அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அவருடைய இலட்சியம்!

“பாம்புகளுடனும் தேள்களுடனும் பயமில்லாமல் விளையாட வேண்டுமென்பதே என்னுடைய இலட்சியம். ஆனால் இந்த நாள்வரை அது வெறும் ஆசையாக மட்டுமே இருந்து வருகிறது. அது நிறைவேறுமோ நிறைவேறாதோ, அப்படி நிறைவேறுவதாய் இருந்தாலும்எ ப்பொழுது நிறைவேறுமோ அறியேன்”

இந்த வாசகத்தைப் படித்த உடனே, இப்படி - யார் சொல்லியிருக்கக்கூடும்? ஒரு பாம்பாட்டியோ, ÷ள்பருந்து விற்பவனோ தான் சொல்லியிருப்பான் என்று நீங்கள் ஒருக்கால் நினைக்கலாம். பாம்பாட்டி தானே பாம்போடு விளையாடுகிறான்; தேள்மருந்துவிற்பவன்தானே தேளைத்தன் உடம்பில் உலாவவிட்டு விளையாடுகிறான்; இதைக் கூறுவதற்கு ஒருதலையங்கம் எழுதுவதா என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நினைப்பது போலவேதான், நாமும் இதுவரை நினைத்திருந்தோம், பாம்புடனும் தேளுடனும் விளையாடுபவர்கள் பாம்பாட்டியும் தேள்கடி மருந்து விற்பவனும்தான் என்று.

ஆனால், இப்போது பாம்புகளுடனும் தேள்களுடனும் விளையாடுவதை ஒருவர் தன்னுடைய இலட்சியமாகக் கொண்டிருக்கிறார். ‘இலட்சியம்’ என்பது ஒருவனுடைய வாழ்க்கையின் குறிக்கோள்; அதாவது, ஒருவன் தன்னுடைய வாழ்நாளில், தனக்காகவோ அன்றிப் பிறருக்காகவோ செய்ய வேண்டுமென்று எண்ணுகின்ற காரியங்கள் பலவற்றுள், முக்கியமானதாகவும் இன்றியமையாததாகவும் கருதப்படும் காரியத்திற்கே, ‘இது ஒன்றுதான் என்னுடைய வாழபுக்கையின் இலட்சியம் அல்லது குறிக்கோள்’ என்று சொல்லப்படுவது.
இந்த இலட்சியம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அவருக்கும். அவர்களின் வாழ்க்கையின் அமைப்பைப் பொறுத்து இலட்சியங்களும் வெவ்வேறு விதமாக அமையும். பாடகனுக்குப் பாடுவதே அவனுடைய வாழ்க்கையின் இலட்சியம். பணக்காரனுக்கு மேலும் மேலும் பணம் திரட்ட வேண்டுமென்பதே இலட்சியமாக இருக்கும். திருடன், திருட்டுத் தொழிலையே தன்னுடைய இலட்சியமாகக் கொள்வான். இப்படியே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை ஒவ்வொரு இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டே நடத்திச் செல்வர். வாழ்க்கையில் மேற்கொள்ளப் படும் இலட்சியங்களைத் தமக்காக மட்டுமு“ மேற்கொள்பவர் களும், தமக்கும் பிறர்க்குமாக மேற்கொள்பவர்களும்; தமக்கில்லாவிட்டாலும், தாம் மேற்கொள்ளும் இலட்சியம் பிறருக்கும் பயன்பட்டால்போதும் என்று மேற்கொள்பவர்களும் என்பதாகப் பலமுறைகள் உண்டு.

ஆனால் இங்கே பேசப்படும் இலட்சியம், அதனை மேற்கொள்பவருக்கோ அன்றிப் பிறருக்கோ பயன்படாதது. தனக்கும் பயன்படாது; அதனால் பிறருக்கும் பயன் இல்லை என்ற ஒரு இலட்சியத்தை பாம்புடனும் தேளுடனும் விளையாடுவதை) மேற்கொண்டுள்ளவர் யார் என்பதை நாம் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்; “அவரா? அவர் ஒருபோதும் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார்! இதுவெறும் பொய்!” என்றுதான் சொல்வீர்கள். பேரைச் சொன்னால் நீங்கள் திகைத்துப் போவீர்கள். எனவே நாம்பேரைச் சொல்லவிரும்ப வில்லை. இவ்வாரத்தில் வெளியிடப்பட்ட “அரிஜன்” பத்திரிகையைப் புரட்டிப்பாருங்கள். அதில் ‘அஹிம்சையின் தாத்பர்யம்” என்று ஒருகட்டுரை காணணப்படும். அந்தக்கட்டுரையை எழுதியவர் தான், தன்னுடைய இலட்சியம் பாம்புகளுடனும் தேள்களுடனும் விளையாடுவது என்று குறிப்பிட்டிருக்கிறார். அதைப்படித்தபின், அதை எழுதியவர் யார் என்பதையும், அவர் ஏன் பாம்புகளுடனும் தேள்களுடனும் விளையாட விரும்புகிறார்? அதனால் அவருக்கோ அன்றிப்பிறருக்கோ ஏற்படும் பயன் என்ன. இந்த இலட்சியத்தை அவர் ஏன் மேற்கொண்டார்? இந்த லட்சியம் ‘இராமநாமம்’ கைகூடினால் தான் நிறைவேறும் என்றுகூடஅந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறாரே! இதன்மகத்வம் யாதோ? என்பனவற்றையும் யோசித்துப் பாருங்கள். யோசனைக்கும் அகப்படாவிட்டால் உடனே வார்தாவுக்கு எழுதுங்கள்

(திராவிடநாடு - 16-6-46)