அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘ஆச்சாரியார்‘ குறித்த வழக்கு!

‘காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் சென்னை கவர்னர் நடந்து கொண்டுள்ளார். அரசியலிலிருந்து விலகிய ஆச்சாரியாரை, காங்கிரஸ் மேலிடத்துக்குக் கட்டுப்பட்டு திடீரென எம்.எல்.சி.யாக நியமனம் செய்ததன் நோக்கம் இதுதான்“ என்று ஆச்சாரியார் நியமனம் குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்காடிய தோழர் பி.ராமமூர்த்தி, எம்.எல்.ஏ. கூறினார். வழக்கு ஐக்கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் ராஜமன்னார், வெங்கட்டராமய்யர் ஆகியோரால் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்குக் கொண்டு செல்வதென முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறிகிறோம்.

செய்தி – திராவிட நாடு – 13-4-52