அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அந்தக் குண்டு!

பிரிட்டிஷ் முதலமைச்சர் சர்ச்சில், கிரீஸ் குழுப்பத்தைத் தீர்த்துவைக்கவும், அதன்மூலம், அந்நாட்டு மக்களைக் கொலை கொள்ளை கொடுமையிலிருந்து மீட்கவும், வேட்டுகள் பறந்து கொண்டும், உடலங்கள் வெந்து கொண்டும், மாளிகைகள் இடிந்து கொண்டும், மக்கள் பயத்தால் நடுங்கிக்கொண்டும இருந்த கிரீசுக்கு, உயிருக்குத் துணிந்து சென்றார். உள்நாட்டுப் பூசலை ஒழிக்க ஒன்றுபட்ட கருத்தைத் திரட்ட மாநாடு கூட்டினார். எந்தச் சமயத்திலே இந்தத் துணிவுடன் எப்படிப்பட்ட தலைவர் வந்திருக்கிறார் என்பதை அறிந்து, வீரனுக்கு வாழ்த்துக் கூறவேண்டியிருக்க, கிரீசிலே ஒரு கயவன் சர்ச்சிலைச் சுட்டான், குண்டு அந்தக் கன்றாத வீரம் படைத்த சர்ச்சில் மீது பாயவில்லை. ஏதுமறியாத இளமங்கைமீது பாய்ந்ததாம். கிரீஸ் நாட்டுப் பிரச்னைகளும், பிளவுகளும் எந்த அளவுக்கப் பித்த மனப்பான்மையை உண்டு பண்ணிவிட்டன என்பதை அந்தக் குண்டு காட்டுகிறது. நாஜிகளால் நசுக்கப்பட்டு நாதியற்றுக் கிடந்த நாட்டுக்கு பிடுதலை தந்த வீரனுக்கு, கிரீசில் அக்கயவன் காட்டிய துரோகம், வரலாற்றுச் சுவடிகளிலே.