அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அதுதான் நல்லது!
சென்ற ஆண்டில், சென்னை அரசியலார், நடுத்தரப்பள்ளி வகுப்புகளுக்கு, மொழிப்பயிற்சி பற்றி வகுத்த கல்வித்திட்டம், நடைமுறைக்கு ஒத்துவராதது - நலம் பயக்காதது - நாட்டின் தேவையையுணர்ந்து செய்யப்படுவதாகாது என்று கல்வி நிபுணர்கள் அறிவுறுத்தினார்கள். ஆட்சிப் பீடத்தில் ஏறினோம் அப்பொழுது உண்மையை உணர்ந்து கொள்ளவில்லை, தேவையற்ற திட்டத்தைக் தள்ளிடுக என்று நாம் கேட்டுக்கொண்ட வேண்டுகோளைப் புறக்கணித்துப் பயனளிக்கும் புதிய திட்டம் என்று மீறிக் கொண்டுவந்து புகுத்தினர்.

ஓராண்டாயிற்று, கல்வித்திட்டம் கோரிய பலனைக் கொடுக்காதது கண்டு, சிந்தித்து, ஓரளவுக்குத் தெளிவடைந்து, புதியதொரு திட்டத்தைக் கொணர இன்று முனைந்துள்ளனர் சென்னை இளவந்தார்கள். திட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு அமைச்சர் குழாம் முன் வந்தது கண்டு மகிழ்கிறோம். திருத்தியமைக்கப்படப் போகும் மொழிப்பயிற்சி முறை எப்படிப்பட்ட என்பது பொறுத்திருந்தது பார்க்கவேண்டியதொன்றாகும்.

புதிய கல்வித்திட்டத்தை ஏய்ந்து பார்த்து வகுப்புதற்கென்று, சென்னை மந்திரிக்குழு, உட்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அந்த உட்குழுவில் நான்கு மந்திரிகள் இடம் பெறுகின்றன, மொழிவாரிப் பிரதேசத்திற்கு ஒவ்வொருவராக உட்குழு, ஜ÷ன் திங்கள் 3இம் நாளுக்குள், மந்திரிசபையிடம், தாங்கள் தயாரித்த புதிய கல்வித்திட்ட நகலைக் கொடுத்துவிடவேண்டும் என்று ஏற்பாடாகியிருக்கிறது. அந்தக் குழு.

ஜ÷ன் திங்களிலிருந்து, ஆங்கில மொழிப் பயிற்சியை முதல் பாரத்திலிருந்தே தொடங்கிவிடலாம் என்பது பற்றியும்.

இந்தியை எந்த வகுப்பில் போதிக்கத் தொடங்குவது, முதல் பாரத்திலிருந்தே தொடங்குவதா? அல்லது முன் வகுப்புகளிலேயே துவக்குவதா? அல்லது மேல் வகுப்புக்குத் தள்ளிப் போடுவதா? என்பது பற்றியும்.

மற்றும் பல பிரச்னைகளைப் பற்றியும் ஆராய்ந்தறிந்த ஒரு முடிவுக்கு வரும் என்று மந்திரி சபை அறிவித்துள்ளது.

இப்பொழுதுள்ள பாடத்திட்டப்படி, ஆங்கில மொழிப்பயிற்சி இரண்டாம் பாரத்திலிருந்து தொடங்கப்படுகிறது. ஆங்கிலப் பயிற்சியின் நடைமுறை அவசியத்தை உணர்ந்தும், அதன் அறிவு மாணவர்கள் உள்ளத்தில் சற்று இழப்பதிய வேண்டியிருக்கும் அவசியத்தையுணர்ந்தும், அதை முதல் பாரத்திலிருந்தே சொல்லிக் கொடுக்கத் தொடங்கிவிடவேண்டும் என்று இன்று மந்திரிசபை அறிவிக்கிறது. ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருப்போர், வெள்ளையனை விரட்டும் பணியில் உடுபட்டு நாட்டின் நாலாபாகங்களிலும் சுற்றிவந்த பொழுது, தாங்கள் ஆளும் மன்றம் புகுந்தவுடன் ஆங்கிலத்தை அடியோடு ஒழித்துக் கட்டுúவோம், அந்த இடத்தில் இந்தி ஆணங்கை ஏற்றி வைப்போம் என்று கூறிவந்தனர். விரட்டப்பட வேண்டியவன் ஆங்கிலேயனெயொழிய, ஆங்கில மொழியல்ல என்று கூறி, ஆங்கிலத்தின் இவசியத்தை அப்பொழுதுநாம் வலியுறுத்தி வந்தோம். உணர்ச்சியின் வேகம் அவர்களை ஆட்டிப்படைத்து வந்ததால், நாம் கூறிவந்த கருத்தின் உண்மை அப்பொழுது அவர்களுக்கு விளங்கவில்லை. ஆகவே நம் கூற்றுக் கண்டு கொதித்தெழுந்தனர். ஆட்சிப்பீடம் ஏறியபிறகு, தெளிந்த நிலையில் அதன் அவசியம் புலப்படுகிறது. அதில் பயிற்சி பெற வேண்டிய இன்றியமையாமையை உணர்த்துகின்றனர்.

உலகியல் அறிவு பெறவும், அகில உலகத் தொடர்பு கொள்ளவும், விஞ்ஞான அறிவு பெறவும் ஆங்கிலம் நமக்கு அவசியம் வேண்டும். இந்த மூன்றையும் பெற்றுத் தரும் ஆற்றல் தாய்மொழிக்கு இல்லையாதலால், தாய்மொழி அறிவோடு ஆங்கிலத்தின் துணையையும் வேண்டுவது அவசியமாகும் என்றும் வலியுறுத்தினோம். இளவந்தார்களான இன பிறகு, தான், உலகியல் அறிவு - அகில உலகத் தொடர்பு விஞ்ஞான அறிவு ஆகியவற்றிற்கு ஆங்கில அறிவு வேண்டும் என்பதைத் தெரிந்து, அதற்கு உரியதொரு இடங்கொடுக்க வேண்டும் என்பதை அனைத்திந்திய ஆட்சித் தலைவர்கள் அனைவரும், செல்லுமிடத்தில் எல்லாம் கூறியும், ஏட்டில் எழுதியும், திட்டத்தில் தீட்டியும் வருகின்றனர். சென்னை மாகாணம் ஆங்கிலத்திற்கு ஏற்றவொரு இடம் தர எண்ணித் திட்டம் தீட்ட முனைந்திருப்பது வரவேற்கத்தக்கதேயாகும்.

ஆடுத்து, இந்தி மொழிப் பயிற்சியை எவ்வகுப்பிலிருந்து, எப்படித் தொடங்குவது என்பது பற்றியும் பதிதாக அமைக்கப்பட்டுள்ள உட்குழு இராயும் எனத் தெரிகிறது இது பற்றிச் சென்ற ஆண்டில் தீட்டிய திட்டம் தேவையற்ற திட்டம் - நடைமுறைக்குக் கொண்டுவர ஒவ்வாத திட்டம் - எவ்வகையிலும் பயன்படாத் திட்டம் என்று அன்று முதல் நாம் சுட்டிக் காட்டி வருகிறோம்.

சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையில், அதாவது திராவிடத்தைப் பொறுத்தவரையில், அடிப்படை அறிவு - சூழ்நிலைஅறிவு ஆகியவற்றைத் தரத் தாய் மொழிகளாகிய தமிழும், தெலுங்கும், மலையாளமும், கன்னடமும் இருக்கின்றன. ஆனால் ஆவற்றால் இப்பொழுது பெறமுடியாத உலகியல் அறிவு - அகில உலகத் தொடர்பு விஞ்ஞான அறிவு ஆகியவற்றைத் தர ஆங்கிலம் இருக்கிறது, ஆகவே தாய்மொழி ஆங்கிலம் ஆகிய இரண்டையும் வைத்துக் கொண்டு நம் வாழ்வைச் செய்மையுற நடத்துமுடியும் என்பதைப் பல தடவைகளில் எடுத்துக் காட்டி வந்துள்ளோம். நிலைமையை இப்படி அமைத்துக் கொண்டால் வேறு எந்த மொழியையும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது என்றும் விருப்பப்பட்டவர்கள். தத்தம் விருப்பத்திற்கேற்ப, எத்தனை பிறமொழிகளை வேண்டுமானாலும், தங்கள் ஒய்வுக் காலங்களில், தனிப்பட்ட முறையில் கற்றுக் கொள்ளலாம் என்றும் நாம் விளக்கி வந்துள்ளோம். அத்தகைய நிலையை உன்னிப்பார்க்கும்போது தான் எவ்வகையிலும் நமக்குப் பயன்படாத நேரத்தையும், பொருளையும் வீணாகக் கொள்ளை கொள்ளும் இந்தி நம் நாட்டிற்குத் தேவையில்லை என்பதை, ஆயிரமாயிரம் காரணங்களைக் காட்டி, எடுத்தறிவுறுத்தி வந்துள்ளோம்.

தனிப்பட்டவர்கள், தங்கள் விருப்பத்தையொட்டி, தங்கள் நலனைக் கருதி இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆவாவுறுவார்களேயானால், பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு இந்தி மொழியினைப் பயின்று கொள்ளட்டும். அதற்கான வசதிகளை வேண்டுமானால் அரசாங்கம் செய்து தரட்டும், அந்த ஒரு மொழிக்கு மட்டுமல்லாமல் எத்தனை மொழிகளுக்கு வேண்டுமானாலும் அத்தகைய வசதிகளைச் செய்து தரட்டும் என்று கூறுகிறோம். ஆனால் இந்தியை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ இளம் மாணவர்கிளன் உள்ளத்தில் கட்டாயமாக ஏற்ற நினைப்பது, தவறான செயலாகும் என்ற அரசாங்கத்தின் போக்கைக் சென்ற ஆண்டு முதல், ஏன். 1937இல் இருந்தே கூறிவருகிறோம்.

தாய் மொழியோடும், ஆங்கிலத்தோடு இந்தியையும் நுழைக்க வேண்டாம் - விருப்பப் பாடம் என்று சொல்லி மறைமுகமாகப் புகுத்தும் கட்டாயப் பாடம் வேண்டாம் என்று சொன்னோம். மூன்று மொழிகளைக் கட்டாயமாக இளைங்ர்களின் தலையில் சுமத்துவது கொடிது, கொடிது என்று காரணங்கள் பல கூறினோம். இந்தி இல்லாமலே நம் வாழ்வு செம்மைப்பட முடியும் என்பதைத் தெளிவுபடுத்திக் காட்டினோம். இவ்வளவு காரணங்களையும் புறக்கணித்து, கேளாச் செவியனராயிருந்து, முதல் பாரத்திலே இந்தியைப் புகுத்தினர் இளவந்தார்கள், அந்தத் திட்டம் ஆட்டங் கொடுத்துவிட்டததை, இந்த ஓராண்டுக்காலம் அவர்களுக்கு நன்கு அறிவுறுத்தி விட்டது. ஆகவேதான் திட்டத்தை மாற்ற முனைந்துள்ளனர் மந்திரி சபையினர், மகிழ்கிறோம்.

இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தியிருக்கிறது அரசாங்கம் ஏ;னறு நாம் சொல்லியபொழுது, இந்தி இஷ்ட பாடமாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறதே யொழிய, அதில் கட்டாயம் எதுவும் இல்லை என்றனர் அமைச்சர்கள், இல்லை என்று அழுத்தந் திருத்தமாகப் பேசினார் ஆவினாசியார், இ;லை என்றே எழுதின ஏடுகளெல்லாம், தாய் மொழி - ஆங்கிலம் - இந்தி இந்த மூன்று மொழிப்பயிற்சியே இதுவரையில் சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தது என்பதும், இனி எப்படி இருக்கவேண்டும் என்று இந்த மூன்று மொழிகள் பற்றியே இப்பொது பேசப்பட்டு வருகின்றது என்பதும் இளவந்தார்களின் எண்ணமும், அவர்கள் வழிசெல்வோரின் எண்ணமும் எந்த மொழிகளல் உள்ளபடியே தோய்ந்து கிடந்தன என்பது விளங்கும் விருப்ப மொழிகள் என்று பெயரளவில் கொடுக்கப்பட்டிருந்த பட்டியிலிலிருந்து, இந்த மொழி ஒன்றையே எடுத்துப் பேசி, மற்றவைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், சிறு குறிப்புக் கூட இல்லாமல் அவைகளைப் புறக்கணித்துப் பேசியிப்பதிலிருந்தே, இதுவரையில் இந்திக்கு உண்மையாகக் கொடுக்கப்பட்டு வந்த இடம் இன்தென்பது விளங்கும் நாடடு மக்களின் கண்ணைத் துடைக்கவே உருது, பாரசீகம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பிற இந்திய மொழிபோன்ற விருப்ப மொழிகளின் பட்டியலை வழங்கியிருந்தார்கள் என்பதும், உண்மையாக இந்தியைத் தான் மறைமுகமாகக் கட்டாயப்படுத்தினார்கள் என்பதும் இப்போது விளங்கிவிட்டது.

இந்தியைச் சிறுவர்கள் தலைமீது கட்டாயப்படுத்துவது கொடுமை என்று, நாட்டு மக்களுக்கு நல்லமுறையில் எடுத்துக் கூறியபோது, நம்மை ஐசி, இடித்துக் கூறி, வசைமாறி பொழிந்து, இந்தியை முதல் பாரத்திலிருந்தே வைக்கவேண்டும் என்று வற்புறுத்தி வந்த காங்கிரசைச் சார்ந்த ஏடுகள் இப்பொழுது கூறுவதைக் கண்டு மகிழ்கிறோம். மே 11இம் நாள் தலையங்கத்தில் தினசரி தீட்டுவதைக் காணுங்கள்.

“முதல் பாரத்திலிருந்தே ஆங்கிலத்தைப் போதிப்பது என்று இப்பொழுது சர்க்கார் முடிவு செய்து விட்டதால், முதல் பாரம் படிக்கும் சிறுவர்கள் இரண்டு மொழிகளைப் படிக்க வேண்டியதாகிறது. ஆகையால் அதே சமயத்தில் இந்தியையும் முதல் பாரத்தில் படிப்பதென்றால், அது சிறுவர்கக்கு ரொம்ப கஷ்டமானது. அவ்வளவு ஆதிபால்யத்தில் இத்தனை பாஷைகளைப் படிக்கும் சிரமத்தை சிறுவர்களுக்கு உண்டாக்குவது விவேகமே யல்ல.”
என்பதேயாகும்.

அதாவது இந்தியை முதல் பாரத்தில் மூன்றாவது மொழியாக்குவது, சிறுவர்களுக்கு ரொம்ப கஷ்டம் - ஆதி பால்யத்தில் பல பாஷைகளைப் படிப்பது சிரமம் - சிறுவர்களுக்கு ஆச்சிரமத்தை உண்டாக்குவது விவேகம் அல்ல என்பது தினசரியின் கருத்த இதையே நாம் முன்பு கூறினபோது ஒப்புக் கொள்ளவில்லை. இப்பொழுது சிறிதளவாவது சிந்திக்கிறது கண்டு களிக்கிறோம்.

தினசரி இந்திமொழி இனி எப்படிப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது பற்றிக் கூறும்போது.

“4வது பாரத்திலிருந்து ஹிந்திப் படிப்பை ஆரம்பிப்பது தான் சரி. அப்படிச் செய்தால்தான், சிறுவர்கள் கஷ்டமின்றி இந்த மூன்று பாஷைகளையும் படிப்பது சுலபமாகும்.. 4வது பாரத்திலிருந்து ஹிந்தி போதனையை ஆரம்பிப்பது என்ற முடிவுக்கே சர்க்கார் வரும் என்று நம்புகிறோம்”

என்று கூறுகிறது. அப்படி இந்தி நான்காவது பாரத்தில் துவக்கப்பட வேண்டியது அவசியமாகும் எனப்தை மேலிடத்தாரின் நெருக்கடியை நோக்கி மந்திரி சபை ஏற்றுக்கொள்ள நேர்ந்தா;, அதை விருப்பப்பாடமாக வைத்தால் தான் நாட்டுப் பெருங்குடி மக்கள் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் எனலாம். அன்றி, மீறி அங்கும் கட்டாயப்படுத்தி முயலுமேயானால் வருவதை அமைச்சர் குழு சமாதான முறையில் ஆல்லாமல் வேறு வகையில் சமாளித்துதான் தீரவேண்டியிருக்கும்!
மே திங்கள் 11 இம் நாள் தினமணி எழுதியுள்ள துணைத்தலையங்கத்தில் இந்தி மொழிப் பயிற்சி பற்றிஒரு படி மேலேறியே நம் வழியின் ஆரகில் வந்து நிற்கிறார் அதன் ஆசிரியர். முதல் பாரத்தில் இந்தி மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்தி எழுத்துக் களையும், ஒலிக்குறிப்புகளை மட்டும் கற்பித்தால் போதுமாமானது, பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு முதிர்ந்த வயதிலும் இந்தியைக் கற்றுக் கொள்ள இயலும் என்று கூறுகிறது “தினமணி” அது கூறுவதைக் கேளுங்கள்.

“ஆங்கில எழுத்தும் இந்தி எழுத்தும் தெரிந்திருந்தால் நலமாக இருக்கும். பாஷை தெரியாவிட்டால் பரவாயில்லை. பிற்காலத்தில் அவன் ஏதேனும், பாஷையைக் கற்றுக் கொள்ளவேண்டுமென்று ஆசைப்பட்டால், அதற்கு உதவியாக இருக்கும் பொருட்டு, எழுத்து வரிசையையும், ஒலியையும் மட்டும் இளம் வயதிலேயே சொல்லிக் கொடுத்துவிடுவது நலம். வயது முதிர்ந்த பிறகு புதிதாக ஒரு மொழியைப் பயில்வது அவ்வளவு கஷ்டமல்ல.”
வயது முதிர்ந்த பிறகு புதிதாக ஒரு மொழியைத் தேவையைக் கருதி பயில்வது கஷ்டமல்ல என்ற கருத்தில்தான், இந்திமொழியைப் பள்ளியில் புகுத்தவேண்டாம், வெளியிலேயே வேண்டுவார்க்கு உதவும் வகையில் அரசாங்கம் வைக்கட்டும் என்று கூறினோம்.

எழுத்து வரிசையையும், எழுத்தையும் மட்டும் கற்றுக் கொடுக்கிற முறையானாலும், தேவையற்ற இந்தியைப் பொறுத்தவரையில், அதையும் விருப்பப் பாடமாகத்தான் வைக்கவேண்டும் என்று கூறுகிறோம். தேவையற்ற மொழிக்குக் கட்டாயம் வேண்டாம்.

எனவே தாய்மொழியறிவும், உலகப் பொதுமொழியான ஆங்கில அறிவும் மக்கள் முழுதுணரவேண்டி, அரசியலார், உழைப்பையும் பொருளையும் நல்குவார்களேயானால் அதுவே நாட்டிற்கும், மக்களுக்குஞ் செய்யும் பெருந்ததொண்டாகும்.

இன்ன பல காரணங்களைக் காட்டித்தான், இந்தி எவ்வகையிலும் இந்நாட்டிற்குத் தேவையில்லை என்பதையுணர்த்தி, அரசியலார் இந்தித் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று கூறினோம். பொதுக் கூட்டங்களின் மூலமாகவும், ஏடுகளின் வாயிலாகவும் எடுத்துக் காண்பித்தோம். பிரச்னை நல்ல முறையில் தீரவேண்டும் என்று கருதி. இதில் கட்சி மாச்சரியங்களால் மோதுதல் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதி, திராவிடர் கழகத்தின் சார்பிலே அமைதியான எதிர்ப்பு முன்னணியை நிறுவுதல் வேண்டாம் எனக் கருதி, முதலில் சகல கட்சிக்காரர்களின் ஆதரவில் மாநாடு கூட்டி அரசியலார்க்குக் கருத்தை விளக்கினோம். அந்த மாநாட்டிற்குத் தலைமை வசித்தவர் ஆசிரியர் மறைமலை அடிகள் திறப்பு விழாச் சொற்பொழிவாற்றியவர் திரு. வி. கலியாண சுந்தரனார். வரவேற்புரை வழங்கியவர் தேழார் நாரண துரைக்கண்ணன், பெரியார், ம.பொ.சி. மற்றும் பலகட்சிப் பற்றில்லாத அறிஞர்களம் மாநாட்டில் கலந்து கொண்டனர். இது மட்டுமன்றி மாகாண மாணவர்கள் மாநாடு மூலமாகவும், மாகாணப்புலவர்கள் மாநாடு மூலமாகவும், இந்தித் திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. பிறகு திராவிடர் கழகம் பலாத்காரமற்ற அமைதியான அறப்போராட்ட முறையை வகுத்தத் தன்நல்லெண்ண நோக்கத்தை ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்து வந்தது.

இவ்வளவும் நடைபெறுவதற்கு, திராவிடர் கழகம் தன்னாலான ஒத்துழைப்பை நல்குவதற்கு அடிப்படைக் காரணம், பிரச்னை மோதுதல் எதுமின்றி சமூகமாகத் தீர்க்கப்படவேண்டும் என்பதேயாகும். இதை அறிந்து கொள்ளமாடடாத மந்திரிமார்களும், அவரைப் பின்பற்றும் மற்றையோரும் திராவிடர் கழகத்தினரை, உண்மைக் காரணம் எதுங் காட்ட முடியாமல், பதவியைப் பிடிக்க ஆசைப்படுகிறார்களென்றும், காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிடத் திட்டம் போடுகிறார்களென்றும், காங்கிரஸ் செய்யும் எதையும் எதிர்ப்பதே இவர்கள் வேலைஎன்றும் வீண்பழி சுமத்தித் தூற்றி வந்தனர். கேலி செய்து வந்தனர், குற்றங் கூறித் துவேஷித்து வந்தனர். இப்பொழுது, தலைமை ஆசிரியர்கள் மாநாட்டில் தீர்மானித்த தீர்மானப்படி கல்வித் திட்டத்தை மாற்றியமைக்க மந்திரி சபையினர் முன்வந்திருக்கின்றனர். அந்தப் போக்குக் கண்டு நாம் மகிழ்கிறோம். நல்ல மக்களின் நல்ல யோசனையை அடிக்கடி கேட்டு அதன்படி அரசாங்கம் நடக்கவேண்டும் என்பது தான் நமது ஆவா அதுதான் நல்லது.

(திராவிடநாடு - 15.5.49)