அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அர்ச்சனை!
“சகலருக்கும் சாமான்யமாகச் சித்திக்கக் கூடியதோ! தேவானுக்ரஹம் இல்லாமல் இப்படிப்பட்ட சேவா உணர்ச்சி ஏற்படத்தான் முடியுமா? எல்லாம் பகவத் கடாட்சம், வேறென்னவாக இருக்க முடியும்! முகத்திலே ஒரு திவ்ய தேஜஸ் தெரிகிறது பாரும், என்னவென்று எண்ணுகிறீர் அதனை. பகவத் கடாட்சம் பரிபூரணமாகக் கிடைத்திருக்கிறது என்று அர்த்தம். பால பருவம் - முப்பது என்று கூறுகிறார்கள், ஆனால், நேரிலே பார்த்தால் அப்படித் தோணாது. உள்ளத்திலே சத்ய தேவதை எழுந்தருளி இருப்பதாலே முகத்திலே ஒரு திவ்ய ஜோதி இருக்கிறது. பேச ஆரம்பித்தால், ஆடா ஆடா! தேனும் பாலும் கலந் தருவதுபோல இருக்கிறது என்ன கெம்பீரம்! அதேபோது எவ்வளவு கனிவு! எதிரிகளின் வாதங்களைத் துவம்சம் செய்கிற சமர்த்து இருக்கிறதே! ஆஹாஹா! பிரமிக்கச் செய்கிறது. வெறும் புத்தகப் படிப்பினால் வரக்கூடிய பாண்டித்யமா இது ஆபசாரம், ஆபசாரம்! வண்டி வண்டியாக தர்க்க சாஸ்திரங்களையும், கிரந்தங்களையும், புராண இதிகாசங்களையும் கரைத்துக் குடித்தவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறாளே! இவர், அரும்பு மீசைக்காரர், அவ்வளவு புத்தகங்களைப் படித்துப் பரிபக்குவம் பெறுவதற்கான வயது ஆகவில்லை, எனினும், பேச ஆரம்பித்தால் சரஸ்வதி தாண்டவமாடுகிறாளே! சாமன்யார்ளுக்குச் சாத்தியமோ! இவருடைய உபன்யாசத்தின் பலனாக, உருப்படாத விஷயங்களிலே மனதை இலயிக்கச் செய்து விட்டு, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருந்து வரும் நாஸ்திகக் கூட்டம் நிச்சயமாக நல்லறிவு பெற்று, பக்தி மார்க்கத்திலே உடுபட்டு, சத்புருஷாளகாகப் போகிறார் - சர்வேஸ்வரன் இந்தப் பால சன்யாசியைப் பூலோகத்திலே இந்தக் கைங்கரியத்தைச் செய்வதற்காகவே அனுப்பி இருக்கிறார். சம்சயமே வேண்டாம். அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம், தர்மத்தை இரட்சிக்க, பகவான், ஆழ்வாராதிகளையும் நாயன்மார் களையும் பூலோகத்துக்கு அனுப்பி வைப்பது, நமது புண்ய பூமியிலே நடைபெறும் காரியமல்லவா! அதே முறையிலே, இப்போது கலிமுற்றி, கண்டபடி பேசி, இதற்கென்ன காரணம், அதற்கென்ன அர்த்தம், இது எப்படிப் பொருந்தும், அதற்கு என்ன இதாரம் என்று கேட்டுக் கேட்டு, பாபத்தைக் கக்கிக் கொண்டு ஒரு கூட்டம் இருப்பது கண், பகவான், இனியும் இப்படிப்பட்ட கூட்டத்தை வளரவிடக் கூடாது என்று தீர்மானித்து, அவர்களைக் சம்ஹரித்து, சத்யதேவதைக்கு மகுடாபிஷேகம் ùச்யது வைக்கும்படி, பாலசன்யாசியாரைப் பூலோகத்தக்கு அனுப்பி வைத்திருக்கிறார். பகவானுடைய பிரசாதம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அவருடைய திருவருளை நாமெல்லாம் பெற்று, திவ்யானந்தம் கண்டு, மங்களகரமாக வாழப் போகிறோம். நமது புராதன மதம், மறுபடியும் ஜாஜ்வல்யமாகப் பிரகாசிக்கப் போகிறது. இதி சங்கரர் ஆவதரித்துப் பாஷாண்டி மதத்தை அடக்கி ஒடுக்கி, பாரத் வர்ஷத்திலே நமது இந்து மதத்தைக் காப்பாற்றினதுபோல, ஞானசம்பந்தர், மணிவாசகர் போன்ற நாயன்மார்கள் தோன்றி, தலைவிரித்தாடிய சமண மார்க்கத்தைச் சம்ஹாரம் செய்து, சைவத்தை மீண்டும் ஸ்தாபித்தது போல, இராமானுஜர் போன்ற ஆழ்வார்கள் அவதாரம் செய்து, வைஷ்ணவ மார்க்கத்தை, வம்பர்களிடமிருந்து காப்பாற்றியதுபோல, இந்த மகான், நாஸ்திகர்களின் கொட்டத்தை அடக்கி, நமது புராதன மார்க்கத்தை, ஆஸ்திகத்தை, கோடி சூரியப் பிரகாசம் உள்ளதாக்கப் போகிறார். அவருக்குச் சம்பூர்ண ஜெயம் உண்டாகும்படி, பகவான் அருள்பாலித்திருக்கிறாலர். எனவே, அவருடைய உபதேசத்தைக் கேட்பதிலே பிரம்மானந்தம் ஏற்படுகிறது. அவருடைய உபன்யாசங்களுக்குப் பக்தர்கள் கடல்போலக் கூடுவதைக் காணும் போது தேவாமிருதம் உண்டால் ஏற்படக்கூடிய சந்தோஷம் உண்டாகிறது.

குன்றக்குடி அடிகளாரின் தொண்டு துவக்கப்பட்ட போது, இலயங்களிலே அதிகாரிகளாக வீற்றிருந்து கொண்டு, ஆஸ்திகத்தின் பாதுகாவலர்கள் என்ற நிலையை, நாடுதங்கட்குப் பட்டாமணியம் இக்கிவிட்டதாகச் கருதிக் கொண்டிருந்த கூட்டம், மேலே குறிப்பிட்ட படி, அர்ச்சனை செய்தது! அடிகளார் மீது அன்பும் மதிப்பும் பிறந்ததால் அல்ல, அவருடைய தொண்டு சிலாக்கியமானது என்ற நம்பிக்கையினாலும் அல்ல, அவருடைய பாண்டித்யம் பாராட்டப் படத்தக்கது என்ற உள்ளுணர்வாலும் அல்ல. அவர் தமக்காகப் பாடுபடுகிறார், அவருடைய தொண்டும் பாண்டித்யமும், சிதைந்து சின்னாபின்னமாகி வரும் தங்கள் செல்வாக்கு மீண்டும் புதுப்பிக்கப் பயன்படும் என்ற சுயநலம் அவர்களû அவ்விதம் அர்ச்சிக்க வைத்தது. அடிகளாரின் தமிழ்நடை, பாராட்டப்பட்டது - அவருடைய அறநெறி புகழப்பட்டது - அவருடைய தொண்டுக்கு நன்றி கூறப்பட்டது - அவருடைய இலட்சியம் நிறைவேறும் என்று இசி கூறப்பட்டது.
நாலுவேதம் ஆறு சாஸ்திரம் அறுபத்துநாலு கலைக்கியானம் என்றெல்லாம் ஒரு பட்டியல் தருகிறார்களே, அதனை ஓதி உணர்ந்து, பிறர் உணரத்தக்க வகையிலே எடுத்துரைக்க வல்ல, சாஸ்திர விற்பன்னர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு சுலோகத்துக்கு ஒன்பது வேறு வேறு விரமான பொருள் கூறவேண்டுமா - இருக்கிறார்கள்! ஓம் என்ற சொல்லுக்கு ஒரு மாதகாலம் அர்த்தம் கூறவேண்டுமா - கேட்பவர் சோர்ந்து சுருண்டு கீழே விழுகிற வரையில், சோர்வில்லாமல் கூறிடும் சொற்செல்வர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! இவர்கள் மட்டுமா! இந்தக் காரியம்கூடச் செய்யவேண்டிய தேவையில்லை, எமது பார்வையே பாவத்தைச் சுட்டெரிக்க வல்ல, எமது திருக்கரத்தால் திருநீறு பெற்றால் போதும் சிவனருள் தேடிவந்து சேரும், எமது திருச்சபையின் காட்சியையும், திருஊலாவின் மாட்சியையும் கண்டால் - கலிதீரும், ஊர் ஊர் சென்று உபதேசம் செய்தாக வேண்டும் என்பதில்லை, நாங்களே உபதேசம் தான், என்று கூறாமற் கூறி மேனி வாடாது வதங்காது, தோடுடைய செவியானகி, வாடா மல்லிகைகளைத் தேடாமற் பெற்று திருவின் உருவாய் விளங்கும் திருக்கைலாய பரம்பிரையினரும் உள்ர்! இவர்கள் யாரும் இதுநாள்வரை கூறாத புதுப்பொருளை, புது உண்மையை குன்றக்குடியார் எடுத்துவரைத்தார். இதுநாள் வரையிலே, மனதிலே இருந்துவந்த சிக்கல் இவர் ஊரை கேட்டதும் தீர்ந்துவிட்டது, என்று கூறத்தக்க வகையிலே குன்றக்குடி அடிகளார் கூறினார் என்பதல்ல - பிறர் திகைத்துத் திணறி, திண்டாடித் தேம்பி, திருவருள் நம்மைக் கைவிட்டு விட்டதோ என்று சிந்தாகூலாராகி, நமது காலம் தீர்ந்துவிட்டது, பெற்ற தெளிவை மக்கள் இனி இழந்துவிட மாட்டார்கள், பெம்மானும் எம்மானும் உமக்கு மட்டுமல்ல எமக்கும் சொந்தம்தான் என்று துணிந்து பேசத் தொடங்கிவிட்டார்கள். இனி நாம் நாட்களை எண்ணிக்கொண்டு இருந்துவிட வேண்டியதுதான் என்று சோம்பிக் கிடந்தபோது அடிகள், கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பினார்! வாலிபம் மலைகளைத் துளைக்கலம், மடுவைக் கரத்தால் தடுக்கலாம் என்றெல்லாம் எண்ணச் செய்வதல்லவா! வாழ்க்கையின் வசீகரப் பருவம், கொற்றவனின் கூர்வாள் உயிரைக் குடித்துவிடும் என்ற அச்சம், குடிபுக இடம் தராமல், கோமளவல்லியிடம் காதலைப் பெழிந்த அம்பிகாபதிபோல், சுற்றிலும் அகழி, அதிலே திறந்தவாய் முதலைகள், வழுக்குப் பாறை அதன் உச்சியிலே வாட்போர் வீரர்கள் என்றெல்லாம் படைபலத்தைப் பற்றிக் கூறினாலும், அச்சம் கொள்ள மறுத்து அஞ்சா நெஞ்சுடன் பாய்ந்து செல்லும் வீரன்போல, வாலிபம் அடிகளைக் களம் செல்லத் தூண்டிவிட்டது - கோட்டைச் சாளரக் கதவின் வழியாக இதைக் காண்பவர்கள், ஆச்சரியமடைந்தனர், சிலர் இசி கூறினர், மெள்ள மெள்ளச் சிலர் ஆதரவு காட்டுவதாகக் கூறிக்கொண்டனர் - அடிகளாரின் வயது பொற்பாதக் குறடு அணிந்து பாதகாணிக்கை பெற்று வீற்றிருக்கும் போக்கை ஏற்றுக் கொள்ளாது, காவி அணியாதவராக இருந்திருப்பின், அவர் இதே சுறுசுறுப்பை இப்போது காட்டும் ஆர்வத்தைவிட அதிக அளவுடன், இப்போது பெறும் வெற்றியை விட, நிரந்தரமான பலன் அளிக்கத்தக்க வெற்றியுடன் தொண்டு புரியப் பொதுப்பணித்துறைக்கு வந்திருக்கக் கூடும். இப்போதோ!! எவ்வளவுதான் மனம் சுட்டாலும், இருப்பதை இழந்துவிட, அவர் என்ன புத்தரா! எனவே இருக்கும் இடத்தின் இயல்புக்குத் தக்கபடி, பிறர் கண்டு வியக்கத்தக்க சேவை செய்வோம் என்று எண்ணி, மதத்தைக் காப்பாற்றும் மாவீரர் என்ற நிலையைத் தமக்குத்தாமே ஏற்படுத்திக் கொண்டு மக்கள் மன்றத்திலே நடமாடுகிறார், சிறசில இடங்களிலே படமெடுத்தாடவும் செய்கிறாராம்!! இவருடைய இந்தக் கோலம் கண்டு, சோர்ந்து போனவர்கள், ஆஹா ஹாரம் செய்து கொண்டு அவர் பக்கம் வந்து நின்றனர் - இசி கூறி ஆதரவு காட்டினர் - அர்ச்சனை செய்தனர். இலயத்திலே பூஜாரிகளாக அமர்ந்திருக்கும், பூதேவர்களின் அர்ச்சனையில் ஒருபகுதியை துவக்கத்திலே இருப்பது.

அது பேய்பிடித்த வீடு. அதிலே குடியிருந்தால், நள்ளரவில் பேரரவம் கேட்கும், பீதியாலேயே மாள்வோர் உண்டு, சிறிதளவு மனதிடம் கொண்டோர் ஆரவம் கேட்டு அஞ்சாதிருப்பரேல், கரியதோர் உருவம் கிளம்பும், கால் பூமியில் படாது, கண்களில் நெருப்புக் கக்கும், கையும் காலும் எலும்பாக இருக்கும், அந்தக் காட்சியைக் கண்டாலே உயிர் போகும், இதனையு; பொருட்படுத்தாதிருப்பின், குரல்வளையைப் பிடித்து அழுத்திக் கொன்றே போடும் என்று பாழ் மாளிகை பற்றிய கதை ஒன்று. கிலியின் விளைவாகவோ சூதுமதியனனின் கட்டுக்கதையின் பயனாகவோ, ஏற்பட்டுவிட்டால், பலரும் பேய்பிடித்த வீடு என்று கூறுவர் - அந்த இடம் சென்று தங்க எவரும் முன்வாரார், ஒருவரிருவர் துணிந்து சென்று தங்கினாலும், காற்றிலே இடும் கொடி அவர்களின் கண்களை மிரட்டிடும் கதவு திறந்து மூடுவதால் ஏழும் கிறீச்சொலி அவர்களுக்குக் குலைநடுக்கம் ஏற்படுத்தும், தலைதப்பினால் போதும் என்று ஓடோடிச் செல்வர். இத்தகைய பேய்க்கதை வெறும்புரட்டு, அல்லது மனமயக்கம் என்பதை விளக்கிக் காட்டிவிட்டால், பிறகு மக்கள் தெளிவு பெறுவர், மாளிகையின் பாழ்த்தன்மை ஒழிந்து போகும், பிறகு அங்கு குடும்பமும் குதூகலமும் குடியேறும், என்று எண்ணம் கொண்ட ஒரு நல்லவன், பேய்வீடு என்று பேசுவது இதாரமற்றது பேயாவது வீட்டைப் பிடித்தாட்டுவதாவது, பித்தரின் பேச்சு அல்லது ஏத்திரின் ஏமாற்றுவித்தை என்றெல்லாம் பேசி வருகிறார் என்றால், அந்த மாளிûக்குச் சொந்தக்காரராக இருப்பவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படத்தானே செய்யும் - மனதாரப் பாராட்டவும், சமயம் கிடைக்கும்போது உபசாரம் செய்யவும் முன்வரத்தானே செய்வார். அதுபோல, குன்றக்குடி அடிகளாருக்கு உபசாரம், பாராட்டு, அர்ச்சனை கிடைத்தது. மதத்தின் பெயரால் செய்யப்படும் அக்ரமங்களை, அநியாயங்களை, பொருள் விரயத்தை, புத்தி நஷ்டத்தை, சமுதாயத்திலே இதனால் ஏற்பட்டுவிட்ட சீர்கேடுகளைக் கண்டிக்கும் இயக்கம் நாட்டிலே இருக்கிறது. அதிலே கலந்து பணியாற்றும் நல்வாய்ப்பைப் பெற்றிருப்பதற்காக நாம் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்ளுகிறோம். நாஸ்திக இயக்கம், கடவுளை எதிர்க்கும் கூட்டம், மதத்தை மாய்க்கும் மாபாவிகளின் கூட்டம் என்றெல்லாம், நம்மை நிந்தித்துக் கொண்டு மதத்தின் பெயரால் மந்தகாச வாழ்வு நடத்திக் கொண்டு, அது தமக்கு மகேசன் தந்த வரப்பிரசாதம் என்று பெருமை பேசிக் கொண்டு, அதனை எதிர்பபோர் படுநாசமாவார் என்று சபித்துக் கொண்டு கிடக்கும் ஓர் கும்பல் நாட்டிலே இருக்கிறது. இது நடத்தும் மமதை அரசுக்கு, அடிகளார், விருப்பத்தால் அல்ல, நிலையின் காரணமாக முரசு கொட்டுகிறார்! அவருடைய திருத்தொண்டுக்குத் தங்கத்தோடா போட்டு மகிழ்விப்பது போல அவரைப் பாராட்டி அர்ச்சனை செய்தனர், இலய அதிபர்கள்.

கடவுளை ஒழித்துக் கட்டவே ஒரு கூட்டம் எண்ணுவதுபோல, இட்டுக் கட்டிக்கொண்டு, “இகாது அன்பர்காள்! இகாது! கூடாது, நண்பர்காள் கூடவே கூடாது! தாயை மறுக்கும் சேய், நாயன்றோ! தந்தையை மறுத்திடுபவன் மகனோ! மாபாவி ஆலனோ!” என்று ஐசலைப் பேச்சாக்கிக் கொண்டு, எதிருள்ளோரின் சிரக்கம்பம் கண்டு மகிழ்ச்சி பெறலானார். குன்றக்குடிகளார்! சரியான ஜவான் கிடைத்துவிட்டார் என்றெண்ணி ஜாம்பவான்கள் அவரை அர்ச்சித்தன! ஆனால், பாபம், அவர் காணும் அனுபவம் என்ன, இன்று!

கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி கப்பிய கரிமுகன் அருளை, அவர், கன்னித் தமிழ் நாட்டிலே மட்டுமல்ல, கடல்கடந்து கொன்றுள்ள தமிழர்க்கும் வழங்கினார், கடல்கடந்து சென்றுள்ள தமிழர்க்கும் வழங்கினார். மண்கூடச் சுமந்தாராம், பிட்டும் கேளாமல்! அவர் போகாத கோயில் இல்லை, பேசாத நாளில்லை, கழகம் அமைக்கிறார், கற்றோர் ஏற்றும்போது அவர் தமக்குக் கனகாபிஷகம் செய்கிறார், கலனான கோயில் கண்டால் கண்ணீர் ஊகுக்கிறார், கண்ணீரும் கம்பலையுமாக உள்ள சேரிவாழ் மக்களைக் கண்டால், திருநீறு தருகிறார், மாநாடுகள் நடத்துகிறார், வழிபாடுகள் ஏற்பாடு செய்கிறார், இடையிடையே, இடுக்கித் தாக்குதலும் நடத்தி வருகிறார் சீர்திருத்த இயக்கத்தின்மீது சீறுகிறாராம்.

சீர்திருத்த இயக்கத்தவரின் மீது சீறிப்பாய, பத்தாண்டுகட்கு ஒருமுறை கிளம்புவார், யாராவது ஒருவர்! அடிகளார் போன்ற பண்பறிந்தவர்கள் மட்டுமல்ல, மட்ட சகங்கௌல்லாம் கூடத்தான்! சந்தனப் பொட்டுச் சிந்தூரச் சாமியார் கிளம்புவார், சரிகைத் தலைப்பாகை சச்சிதானந்தம் புறப்படுவார், வேப்பிலை மந்திரம் வேலாசாமி வருவார், கும்பாபிஷேகம் குப்புசாமி கிளம்புவார், பாரதப் பிரசங்கி பன்னிருகையார் என்ற, இராமாயணக் கதாப் பிரசங்கி ஆரணரங்க பாகவதரென்ன, சாஸ்திர சேகரிகள், சன்மார்க்க சண்டமாருதங்கள், இத்யாதி, இத்யாதி, அவரவர்களுக்குத் தனித்தனி பூஜா முறைகளும் உண்டு! ஐக்! பயலேங கடவுளையா இல்லை என்று பேசுகிறாய் - நீ எங்கே இருந்து பிறந்தாய்? என்று துவங்கி கொல்லைவரை சென்றது, வெண்ணெய் உண்ட வாயன் கோபால கிருஷ்ணன், மேனி எல்லாம் வெண்ணெய் பூசிக்கொண்டு வந்து யசோதை எதிரே நிற்க, அந்த ஆம்மை பாலகனின் வாயை முத்தமிட்டு, உச்சிமோந்து, மகிழ்கிறார்கள் என்று கதையிலே கூறுகிறார்களே, அதுபோல, மேனி எல்லாம் வாடை கிளம்பும் நிலையில் வர, இதாரவாளர்கள் நரகல் நடையினரின் உச்சிமோந்து மகிழ்வர். வேறு சிலர் ஊர் அணு அணு என்று இன்று பேசுகிறார்கள். அமெரிக்கர் - நமது பாரத நாட்டிலே அணுவினுக்கணுவாய் நின்ற இதிமூலமே என்று இன்றா நேற்றா, இருபதாண்டுகளுக்கு முன்பா, யுகயுகாந்திரமாகக் கூறினார். இந்த உண்மையை உணரமுடியாத உதவாக்கரைகள், உற்பாத பிண்டங்கள், என் சுமந்து திரியும் உலுத்தர்கள், கடவுளே இல்லை என்று கத்துகின்றன” என்று பேசி, படியைக் காலாக்கினார்களா, பாதாம் கரைத்திருக்கிறார்களா, சீனி உண்டா, சிறிதளவு குங்குமப்பூ சேர்த்தார்களா என்று கேட்டுப் பருகி, நாட்டிலே ஆஸ்திகத்தை நிலைநாட்டி விட்டதாக எண்ணிக்கொண்டு நித்ரா தேவியுடன் ஆனந்தமாக ஒக்யம் ஆகிவிடுவர். வந்தவண்ணம் இருக்கிறார்கள், வகை வகையாக! எனினும், சீர்திருத்த இயக்கம் வளருகிறது புதுப்புது முகாம்கள் ஏற்படுகின்றன! ஆச்சரியம் அதிலே இல்லை, படிப்படியாக, ஐசிப் பேசுவோரே, மெள்ள மெள்ளச் சீர்த்திருத்தத்தின் பிடியிலே சிக்கிக் கொள்கின்றனர்! குன்றக்குடி அடிகளார் மட்டும் விதிவிலக்கா! அவரும் சிக்கிக் கொண்டிருக்கிறார்! சிரமப்படுகிறார் என்று கூடக் கூறவேண்டி இருக்கிறது.

கடவுள் உண்டு - தேவை என்று இந்த அடிகளார் கூட்டம், எவ்வளவு உரத்த குரலிலே எடுத்துக் கூறினாலும். நமக்குக் கவலையோ கலக்கமோ பிறப்பதில்லை - காரணமில்லை. நாம், கடவுள் கிடையாது என்று கூறி மெய்ப்பித்து ஆகúவ்ணடியதற்காகவே ஒரு இயக்கம் நடத்துவதாக அவர்களாக எண்ணிக் கொண்டால், தவறு நம்முடையதல்ல. கடவுள் தேவையில்லை என்று எடுத்துக் கூறி, அந்த சித்தாந்தத்தை நாடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாம் ஓர் இயக்கம் நடத்தவில்லை - அப்படி நடத்துவதாக அவர்களே தவறாக எண்ணிக் கொள்கிறார்கள் - பரிதாபப்படுகிறோம். நமது நோக்கம், கடவுள் மறுப்பு அல்ல, ஆகவேதான், மிகச் சிரமப்பட்டு, கால்கடுக்க நடந்தும், தவறு, தவறு, கார் தேயச் சுற்றுப்பயணம் செய்தும், வாய்வலிக்கப் பேசியும், கடவுள் உண்டு என்று அடிகள் போன்றோர் உபதேசம் செய்து வருவது கண்டு நமக்கு ஐதோ ஒரு நஷ்டம் ஏற்பட்டுவருகிறது என்ற எண்ணம் தோன்றுவதில்லை, மாறாக, பாபம், நிழலுடன் அந்த நல்லவர் இவ்வளவு நீண்ட நேரம் போராடுகிறாரே என்று பரிதாபம்தான் பிறக்கிறது நமது கேள்வி, கடவுள் உண்டா இல்லையா என்பதல்ல - கடவுள் யாருக்கு? என்பதுதான் ஆதோ, தொந்தி சரிய, மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே படைத்த காமாந்தகாரன், பாகு கனிமொழி மாதின் பாதம் வருடச் செல்கிறானே, அவன் பட்ட கடன் ஆயிரம், வட்டி தொடர் வட்டியுடன் சேர்ந்து ஆறு ஆக, அந்தக் கடனாளியின் வீட்டையும் தோட்டத்தையும் ஐலத்தில் எடுத்துக் கொண்டு, அவனை ஆழ ஆழ விரட்டியவனாயிற்றே, ஆவனல்லவா ஆறுமுகப் பெருமானுக்குத் தங்க மயில் வாசனம் செய்து தந்தான், ஐயன் அவனுக்கு அருள்பாலிக்கலாமா? என்பது நமது கேள்வி ஏழையை உடேற்ற, இல்லாமையை ஒழிக்க, பேதத்தைப் போக்க, பேதைமையை நீக்க, அன்பை வளர்த்திட, அறநெறியைக் காட்டி, கடவுளும் மதமும் பயன்படக் காணோமே! மாளிகையில் மகிழ்ச்சியும் குடிசையில் குமுறலும், உள்ளே வைரக் குவியலும், கோபுர வாயிற்படியிலே குட்டமும், எத்தனை புன்னகையும் ஏமாளியின் பெருமூச்சும் இருக்கிறதே, இதனை மாற்றிட, திருத்திட, மார்க்கம் பயன்படக்கூடாதா என்பதே நமக்கள்ள கவலை நாம் இந்த நோக்குடன் பிரச்சனையை இராயும்போது, கடவுள் உண்டு கடவுள் தேவை என்பதை முத்தமிழின் துணைக்கொண்டு எடுத்துக் கூறிப் பயன் என்ன? பாதிக்குதே பசி என்று கூறுபவனிடம், பச்சை வயலைக் காட்டிப் பயன் என்ன? பச்சை வயலில் செந்நெல் விளையும் என்பது அவனுக்குத் தெரியும் - விளைவது புளியோப்பக்காரனின் களஞ்சியமல்லவா சென்று குவிகிறது. வயலில் நெல் இல்லையா என்று பொறி பறக்கக் கேட்டுப் பயன் என்ன? பசிபோக மார்க்கம் கேட்கிறார்கள். விளைவு முறைப்பற்றி அல்ல, உழவு முறை பற்றியுமல்ல! ஆனால், இந்தச் சொல்லேர் உழவர்களோ, ஆயிரமாயிரம் காரணம் காட்டவல்லோம், ஆதிபரம்பொருள் உண்டு என்ற உண்மைக்காக என்று பேசுகிறார்கள் நல்லவர்கள்! மிக நல்லவர்கள்! ஆனால் பாபம், பிரச்சனைக்கு வெகு தொலைவில் நின்றுகொண்டு பேசுகிறார்கள்.

அருகே வர முயற்சி எடுத்துக் கொண்டார், அடிகளார் எவ்வளவுதான் நாஸ்திக ஒழிப்புப் பேசினாலும், அவர்போன்றோர் உள்ளத்திலே, இது போதாது - ஏதேனும் உருப்படியான வேலை செய்தாக வேண்டும் என்ற எண்ணம் ஏழாமலிருக்க முடியாது. எனவே அவர், மிகச் சாதாரணமான ஒரு மாற்றம் கூறினார்.

குன்றக்குடி அடிகளார் - பெயரைக் கவனித்தீர்களா, அடிகளார், ஸ்வாமிகளல்ல!

அவர் பேசுவதும், வெறும் பாகவதம் பாரதம் இராமாயணமல்ல, அடிக்கடி குறள் பேசுகிறார், சங்க இலக்கியத்தின் சுவையையும் கூட்டித் தருகிறாராம்.

போதுமே! ஸ்வாமிகள் என்றல்ல அடிகளார் என்று தனித்தமிழ்ப் பெயர்! திருக்குறள், சங்க இலக்கியம்! ஒரு சாராரை மிரட்சி அடையச் செய்வதற்குப் போதுமான குற்றங்கள் இவை. ஆயிரமாயிரம் மேடையிலே அவர் ஆஸ்திகம் பேசி என்ன, நாஸ்திகர்களைக் கண்டதுண்டமாக்குவேன் என்று கர்ஜனை செய்து என்ன, காவி அணிந்து என்ன, கடவுளைத் தொழுது என்ன? திருநீறு அணிந்தென்ன அடிகளாராமே அடிகளார் - ஏன், ஸ்வாமிகள் என்ற வார்த்தைக்கு என்னவாம், திருக்குறள் - தமிழர் நெறி - சங்க காலம் - தமிழ் நாடு - இதை எல்லாம் பேசுவானேன் இராமதாஸ், கபீர்தாஸ், சோகமாமேளா, மீரா இவைகளைப் பேசாமல், வருகுண பாண்டியனாம், குலோத்துங்கனாம், நக்கீரனாம் - இப்படியல்லவா பேசுகிறார் - என்ற குசுகுசு கிளம்பிற்று!

நல்லவர் - நமக்கெல்லாம் மெத்த உபகாரம் செய்கிறார் - மதத்தை இரட்சித்து, மாபாவிகளை ஒழித்துக் கட்டுவார் என்று எண்ணி இவரைப் பாராட்டினோம், அர்ச்சனை செய்தோம், இவரோ ஒரு மாதிரியாகப் பேசுகிறாரே, என்று புகார் கூறக் கிளம்பினர் பூதேவர்கள்!

புகார் காண்டம் பிறந்ததற்குக் காரணம், அடிகளார் கடவுட் காதைபேசியதுடன் நில்லாமல், வழக்குரை காதையும் கூறலானார், துவக்கம்தான், வேறல்ல! எனினும் அது போதுமே, சந்தேகத்தைக் கிளப்ப.

அடிகளார், மதத்துறைத் தலைவராக இருப்பதுடன் திருப்தி அடையவில்லை - தமிழராகவும் திகழ விரும்பினார், தமிழர் என்ற முறையில், அவர் மனதில் ஒரு வருத்தம் புகுந்து குடையலாயிற்று. தமிழ், தொன்மை, இனிமை வளம் எல்லாம் கொண்ட உயர் தளிச் செம்மொழி - அவர் அறிந்த உண்மை அது. அவர் காணும் காட்சியோ, அந்தத் தமிழ், கோயில்களில் இல்லை.

“விலை இப்படியே ஏறிக்கொண்டேதான் போகுங்களா, இல்லை, ஏதாவது இறங்குமுகம் உண்டா” என்று தமிழில் பேசுகிறார் வணிகச் சீமான் கோபுர வாயிற்படியில் வாருங்கோ செட்டியார்வாள்! இப்பத்தான் போனா, முக்கால்மணி நேரமா காத்துக்கொண்டிருந்தா” என்று தமிழில்தான் அர்ச்சகர் ஆவரிடம் பேசுகிறார் யார் வந்துபோனது என்பதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கி விடாதீர்கள் - காசுள்ள கனவானும் அவருடைய அந்தரங்கம் அறிந்த அர்ச்சகரும் அக்கரை காட்டும் ஒரு பாத்திரத்தின்மீத நமக்கேன் கவலை! தமிழிலே பேசியானதும்ம, அர்ச்சனை தொடங்குகிறது - தமிழ் அல்ல! நீண்டகாலமாக நடந்து வரும் இந்தத் தமிழ் நிந்தனை தேவாலயங்களிலே இருந்து வருகிறது மழலை, தமிழில்! காதல் மொழி, தமிழில்! கவிதை, தமிழில்! உரையாடல் தமிழில்! அங்காடியில் தமிழ்! அர்ச்சகர் வீட்டில்கூடத் தமிழ் - இடத்துக்கேற்ற இயல்புடன்! எனினும் அர்ச்சனைக்குத் தமிழ் இல்லை! ஏன்?

ஏன்! ஆபத்தான வார்த்தை அல்லவா அது அந்தஒரு வார்த்தைதானே, ஒரு இயக்கத்தையே, நாஸ்திக இயக்கம் என்று தூற்றுவதற்கான காரணமாக அமைந்தது எதற்கெடுத்தாலும் ஏன்? ஏன்? என்று கேட்பதைக் கண்டிக்கும் திருக்கூட்டத்தின் தலைவர்தானே அடிகளார்! பாருங்கள் அந்தப் பொல்லாத வார்த்தையின் போக்கிரித் தனத்தை - அவர் உள்ளத்திலே அந்த வார்த்தை புகுந்துவிட்டது!

ஏன் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது? தமிழ்நாட்டில், தமிழ் கூடாதா? நமது தெய்வத்துக்குத் தமிழ் தெரியாதா? ஏன், இப்படி ஒரு விபரீதமான முறை இருக்க வேண்டும்? ஏன் இதை மாற்றிடக் கூடாது, ஏன் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது? என்று கேட்கலானார்.

“நேக்கு அப்பவே தெரியும்”

“நான் சம்சயப்பட்டது சரியாகிப் போச்சு”

“ஆசாமியோட நடைநொடி பாவனைகளைப் பார்க்கும்போதே நேக்குச் சந்தேகம்தான்.”

“ஏன் ஓய்! இப்பப் பிதமாதப்படுத்தறீர். நீரும்தானே அவன் பின்னோடு போயிண்டிருந்தீர் - ஜே போட்டீர்”

“என்னமோ இந்தச் குசூனாமானக்களைக் கண்டித்துப் பேசுவது கேட்டு நேக்கு ஒரு திருப்தி. எல்லோரும் பக்திமானாக இருக்க வேணும். கோயில் குளத்தை ஆகழப்படாது, பூஜை புனஸ்காரத்தை விடப்படாது என்றெல்லாம் பேசி வந்ததால், நமது இசார அனுஷ்டானாதிகளுக்கு வருகிற ஆபத்து நீங்கி நமது மதாசாரம் எல்லாம் காப்பாத்தப்படும்னு நம்பினேன்.”

“நம்பினீர்! அதனாலேதான் இப்ப ஒரு பெரிய கல்லாகத் தூக்கி நம்ம தலையிலே போடவரான் மனுஷ்யன்”

“லோகம் மந்திராதீனம், மந்திரம் பிராமணாதீனம் பிராமணா மமதேவாதான்னு” கீதோபதேசம் இருக்கே ஓய்!”

“இருக்கு ஒய்! இருக்கு. ஆனா அந்த அடிகள், கீதாபோதேசம் ùச்யகிறதில்லையே, திருக்குறள்னு பேசறது.”

“அதனாலேதான், தேவாலயத்திலே தமிழிலே அர்ச்சனை செய்ய வேணும்னு “உபதேசம்” கிளம்பியிருக்கு”.

“பாருமே, தைரியத்தை! யுக யுகாந்திரமா இருந்துண்டுவர ஒரு ஏற்பாடு - வேதாகம சம்மதத்தோட இருக்கிற ஒரு ஒதீகம், அதைப் போயி, நாசமாக்கக் கிளம்ப, எவ்வளவு நெஞ்சழுத்தம் வேணும்.”

ஏன் ஏற்படாது நெஞ்சழுத்தம். நாம்தான் தலைமேல் தூக்கி வைச்சிண்டு ஆடினமே”

“இப்படிப்பட்ட நிரஸ்ரவாதி, பிரம்மத்துவேஷின்னு கண்டோமா! ஆசாமி என்னமோ திருநீறும் உருத்திராட்சமுமா இருக்கறதாலே நம்மிடம் பக்தி இருக்கும்னு எண்ணிண்டோம்.”

“அதனாலேதான் இந்த விபத்து தமிழுக்கு என்ன குறைன்னு கேட்கறான். எப்படி ஒய்! சொல்றது! தமிழிலே அது இருக்கு, இது இருக்கு என்கிறா இருக்கட்டும், தேவாரம் இருக்கு திருவாசகம் இருக்கு என்கிற, இருக்கட்டும் படிக்கட்டும், பாராயணம் செய்யட்டும், பக்திக்காகப் படிக்கட்டும், யாரும் தடை செய்யல்லே, ஆனா என்னதான் பொக்கிஷம் இருந்தாலும், தமிழ், தேவபாஷையாகுமோ! இதைப்புரிந்து கொள்ளலையே!

யார் புரியாதவா! நீரும் நானும் ஒண்ணும் புரியாமத் திண்டாடறோம் ஒய்! அந்த அடிகளுக்கா ஒண்ணும் புரியாது! ஆடே அப்பா! எமகாதகப் பேர்வழி ஒய்! சமஸ்கிருதம், தமிழாளுடைய பாஷையல்ல, தமிழ்நாட்டுக் கோயிலிலே தமிழிலே அர்ச்சனை செய்யாமலிருப்பது, தமிழுக்கு அவமானம், தமிழருக்கு இழுக்கு என்றல்லவா பேசுகிறான்”

“அப்படியானால், சமஸ்கிருதம் தேவ பாஷையல்லவா?”

“சொல்லுவானேன் ஒய்! அந்த வெட்கக் கேட்டை வாய்விட்டு வேறெ சொல்ல வேணுமா?”

“இரண்டு நாள் போனா சொல்லக் கூடத்துணிவு ஏற்பட்டுவிடும்.”

இவ்விதம் இப்போது அர்ச்சனை நடக்கிறது, அடிகளாருக்கு.

இன்னமும அவர்மீது பாய்ந்து பிய்த்துப் பிடுங்காம விருப்பதற்குக் காணரம், அவருடைய காவியும், அவர் நமது இயக்கத்தின்மீது கக்கி வரும் பகையும்தான்!

அடிகளார் மெத்த இயசாப்படுகிறார் என்று அறிகிறோம்.

இருந்து முகந்திருத்தி உரோடு பேன் வாங்கிதான் அவர் பேசினார், காண்பதோ, சொல்லக் கூச்சமாக இருக்கிறது, சிண்டுகளைத் தட்டிவிட்டுக் கொண்டு, கிளம்பிவிட்டிருக்கிறார்கள்.

கோயில் வேண்டாம் குளம் வேண்டாம் என்று அவர் கூறவில்லை கூறுவாரா, அவரே கோயிலால் வளரும் கோமான்!

கோயிலில் தமிழருககு அவமானம் இருக்கவேண்டாம், தமிழுக்கு இழிவு தேடவேண்டாம், ஆண்டவனை பிரார்த்திப்பது புரியும்படி, தமிழிலே அர்ச்சனை இருக்கட்டும் என்கிறார்.

சற்றே சிரமமிருக்கிறது அதிலே - ஆதிகேசவா, வராக மூர்த்தி, ரிஷப வாகன ரூடரே! என்பன போன்றவைகளைத் தமிழில் சொன்னால் ஆசங்கியமாகக் கூட இருக்கும் - என்று சமாதானம் பேசவில்லை அர்ச்சகர்கள் - தமிழுக்கு அந்த மகிமை கிடையாது என்று தட்டிப் பேசுகிறார்கள்! வடமொழிதான் மந்திர மொழி - தேவ மொழி - தமிழ் அல்ல என்று, அச்சமின்றி அவர்கள் கூறுகிறார்கள் கூச்சமின்றி கேட்டுக் கொள்ளும் கூனர்கள் நிரம்பியது தமிழ்நாடு என்ற எண்ணத்தில்.

பக்தி - ஆச்சார அனுஷ்டானம் - உள்ளம் நெக்குருக நிற்பது - கசிந்து கண்ணீர் மல்குவது - இறைவனிடம் தன்னை ஒப்படைப்பது - இவை எதுவும் பலன் அளிக்காது, அர்ச்சகர் சமஸ்கிருத்தில் அர்ச்சûன் செய்தால்தான், அருள்கிட்டும் என்று நம்பச் சொல்கிறார்கள் - நம்பாதவன் நாஸ்தினாக்கப்படுகிறான்.

இதமாகப் பேசுகிறார், ஏரிந்து விழுகிறார்கள்.

நான் வேறு என்று எண்ணி விடாதீர்கள் - அடிகளார் - என்று எடுத்துக் காட்டுகிறார் - யாராய் இருந்தால் என்ன என்று புருவத்தை நெரிக்கிறார்கள்.

குருக்கள்மார்கள் கூட்டம் போட்டு, குன்றக்குடியாரின் யோசனையை ஏற்றுக் கொள்ள முடியாது - அர்ச்சனை சமஸ்கிருதத்தில் தான் நடைபெற்றதாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டனர், அடிகளார் முகத்தில் கரியை அப்பிவிட்டனர். கடம்பா! கச்சி ஏகம்பா! என்று அடிகளார் கதறுகிறார்!

இந்தச் சிறு சீர்திருத்தம் செய்வதற்கும் இயலாத நிலை கண்டு, இந்த மாறுதலையும் எதிர்க்கும் மகானுபவார்களே இலய அதிபர்களாக இருக்கும் நிலைகண்டு, அடிகளாரின் எண்ணம் எங்கெங்கு பாய்ந்ததோ நாமறியோம் அவர், பேசுவது பற்றிய செய்திகளில் நிரம்ப, தினத்தந்தி கலந்து விடுவதால், தெளிவாகத் திட்டமாக அவர் கருத்துரை கிடைப்பதில்லை. ஆயாசப்படுகிறார் என்பது மட்டும் திட்டமாகத் தெரிகிறது. உறவு கொôண்டாடத்தக்க அளவுக்கு அவர்களுடன் பழகிடும் அடிகளாருக்கே இந்தப் பரிசு - இந்த அர்ச்சனை கிடைக்கிறது என்றால், நம்மீது அவர்கள் பாய்வதிலே ஆச்சரியப்படுவதிற்கில்லை.

அர்ச்சனை தமிழில் என்று இன்று கூறுகிறார்கள் - சரி என்று ஒப்புக் கொண்டால், அத்துடன் நிற்குமோ அர்ச்சகர்கள் ஏன் தமிழர்களே இருத்தல் கூடாது என்று கேட்பர் - அத்துடன் நில்லாது, இலயத்தில அவரவர் சென்று தொழுகை நடத்தி வரலாமே, இதற்கு அர்ச்சகர் ஏன்றோர் தரகர் ஏஏன் என்று கேட்பார்கள் - பித்தம் வேகமாக வளரும் - இது அர்ச்சகர்களின் எண்ணம்.

அவர்கள் எண்ணுவது அடியோடு தவறு என்றும் கூறிவிட முடியாது - காற்று அப்படித்தான் அடிக்கும்!

நந்தன் நெருப்பில் குளித்த பிறகே நடேசனைக் காண முடிந்தது - அப்படிப்பட்ட இடத்தில் இன்று வருந்தி வருந்தி அழைக்கிறார்கள் பழங்குடி மக்களை! கால வேகத்தின் முன்பு, வைதீகம் நில்லாது நிலைக்காது என்பதைக் காட்டும் மகத்தான சம்பவமல்லவா இது.

அடிகளார், தமிழிலே அர்ச்சனை நடந்தால், இதுவரை கோயில்களுக்கு வராதிருந்தவர் களெல்லாம் கூட வருவார்கள் என்று ஆசை காட்டியும் பேசினாராம்.

அந்த ஆசைக்குக் கட்டுப்பட்டால், பிறகுட நிலைமை எப்படி எப்படி மாறிவிடுமோ என்ற அச்சம் அர்ச்சகர்களுக்கு எனவே தலை தூக்கும்போதே தாக்கித் தகர்த்திட வேண்டும் என்று துணிந்துவிட்டனர் - அர்ச்சனை நடக்கிறது அடிகளாருக்கு.

ஆகோபில மடத்து ஜீயர், மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் தான் ஏற்பட்டன, வேறு பாஷைக்கு மாற்றினால் மந்திரசக்தி போய்விடும் - என்கிறார்.

அங்ஙனமாயின், ஏன் தேவாரம், எவரையும் உருக வைக்கும் திருவாசகம்! ஏன் ஐயனுக்கு ஏற்றவை அல்லவோ என்று கடாவுகிறார், அடிகளார்.

ஜீயர் ஸ்வாமிகள், விவாதத்தில் இறங்குவது வீண்வேலை என்று கருதுகிறார் எனவே கூறுவதை அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டு, பகவான் பேரில் பாரத்தைப் போட்டு விடுகிறார்!

அடிகளார் விரும்பும் தமிழ் அர்ச்சனையை, கிளர்ச்சி மூலமாவது வெற்றிப் பெறச் ùச்யத் துணைநிற்பது என்று தமிழ்நாட்டில், தமிழ் தன்மானம், ஓரளவு அறிவுத் தெளிவு கொண்டோர் திரண்டு நிற்கின்றனர் என்று அறிந்து மகிழ்கிறோம்.

இந்தச் சூனாமானாக்களுக்கும் இலய வழிபாடு பற்றியும் பக்தி குறித்தும் அக்கரை வந்தது காண் என்று பேசி நையாண்டி செய்கிறார் அடிகளார் என்கிறார்கள்.

இந்தக் காவிகட்டிக்கும் தமிழ், தன்மானம் இவைபற்றி புரட்சிகரமான எண்ணம் உதித்ததே, ஏதேது, காலம் வெகுவேகமாக மாறுகிறது காணீர்! என்று பதில் கூறுவது கடினமல்ல.

நாம், இந்த அர்ச்சனை முறை மாறுவதைக் கொண்டு, மாபெரும் புரட்சி வெற்றிகரமாக நடந்தேறிவிட்டது என்று கருதிப் பொன்னார் மேனியனைப் போற்றுவதும் என்று கூறித் திருப்திப்பட்டுவிடவில்லை.

இது துவக்கம்!

இதைத் தொடர்ந்து செய்யப்பட வேண்டிய பலப்பல உள்.

அவைகட்கு, அடிகளாரின் இந்த முயற்சி அடிகோலும் என்பதிலேதான் நமக்கோர் மகிழ்ச்சி.

தமிழ்நாட்டில் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற கொள்கை இருந்தது.

சாதி சமயம் அனைத்தும் துரதிர்ஷ்டவசமாக பின்னால் தோன்றியவை என்று சாதி ஒழிகின்றதோ என்று தீண்டாமை ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பக்தி நெறி உதயமாகும். சமயத்தை வாழ்வுச் சமயமாக மாற்ற வேண்டும்.

வெறும் தத்துவச் சமயமாக, சடங்குச் சமயமாக இருக்கக்கூடாது.

இவை போன்ற கருத்துரைகளைத் தந்துவருகிறார் - இடையிடையே முருகன் பெருமை, கழுகுமலையின் மகிமை, கற்பூரார்த்தியின் மேன்மை போன்ற பூஜாரிப் பேச்சும் படமெடுத்தாடத்தான் செய்கிறது.

எனினும், இன்றுள்ள மதத்தின் தன்மையும், நிலையும் மக்கள் கொண்டுள்ள சமய முறையும், அவர் மனதுக்கு ஆயாசம் தருவதும், இதை மாற்றி அமைத்தாக வேண்டும் என்ற ஆவல் கரப்பதும் தெரிகிறது - மகிழ்கிறோம்.

இதே முறையில் அடிகளால் கூறும் இந்தச் சிறிய, துவேஷமற்ற, சீர்திருத்தம்கூட, அர்ச்சகர்களின் உள்ளத்தில் அச்சத்தையும் ஆத்திரத்தையும் மூட்டி விட்டிருக்கிறது.

அர்ச்சர்களின் இந்தப்போக்கு, புன்னகை காட்டி வெல்லவேண்டுமே தவிரப் போர்க்கோலம் பூண்டு பயனில்லை என எண்ணிடும் போக்கிலே உள்ள ஆச்சாரியார் போன்றவர்களுக்கு வருத்தமூட்டி இருக்கிறது.

இந்த அடிகளும் அனாவசியமாக இந்தப் பிரச்சினையைப் கிளப்பி இருக்கத் தேவையில்லை. இந்த அர்ச்சகர்களும், பிடிவாதம் காட்டிப் பேயாட்டம் போடுவதும் சரியில்லை என்று அவர்கள் பேசுகிறார்கள்.

சிலர், வெடிப்புப் பிளவாகு முன்பு, ஏதேனும் ராஜி செய்தாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்!
சிலர், இதுவும் சரி, அதுவும் சரி என்று மழுப்பிப் பார்க்கிறார்கள்.

அடிகளார், இந்தச் சிறுவெற்றியும் பெற இடமளிக்காவிட்டால், பிறகு அவர் ஆஸ்திகத்தின் சார்பிலே எப்படி வெற்றிகரமாகப் பணியாற்ற முடியும் என்று சிலர் கேட்கின்றனர்.

அடிகளாரின் முக தாட்சணியத்துக்காக, இந்தப் பிரச்சினையில் விட்டுக் கொடுத்தால், போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக, அர்ச்சர்களாக ஏன் ஐயரே இருக்கவேண்டும், அர்ச்சனை தெரிந்த தமிழரை ஏன் நியமிக்கக் கூடாது என்று பிரச்சனை கிளம்புமே என்ன செய்வது என்று சிலர் பயத்துடன் கேட்கின்றனர்.

எப்படியும் தமிழில் அர்ச்சனை நடைபெறச் செய்தே தீருவேன் - சிவனானை என்று சூளுரைத்திருக்கிறாராம் அடிகளார்!

அர்ச்சர்களோ இதற்குத் துளியும் இடமளியோம் - பகவான்மீது பாரத்தைப் போட்டுவிட்டோம் என்று பேசுகிறார்களாம்.

தமிழில் அர்ச்சனை ùச்யவதை எதிர்ப்பதால், ஒரு குறிப்பிட்ட மொழியின் மீதும், ஒரு குறிப்பிட்ட சாரார் மீதும் தமிழருக்கு வெறுப்பும் ஆத்திரமும் ஏற்படும்ம என்று, உடன், மலடோவ், சோ-இன்-லாய் போன்றாரின் பாணியிலே அடிகள் பேசுகிறார். ஒரு குறிப்பிட்ட மொழி என்பது சமஸ்கிருதம் - ஒரு சாரார் என்பது பார்ப்பனர்!

இப்படியாகத்தானே இரு சாராருக்குள்ளே விவாதம் மூண்டு, ஒருவர் மீதொருவர் அர்ச்சனைகளை வீசிக் கொள்ளும் அதியற்புதமான கட்டத்திலே நாடு வந்து நிற்கிறது!

(திராவிட நாடு - 22-5-55)