அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆசைத்தம்பி, வழக்கு அப்பீல்

சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல்
விரைவில் விசாரணை

“காந்தியார் சாந்தியடைய” என்ற நூலை எழுதியமைக்காக தண்டனை பெற்ற தோழர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி 11.9.50 அன்று ஜாமீனில் திருச்சி மத்திய சிறையிலிருந்து வெளியானார்.

திருச்சி ஜில்லா கோர்ட்டில் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையும் ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டதை எதிர்த்து கழகத்தின் சார்பில் திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்து கொள்ளப்பட்டதும், அங்கு ஆறுமாதச் சிறைவாசம் ஒரு மாதமாகக் குறைப்பட்டதும் தோழர்கள் அறிவார்கள்.

அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆசைத்தம்பி சார்பில் அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது. அதோடு ஜாமீன் மனுவும் சமர்ப்பிக்கப்பட்டது. மனுக்களை நீதிபதி சோமசுந்தரம் அவர்கள் ஏற்றுக்கொண்டு தோழர் ஆசைத்தம்பியை ஜாமீனில் விடுவிக்க உத்திரவு பிறப்பித்தார்.

ஐகோர்ட்டில் வழக்கு சம்பந்தமான காரியங்களை சென்னைத் தோழர்கள் கே.கோவிந்தசாமி, டாக்டர் கணேசன் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

தோழர் ஆசைத்தம்பி சார்பில் பிரபல வழக்கறிஞர் துரைராஜ் அவர்கள் வாதாட இருக்கிறார். ‘திராவிட நாடு’ ஜாமீன் வழக்கில் வாதாடி வெற்றிபெற்ற வழக்கறிஞர் தான் திரு.துரைராஜ்.

விரைவில், உயர்நீதிமன்றத்தில் ஆசைத்தம்பி வழக்கு விசாரணைக்கு வருமென்று தெரியவருகிறது.

(திராவிடநாடு 24.9.50)