அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பகிரங்க விசாரணை வேண்டும்!

கொடுமைகள் குறித்து கண்டனம்

சென்னை தடியடி தர்பார், குன்றத்தூர் குண்டுமாரி குறித்து நாடெங்கும் கண்டனக்குரல் எழும்பியிருக்கிறது.

ஆங்காங்குள்ள நமது கிளைக்கழகங்கள் மேற்படி கொடுமைகள் குறித்து பகிரங்க விசாரணை நடைபெறவேண்டுமென வலியுறுத்தி சென்னை பிரதமருக்கு நூற்றுக்கணக்கான தந்திகளை அனுப்பியுள்ளன.

அவைகளின் விபரத்தை, இடமின்மையால், முழுதும் வெளியிடமுடியவில்லை.

கண்டனத் தந்திகள், தீர்மானங்கள் அனுப்பிய கிளைக்கழகங்களில் சிலவற்றை மட்டும் தந்துள்ளோம். பிற, பிறகு,

சென்னை நகரம்
திருச்சி
இடைக்காட்டூர்
கடையநல்லூர் மற்றும் பல ஊர்கள்

(திராவிடநாடு 19.11.50)