அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எது உண்மை?
‘இந்தி கட்டாயப் பாடமில்லை; விருப்பப் பாடமாகத்தான் வைத்திருக்கிறோம்’ என்று நாவசைக்கத் தருணம் கிடைக்கும் பொழுதெல்லாம், நாடாளும் அமைச்சர்கள் முதல், தீந்தமிழில் நான்கு வார்த்தைகூட்டிப் பேசத் தெரியாத தொண்டர்கள் ஈறாக, செல்லுமிடமெங்கும் நாள் தவறாமல் பேசி வருகிறார்கள்.

இந்தி புகுத்தியுள்ள முறையிலே கட்டாயந்தான் இருக்கிறது என்று மதி சிறிது உடையவர்களும் புரிந்துகொள்ளும் முறையில் விளக்கிக் கூறியுள்ளோம் பன்முறை. நமக்கே சலிப்பு ஏற்படுகின்ற அளவிற்கு எடுத்துக்காட்டியுள்ளோம் இதனை. இந்த உண்மையை ஏற்கவில்லை அமைச்சர்கள். என்றும்போல் உண்மையை மறைத்தே உளறி வழிகிறார்கள்.

காமராஜர், தமிழ்நாட்டுக் காங்கிரசின் தலைவர், சென்னைத் தரணியை ஆளுவோரை அதட்டிக் கேட்கும் நிலையில் உள்ளவர், தம்மிடத்தில் அடக்கம் காட்டாதவர்களை அதிகார பீடத்திலிருந்து இறக்கும் ‘ஆற்றல்’ பெற்றுள்ளவர், அறிவித்துள்ளார், ஹிந்து மொழி புகுத்தியுள்ள தன்மை குறித்து, சென்ற கிழமையில், அருப்புக்கோட்டையில், காமராஜர் தலைமையில், இராமநாதபுரம் ஜில்லா தியாகிகள் மாநாடு நடைபெற்றது. அவர் தலைமையுரையில் குறிப்பிடுகிறார்:-

“பிராமணரல்லாத குழந்தைகளுக்கேதான் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக வைத்தால் படிக்க முன்வருவார்களென்ற நம்பிக்கையுடன்தான் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக வைத்துள்ளோம். பிராமணக் குழந்தைகள் அநேகமாக எல்லோரும் ஹிந்தி படித்து விட்டார்கள்.”

7-11-48 ‘தினமணி’ இதழில், இது வெளிவந்திருக்கிறது. அதே தேதியத் ‘தினசரி’யிலும், இந்தச் சேதி இடம் பெற்றிருக்கிறது.

அமைச்சர்களைக் கேட்கிறோம், காமராஜர் கூறுவது உண்மையா அல்லது அமைச்சர்கள் அறைவது உண்மையா என்று. ஒன்று மட்டும் நிச்சயம். இருவர் கூற்றும் உண்மையாக இருக்க முடியாது. ஒருவர் கூற்று உண்மையகாகவும், மற்றவர் கூற்றுப் பொய்யாகவும் இருக்கவேண்டும். 4-ஆந் தேதி பேசி இருக்கிறார் காமராஜர், அதுவும், மந்திரிமார்களிலே ஒருவரான காளா வெங்கட்ராவ் முன்னிலையில். மறுத்துக் கூறவில்லை மந்திரியார். இதுவரையில் மந்திரிகள் கூறிவந்தது உண்மையாக இருக்குமானால், காமராஜர் தவறாகப் பேசியுள்ளார் என்று, சர்க்கார் மறுப்புக்கூறி இருக்கவேண்டும். இதற்கு மௌனம் சாதிக்கிறது மந்திரி சபையும்!

காமராஜர் கூறிய பின்னராவது, ஒளி மறைவு இல்லாமல் உண்மை வெளியில் தெரிந்துவிட்ட பின்னராவது, மந்திரிகளுக்கு மனச்சாட்சி இடித்துக்கூறி இருக்குமே, அதன் பிறகாவது மந்திரிகள் முன்னாள் பேசிவந்ததற்கு மக்களிடம் மன்னிப்புப் பெற்றுக்கொண்டு, அல்லது இதுவரை கூறிவந்த பொய்க்குக் கழுவாய் தேடும் முறையிலாவது, இந்தி விஷயத்தில் உண்மை கூற முன்வரக்கூடாதா? இதனை அன்றோ மக்கள் எதிர்ப்பார்ப்பர்? பொய்யையே மெய்யாகப் பேசி வாழ்க்கை நடத்துபவரும் ஓரோர் வேளையிலாவது உண்மை கூற முனைவரன்றோ? அதுவும் இந்த அமைச்சர்கள் இடத்தில் எதிர்பார்ப்பது அளவுகடந்த ஒன்றாக இருக்கிறது!

‘Mணூ. ஏ. குடிtச்ணூச்ட்ச் கீஞுஞீஞீடி, Mடிணடிண்tஞுணூ ஞூணிணூ ஐணஞீதண்tணூடிஞுண், ண்ச்டிஞீ tடச்t டஞு ஞஞுடூடிஞுதிஞுஞீ டிண திணிடூதணtச்ணூதூ ண்tதஞீதூ ணிஞூ ஏடிணஞீடி ச்ண் ணூஞுண்தடூtண் ச்ஞிடடிஞுதிஞுஞீ ஞதூ ஞிணிட்ணீதடூண்டிணிண தீணிதடூஞீ ணணிt ஞஞு ச்ண் ஞ்ணிணிஞீ ச்ண் ஞதூ திணிடூதணtச்ணூதூ ஞுஞூஞூணிணூtண். கூடச்t தீச்ண் ணிணஞு ணிஞூ tடஞு ணூஞுச்ண்ணிணண் தீடதூ tடஞு எணிதிஞுணூணட்ஞுணt ணிஞூ Mச்ஞீணூச்ண் ச்ண் ட்ச்ஞீஞு tடஞு குகூக்ஈஙு Oஊ ஏஐNஈஐ OககூஐONஅஃ. ஏஞு தீச்ண் ச்தீச்ணூஞு tடச்t tடஞுணூஞு தீச்ண் ச் ண்ஞுஞிtடிணிண ணிஞூ tடஞு ணீஞுணிணீடூஞு தீடணி தீஞுணூஞு tணூதூடிணஞ் tணி MஐகுஐNகூஉகீககீஉகூ tடஞு ணீணிடூடிஞிதூ ணிஞூ tடஞு எணிதிஞுணூணட்ஞுணt.’

“தம்மிச்சையாக இந்தி கற்பதில் ஏற்படும் அளவிற்கு, வற்புறுத்திப் போதிப்பதால் அதிக பலன் ஏற்படுவதில்லை என்பதனால்தான், தம்மிச்சையாக இந்தி கற்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகத் தொழில் மந்திரி சீதாராமரெட்டியார் கூறினார். இந்தி கற்பதை விருப்பப் பாடமாகச் சென்னை சர்க்கார் ஆக்கியதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று. சர்க்காரின், இந்தத் திட்டத்தை, மக்களில் ஒரு குழுவினர், திரித்துக்கூற முயன்று வருவது தமக்குத் தெரியும்.” இது 10-11-48 ‘ஹிந்து’ பத்திரிகையிலே வந்துளது.

காமராஜர் போன்று, காங்கிரஸ் தியாகிகள் கூட்டத்திலே பேசவில்லை, சீதாராமர். எதிர்காலத்தில், நல்ல பண்புடன், நாட்டுத் தலைவர்களாக மாறி, நல்லாட்சி அமைத்து, மக்களுக்குச் சுகவாழ்வு தேடித் தரவேண்டிய, கல்வி பெறும் மாணவர்களிடத்தில், அத்தகைய உயர்ந்த கல்வியைத் தரும் லயோலா கல்லூரியில், ஹிந்திப் பேரவையில், பேசினார் சீதராமர் இவ்வாறு. இதனை மாணவர்கள் தட்டிக்கேட்கவில்லை. ஏதோ பேசுகிறார், வந்த விருந்தினரின் வாயுரையை ஏன் நாம் தவறு என்று எடுத்துக் காட்டவேண்டும்? அவரை அழைத்ததுதான் குற்றமேயன்றி, அவர் அவ்வாறு பேசுவதில் குற்றமில்லை, என்ற பெருந்தன்மையோடு. மந்திரியைத் தட்டிக் கேட்காமல் விட்டு விட்டனர் போலும் மாணவர்கள்! எதிர்த்துக் கூறவில்லையே தவிர, சீதாராமரின் வாய்மையில், இளைஞர்களுக்குச் சந்தேகம் தோன்றி இருக்கத்தானே செய்யும்?

காமராஜர் பேசியது, காங்கிரஸ் தியாகிகள் மத்தியில், அடக்க ஒடுக்கமாக இருந்தால், ஐந்து ஏக்கர் நிலத்துடன் ஆட்சிப் பீடத்தை அலங்கரிக்கும் வாய்ப்பும் தங்களுக்கு என்றாவது கிடைத்தாலும் கிடைக்கலாம் என்னும் நம்பிக்கையில், மந்திரிகளின் பொருந்தாக் கூற்றை விளக்கிக் கூற வேண்டுமென்று காமராஜருக்கு விண்ணப்பித்துக் கொள்ளாமல், அந்தத் தியாகிகள் இருந்துவிட்டு இருக்கலாம். ஆனால் மாணவர்கள், எதிர்காலத்தை ஆக்கவேண்டிய பொறுப்புடையவர்கள், சீதா
ராமருக்குச் சிவப்புக்கொடி காட்டாது, எதைவேண்டுமானாலும் கூறுங்கள் என்று இருந்துவிட்டது இரங்கத் தக்கதேயாகும்.

சீதாராõமர் கூற்றுப்படி, விருப்பப் பாடமாக வைத்துள்ள இந்தியைக் கட்டாயப் பாடமாக வைத்திருப்பதாக நாம் திரித்துக் கூறி வருகிறோம் என்று சீதாராமர், நம்மீது பழி சுமத்துகிறார். சீதாராமர் கூற்று, உண்மையானது என்று விவாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், திரித்துக் கூறும் பணியை நாம் மட்டுமா செய்கிறோம், காமராஜருமன்றோ, நம்முடன் சேராமலே, தியாகிகள் மத்தியில், திறம்படச் செய்திருக்கிறார். சீதாராமர் நம்மீது வீசியெறியும் குற்றச்சாட்டுகள் அவரையும் அறியாமலே, காமராஜர் மீது வீழ்ந்து வேதனை தருவதை, அமைச்சர் அறிய வேண்டுகிறோம். காமராஜர், ஹிந்தியைக் கட்டாயமாகத்தான் புகுத்தி இருக்கிறோம், என்று கூறியதன் மூலம், இந்த அமைச்சர்களின் வாய்மையில் - நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் காட்டுகிறார். அவர் காங்கிரஸ் தலைவர். அவர் கொண்ட சந்தேகத்தை, நாம் இந்த அமைச்சர்கள் மீது கொள்வது, எந்த வகையிலும் குற்றமுடையதாகாது.

பிரஸ்தாப விஷயத்தில் வாய்மை எவர் பக்கக்ததில் இருப்பதாக இருந்தாலும், மந்திரிமார்கள் தங்கள் கூற்றில்தான் வாய்மை இருப்பதாகத் தீர்மானித்தால், காமராஜரை மறுத்து அறிக்கை ஒன்று வெளியிடவேண்டும். காமராஜர் கூற்றில் வாய்மை நிரம்பி இருக்குமானால், அதனை விளக்கி விரிவான அறிக்கை ஒன்று வெளியிடுவதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் காரியக்கமிட்டியைக் கூட்டி, அமைச்சர்களின் பொய்ம்மையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றி, தவறான போக்கிற்கு அமைச்சர்களை விளக்கமும் கேட்கவேண்டும். இதனைத் தவிரக் காமராஜருக்கும், அவர் தலைமை தாங்கியுள்ள காங்கிரசுக்குந்
தான், வெள்ளையர் வெளியேறிவிட்டபிறகு, வேறு வேலைதான் என்ன இருக்கிறது? செய்வாரா காமராஜர்?

14.11.1948