அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவர்களின் அடுத்த அம்பு!

கல்வித்துறையில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை செல்லுபடியாகாது என்ற தீர்ப்பைப் பெற்றுவிட்டனர். வகுப்புவாதிகள். அவர்களின் அடுத்த இலக்கான உத்யோகத் துறை குறித்தும், அவர்கள் மும்முரம் அதிகமாகியிருக்கிறது. ‘ஜில்லா முன்சீப்’ வேலைக்குத் தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லையென்ற காரணங்காட்டி, பீமாவரத்தைச் சேர்ந்த பி.காமராஜு என்ற அட்வகேட், ஆளவந்தார் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவர் ஒரு பார்ப்பனர். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் காரணமாகவே தனக்கு மேற்படி பதவி கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாமற் போய்விட்டது என்பதே அவரது வழக்கில் அவர் காட்டியிருக்கும் காரணமாகும்.

மேற்படி வழக்கு இன்னும் இரு வாரங்களில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

(திராவிடநாடு 13.8.50)