அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆகஸ்டு பதினைந்து!

ஆகஸ்டு பதினைந்தாம் தேதி, இந்திய சுதந்திர தினம். புதிய இந்திய சர்க்காரின் அமைப்பு நாள்.

ஆகஸ்டு 15ந் தேதி, பாகிஸ்தான் வெற்றி நாள். புதிய பாகிஸ்தான் சர்க்கார் அமைப்பு நாள்.

ஆகஸ்டு 15ந் தேதி, பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒழியும் நாள்.

உலகிலே, பேசப்படும் நாள்.

வரலாற்றிலே எந்நாள் இடம் பெறுகிறது.

அந்த நாளைத் திருநாளாகக் கொண்டாடுவதென, இந்திய சர்க்காரும், பாகிஸ்தான் சர்க்காரும், தீர்மானித்துள்ளனர்.

அந்நாளிலே, எந்தத் துணைக் கண்டத்திலே 200 ஆண்டுகட்கு மேலாகப் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்யக் கொடி, பாகிஸ்தான், இந்தியா, ஆகிய இரு அரச வட்டாரங்களிலிருந்தும், கீழே இறங்குவதுடன், இரு இடங்களிலும் சுதந்திரக் கொடிகள் பறக்கவிடப்படுகின்றன.
இந்திய பூபாகத்திலே, பிரிட்டிஷ் ஆட்சி கூடாது, சுயாட்சியும் சுயநிர்ணயமும் வேண்டும் என்பதற்காக, முறையே காங்கிரசும், முஸ்லீம் லீகும், பணிபுரிந்து வந்தன - ஆகஸ்டு 15-ந் தேதி பிரிட்டிஷ் ஆட்சி நீங்குவதால், அந்நாள் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது, இரு கட்சிகளால் மட்டுமல்ல - இரு சர்க்காராலும்.

இரு கட்சிகளுக்கும், வெற்றியிலே சிறிதளவு களங்கமும், அதன் பயனாக மனவேதனையும் இருக்கிறது.

காங்கிரஸ் கோரிவந்த, பிடிவாதமாக ஆதரித்துவந்த ஏக இந்தியக் கொள்கை வெற்றி பெறவில்லை. முஸ்லீம்கள் பெருவாரியாக உள்ள பகுதிகளை, முஸ்லீம் ஆட்சியிலே ஓப்புவிக்க, காங்கிரஸ் இணங்கிவிட்டது. அதன் பயனாக, காங்கிரஸ் கொண்டிருந்த இலட்சியம் முழுவதும் வெற்றி பெறவில்லை. களங்கம் இருக்கிறது.

அதுபோலவே, முஸ்லீம் லீக், பிரிவுபடாத பாஞ்சாலம், துண்டாடப்படாத வங்காளம் இரண்டடையும், தான் விரும்பிற்று - கேட்டு வந்தது - பாகிஸ்தானில், முழுப் பாஞ்சாலம் முழு வங்காளமும் இருக்க வேண்டுமென்று தான் தீர்மானித்தது, கேட்டு, கிளர்ச்சி ùச்யது வந்தது. கோரியது, முழுவதும், லீகுக்குக் கிடைக்கவில்லை. பாஞ்சாலமும், வங்கமும், சிதைக்கப்பட்டு, பாகிஸ்தானில், ஒரு பகுதி மட்டுமே இணைக்கக்பட்டது. எனவே, லீக்பெற்ற வெற்றியிலும் களங்கம் இருக்கிறது.

எனினும், இரு கட்சிகளும், வெற்றி விழாவாக ஆகஸ்ட் 15ந் தேதியை வெற்றி நாளாக, புதிய சர்க்கார் அமைப்புத் தினமாகக் கொண்டாடுகின்றன.

யாரார் கோரியது எந்தெந்த அளவு கிடைத்தது என்பது ஒருபுறமிருக்க, மொத்தத்திலே, பிரிட்டிஷ் ஆட்சி வாபசாகிறது என்ற அளவில், விடுதலை விழாவாக ஆகஸ்ட்டு 15 கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்டு 15ந் தேதி, பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவு நாள் புதிய சர்க்காரின் தொடக்க நாள்.

புதிய சர்க்கார், தத்தமது ஆட்சி வட்டாரங்களிலே, நல்லாட்சி நடத்தியாக வேண்டுமென்று வலியுத்த அதற்காகக் கிளர்ச்சி செய்ய, போராட யாருக்கும் உரிமை உண்டு.

பிரிட்டிஷ் ஆட்சி, அன்றைய தினம், நீங்குகிறது, என்பது மக்களுககுள்ள எந்த உரிமையை ஆதிகப்படுத்துகிறது.

அன்னிய ஆட்சி ஒழிந்து, புதுச்சுதந்திர ஆட்சிகள் ஆரம்பமாகும் இதே ôள், அன்னிய ஆட்சியின் விளைவுகளாக இருந்துவரும் தொல்லைகளையும், அல்லல்களையும், நீக்கி, மக்களுக்கு நலன் ஏற்படும்படியான ஆட்சி நடத்தும்படி, கேட்கும் உரிமையும், பலமும், வசதியும், மக்களுக்குத் தானாகவே பிறக்கிறது.

அன்னிய ஆட்சியுடன் போரிட்டு விடுதலை பெறுவதற்காக முயற்சி எடுத்துக் கொள்ளபடுவதால் வேறுபல, முக்கியமான, சமூக, பொருளாதார, அறிவுத் துறைகளிலே, மக்களுக்கு ஏற்ற காரியங்களைச் செய்வதற்கு, நேரமில்லை, நினைப்பில்லை, வசதியில்லை, வழி இல்லை என்று கூறி, பிரச்சனைகளுக்கெல்லாம், வாய்தா போட்டு வந்த காலம் ஆகஸ்டு 15ந் தேதியோடு முடிவடைகிறது. அன்று முதல், இங்கு மக்களின் நலன், நாட்டுப் பாதுகாப்பு ஆகியவைகட்குப் பொறுப்பு, இங்குள்ளவர்களிடம் வந்து சேருகிறது. இகவே, இங்குள்ளவர்களிடம் இம்முறையில் நடந்து நல்லாட்சி நிறுவச் செய்யவும், அதற்கு அவர்கள் செவி சாய்க்காமலோ, தகுதியற்றுமோ இருப்பார்களானால், குடியரசு முறைப்படி, அவர்களை ஆளும் இடத்திலிருந்து விரட்டவும், மக்களுக்கு உரிமையும், வழியும் பிறக்கிறது.

திராவிடர் கழகத்தாராகிய நாம், அன்னிய ஆட்சியாகிய ஆங்கில ஆட்சி கூடாதென்பதை வலியுறுத்தி வருகிறோம்.

இந்தி எதிர்ப்புக் கிளர்சசி கடுமையாக நடைபெற்ற நேரத்திலே, சென்னையில், நடைபெற்ற மாகாண (ஜஸ்டிஸ்) மாநாட்டில், பூரண சுயேச்சைத் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

பல வருஷ காலமாகவே, அன்னிய ஆட்சி நீங்கத்தான் வேண்டும், அதான் எமது விருப்பம், ஆனால், ஆங்கில ஆட்சியை ஒழித்துவிட்டு அந்த இடத்திலே ஆரிய ஆட்சியை ஏற்படுத்தவே காங்கிரஸ் முயலுகிறது. அதற்காகவே நாங்கள் காங்கிரசை எதிர்க்கிறோம் - காங்கிரஸ் கையாளும் முறைகள் சரியானவை அல்ல, என்று படுவதால், நாங்கள் அம்முறைகளை ஆதரிக்கவில்லை. நாங்கள் காங்கிரசை எதிர்க்கிறதாலேயே சுயராஜ்யத்துக்கு விரோதிகளல்ல, அன்னிய ஆட்சியை விரும்புபவர்கள் அல்ல, என்பதை ஆயிரமாயிரம் மேடைகளிலே பேசி இருக்கிறோம்.

“வெள்ளைக்காரனை நீ நாளைக்குப் போ என்று சொன்னால், நாங்கள் இன்றே போ என்று கூறுகிறோம்” - என்று பேசி இருக்கிறோம்.

வெள்ளைக்காரனே, ஆரியத்துக்கு ஆபயம் ஆளித்தான் என்று விளக்கி இருக்கிறோம்.

வெள்ளைக்காரனைக் கண்டிக்கவும், வெறுக்கவும், விரட்டவும், ஆரியர்களுக்கோ, காங்கிரஸ்காரர்களுக்கோ இருக்கும் உரிமையை விட, ஏங்களுக்கே ஆதிக உரிமை இருக்கிறது என்று கூறி வந்திருக்கிறோம்.

கடந்த ஜெர்மன் போர் மூண்டபோது, யுத்தத்திற்கான உதவிகளை நாம் செய்தபோதும், எந்தச் சண்டைக்குப் பிறகு, நிச்சயமாக வெள்ளைக்கார ஆட்சி நீங்கி, சுயாட்சி கிடைக்கும் என்று மக்களுக்கு உறுதி கூறி வந்தோம்.

உலகச் சூழ்நிலை மாறுதலை எடுத்துக்காட்டி, இனி, பிரிட்டிஸ் ஏகாதிபத்யத்துக்கு இங்கு இளவேண்டிய அவசியமோ, அதனால் இலாபமோ இல்லை இகையால், அந்த ஆட்சி விலகிவிடும் என்றும், மக்களுக்கு விளக்கி வந்திருக்கிறோம்.

வெள்ளைக்கார ஆட்சி, எந்நாட்டிலே மனுதர்மத்தின்படி நடக்கும் ஆட்சியாகவே இருந்து வந்திருக்கிறதென்றும், நியாயமான நமது குறைகளைக் கேட்டுக் களையவோ நீதி வழங்கவோ முன்வந்ததிலலை என்றும், எந்நாட்டிலே, ஆரியர்களுக்கே சகல வசதிகளும் கிடைக்கும்படியும், தனக்குப் பிறகு காங்கிரசே, வார்சு இகும்படியும் செய்து வந்திருக்கிறது என்றும் எடுத்துக்காட்டி, வெள்ளை ஆட்சியைக் கண்டித்திருக்கிறோம்.

இக, பிரிட்டிஷ் ஏகாதிபத்ய ஆட்சி ஒழிய வேண்டும், ஒழிக்கப் பாடுபடுவோம், பிரிட்டிஷ் ஆட்சி நமக்குக் கேடு பல செய்திருக்கிறது. எனவே நம்முடைய வெறுப்புக்கும் கண்டத்துக்கும் ஆளாக வேண்டியதேயாகும், என்பதைப் பன்முறை எடுத்துச் சொல்லி, நம்மை மற்றக் கட்சியினர் ஏகாதிபத்ய தாசர்கள் என்று கூறியது, வீண் பழி என்பதை எடுத்துக்காட்டி வந்ததுடன், போருக்குப் பிறகு, வந்த ஆட்சி தானாகவே விலகும் என்று முன் கூட்டியே கூறிய நாம், அந்த ஆட்சி விலகும் நாளாகிய ஆகஸ்ட் 15ந் தேதியை, மகிழ்ச்சி தரக்கூடிய நாளாகவே, கருத வேண்டும். அதுவே இதுவரை நாம் கொண்ட போக்குக்கும் நமது கொள்கைக்கும் ஏற்றது.

ஒழிந்த ஆட்சி, உண்மையில் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதையோ அந்த ஆட்சி இருந்த இடத்தில் வடநாட்டு இட்ச அமருகிறது என்பதையோ, நாம் கூறாமலிருக்க வேண்டியதில்லை. ஆனால் அதற்காக, வெள்ளைக்கார ஆட்சி நீங்கியதனால், ஏற்படும், மகிழ்ச்சியிலும், பெருமையிலும், நமக்கு உரிய பங்கை நாம் இழக்க வேண்டும் என்பதில்லை. ஆகஸ்ட் 15ந் தேதி, அன்னிய ஆட்சி ஒழிந்த நாள், நம்மை நலிய வைத்த வெள்ளையர் ஆட்சி நீங்கிய நாள், ஏகாதிபத்யப் பிடி ஒழிந்த நாள் (மிச்சமிருப்பது பனியா ஏகாதிபத்யம்) என்பதிலே, நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளக் காரணமும் அவசியமும் இருக்கிறது.

எந்த ஆட்சியை எதிர்த்து நமது கழகம் பேசியிருக்கிறது என்பது மட்டுமல்ல, இன்று நமது கழகத்துக்குத் தலைவராக உள்ள பெரியார், காங்கிரசில் தலைமை வசிகத்து, எந்த ஆட்சியை எதிர்த்து, கஷ்ட நஷ்டமடைந்திருக்கிறார். இகவே, விடுதலை விழாக் கொண்டாடப் பாத்யதை கொண்டவர்களிலே, அவர் மிக முக்யமானவர் - ஆவருடைய கட்சியினராகிய நமக்கு, உரிமை இருக்கிறது.

அந்த நாள், ஆரம்பமாகிற ஆட்சி, வடநாட்டவரிடம் சிச்கியிருக்கும் உண்மையை, நாம் உணரும் அளவுக்கு, மக்கள் உணர்ரவில்லை. அந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம், விடுதலைப்போர் நடத்திய யந்திரத்தின் அருகே, வடநாட்டார் இருந்ததுதான். ஆனால், வடநாட்டவரிடம் ஆட்சி இருக்கும் நிலைமை, நமக்கு திகைப்பையோ, நம்பிக்கையற்ற நிலைமையையோ உண்டாக்க வேண்டியதில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்ய ஆட்சியை ஒழிக்க முடிந்தது போலவே, தென்னாட்டைச் சுரண்டும் வேலையையே, வடநாட்டவர், ஆட்சிப்பீடத்தைப் பிடித்துக் கொண்டு செய்கின்றனர் என்பதை மக்கள் போதுமான அளவிலும், தக்கமுறையிலும் உணரும்படி செய்தால், பிரிட்டிஷ் ஏகாதிபத்ய ஆட்சியைப் போலவே, சுரண்டும் எந்த ஆட்சியையும் நம்மால் ஒழிக்க முடியம்.

எந்த உறுதியை, பிரிட்டிஷ் ஏகாதிபத்ய ஆட்சி ஒழியும் ஆகஸ்டு 15ந் தேதி நாம் பெற முடியும்.

காங்கிரசார், அந்த நாளை விழாவாகக் கருதி, வெற்றி பெற்ற களிப்புப் பெறுவதுடன் நிற்பர் - நாமோ, அந்நாள், வெள்ளை ஏகாதிபத்யம் சென்ற வழியேதான், சுரண்டும் எந்த ஆட்சியும் சென்று தீரும் என்ற உண்மையை உணர்ரச் செய்து, உறுதி பிறக்கச் செய்யும் நாளாகக் கொள்வோம்.

ஆகஸ்டு 15ந் தேதி, ஆறுபது வருஷப் பயிரின் ஆறுவடை என்றும், பட்ட கஷ்டங்கள், சிந்திய இரத்தம், வியர்வை ஆகியவற்றின் வெற்றி என்றும் காங்கிரசார் கூறவும், பெருமைப்படவும், பூரிப்படையவும், உரிமை இருக்கிறது. உவகையின் காரணமாக அவர்கள் முழு உண்மையைத் தெரிந்து கொள்ளாதிருக்கும்போது, 60 ஆண்டுகளாகப் பாடுபட்டு அவர்கள் அடைந்த பலனை ஜனாப் ஜின்னா இறு ஆண்டுகளிலே அடைந்ததை எடுத்துக்காட்டி, ஒரு இனமக்கள், தங்கள் உரிமையைப் பெற உறுதி கொண்டுவிட்டால், வெற்றியைத் தடுக்க யாராலும் முடியாது என்ற உண்மையை எடுத்துக்காட்டி, இன்று வெற்றி பெறாதிருக்கும் திராவிடத் தனி அரசுக் கோரிக்கையும், ஆறுபது ஆண்டுப் பயிராகாது, இறு ஆண்டுப் பயிராகவே கூட இகச் செய்ய முடியும் என்ற நல்ல நம்பிக்கையைக் கொள்ளும் நாளாக, இதே ஆகஸ்டு பதினைந்தாம் நாளை நாம் செய்து கொள்ள முடியும்.

நாட்டு மக்கள், ஆனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுவதும், மக்களின் பிறப்புரிமையுமாகிய, சுயராஜ்யத்துக்காக, தாங்கள் சரி என்று கொண்ட திட்டங்களின்படி நடந்து அதனால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை, சிறைவாசத்தை, தீவாந்திர சிட்சையை, தூக்குமேடையைக் கூட மனமுவந்து ஏற்றுக் கொண்ட தியாகிகளுக்கு, வீரத்தை, தியாகத்தை, கொண்ட கொள்கைக்காக நஷ்டம் ஏற்கவேண்டும் என்ற கோட்பாட்டை, மதிக்கும் திராவிடர் கழகத்தாராகிய நாம், வீர வணக்கம் செலுத்துவேண்டும்.

சுயராஜ்யப் போராட்டம் என்ற உடனே, சூதுமதியினரான சிலர் அந்தச் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு சுயநல வேட்டையாடியதும், முரண்பட்ட கொள்கைகள், திடீர் மாறுதல்கள், பண மூட்டைகள், சுரண்டுபவர், ஆகியோர் மட்டுமேதான் நமது கண்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. நாட்டு விடுதலைக்காக, சிறையிலே வாடியவர்கள், தீவுகளுக்குத் துரத்தப்பட்டவர்கள், குடும்ப சுகத்தை இழந்தவர்கள், தடியடியால் இறந்த குமரன், தூக்கு மேடை ஏறிய பகத்சிங், சொத்தைப் பறிகொடுத்த சிதம்பரம் பிள்ளை, ஆகிய வீரத்தியாகிகள் தோன்றுவர் - தோன்றுவதால் - அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டுவதே முறை. ஆகஸ்டு 15ந் தேதி, ஆப்படிப்பட்ட எண்ணற்ற வீரர்களின் கனவுகள் நனவான் நாள். அவர்களில் அனேகர், திராவிடத் தனி அரசு என்ற தத்துவம் அறியாதவர்கள். அவர்கள மட்டுமல்ல, நாமே கூடச் சில பல ஆண்டுகளுக்கு முன்புவரை, திராவிட நாடு தனி நாடு என்ற தத்துவத்தைக் கொண்டில்லை. இன்று நமக்கு உயிர்க கொள்கை அது. அந்த வீரர்களின் நாட்களிலே, இன்றுள்ள சூழ்நிலை இருந்ததில்லை - எனவே அவர்கள் - தமது நாட்களில், அடிமைப்பட்டுக் கிடக்கும் நாட்டிலே உணர்சசியுள்ள யாருக்கும் ஏழவேண்டிய தேசபக்தி உணர்ச்சி கொண்டு, பணியாற்றி, பாடுபட்டு, கஷ்ட நஷ்டம் ஏற்றார்கள் என்றால், அவர்கள் இப்போது நாம் கேட்கும் திராவிட நாடு கொள்கைக்காக, அந்தக் கொள்கை பிறக்காதபோது அதற்குப் பாடுபடவில்லை என்ற காரணம் காட்டி அவர்களை, மதிக்க மறுப்பது தமிழ் மரபுக்கே கேடு இகும். அவர்கள் சிந்திய இரத்தமும், கண்ணீரும், நமது வீர வணக்கத்துக்கு உரியன. அவர்கள் நமக்கு வழிகாட்டிகள். அவர்கள், இரத்தமும் கண்ணீரும் சிந்தினர் நாட்டு விடுதலைக்கு, அவர்களை ஆகஸ்டு 15ந் தேதி நாம் வணங்குவதுடன் நாம் கோரும் இலட்சியமாகிய திராவிட நாடு திராவிடருக்கு என்பதற்காக, அவர்களைப்போல, நாம், வீரத்தியாகத்துக்குத் தயாராக வேண்டும், என்ற உறுதியைப் பெற வேண்டும். அந்த உறுதிபெற, வீரர்களை வணங்குவது முறை, சரி, அவசியம், நீங்காக் கடமையாகும்.

எனவே, ஆகஸ்டு 15ந் தேதியின் முக்யத்துவத்தை உணர்ரவும், அந்நாள், நமது கழகம் என்னவிதமான போக்கு கொள்ளவேண்டும் என்பதைக் கவனிக்கவும், அதற்குப் பிறகு, நமது வேலை முறை ஏப்படி இருக்கவேண்டும் என்பதற்காகவும், நமது கழகத்தின் நிர்வாகக் கமிட்டியோ, முக்யஸ்தர்களோ, கூடி யோசித்திருக்க வேண்டும்.

உலக முழுவதும் கூர்ந்து கவனிக்கும், ஒரு மகத்தான சம்பவத்தை, நமது கொள்கையை மட்டுமே அளவு கோலாகக் கொண்டு ஆளந்து பார்ப்பதோ, உதாசீனம் செய்வதோ சரியாகாது.

அம்முறையில் ஏதும் செய்யப்படவில்லை.

ஆனால் தலைவர், தமது அறிக்கை மூலம், நாட்டுக்கு ஏற்பட்டுள்ள புதிய நிலைமையை விளக்க, 9ந் தேதியிலிருந்து 12ந் தேதி வரையில், பிரசாரம் செய்ய வேண்டுமென்று கூறினார்.

நமது கழகத் திட்டத்தை விளக்கியும், பிரிவினையின் அவசியத்தை வலியுறுத்தியும், அந்த இன்றியமையாத திட்டத்தைக் கவனியாமலே, எதிர்கால அரசு ஆமைக்கப்படுகிறது என்பதை விளக்கியும், நாடெங்கும், ஜ÷லை முதல் தேதிதான் கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம்.

ஆங்ஙனமிருக்க, சுதந்திர தினம் கொண்டாடப்படுகிற நேரமாகப் பார்த்து, மீண்டும், அது விஷயத்தை விளக்கப் பிரச்சாரக் கூட்டங்களின் பலனாக, ஆகஸ்டு 15ந் தேதிய கூட்டம் நடத்தத் திட்டமிடும் காங்கிரஸ் திராவிடர்களின், மனதுக்கு, ஆனாவசியமான ஏரிச்சலை உண்டாக்கி, அவர்களின் விரோதத்தைக் காரணமின்றிச் சம்பாதித்துக் கொள்தன்றி, வேறென்ன உருவான விளைவு காண முடியும்? காங்கிரஸ் திராவிடரகள் ஆனைவரும், எந்த நாளைத் தாங்கள் பட்டபாடுகளுக்கெல்லாம் பலன் கிடைத்த நாள் என்று கருதிக் கொண்டாடுகிறார்களோ, ஆதே சமயமாகப் பார்த்து, அவர்களின் மனதைப் புண்ணாக்கி விட்டு, பிறகு, காங்கிரஸ் திராவிடர்களை நாம் வருந்தி வருந்தி ஆழைத்தால்தான் அவர்கள் வரச்சம்மதிப்பாரா? நிரந்தரமான விரோத மனப்பான்மையை வளர்க்கும் காரியமாக அல்லவா இது இருக்கிறது? பதினைந்தாம் தேதிக்குப் பிறகோ அல்லது, ஏப்போதும் போல, நாம் நடத்தும் இயக்கப் பிரச்சாரத்தின் மூலமாகவோ, நாம், நமது கொள்கையையும் திட்டத்தையும் வலியுறுத்த முடியாதா - கூடாதா - நாள் இல்லையா? ஏன், அவர்கள் மகிழும் நேரமாகப் பாரத்து, நாம், எந்தக் காரிய்ததை நடத்த வேண்டும்? அவர்களை நமது இயக்கக் கருத்துக்களை உணர்ரச் செய்யவும், ஆவைகளை ஆதரிக்கும்படி ஆழைக்கவும், இதுமுறை அல்ல; நிச்சயமாக இதுவல்ல முறை.

கடைசி வரை, நாமும், காங்கிரஸ் திராவிடர்களம், வேறு வேறு முகாம்களில் இருந்து கொண்டிருக்கச் செய்வதற்குத்தான் இது பயன்படுமே தவிர, இலட்சிய சித்திக்கு வழியல்ல.

கடந்த சிலகாலமாக, நமது கூட்ட நிகழ்ச்சிகள் பற்றிப் பத்திரிகைகளில் குறிப்பிடும்போது, காங்கிரஸ் திராவிடர்களும் வந்திருந்தனர் என்று மகிழ்ந்து ஏழுதுகிறோம். அந்த நிலைமை நல்லது - வளர வேண்டும். ஆனால், இப்போது கழகம் கொள்ளும் றை, குறைந்தது ஃர் இரண்டாண்டுக் காலத்துக்குக் காங்கிரசிலுள்ள திராவிடர்களை, நம்மை விரோதிகளாகக் கருத வைக்கவும், அதன் பலனாக, நாம் கூறுவதை ஆலட்சியப்படுத்தவும், எதிர்க்கவும் செய்ய வைக்குமே தவிர, நாம் கோருவதும், அவசியமாகவும் ஆவசரமாகவும் தேவைப்படுவதுமான ஒக்ய முன்னணி உண்டாக்க உதவாது.

நாமே உணருகிறோம், நாடும் உணருகிறது, இன்று, காங்கிரசிலே உள்ள திராவிடர்கள், நாம் கூறும் பல கொள்கைகளை ஆதரிக்கும் நிலையை அடைந்து வருகிறார்கள் என்பதை.

காங்கிரசிலே, பார்ப்பன இதிக்கம் கூடாது என்று பேசுபவர்களும், வடநாட்டு இதிக்க் இகாது என்று பேசுபவர்களும், அரசியல் வேலை முடிந்துவிட்டதால், இனி சமூக, பொருளாதார இயல்களைச் செம்மைப்படுத்த வேண்டுமென்று சொல்பவர்களும், சுயமரியாதை உணர்ச்சி இருக்கத்தான் வேண்டும் என்று வாதிடுபவர்களும், வளரும் நேரம் இது. பெரியார், பிராமணர்களை வாயளவில் எதிர்க்கிறார், ஆனால், ஃமந்தூர் இராமசாமி ரெட்டியார், பார்ப்னரை மட்டந் தட்டியபடி இருக்கிறார் - அவர்களைக் கருவேப்பிலை யாக்குகிறார் - ஆவரே பிராமணருக்கு உண்மையான விரோதி என்று “பாரததேவி” கூறும் அளவுக்கு, நிலைமை இருக்கிறது.

இவ்வளவு சாதகமான நிலைமையையும், நாம் ஆகஸ்டு 15; úதி பற்றிக் கொண்டுள்ள போக்கு, கெடுத்துவிடும் - வீண் பழியும் அவசியமற்ற விரோதமும் வளரும் - அதன் பலனாக, நமது காரியம் கைகூடுவதற்கு நாமாகவே, கேடுகளை வருவித்துக் கொள்பவராகிறோம். ஜøலை முதல் தேதி நமது கழகம், நடத்திய, பிரிவினை விளக்கக் கூட்டத்துக்கு, வரும்படியும், கலந்து கொள்ளும்படியும், காங்கிரஸ் திராவிடரகளை (தலைவரின் அறிக்கை) அன்புடன் ஆழைத்தும் இருக்கிறோம். ஆனால், அவர்களும் நாமும், எந்நாட்டு மக்கள் யாவரும் சேர்ந்து மகிழ வேண்டிய ஒரு மகத்தான நாளில், கலந்து கொள்ளக்கூடாது - அது நமக்குத் துக்கநாள் என்று நாம் கூறுகிறோம். சரியா? முறையா? ஒன்றுபடச் செய்யும் திட்டமா? காங்கிரஸ் ஏது செய்தாலும் எதிர்ப்பதே இவர்கள் வேலை என்று நம்மைப்பற்றிக் கூறப்படும் குற்றத்தை நாமே வலியச் சென்று ஏற்றுக்கொள்ளும் செயல் அல்லவா இது?

கும்பலோடு கலந்துவிட்டால், நாமும் அவர்களோடு சேர்ந்து விழா நடத்தினால், பிறகு, நமக்கென்று உள்ள கட்சி, நமக்கென்று உள்ள கொடி, நமக்கென்று உள்ள திட்டம் என்ன இகும்? என்று கேட்கப்படுகிறது. எதில் கலந்தாலும், தனியாக விளங்கக் கூடியதும், ஏப்படியும் நிலைக்கக் கூடியதுமான ஜீவசக்தி நம் கொள்கைக்கு உண்டு என்பதிலே நமக்கு இழ்ந்த நம்பிக்கை இருக்குமானால், நாம், விழாவிலே கலந்து கொள்வதாலேயே, நமது கொள்கையை இழந்து விடமாட்டோம் என்பதிலே நம்பிக்கை இருக்கும்.

அந்த விழா ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக உள்ளது. வெள்ளையர் ஆட்சி விலகுவதை உலகுக்கு அறிவிக்கும் விழா, ஆதிலே கலந்து கொள்வதால், நாம் நமது கொள்கையை விட்டு விடுவதாக முடியாது. தொட்டால் துவண்டு விடக்கூடிய, மோதினால் நொறுங்கிவிடக் கூடிய, வலிவற்ற கொளகை அல்ல நாம் கொண்டிருப்பது.

சுதந்திர விழாவிலே கலந்து கொள்பவர்களுக்கெல்லாம், தனிப்பட்ட பிரச்சனைகள், குறைபாடுகள் இலட்சியங்களை ஏல்லாம் அன்றையத்தினம், விட்டு விடுகிறார்கள் என்றா பொருள்.

உவகையுடன் அந்நாளைக் கொண்டாடும், பலரும், பிறகு அவர்களின் குறைகளைக் களைந்து கொள்ளக் கிளர்ச்சிகள் நடத்தவும், போரிடவும், பின்வாங்கப் போவதில்லை. ஏன் நாமும் அதுபோலச் செய்யலாகாது.

நம்மை உதாசீனம் செய்து வந்த, காட்டிக் கொடுத்த, ஆரியருடன் கூடிக்கொண்ட, மனுதர்ம ஆட்சி நடத்திய வெள்ளையர், கொண்டாடிய யுத்த வெள்ளிவிழாவிலே கூடக் கலந்து கொண்டோம், ஏங்களை நீ கவனிக்காவிட்டாலும் நாங்கள் யுத்தத்துக்கு உனக்கு உதவுகிறோம் என்று கூறி ஆதரவு தந்தோம், எந்தப் போக்கு கொடுத்த பலன் என்ன? ஆகஸ்டு விழாவிலே கலந்து கொண்டால் விளையும் தீமை என்ன? வெள்ளை ஆட்சிக்குப் பதிலாக வேறோர் ஆட்சி வருகிறது, அது வேதனையல்லவா? என்று கேடகப்படுகிறது. இம்! இம்! வேதனைதான்! வேதனை மட்டுமல்ல, வெட்கமும்கூட! ஆனால் அந்த ஆட்சியை வரவிடாது தடுக்க நாம் செய்ய முடிந்தது என்ன? இனி என்றுமே, அந்த ஆட்சியை ஏதும் செய்ய முடியாது என்றா நாம் இன்று எண்ண வேண்டும்? நமது கொள்கையின் மூலம் பலம் கிடைத்ததால், எந்த ஆட்சியையும், ஏதேச்சாதிகாரம் செய்யும் எந்த ஆட்சியும் செல்லும்வழி, போய்த்தானே தீரும். ஆகஸ்டு 15, இதைக்கூட நமக்கு அறிவிக்கும் நாள் ஆயிற்றே! ஏன் அன்று நாம் கலந்து கொள்ளக் கூடாது?

நிர்வாகத் தலைவரின் அறிக்கை, மறுநாளே வெளிவந்தது. ஆதிலே ஆகஸ்டு 15 துக்க நாள் என்று குறிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, ஆகஸ்டு 15ல் கலந்து கொள்ளக் கூடாது என்று, விடுதலை அறிவித்தது.

எந்தப் போக்கு விளக்கம் தருவதாகவோ, நமது எதிர் காலத்தைச் செம்மைப்படுத்தும் முறையாகவோ தோன்றவில்லை.

நாம், திராவிட நாடு திராவிடருக்கு என்ற கோரிக்கையை, மக்களுக்கு எடுத்துக் கூறும், அளவிலேயே தான் இன்றும் இருக்கிறோம்.

நமக்கு, ஆதரவு பெருகி வருகிறது. ஆனால், போதுமான அளவு என்று கூறமுடியாது.

ஆறுபது வருஷ காங்கிரஸ் பணியை இறு ஆண்டுக் காலத்திலே ஜனாப் ஜின்னா, சிறியதாக்கி விட்டதற்குக் காரணம், எந்த இறு ஆண்டுகளிலே, லீக் வலுத்துவிட்டது, லீகையே முஸ்லீம்களிலே பெருவாரியானவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை விளக்க, உலகுக்கு மெய்ப்பிக்க, திட்டத்தை விளக்கிச் செய்த பிரசாரத்தை மட்டுமல்ல, காரணமாகக் காட்டியது, முனிசிபல் தேர்தலிலிருந்து, டில்லி சட்டசபை தேர்தல் வரையிலே, லீகுக்கே வெற்றி கிடைத்தது என்பதை இதாரமாகக் காட்டியதால்தான். நாமோ தேர்தலுக்கே நிற்கவில்லை நாட்டுப் பிரிவினைக்காக பிரிட்டிஷார் எடுத்துக் கொண்ட எந்தக் காரியத்திலும் இடம் பெறவில்லை. இடம் பெற்ற காங்கிரஸ் திராவிடருடன் தொடர்பு கொள்ளவும் முயற்சிக்கவில்லை.

ஒரு திட்டத்துக்கு, ஒரு இன மக்களில் பெருவாரியானர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை, ஜனநாயகமுறைப்படி, ஜனாப் ஜின்னா காட்டியே, வெற்றி பெற்றார்.

அதுபோலவே, காங்கிரசும், சுயராஜ்ய கோரிக்கைக்குச் சகலரும் ஆதரவளிக்கிறார்கள் என்பதை ஜனநாயக முறையான தேர்தல் முறைப்படியும், விடுதலைப்போர் நடத்தியும் காட்டிவிட்டது.

நாம், ஆரம்பக் கட்டத்தில், திட்டத்தை விளக்குவதில் அதற்கு ஆதரவு திரட்டுவதில் இருக்கிறோம். கிளர்ச்சி இல்லை, போர் இல்லை. இன்னமும், நமது உடலிலே, இதற்காக, தியாகத் தழும்பு ஏற்படவில்லை. குமரன் இல்லை, சிதம்பரம் பிள்ளை இல்லை. இந்தி எதிர்ப்புப் போரிலே உயிரைத் தியாகம் செய்த, தாளமுத்து நடராஜன் போன்றவர்களைத் தரக்கூடிய திராவிடச் சமுதாயத்தில், இவர்கள் போன்றார்கள் ஆகவும் தயாராக உள்ள வீர்களைப் படைதிரட்டும் பணியிலேயே இருக்கிறோம். எனவே, துவக்காத போர் - இகவே வெற்றியா தோல்வியா என்ற பிரச்சனைக்கே இடமில்லை. எந்நிலையில், துக்கநாள் அவசியமா?

நமது கொள்கை நியாயமனாது. ஆனால் நியாயத்தை மட்டுமே கவனித்து, எந்த நாட்டிலும், ஆட்சியாளர்கள், நடப்பதில்லை. நியாயத்தை நிலை நாட்ட பலம் துணையாக இருக்கிறது என்றால் மட்டுமே காரியம் பலிக்கும்.

ஒரு நாட்டை மற்றொரு நாடு ஆளுவது ஆக்ரமம் - எந்த நாடும் சுயாட்சி கேடபது நியாயம். எந்த நியாய்ததை எடுத்துக்கூறின உடனே காங்கிரசை மதித்து சுயராஜ்யம் கொடுக்க, எந்தக் கிரிப்சும், மவுண்ட்பேடனும் முன்வரவில்லை. ஏளனம் பேசும் சர்ச்சில்களாகவேதான் சகல பிரிட்டிஷாரும் இருந்தனர். நியாயத்தின் பக்கபலமாக, தியாகம், கிளர்ச்சி பணபலம், பத்திரிகை பலம், இவ்வளவுக்கும் மேலாக, உலகச் சூழ்நிலையில் மாறுதல், பிரிட்டிஷ் பலச்சரிவு, என்பவைகள் ஏற்பட்டதால்தான், மந்திரிகள் பறந்து வந்தனர் - நியாயம் வழங்க.

இதே முறையிலேதான், நமது நியாயமான கோரிக்கையான திராவிடநாடு பிரிவினையும், தியாகப் பாதையிலே நடக்கும் தீரர்களின், இரத்தம் சிந்தப்பட்ட பிறகே வெற்றி பெற முடியுமே தவிர, கொள்கையை இதாரபூர்வத்தோடு விளக்கி விடுவதால் மட்டும் கிடைத்துவிடாது. விடுதலைப் பாதை, விவேக சிந்தாமணியால் மட்டுமே கிடைப்பதில்லை. மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை என்னை மாட்டநினைக்கும் சிறைச்சாலை என்று எண்ணற்ற வீரர்கள் கூறிடும் அளவு வீரத்தியாக உணர்ச்சி ஏற்பட்ட பிறகே கிடைக்கும். இவைகளைச் செய்து ஆலுத்து, மனம் நொந்து, வெந்து போன பிறகும் நாம் வஞ்சிக்கப்பட்டால், நமது எண்ணம் உடேறாவிட்டால், போர் பயனற்றுப்போய் விட்டால், துக்கம் கொண்டாடுவது முறையாக இருக்கும். துவக்க நிலையிலே துக்கம் கொண்டாடுவது அவசியமல்ல.

மேலும், அன்னிய ஆட்சியாராகிய வெள்ளை ஆட்சி நீங்கிய உடனே, வடநாட்டார்தான் முதலிலே பீடத்தில் அமருவார்கள் என்பது நாம் அறியாததுமல்ல, எதிர்பாராததுமல்ல. எனவே, இன்று ஆமையும் ஆட்சியைக்கண்டு நாம் திடுக்கடவோ திகைக்கவோ காரணமில்லை. இப்படித்தான் நேரிடும் என்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

எதிர்பாராத தாக்குதல், இணையற்ற போருக்குப் பிறகும் தோல்வி, இவைகளின்போது மட்டுமே ஏற்படக்கூடியது துக்கம். நாம் எதிர்பார்த்த, ஆதைத் தடுக்கும் வலிவை நாம் பெறவில்லை என்பதையும் நாம் அறிந்திருக்கிற நிலையில் ஏற்பட்ட ஆட்சி முறைக்காக, துக்கிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நம்முடைய, வீர இளைஞர்கள்மீது, இதுநாள் வரையிலே, சுமத்தப்பட்ட பழிச்சொலல், நாம் பிரிட்டிஷாரின் அடிமைகள் என்பது.

அந்தப் பிரிட்டிஷாரின் ஆட்சி முடியும் போது, நாம் துக்கம் கொண்டாடுவது, எந்தப் பழிச் சொல்லை, நாமாகவே நம்மீது சுமத்தும்படி, அவர்களû வற்புறுத்தி ஆழைப்பதாகும்.

நமது வாழ்நாளில், நாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்ய ஆட்சியை ஏற்க விரும்பாதவர்கள்! அது ஒழிய வேண்டும் என்ற நோக்கமுடையவர்கள், காங்கிரசார் பழி சுமத்தியது போல நாம் பிரிட்டிஷாரின் அடிமைகளல்ல என்பதை விளக்க, நமக்கு இருக்கும் ஒருநாள், கடைசிநாள், ஆகஸ்டு 15, நாம், ஐந் அந்தச் சந்தர்ப்பத்தை இழந்து, ஆழியாத பழிச்சொல்லைத் தேடிக்கொள்ள வேண்டும்.

சுதந்திர தினவிழாக் கொண்டாடப்படும் எந்த நேரத்தில், எந்தத் துணைக்கண்டத்திலே, அதிருப்திகளோ, மனக்குறைகளோ, ஏமாற்றங்களோ, இல்லாமல் போகவில்லை.

கம்யூனிஸ்டு கட்சியின், முக்கயிமான உறுப்பினர்கள் சிறையிலே தள்ளப்பட்டுள்ளனர்.

பி.சி.மில போன்ற இடங்களிலும் வேறுபல இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள், தொல்லைப்பட்டுக் கொண்டும், ஆடக்குமுறைக்கு ஆளாகியும் உள்ளனர்.
ஆசிரியர்கள், ஆதிகாரிகள், ஆகிய வேறுபலரும், போதாச் சம்பளத் தொல்லையைத் தாங்கிக் கொண்டுள்ளனர்.

போஸ் கட்சியினர், தங்கள், கோரிக்கை நிறைவேறவில்லை என்று அதிருப்திபட்டுள்ளனர்.

மற்றும் பலருக்குப் பலவகை, ஏமாற்றங்கள், மனக்குறைகள் உள்ளன.

ஆனால் இவையாவும், சுதந்திரம் பெற்றவுடன் பிரச்சனையுடன் இணைக்கப்படவில்லை.

நிர்வாகக் கோளாறு, ஆட்சியாளர்களின் கொள்கை, திட்டம் ஆகிய பல்வேறு காரணங்களால் நேரிடும் அல்லல். இகையால், இவைகளைச் சாக்காகக் கொண்டு, ஆகஸ்டு 15ந் தேதியைத் துக்க நாளாகக் கருதும்படி, யாரும் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

சுதந்திர தினாவிழாவிலே, போஸ் கட்சி கலந்து கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஒருவாரத்திற்குள் ஆதிலே பிளவு ஏற்பட்டு, ஒரு பகுதியினர் கலந்து கொள்வது என்று முடிவு செய்தனர்.

கலந்து கொள்ளாத பகுதியும், எந்த நாளைத் துக்க நாளாகக் கொண்டாடும்படி, கட்சிக்கு அறிக்கைகளும், பாட்ஜ÷களும் ஆனுப்பிக் கொண்டில்ல.

போஸ் கட்சி, துக்க நாளாகவே, இதனை கொண்டாடுகிறது என்று ஒப்புக்கு ஒப்புக் கொள்வதனாலும் கூட அந்தக் கட்சி, இதுவரையில், சுதந்திரப் போராட்டத்துக்காக, காங்கிரசுடன், காங்கிரஸ் வகுத்த திட்டத்தின்படி, நடந்து கொண்டவர்கள் - காங்கிரசின் ஆகிம்சை கொள்கையையும் தாண்டி, வெளிநாடுகளில் சென்று, இயுதமெடுத்தும் போரிட்டவர்கள். எனவே அவர்களை ஆகஸ்டு 15-ல் கலந்து கொள்ளாவிட்டால்கூட, அதற்காக அவர்களை, பிரிட்டிஷ் ஏகாதிபத்ய தாசர்கள் என்று கண்டிக்கவோ, இழிவாகப் பேசவோ, காங்கிரஸ்கூட முன்வராது.

நமது நிலை ஆவ்விதமானதல்ல. எந்த மகத்தான வித்யாசத்தை மறக்கக்கூடாது.

மேலும், போஸ் கட்சி, எந்து மகாசபை போன்றவைகள், பெரிதும் தலைவர்களால் நிரம்பப் பெற்றவைகள், பொது மக்களின் தொடர்பு ஆதிகம் இல்லாதவைகள். எனவே, அந்தக் கட்சிகள், தவறு செய்தால்கூட, சமாளித்துக் கொள்ள முடியும். நாம் ஆவ்விதமல்ல - 200, 300 கிளைக்கழகங்களும், ஒம்பது ஆறுபதினாயிரம் உறுப்பினர்களும் கொண்ட இயக்கமாகி இருக்கிறோம் - பொது மக்களிடம் தொடர்பு, ஆறுந்துபடாமலிருக்க வேண்டுமென்பதற்காக, நாள் தவறாமல் பிரசாரம் நடத்தி வருகிறோம் - எனவே, நமது போக்கைக் கூர்ந்து கவனிக்கவும், அதன் பலனாக, நம்மைப் பற்றி மதிப்பிடவும், பொது மக்கள் தயாராக இருப்பர் மற்றக் கட்சிகளுக்கு எந்நிலை இல்லை. இதனையும் கவனிக்க வேண்டும்.

போஸ் கட்சியோ, வேறு சில கட்சிகளோ, ஆகஸ்டு 15ந் தேதியைத் துக்கநாளாகக் கொண்டாடுவது, நாம் ஆதே போக்குக் கொள்வதற்குக் காரணமாகவோ, இதாரமாகவோ, இகாது.
ஒரு தவறு, மற்றொரு தவறுக்குச் சமாதானமல்ல - தவறுகள் இரண்டு என்று ஏற்படுமே தவிர வேறில்லை.

எனவே, நாம் மட்டுமல்ல, வேறு சிலரும் கூட, ஆகஸ்டு 15ந் தேதியைத் துக்கநாளாகக் கொண்டாடுகின்றனர் என்று கூறுவது, நியாயமாகாது.

நாம், ஆகஸ்ட் 15-ந் தேதி, ஒதுங்கி இருப்பது, அல்லது, துக்க நாளாகக் கருதுவது என்ற போக்கு, எந்நாட்டிலேயும் துணைக்கண்டத்திலேயும் மட்டுமல்ல, உலகிலேயே, நம்மைப்பற்றித் தவறான கருத்து கொள்ள, நாமாகவே, இடமளிப்பதாக வந்து சேரும். சுதந்திர தின விழாவை ஆசல் காங்கிரஸ் விழாவாக மாறும்படி, நாமே செய்தவர்களாவோம் - அந்த விழாவுக்கு, பாத்யதை கொள்ளக் கூடியவர்கள் காங்கிரசாரே, என்று நாமே அவர்களுக்குப் பட்டயம் தருவதாகவே முடியும் - அந்த நாளோ உண்மையில், எந்த துணைக்கண்டத்தினர் ஆனைவருக்கும், விடுதலை விரும்பிகள் ஆனைவருக்கும், மகிழ்ச்சி தரும் நாள்.

எந்தக் காலத்திலும், எந்த நாட்டிலும், விடுதலைப் போர் - இரண்டோர் சம்பவங்களுடனோ, இரண்டொரு வெற்றிகளுடனோ முடிந்து விடுவதில்லை - அது, நீண்டதோர் பயணம். விடுதலைப் போரில், பல கட்டங்கள் உண்டு - ஆகஸ்ட் 15ந் தேதி, ஆத்தகைய கட்டத்திலே ஒன்று - ஆரம்பக் கட்டம் - முதல் வெற்றி - முக்கியமான வெற்றி - ஆதைத் திருநாளகக் கொண்டாடி விடு;டு, மற்றவர்கள் பின்தங்கிவிட்டாலும், திராவிடர்கள், விடுதலைப் போரைத் தொடர்ந்து நடத்தி, திராவிடத் தனி அரசு பெறுவதற்குப் பாடுபட முடியும்.

திராவிடர் கழகத்தாராகிய நாம் அடிக்கடி காங்கிரசிலுள்ள திராவிடர்களை, ஆழைக்கிறோம், ஏம்முடன் சேர வாரீர், என்று. முத்தரங்கங்களெல்லாம் கூட எமது முகாமுக்கு வருவர், பாரீர் என்று கூறுகிறோம். ஆவ்விதம் காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்கள் நமது, கொள்கையை உணர்ந்து வரவேண்டுமென்றால், அவர்கள் மனதிலே, நம்மைப்பற்றி, ஏற்கனவே உள்ள தப்பபிப்ராயங்களைத் துடைக்க வேண்டியது முறையாயிருக்க, ஆகஸ்டு 15ந் தேதியைத் துக்கநாள் என்று அறிவிப்பதன் மூலம், நாமாகவே காங்கிரஸ் திராவிடர் மனதிலே, நம்மைப் பற்றிவேறோர், தவறான எண்ணம் கொள்ளும்படிச் செய்கிறோம். எந்தப் போக்கு, திராவிடர் கழகத்துக்கும் கொள்கைக்கும், ஆதரவு திரட்டும் காரியமாகாது - காங்கிரஸ் திராவிடர்களின் ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையையை, நமது போக்கினால் நாமே நொறுக்குபவர்கள் இவோம்.

நமது கட்சியின் மீது வீசப்படும் பழிகளைத் துடைக்கும் காரியத்திலேயேவா, நாம் காலம் முழுவதும் செலிவிட வேண்டும்? பலவிதமான பழிச்சொற்களையும் துடைத்து, சேலம் மாகாண மாநாட்டுக்குப் பிறகு, புத்தொளி பெற்றோம் அதனாலேதான், நாம் நமது திட்டங்களை விளக்குவும் முடிந்தது. இப்போதோ, புதியதோர் பழியை, தந்திரக்கார்கள் நமது கட்சிய்ன மீது சுமத்தவும் அதற்கு நாம் பதில் கூறவுமான, பழைய, வழக்கமான, வேலை நமக்கு வந்து சேருகிறது. ஆதேபோது, பட்டம் விடும் தீர்மானத்தை மதிக்க மறுத்த தோழர் ஏஸ். முத்தைய்ய முதலியாரும், கட்சித் திட்டத்தை மீறி தேர்தலுக்கு நின்ற டாக்டர் கிருஷ்ணசாமியும் வந்து சேரகின்றனர். எந்த, பழி துடைத்துக் கொள்ளும் காரியத்திலே நாம் இருந்து கொண்டிருந்தால், ஏப்போதுதான், நமது திட்டத்திற்கான ஆதரவை உருவாக்கும் காரியம் செய்வது? ஏன், நாமாக வீணுக்கு, ஒரு வம்பை வாங்குவது? ஆதிலும், பல ஆண்டுகளாக நம்மைப் பற்றித் தவறாகக் கருதிக் கொண்டிருந்த காங்கிரசார் திராவிடர்களிலே ஒரு பகுதியினர், நம்மை அறியவும், மதிக்கவும் ஆரம்பத்திருக்கும் நேரமாகப் பார்த்தா எந்தக் காரியம் செய்வது?

15ந் தேதி, பிரிட்டிஷ் ஆட்சி ஒழிப்பதற்காக நாமும் மகிழ்வோம் - கொண்டாடுவோம் - அது ஒழிந்ததன் உண்மைக் காரணத்தை விளக்குவோம் - அது ஒழிந்ததை யார் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதையும் விளக்குவோம் - நமது எதிர்காலக் கிளர்ச்சி, ஏதன் பொருட்டு இருக்கும் என்பதையும் விளக்குவோம் - நமது இலட்சியத்துக்காக, நாமும், வெற்றி கிடைக்கும்வரை போராட உறுதி கொள்வோம் என்று காங்கிரசாருடன் கலந்து கொண்டாட்டம் நடத்தியோ தனியாகக் கூட்டம் நடத்தியோ, நிலைமையைத் தெளிவுப்படுத்துவதே முறை.

ஆகஸ்டு 15ந் தேதி இரண்டு நூற்றாண்டுகளாக எந்த துணைக்கண்டத்தின் மீது இருந்துவந்த பழிச்சொல்லை, இழிவை, நீக்கும் நாள். அது திராவிடருக்கும் திருநாள்தான் - துக்கநாள் இகாது.
கட்சியின் முக்யஸ்தர்கள் கலந்து பேசியோ, நிர்வாகக் கமிட்டி கூடியோ, இருந்தால், எந்த நிலை ஏற்பட்டிராது.

தலைவரின் அறிக்கை, நிர்வாகத் தலைவரின் அறிக்கை, விடுதலையில் அறிக்கை, என்ற முறையிலே திடீர் திடீரென வெளிவந்தன. எனவேதான், நான் எனது கருத்தை விளக்கச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை - ஆதை வெளியிட, ப்திரிகையில் ஏழுதுவது அவசியமாகிவிட்டது.

ஆகஸ்டு 15ந் தேதி பற்றி, ஏற்கனவே, பல அறிக்கைகள் வெளி வந்துவிட்டனவே - இப்போது வேறுவிதமாகக் கருத்தை வெளியிட்டால் என்ன பயன்? ஏப்படி ஏற்கனவே கொண்ட போக்கை மாற்றிக் கொள்வது என்று கேட்கத் தோன்றும். நான் வெளியிடும் விளக்கம், சற்றுத் தாமதித்து வெளிவந்தது என்ஙற போதிலும், இவ்விதமான கருத்து, மத்திய திராவிடர் கழகம், கழகப் பத்திரிகை நிலையம், ஏல்லா எர்களிலுமுள்ள திராவிடர் கழகங்கள் ஆகிய இடங்கட்கு, பொள்ளாச்சி திராவிடர் கழகத்தாரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சியில், திராவிடர் கழகத்தாரை, சுதந்திர விழாவில் கலந்து கொள்ளும்படி, ஆவ்வூர் காங்கிரசார் ஆழைத்தனர். அதுபோன்றே வேறு பல எர்களிலும் ஆழைப்புகள் கிடைத்தன. ஆழைப்புப் பெற்ற பொள்ளாச்சித் திராவிடர் கழகம், ஆகஸ்ட் பதினைந்தை நாம் துக்கநாள் என்று கொள்ளக்கூடாது, உண்மையிலேயே அந்நாள் நமக்கும் மகிழ்ச்சி நாள்தான், என்று தீர்மானம் நிறைவேற்றி, ஏல்லாத்திராவிடர் கழகங்களும் ஆனுப்பி வைத்தது.

அந்த அறிக்கை, திராவிடர் கழகத்திலேயே ஒரு பகுதியினர், ஆகஸ்ட் 15ந் தேதி துக்கநாள் என்று கருதவில்லை என்பதையும், சுதந்திர தின விழாவிலே திராவிடர் கழகம் கலந்து கொள்வது முறையாகும் என்பதையும் கருத்தாகக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டிற்று.

அந்த அறிக்கைக்கு விடுதலை இபிசிலிருந்து பதில் தரப்பட்டதாகத் தெரிகிறது.

முறைப்படி நடப்பதானால், அந்த அறிக்கையைப் பரிசீலனை செய்ய, மத்யக்கமிட்டி கூடியிருக்க வேண்டும்.

பொள்ளாச்சித் திராவிடர் கழகத்தார் ஏற்கனவே வெளியிட்டிருப்பதால், இப்போது நான் வெளியிடும் எந்தக் கருத்துக்கள், திடீரென, கழகத்துக்கு வந்துசேருகின்றன என்றும் கூற முடியாது.

இவ்வளவுதூரம், ஆகஸ்ட் 15ந் தேதியைத் துக்கநாள் என்று அறிக்கைகள் மூலம் வெளியிட்டுவிட்டு, இனி ஏப்படி அதனை மாற்றுவது என்று கேட்பதனால், இப்போதும் காலம் கடந்துவிடவில்ல, இனியும் மாற்றமுடியும் என்பதை விளக்க விரும்புகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, கம்பராமாயணத்தைக் கொடுத்துவதற்கெனப் பெரியார் அறிக்கை வெளியிட்டு, விசேஷ மாநாடு சேலத்தில் கூட்டப்பட்டது; நான் தலைமை வகித்தேன். காலை நிகழ்ச்சியிலே கூட, கம்பராமாயணம் கொளுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியே சொற்பொழிவுகள் நடைபெற்றன. பிற்பகலிலே,சர். சண்முகம் தந்தி கொடுத்தார், கொளுத்த வேண்டாம் என்று. அதன்படியே, கொளுத்துவது ஆதே இடத்தில், ஆதே நேரத்தில் கைவிடப்பட்டது. அது சரியா, தவறா என்பது அல்ல, இப்போது பிரச்சனை. அந்தக் கடைசி நேரத்திலேயும் செய்ய வேண்டுமென்று கருதப்பட்ட காரியம், வேறு ஒருவரின் யோசனையின்படி கைவிடப்பட்டது.

இகவே, ஆகஸ்ட் 15ந் தேதி பற்றிதிராவிடர் கழகம், தன் கருத்தை எந்த நேரத்திலும் மாற்றிக் கொள்ளமுடியும் - மாற்றிக் கொள்ளலாம் - முறையுங் கூடத்தான் - அதற்குமுன் மாதிரியாகச் சேலம் சம்பவம் இருக்கிறது.

ஆனால் ஒரே ஒரு வித்யாசம். சேலத்திலே கம்பராமாயணத்தைக்கடைசி நேரத்தில் ஒரே தந்தியின் மூலம் கொளுத்த வேண்டாமென்று கூறியவர், ஒரு, சர். நான் ஒரு சாமான்யன். அவர் கட்சிக்காக, ஃய்வு நேரத்திலும் உழைத்ததில்லை - நான் உழைத்து ஆலுத்தவன், அவர் இன்று இந்திய சர்க்காரிலே நிதி மந்திரி! நானோ, இதே அறிக்கையின் விளைவாகவே கூட உங்களில் பலராலே கூட, சந்தேகத்துக்கும் நிந்தனைக்கும் ஆளாகக் கூடிய நிலையில் உள்ளவன், ஆனால் நான் கூறுவது, உள்ளத்தில் இருந்து வருபவை.

எனவே இப்போதும், ஆகஸ்ட் 15ந் தேதி பற்றி, திராவிடர் கழகத்தின் போக்கை மாற்றலாம்.

இவ்வளவு கூறும், நான், இதற்கு முன்பு, கழகம் எடுத்தக் கொண்ட, எந்த முக்கியமான திட்டத்துக்கும் வேலை முறைக்கும், கட்டுப்படாமல் இருந்து வந்தவனல்ல. கழகம் நெருக்கடியான கட்டத்திலே இருந்தபோதெல்லாம், விட்டுவிட்டு ஃடினவனல்ல; பட்டம் பதவிகளை வைத்துக் கொண்டு, விட்டுவிடமுடியாது என்று கூறினவனல்ல, தேர்தலுக்கு நிற்கக்கூடாது என்று கட்சி தீர்மானித்தபிறகு, மீறித் தேர்தலுக்கு நின்றவனல்ல; சிறைபுக வேண்டிய திட்டம் வந்தபோது, ஒளிந்து கொண்டவனுமல்ல; அடிக்கடி, கட்சி பலவற்றைத் தேடிக் கொண்டவனுமல்ல; கட்சிக்குள்ளாகவே சேலம் மாகாண மாநாட்டின்போது, செல்வான்களின் மயக்கமொழியில் வீழ்ந்தவனல்ல - இதுவரை வழுக்கி விழுந்ததில்லை - திட்டங்களைக் கண்டித்தோ ஆகற்ற வேண்டுமென்று கூறினதோ - கட்டுக்கு ஆடங்க மறுத்ததோ இல்லை - ஆனால் எந்த ஆகஸ்ட் 15;ந் தேதி பற்றிய பிரச்சனை, உண்மையாகவே, என்போல் எண்ணற்றவர்கட்கு மனவேதனை தரக்கூடிய விதத்திலே, தவறான முறையிலே, திருப்பப்பட்டிருக்கிறது. இகவேதான், ஆகஸ்டு 15ந் தேதியை துக்க நாள் என்று அறிவித்து, அதற்காக அறிக்கைள் வெளியிட்டு வருவது, தவறு என்று தெரிவிக்கலானேன். ஆகஸ்டு 15ந் தேதி நாமும் கலந்து கொண்டாடவேண்டிய, மகிழ்ச்சி தரும்நாள், உலகத்தின் முன்பு நம் மதிப்பை உயர்த்தும் நாள், என்று, நாள் மனப்பூர்வமாக நம்புகிறேன். நம்புவதுடன், ஆகஸ்ட் 15ந் தேதி விழா கொண்டாடுவது, எந்த வகையிலும் தவறோ, துரோகமா அல்ல என்று எண்ணுகிறேன்.

இது கட்சிக் கட்டுப்பாட்டையும் தலைவரின் அறிக்கையையும் மீறுவதாகும் என்று கருதப்பட்டு, என்மீது ஒழுங்கு நடவடிக்கை ஏடுக்க, முன் வருவதானாலும், என் வாழ்நாளில், பிரிட்டிஷ் ஆட்சி கூடாது என்ற கொள்கையைக் கொண்டவனே நான் என்பதை மக்களுக்குக் கூற எனக்கிருக்கும் ஒரே நாளான, கடைசி நாளான, ஆகஸ்ட் 15ந் தேதியின் முக்கியத்துவத்துக்காக வேண்டி கட்சியின் கடுமையான நடவடிக்கைக்கும் சம்மதிக்க வேண்டியவனாகிறேன்.

தலைவரும், கட்சியும், என்போக்கு தவறு என்று கருதி, என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும் நான், சமூக சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம், திராவிடத் தனி அரசு, எனும் அடிப்படைக் கொள்கைகளைக் கட்சிக்கு வெளியே இருந்தாகிலும் செய்து வருவேன் என்பதைக் கூறி, எந்த அறிக்கையை முடிக்கிறேன்.

வணக்கம்

சி.என். அண்ணாதுரை

(திராவிடநாடு - 10-8-47)