அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அண்ணாவின் அயரா உழைப்பு -
சி.என்.ஏ. உடல்நிலை

ஈரோடு பொதுக்குழுவிற்குச் சென்றிருந்த பொதுச் செயலாளர் சி.என்.ஏ.க்கு லேசான சிறுவலி, நெஞ்சில் இருந்தபடியே இருப்பதால், மதுரையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் நுண்ணிய வீக்கம் ஏற்பட்டிருக்குக்கூடும் என்று தெரிந்து சென்னையில் மீண்டும் நாடித் துடிப்பின் அசைப்புப் பரிசோதனை செய்யப்பட்டு ஓயாத உழைப்பின் காரணமாக ஏற்பட்டதே இந்தவலி என்றும், வேறு பயப்படத்தக்கது எதுவுமில்லை யென்றும் குறைந்தது மூன்று மாத காலம் நல்ல ஓய்வு கிடைத்தால் போதும் என்றும் தெரிவித்து, தக்க மருத்துவமும் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, தோழர்கள், விழாக்கள் என்று அழைப்புகள் விடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

செய்தி – திராவிட நாடு – 20-4-52