அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அறிவொளி வழங்கிய அறிஞர்

“நம்பிக்கையை நாசம் செய்கிறான். முன்னோர் வழியைப் பிழையுடையதென்கிறான். புதுவழி காண முனைகிறான். இளைஞர்களை மயக்குகிறான். ‘அறிவு அறிவு’ என ஆர்ப்பரிக்கிறான். ‘சிந்தியுங்கள்’ ‘சிந்தியுங்கள்’‘ என எதற்கெடுத்தாலும் செப்புகிறான். ‘ஏன்’ ‘ஏன்’ என எதிர்த்துக் கேட்கிறான். இவனை இப்படியே விட்டு வைப்பது நாட்டு மக்களுக்குக் கேடு பயக்கக் கூடியதாகும். பரம்பரைப் பழக்கமும், தெய்வ பக்தியும் சீர்குலைந்துவிடும். இவனைத் தண்டித்தலே முறை”.

விலங்கினிலும் மாறுபட்டவனாக - உயர்ந்தவனாக மனிதன் இருப்பதற்கே காரணம், இந்தச் சிந்தனா சக்திதான். இவ்வுயர்ந்த பண்பாட்டை வளர்க்க மக்களில் சிறந்தவர்கள் பட்ட கஷ்டநஷ்டங்கள் அமோகம். விஞ்ஞானத்தில் நிரந்தர உண்மைகள் என எதனையும் அறுதியிட்டுக் கூறுதல் முடியாது. மேலும் மேலும் பல புதிய உண்மைகள் ஆராய்ச்சியின் பயனாக வெளியாகின்றன. அவை மறுபடியும் மாறுதல் பெறும் வாய்ப்புடையனவாகவே இருக்கும். விஞ்ஞானம் வளர்ச்சியடைக்கூடியதேயன்றி, குறிப்பிட்ட ஓர் எல்லையோடு நின்றுவிடக் கூடியதன்று.

ஓர் காலத்தில் உண்மையெனக் கொள்ளப்பட்டவைகள் பிறிதோர் காலத்தில் தவறுடையதெனத் தள்ளப்பட்டுப் புதியதோர் சித்தாந்தம் அதனிடத்தைப் பெறும். அதுவும் பின்னர் மாறுதலுறும். அத்தகைய மாறுதல் உடன்பாடு கெண்டு விளங்கினும் விளங்கும். நேர் மாற்றமுடையதாகத் தோன்றினும் தோன்றும். இவ்வாறு வளர்ந்து கொண்டே வரும் சக்தியுடையது விஞ்ஞானம்.
பார்த்தல், பார்த்த பொருள்களை ஆராய்ந்தறிதல் ஆகிய இருவழிகளில்தான் இன்று நாம் காணும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் உண்டாக்கப்பட்டன. இவைகளை முதல் முதலில் மக்கள் கண்டு மருண்டனர் புது வாழ்வளிக்க வந்த இவைகளை, வேதனையைப் பெருக்கவந்த விலங்குகளாக மக்கள் கருதினர். ஏற்கவும் மறுத்தனர். கையாண்டு சுகம் பெறவும் தயங்கினர். பின்னர், காலப்போக்கில் அவைகள் தரும் சுகம். அவைகளை வெறுத்த மக்கள் உள்ளத்திலேயே ஓர்வித இசையைத் தூண்டிற்று. முதலில் தங்களால் வெறுக்கப்பட்ட ஒன்றையே, விருப்பத்துடன் பின்னர் ஏற்றச் சுகங்கண்டனர்.

காண்கின்ற உலகத்தை, அழியக்கூடியது எனும் மாயாவாதம், மக்களுக்குள்ள பழைமை மோகம் ஆகிய இரண்டும் மக்களின் அறிவியல் வளர்ச்சியைத் தடுக்கும் இருபெரும் தடைகளாக இருந்து வருகின்றன. தங்களுடைய வாழ்க்கையைத் தாங்கள் நினைத்தவண்ணம் சீராக்கிக் கொள்ளும் திறம் - சக்தி, தங்களிடந்தான் உள்ளது என்பதை ஊடனுக்குடன் மறந்து விடுகின்றனர். ஒவ்வொருவரும் நித்தியப்படி வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கையையொட்டித்தான், ஒவ்வொருவரிடத்திலும் உள்ள உறவு முறை மாறுதல் பெறுகிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளுதல் முக்கியமாகும்.

இவ்வுலக வாழ்வின் முக்கியத்தையும், நலம் பயக்கக் கூடிய அனைத்தையும் வற்புறுத்தினாலன்றி, மக்கள் விஞ்ஞான உலகத்தை நாடிச்செல்வது முடியாத காரியமாகும். இதனை நன்குணர்ந்த சிலர், மதகுருக்கள் சிறுமதியையும், அவர்களால் மக்களிடை பரப்பப்பட்டிருந்த - இருக்கும் மதக் கதைகளையும், அவைகள் மீது மக்கள் கொண்டிருந்த - இருக்கும் பொய் நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்து, அறிவியல் போதனை புரிந்து, மக்களை உண்மையான மக்கள் வாழ்வுகொள்ளத் தூண்டினர் - தூண்டியும் வருகின்றனர்.

கல்லடி - சொல்லடி - விஷம் கொடுத்தல் - தீயிட்டுக் கொளுத்தல் - ஜீவிய காலம் வரை சிறையில் தள்ளல் - அறிஞர்கள் எழுதின நூற்களை மறைத்தல் போன்ற அக்கிரமங்களை எல்லாம், மக்களிடம் மந்தமதியை வளர்ப்பதின்மூலம் ஆதிக்கம் பெற்று வந்தோர் செய்து வந்தனர் - வருகின்றனர். ஆதிக்கக்காரர்களின் கோபத்திற்பட்டு, கொடுமைக்கு ஆளாகி, ஈன்னல்பல அனுபவித்தவர்கள் பலரை வரலாற்று எடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அறிவொளி தந்த அனைவரையும், அவர்கள யாத்த நூற்களையும், முன்னையவர் உயிரோடிருந்த காலத்தில், நையாண்டி செய்து கொடுமைக்குள்ளாக்கிய மக்கள், ஐறெடுத்தும் பார்க்க ஒருப்படாத மக்கள், சிலநூறு ஆண்டுகள் சென்ற பின்பு, தங்கள் சீற்றத்திற்குள்ளானவர்களைச் சிறப்பித்தனர் - இன்றும் போற்றிப் புகழ்கின்றனர். அந்த லட்சியவாதிகள் பலன் கருதாப்பணி புரிந்தனர். அவர்கள் அன்று வெற்றி காணவில்லையாயினும், உழைப்பு வீண் போகவில்லை. அவர்கள் விதைத்த சிறு விதை உண்டாக்கிய அறிவொளி இனி என்றென்றும் வெட்டி வீழ்த்த முடியாத அளவில் உலகெங்கணும் பரவித் தழைத்தோங்கி இருக்கிறது. ஆனால் அவர்களை எதிர்த்த வைதீகம், அவர்களுக்கு இடுக்கண் விளைவித்து மகிழ்ந்த மதம், மணல் மேடு சரிவது போல் சரிந்தவண்ணம் இருக்கிறது. இருந்தாலும், மதத்தால் மரியாதை பெறுவோர் - வைதீகத்தோடு வாழ்வைப் பிணைத்துக் கொண்டுள்ளோர் - அறிவியலோடு போரிடப் புறப்படுவது, புறமுதுகிடுவது, பின்னரும் மூர்த்தண்ணியமாகத் தாக்க முற்படுவதுமாகவே உள்ளனர் - பரிதாபம்!

பழிச் சொல்லைப் பரிசாகப் பெற்று, கொடுங்கோலர்களின் சீற்றத்திற்காளாகி, வளங்குன்றி வாழ்நாளெல்லாம் வதைந்து, ஆரிய பெரிய தத்துவங்களை அவனிக்கு அள்ளி வீசிப்போன அறிஞர்கள் பலர் வரலாற்று எடுகளில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், அவ்வளவும் மேல்நாட்டில்.
இங்கு, அவதாரப் பெருமையும், அதுபற்றிப் பேசும் கிரந்தங்களும், பிறப்பிலே பேதம் கற்பிக்கும் புத்தகங்களும் வண்டிக்கணக்கில் உள்ளன. முதல்முதலாக இங்கு, கருத்தில் புரட்சியை உண்டு பண்ணியவர் கௌதம புத்தர் இவர். அவர் போதித்த புதுயுகக் கருத்துக்களை இங்கு நிலைபெறவிடாமல் செய்து விட்டது பிராமணியம் - ஆரியம். காசு செலவில்லாமல், கடவுள் பெயர் கூறி, பிறரிடம் பெற்றுவந்த மரியாதையையே பொய்யெனப் புத்தர் போதித்ததால், அவர் தம் சொற்களால் பாதிக்கப்பட்டோர், அவர் போதனைகளைச் செல்லாக் காசாக்கினர். அவை மக்களிடை பரவிவிடாமல் செய்துவிட்டனர். பின்னர் இந்த நாடு ஆரியத்திற்கு வாழ்வளிக்கும் தரணியாகப் போய்விட்டது.

தமிழ்நாட்டில், பழமையைச்சாடி, பொருத்தமன்ற தெய்வக் கதைகளை விளக்கிக் காட்டி, பலரின் தூற்றுதலுக்கு ஆளாகித் தளர்ந்த வயதிலும் அதே பணியை விடாது புரிந்து வருபவர் இராமசாமி அவர்களேயாவார். கால மாறுதலால் பெரியார் அவர்களுக்குக் கொடுந்தண்டனைகள் பல கிடைக்கவில்லையேயன்றி, மக்களிடம் கிடைத்த ஆதரவைக் காட்டிலும், மக்களின் பொல்லாப்பு அமோகமாகக் கிடைத்திருக்கிறது. அவர் ஏற்றி வைத்த அறிவுச் சுடரை இனி ஒருவராலும் அணைக்க முடியாது. எத்தகைய சூறாவளியையும் தாங்கி நின்று, விளக்கொளியைக் காத்து நிற்க இளங்காளைகள் எண்ணத் தொலையாதோர் உள்ளனர்.

இதன் முன்பும் இத்துறையில் சிலர் சிறு சிறு பண புரிந்துள்ளனராயினும், அவர்கள், பெரியார் போன்று முழுநேரப் பணியாக - வாழ்க்கைக் தொண்டாக - ஏற்படுத்திக் கொள்ளாததால், அவர்கள் இத்துறையில் முக்கியத்துவம் பெறமுடியாமல் போய்விட்டனர்.

அறிவியல் வாதிகளின் கருத்துக்களை, நேர்மையான முறையில் மறுத்துக் கூறுவதென்பது, எவராலும் முடியாத காரியம். இறுதியில் தோல்வியே சம்பவிக்கும் என்பதை நன்குணர்ந்த வைதீகம் குறுக்கு வழியையே மேற்கொள்ளும். அறிஞர்களின் புதுக்கருத்துக்களை, மாற்றியும், சமயத்திற்கேற்றார்போல் திருத்தியும் கூறியே பாமர மக்களை ஏவும். பழக்க வாசனையால், வைதீகம் சுட்டிக்காட்டும் அச்சத்திற்கு அடிமையாகியும், வைதீகக் கட்சியைக் காக்க ஆவேசம் கொள்வர் மக்கள்.
*********

இந்திர நாட்டிலும் அறிவயல்வாதிகள் சிலர் தோன்றித் ùôண்டாற்றியுள்ளனர். இந்நாட்டில் பெரிதும் பத்திரிகைத் தொழில் வைதீகப் பாகாவலர்களின் கைப்பாவையாகிப் போய் விடவே, இந்திரநாட்டு அறிஞர்களை நாம் சரிவரத் தெரிந்து கொள்ள முடியாமலே போய்விட்டது. அவர்கள், நமது கண்முன் படாமல் மறைக்கப்பட்டுவிட்டார்கள்.

தென்னாலிராமன் எனும் பெயரையும், அவன் பெயரைச் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டுள்ள கதைகளையும் நம்மில் பலர் அறிந்திருக்கலாம். அவனைத்தான் அறிவியல் போதித்த முதல் இந்திரனாகக் கொள்ளவேண்டும். அவ்ன, விஜயநகர சாம்ராஜ்யத்திலே கிருஷ்ண தேஆராய மன்னரிடம் விதூஷகனாக இருந்ததாக நம்பப்படுகிறது. அரசனின் குருவான தாத்தாசாரியார் ஓர் வைணவர். அந்தக் குரு ஒரு சமயம், ஒரு வைனை வைணவன் ஒருவன் பார்த்துவிட்டால் ஆடுத்த ஜன்மத்தில் அவ்வைணவன் கழுதையாகப் பிறப்பான் எனக் கூறினாராம். இது கேட்ட தென்னாலிராமன், தான் ஒரு சைவன் இனதால், அரச சபைக்கு ஒரு கழுதையை இழுத்து வந்து நிறுத்தி, அதன் முன்னர் விழுந்து வணங்கினான். அதுகண்ட அரசன், தெனாலிராமனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா எனக் கிண்டல் செய்தார். தென்னாலிராமன் சிரித்து விட்டு, தாத்தாச்சாரியார் கூறும் ஊரையை நம்புகிறவர்களும், அதன்படி நடக்கிறவர்களும்தான் அத்தகையவர்கள் என இடித்துக்கூறினானாம். அரசன் பொன் மாம்பழம் தானம் கொடுத்த கதையைக் கேட்டு, தென்னாலிராமன் பார்ப்பனர்களுக்குச் சூடிட்ட கதையை அனைவரும் அறிந்தே இருப்பாரர்ள். இதுபோன்ற பலப்பல அறிவியற் செயல்கள், அவன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தப் பட்டிருக்கிறது. ஒருமுறை அரசன், அவனைக் கடலிலுள்ள நீர்த்துளிகளைக் கணக்கிடச் சொன்னாராம். அதற்கு அவன், ஒரு வண்டி நிறைய மணலைக் கொண்டுவந்து கொட்டி, அதிலுள்ள சிறுமணற் கற்களை எண்ணினால் ஏற்படும் அளவிற்குச் சமமாக. கடலிலுள்ள நீர்த்துளிகள் இருக்குமென்று பதில் உரைத்தானாம். ஈம்முறையில் அவன் அறிவுக்குப் பொருத்தமற்றக் காரியங்களைச் சாடியுள்ளான்.

கவி வேமன்னா குறிப்பிடத் தகுந்தவர். அவர் வெறும் கவைக்குதாவத த்துவ சாஸ்திரியல்ல. தலையை மழுங்கச் சிரைத்துக் கொள்வது ஒருவனின் இச்சையை அடக்கிவிடாது என்றும், கற்கள் கடவுள் ஆக முடியுமானால், மலைûயுயம் மண்ணையும் உணவாகக் கொடுக்கலாமே என்றும் கட்டிக் காட்டுவதன் மூலம் அறிவியலை வளர்த்துள்ளார். தம்முடைய அனுபவத்தைத் தர்க்கரீதியாக மெய்ப்பித்துள்ளார். அவருடைய கவிகளில் மதிப்பிடத்தகுந்த விஞ்ஞான உண்மைகள் நிரம்பி இருக்கின்றன.

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த ராவ்பகதூர் கே. வீரேசலிங்கம் பந்துலு பெயர் பெற்ற சமுதாயச் சீர்த்திருத்தக்காரராகவும், விதவை மணத்தை வற்புறுத்துவதில் ஒப்பற்றவராகவும் விளங்கினார். அதற்காக அறிவின்துணை கொண்டு அவர் வாதித்தாரேயன்றி, புராணப் புனைசுருட்டுக்குள் அதாரம் தேடும் வீண் வேலையை மேற்கொள்ளவில்லை. சத்யசம்வர்த்தினி எனும் கிழமை இதழைத் தாமே ஆசிரியராக இருந்து நடத்தினார். அவர் நூற்றுக்கு நூறு அறிவியல் வாதியாகவே இருந்தார். எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல், எவர்க்கும் பணியாமல் அவர் தொண்டு புரிந்தார்.

ஆரிய வேதங்கள் நான்கும் எவராலும் இக்கப்படாதது - ஆண்டவனால் தரப்பட்டது என்றெல்லாம் சொல்லப்படுகிறதே, அது அவ்வளவும் பொய் என்பது தக்க மேற்கோள்களுடன் விஜயநகரம் தாத்தாநாயுடு சாஸ்திரி அவர்களால் விளக்கப்பட்டுள்ளது. பித்தாபுரம் பெண்டயால சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் மாபாரதத்திற்கு அறிவியல்துணை கொண்டு புது விளக்கம் கூறியுள்ளார். பாண்டவர்களின் கோரிக்கை பொருத்தமற்றதென்றும், கவுரவர்கள் போக்கு நேர்மையானதென்றும் எடுத்துக் காட்டியுள்ளார். இதேபோன்று குர்ஜால எதுக்குரி நரசையா என்பவரும் பால்நாடு வீரர்களைக் குறித்து விளக்கம் கூறியுள்ளார்.

தென்னாலி இராமசாமி சவுத்திரி அவர்களும், பார்ப்பனர்கள், சொந்த ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக ஏந்தெந்த வகையில் இந்தச் சமுதாயத்தை அமைத்துக் கொண்டுள்ளார்கள் என்பதை, இணித்தரமாக - காரசாரமாக - விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் முதல்தரமான பார்ப்பன விரோதி என்று பழிக்கப்படுகிறார். ஆனால் அவர் பார்ப்பனீயத்துக்குப் பகைவரேயன்றி, எந்தத் தனிப்பார்ப்பனருக்கும் எதிரியன்று.

கோவூர் வள்ளூரி சூர்ய நாராயணராவ் என்பவரும் ஓர் பெயர் பெற்ற அறிவியல் வாதியாவர். சமுதாயத்தையும், மதத்தையும் அறிவியல் கண்கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனும் நோக்குடையவர். அது பற்றிப் பல இலக்கியங்கள் செய்துள்ளார். தன் சொத்து முழுதையும் இப்பணிக்காகவே ஆர்ப்பணித்துள்ளார்.

கோபராஜு இராமச்சந்திரராவ் என்பவர் ஓர் முதல்தரமான அறிவியல் வாதி. ஒவ்வொரு இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் விஞ்ஞான ரீதியில் விளக்கம் கூறுவதில் சமர்த்தர். இன்று, அவர் குடும்பமே ஒரு விஞ்ஞானக் குழுவாக ஆமைந்துள்ளது.

விஞ்ஞானம் எனும் பத்திரிகையை நடத்தி வந்த, காலிபட்டனப்பா கொண்டையாவும் குறிப்பிடத் தகுந்தவராவார்.

எதற்கெடுத்தாலும் மதம், ஆண்டவன் என்று பேசப்படும் தலைவர்கள் மலிந்துள்ள நாட்டில், கலைவளர்ச்சி எனும் பேரால் வெறும் புராணப் புளுகுகளுக்கே புதுமெருகு கொடுத்து முதலிடம் தரப்படும் நாட்டிலே, நூற்றுக்கு ஆறு ஐழுபேர்களுக்குமேல் கல்வி பெற்றில்லாத நாட்டில், வைதீகத்தையே வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டுள்ளவர்களை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்படும் பத்திரிகைகள் மலிந்தநாட்டில், அறிவியல்வாதிகள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாகத்தான் இருப்பர். ஆச்சரியப்படத் தேவையுமில்லை - ஆயாசப்படக் கூடியதுமல்ல இது.

(திராவிட நாடு - 30.11.47)