அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அடக்குமுறை ஆரம்பம்

வெற்றிக்கு வித்தூன்றப்பட்டு விட்டது
தலைவர்கள் கைது

22.8.48 ல் சென்னையில் தலைவர் பெரியார் அவர்களின் இல்லத்தில் திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தலைவர் பெரியார் அவர்களையும், மற்றும் அங்கு கூடியிருந்த நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களையும், இந்தி எதிர்ப்பு நிர்வாகச் செயலாளர்கள் தொண்டர்களையும் போலீசார் கைதுசெய்து சிறையில் வைத்துள்ளனர். சிறைப்படுத்தப்பட்டவர்களின் விபரம் இங்கு தரப்படுகிறது.

பெரியார், வேதாசலம், சி.டி.டி அரசு, என்.வி.நடராஜன், மணியம்மையார், நீலமேகம், அண்ணாத்துரை, ஈ.வி.கே.சம்பத், மணிமொழியார், ராமச்சந்திரன், சி.கணேசன், சேலம் ஜகதீசன், கே.ஜே.குப்புசாமி, அழகிரிசாமி, நீடாமங்கலம் ஆறுமுகம், டாக்டர் தர்மாம்பாள், ராமாமிர்தத்தம்மாள், சித்தையன் சேலம், பெத்தாம்பளையும் பழனிசாமி, சி.வி.எம். அண்ணாமலை, மதியழகன், மோகனராசு (வேலூர்) தங்கராஜ், செழியன், கே.வி.கே.சாமி, வி.குருசாமி, திருநாவுக்கரசு, எ.பி.ஜெனார்த்தனம், கோவிந்தசாமி, முனுசாமி (விருத்தாசலம்) மொய்தீன், பராங்குசம், இ.வி.ஏ. வள்ளிமுத்து, ரோ.சு. அருணாசலம் ஆளவந்தார். லூயிடாமினிக் அய்யாசாமி, ராஜமாணிக்கம் பி.வி.பத்மனாபன், எஸ்.குருசாமி, பி.டி.தனபால், ஆர்.நடேசன், புலவர் மாணிக்கம், புலவர் கோவிந்தன், டி.விமுருகேசன் (தஞ்) பி.தங்கவேலு (தஞ்) பொன்னுசாமி (தஞ்) குருநாதன், எஸ்.ராஜகோபால் (தஞ்) சின்னத்துரை (கோ)எம். ரெத்தினம் (தூத்து) எஸ்.நடராசன் (தூத்து) தங்கப்பழம் (தூத்து) சோ.கோ.முருகையன் (செ) கண்ணம்மாள். சீதாபதி, பி.முருகேசன் (புலியூர்) கே. பாலையா (புலியூர்), எஸ்.மயில் வாகனம், இரா.ராஜகோபால், சீதாராமன், சங்கரய்யா, வி.சித்தையன், ஜே.கே.வேலாசாமி, பி.எஸ்.கிருஷ்ணன், எம்.பி.நடராஜன், பி.மாணிக்கம், பி.கே.எந்.சக்ரவர்த்தி, பி.ஜீ.ஏழுமலை, ஆர்.ஷண்முகம், எஸ்.வெங்கட்ராஜ், எ.முத்துக்குமாரசாமி, ராஜு (தாதம்) முத்துக்குமாரசாமி (பெத்து) ஆர்.வெங்கட்ராமன் (நாட்ராம்) சி.கோவிந“தராஜன் (வாணி) பிரமன் (நாட்) கே.சுப்பையா (வண்) பி.கே.ராமமூர்த்தி (பெண்) சுப்பிரமணி (சென்) வி.தாண்டவன், பி.ஜி.சம்பந்தம் (பொறை) தியாகராஜன் (பொறை) ஏ.எஸ்.ஷண்முகம் (திருப்பூர்) டி.கே.கோவிந்தசாமி, என“.கே.கணபதி (காஞ்சி) ஜி.என்.சாமி (தாராசுரம்) ஜி.பி.சோமசுந்தரம் வானமாமலை (திருச்சி)

திண்டுக்கல்லில் கைது
22.8.48 ல் திண்டுக்கல் காங்கிரஸ் மாநாட்டுக்குப் போயிருந்த ஸ்தல ஸ்தாபன மந்திரி தோழர் சந்திரமௌலி அவர்களைப் பகிஷ்கரிக்கும் முறையில் “இந்தி ஒழிக” “தமிழ் வாழ்க” என்று கூறிய ஒன்பது பேரைப் போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் கைது
திருச்சியில் பதினான்கு சிறுவர்கள் இந்தி எதிர்ப்பு ஒலிகளைக் கிளப்பியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆச்சாரியாருக்குக் கருப்புக்கொடி 57 பேருக்குத் தண்டனை
23.8.48 மாலை கவர்னர் ஜெனரல் கார்ப்பரேஷன் ஸ்டேடியத்துக்கு வந்தபோது கருப்புக்கொடி பிடித்துக் கவர்னர் ஜெனரலைப் பகிஷ்கரிக்கும் அறிகுறி காட்டியதற்காகச் சென்னைத் தோழர்கள் ஐம்பத்தேழு பேருக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னையில்
24.8.48 ல் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் ‘இந்தி ஒழிக’, ‘தமிழ் வாழ்க’ என்று கூறியதற்காக இருவருக்கும் ரூபா பதினைந்து வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

(திராவிடநாடு 29.8.48)