அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எனது நன்றி

அரசியலார், “திராவிட நாடு” இதழின் மீது தங்கள் அடக்குமுறைப் பாணத்தை ஏவி, ரூபாய் மூவாயிரம் ஜாமீன் கட்டுமாறு கட்டளை பிறப்பித்ததை, இது “திராவிடநாடு” இதழின் மீது மட்டும் ஏவப்பட்ட பாணமல்ல, திராவிடப் பெருங்குடி மக்கள் அனைர் மீதுமே ஏவப்பட்ட பாணம் என்பதை எடுத்துக்காட்டும் முறையில், அரசாங்கத்தின் அடக்குமுறைக் காணிக்கையாக அவர்களால் கோரப்பட்ட ரூபா.3000.0.0 அன்பர்கள் தந்துதவியுள்ளார்கள்.

ஜாமீன் தொகை கட்ட ரூபாய் மூவாயிரம் தேவையென்று வேண்டுகோள்விட்ட ஒருவாரத்துக்குள்ளாகவே குறிப்பிட்ட தொகை சேர்ந்துவிட்டது.

அரசியலாரின் அறைகூவலை ஏற்று, அன்புடன் உதவி செய்து ஆதரித்த அனைவருக்கும் எனது நன்றியறிதலையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜாமீன் கட்டுவதற்காகக் குறிப்பிடப்பட்ட தொகை கிடைத்து விட்டபடியால், இனி, அன்பர்கள் இதற்காகப் பணம் அனுப்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்வதுடன் மீண்டும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்,
அண்ணாதுரை

(திராவிடநாடு-19.6.49)