அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாகப் பிரிவினை!
“பாகப் பிரிவினையா? உங்களுக்கு ள்ளாகவா? இவ்வளவு காலம் ஒன்றாக இருந்துவிட்ட பிறகா? ஏன்?”

நேரில் கேட்கிறார்கள் இதுபோலப் பலகாலமாக ஏக குடும்பமாக இருந்து வந்தவர்கள். திடீரென்று பாகம் பிரித்துக் கொள்ளக்கண்டால்.

எவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்த எண்ணம் ஏற்பட்டது பாருங்கள். நகமும் சதையும் போல வாழ்ந்து வந்தார்கள். அண்ணன் போடும் கோடு தாண்டாத தம்பி! தம்பியைக் கேளாமல் எந்தக் காரியமும் செய்யாத அண்ணன். இப்படிப்பட்ட குடும்பம் சார்! பேரன் பேத்திகள் எடுத்தான பிறகு, பாகத்தைப் பிரிக்கவேண்டும் என்று தோன்றுகிறது! இதுவரையில் அண்ணனுக்குத்தான் சகல பாத்தியமும் இருக்கட்டும் எனக்கு ஏன்? அவர் சுகமே ஏன் சுகம். அவருக்காகவே நான், என்று கூறிவந்தார், தம்பி.

தம்பிதானே, எல்லாக் காரியத்தையும் கவனித்துக் கொள்கிறான். நான், என்ன செய்யவேண்டி இருக்கிறது. எல்லாம் தம்பி பார்த்துக்கொள்ளட்டும் என்று பேசிவந்தார் அண்ணன்.

பிறகு அண்ணன்மீது தம்பிக்கு வருத்தம் - கோபம் - சொத்தை அவர் சரியாகப் பரிபாலிக்கமாட்டார் என்ற சந்தேகம் - சொத்து அடியோடு சிதறி விடுமோ என்ற பயம் - சொத்தைக் காப்பாற்றியாக வேண்டுமே என்ற ஆககறை - இவை காரணமாகப் பாகம் பிரிகிறது. பாகம் பிரிந்த பிறகு நேசம் நிலைத்திருப்பதுமுண்டு. சில இடங்களில் விரோதம் மூளுவதுமுண்டு - அது பாகப் பிரிவினைக்கு முன்பு பிரிவினையின் போது, இருந்த சூழ்நிலையையும் கையாளப்பட்ட முறையையும் பொறுத்த விஷயம். கையில் கடப்பாரை தூக்கிக்கொண்டு “நான் தெருப் பக்கத்து அறைச்சுவரை இடிக்கப் போகிறேன் - அது ஜன்னல் இல்லாத அறை - அவருக்குள்ள படுக்கை அறையிலே ஜன்னல் இருக்கிறது. காற்று நிம்மதியாக வருகிறது. நான் மட்டும் வேக வேண்டுமா? அவருக்கு உள்ள பாத்தியதை எனக்கும் உண்டு” என்று தெருவார் கூடும் அளவுக்குக் குவி, பிறகு பாகப்பிரிவினை நடந்திருந்தால் விரோத உணர்ச்சிதானே பலப்படும். நாசுக்கான முறையில், பாகப் பிரிவினை ஏற்பட்டால் ”நம்ம தம்பி வீட்டுக்கு இந்தக் கத்தரிக்காயைக் கொடுத்தனுப்பு” என்று கூறும் அண்ணனும், “அண்ணனுக்கு ஆவல் பாயாசம் என்றால் பிரியம் கொடுத்தனுப்பு என்ற கூறித் தம்பியுமாக இருக்கமுடியும். வேறு முறை, வேறு விளைவுகளைத் தரும். பல குடும்பங்களிலே பாகப்பிரிவினைக்கு சர்க்கார் பொறித்த முத்திரையை விடத் தெளிவாகத் தெரியக் கூடியபடி, பாகப் பிரிவினைத் தகராறால் உடலிலே தழும்புகள் பொறிக்கப்பட்டு விட்டிருக்கும்.

இந்தப் பாகப்பிரிவினை உணர்ச்சி, சுயநலம் காரணமாகவேதான் ஏற்படும் என்று கூறமுடியாது. ஏதோ ஒரு வகைப்பற்று, பாசம், சொத்திலே, நமக்கென்று ஏதாவது இருக்கவேண்டும் என்ற ஆசை, நமக்கென்று ஏதேனும் இருந்தால் நம் இஷ்டப்படி அதைக் கொண்டு வாழவும், விருத்தி அடையவும் முடியுமோ என்ற எண்ணம், இப்படி ஏதேதோ காரணங்கள் உண்டாகும். வேதாந்திகள்கூட பீதாம்பரத்தைப் பங்கு போட்டுக் கொள்ளும் அளவுக்கேனும், இந்த உணர்ச்சியைப் பெறுவார்கள். ஆனால், பொதுநலத்துக்காகத் தன்மை ஆர்ப்பணித்து விட்ட, பெரியவர்கள் மட்டுமே, இந்த எண்ணத்திலிருந்து தப்பமுடியும். அவர்களுக்கு அந்தப் எண்ணம் எழ முடியாது. நேரம் இல்லை நினைப்பும் அவ்வழி செல்லாது.

நாட்டு மக்கள் நலிகிறார்களே, அவர்களை ஏ;பபடி உடேற்றுவது, வரண்டுகிடக்கும் வெளிகளை எப்படி வயல்களாக்குவது, உரிமை இழந்துள்ள மக்களை எப்படி வீரராக்குவது, என்பன போன்றவைகளைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து, அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் பணியிலே மும்முரமாக உடுபட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு, வயலில் வரகு விளûந்ததா, சோளம் கிடைத்ததா, வட்டிப்பணம் சரியாக வந்ததா, குறைந்ததா, வண்டிச் சக்கரம் புதுப்பிக்க வேண்டுமா, வேண்டாமா என்பன போன்றவைகளில் எப்படி அக்கறை தோன்ற முடியும்! ‘ஐனோ தானோ’வென்றுதான் இருக்க முடியும்.

உண்மைப் பொது வாழ்வு, சொந்தப் சொத்துப் பரிபாலனைத்திலே சாதாரண மக்களுக்கு ஏற்படும் அளவு அக்கறையைத் தராது; தருகிறது என்றால், உண்மைப் பொதவாழ்வு போல இருக்கிறது. ஆனால், இரண்டு வேலையும் காத்திருக்கின்றன என்று பொருள் மாற்றுக் குறைந்த பொன்தான். பலருக்கு உரைத்ததால் கிடைக்காது - எனவே விஷயம் வெளியே புகையாது. பொது வாழ்வுக்காகத் தங்களை ஆர்ப்பணம் செய்து விட்டவர்கள் தவிர - அவர்கள் கை விரல்விட்டு எண்ணிவிடக் கூடியவர்கள்; மற்றவர்களெல்லாம், பாகம் - பங்கு - என்று நிர்வாகம் - என்று காரியம் - என்றுதான் பேசுவார்கள் - எண்ணுவார்கள். பாகப் பிரிவினை உணர்ச்சி வரத்தான் செய்யும். ஆனால், அவ்விதம் பிரிந்தால் விரோதித்தே ஆகவேண்டும் என்பதில்லை.

அண்ணனும் தம்பியும் பேசுவதில்லை - ஆண்ணி தொட்ட தண்ணீரையும் குடிப்பதில்லை, என்று வைராக்கியமாக இருந்து கொண்டே ஒரே குடும்ப வாழ்க்கை நடத்துவர் சிலர்.

இத்தகைய வாழ்க்கை, பாகப் பிரிவினை ஆகி, இரு குடும்பங்களாக இருந்து கொண்டு, நேசமாகவும் இருக்கும் முறையைவிடக் கெட்டதா - இரண்டிலே எது சிறந்தது என்பதை நன்கு சிந்திக்க வேண்டும்.

குடும்பங்களிலே நடைபெறும் கோலாகலங்களுக்காக அல்ல. நாட்டிலேயே இன்று இந்தப் பிரச்சனை மிக மிக முக்கியமானதாகவும் சிக்கலுள்ளதாகவும் ஆகிவிட்டது.

பாகப் பிரிவினை, கேட்கும்போது, முதலடியாக, அவ்வளவு கெர்வமா? அவ்வளவுக்குத் துணிந்துவிட்டானா? என்றுதான் கேட்பர்.

பிறகு, “எவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். எதற்காகப் பிரியவேண்டும். பிரிவதால் இருவருக்குந்தானே கஷ்டம் குடும்ப கௌரவமும் பலமுந் தானே பாழாகும்” என்று புத்தி கூறுவர்.

பிறகு, “பாகம் வேண்டுமாம் பாகம்! சரி, எடுத்துக்கொள்ளட்டும். அப்பன் வைத்துவிட்டுப் போனதில்தானே, இவனுக்குப் பாகம்? ஆதோ அந்த வீடும், மூணு காணிநிலமும், மகராஜனாக, அதிலே பாகம் எடுத்துக் கொள்ளட்டும். மற்றவை நான்கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது. இவனுக்கு அதிலே கைவைக்க உரிமை கிடையாது. நான் பார்லிமெண்டுவரைக்கும் போகத் தயார்!” என்று வம்பும் வல்லடியும் செய்வர்.

இதுபோலவே, பாகிஸ்தான் பிரச்சினை, சிக்கலுள்ளதாக்கப் பட்டுவிட்டது. பிரிந்து வாழ்ந்தாலும், பிரியம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை மறந்து, இவ்வளவு சிக்கலை, இரத்தம் சிந்தப்படும் அளவுக்கு முற்றிலும் விட்ட சிக்கலை வளர்த்துக் கொண்டார்கள்.

காந்தியாரும் - ஜின்னாவும் கையொப்பமிட்டுக் கேட்டுக் கொள்கிறார்கள், வேண்டாம் கலகம்! பலாத்காரம் வேண்டாம்! என்று.

அதுவும், வெள்ளைக்கார வைசிராய், இருவரையும் அழைத்து, இந்த அறிக்கையைவிடச் சொல்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் கலகம் முடியவில்லை - மக்கள் மடிகிறார்கள் - அமைதி அழிகிறது - உலகம் கேலி செய்கிறது.

இந்தப் பாகப்பிரிவினை இவ்விதம் இருக்கிறது. நாட்டைக் களமாக்கிக் கொண்டு.

நமது பிரச்சினை, பாகப்பிரிவினை என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், இது தனிவிதமானது. இதற்கு ஏற்பட்டுள்ள சிக்கலும் தனிவிதமானது.

அங்குப் பிரச்சினையை நன்கு புரிந்துகொண்டவர்கள், சொந்த சுகத்தை விட்டுவிட மனமில்லாததால், நாட்டைக் களமாக்குகிறார்கள். இங்குப் பிரச்சினையை நன்கு புரிந்து கொள்ளாததால், சிக்கல் வருகிறது.

இது, பாகப்பிரிவினைகூட அல்ல; அவசியமற்ற முறையிலும், கேடு பயக்கும் விதத்திலும், இந்தியாவுடன் பிணைக்கப்பட்டு விட்ட, நமது சொந்த நாட்டை, அந்தப் பிணைப்பிலிருந்து பிரிந்து, தனி அரசாக்கித் தன்னாட்சியாக்குவது.

இந்தப் பிரச்சனை, முதலிலே, நாம் தமிழ்நாடு தமிழருக்கே ஏன்தான் துவக்கினோம்.

தமிழர், என்பதை விளக்கி, தமிழரசு என்பதை விளக்கிக் கொண்டிருக்கையில், இடையே ஏழும்பிய சந்தேகங்கள், கேள்விகள் ஆகியவற்றைக் கவனித்து, அதற்கேற்ற விதமாகத் திட்டத்தை திருத்தி அமைத்து, திராவிட நாடு திராவிடருக்கே என்று கூறலானோம்.

தமிழர், தமிழ்நாடு, தமிழ்நாடு தமிழருக்கே என்று நாம் கூறிவந்தபோது, தமிழர் என்றால், தனி இனம், ஆரியத்தின் கலப்புக்கு முன்பு, உயர்ந்த பண்புகளுடன் வாழ்ந்த இனம், என்பதை வலியுறுத்தி வந்தோம். வெறும் மொழி மட்டுமல்ல தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள், என்பதை விளக்கிவந்தோம். தமிழ்நாடு தமிழருக்கே என்றபோது, தமிழ்நாடு இன்று மதம், அரசியல், பொருளாதாரம் எனும் துறைகளிலே முறையே, ஆரியர், வெள்ளையர், வடநாட்டார், என்பவைகளால் பாழாக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி, இந்த நிலைமாறினால் மட்டுமே தமிழ்நாடு வளமாக வாழமுடியும். இதற்குத் தமிழ்நாடு, தனி அரசுரிமை பெறவேண்டும் என்பதை விளக்கினோம்.

தமிழர் தனி இனம், தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள் என்பதை மேலும் இராயும்போது, இந்திரரும் கேரளரும் இதே போன்ற நிலை கொண்டவர்களே. இவர்களும், தமிழரைப்போலவே, ஆரியத்துக்குப் பலியானவர்கள், வநடநாட்டுப் பொருளாதாரத்துக்கு இரையாகிறவர்கள், என்பதையும் எடுத்துக்காட்டி அவர்களும், தங்கள் நாட்டை, பார்ப்பன - பனியாப் பிடிப்பிலிருந்து விடுபட வேண்டும் என்று கூறினதோடு, கூட்டு முயற்சி செய்யவேண்டும் ஏன்றோம். கூட்டு ஆட்சி நடத்தலாம் ஏன்றோம். இவ்வளவுக்கும் இதாரமாக, இன்று தமிழர், தெலுங்கர், கேரளர், என்று மொழிவழி வேறு வேறாகக் காணப்படும் மூவரும், திராவிடர் என்ற மூல இனத்தவர் என்பதை விளக்கியதோடு மொழியும்கூடத் தமிழிலிருந்தே மற்றவை என்பதையும் கூறினோம்.

கூறினோமென்றால், வெட்டிப் பேச்சாக அல்ல.

நிலநூல், மொழிநூல் மனப்பண்பு நூல், வரலாறு ஆகியவைகளை இதாரமாகக் கொண்டு கூறினோம்.

திராவிடநாடு, திராவிடக்கே என்று கூறலானோம். தமிழருக்கு, எவ்விதமான புதுவாழ்வு தேவை என்று விரும்பினோமோ, அதே விதமான புதுவாழ்வு இந்திரருக்கும், கேரளருக்கும் வேண்டும் என்று கூறினோம் என்று பொருள். மூவரும் இன்றுள்ளது போல மதத்திலே ஆரியருக்கும் அரசியல் பொருள் இயலிலே டில்லிக்கும் அடிமைப்பட்டிருப்பது ஒழிக்கப்பட்டு, தமிழர் தமிழகமும், இந்திரர் இந்திர நாடும், கேரளர் கேரளமும் அமைத்துக் கொண்டு, தத்தமது எல்லையில் தத்தமது விருப்பப்படி வாழ்ந்துகொண்டு வருவதுடன், மூவரும் கூட்டாக நின்று பொதுவான காரியங்களையும் மூன்று இடங்களின் முன்னேற்றத்துக்கா காரியத்தையும் கவனிக்க வேண்டுமென்றும் கூறினோம்.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற உரிமை முழக்கத்தை அன்பழைப்பாக்கியபோது, அது திராவிடநாடு, திராவிடநாடு என்று வளர்ந்தது.

இங்குக் கவனிக்கவேண்டியது மூல நோக்கத்தை.

அந்த மூலநோக்கம், ஆரிய ஆங்கிலேய, வடநாட்டுப் பிணைப்பிலிருந்து விடுபட வேண்டும் என்பது.

இந்த மூல நோக்கத்தை ஏற்றுக்கொள்ள இந்திரமும் கேரளமும் ஆசைந்தால், திராவிடநாடு எனும் அளவுக்குத் தரணி விரிந்திருக்கும்.

அவர்கள் ஆசையாவிட்டால், தமிழகம் என்ற ஆளவோடு இருக்கும். ஆனால், அதுதான் முக்கியம் - அளவு குறைந்து இருப்பினும், மூலநோக்கம் முடியாது - தனி அரசுரிமை இருக்கும்.

இந்த விளக்கத்தைக் கவனியாதாலேயே பலரிடையே குழப்பம் உண்டாகிறது.

துவக்கத்தின் போது கிளம்பிய கேலிக் கண்டனத்தை நாம் புறக்கணித்துவிடுகிறோம். இன்றுள்ள நிலையைக் கவனிக்கவேண்டியதே முக்கியம்.

திராவிடநாடு திராவிடருக்கே என்ற பேச்சுக்கு எதிர்ப்புப் பலரகம்.

1. பாரத் வர்ஷத்தைப் பிளக்கக்கூடாது என்று பேசுபவர்கள். நமது அனுதாபம் அவர்கட்கு, ஏனெனில் அவர்களின் பாரத்வர்ஷம் தேய்ந்து விட்டது.

2. திராவிடர், திராவிடர் என்று இங்கே கூறி என்ன பயன்? இந்திரர் ஏற்றுக் கொண்டனரா? கேரளம் ஆசைகின்றதா? ஏன் நாமாக, வலிய வலிய அவர்களுக்காகப் பேசவேண்டும்? நம் காரியத்தைக் கவனிப்போம். தமிழ் நாடுவரை பேசுவோம் என்று கூறுபவர்கள் இவர்களிலும் இருவகை உண்டு.

ஆ. இந்திரமும் கேரளமும் சென்று திட்டத்தை விளக்கவில்லையே. என்ற வருத்தத்தால் பேசுபவர்கள்.

இ. பேசிப் பயன்கிடையாது, இந்திரரும், கேரளரும், தமிழருடன் கூடி வாழவே மாட்டார்கள் என்று எண்ணுபவர்கள் - இலேசாக இந்திரரிடமும் கேரளரிடமும், கோபம்ம கொண்டவர்கள்.

3. தமிழ்நாடு என்று மொழிவாரிதான் பிரியவேண்டும். உள்விவகாரத்தைக் கவனிக்க உரிமைவேண்டும் - ஆனால், மத்திய சர்க்கார் ஒன்று வேண்டும் - அது இந்திய சர்க்காராக இருக்கவேண்டும் - பாகிஸ்தான் பிரிந்துவிட்டால், இந்துஸ்தான் மத்திய சர்க்காரோடு இணைந்திருக்க வேண்டும் என்பவர்கள், அதாவது,

உறவுக்கு எல்லை இமயம்
உரிமைக்கு எல்லை வேங்கடம்
என்று பேசுபவர்கள்

இந்த மூன்று வகையினரின் பிரச்சாரம், பிரச்சனையைச் சிக்கலாக்கத் தானே தெரியும்.

இந்தச் சிக்கலை நீக்கவேண்டியது நமது கடமை எனவேதான், இந்தக் கிளர்ச்சியின் வளர்ச்சியை விளக்கினோம் மூல நோக்கத்தை எடுத்துக் காட்டினோம்.

பாகப் பிரிவினை தேவை - என்று மட்டும் கூறவில்லை - பிரிகிற பாகம் எப்படி இருக்கவேண்டும் என்றும் கூறுகிறோம்.

நாடு, தேவை என்று எல்லையை மட்டும் குறிப்பிடவில்லை நாட்டிலே என்ன நிலை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

“இங்கிருந்த அதுவரையில் ஏன் நாடு” என்று ஆம்பு ஏய்வது மட்டுமல்ல இங்கு இன்று இந்நிலை இருக்கிறது அது நல்ல நிலையல்ல; நான் நல்ல நிலைமையடைய வேண்டுமானால் இன்னின்ன பிணைப்புகளிடமிருந்து, ஆரியம், ஆங்கிலம், வடநாடு எனும் பிணைப்புகளிலிருந்து ஜெபமாலை, துப்பாக்கி, தராசு எனும் கருவிகளைக் கொண்டு நமது வளத்தைக் கருக்கும் தொடர்புகளிலிருந்து விடுபடவேண்டும் என்று கூறுகிறோம்.

நாம் கோருவது, புது அரசு முறை - வெறும் சர்வே செய்து, எல்லைக்கல் நாட்டுவது அல்ல.

நமது இலட்சியம், மொழியால் மட்டுமல்ல இனத்தால் - அதாவது தனியான வாழ்க்கை முறையினால் சித்தரிக்கப்படும் நாடு ஆகும்.

இந்த மூல நோக்கத்தை, இந்திரமும் கேரளமும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம் - ஏற்றுக்கொள்வதிலே அந்த இரு மக்களுக்கும் நலன் இருக்கிறது என்று நம்புகிறோம், அவர்கள், டில்லியுடன் இணைந்து இருப்பதைவிட, கூட்டாட்சியாக நம்மோடு இருப்பது நல்லது என்று எண்ணுகிறோம். இதை எடுத்துக் கூறும் அளவுக்கு, நமக்கும் அவர்களுக்கும் பாத்தியதை, உறவு, ஒரே இனம் என்றம உரிமை இருக்கிற காரணத்தால்.

அவர்கள் அடியோடு இந்த அன்பழைப்பை ஏற்க மறுத்தால் என்ன ஆகும்? நமது மூலநோக்கம் கைவிடப்பட மாட்டாது. தமிழகம் வரையிலேனும், நாம் இன்பத் திராவிடம் - (புது முறையான சமுதாய, பொருளாதார, மத ஆட்சி முறை) இருக்கும். திராவிடம் என்பது நிலப்பரப்பை மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டும் சொல் ஆரியம்! என்ன பொருள்? ஒரு இடமா? இல்லை! ஒருவகை வாழ்க்கை முறை, திராவிடம்? வாழ்க்கை முறை, அத்துடன், வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு பூபாகம் - தரணி.

இந்த வாழ்க்கை முறை, பண்பாடு, இந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளிலும் இருக்கவேண்டும் என்பது நமது ஆசை. அது உடேறாவிட்டால் வாழ்க்கை முறையையே விட்டு விடுவோம் என்றல்ல அர்த்தம் - ஏற்றுக்கொள்ள ஆசையும் இடம் வரையில் அமைப்போம் என்று பொருள்.
நாம் திராவிட நாடு. திராவிடருக்கே என்று கூறும்போது, தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறுவதை நாம் எந்த வகையிலே ஏற்றுக்கொள்கிறோம். என்றால், பழக்கடை செல்லும் இரு நண்பர்களில் ஒருவர், “ஒரு டஜன் கமலா கொடு” என்று கேட்க மற்றவர். “ஏனப்பா ஒரு டஜன்! சிரமம், எடுத்துச் செல்ல அரை டஜன் போதும்” என்று கேட்கிறார். அந்த முறையிலே மட்டுமே, தமிழ்நாடு தமிழருக்கே என்பதை வரவேற்கிறோம்.

ஆனால், “ஒரு டஜன் கமலா கொடு” என்று ஒருவர் கேட்க, “வேண்டாம், ஆறு வாழைப்பழம் கொடு” என்று மற்றவர், கேட்டால் கேட்கப்படும் பொருளின் அளவுமட்டுமல்ல, வகையே மாறி விடுகிறதல்லவா! அது போலவே, ஆரியம் ஆற்ற வடநாட்டுப் பிணப்பு ஆற்ற இடம் வேண்டும், அது விந்தியம் வரை இருக்கவேண்டும் என்று நாம் கேட்க, “அவ்வளவு தூரம் போக வேண்டாம். போக முடியாது. வேங்கடம் வரைபோதும், அதுதான் முடியக்கூடிய காரியம்” என்று கூறினால், கூறுபவருக்கும் நமக்கும், கோரும் பொருளிலே, அளவிலே வித்தியாசம் என்று பொருள் 12 இம் பக்கத்தில் தனது நிர்வாகத்திலே, வைத்துக் கொள்ளத் திட்டம் தீட்டுகிறார்கள். பிறகு, மாகாணங்கள் தேவைப்பட்டால், காவடி எடுக்கவேண்டும் போலும்! ஏன் இந்த நிலை?

பணப் பெட்டியிலே, மத்திய சர்க்காருக்கு இவ்வளவு அதிகமான அதிகாரத்தைக் கொடுத்துவிட்டால் மாகாண சுயாட்சியே, ஒரு கேலிக் கூத்தாகத்தானே போகும்.

பணம், பலம் இரண்டும் மத்திய சர்க்காருக்கு மிச்சம் என்ன இருக்கும், மாகாணத்துக்கு?

வியாபாரமோ, வடநாட்டின் ஆலாவுதீன் தீபம்! இனி எதைக் கொண்டு, தமிழ் மாகாணம்! பெருமை கொள்ளமுடியும், வளர முடியும், வாழ முடியுமா?

சொந்தச் சொத்தை நிர்வகிக்க முடியாத ஆபலை தனவானிடம் அதைக் கொடுத்துவிட்டு, மாதந்தோறும், சீமான் வீடு சென்று, செலவுக்குப் பணம் கேட்டுப்பெறும் பரிதாப நிலைதான் மாகாணத்துக்கு, “இதற்காக மார்தட்டி, தோள் கொட்டி, மொழிவழி மாகாணம் அமைத்தோம்,” என்று கேட்கும் தமிழர் எங்கே?

சென்னை சட்டசபை மேளதாளத்துடன், நிறைவேற்றிய, மொழி வழி மாகாணம் பிழைக்கும் வழியைப் பிறரிடம் கொடுத்துவிடடதே பேதைமை, இதைவிட வேறு என்ன இருக்கமுடியும்?

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கினால், கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா, என்று கேட்டார் பாரதியார், இதோ, கண் போன்ற வரிகளை, மத்திய சர்க்காருக்குத் தந்துவிட்டுத் தமிழ் மாகாணம் எனும் சித்திரத்தை வாங்குகிறார்கள் - அதற்காகப் பாராட்டப்பட வேண்டும் என்றுமட் எதிர்பார்க்கிறார்கள்.

மொழிவழி அமைப்பை ஏற்படுத்துவதைவிட, இன அரசு சிறந்தது - நமது பகுதிக்குத் திராவிட நாடு திட்டமே ஏற்றது, என்று விட்டகுறை, தொட்ட குறைக்காகவேனும், குமாரராஜா கூறியிருக்கலாம் - பாபர் - அவர:கு எவ்வளவோ கவலையிலே, திராவிட நாடு மீது எப்படிக் கவனம் செலுத்தும் லோடஸ்மில் வர்த்தக சங்கம், வட்டிக்கடை முதலிய பல அலுவல்கள் - தமிழ் ஆசையை வேறு வளர்க்க வேண்டிய மகத்தான பொறுப்பு இருக்கிறது - எனவேதான் போலும், அவர் பேச மறந்தார். திராவிட நாடு பற்றி - சேலம் அவருக்குத் தானோர் திராவிடன் என்பதைக் கூற மறுக்கும்படி ùச்யதுவிட்டது போலும் - கிடக்கட்டும் - சொல்லத் தவறிய குமாரராஜா, வெட்கித் தலைகுனியும்படி பிரதிநிதிகளற்ற திராவிடர் கழகத்தின் திட்டமான திராவிடநாடு திராவிடருக்கே என்பது சட்டசபையில் பேசப்பட்டது கண்டு, நாம் மகிழ்கிறோம் - அந்த மகிழ்ச்சியின் காரணமாக, திராவிட இனத்தை மறந்த அந்தச் சீமானின் போக்ûக்ககூடத் துக்கமென்று தள்ளிவிட்டு உண்மைக்கு நுழைவுச் சீட்டு தேவையுமில்லை - ராஜாக்களும் குமாரராஜாக்களும் தேவையில்லை, என்று பெருமிதத்துடன் கூறுகிறோம்.

சென்னை சடட்டசபையில் நமது நண்பர்கள், ஜனாப்கள் ஆஸ்மாயில், ஆமீத்கான், சலாம் ஆகியோர் திராவிட ஸ்தானமே தேவை, வெறும் மொழிவாரி மாகாணம் போதாது - பிரச்சனை தீராது என்பதை விளக்கினார். நமது நன்றி அவர்கட்கு.

நாம், தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறியபோதும் சரி அதன் முழு உருவத்தை விளக்கித் திராவிட நாடு திராவிடருக்கே என்று கூறும் போது சரி வரிகளிலே முக்கியமானவர்களை மத்திய சர்க்காரிடம் கொடுத்துவிட்டு, வியாபார ‘பலகானை’ வடநாட்டாரிடம் கொடுத்துவிட்டு அரசியல் பீடத்தை டில்லியில் அமைத்துவிட்டு ‘இத்மார்த்தத்தை ஆரியரிடம் ஒப்படைத்துவிட்டுத் தமிழ் மாகாணத்தை அமைத்துக் கொள்ளும், ஊப்புசப்பற்ற திட்டத்தைம அல்ல, வலியுறுத்தினது, சிறகொடிந்த பறவையாக, முச்சுறந்த மங்கயைôக, சூளைபோன பலாவாக, வரி, அதிகாரம், வியாபார வசதி முதலியனவற்றை இழந்து, தமிழர் ஒரு மாகாணம் பெறுகின்றனர் - இதிலே பெருமையும் கொள்கின்றனர்!

அளவிலே வேங்கடத்தோடு நின்று விடுவதாயினும் சரி, விந்தியம்வரை வருவதாயினும் சரி, நிலை தன்னரசு பெற்றதாக இருக்க வேண்டுமே! ஆஅது ஆற்ற நிலைக்கு ஏன் இவ்வளவு பாடு! இது, தமிழ் நாடுமல்ல, தமிழரசும் இகாது!

உரிமையைப் பறிகொடுத்து விட்டு ஊராள்கிறோம் என்று பேசுவது வெறும் மனப்பிராந்தி!

அ. தொகுதியிலிருந்து விலகி தனிவாழ்வு நடாத்தும் உரிமையைப் பெற்றால் மட்டுமே, தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கமுடியும்! தன் வளத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்! நீண்ட காலமாகக் குவிந்துவிட்ட இழிவையும் பழியையும் துடைத்துக் கொள்ள முடியும். வெறும் மொழிவழி மாகாண அமைபபு, நாடகத்திலே வரும் வீரன வேடம் - கிரீடம் தகரம் - ஜொலிக்கும் கற்கள் வெறும் கண்ணாடித் துண்டுகள் - வில்லும் ஆம்பும் ஒலியும் - மீசைகூட ஓட்டு! - இந்நிலைக்குத் தமிழரசு என்று பெயரிடுவது, தமிழ் மொழியையும் கேலி செய்வதாகும்.

தமிழருக்கு, வேங்கடம் வேண்டும் என்றனர் - சரி - இந்திரருக்குச் சென்னை கூடாது என்றனர் - சரி - எல்லை கோலித் தமிழ் மாகாணம் அமைக்க வேண்டும் என்றனர் - சரி - அடி மலையை ஆளந்தாயிற்று - கட்டடம் எப்படி இருக்கும்? வடநாட்டுக் காண்ட்ராக்ட் கட்டடமா? தமிழ் மாகாணம் பெறுவோர், அதன்நிலை எப்படி இருக்கும் என்று கவனிக்கும் போதல்லவா, வேதனையின் உருவம் தெரிகிறது!!

என்ன மாறுதல் காணப்போகிறோம். இந்த மொழி வழி மாகாண அமைப்பினால், சட்ட சபையிலே, காலாக்குகளும் கிரிகளும் துர்க்கா பாய்களும், புச்சிரெட்டி பாளையங்களும், வீற்றிருக்க முடியாது.
அதுபோலவே, இந்திர சர்வகலா சாலைக்கு விதிவகுக்கவும் விசாக பட்டணத் துறைமுகத்துக்குத் திட்டம் தீட்டவும், சென்னையில் சட்டசபைக்கு அதிகாரம் இராது.
தமிழ் மாவட்டங்களில் நன்மைக்காகத், தமிழ்ப் பகுதியிலே வசூலிக்கப்படும் வரி செலவாகும் - அது போன்றே இந்திரத்தில் சட்டசபை, இரண்டு மூன்று!

இவ்வளவுதானே! இம்மி அளவும் முன்னேற முடியுமா? இந்த நிலை மட்டும் பெறுவதனால்.

ஆ. தொகுதி எனும் புதிய கூண்டுக்குள் அல்லவா, நாம் உலவவேண்டும் - இதிலே ஊலாவுவதுதான் நிலை என்றால், அதனைத் தவிர்க்க முடியாது, நீக்க இயலாது. எதிர்க்கத் துணிவு ஏற்படாது என்றால், சென்னை மாகாணம் என்ற பெயருடன் ஊலாவினால் என்ன, தமிழ் மாகாணம், இந்திர மாகாணம், கேரள மாகாணம், கர்நாடக மாகாணம், என்று புதுப்பெயரும், தனித்தனி உருவங்களும் கொண்டு ஊலாவினால்தான் என்ன! பலன் ஒன்றுதானே. பெருமாளுக்குப் பெத்த பெருமாள் என்ற பட்டம் கிடைத்த கதைதான்.

இதனால், திருப்தி அடைபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் உரிமையின் முழுப் பொருளையோ, தமிழனின் உள்ளத்தையோ, காலம் காட்டும் குறியையோ, உணராதவர்கள் என்றே கருதுகிறோம்.

மற்றவர்கள் திருப்தி பெற்றாலும் ‘தமிழ் முரசே’ கொட்டும் நண்பரும் அவர் தம் குழாமும், திருப்தி பெற முடியாது என்று நம்புகிறோம் - ஏனெனில், அவர்கள் தீட்டிக் காட்டிய தமிழகம் இதனால் ஏற்படாது. இது காகிதக் கப்பல்! கப்பலோட்டிய தமிழன் பரம்பரையினருக்கு முன்னேற்றம் எனும் கடற்பாதை வழிசென்று, பகுத்தறிவு எனும் திசை காட்டியின் துணைக்கொண்டு, சமதர்மம் எனும் துறைமுகம் செல்ல இந்தக் கப்பல் பயன்படாது! தொகுதியிலிருந்து பிரிந்தால் மட்டுமே இது முடியும் - இதனைச் சட்டசபைத் தீர்மானமாக்கி யுமிருக்கலாம் - மனம் இருந்திருந்தால்.

சென்னை மாகாணத்தை மொழிவாரியாகத் தமிழ்நாடு, இந்திரநாடு, கேரளநாடு, கர்நாடகம் என்று திருத்தி அமைப்பதோடு இந்த இடங்கள்.

ஆ. தொகுதியில் பிணைக்கப்படாமல் தனித்து வாழவும், தனி அரசுரிமை பெற்றுத் தங்களுக்குள் பொது நலனை உத்தேசித்துக் கூட்டாட்சி நடத்தவும் வேண்டும், என்று தீர்மானம் இருந்திருக்க வேண்டும்.

இப்போது நடந்தது என்ன?

இந்திரர் நெடு நாட்களாகவே, தாங்கள் தனி மாகாணம் பெற வேண்டும் என்ற கிளர்ச்சி செய்து வந்தனர்.

இதனைத் திராவிடர் கழகம் ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயருடன் இருந்தபோதே ஆதரித்தது - பிறகும், அந்தக் கோரிக்கையைச் சரி என்றே கூறிவந்திருக்கிறது.

கேரளர், தனி மாகாணத்துக்காகக் கிளர்ச்சி செய்கின்றனர்.

கர்நாடக மாகாண அமைப்புகளும் கிளர்ச்சி இருக்கிறது.

இப்போது நிறைவேறிய தீர்மானம். இந்தக் கிளர்ச்சிகளைத் தேவையற்றவைகளாக்கிவிட்டது அவ்வளவுதான்.

இது, நாட்டிலே உள்ள, காங்கிரஸ் கட்சி, அதற்கு எதிர்க்கட்சி, ஆகிய இரண்டாலும் நெடுநாட்களாகவே, ஒப்புக்கொள்ளப்பட்ட அமைப்பு முறையே யோழிய பலமான எதிர்ப்பை மகத்தான சக்தியைக் கொண்டு, ஒழித்து வெற்றி பெற்றதாகப் பொருளில்லை.

ஆச்சாரியார் மந்திரி சபைக் காலத்திலேயே பாதி வேக்காடாகா இருந்த திட்டம் இப்போது சட்டசபையிலே கொதிவந்தது இறக்கப்பட்டது.

இந்த ‘அமைப்பு’ ஏற்பட்டு விட்டதால், வேலை முடிந்தாக, தமிழ் முரசு எண்ணாமல், அல்லது, சென்னையைப் போரிட்டுக் கைப்பற்ற வேண்டிய நிலை எல்லைக் கமிஷனுக்குப் பிறகும் ஏற்படக்கூடுமோ என்று அஞ்சி, கவாத்து பழகாமல் - தமிழருக்கு, நிலம் என்ன ஆளுவ என்று நிர்ணயித்து விட்டோம், மொழியை அளவு கோலாகக் கொண்டு; முûறியலே இந்திரரும், கேரளரும் நில அளவு செய்து கொண்டனர் - ஆனால், இந்த நிலம், விளைநிலமாக வேண்டுமே, எருதும் ஏரும், எருவும் எங்கோ உள்ள டில்லியில் போட்டு அடைத்துவிட்டு, சாவியை மத்திய சர்க்கார் வைத்துக் கொள்ள விட்டுவிட்டு, பிறகுநாம், டில்லி போவதும் வருவதுமாக - இடையே காசியில் தெரிசனமும் செய்து கொண்டு - இருக்கும் நிலையாக வல்லவோ, அரசியல் நிர்ணய சபையிலே மத்திய சர்க்காரின் அதிகாரப் பட்டியல் தயாரித்து விட்டார்கள். இதனைத் தகர்த்தாலொழிய அளவுபோட்டுப் பெற்ற நிலம் மானம் பார்த்த பூமியாகத்தானே போகும். மார் உடையப் பாடுபட்டாலும், முழுவாழ்வு கிடைக்காதே, என்பதை யோசித்து, உடனடியாக, A தொகுதியில் நாம் இருத்தலாகாது, A-B-C எனும் தொகுதிகளுடன் D என்றோ தனித் தொகுதி தேவை என்ற கிளர்ச்சியைத் துவக்க வேண்டும். இந்தக் கிளர்ச்சிதான் திராவிடநாடு திராவிடருக்கு என்பது இந்திரருக்கு அழைப்பு கேரளருக்கு வேண்டுகோள், கர்நாடகருக்கு அழைப்பு, கொச்சி, திருவிதாங்கூர், மைசூர், ஹைதராபாத் முதலிய சமஸ்தானங்களுக்கு யோசனை கூறி திராவிடக் கூட்டாட்சியை நிறுவ, முற்படவேண்டும். தமிழனின் முரசு அப்போதுதான் வீர ஒலி பரப்பும் - ஆரியப் பனித்துளி வீழ்ந்து நனைந்த முரசில் வடநாட்டான் தரும் இரும்புத் துண்டு கொண்டு தட்டினால் ஓசை தமிழனின் செவிக்கு விருந்தாகாது - முரசும், கிழிந்துபடும். எனவே, இனி முன்னணி வேலையாக A தொகுதியினின்றும் விலகும், விடுதலைப்போர் துவக்கியாக வேண்டும் - முரசு துவக்குவதானால் நாம் வருகிறோம் பணியாற்ற - தயக்கமாக இருப்பதானால் - நாம் துவக்குகிறோம் அந்த விடுதலைப் போரினை, முரசு, நமக்காகக் கொட்டட்டும்! இரண்டும் விருப்பமில்லாக் காரியம் என்றால், தமிழ் முரசு என்ற பெயர் பொருந்தாது - வேறு பெயர் இடவேண்டிய அளவு நமக்கு இன்னும் அந்த நண்பர்களிடம் நம்பிக்கை குறையவில்லை.

காங்கிரஸ் தமிழருக்கே பொதுவாகக் கூறுகிறோம். பட்டாபிகள் தனியாக சட்டசபைகள் தேடிக்கொள்ளவும் ஆவினாசிகள் தமிழ்சட்ட சபைகளை ஆலங்கரிக்கவும் மொழிவாரி மாகாண அமைப்பு பயன்படும் இது போதுமா? பலன் என்ன? தமிழன், மொழிவழி, என்று மட்டும் கொள்ளப்பட்டால், பட்டாபிகள் வரமுடியாதே தவிர, ஆச்சாரியார்கள் ஆனந்தமாக ஆட்சி செலுத்திவர முடியுமே! இதற்கும் பெயர், தமிழரசுதானா? பட்டாபிகள் இங்குச் சட்டசபைகளில் வராத நிலையாக வரும் இலாபத்தையும், ஆ தொகுதியில் நாம் இணைந்து இருப்பதால், பஜாஜøகளும், டால்மியாக்களும், கோயங்காக்களும் பிறரும், நுழைய உரிமையும் வசதியும் பெறுவதால், ஏற்படும் கஷ்டத்தையும், கூர்ந்து கவினத்து - எங்களுக்கு அல்ல - உங்கள் மனத்துக்குப் பதில் அளியுங்கள். சென்னை மாகாணம் மொழி வழி மட்டும் பிரிந்து நாம் என்ன சுகம்காண முடியும் என்று.

ஒரு விஷயம் இன்றே தெரிந்து கொள்ளலாம் தனித்துவிடும் இந்திரம் தமிழருடன் பிணைக்கப்பட்டதால் தனது நலன் பாதிக்கப்பட்டதாக எண்ணும் இந்திரம், தனி மாகாணமான பிறகு, தமிழரைவிட விரைவாக உணரப்போகிறது. A தொகுதி கூடாது என்று திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கமும், தமிழரின் முரசொலியும், கேரளரின் பரணியும் ஒன்று கூடி வடநாட்டு வணிக வேந்தர்களின் வல்லரசுடன் போரிடத்தான் வழி பிறக்கும்.

ஆமடா! அந்த நாள் வந்தே தீரும் ஆகவேதான், அன்று சொன்னதை இன்றும் சொல்கிறோம்.

தமிழ்நாடு தமிழருக்குத்தான் இந்திரநாடு இந்திருக்கு கேரளம் கேரளர்க்கு, கர்நாடகம் கர்நாடகருக்கு
இவையாவும் கூடிய, திராவிட நாடு திராவிடர்க்கு - ஆரியருக்கு அல்ல, பனியாவுக்குமல்ல!

இப்போது ஏற்பட்டுள்ள நிலை, நிர்வாகத்துக்கு ஒரு இடம் அளவிடப்பட்டது. இன்னின்ன மொழியினருக்கு இன்னின்ன இடம் என்று இது வசதிக்கு வேறு எதற்கும் பயன்படாது காரணமற்ற சந்தேகம் நீங்குவதற்குக் கொஞ்சம் பயன்படும்.

ஆனால், அளவுபோட்டு அமைத்துக் கொள்ளும் இடம், என்னவிதமான முறையிலே இளப்படும் - இந்த ஆட்சி முறைதான் திராவிட நாடு திராவிடருக்கு எனும் திட்டம்.

தமிழர், தமிழில் பேசுவர். தமிழ்ச் சட்டசபையில், இந்திரர், இந்திர சட்டசபையில் தெலுங்கில் பேசுவர்.

இப்போது நிறைவேறிய தீர்மானம் செயலுருப் பெற்ற பிறகு, இது நடைபெறும்.

ஆனால், தமிழ்ச் சட்டசபையிலே தமிழிலும், தெலுங்கு, சட்ட சபையிலே ùதேலுங்கிலும் பேசும்போது, என்ன பேசுவார்கள்?

டால்மியா சிமெண்டு
டாடா இரும்பு
கோயங்கா பத்திரிகை
பாரத் பாங்கி
பஜாஜ் இடை
பிர்லா சாயம்
டில்லி உத்தரவு
காசி தீர்த்தம்
கயா கட்டளை
ஜீயர் மடம்
சங்கராச்சாரி பல்லக்கு
தம்பிரானின் ஜடை
வைர முடி
மலாயாவில் தமிழன் ஆவதி
சிலோனில் தமிழன் சீரழிவு
பர்மாவில் தமிழன் படும்பாடு

இவை போன்ற, பேச்சுகள் நமது மதியை மாய்த்து, நிதியைத் தேய்த்தது, கதியைக் கேவலமாக்கி, இன்று நம்மை வாட்டிடும், வார்த்தைகள், நிலைமைகள், இவைகளைத்தான் பேசுவது - இவைகளுக்கு இரையாகும் நிலையே இருக்கிறது என்று பேசுவர். தமிழில், தமிழ்ச் சட்டசபையில் என்றால் - காங்கிரஸ் நண்பர்கள்! நமக்குத் தமிழ் ஏன், தமிழ்ச் சட்டசபை ஏன்!

இவை அல்ல என்றால், A தொகுதியின் பிணைப்பும், ஆரியத்தின் பிடிப்பும் இருக்கும்வரை, வேறு பேசமுடியாதே - நிலைமை மாறாதே!

(திராவிடநாடு - 27-4-47)