அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அந்தக் கரம்

“அதோ வெகுதூரத்தில் அந்த நதிக்குப்பின்னால், அந்த மலைகளுக்கும் காடுகளுக்கும் அப்பால் தமது புண்யபூமி கிடக்கிறது. நாம் உதித்த மணல். நாம் திரும்பவும் சென்றடையப்போகும் நிலம். உற்றக் கேள்! இந்தியா அழைக்கிறது நம் நாட்டு நாற்பது கோடிமக்கள் அழைக்கின்றனர். இரத்தம் இரத்தத்தைக்கூப்பிடுகிறது. எழுங்கள் வீண்பொழுது போக்க இது நேரமன்று. உங்கள் ஆயுதங்களை எடுங்கள்! அதோ உங்கள் முன்னால் நம் முன்னோர்கள் கட்டிய பாதை இருக்கிறது. அந்தப்பாதை வழீயாக நாம் அணி வகுத்துச் செல்வோம். எதிரிப் படைகளின் நடுவே நாம் ஊடுறுவிச்செல்வோம்.

நமது கடைசியில் நமது ராணுவத்தை டில்லிக்கக் கொண்டு செல்லும் பாதையை நடத்திடுவோம் டில்லிசெல்லும் பாதையே சுதந்திரப் பாதை சலோ டில்லி!”

வங்கச் சிங்கம், சுபாஷ் சந்திர போசின் வீரஉரை இது. தேசிய ராணுவம் என்று அழைக்கப்படும் அமைத்த காலை அவராற்றிய ஆற்றலுறை - அனைவருக்கும் அந்த அழைப்பை அனுப்பினார் - தமிழரே ஏராளம் அந்த விடுதலைப்படையில்.

அவர் அமைத்த விடுதலைப்படை வெற்றி பெற்று, எந்த டில்லியில் பவனி வரவேண்டும் மென்று விரும்பினாரோ, என்று டில்லியைக் காண அவரும் அவர் அமைத்த படையினரும் ‘இரத்த ஸ்நானம்’ செய்தனரோ, அதே டில்லியிலே, நடைபெறுகிறது, அரசியல் நிர்ணயசபை. ஆனால் சுவாஷின் இன்பக்கனவு நனவாகி இருந்திருப்பின், இதுபோன்றா நடைபெற்றிருக்கும்! சபையிலே ஒரு பகுதியில் ஆட்களில்லை. சமஸ்தானாதிபதிகள் சலசலப்பு மற்றோர்புறம். வெள்ளையரின் ராஜதந்திராயுத வீச்சு வேறோர்புறம். தொகுதியா, கூட்டா? கட்டாயத் தொகுதியா என்ற விவாதம் ஓர்புறம்! அ.நி. சபை, வீரர்களின் அறிவிப்புக்கு இடமளிக்குமிடமாக இருக்கவில்லை - வக்கீல்களின் சங்கமாகிவிட்டது! ஏன்? பிரட்டிஷார் வகுத்ததிடட்ம், அப்படிப்பட்டது. எழுத்துக்கெழுத்து, சச்சரவு மூட்டக்கூடிய விதமாக; சட்டச்சிக்கல், வியாக்கானச் சிக்கல் கொண்டதாகத் திட்டம் தீட்டி, அதிர்ப்திநிறையவளர்ந்த பிறகு அதனைத் தந்தனர். இன்று அ.நி. சபையிலே தெரிகிறது. வெள்ளைக்காரனிடம் “குண்டு” மட்டுமல்ல இருக்கும் ஆயுதம் என்று. ஒருதிட்டம், ஒருபட்டாளத்தால் கூடச்சாதிக்க முடியாத காரயித்தைச் செய்து விடுகிறது நாட்டுவிடுதலை முயற்சியைக் கெடுத்து வருகிறது.

திட்டத்திலே ஒருபகுதியைக் காட்டி, ‘ஐயா! இதற்கென்ன பொருள்?” என்று கேட்க வேண்டிய நிலையை, ஏன் பிரிட்டிஷார் உண்டாக்க வேண்டும். தெளிவான, சந்தேகத்துக்கு இடமேயில்லாத, சாப்ரூ ஜெயகர் தேவைப்படாத, சட்டச் சருக்கலில்லாத பதங்கள் இல்லையா? ஏன், திட்டத்திலே, பாவனைக்கு ஏற்றபடி பொருள் கொள்ள கூடிய மதங்கள் உள்ளன? நமக்குள், விவகாரம்’ முற்றுவதற்குத் தான்! இல்லையானால், எங்காவது கேள்விப்பட்டதுண்டா, திட்டத்திலே ஒருபகுதிக்கு, தீட்டியவர். ஒரு அர்த்தம் சொல்லி விட்டு, வேண்டுமானால், கோர்ட்டுக்குப்போ, என்று பேசியதை! மத்யஸ்தம், சமரசம், என்று எந்தப்பெயரிட்டாலும் சரியே, மத்யஸ்ததாரனாகவே பார்த்து, நான் இதற்கு இப்படிப் பொருள்கூறுகிறேன், வேண்டுமானால் கோர்ட்டுக்கும் போய்க்கேள் என்று சொல்லலாமா? நமது ஓட்டல் சாப்பாடு வெகு நேர்த்தி - அரிசி முதல்தரம் - சமயல் முறையும் மேலானது - எதற்கும் அடுத்த வீதியிலே டாக்டர் இருக்கிறார் அவரிடமும் சென்று, மருந்து பெற்றுக்கொள்ளுங்கள் இஷ்டப்பட்டால் என்று கூறுபவரை, என்ன என்று கூறுவோம். பிரட்டிஷார் பேச்ச இதைவிட மோசமான விபரீதப்போக்கில் இருக்கிறது. ‘வேண்டுமானால் கோர்ட்டுக்குப்போ! ஆனால் கோர்ட்டாடிரின் முடிவுக்குக் கட்டுப்படமுடியாது. நான் கூறும் பொருளின் படித்தான் பாரியம் நடைபெற வேண்டும்” என்று கூறுகிறார்கள்.

விடுதலை விரும்புபவர்களை விளையாட்டுப் பிள்ளைகளாக்க விரும்புகிறார்கள். ஏன்? அவர்கள் நன்கு அறிந்து கொண்டுவிட்டார்கள், இங்கே, இனங்களுக்குள், அவநம்பிக்கையும், மாச்சரியமும் வளர்ந்துவிட்டதை எனவேதான் வெளிப்படையாகவே பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

வேளைக்கேற்றபடி, ஆளுக்கேற்றபடி பேசுவதும், சமயத் துக்குத்தக்க ‘ரூபம்’ எடுப்பதும் பிரிட்டிஷாரின் பிறவிக் குணம் என்றாலும், இம்முறை அவர்கள் தங்கள் திறமையின் உச்சஸ்தானத்தை அடைந்துவிட்டார்கள். அவசரமாக படிக்கிறார்கள்! கிரிப்சுக்கு, வீரபாகம் - பெதிக்லாரன்சுக்கு சோகபாகம் - சர்ச்சிலுக்கு கோப பாகம் - இப்படி அவர்களுக்குள் வேஷங்களை அமைத்துக் கொண்டு, நாடகம் நடத்துகிறார்கள்.

இந்தியா ஒரே ஆட்சியில் இருக்கவேண்டும் - இது காங்கிரஸ் கேட்டது.

இந்தியாவில் இருராஜ்யங்கள் - இது லீக் கேட்டது.

லீக் தனது பிரசாரபலத்தை அதிகப்படுத்தும் வரையில் பிரிட்டிஷார், செய்துவந்த தந்திரம், இந்தியா ஒருநாடு - அதைப் பிரிக்கலாமா? என்று உருக்கமாகப் பேசியதுதான். அமெரியின் அந்த நாள் வசகத்தை நினைவில் கொள்ளவோர் இதனை அறிவர். இந்தியா முதலில் (ஐணஞீடிச்ஞூடிணூண்t) என்று இந்தியாவை அடிமை கொண்ட ஏகாதிபத்யத்தின் ஏவலர், ‘தேசியம்’ பேசியகாலம் அது. என்ன அதன்பொருள்? ஏனு“ அந்தப் போக்கு கொண்டனர்? காங்கிரசுக்கு ஒரு கோப்பை கருப்பஞ்சாறு! காங்கிரசுக்கு இனிப்பு தரவேண்டும் என்ற நோக்கத்தோடு அல்ல, அதைக்கண்டு, லீகுக்குக் கொஞ்சம் ரோஷம் - கோபம் வரவேண்டும்எ ன்று. லீக்பல மானதும், பிரிட்டிஷார் “இந்தியா ஒன்றுதனன் என்றாலும்”... என்று இழுத்துப் பேசினர். காங்கிரஸ் - லீக் பேதம் வளர வளர, பிரிட்டிஷாரின் பேச்சிலே மேலும் மேலும் தேன் ஒழுகலாயிற்று.

“சுந்திரமா தேவை! அன்பு மிக்க இந்தியப் பெருங்குடி மக்களே! அதனைத் தரவே துடிக்கிறோம், பெற்றுக்கொள்ள!” என்று கவிதை பொழியலாயினர். ஜாலியன்வாலா நடத்தியவரின் வாயிலிருந்து இந்த அன்புரை வரக்காரணம் என்ன? பேதம், உள்நாட்டிலே வளருகிறது எனவே நாம் சுதந்திரம் தருவதாகச் சொல்வது, சச்சரவை அதிகப்படுத்திவிடும், அந்தச் சச்சரவையே பிறகுநமக்குச் சாதகமாக்கிக்கொள்ளலாம், என்ற தந்திரப்போக்கு அது.

பாகிஸ்தான் கேட்டனர் முஸ்லிம்லீகினர்.

பாகிஸ்தானா, அது கூடாதே, என்றது ஏகாதிபத்யம். கூடாது அல்ல கூடாதே அதாவது, தரமுடியாது என்று உறுதியாகக் கூறவில்லை - அது ஏன், என்று உருக்கமாக உரைத்தனர். திட்டத்தின் படியோ, இந்திய உபகண்டத்தை அ.ஞ.ஞி என்ற மூன்று பிரிவுகள் கொண்டதாக்கினர். கேட்டது ஒரு பாகிஸ்தான் - அதை மறுத்துவிட்டு, பாகிஸ்தானைப் பாகிஸ்தான் செய்தனர்! இந்தியாவை, இந்துஸ்தான் பாகிஸ்தான் என்று பிரித்திருக்கலாம் - அந்தப் பாகிஸ்தானில், எல்லைஎப்படி இருக்கவேண்டும், எந்தெந்த மாகாணம் இருக்க வேண்டும் என்ற விவரத்தை விளக்கி இருக்கலாம் - அப்போது அதிலே அசாம் இருக்க முடியுமா, கூடாதா, என்ற பிரச்னைகளைத் தெளிவாக்கி இருக்கமுடியும். “இதிலிருந்து இதுவரை” என்று லீக் கேட்க, வேண்டாம் இதிலே இருந்து இதுவரை மட்டுமேதான் பாகிஸ்தானாக இருக்கவேண்டும் என்று சமரசம் கமிட்டி கூறியிருக்கலாம், இந்தநேரம் பிரச்னை தீர்ந்துபோயிருக்கும்.

லீகினரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்துவிட்டதாகக் காங்கிரஸ் கருதவேண்டும் - காங்கிரசின் விருப்பத்தைப் பூர்த்திசெய்ததாக லீக் எண்ணிக்கொள்ள வேண்டும் - இப்படித் தவறான எண்ணம், மாறிமாறி இரு கட்சிகளுக்கு மிடையிலே ஏற்பட்டபடி இருக்கவேண்டும், இதனைச் சாக்காகக் கொண்டு, சர்வ வல்லமை உள்ளசாமராஜ்யம் என்ற பெயருக்கேற்ற சக்தி போய்விட்ட இந்த நாட்களிலும், சாம்ராஜ்யாதிபதியாக வாழவேண்டும். இது பிரிட்டிஷ் நோக்கம். இதற்கே நாடகம்.

எனவேதான், இந்த அமைப்பை, அட்லி நிர்ணயசபை என்று அழைத்தோம்.

பண்டித நேரு, வீர உரையாற்றினார், அ.நி. சபையில். வெள்ளையன் காதிலே விழவேண்டிய பேச்சுத்தான். ஆனால் அவரையும் என்ன பாடுபடுத்தி வைக்கிறது பாருங்கள் ஏகாதிபத்யம். அ.நி. சபையிலே அதிதீவிரமாகப் பேசிய அதே நேருவை, கல்கத்தா வெள்ளை வர்த்தகர் சங்க விழாவுக்கு அழைத்தனர் பேச. அங்கு சென்ற நேரு, பழய பல விஷயத்தை மறந்து பிரிட்டனுடன் நேசமாகவே வாழ நாங்கள் விரும்புகிறோம் என்று பேசவேண்டி நேரிட்டது. அ.நி. சபையிலே, அவர், தேசவிடுதலை வீரர் மொழி பேசினார். வெள்ளையர் மத்தியில், குழைவு மொழி பேசலானார். இவ்வண்ணம் ஒரு தனி மனிதரை மட்டுமல்ல, பலரை மட்டுமல்ல, கட்சிகளையே தன் இஷ்டப்படி ஆடச் செய்கிறது, ஏகாதிபத்யம்.

சுதந்திர இந்தியக் குடிஅரசுத் தீரமானத்தைப் பண்டித நேரு பிரேரேபித்திருக்கிறார். அதனை இப்போது நிறைவேற்ற வேண்டாம், லீகும், சமஸ்தானாதிபதிகளின் சார்பில் வருவோரும் கலந்துகொள்ளட்டும், பிறகு நிறைவேற்றுவோம், என்று டாக்டர் ஜெயகர் கூறுகிறார். அது பற்றிய விவாதமும், விளக்கமும், மறுப்புரைகளும், எழுச்சிப்பேச்சும், எல்லாம் சேர்ந்து, உலகுக்கு எதை எடுத்துக் காட்டுகிறது என்று கூர்ந்து கவனித்தால், சுதந்திரம் கோரும் இந்தியாவில் பலமான கருத்து வேற்றுமை இருக்கிறது என்பதைத்தான்.

இந்த மகத்தான தீர்மானம், அரை நூற்றாண்டாக, எந்த இலட்சியத்துக்காக, ஆயிரமாயிரம் இளைஞர்கள் தியாகத் தீயிலே குளித்தனரோ, அந்த இலட்சியத்தை அடைவதற்கான தீர்மானமாகும். இதுபற்றிவிவாதம் நடக்கும்போது, நமக்குள் இருக்கும் உட்பகையைக் கண்டு, வெள்ளைக்காரன், கடலுக்கு அப்புறமிருந்து கேலி செய்யும் காட்சியைக் காண்கிறோம். இதுவே இன்று, உண்மை நிலையுணர்வோரின் உள்ளத்தை வாட்டுவது.

அ.நி. சபையிலே, லீகினர் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஜனாப் ஜின்னா கூறிவிட்டார்.

இதிலே கலந்துகொள்ளாவிட்டாலும், தொகுதி பற்றிக் கூடும் சபைகளில், ஞ.ஞி. சபைகளில், லீகினர் கலந்துகொள்வர், என்றும், அந்த இரு தொகுதிகளைப் பற்றிய திட்டங்களை அவர்கள் தயாரிப்பர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கோர் புதுச் சிக்கல் உண்டாகிவிட்டது.
அசாம் மாகாணக் காங்கிரஸ் தலைவருக்குக் காந்தியார் ஒரு யோசனை கூறிவிட்டார். வங்காளமும் அசாமும் சேரந்து ஞி. தொகுதி. இதிலே இருக்க இஷ்டமில்லை என்று அசாம் கூறுகிறது. அப்படியானால், ஞி. தொகுதிக்கான சபை நடைபெறும் போது நீங்கள் கலந்துகொள்ளாதீர்கள் என்று அறிவித்துவிட்டார்.

மொத்தமாக அ.நி. சபை கூடுகிறபோது லீகினர் கலந்து கொள்ளவில்லை.

தொகுதிகள் பற்றிய சபை நடவடிக்கைகளிலே, காங்கிரஸ் கலந்துகொள்ளவில்லை.

இப்படி ஒரு நிலைமை வளர வழி உண்டாகிவிட்டது.

மெஜராடி பலத்தைக் கொண்டு முஸ்லீம்கள் விரும்பாத அரசியலைத் திணிப்பதற்காகவே இந்த அ.நி.சபை. இதிலே நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என்று லீகினர் கூறுகின்றனர்.

ஞ.ஞி. தொகுதிகளிலே, முஸ்லீம் லீகினரே மெஜாரடி. அந்த மெஜாரடி பலத்தைக் கொண்டு, அந்தத் தொகுதிகளில் சேர விரும்பாத எங்களைக் கட்டாயமாகச் சேர்க்க விரும்புகிறார்கள் - எனவே நாங்கள் அந்தத் தொகுதி சபைகளிலே கலந்து கொள்ள மாட்டோம் என்று அசாம், எல்லை, எனும் இரண்டு மாகாணக் காங்கிரஸ் தலைவர்களும் கூறுகின்றனர்.

மொத்த இந்தியாவில் சேர்த்து விடாமல், தனி அரசாக, எல்லை, பஞ்சாப், சிந்து, வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாகாணங்களைப் பாகிஸ்தான் ஆக்கவேண்டும் என்று லீக் கோருகிறது.

பிரிட்டிஷார், இந்த ஐந்தை இரண்டு பிரிவாக்கினர். எல்லை, பஞ்சாப், சிந்து ஒரு தொகுதி. அசாம், வங்காளம், மற்றோர் தொகுதி என்ற முறையில். இந்தத் தொகுதிகளில், மெஜாரடிபலம், லீகுக்கு. எனவே இதிலே கலக்கக் காங்கிர1“ சார்பினர் விரும்பவில்லை. ஆக லீக் வராததால், அ.நி. சபை பூரண பிரதிநிதித்வம் வாய்ந்ததாகவில்லை; அசாம், எல்லை ஆகியவைகளிலே உள்ள காங்கிரசார் கலந்து கொள்ளாததால், தொகுதிகள் சபையும் பூரண பிரதி நிதித்வம் வாய்ந்ததில்லை.
இஷ்டப்படாத பகுதியினர் மீது திட்டத்தைத் திணிக்க மாட்டோம் என்று பிரட்டிஷார் கூறுகின்றனர்!

ஏன், அ.நி. சபையினர் தயாரித்த திட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரவில்லை என்று காங்கிரஸ் கேட்டால், லீகினரின் ஆதிக்கத்திலுள்ள பகுதி ஏற்க மறுப்பதால், நாங்கள் அதனைத் திணிக்கவில்லை என்று பிரிட்டிஷார் சுலபமாகப் பதில் கூறுவர்.

ஏன், ஞ. ஞி. தொகுதிகளின் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரவில்லை என்று லீக் கேட்டால், அசாம் ஏற்றக் கொள்ளவில்லையே, எல்லை ஏற்றுக் கொள்ளவில்லையே என்று அதற்கும் சுலபமாகக் கூறிவிட முடியும்.

இந்த நிலையை நீடிக்க விடுவதா, என்பதே நமது கேள்வி.

ஒன்று தெளிவாகத் தெரிகிறது - டில்லி - சுபாஷ் பாபு காண விரும்பிய விதமாக இல்லை. ஆங்கில ஏகாதிபத்யம், எத்தகைய டில்லியைக் காண விரும்புகிறதோ, எவ்விதமான டில்லியைக் கிளைவ் கண்டு கிளத்தானோ, அதே டில்லிதான் தெரிகிறது. அதே குழப்பம் - அதேவிதமான ஒற்றுமைக்கேடு - அதேபோன்ற மாச்சரியம், ஏறக்குறையய பிளாசிவாடை அடிக்கிறது.

“அழிந்துவிட்ட, இனி அழியப் போகும் சாம்ராஜ்யங்களின் சுடுகாடு டில்லி” என்று கிருபளானி பேசினார். இடமும் அப்படிப் பட்டதுதான்! சூழ்நிலையும் அவ்விதமே இருக்கிறத. எனவே, இப்போது செய்யவேண்டியது, இந்தியா சுதந்திரக் குடி அரசு விரும்புகிறது, அக்குடி அரசுக்கான திட்டம் தயாரிக்க விரும்புகிறது - என்ற தீர்மானத்தை நிறைவேற்றவிட்டு, சபையைக் கலைத்துவிட வேண்டும், அல்லது ஓராண்டு ஈராண்டு ஒத்திவைத்த விட வேண்டும்; அந்த இடைக் காலத்தில், பிரிட்டிஷ் திட்டப்படி அல்ல, சகல கட்சியினரும் கூடிக் கூடிப் பேசி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் பேசி, வெளியாள் கண்டு நகைக்கிறானே என்ற வெட்கக்கேட்டுக்கப் பயந்தாவது பேசி, மொத்தமாக ஏகாதிபத்யத்திடம் அடிமையாக இருப்பதை விட, நமக்குள்ளே ஒருவருக்கொருவர், கொஞ்சம் அதிகச் சலுகையோ, சலுகைக் குறைவோ, பெற்றுக்கொள்வதைப் பொருட்படுத்தாமல், ஒரு சமரசத்துக்கு வரவேண்டும் - அந்தச் சமரசம், சுய நிர்ணயத்தை - அதாவது இன அரசை - அடிப்படையில் கொண்டதாக அமையவேண்டும் - அந்த ஏற்பாட்டுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், அ.நி. சபை உண்மையான உரிமைச் சபை கூட்டி, விடுதலை விழா கொண்டாட வேண்டும்.

இதற்கான சூழ்நிலையை உண்டாக்கிப் பணியாற்ற வேண்டும்.

இது பொது யோசனை. இதே பிரச்னையே, நமது பிரச்னை தொக்கிக் கிடக்கிறது. திராவிட கழகத்தாராகிய நாம் இந்த சபையிலேயோ, இதற்குத் திட்டம் தந்த மந்திராலோ சனையிலேயோ கலந்து கொள்ளவுமில்லை - கவனிக்கப்படவு மில்லை- நாமும் என்னம் செலுத்தவுமில்லை. நமது கோரிக்கை, வடநாட்டுத் தொடர்பு கூடாது என்பது. ச்.ஆ.ஞி. எனும் தொகுதிகள் போதா. ஈ. தொகுதி வேண்டும் என்பது. நமது நியாயத்துக்குக் முறையில்லை - வலிவு பெறவில்லை ....................

அ.நி. சபைக்கு. ஆனால், நமது நாட்டிலிருந்து, காங்கிரசாரால் நாட்டிலிருந்து, காங்கிரசரரால் அனுப்பப் பட்டிருக்கும் பிரதி நிதிகளைப் பற்றியும், அவர்களைத் தேர்ந்தெடுத்த முறை பற்றியும், கோபமும் அதிருப்தியும், வளர்ந்துவிட்டது - வளருகிறது - திராவிடர் கழகத்தவரல்லாத பலரிடையே.

குலபாசத்தைக் கவனித்தே அ.நி. சபைக்கு, சென்னை மாகாணக் காங்கிரசர் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர் இது கொடுமை, என்று கொதித்து எழுதிற்று “ஜனநாயகம்” என்ற பத்திரிகை. ஈரோட்டிலிருந்தல்ல, மலாய் நாட்டிலே இருந்து.

அரசியல் நிர்ணய சபைக்கு சென்னை சர்க்கார் பொறுக்கியிருக்கும் அங்கத்தினர்களைப் பார்த்து, நியாய புத்தியுள்ள எவரும் அதிருப்தி கொள்õமலிருக்க முடியாது. அங்கத்தினர்களைப் பொறுக்கி எடுக்கும் விஷயத்தில், தியாகத்தையும் தேச சேவையையும் அவ்வளவு தூரம் கவனியாது சட்ட முனையும், நிர்வாகத் திறமையுமுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதோடு பல பிரிவுகளுக்கும் பிரதித்துவமும் அளிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில்தான் மற்ற மாகாணங்களில் அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், சென்னையப் பொறுத்த வரையில் வேறு மாதிரியாகத் தான் அமைந்திருக்கிறது. சில குறிப்பிட்ட தலைவர்களுக்கு அவர்களத செல்வாக்கை பொறுத்த விகிதாசாரம் அங்கத்தினர்கள் “கோட்டா” அளிக்கப்பட்டிருக்கிறது. தலைவர்களோ, தங்கள் தங்கள் பின்தாங்கிகளை பொறுக்கியிருக்கிறார்கள்.
அங்கத்தினர்கள் வரிசையிலே சர்.என். கோபாலசுவாமிகள், சர். அல்லாடி கிருஷ்ணசுவாமி, பொப்பிலி ராஜா, சர்.எ. முத்தையா செட்டியார், இவர்கள் நமது விசேஷ கவனத்திற்கு ஆளாகிறார்கள். முதல் இருவரும் காங்கிரஸ் மேலிடத்தால் சிபார்சு செய்யப்பட்டவர்கள். சட்டம், நிர்வாகம் நன்கு தெரிந்தவர்கள் பின்னுள்ள இருவர்களும் செல்வந்தர்கள். ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தியாகம், கேசசேவை இவைகளில் நால்வரும் ஒரே பள்ளிப் பிள்ளைகள் தான்! இந்நால்வருக்கும், அரசயில் நிர்ணய சபையில் காங்கிரஸ் சிபார்சின் மீது இடங்கிடைத்தது என்றால், உலகப் பிரசித்தி பெற்ற சர்.ஏ. ராமசுவாமி முதலியார். சர்.ஆர்.கே. ஷண்முகம் செடடியார், என். சிவராஜ் இவர்களுக்கும் என் இடம் அளித்திருக்க கூடாது என்பது தான் தெரியவில்லை. பொப்பிலி ராஜாவையும், முத்தையா செட்டியாரையும் விட இவர்கள் எந்த விதத்திலும் ஒதுக்கப்பட வேண்டியவர்களல்லவே; ஒரு வேளை இவர்கள் அரசியல் நிர்ணய சபைக்குள் வந்துவிட்டால் தென் இந்தியாவிலேயே “எங்களுக்குத்தான் மூளையுண்டு” என்று டமாரம் அடித்துவரும் ஒரு கும்யலின் சாயம் வெளுத்துவிடும் என்பதைத் தவிர இவர்களை ஒதுக்கப்படுவதற்கு வேறு காரணமேயில்லை. இது நியாயமா? சிந்தனை செய்து கொள்ளுங்கள்.”

இது, நாகர் கோயிலிலிருந்து வெளிவரும். ‘சுடர்’ எனும் இதழிலிருப்பது. சுடர், “தேசீய” இதழ்தான்.
“இப்போது தமிழ்நாட்டின் சார்பாக அ.நி. சபையில் கலந்துகொண்டுள்ளவர்களின் தேசபக்திக்கு நாம் மதிப்புக்கொடுக்கிறோம். ஆனால், அவர்கள் தேசிய இந்தியாவின் சுதந்திர உணர்ச்சிக்குப் பிரதிநிதிகளேயொழிய தமிழ் இனத்தவரின் தனிப்பட்ட லட்சியங்களுகுப் பிரதிநிதிகளல்ல. ஏனெனில் தமிழ் நாட்டின் எல்லை, தமிழர்களின் அரசியல் பொருளாதார உரிமைகளைப் பற்றிய எந்தத் திடடத்தின் மீதும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களல்லர். ஏகாதிபத்யத்தின் ஆக்கிரமிப்பில் இந்தியா இருக்கும்வரை தனி இனத்தின் நலன்களைப் பற்றிப் பேசுவது பாவமென்று சொல்லப்பட்டது. எனவே தமிழ்நாட்டுப்பிரதிநிதிகள் தாங்கள் ஓர் தணி இனத்தின் பிரதிநிகள் என்ற எண்ணத்துடன் சுயமாகச் சிந்தித்துச் சுதந்தரமாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது,”

இது, ‘தமிழ் முரசு’ ஆசிரியர் தோழர் ம.பொ. சிவஞானம் அவர்கள் கருத்து.

“தமிழ்நாட்டுப் பிரதி நிதிகளே! உங்கள் இனத்தின் உரிமையைப் பறிகொடுக்காதீர்கள்!” இதுவும் அவர்.

“இந்தியாவின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்து ஏகாதிபத்யத்தை வெளியேற்றத் திட்டமிடுவதோடு இந்த சபையின் ஆயுளை முடித்துவிட முயலுங்கள்.” அவர் உரைதான். நாமும் அதனை ஆதரிக்கிறோம், ஒருதிருத்தத்துடன் - சுதந்திர பிரகடனத்திலே, சர். கோபாலசாமி, சர். அல்லாடி, ராஜா பொப்லி, குமாராஜா, போன்ற கையொப்பங்களல்லவா இருக்கும் இன்றைய நிலையில், இதிலே இவர்களா கையொப்பமிட வேண்டியவர்கள்? சர்க்காரின் முறிச்சீட்டிலே கையொப்பமிட்டுக் கரையேறிய கரத்தைப் பிடித்துக் குலுக்கு கிறீர்களே, பெரியாரின் கரம், வேண்டாமா? - அந்தக்கரம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று மணி மொழிகளைப் பொறித்த கரமல்லவா, அவருடைய கையொப்பத்தைப் பெற வேண்டுமென்று நண்பர் சிவஞானம், தமது உரையில் ஒரு திருத்தப் செய்துகொள்ள வேண்டும்.

அந்தக்கரம், வெள்ளைக்காரன் “விஷ்ணு அம்சம்” என்று எழுதினதில்லை.

அந்தக்கரம், ராஜவிஸ்வாசப் பத்திரத்திலே ஒப்பம் எழுதின தில்லை.

அந்தக்கரம், சர்க்காரிடம் பெற்றுக்கொண்ட மாதச்சம்பளம் ரூபா 6000 என்று எழுதினதில்லை.

அந்தக்கரம், சுதேமன்னர்களுக்கு ஸ்ரீமுகம் அனுப்பின தில்லை. பட்டம் பதவிப்பத்திரங்களிலே அந்தக்கரம் பட்டதில்லை. அடிக்கடி, சிறைச்சாலை ரிஜிஸ்டரில் பட்டகரம்! அது பிடிக்கவில்லை ஆனால் காலமெல்லாம், ஏகாதிபத்தின் காலைவருடிக் கொண்டிருந்த கரம், பிடிக்கிறதே! இதனை எப்படி நாங்கள் மறக்கமுடியும். சுபாஷின் போக்குக்கும், தமிழ்நாட்டுத் காங்கிரசை நடத்திச் செல்வோர், அவர்களை நடத்திச் செல்லும் வடநாட்டுத்தலைவர்கள் ஆகியோரின் போக்குக்கும் உள்ள மகத்தான, மனதை வாட்டக் கூடிய வித்யாசத்தைக் காண வேண்டுகிறோம். விடுதலைப்படை அமைத்த அந்த வீரன், விரும்பி வரவேற்றார், வெறும் காங்கிரஸ்காரர்களை மட்டுமல்ல, தமிழகத்திலிருந்து மலாய் சென்றுவாழ்ந்திருந்த, சகலரின் கரத்தையும் பிடித்துக் குலுக்கினார். எனவே தான் இன்று அனைவரின் உள்ளத்திலும் அவர் சூடிகொள்ள முடிந்தது. இங்கோ, காட்டிக் கொடுத்தவரின் கரத்தைக் குலுக்கவும், கனபாடிகளின் கரத்தைக் குலுக்கவும், மனம் இருந்ததே ஒழிய, நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடிய பெரியாரின் கரத்தைப் பிடித்து தோழமை கொள்ள மனமில்லை. ஆக, அந்த வகையிலே, அ.நி. சபை, தக்க வரை மதிக்கத்தவறிய குற்றத்துக்கு உள்ளாகிறது. அதைக் கூறுவில்லை, நண்பர். இன்று இன்னமும் நாளை கூறக்கூடும். இன்று மனதில் எண்ணத்தான் செய்வார். தமிழ் வளம்வளரும். அதிலே நமக்குத் தளராத நம்பிக்கை உண்டு.

நாம் குறிப்பிடும் அந்தக்காரணத்தைக் காட்டாவிட்டாலும் வேறு காரணத்தை, அதாவது இன்று தமிழ்நாட்டின் சார்பிலே, அ.நி. சபைக்குப் போயிருப்பவர்கள் உண்மைத் தமிழ்இனத்தின் பிரதிநிதிகள் அல்ல, என்று கூறி இன்றைய அ.நி. சபையின் ஆயுள் விரைவில் முடியவேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக் கொள்கிறார் நண்பர் சிவஞானம்.

“உங்களுடன் சிறை புகுந்து சிப்பியேந்திச் சீரழிந்த ஒருவன் என்ற முறையில் சிரமேற்கரங் கூப்பி நான் செய்யும் வேண்டு கோள் நான் செய்யும் வேண்டுகோள் இது” என்று நண்பர் எழுதுகிறார்.”

அந்த வாசகம், காங்கிரஸ் தலைவர்களின் இதயத்தைத் தொடுகிறதா என்று பிறகு பார்ப்போம்.

அவர் சொன்னது அது. இதோ வேறோர் குழுவின் கொதிப்பைக் காணுங்கள்.

“அ.நி. சபைக்கு, இந்து மாகாணத்திலிருந்து 49 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். பிரிட்டிஷ் மந்திரிகள் திட்டத்தின்படி, பத்து இலட்சம் மக்களுக்கு ஒருபிரதிநிதி என்ற அளவு முறை கூறப்பட்டது. அதன்படிப் பார்த்தால், வன்னிகுல க்ஷத்திரியர்களாகிய எமக்கு. 5-ஸ்தானங்களாவது தரப்பட்டிருக்க வேண்டும். நாங்கள் வகுப்புவாரிப் பிரதி நிதித்வ மோகம் கொண்டவர்களல்ல. என்றாலும், சமுதாயத்தில் திருப்தியும் ஒற்றுமையும் ஏற்படவேண்டுமானால், அவரவர்க்குஉரிய ஸ்தனாம் தரப்பட வேண்டும் என்பதற்காகவே இதைக் கூறுகிறோம்.
பின்னணியிலுள்ள சமூகத்தாருக்குப் பாதுகாப்பளிக்கப்
படும் என்று தேர்தலின் போது காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையும், சின்னாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்டஅறிக்கையும், பேச்சளவிலிராது, செயலளவில் கொண்டு வரப்பட்டு, எமக்கு நீதி வழங்கப் படவேண்டும் மென்று கேட்டுக் கொள்கிறோம்”

இப்படி எழுதினர், வன்னிகுல க்ஷத்திரிய மக்கள் சார்பில். அவர்கள் 63 இலட்சம் பேர் உள்ளனர்.
ஆசிரியருக்கு எழுதியகடிதமல்ல - ஆளவந்தார்களுக்கு எழுதிய மகஜர் இது. முதலமைச்சர் பிரகாசம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், ஆச்சாரியார், ஆகமூவருக்கும் அனுப்பப் பட்டமகஜர்.

யாரோ ஊர்பேர் தெரியாதவர்கள் அனுப்பிய மகஜரல்ல - காங்கிரஸ் காட்டிய பாதையிலே நடந்தறியாதாரின் மகஜரல்ல - தியாகத் தீயிலே நின்றவர்களின் மகஜர், ஆட்சி மன்றத்திலே அங்கம் பெற்றவர்களின் மகஜர் ஆறு ஆடவர், ஒரு அம்மையார் ஆக ஏழு M.ஃ.ச்.க்கள் அனுப்பிய மகஜர் இது.

சேலம் ச்.சுப்பிரமணியம், M.L.A.
ங. கோவிந்தராஜ நாயகர் M.L.A..
ங. பொன்னுசாமி M.L.A.
M.கன்னியப்பன் M.L.A.
அஞ்சலை அம்மாள் M.L.A.
கு.பரமானந்தன் M.L.A.
ணீ.கீ. சீனுவாச படையாச்சி M.L.A.

இவ்வளவு M.L.A.க்கள் மகஜர் அனுப்பிச் சாதித்துக் கொள்ள முடியாத காரியத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் செல்லப் பிள்ளைகளாக இருந்த, சர். கோபாலசாமி போன்றார், மகஜர் போட்டல்ல, மனதால் நினைத்த மாத்திரத்திலே சாதித்துக் கொள்ள முடிந்தது!

சிறையிலே நண்பர் சிவஞானமும் சேலம் சுப்பிரமணிய மும்சிப் பியேந்திச் சிரமப்பட்டபோது சர். கோபாலசாமி எங்கே. என்ன செய்துகொண்டிருந்தார்? காஷ்மீரில் திவான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்! இன்று அவரும், அவர் இனத்தவர் பலரும் அ.நி. சபையிலே இருக்கிறார்கள், இங்கே M.ஃ.ச்.க்கள் மகஜர் அனுப்புகிறார்கள், அதுவும் பலனளிக்கவில்லை.

ஆக, இந்த சபை, ஒன்றுபட்ட மனம், சமரசமணம், இவற்றினைக் கொண்டதுமல்ல. நீதிக்கும் நேர்மைக்கும் மதிப்பு, தியாகத்திற்கு மதிப்பு, மக்களின் உரிமை முறைக்கு இடம், தரப்பட்ட இடமுமல்ல. ஆகவே தான் இதன் ஆயுளை விரைவில் முடியுங்கள் என்கிறார் நண்பர். அவசியமான காரியம். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு இறுதி அறிவிப்பு தெரிவித்து விட்டுச் சபை கலையட்டும் - பிறகு நாம் துவக்கத்தில் கூறியபடி, நமக்குள் உள்ள உட்பகையை, வெளியார் தலையீடின்றி ஒழித்து, ஒன்று பட்டு, இனங்களின் இலட்சியங்களுக்குச் சிதைவு ஏற்படாத வகையில் அரசுத்திட்டம் அமைத்து, ஆங்கிலர் முன் நீட்டு

வோம். அப்போது அதனை எக்காரமேனும் கூறி, ஏகாதிபத்யம் மறுக்குமானால், நமது மக்களின் வீரத்தின் உச்சிநிலை எதுவென்பதைக் காட்டுவோம், என்ற மனப்போக்கு கொள்ளவேண்டும். விடுதலைப் பாதை அதுதான்! விடுதலைப் போருக்குத் தேவையான கரத்தைத் தேடிப் பிடிக்க மறந்து, கனபாடிகளின் கரதøக் குலுக்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் இருக்கட்டும் ஒருபுறம், காங்கிரசிலுள்ள வீர இளைஞர்களே! குலப்பாசம் கொண்டு குறும்பு செய்வோரின் கொட்டத்தை அடக்கும் திறமுடையோரே! உண்மை ஊழியரை மறக்காத உள்ளம் உடையோரே! அதோ அ.நி. சபை நடவடிக்கைகளைத் காண்கிறீர்! உழைப்பு அல்ல மாவதைக் காண்கிறீர்! உட்பகை மேலும் மேலும் வளரக் காண்கிறீர்! அவை, விந்தியத்தோடுநிற்கட்டும். நருமதைக்கு இப்பாலுள்ள நாம் ஒன்றுபடுவோம் வாரீர். நம்மில், தியாகத்திற்குத் தயாராக உள்ள, தமிழ்ப்பண்பினர் எல்லாம்’ விடுதலை விரும்பிகள் எல்லாம், ஏகாதிபத்ய எதிர்ப்புணர்ச்சியுடன், சமூக அநீதிகளையும் வெடடி வீழ்த்த வேண்டுமென்ற வீரஉணர்ச்சி கொண்டோரெல்லாம், ஒன்று கூடுவோம் வாரீர்! வெற்றிபெற உழைப்போம் சேரீர்! என்று, அன்புடன் மட்டுமல்ல, நம்பிக்கையுடன், திராவிடர் கழகம் அழைக்கிறது? அந்தக்கழகம், சர், சீமான், ஜெமீன் தாரன், பதவிப்பிரியன், வர்ணாஸ்ரமி. ஆகியோரின் கரத்தில் அல்ல - தியாகத் தழும்பேறிய பெரியாரின் கரத்தில் இருக்கிறது. அந்தக்கரமும், காங்கிரசில் தமிழ் இன உணர்ச்சி கொண்டு, வடநாட்டாரின் பொருளாதார ஏகாதிபத்யத்தில் நாம் சிக்கக் கூடாது என்று எண்ணும் வீரர்களின் கரமும் ஒன்றுபட்டால், வெற்றி உண்டு, அந்த வெற்றியிலே, நாட்டுக்கு வாழ்வு உண்டு அந்த வாழ்விலே இனிமை தவழும், சமரசம் குலுங்கும் சமதர்மக்கனி இருக்கும். ஒன்று சேரப்பணியாற்றுங்கள். வேலை நிறைய இருக்கிறது. விடுதலைபெறும் வேலையே கஷ்டமானது, ஆனால் அதை ஒட்டி, வாழ்வு அமைக்கவேண்டிய மாபெரும் வேலையும் இருக்கிறது, இந்த மகத்தான காரியத்தை, சர். கோபாலசாமிகளைக் கூட்டாளியாக்கிக்கொண்டு, நடத்த முடியாது, பெரியாரின் பெரும்படையும், காங்கிரசிலே கனபாடிக்கோ, காட்டுக்கால முறைக்கோ கட்டுப்படாத வீரரும் ஒன்று கூடியே சாதிக்கமுடியும். அந்தக் கூட்டுக் கரம், வேண்டும், நம் நாடு விடுதலைபெற்ற நல்வாழ்வு பெற அதற்கு டில்லி அல்ல, இங்கேயே கூடுவோம். அதுவே நாம் காண வேண்டிய அரசியல் நிர்ணய சபை.

(திராவிட நாடு - 22-12-1946)