அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆரம்பமாயிற்று!

திருவாங்கூரைச் சேர்ந்த கோட்டயத்தில் காங்கிரஸ் ஆட்சியினர் தொழிலாளர்மீது ஏப்ரல் 23-ந் தேதி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள் மூன்று தொழிலாளர் மரணம் பலருக்குப் படுகாயம் அகிம்சா ஆட்சியின் கொடுமைக்குப் பலியான தொழிலாளர்கள், வெள்ளையருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் வேலை செய்தவர்களாம். வெள்ளைநிற ஏகாதிபத்யத்தைக் காக்க, மஞ்சள்நிற ஆதிபத்யம் சுட்டுப் பொசுக்கியிருக்கிறது. பொதுத் தேர்தலுக்குப்பின், மீண்டும், துப்பாக்கி முழக்கம் கேட்கத் துவங்கியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இதைத் தவிர வேறெதுதான் எழும்பும்! இரத்தம் குடித்த புலிகளாயிற்றே!!

திராவிட நாடு – 4-5-52