அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஒற்றன் ஓலை
திவான்ஜீ திருப்புகழ்
(ஊர் நிகழ்ச்சிகள், நினைப்புகள், நிலைமை ஆகியவற்றை நமது ஒற்றன் அவ்வப்போது வாசகர்கட்கு இனித் தந்து வருவார். அபிப்ராயம் அவருடையது!)

(சமீப காலத்துக்கு முன்பு திருவாங்கூரில் முதல் நீதிபதியாக (ஊநைக துரளவஉந) நியமிக்கப்பட்ட திருப்புகழ்மணி ஸ்ரீ டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர், முருகள் மீது பாடிய திருப்புகழ் போல், இப்போது திவான்ஜீ சர்.சி.பி.ராமசாமி ஐயர் மீது பாடுகிறார், என்ற ஒற்றன் தெரிவிக்கிறார்! அந்த திவான்ஜீ திருப்புகழைக் கீழே காண்க.)

(பாதி மதிநதி என்ற மெட்டு)
ஜாதி மதி நிறை ஜோதி மணி ஒளி
வீச அருள் செயும் குலநேசா
ஜாலமது மொழி மாது அயர்மகள்
பாதம் வருடிய படையாளா
கால முழுதுநம் கோல குல நெறி
மாய மறவாத மறையோனே
காதல் எனதிடம் காண இருவிழி
காட்டி அருள் செய்த கலைவானா
நாடுமுழுதுமே நானும் கதறினேன்
நாதம் செவிதனில் நுழைந்ததோ?
நமது இனத்தவன் நிதியில் இளைத்தவன்
நமதருள் பெறவென நவின்றோனே
சித்திரச்சோலை திருவிதாங்கூரும்
சத்திரம் நமக் காகாதோ
இத்தரை மீதில் எங்கிருப்பினும்
இனத்தைக் காத்திடல் முறைதானே!
வருவேன் நானுமே வழக்கு தாருமே
வறுமை தீருமே வடிவழகா
வந்தனம் என்ற தெந்தினம் பாட
வாயும் போதுமே வஷிஷ்டனே!
(அயர் மகள் - அயர்லாந்து மாதரசு அன்னிபெசண்ட்)

(திராவிடநாடு - 03.01.1943)