேந்த விழித்தார்

ஜவர்லால் கொஞ்சம் எதிர்ப்பார் போலிருக்கு!

ஜவர்லால் எதைத்தான் எதிர்க் மலிருந்தார்? எதை எதிர்த்தபோதுதான் ஜெயித்தார்? மந்திரி சபையே கூடாது என்று கூவினார். என்ன நடந்தது?
அவர் தங்கைக்கே ஒரு மந்திரிவேலை கிடைத்தது
அவ்வளவுதான்! உடனே மந்திரி சபையைத் திட்டாதே, என்று பாடிக்கொண்டு கிளம்பினார். ஜவர்லாலைப்பற்றி என்க்குப்பயமில்லை. இந்துவும் மித்திரனும் இனிமேல், அவரை ஒழித்துவிடும்.

இப்போ கவனம் வருதுங்க மித்திரனிலே, ஜவர்லாலை முன்னே சரியாத் திட்டியிருந்தது நான் சொன்னேன் இந்த ஆள் ஒரு புத்தகப் பூச்சி கதைக்குதவமாட்டான் என்று அதேபோல் சீனுவாசன் எழுதினார் மித்திரனிலே

ஆமாம்! மித்திரன் முன்யோச னையுடன் எதையும் செய்யுமே இன்று இங்கே கூட்டம் நடக்குதோ?

ஆமாம்! ஈரோட்டுக்கு வந்து கூட்டம் போடாமல் போகலாமா! முன்னே, ஜெயிலுக்குப் போவதற்கு முன்பு இங்கு வந்துதானே போனேன். அப்போ மாலைபோட்டு, மனத்தை மாற்றியேவிட்டீர்கள்.
நான் நினைச்சதுண்டுங்கோ! பிரிவினைக் கொள்கையை மறுக்க முடியாதே, எதற்காக இவர் பாரதமாதாவை வெட்டாதே, பசுவை அறுக்காதே, வீட்டைப் பிரிக்காதே, குழந்தையைக் கொல்லாதே என்று கொல்கிறார் என்று யோசித்ததுண்டு எதிர்த்தால், அடங்கிவிடும் என்றுதான் பார்த்தேன். முடியவில்லையே! பாரதமாதாவை வெட்டினால் என்ன என்றுகூட ஜனஙகள் பேசத் தொடங்கிவிட்டனர். நான் விடுதலையிலேதான் படித்தேன், எட்டு கோடி முஸ்லீம்களையும் ஆறுகோடி ஆதித்திராவிடரையும் மற்றவர் கொடுமை வெய்வதைக் கண்டும் சும்மா இருக்கிற பாரதமாதாவை, ஒரு வெட்டா, ஓராயிரம் துண்டுகளாக வெட்டினால்தான் என்ன பாபம் என்ற பேசியிருக்கிறீர்கள் ஒரு இடத்திலே ஞாபகசக்தியோடு கொல்கிறீர்களே! ஆமாம்! பொள்ளாச்சியிலோ, கோயம் புத்தூரிலோ, பேசினேன்

நேரமாகிறது. நான் போய்வரட்டுமா? உடம்மை ஜாக்கிரதையாகப் பார்த்துககொள்ளுங்கள், நமஸ்காரம்

ரொம்ப சந்தோஷம் நீங்கள் வந்தது. வண்டி தயாராக இருக்கா! போய்வருகிறீர்களா! வணக்கம்.
இந்த மாதம் 29-ஆம் தேதி மாலை 3 மணியிலிருந்து 6-மணிக்குள், ஈரோட்டில், பெரியார் மாளிகையில், பெரியாருக்கும் தோழர சி.ராஜகோபாலாச்சாரியாருக்கும், நான் மேலே தீட்டியுள்ள விதமான சம்பாஷணை நடந்தால், நான் ஆச்சரியப்படமாட்டேன். அத்தகைய சந்திப்பும் சம்பாஷணையும் நடக்கலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன். அனேகமாக நான் எதிர்பார்ப்பது நடக்காமல் போகும் வழக்கமுங் கிடையாது!

ஆச்சாரியார், யுத்தத்தை எதிர்த்துச சிறை செல்லுமுன் ஈரோடு சென்றபோது, பெரியரைக் கண்டு பேசினார், இப்போது (மந்திரிசபையில் அமருவதற்கு முன்) பெரியாரைக்கண்டு பேசுவார் என்று எண்ணுவது தவறல்ல!

இம்முறை ஆச்சாரியாரின் சுற்றுப்பிரயாணம், போர் தொடகி, மூன்றாவது.

முதல் முறை, பதவியைவிட்டு விலகியதும், வீராவேசத்துடன் தமிழகத்திலே சுற்றினார்.

இந்த யுத்தம் எகாதிபத்திய யுத்தம். இதில நமக்கு வேலை இல்லை. கோரமான யுத்தத்தை அஹிம்சாவாதிகளான நாம் ஆதரிக்க முடியாது. சுயராஜ்யம்ய கிடைக்கா முன்பு நான் பிரிட்டனை ஆதரிசக்க முடியாது என்ற கர்ஜிததார். சுக்ரீவனுக்குப் பட்டங்கட்டினால்தானே வானரவேனை தயாராகும் - என்று குட்டிக் கதைகளையும் புராணங்களையும் கொட்டினார்.

வீரம் அவரைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் இராமாயணத்தை ஊன்றிக் கவனித்துப்படித்தார். அதிலே காணப்படும், ஆரிய தந்திரங்கள், அரசியல் தந்திரங்கள் அவர் மனத்தில் ஆழப் பதிந்தன.

இராமனிடத்து பக்தி கொண்டதாலும், சற்குணவானானாலும், வேத விற்பன்னனான படியாலும், விபீஷணன் அண்ணனைவிட்டுப் பிரிந்து இராமனை வந்தடுத்தான். விபீஷண சரணாகசி, இராம இலட்சுமணர்களுக்கு விசேஷமான மகிழ்வைத் தந்தது, என்ற இந்த ஒரு சம்பவம் மட்டும, ஆச்சாரியாரின் மூளைக்கு எவ்வளவு வேலை கொடுத்திருக்கும் என்று எண்ணுகிறீர்கள்.
அண்ணனைக் கெடுககத் துணிந்த துரோகி விபீஷணன் என்று நாமும், மகா பக்திமான் ஆகவேதான் ரகுராமனைச் சரண்புகுந்தான் என்ற வைதிகர்களும் இந்தச் சம்பவத்தைப் பற்றிப் படித்து கருத்துக்கொள்கிறோம்.

ஆச்சாரியார், இந்தச் சம்பவத்திலே இருக்கும் அரசியல் தந்திர நுட்பத்தையே அதிகமாகக் கவனித்திருப்பார்.

அண்ணனைக் கெடககவேண்டு மென்பதே விபீஷணனின் எண்ணமாக இருந்தால், அதனை அவன் இராமன் வருமளவும் செய்யாமல் காத்துக் கொண்டிருக்கவேண்டியதில்லையே! இராவணனைக் கவிழ்க்க, உள் நாட்டிலே சதி செய்திருக்கலாம். அது முடியாது போயினும், வெளிநாட்டு வேந்தர் எவரையேனும் தூண்டியிருககலாம். இராவணனை எதிர்க்க எவர் உளர் எனில் இராவணன் அஞ்சும் படி விரட்டிய வாலி கிஷ்கிந்தையில் வீரமாக ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தான். அவனிடம் விபீஷணன் ஏற்கனவே ஏற்பாடு செய்திருக்கலாம். இவைகள் ஏதும் செய்யாது, இராவண தர்பாரில் விபீஷணன் வீற்றிருந்தான். எனவே, துரோக சிந்தனையால், இராமனிடம் வந்தான் என்றுரைப்பது முற்றிலும பொருந்தாது.
அதுபோலவே, சற்குண சம்பன்னன், வேத விற்பன்னன் பக்திமான் ஆகவே, இராமனை விபீஷணன் அடுத்தான் என்ற வைதிகவாதமும் பொருந்தாது, ஏனெனில், இவ்வளபு நற்குண நாயகமாக விபீஷணன் உள்ளபடி இருப்பின் இராவண ஆட்சிய்ல இருந்திருக்கவே சம்மதிக்க மாட்டான். இராவணனின் ஆட்சி முறையைக் கண்டித்து, தண்டனை பெற்றிருப்பன், அல்லது, இலங்கையை விட்டே வெளியேறி இருந்திருப்பன். இமன வருமளவும், இந்த சர்குண சீலர் இராவணதர்பாரில் வீற்றிருந்ததால், வைதிக வாதம் பொய்யென்றே கொள்ளவேண்டும்.

ஆசசாரியார் இந்த இருவாதங்களையும் தள்ளிவிட்டு அரசியல் சூஷமத்தைத்தான் கவனித்திருப்பார். ஏனெனில் இராமாயணத்திலே பல அரசியல் சூழ்ச்சிகள் உள்ளன. ஆச்சாரியார் இராமாயணத்திலே உள்ள வைதிகத்தைப் பாமரரிடம் வீசிவிட்டு, அதிலே உள்ள அரசியல் யூகங்களைத் தமது சொந்த உபயோகத்துக்கு எடுததுக்கொள்வார். திருப்பதி வெங்க்டேஸ்வர், நம்மவர் தலையைத்தானே மொட்டையாக்கி பட்டை நாமம் சாத்தி, வீயிற் புரளவைக்கிறார்! பார்ப்பனரை, அர்ச்சகராக்கி, அவர்களது அணங்குகளுக்கு சிந்தாமணிச் சேலையும் சீமைக்கமல ஓலையும், மங்கஞளூர் வளையும் மரகத்த் திருகும், குங்கும நிற ஜாக்கட்டும கொண்டைக்குச் செண்டும் அளிக்கிறார். ஆரியமுறை அது! அதுபோலத் தான் ஆச்சாரியாரும் விபீஷண சரணாகதியிலே, வீணருக்குப் பக்தி பிரபாவத்தைத் தந்துவிட்டு, காரியத்துக்கு உதவும் கருத்தைத் தமக்கெடுத்துக்கொண்டார்.

இலங்கை, சொர்ணபுரி! தங்கக் கலசமுள்ள போபுரங்கள், மரகதமணி பொதித்தமாளிகைகள், பொன் இழைத்த படிக்கட்டுகள் கொண்ட தடாகங்கள், திரு தாண்டவமாடும தேஜோமயமான தேசம், இயற்கையழகும், செயற்கைச் சிறப்பும் சேர்ந்து அந்தத் துவை அலங்கரித்தது. அத்தகைய ராஜ்யத்துக்கு ஆபத்து நெருங்குகிறது! எண்ணித் துர்க்க முடியாத பெருஞ்சேனை! வில் வீரன் இராமன்! அவன் தனது சொந்த சேனையை அழைத்து வந்தானில்லை. இரவல் சேனை. அது முழுவதும் அழியினம் கோசல நாட்டுக் கோமானுக்கு நஷ்டமில்லை எனவே, இராமன், கோடிக் கணக்கான வானர சேனைகளைப் பிணமாகக் குவிக்க முடியும்! அவ்வளபி உக்கிரமான சண்டையில் இலங்காதிபதி வீழ்ந்தே தீருவான். இராவணன் வீழ்ந்தால், அரசு, இராமனுக்கோ, இராமனுக்குதவிய வானரரில் யாருக்கேனுமோ பேய்ச் சேரும். இராட்சத குலத்துக்கு இருந்த அரசு, போய்விடும். இந்த மாபெரிய நஷ்டத்தைத் தவிர்க்கவேண்டும். இதற்கென்ன செய்வது என்று யோசித்த விபீடணன், இராவணன் மாண்டாலும், இலங்கை மாளாதிருக்க, அண்ணன் முடியிழப்பினம் அயலார் முடிதர்க்காதிர்கக, தந்திரங் கண்டறிந்தான். ரகுபதே, நான் தங்கள் தாசன் தமியேனைக் காத்தருள்க! என்று கூறிக்கொண்டு, எதிரியை நேசனாகக் கொண்டான் போரில், இராவணன் வீழ்ந்தான், சிதறிய முடி, விபீடணன் சிரம் சென்றது. இலங்காதிபதியாக தம்பி வந்தான், அண்ணன் மாண்டபின்!

இதைவிடச் சிறந்த ராஜதந்திர முறை அந்தச் சமயத்துக்கு வேறு எவரும் வெய்திருக்க முடியாது இதைச்செய்த விபீடணன், வீணனல்லன், துரோகியல்லன் வைதீகப் பித்தனுமல்லன், காரியவாதி, தந்திரசாலி, அரசியல் யூகமுள்ளவன் இந்த ரசத்தைத்தான் ஆச்சாரியார் பருகிப் பரமானந்தம் அடைந்திருப்பார் அந்தச் சிறைச்சாலையிலே.

ஆகவேதான் அவர் சிறையைவிட்டு வெளிவந்ததும், அஹிம்சையை அழித்தார், காந்தியாரைத் துறந்தேனென்றார். நான் அவரைக் காந்தியாருக்குச் துரோகி என்றோம், ஆனால் விபீடண வேதியர், பிரிட்டிஷ் பக்தி காரணமாகவோ, காந்தியார் மீது துவேஷங்கொண்டோ, சரணாகதி அடையவில்லை. விபீடணன் இலங்கையைப் பெறத் தந்திர முறையைக் கையாண்டது போலவே, ஆச்சாரியார், பதவியைப்பெற, இந்தப் பாசாங்கு செய்தார். பலிக்கவில்லை.
உடனே இரண்டாம் முறை தமிழகத்தைச் சுற்றினார். பழைய பேச்சை விடுத்தார். புதுப்பாடலைத் துவக்கினார்.

இதோ இப்போது மூன்றாம் முறை நடக்கிறது சுழல் சுற்றுப் பயணம்.
காங்கிரசைவிட தேசம் பெரிது
அஜாதைவிட ஜின்னா பெரியவர்
ஜப்பானியரைவிட பிரிட்டிஷார் நல்லவர்கள்
லீகை எதிர்ப்பது கூடாது
பாகிஸ்தான் மறுப்பது பேதைமை
கூட்டாக ஆள்வதே முறை
காங்கிரசையும எதிர்ப்பேன்
காலத்துக்கேற்றபடி கருத்தை மாற்றவேண்டும்
காரியம் பலிக்க, வீரியம் பேசிப் பயனில்லை.
- இவைகள் இம்முறை ஆச்சாரியார் திருவாய் மலர்ந்தருள்பவை!!

விபீஷணன் என்ன? இராவணனே வந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன் என்று ஸ்ரீராமச்சந்திரர் கூறினார், என்ற பக்திமான்கள், கண்களில் நீர்மல்கக் கூறுவர். கண்களில் நீர் ஊறும் அளவுக்குக் கருத்தில் பகுத்தறிவு சுரப்பதில்லை அவர்களுக்கு. இராமன் விபீடணனை வரவேற்றது மற்றோர் ராஜதந்திரம்.

புத்தம் பிதியகளம், மாயாஜாலப் போராட்டக்காரர் இராவணாதியர், அவர்களின் போர்முறையும் தந்திமும் புகல, விபீடணனை விட வேறு யாரால் முடியும்! அத்தகைய உளவாளி - மன்னனின் தம்பி கிடைக்கிறதென்றால், பேர் பெற்றிகரமாக முடியும், என்பது இராமனுக்குத் தெரியும். குவிஸ்லிங் கிடைத்ததும் நார்வேநை நாசமாக்க ஹிட்லரால் முடிந்தது! இலங்காதிபதியின் வீழ்ச்சிக்கான வழிகளை விபீடணனிடம் தெரிந்து கொள்வோம் என்றே இராமன் விபீடணனை வரவேற்றான். காங்கிரசைச் கருவறக்க, காந்தியாரைக் கவிழ்க்க, போர்முறைகள் என்ன தந்திரங்கள் யாவை என்பதை, ஆச்சாரியாரைத் தவிர வேறு யாரால் திறம்படி எடுத்துரைக்க இயலும்! எனவே காங்கிரசல்லாதாருக்கு ஆச்சாரியார், நன்கு பயன்படுவார் - சரியானபடி உபயோகித்தால்!!

வடநாடு வேறு, தென்னாடு வேறு, என்பதை ஆச்சாரியர் நன்குணர்ந்துள்ளார். தென்னாட்டில் உலவும் ஆரியத் திருப்பிரம்மங்கள், திராவிட இனத்தை அடிமைகளாக்கியுள்ளதும் அவருக்குத் தெரியும்.

பாகிஸ்தானுக்கு இணங்குவதனால், ஆரியருக்கு நஷ்டம் இல்லை. ஆரியரின் செல்வாக்கு முஸ்லீம்களிடையே கிடையாது. இஸ்லாம் என்ற கோட்டைமீது ஆரியம் மோதி, மண்டை சிதறி, மண்ணில் ருதி கொட்டி, பின்வாங்கி உயில்பிழைத்து இருக்கிறது. ஆரியத் தரகு, ஆரியப்பிரோகிதம், ஆகீய எதுபும் இஸ்லாமியர் இருக்கும் திக்கையும் திரும்பிப் பார்ப்பதில்லை. எனவே பாகிஸ்தான் கொடுத்துவிடுவதனால், ஆரியருக்கோர் நஷ்டமும் கிடையாது. திராவிடஸ்தான் கிடைத்துவிட்டால் மட்டுமே, ஆரியருக்கு இன்றுள்ள, உயர் ஜாதி நிலைமை, ஊர் உழைப்பை உறிஞ்சும் உரிமை, உன் மத்தராக்கும் மதத்தைப் போதித்து ஊராண்ட கூட்டத்தை அடிமையாக்கும் கொடுமை ஆகியவைகள் அடியற்ற பனைபோல் சாய்ந்துவிட, ஆரிய ஆதிக்கம், மடுவைவிட்டு வெளிவந்த முதலை மக்களால் அடித்துக்கொல்லப் படுவதுவோல் மாண்டொழியும்.

இதைத் தெரிந்துதான் ஆச்சாரியார், பாகிஸ்தான் வேண்டுமானால் தருவவோம், திராவிடஸ்தானைப் பற்றி மூச்சம் விடக்கூடாது என்று தீர்மானித்திருக்கிறார்.

ஆனால் அவர் ஏமாறுவார்! நாலாவதொருமுறை அவர் நாட்டிலே சுற்றி, ஆரியர் மீது திராவிடருக்கு, யூதர் மீது ஜெர்மானியருக்கு உண்டானதைப் போன்ற துவேஷம் வளருமானால் ஆபத்தாக முடியும். எனவே திராவிடநாட்டுப் பிரிவினையை நாம் எதிர்க்கலாகாது. இந்த நாடு உண்மையில் திராவிடருடையது, நாம் இங்கு குடிபுகுந்த கூட்டம் என்பதில் சந்தேகமில்லை. இத்தனைகாலம் எதை எதையோ கூறி ஏய்த்தோம், கொடிகட்டி ஆண்டோம் தேவர்கள் மந்திர ஆதீனத்தில் இருக்கிறது. எனக்கு அந்தப் பிராமணரே கடவுள் என்று கண்ணன் கீதையிற் கூறியதாகக் கூறினோம் இப்போது அதைக் கேட்பாரில்லை ஆகவே நமது நிலையை உணர்ந்து நாட்டினருக்கு அடங்கி இருப்போம் என்ற தமிழகத்தில் ஆச்சாரியார் பேசுங்காலம் பிறக்கப்போகிறது.

நாற்பது நாள்களுக்கு முன்வரை, பாரதமாதாவை வெற்ற ஆச்சாரியார் சம்மதிப்பார் என்று காங்கிரஸ் கூட்டத்திலே யார் எண்ணியிருக்க முடியும்! ஆச்சாரியார், அவிபக்த குடும்ப சொத்துப் பிரிவினைப் பற்றியும், அபுல் கலாம் ஆஜாதின் செல்வாக்கு சூன்யம் பற்றியும், பாகிஸ்தான் விளக்கம் பற்றியும், காங்கிரசைவிட தேசம் முக்கியம் என்பதைப் பற்றியும், பேசுவதை இப்போது அந்தக் காதுகள் கேட்கவில்லையா! இன்னமும அந்தச் செவிகளுக்கு, திராவிடநாடு என்றதும் தீப்போல் இருக்கலாம். நினைத்தால் நெஞ்சு எரியலாம்! அவர்களுக்கு ஆச்சாரியார் பேச்சிலே ஒருபாகம், பரிசு தருகிறேன். கொட்டை எழுத்திலே எழுதிவைத்துக்கொண்டு, நித்திய பாராயணம் செய்யக் கோருகிறேன்!

சில பதார்த்தங்களைச் சில சமயங்களில் பிரிக்கலாம் சிலவற்றை எப்போதும் பிரிக்க முடியாது இதோ கடிகாரமிருக்கிறது. இதைப் பிரித்தால் கெட்டுபிடும. வேறு சில பொருள்களைப் பற்றி அப்படிச் சொல்வதற்கில்லை.

பிரித்துத் தீரவேண்டும் என்றால் பிரித்துத்தான் ஆகவேண்டும். எல்லாம் சமய சந்தர்ப்பங்களைப் பொறுத்தது

இது ஆச்சாரியார், மே 17ல் சென்னை புது காங்கிரஸ் மாளிகையில் பேசியது.

இவர் கிடக்கிறார் சார்! இவரைவிடக் காங்கிரஸ் பெரிது! அது எதிர்க்கிறது பாகிஸ்தானை என்று கூறும் சில கதர் சட்டைகள்!

கேளுங்கள் தக்ளி தாசர்களே, உங்கள் தலைவர் காங்கிரஸ் பெரிது, நீ பிகஸ்பதியானாலும் பெரிசல்ல என்று சிலர் சொல்கிறார்கள். அந்தக் காங்கிரசை எனக்குத் தெரியும் என்று கூறுகிறார்.
காந்தியார் இருக்கிறார்! அவரே பெரியவர் என்று கூறுவர் சிலர் ஆச்சாரியார் காந்திஜி கெட்டிக்காரர் நானும் கொஞ்சம் கெட்டிக்காரன்தான் என்று கூறுகிறார்.

தலையிலே வைத்துள்ள கையைக் கீழே இறக்கு காங்கிரஸ் தோழ! கண்களைத் துடைத்துக்கொள், நெஞ்சிலே கை வைத்துச்சொல், திராவிடநாடு வேண்டுமா, வேண்டாமா! காங்கிரசும் காந்தியும் எம்மாத்திரம் என்று துணிந்து கூறும். அந்த ஆரியத் தலைவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, ஜனாப் ஜின்னாவைத் தூற்றினாய், வீணாகப் பழித்தாய, பாகிஸ்தானை எதிர்த்தாய், காங்கிரசே போயில், காந்தியே கடவுள், ஆச்சாரியே பிரதம பூசாரி என்று பிதற்றினாய், பார் இப்போது, காந்தியும் காங்கிரசும் ஆச்சாரியார் கொடுக்கும் உதையிலே கரணம் போடுவதை! என் மீது போபியாதே தம்பீ! ஆச்சாரியாரே கூறுகிறார் காங்கிரசை அடித்தால்கூட என்னால்தான் அதற்கு உதவி. விஷ்ணுவை ஒரு பக்தன் உதைத்தான் அதனால் மார்பு கரையாயிற்று, அதைப் பெருமையாக மதித்து மஹாவிஷ்ணு அந்த கரையைக் காப்பாற்றி வருகிறார். ஆரியர், காங்கிரசை உதைக்கலாம், ஊராள அதுசெய்ய வேண்டுமானால் நீ என்னப்பா, அங்கோர், கொடி தூக்கியாக இருக்கிறாய், வெட்கம் இல்லையா உனக்கு! வாவெளியே!

காங்கிரசை மட்டுமல்ல, கதரணிந்த தோழனே, கடவுளைக்கூட ஆரியர், எது வேண்டுமானாலும் செய்வர், அந்தக் கடவுணம், அவர்கள் எது செய்தாலும், அவர்களைத்தானப்பா காப்பாற்றுமாம். அது அவர்கள் புராணம்.

தனது இரு கண்களையும் பெயர்த்தெடுதது, இரத்தம் இலிங்கத்தின் மீது சொட்டச் சொட்ட நின்றார் கண்ணப்பர்! கண்ணிருந்த இடத்திலே புண்ணிருக்க, கரையும் உள்ளத்தோடு நின்றபோது சிவனால் கூறினாராம், நில்லு கண்ணப்பா! நல்லு கண்ணப்பா! என்று. அப்பா என்று கண்ணப்பதையும், அம்மே என்று காரைக் காலம்மையாரையும், சிவனால் அன்பு ததும்ப அழைத்தார். இருவரும் உண்டானதில்லை, என்று முருகன் சந்தம் பாடிடும், மாஜி சுய மரியாதைச் சிந்துக்காரத் தொழரொருவர் கூறினார், தோழனே! நான் வியந்தேன், உன்னைப் போலவே, பிறபே யோசித்தேன்! காரைக்காலம்மையார், உடலும் எலும்பும் தேய உருண்டு பெற்ற அந்த அருளை, கண்ணப்பர் கண்ணைப் பிடுங்கிக் காணிக்கையாகத் தந்துபெற்ற கருணையைஒரு பார்ப்பனர், மிகமிக எளிதிலே பெற்றார் என்ற திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

குலோத்துங்க பாண்டியன் நாளாம்! அவந்தி நகர் பார்ப்பனனொருவன், அடாதன செய்தானாம். யாதோ அஃது? களவா? அதைவிடக் கொடிது? கொலையா? அதனினும் கொடிது. கள்ளுண்டானா? மிகமிகக் கொடியது. மாதாவைப் புணர்நதான்! பிதாவைக் கொன்றான்!! பாலூட்டிய தனத்தைப் படுக்கைக் உபபோகித்த பாதகனை, சிவபெருமான், மீனாட்சியம்மையுடன் வேட வடிவு தாங்கிக்கொண்டு, மதுரையில் வந்திருந்து, வைகறைத் துயுலெழு, பசுவுக்குப் புல்லிடு, திருக்கோயிற் குளத்தில் துர்த்தமாடு, 108 முறை நம்மை அங்கப் பிரட்சணம் செய், இம்மாபாதகம் தீரும் என்றருளிச் சென்றார். மூன்றே மாதம், தோழா, இந்தப் பார்ப்பனன் சிவன் கூறியன செய்து, மாபாதகம் நீங்கித் தெய்வப் பிராமண வடிவானானாம்!!

இக்கொடும் பெரும் பாவிக்கா இவ்வருள் என்று மீனாட்சியம்மையும் கேட்டனராம். கருணையின் காசி கூறினாராம், நீ அறியாய் மீனாட்சி! இத்தகையோனைக் காப்பதே காப்பு என்று!

ஆமாம்! தோழனே! காங்கிரசோ, அந்தக் கடவுள்களோ, எல்லாம் ஆரியசிருஷ்டி! ஆகவே அவர்களுக்கு அவை பயன்படும். உனக்கு ஏனப்பா அவை!!

எல்லாம் சமய சந்தர்ப்பத்தைப் பொறத்தது என்ற ஆச்சாரியார் கூறியிருப்பதன் கருத்தை உணரு. சமயம் வந்தால், காந்தி, காங்கிரஸ், கற்பனைக் கடவுள், சாத்திரம், மதம், எதையும் அவர்கள் தூக்கி எறிவர். எதற்கும் நீ சுமை தாங்கி! இந்நிலை போகத்தான், திராவிடநாடு தேவை என்கிறேன். இப்போதும் காரியம் மிஞ்சிவிடவில்லை, நன்றாக யோசித்துப்பார்!

யோசித்தால், நீ திராவிடக் கட்சிக்கு வந்தே சேருவாய். உன் போன்றாரும் வந்துவிட்டால், பிறகு திராவிடநாட்டுப் பிரிவினைப் பிரச்சனை மிகமிகப் பலமடையும். சமய சந்தர்ப்பம் தெரிந்த ஆச்சாரியார், அந்நாளில் பெரியாரைச் சந்தித்து, திராவிடநாட்டுப் பிரிவினைக் கொள்கை சரியானதே. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஆரியர்கள், திராவிட நாட்டிலேயே இருக்கக்கூடாது என்ற சிலர் கூறுவதைக்கேட்டு என் மனம் துடிக்கிறது. அதை மட்டும், விட்டுவிடச் சொல்லும் என்று கேட்க ஆஹா! ஆகட்டும! ஆரியார்களும், உழைத்து உண்டு, எல்லோருடனும் சமமாக இருந்து வழட்டும் என்று பெரியார் அபயங்ககூறக் கேட்டுக் களிப்புறுவோம்.

எப்போது அந்தக் காட்சி கிடைக்கும் என்று என்னைக் கேட்காதுர்கள். காட்சியை நான் துட்டினேன் வருடம், மாதம், தேதி தீட்டவேண்டியது நீங்கள்! ஆம்! இரத்தத்தை மையாக்கித்தான் தீட்டவேண்மென்றாலும் தயங்கக் கூடாது!

(திராவிடநாடு - 24.05.1942)