அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அறிவுரைக் கொத்து

பக்தகோடிகளின் கூட்டத்தை பார்! பாண வேடிக்கையைப் பார்! இரவைப் பகலாக்கும் விளக்கு வரிசையைப் பார்! சிங்க வாகனத்தைப் பார்! அது செம்பொன்னால் சமைக்கப்பட்டிருக்கிறது, அதன்மீதுள்ள அழகிய சிங்கநாதருக்குள்ள ஆபரணச் சுமையைப் பார்! - என்று திருவிழாவின் போது, பவனிவரும் காட்சியில் சொக்கியவர்கள் பேசிக்கொள்வர். அவர்களின் கண்ணையும் கருத்தையும் இழுத்த இக்காட்சியிலே, அவர்கள் கண்டும் கருத்திலேகொள்ளாது விடுவது ஒன்று ஒன்று உண்டு! இவ்வளவும் காண்பர், பேசுவர், களிப்பர், கைகூப்பித் தொழுவர், ஈன்னொன்றும் காண்பர். ஆனால் அதனைக் கருத்திலே கொள்ளார், கொண்டிடிலோ கண்கலங்காதிருக்க முடியாது! ஆண்டசராசரங்களை நடத்திச் செல்லும் ஐ யனை. வாகனமீது ஏற்றித தூக்கிச்செல்வர் சிலர், தமது தோள்நோக, மார்பு ஓடிய, கைகால் அலுக்க, வியர்வை பொழிய, பக்தகோடிகளின் கண்களிலே, பட்டுப் பட்டாடை அணிந்துகொண்டு, பதக்கம் கீரிடம் தரித்துக் கொண்டு, தங்கத்தால் செய்த சிங்காதனத்தின் மீது சவாரி செய்யும் சுவாமி தரிசனத்துக்குரியவராகத் தோன்றுமேயன்றித் தம்மையொத்த மினிதர்கள், சோற்றுக்காக, மிகக்குறைந்த பணம் பெறுவதற்கும் சமமதித்து அந்த பெரும்பாரத்தைச் சுமந்து செல்வது தெரிவதில்லை தெரிந்தால், அந்தப்பொழியும் வியர்வை, வலியால் எழும்ஓலி, பெருங்கூச்சல், ஆகியவை கண்டு, கண்ணீர் பெருக்குவர், ஏழையின் தோள்மீது ஏற்றி வைக்கப்படுகிறது பெரியதோர் பாரம், பக்தர்களின் கண்குளிர வேண்டும் என்று போலும்! ஆரவாரத்திலும் பகட்டிலும் மனத்தைப் பறிகொடுத்து விடுவதால், அவர்களின் கண்களிலே, தங்கள் பூஜைக்குரிய ஆண்டவனையே இளழுத்தி அக்கி வைக்கிற கொடுமைபடுவதில்லை. அதுவே, படாததால், அந்தச் சுவாமியைத் தூக்கிச் செல்வதுடன், பூஜாரி ஒருவனையும் சேர்த்துக் தூக்கிச் செல்லும் கொடுமையும் அந்தப் பூஜாரியும், ஆரிய குலத்தவராக இருந்தே தீரும். அக்ரமத்தையும் , அவர்கள் கண்ணால் காண்பதன்றிக் கருத்திலே கொள்வதில்லை வேறு யாரேனும், விளைவு பற்றிக் கருதாது. “பக்தரே! எதை எதையோ கண்டு பூரிக்கிறீரே, இந்தத் “தூக்கிகளின்” தோள் வீக்கத்தைக் கண்டீரா? ஆண்டவனின் அழகுபற்றிப் பேசுகிறீரே, அவர் அருகே அமர்ந்திருக்கும் அருகதை ஆரியனுக்கே உண்டு என்னும் அக்ரமக் கெள்கையை, இங்கே உறுதிசெய்யும் செயலைக்கண்டீரா? அந்த ஆரியன், மேலே அமர்ந்துகொண்டு, பெரியதோர் வெற்றி வீரன், பெருமைக்குரிய மன்னன், தன்னுடைய படையினரையும் பணியாட்களையும், பார்த்துப் பெருமை கொள்வதுபோல, நம்மை எல்லாம், பார்க்கிற காட்சியின் உட்பொருளை உணர்ந்தீரோ? அவன் பூதேவன் என்று ஏற்றுக்கொண்டீரே. அவன், மனித குணத்திலேயும் எவ்வளவோ மாற்றுக் குறைந்தவன் என்பதை அறிவீரா? வேதம் அறியான், வேள்வி செய்தறியான் ஆச்சாரம் அறியான். அக்ரமம் பல செய்து தேறியுள்ளான். அதனை ஆறீவீரா? என்று யாரேனும் துணிந்து பக்த குழாத்தினரைக் கேட்ட பிறகுதான். அவர்களுக்குத் தாங்கள் காணும் காட்சியிலே, விட்டுப்போன பகுதி, முக்கியமான பகுதி ஒன்று இருப்பதே தெரியவரும். அப்படித் தெரிந்து கொண்டவர்களிலே, நூற்றில் ஐம்பதுபேர், தமது தோள்வலிக்காத காரணத்தால் கேட்டு மறப்பர், மனிதத் தன்மைககு மதிப்பளிக்க வேண்டுமென்ற நோக்கம் கொண்ட மாண்பினர் மட்டுமே, ஆம்! எதைஎதையோ கண்டோம் களித்தோம், ஆனால் சூட்சமத்தைத்தான் இதுகாறும் காணாது இருந்துவிட்டோம், இப்போதுதான் அதனையும் கண்டு, புதுத்தெளிவு பெற்றோம் என்று அறிவுரை புகல்வர்.

பிரிட்டிஷ் பார்லிமெண்டரி தூதகோஷ்டியினர், இந்த இரண்டு வகையினரில், எப்பிரிவினரோ நாமறியோம். அவர்கள், காணாத காட்சியோ, போகாத இடமோ, காணோம். பெரிய மனிதர்களிடம் பேசுகிறார்கள். பெரிய நகரங்கள் மட்டுமல்ல, பட்டிக்காடுகளும் செல்கின்றனர். சர்க்கார் மாளிகை மட்டுமல்ல, ஏழையின் குடிசைக்குள்ளேயும் நுழைந்து பார்க்கின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களிடம் மட்டுமல்ல, இலமரத்தடியே நிற்கும் உழவனையும் கண்டு பேசுகின்றனர்! இவ்வளவு காணும் இந்த அன்பர்கள் திருவிழாவிலே, பவானி செய்யும் பரமனையும், அவருக்காக என்று சொல்லிச் செய்யப்பட்டுள்ள படாடோபத்தையும் கண்டு களித்துவிட்டு, அவரைச் சுமக்க “கூலிக்கு ஆள்” இருப்பதையுமே, மேலே அவருடன் சரிசமமாகப் பிறப்புரிமை காரணமாக அமர்ந்திருக்கும் ஆரியனையும் காணாமலிருப்பது போல, “இந்திய உபகண்டத்திலே திருவிழாக் காட்சிகளை மட்டும் கண்டு சூட்சமத்தை மட்டும் காணாத நிலையில், இருப்பவரோ, சூட்சமத்தையும் காண்போரோ நாமறியோம். இதுவரை இங்கு அனுப்பப்பட்ட கோஷ்டிகள் பலவும் திருவிழா காண்கிற திருக்கூட்டமானதேயன்றி, சூட்சமத்தைத் தெரிந்து கொண்டதாக அதாரம் காணோம். இவர்களும் இதுபோன்றேயாகிவிடக் கூடாதென்று லாகூர் தோழர்கள் சிலர், மதத்தின் பாரம் தமிழன் மீது அழுத்துவதும் மதத்தால் மேல்நிலை ஆரியனுக்கே உண்டாவதுமாகிய உண்மையை பக்தனுககு பகுத்தறிவாளன் எடுத்துக்காட்டுவது போல பார்லிமெண்டரி தூது கோஷ்டியினருக்கு அவரே எடுத்துக்கூறியுள்ளனர். அதாவது சூட்சுமத்தைக் காட்டியிருக்கிறார்கள்.
“இந்து சமுதாயத்திலுள்ள ஜாதிமுறைதான். இந்திய அரசியல் அல்லலுக்கு அடிப்படையான காரணம். முஸ்லிம் லீக் பாகிஸ்தான் கேட்பதும், சென்னை பார்ப்பனரல்லாதார் திராவிடஸ்தான் கேட்பதும், தீண்டாதார் தனித்தெகுôகுதி கேட்பதும், உயர்ஜாதி இந்துக்களென்போர், முஸ்லிம்களையும், சூத்திரர்கûளுயம், சமுதாயத் துறையிலே (கொடுமை) பகிஷ்கரித்து வந்ததன் விளைவேயாகும். ஜாதி ஒழிக்கப்பட்டாலொழிய இந்தியாவிலே, எந்த ஏற்பாடும் நிலைக்க முடியாது” என்று லாகூர்ஜட் - பட்டோரக் மண்டல், பார்லிமெண்டரி கோஷ்டியி னருக்கு ஒரு மகஜர் மூலம் தெரிவித்தாக, ஜனவரி 12ந் தேதிய லாகூர்ச் செய்தி கூறுகிறது.

ஜட்-பட்-டோரக் மண்டல், என்றால் ஜாதி ஒழிப்புச் சங்கம் என்று பொருள். இந்தச் சங்கம் சுமார் 15 ஆண்டுகளாகவே ஜாதிச் சனியனாலேயே, இந்தியா சீரழிந்தது என்று கருத்தைக்கூறி வருவருடன், நமது சுயமரியாதைச் சங்கம் போலவே, ஜாதியின் பேராலும் இந்துமதத்தின் பேராலும் நடைபெறும் பல கொடுமைகளைப் பாமர மக்களிடம் விளக்கிவரும் பணிபுரிந்து வந்திருக்கிறது. நாலு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒருமுறை பெரியார், இந்தக் கழகத்தாரால் அழைக்கப்பட்டு லாகூர், கல்கத்தா, முதலிய பல இடங்களுக்குச் சென்று, சுயமரியாதைப் பிரச்சாரம் புரிந்துவந்தார். ஆகவே, ஜட்-பட்-டோரக் மண்டலத்தார், இந்திய நிலைமையின் சூட்சமத்தை நன்கு அறிந்தவர்கள், அறிந்தவர்கள் மட்டுமல்ல, ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த முக்கியமான விஷயத்தை மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதையும், வெறிநாட்டவர் இங்கு வந்தால், மிக எளிதாக ஆர்ப்பாட்டக்காரரின் விழாவிலே, மனத்தைப் பறிகொடுத்துவிட்டுச் சூட்சமத்தைக் கவனிக்காமலேயே போய் விடுகிறார்கள் என்பதையும் நன்கு உணர்ந்தவர்கள், ஆகவேதான், மேற்படி கழகத்தார், சூட்சமத்தை, எடுத்துக் காட்டினார்கள். அவர்கள் கூறிய இந்த அறிவுரை அங்கிலத் தோழர்களின் மனத்திலே பதியுமா? அதற்கு இவன் செய்ய வேண்டும் என்ற நேர்மையும் நெஞ்சு உரமும் ஏற்படுமா? நாம் நம்ப முடியவில்லை! அவர்களின் பேச்சும் போக்கும் நமக்கு அந்த நம்பிக்கையைத் தரவில்லை. அவர்கள், திருவிழா பார்க்கவரும் கூட்டம் போன்று இருக்கின்றனரேயொழிய, உண்மையைத் தெரிந்துகொள்ள உள்ளத்திலே ஆவல் கொண்டவர்களாகத் தெரியக் காணோம் அவர்களின் போக்கு எப்படியோ போகட்டும், நமது லாகூர்த் தோழர்கள், கடமையைத் திறமையாகச் செய்துவிட்டனர். உண்மையைத் தைரியமாக உரைத்தனர். என்பதற்காக நாம் மிக மகிழ்ந்து, மேற்படி மண்டலத்தாரை மனமார வாழ்த்துகிறோம். அவர்கள், பார்லிமெண்டரி தூதுகோஷ்டி யினருக்குத் தந்த மகஜரிலே, பல விஷயங்களைக் குறிப்பிட்டுவிட்டுப் பாகிஸ்தான் தந்துவிட்டால் இந்தக் குறைபாடுகள் ஒழிந்துவிடும் என்று கூறிவிட முடியாது, குறைபாடுகளை ஒழிக்கவழி, ஜாதியை ஒழிப்பதுதான் என்று கூறினாராம். “ஜாதி ஒழிப்பை” மேற்படி கழகம், இலட்சியமாகக் கொண்டது, அது ஓர் அரசியல் கட்சியல்ல. ஆகவேதான், பாகிஸ்தான் விஷயமாகக் கொஞ்சம் தவறான கருத்தை வெளியிட்டிருக்கிறது என்று கருதுகிறோம். ஜட்-பட்-டோரக் மண்டலத்தின் அரசியல் கருத்துப் பற்றிக் கவனிக்க அவசியமில்லை. ஏனெனில், அது அரசயில் ஸ்தாபனமல்ல சமுக விஷயமாக ஜட்-பட்-டோராக் மண்டல் வெளியிட்டுள்ள கருத்தை நாம் முழுமனத்துடன் ஆதரிக்கிறோம். ஜாதிப் பிரச்சனையைப் புரிந்துகொண்டு, அந்தச் சிக்கலை ஆறுக்கத் துணிவு கொள்ளாத வரையிலே, தூதுகோஷ்டிகள் மாறி மாறி வந்தும் பயன் இல்லை என்பதை வலியுறுத்துகிறோம். பார்லிமெண்டரி தூதுகோஷ்டியினர், லாகூர்ச் சுயமரியாதைக்காரர்கள் அளித்த அறிவுரைக் கொத்துமூலம், தெளிவு பெறுவாராக.

(திராவிட நாடு - 20-1-46)