அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆரிய மாயை தீர்ப்பு!
“பிடிபட்டுவிட்டான் அந்த ஆக்கிரமக்காரன்”

“விட்டு விடுவார்களா இப்படிப்பட்டவனை!”

“கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார்கள் - என்று எண்ணிக் கொண்டிருந்தான். இப்போது தெரியம், எப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆள்கறிôர்கள் என்று.

“ஆமாம்! இவ்விதமானவர்களைப் பிடித்துத் தண்ணடிக்காமலிருந்தால், பலருக்கும் தலைக்கிறுக்கு ஏறிவிடும் புத்தி வருகிற விதமாகத் தண்டனை தரவேண்டும். பச்சைப் பயிரை அழிக்கும் மாடு கண்டால் கம்போ கல்லோ, எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு தாக்கித் துரத்தாவிட்டால், பயிர் எது?”

“அதிலும் இவன் செய்த குற்றம் எப்படிப்பட்டது தெரியுô? ஊரார் பருகிட உபயோகமாகும் திருக்குளத்திலே விஷக்கிருமிகைளக் கலந்துவிட்டான்.”

“படுபாவி! என்ன நெஞ்சழுத்தமய்யா இவனுக்கு”

“யாருக்குத் தெரியப்போகிறது என்ற எண்ணம்?”

“விஷக்கிருமி கலந்த தண்ணீரைப் பருகி மக்கள், எவ்வளவு கஷ்டப்படுவார்கள்.”

“மக்களுக்கு, ஒருவிதாமன புதிய நோய் அல்லவா கண்டுவிட்டது.”

“என்ன நோய்?”

“என்ன நோய் என்று பெயரிடுவது, அந்த ஆக்கிரமக்காரன் செய்த காரியத்தால், மக்கள் மனதிலே ஒருவிதமான கொதிப்பு நோய்! கோபம்! எதையும் சட்டை செய்யாத தன்மை! எவருக்கும் அடக்க மறுக்கும் போக்கு! இது என்ன, அது எப்படி என்று எதற்கு எடுத்தாலும் கேள்விக் கேட்கும் துக்குத் தனம்! புருவத்தை நெறிப்பது! புன்னகை புரிந்தபடி புதுப்புது கேள்வி போடுவது! இப்படி மாறிவிட்டார்கள் அந்த மக்கள்.”

புதிய நோயின் காரணமாக...!

ஆமாம்! சூட்சமம் தெரியவில்லை நெடுநாளாக...

அப்படியானால் அந்தப் பாதகன் பொதுக்குளத்தில் விஷக்கிருமிகளைக் கலக்கியது, இப்போதல்லவா?

இல்லை, இல்லை, அவன் அந்தக் காரியம் செய்து, வருஷம் ஐந்து ஆறு இருக்கும்.

அவ்வளவுதான் பொறுத்தா கண்டு பிடித்தார்கள்.

ஆமாம், இவ்வளவு நாளாகி விட்டதே இனி யார் இதைக்கண்டு பிடித்து நம்மைக் கண்டிக்கப்போகிறார்கள். தண்டிக்கப்போகிறார்கள், என்று எண்ணிக் கொண்டான்.

“ஏமாளி! நாடாள்பவர்களின் போக்குத் தெரியாதவன்.”

“திடீரென்று ஒருநாள், பிடிபயலை! என்ற உத்திரவு பிறந்தது - விழித்தான் - ஆடைத்தார்கள் கூண்டில் - வழக்கு நடைபெற்றது - நான் விஷக்கிருமியைக் கலக்கவில்லை, பொதுக் குளத்திலே பாசியும் தூசியும் படிந்து கிடந்தது. அதைத்தான் அப்புறப்படுத்தினேன் என்று வாதாடினான். நாடாள்பவர்களா இதற்கு ஏமாறுவார்கள்! திருக்குளத்துத் தண்ணீரில் விஷக்கிருமிகள் இருப்பதை ஆராய்ச்சி மூலம் எடுத்துக் காட்டினார்கள்.”

“பலே! திறமையானவர்களல்லவா நாடாள்கிறார்கள். இவன் தந்திரமாகத் தப்பித்துக் கொள்ளப் பார்த்தால், முடியுமா?”

“உள்ளே தள்ளிவிட்டார்கள்”

“வேண்டியதுதான் - வேண்டியதுதான்.”

“ஊராருக்கும் அறிவித்துவிட்டார்கள், பொதுக் குளத்திலே விஷக் கிருமி கலந்துவிட்டிருப்பதை.”

“சரியான வேலை செய்தார்கள், இவ்வளவு திறமையாக வேலைசெய்தால்தான், ஆட்சி இலட்சணமாக இருக்கும்.”

“ஆட்சி இலட்சணமாக இருந்தால்தானே மக்கள் சுபீட்சமாக இருப்பார்கள்.”

“மக்கள் சுபீட்சமாக இருக்க வேண்டு மானால், விஷக்கிருமிகûப் பொதுக்குளத்திலே கலக்கிவிடும் காதர்கள், பிடிப்பட்டாகத்தானே வேண்டும்.”

“பிடிபட்டுவிட்டான் ஆக்கிரமக்காரன்”

அவன், பொதுக் குளத்திலே, பாசியும் தூசியும் குவிந்துவிட்டதாலே, தண்ணீர் கெட்டவாடை அடிப்பது தெரிந்து, மக்களுக்கு இதம் செய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்தாலே தூண்டப்பட்டு பாசியையும் தூசியையும் அப்புறப்படுத்தி வந்தான். இழமான குளமப்பா, படிக்கட்டுகள் கூட வழுக்கலாக இருக்கும் ஆபத்து நேரிட்டு விடப்போகிறது, என்று கூட நண்பர்கள் எச்சரித்தனர், ஆவனோ, கடமையைச் செய்யத்தானே வேண்டும் என்றான் - செய்து கொண்டு வந்தான்! ஓராண்டு ஈராண்டல்ல, இறாண்டுகளாக! ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, திடீரென நாடாள்வோரிடமிருந்து தாக்கீது புறப்பட்டது, “நாசகாலனே! நமது ராஜ்யத்திலே, பொதுக் களத்திலே விஷக்கிருமிகளைக் கலந்துவிட்டிருக்கிறாய், இந்த மாபெரும் குற்றத்துக்காக தண்டிக்கப் போகிறோம்” என்று அவன் திடுக்கிட்டுப் போனான். விஷக்கிருமிகள், குளத்திலே இருப்பது தெரிந்துதான், நான் அந்தக் கிருமிகள் உற்பத்தியாவதற்குக் காரணமாக உள்ள அழுக்குகளை அப்புறப்படுத்தினேன் - இதற்காக, பாராட்ட வேண்டாம் என்னை, ஏனென்றால் நான் பூமானல்ல சீமானல்ல, சாமான்யன் ஆனால் இதற்காகத் தண்டனையா! இதென்ன விதமான ஆட்சி ஐயா!! என்று கேட்டான். சிறையின் உள்ளே போட்டுப் பூட்டினார்கள். ஆக்கிரமக்காரன் பிடிபட்டான் என்று ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் முழக்கவிட்டனர். இந்த ஆட்சியிலே இப்படிப்பட்ட தீயர்களைப் பொசுக்கிவிடுவார்கள் என்று எச்சரித்தனர். ஊராரில் பெரும்பாலோர், நமக்கென்ன தெரியும் - நாடாள்பவர்கள் காரணமில்லாமலா தண்டிப்பார்கள் - என்று பேசிக் கொண்டனர். ஆட்சியாளரின் ஆதரவாளர்கள், விஷக்கிருமி கலந்தான் விபரீத புத்திக்காரன், விட்டு வைக்கலாமா இப்படிப்பட்டவனை என்று கேட்டனர். ஆட்சியாளர் செய்தது நியாயம் என்று நிலைநாட்டப்பட்டது. அவன் சிறையிலே!!

“ஐ! கைதி! உன்னைத்தான் - என்ன உறக்கமா? எழுந்திரு, எழுந்திரு, புறப்படு, புறப்படு - என்றார்கள் சிறைக்காவலர்.”

“எங்கே?” என்று கேட்டான் கைதி.

ஊருக்கு - வீட்டுக்கு - விடுதலை உனக்கு என்றனர்.

எனக்கா! ஏன்? என்றான் கைதி.

ஏன்! என்ன கேள்வி கேட்கிறாய், போ என்றால் போவாயா, ஐனாம், ஏன்! போ - போ! வெளியே என்றனர். வெளியே சென்றான்

பிறகோர் நாள், அவன் களஞ்சியத்திலே இருந்த கம்புவரகு தான்யத்தை ஆட்சியாளர்கள் எடுத்துச் சென்றனர் - அபராதத் தொகைக்கு உடு என்று! அதுவும் போச்சுதா என்று அவன் ஆயாசப்பட்டான். விஷக்கிருமியைக் குடி தண்ணீரில் கலந்த குற்றம இலேசானதா? இளவந்தார்கள், உள்ளே தானே தள்ளுவார்கள், உல்லாசமாக இருந்துவிட்டு வந்துவிடலாம் என்று அவன் எண்ணிக் கொண்டான். இளவந்தார்கள் ஆசகாயச் சூரர்களல்லவா, இளை வெளியே போகச் சொல்லிவிட்டு, களஞ்சியத்தரிலே இருந்த தானியத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். சோணகிரி போலாகிவிட்டான் பயல்! என்று இதையும் கீர்த்தனமாக்கிப் பாடினார்கள், இளவந்தார்களின் தாளந்தட்டிகள்.

நாட்கள் பல சென்றன - மாதங்கள் பல சென்றன. நாட்டிலே உள்ள நல்லறங்கூறு மன்றம் கூடிற்று - பொதுக் குளத்திலே விஷக்கிருமி தூவவில்லை, தூவியதாகக் குற்றம் சாட்டியது தவறு, தண்டனை தந்தது மிகத் தவறு, விடுதலை செய்க, என்று தீர்ப்பளித்தது. குற்றம் செய்யவில்லை - நல்லறங் கூறுமன்றம் தீர்ப்பளிக்கிறது. ஆவனோ தண்டனையை ஓரளவு அனுபவித்துமாகிவிட்டது! அவன், விஷக்கிமிகளைத் தூவிவிட்டான் என்பது இதாரமற்றது - தீர்ப்பு! ஆட்சியாளரோ, ஊராருக்கு உரத்த குரலிலே அறிவித்தது, இவன் ஆக்கிரமக்காரன், பொதுக் குளத்திலே விஷக் கிருமிகளைக் கலக்கினான், என்பது! ஆட்சிக்குப் பாதந்தாங்கிகளும், பராக்குக் கூறுவோரும், ஆமாம் ஆமாம் என்றனர்! ஏடுபிடிகள் கொக்கரித்தன! அறங்கூறு மன்றம் கூறுகிறது அவன் குற்றமற்றவன் என்று! ஆவனோ, செய்யாத குற்றத்துக்காகச் சிறையில் தள்ளப்பட்டுக் கிடந்தான் - வரகும் பறித்துக் சென்றனர்.

எந்த அநியாயாபுரி ராஜயத்துக் கதை இது என்கிறீர்களா! எல்லாம் நம்ம ராம ராஜத்யத்தக் கதைதான்! சென்னை மாகாணத்திலே சீரும் சிறப்பும் பெற்றுச் செங்கோல் செலுத்திவரும் கதருடையார் ஆட்சியிலேதான்!

1943ல் குற்றம் செய்தான் என்று 1949ல் வழக்கு, 1952ல் இதாரமில்லை விடுதலை செய்க, என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

நான் விடுதலை செய்யப்பட்டுவிட்டேன்! உண்மை தான், நண்பர்களே! சென்னை உயர்நீதிமன்றம், நான் குற்றமற்றவன் என்று தீர்பப்பளித்துவிட்டது, விடுதலை செய்யுமாறு கூறிவிட்டது விடுதலை கிடைத்துவிட்டது.

“ஆரிய மாயை” என்ற ஏடு எழுதினேன், நாடாளும் நல்லோர்கள், அந்த ஏடு மக்கள் மனதிலே வகுப்புத் துவேஷத்தைப் புகுத்துகிறது என்று கண்டுபிடித்தனர்! 1943ல் திராவிட நாடு இதழிலே பல கட்டுரைகள், இந்நாட்டு நிலையை விளக்கியும், ஜாதி பேதம், இவைகளால் உண்டாகும் கேடுகள், இவை ஏற்படக் காரணம், இவை களையப்பட வேண்டியதன் அவசியம், இவைகளை விளக்கி ஆரிய மாயை என்ற தலைப்பிலே பல கட்டுரைகள் தீட்டினேன் - இது புத்தக வடிவாக வெளி வந்தது ஏன் அனுமதியுடன் தான்! இந்த ஏடு, நாட்டிலே நச்சுக் கருத்துக்களைப் பரப்புகிறது என்று கண்டறிந்த கதருடையார், 1949ல் ஏன் மீது வழக்குத் தொடுத்தனர் - தண்டித்தனர் - சிறை சென்றேன்.

பொதுக் குளத்திலே விஷக்கிருமிகளைக் கலந்து குற்றவாளிக்கு ஒப்பாக, என்னைச் சித்தரித்தனர் ஆளவந்தார்களின் ஆதரவாளர்கள்! பொது மக்கள் மனதிலே வகுப்புத்துவேஷம் குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், பிராமணத்துவேஷம் ஏற்படுகிறது ஆரிய மாயை மூலம், ஆகவே 153வது செக்ஷன்படி நான் குற்றவாளி, என்று கூறினர் காங்கிரசாட்சியினர், நான் தண்டிக்கப்பட்டது, முறையான செயல்தான், நாட்டிலே கேடு பரவாதிருக்க இத்தகைய நடவடிக்கையை நல்லறிவு படைத்த சர்க்கார் எடுக்கத்தானே வேண்டும், என்று பேசினர். மட்டரகங்கள் ஐசவும் செய்தன!

சர்க்கார், எல்லா வகுப்புகளுக்கும் பொதுவானது - இந்த நிûலியலே ஒரு வகுப்பின்மீது மற்றோர் வகுப்பு துவேஷம் மூட்டுவது, சகிக்க முடியாத குற்றம், என்று சட்டத்தைக் கட்டி அணைத்தபடியும் சிலர் பேசினர். புத்தகத்தை வெளியிட்டவருக்கு 500 ரூபாய் அபராதம் - எனக்கு 700! கட்ட மறுத்தேன், சிறையில் தள்ளினர். பத்து நாட்களில் வெளியே துரத்தினர். சென்னையில் அலுவலகத்திலே இருந்த காகிதக் கட்டுகளைத் தூக்கிச் சென்று, கடை வைத்து விற்றுப் பணமாக்கிக் கொண்டனர் 700 கிடைத்துவிட்டது இளவந்தார்களுக்கு!

சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து, இரயி மாயை எனும் ஏட்டினைத் துருவித்துருவி ஆராய்ந்து பார்த்து, அதிலே வகுப்புத்துவேஷம் எட்டும் பகுதிகள் இருப்பது நிச்சயமாகத் தெரிந்து வழக்குத் தொடுத்தனர் சர்க்கார் - இதிலே தவறு என்ன? இதற்கு ஏன் குய்யோ மறையோ என்று கூவுகிறார்கள். இந்த கோணற்புத்திக்காரர்கள் என்று கொக்கரித்தனர், கொடி தாங்கிகள்! இர ஆமர யோசிக்காமல் அன்னை பாரதமாதாவின் அருமருந்தன்ன பிள்ளைகள், வழக்குத் தொடுக்கமாட்டார்கள், வம்புக்கு இழுக்க மாட்டார்கள், என்று பேசினர் சிந்துபாடிச் சொந்த இலாபம் தேடிடும் சீலர்க. சர்க்கார் எழுத்தாளன் மீது, வழக்குத் தொடருவது என்றால், உண்மையிலேயே மிக மிக யோசனைக்குப் பிறகே, வழக்குத் தொடரவேண்டும்.

முருகன் மீது எப்படியாவது ஒரு வழக்குத் தொடுக்கவேண்டும் என்பது கந்தனின் ஆவல் - கந்தன், நண்பன் சோமனிடம் யோசனை கேட்கிறான் - சோமன் ஒரு ஆடாவடிப் பேர்வழி - இதெற்கென்ன கந்தா! ஏன் வீட்டுக் காளையை முருகன் தன் வீட்டுத் தொழுவத்திலே கட்டிவைத்து மூன்றுபடி பாலைக் கறந்தெடுத்துக் கொண்டான் என்று வழக்கு போட்டால் போகிறது என்று யோசனை கூறினால் கந்தன், சர்வசூன்யனாக இருந்தால்கூட ஏனடா சோமா! என்னை இழிவுபடுத்தவா இந்த யோசனை சொல்கிறாய்? காளை பால்கறந்தது என்று கூறினால் என்னையல்லவா, அடிமுட்டாள் என்று சொல்வார்கள் என்று கேட்கமாட்டானா! ஏன்மீது தொடரப்பட்ட வழக்கோ கந்தன், முருகன் போன்றோருடையதல்ல சர்க்கார் வாதி! நான் பிரதிவாதி! சர்வல்லமை பொருந்திய சர்க்கார் அதன் சட்ட திட்டங்களுக்கு அடங்கி நடக்கும் பொறுப்புள்ள ஒரு பிரஜை மீது தொடுக்கும் வழக்கு! இதிலே, காளைமாடு பால்கறந்தது என்ற போக்கு, இருக்கலாமா, கடுகளவாவது! இருக்கிறதே, கடுகளவா, கண்டவர் கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு! இரண்டு நீதிபதிகள் உட்கார்ந்து கூறுகிறார்கள், ஆரிய மாயையில் வகுப்புத் துவேஷம் இல்லை என்று - ஆனால், எண்ண, எழுத, சர்வ சுதந்திரம் வழங்கிடும் எழிலரசு அமைத்து இருக்கும் காங்கிரஸ் சர்க்கார், காளை மாட்டுப் பாலைக் கறந்தெடுத்துக் கொண்டேன் என்று வழக்குப் போடக்கூசும் கந்தனைவிட, அவசர அவசரமாக, இலோசனையற்று, ஏன்மீது வகுப்புத் துவேஷக் குற்றம் சாட்டிற்று - நான் தண்டனையையும் ஓரளவுக்கு அனுபவித்தேன். இலட்சணம் எப்படி இருக்கிறது!!

நாடாளும் சர்க்கார், ஒரு குடிமகன் மீது வழக்குத் தொடருவது என்றால், காரணமின்றி, நியாயமின்றி, அவசியமின்றி, சட்ட சம்மதமின்றிச் செய்யமாட்டார்கள், என்றுதானே பொதுவாக எவரும் எண்ணுவார்கள். அவ்விதம் எண்ணும் விதமாகத்தானே இளவந்தார்களின் தாளங்களும் துந்துபிகளும் முழங்கின! இப்போது அதுகளின் முகம், என்ன வழிய வழிய இருக்கும், என்று எண்ணுகிறீர்கள், இதோ தீர்ப்பு - குற்றமில்லை, என்று! குற்றக்கூண்டிலே மட்டுமல்ல, சிறைக்கொட்டடியிலும், துரத்தப்பட்டேன் - துரத்திய துரைத்தனத்தாரைப் பற்றி என்ன தீர்ப்பு பொதுமக்கள் தருவார்கள்.

பொறாமை, பொச்சரிப்பு, முன்கோபம் ஆகிய கெட்ட குணம் கொண்டவர்கள் பொய்க்கேசுகளை ஜோடித்து நல்லவர்களை ஆலைக்கழிப்பதுண்டு. அப்படிப்பட்டவர்களைச் சமூகத்தின் சாக்கடைப் புழுக்கள் என்று அறிவுடையோர் கூறுவர். இழிநிலைதான் அவர்கட்குக் கிடைக்கும் தனிப்பட்ட மனமாச்சரியத்தால் தூண்டப்பட்டோ, பொறாமை பொச்சரிப்புக் குணத்தாலோ பொய் வழக்குத் தொடுக்கும் அளவுக்குச் சிலருடைய போக்கு இருந்துவிடும் - ஆனால், ஒரு நாடு ஆளும் சர்க்கார், தன் ஆட்சியின் கீழ் உள்ளவர்களின் உரிமைகளை யாரும்ம பறித்துக் கொள்ளாதபடி பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் சர்க்கார் ஏன்மீது தொடுத்த ஆரிய மாயை வழக்கு, எப்படி இருக்கிறது என்று பாருங்கள் - எவ்வளவு இலோசனையற்ற, அவசரப்புத்தியுள்ள காரியம், இதோ நீதிபதிகள் இருவர் கூறுகிறார்களே குற்றமில்லை என்று - காங்கிரசாட்சி என்ன பதில் கூறுகிறது! காளை பால் தராதா ஆமாம் - மறந்துவிட்டேன் - அவசரத்தில் அவ்விதம் சொல்லிவிட்டேன் - என்றா வழவழா பேசமுடியும்? சர்க்காராயிற்றே - கந்தன் அல்லவே!!

ஒரு ஏடு - அதைப் படித்தால் மனதிலே துவேஷம் அடைந்து பலாத்காரத்தில், இரத்த வேட்டையில் இறங்கிவிடுவார்கள், என்று, உண்மையாகவே அச்சப்பட்டு வழக்குத் தொடரப்பட்டதா?

ஆரிய மாயைப் படித்தேன் - படித்ததும் ஏன்மனம் ஏரிமலையாகி விட்டது, எதிரே ஐகாம்பர குருக்கள் வந்தார், ஐ, ஆரியனே! தமிழகத்திலே தலைகாட்ட என்ன தைரியும் உனக்கு! என்று கூவினேன் கொக்கரித்தேன் - எனக்கு அவ்வளவு துவேஷம் மூண்டுவிட்டது ஓட ஓட விரட்டினேன். ஐகாம்பர ஐயர், பரமசிவம்! சச்சிதானந்தம்! சர்வேஸ்வரா! என்றெல்லாம் கதறினார் - நான் விடவில்லû ஏன்மனதிலே ஆரிய மாயை படித்ததாலே மூண்டெழுந்த ஆத்திரம், ஐகாம்பரத்தை அடி அடி என்று அடித்த பிறகுதான் ஓரளவுக்கு அடங்கிற்று என்று, யாராவது ஒரு அடிவருடியிடமிருந்தாவது வாக்குமூலம் கிடைத்திருக்கிறதா சர்க்காருக்கு?

அல்லது ஜகத்குரு சங்கராச்சாரியாரோ, சாதாரண ஐயரோ, ஆரிய மாயை எனும் ஏழு, நாடு கெடும் நஞ்சை எட்டவல்லது, நாடாள்வோர் இத்தகைய ஏடுகளை உலவவிடுதல் மகாபாபம் மகாதோஷம் என்று கூறினார்களா!

ஊருக்கும் கூட்டம் நடத்தி ஆரிய மாயை மூலம் வகுப்புத் துவேஷம் மூண்டு வருகிறது என்று யாராவது கிளர்ச்சி செய்தார்களா?

என்ன கண்டு, ஆரிய மாயை மீது பாய்ந்தனர், காங்கிரசாட்சியினர் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் பேச்சு மூச்சு இராது!

ஆரிய மாயை ஒரு தொகுப்பு நூல்!

இந்நாட்டு மதம், ஜாதி வகுப்பு மூடத்தனம், வைதீக வெறி, இவைபற்றி, பல்வேறு மேதைகள் வெளியிட்ட கருத்துக்களை, கோத்து வெளியிடப்பட்ட ஏடு.

இது வகுப்புத் துவேஷத்தை மூட்டுவதாக இந்தக் காங்கிரசாட்சிக்குத் தென்படுகிறது! எவ்வளவு கேலியாகக் கூறுகிறார்கள் மக்கள் இன்று - இரு நீதிபதிகள் ஆரிய மாயையில் வகுப்புத் துவேஷம் இல்லை என்று தீர்ப்பளித்து விட்டார்களே, ஏன் காங்கிரசாட்சியினர் இப்படி ஒரு இதாரமற்ற சட்ட பலமற்ற வழக்கைத் தொடுத்தார்கள் - என்று கேலியாகத்தானே பேசுகிறார்கள். பேசாமலிருப்பார்களா? நாடாள்பவர்கள், இப்படியா தங்கள் நிலையை இக்கிக் கொள்ளவேண்டும்! இழம் தெரியாமல் காலை விடும் பேர்வழி போலவா, ஆசோகச் சக்கரதாரிகள் நடந்து கொள்வது!
சாதாரண மாணவர்கள் கூட ஒரு வழக்குத் தொடுப்பது என்றால், தோற்றுவிட்டால் என்ன ùச்யவது, பலரும் கேவலமாகப் பேசுவார்களே என்ற யோசிப்பார்கள் - போகக் கூடாது, போனால் முகத்தில் கரிபூசிக் கொள்ளக்கூடாது, என்று கூறுவார்கள். ஒரு நாட்டை ஆளும் நிலையைப் பெற்றவர்களோ, வழக்குத் தொடுக்கிறார்கள், உயர்நீதி மன்றம், குப்பைக் கூடைக்கு அனுப்புகிறது!
கள்ளன் பிடிப்பட்டான், பிடிபட்டான் கள்ளன் என்று கூவி, மீசையை முறுக்கிவிட்டபடி, இதோ, இந்தக் கோணி மூட்டைக்குள்ளே கள்ளன் இருக்கிறான் என்று கூறியபடி, மூட்டையை அவிழ்த்து மன்னன் முன் காட்டுகிறான், ரணகளச் சூரன் ரங்கநாதன் - மூட்டைக்குள்ளே இருப்பதோ, வைக்கோற் பொம்மை! சபையிலள்ளவர்கள் சபாஷ் கூறவா செய்வார்கள்!

இதோ, இரு உயர்தர நீதிபதிகள், கூறுகிறார்களே, ஆரிய மாயையில் வகுப்புத் துவேஷம் கிடையாத என்று, யாருமே செய்யமுடியாத வீரதீரத பராக்கிமச் செயலைச் செய்துவிட்டவர்கள் போல அல்லவா, கிளம்பினர், காங்கிரசாட்சியினர், ஆரிய மாயையைத் தாக்க! கடைசியில்! செச்சே! எனக்கே, வெட்கமாக இருக்கிறது, அடிக்கடி கூற! ஏன், இவ்வளவு அவசரபுத்தி! எதற்காக இவ்வளவு பதைப்பு தனி நபராக இருந்தால், அவன் புத்தியே அது என்று கூறிவிடலாம், சர்க்காரை அல்லவா நடத்துகிறார்கள்!

உயர்நீதிமன்றம் பார்த்துக் குற்றமில்லை, என்று கூறினதால், நல்லதாயிற்று - வழக்கு அங்கு செல்லவில்லை என்றால், குற்றவாளிப் பட்டியலில்தானே ஏன் பெயர் இருந்து கொண்டிருக்கும்! குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கவா சிரமப்பட்டு ஒரு ஆட்சியை நடத்துகிறார்கள்! அவசரக் கோலத்தை ஆள்ளித் தெளிக்கும் போக்கிலே நடந்து கொள்ளும் காங்கிரசாட்சியிலே, எந்த நேரத்தில், யாருக்கு எத்தகைய ஆபத்து உண்டாகக்கூடும், எத்தகைய வழக்கு கிளம்பக்கூடும், என்று யார் கூறமுடியும்! இந்த நிலையிலே மக்கள் வைக்கப்பட்டிருப்ப தற்காகத் தானா சுயராஜ்யம் பெற்றது. எந்த ராஜ்யத்திலும், இப்படி வழக்குகளைத் தொடுப்பது, வாட்டுவது கடைசியாக, உயர்நீதி மன்றம் பார்த்து, இந்த வழக்கிலே ஊப்புமில்லை, சப்புமில்லை என்று கூறுவது, அப்படியா சரி, சரி என்று இளவந்தார்கள் கூறுவது என்ற நிலை இருக்கலாமா?

ஆரிய மாயை மூலம் வகுப்புத் துவேஷ மூட்டியதாக ஏன்மீது குற்றம் சுமத்திய சர்க்காரின் போக்கை, மக்கள் நன்கு புரிந்து கொள்ளும் விதமான தீர்ப்பு, சென்னை உயர்நீதி மன்றத்திலே, கிடைத்திருப்பது கண்டு. உண்மையாகவே களிப்படைகிறேன் - நண்பர்களும் மகிழ்வர்.

வகுப்புத் துவேஷம் என்ற பழி சுமத்தி, நமது இயக்கத்தைக் கேவலப்படுத்தும், முயற்சி, மேடை மூலமாக மாற்றுக் கட்சியினரால் செய்யப்பட்டு, முறிந்துவிட்டது.

வழக்கு மன்றங்கள் மூலமாக, வகுப்புத் துவேஷகள் என்ற பழிச்சொல்லை, நம்மீது திணிக்க வேண்டும் என்ற தீய நினைப்பும், பாழ்பட்டு வருகிறது.

ஆரிய மாயை வழக்கு ஒன்று மட்டுமல்ல, இலட்சிய வரலாறு என்று ஏடு மீதும் வழக்கு நடைபெற்றது, அதிலேயும், வகுப்புத் துவேஷம் இல்லை, என்ற தீர்ப்புக் கிடைத்தது. திராவிட நாடு இதழிலேயே, காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும் என்ற கட்டுரையும், வெள்ளி முளைக்க எட்டு ஆண்டுகள் என்ற கட்டுரையும், வகுப்புத்துவேஷ மூட்டுவன, என்று சர்க்கார் கூறி, ஜாமீன் கேட்டனர், உயர்நீதி மன்றத்தில் பிரதம நீதிபதியும், இருநீதிபதிகளும் அமர்ந்த மன்றத்திலே, இந்தக் கட்டுரைகளிலே வகுப்புத் துவேஷமில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஏன் ஏடு மட்டுமல்ல், நண்பர் ஆசைத்தம்பி தீட்டிய காந்தியார் சாந்தி அடைய என்ற ஏடு, வகுப்புத் துவேஷமுள்ளது என்று சர்க்கார் வழக்குத் தொடுத்து, ஆசைத்தம்பியைச் சிறையில் தள்ளிவாட வைத்தனர் - பிறகோ உயர்நீதி மன்றத்திலே, அந்த புத்தகத்திலே, வகுப்புத் துவேஷமில்லை, என்று தீர்ப்புக் கிடைத்தது.

புலவர் செல்வராஜ் அவர்கள் தீட்டிய, கருஞ்சட்டை ஒழிய வேண்டுமா என்ற ஏடும், நாடாள்வோருக்கு வகுப்பு, மதத் துவேஷத்தை எட்டுவதாகத் தோன்றியது. வழக்குத் தொடுத்தனர் - தீர்ப்பு, வகுப்பு மதத்துவேஷம் இல்லை, என்று கிடைத்தது. இந்தச் சம்பவங்களின் பொருள் என்ன? பாடம் என்ன?

வகுப்புத் துவேஷம் என்ற குற்றம் சாட்டியதிலே, காங்கிரசாட்சியின் போக்குத் தெள்ளத் தெளியத் தெரிவது போலவே, ஒவ்வொரு வழக்கிலும் தீர்ப்பு நமது பக்கம் இருப்பது, நமது தூய்மையை நிரூபிக்கிறது.

தொடுத்த வழக்குகள் தூள்! தூள்! துளியாவது, இதைக் கண்டு, காங்கிரசாட்சிக்கு வெட்கம் பிறக்க வேண்டாமா?

வீணாண வழக்குகளைத் தொடுத்து, எங்களை வாட்டிடும் போக்கைக் கொண்டிருக்கும் இளவந்தார்களைக் கண்டிக்கும் பொறுப்பு நல்லறிவாளர்களுக்கு - அவர்கள் எந்த முகாமிலும் இருப்பினும் - இல்லையா என்று கேட்கிறேன்.

பொதுநல ஊழியர்கள் மீது இவ்விதம், சட்ட பலமற்ற வழக்குகளைத் தொடுத்துக் கொண்டிருப்பது முறைதானா? ஒவ்வொரு வழக்கையும், உயர்நீதி மன்றத்திலே கொண்டு செல்லும் காரியம் சுலபமானதா? சிரமம் எவ்வளவு? செலவு எத்தனை, இடையே தொல்லைகள் எவ்வளவு? ஏன் குற்றமற்றவர்கள் மீதுரு இந்தக் கொடுமை! - இதைக் கேட்க ஆளில்லையா இந்த நாட்டிலே! மேதைகளே! தீவிரவாதிகளே! பேச்சுரிமை எழுத்துரிமைப் பாதுகாவலர்களே! இந்தப் போக்கைக் கண்டிக்காமலிருக்கும் காரணம் என்ன?

வகுப்புத் துவேஷம் - ஆரிய மாயையில், இலட்சிய விளக்கத்தில் திராவிட நாடு இதழில், காந்தியார் சாந்தி அடைய எனும் நூலில், கருஞ்சட்டை ஒழிய வேண்டுமா எனும் புத்தகத்தில் - காங்கிரசாட்சி கூறிற்று - உயர்நீதி மன்றமோ இல்லை என்று தீரப்பளிக்கிறது.

எங்கள் மீது துவேஷம் கொண்டவர்கள், இவ்விதம் வீண்வழக்குகளைத் தொடுக்கிறார்கள், என்பது புரியவில்லையா! இந்தத் துவேஷத்துக்கு யார் வழக்குத் தொடுப்பது, என்ன தண்டனை விதிப்பது?
போதாதா நாங்கள் விதித்துள்ள தண்டனை! தேர்தலின் போது தீர்ப்பு அளித்துவிட்டோமே! என்று கூறும் பொது மக்கள், ஏன் மனக்கண்முன் தெரிகிறார்கள், உண்மைதான்! தீர்ப்பு அளித்துவிட்டார்கள்!

நாட்டிலுள்ள கேடுகளைக் களைய வேண்டுமென்ற நல்லார்வத்தின் காரணமாகப் பேச்சிலும் எழுத்திலும் நாம் ஒருவேளை வகுப்புத் துவேஷம் வளரும் விதமாக நடந்து கொள்கிறோமோ, என்ற ஐயம் ஏற்பட்டால்கூட இதோ வரிசை வரிசையாகக் கிடைத்துள்ள தீர்ப்புகள் கூறுகின்றன. இல்லை, இல்லை, வகுப்புத் துவேஷமல்ல உன் எழுத்திலே இருப்பது, நீ குற்றமற்றவன், உன் செயலிலே தவறு இல்லை என்று.

தீர்ப்புகள் தரும் உற்சாகம் புதியதோர் ஆர்வத்தைத் தருகிறது.

நமது பணியைத் திரித்துக் கூறுவோர்கள் கூவட்டும், கொக்கரிக்கட்டும், வழக்குகள் தொடரட்டும், நாம் நமது பணியினைத் தூய உள்ளத்துடன், தொடர்ந்து நடத்திச் செல்வோம், நாடு தீர்ப்பளிக்கட்டும், நல்லோர் தீர்ப்பளிக்கட்டும் என்ற உறுதி கலந்து உற்சாகம் கிடைக்கிறது நல்ல தீர்ப்பு மூலம்
(திராவிடநாடு - 30-3-52)