அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கர்ஜனை புரியும் கனம்கள்!
அமைச்சர்கள் உரத்தகுரலிலே பேசுகிறார்கள் - ஊருக்கும் சென்று ஓயாமல்! கோபம், பயம், பிடிசாபம் என்று மிரட்டும் போக்கு, இவை ததும்பி வழிகின்றன அவர்களின் சொற்பொழிவுகளிலே.

அமைச்சர்களின் அதிகாரக் குரலுக்குப் பக்கமேளமாக, தூற்றல் பிரசாரத்துக்குத தோடா பரிசு பெற்ற, முரசுகள் பல உள்ளன, போகிற இடமெல்லாம், வீரவேசப் பேச்சுதான்!

ஒழித்துக் கட்டிவிடுவோம் - உருத்தெரியாமல் செய்துவிடுவோம் - என்னமோ, பாபம், என்று விட்டு வைக்கிறோம், என்று பேசாத பெருங்குணவான் இல்லை அமைச்சர் குழுவிலே!
*****

யார் மறுக்கிறார்கள், இவர்களுக்கு ஆற்றல் இருப்பதை, யாருக்குத் தான் இராது இந்த ஆற்றல் அமைச்சரானால்! அதிகாரம் தரப்பட்டிருக்கிறது இவர்களிடம் - இவர்கள் உத்தரவிடலாம் போலீசுக் - அது போதுமானதாகத் தெரியவிட்டால் பட்டாளத்தை அனுப்பலாம், சிறைக்கதவைத் திறக்கும் அதிகாரம், இருக்கிறது - பணத்தை ஆள்ளிவீசி, எதிர்ப்பிரசாரம் நடத்த வசதி இருக்கிறது, பதவியில் இருக்கிற காரணத்தால், இவர்கள் சில புதுச்சக்திகளைப் பெற்றுள்ளனர் என்பதை நாம் மறுத்ததில்லையே! ஐனோ, பாவம், இதைக் கூறிக் கொண்டே இருக்கிறார்கள்! இவர்களுக்கு இன்றுள்ள ஆற்றலும் நமக்குத் தெரியும், அந்த ஆற்றல், பயன்படுத்தப் பயன்படுத்தப் பழுதுபடும், விரைவிலே, பயனற்றுப் போகும் என்பது, அவர்களுக்குத் தெரிந்திருப்பதைவிட நமக்குச் சற்றுத் தெளிவாகத் தெரியும்! இதை ஏன், அமைச்சர்கள், தங்கள் அருமையான நேரத்தைச் செலவிட்டு, அதைவிட அருமையான மக்களின் பணத்தைப் பாழாக்கி, ஊராருக்குக் கூறிக்கொண்டே கற்றவேண்டும்? ஒழித்துக்கட்டும் ஆற்றல் நிச்சயமாக இருக்கிறது - இருக்கிறதா இல்லையா என்பதா விவாதத்துக்குரிய விஷயம் இப்போது - யாரை அமைச்சராக்கினாலும் இந்த ஆற்றல் இருக்கத்தான் செய்யும் - நாட்டைப் பிடித்தாட்டிய வெள்ளைக்காரனுக்கு இருந்தது இந்த ஆற்றல், பக்தவத்சலங்களைச் சிறையிலே போடுவது முதற்கொண்டு பகத்சிங்கைத் தூக்கிலே போடுகிற வரையிலே இருந்தது - அந்த ஆற்றலைக் காட்டினார்கள். கூசாமல், குமுறாமல், ஆனால் என்ன ஆனார்கள்? இலேசான பக்தவத்சலத்தைக் கனமாகக் கண்டார்கள்! அடக்கு முறையின் விசித்திரமான சக்தியே அதுதானே! வீசட்டுமே இதை, வீராப்புப்பேசும், அமைச்சர்கள் தாராளமாக - ஏன் அதைப்பற்றி, பன்னிப்பன்னிப் பேசுகிறார்கள் - யார் மெச்சிக் கொள்ள யாரைத் திருப்திப்படுத்த - யாரை மிரட்ட!

இந்த மூன்றாண்டுகளாக அமைச்சர்கள் என்ன, நம்மை உச்சிமோந்து முத்தமிட்டு உறவு கொண்டாடியா வந்தார்கள், இப்போதுதான் ஐதோ ஊக்கிரசேனர்கள் ஆகிவிட்டது போலப் பேசிவருகிறார்களே, பாபம்! எவ்வளவு அடக்குமுறைகள் உண்டோ அவ்வளவு செய்து கொண்டுதானே வந்திருக்கிறார்களே! எவ்வளவு தொல்லைகள், ஆபத்துகள் ஏற்பட முடியுமோ - அவ்வளவையும் தாங்கிக் கொண்டுதானே வந்திருக்கிறோம். விளையாட்டுக் குழந்தையை மிரட்டுவது போல, என்ன செய்வோம் தெரியுமா - என்று பேசுவது எதற்கு என்று கேட்கிறோம்.

ஜனநாயக கோட்பாட்டை மதிக்கும் போக்கை மறந்து, குரோத மனப்பான்மை கொண்டவர்கள் என்னென்ன செய்யமுடியுமோ அவ்வளவு இடையூறுகளையும் செய்தவண்ணம் இருக்கும் இந்தக் கனம்கள் கண்களை உருட்டியபடி இருப்பது ஏன்? அது ஒன்றுதான், பேசுவதற்கு இருக்கிறது, என்ற நிலைமையா? அடுத்த தேர்தலுக்காக இப்போதே சல்லடம் கட்டும் போக்கா? தங்களுக்குள்ள ஆற்றலைத் தாங்களே கவனப்படுத்திக் கொண்டு களிக்கிறார்களா?

நாடகத்திலே வருகிற ராஜாக்களுக்கூடப் பராக்குக்காரன் உண்டு, நமது மந்திரிகள், தங்களுக்குத் தாங்களே அல்லவா பராக்கு கூறிக் கொள்கிறார்கள்! தன்கையே தனக்குதவி என்றாகிவிட்டது போலும் அவர்கள் நிலைமை.
அடக்கிவிடுவோம், அடக்கிவிடுவோம் என்று ஆர்ப்பரிக்கும் அமைச்சர்கள் என்ன குற்றத்தைக் காட்டுகிறார்கள் நம்மீது.

திராவிடர் கழகத்தார் நாட்டிலே பேசிக்கொண்டே இருக்கிறார்கள், இந்தச் சர்க்காரைக் குறைகூறி - இது ஒரு குற்றச்சாட்டு.

சொல்ல வெட்கப்படுவார்கள், வேறு நாடுகளிலே, அமைச்சர்கள், அங்கெல்லாம் அமைச்சர்கள் செய்கிற காரியங்கள், எதிர்க்கட்சியினர் கூடக் குற்றம் குறை கண்டுபிடிக்க முடியாத அளவு பொதுமக்களின் நன்மைக்கு, உகந்ததாக இருக்கின்றன! இங்கு அமைச்சர்கள் செய்கிற காரியம், அவ்விதமா இருக்கிறது, அப்பு அழுக்கற்று வளைவு ஓடி சலற்று! நெஞ்சிலே கைவைத்துக் கூறுவரா!

வீணான பழிசுமத்தித் திராவிடர் கழகத்தார் பேசினால், சட்டம் இருக்கிறது, வழக்குமன்றம் இருக்கிறதே - அமைச்சர்கள் ஏன், இதை மறுந்தனர்.

மந்திரிமார்களைத் தனிப்பட்ட முறையிலே தூற்றினாலும், வழக்குத் தொடுக்க வழி இருக்கிறது,துரைத் தனத்தின்மீது ஆபாண்டம் சுமத்தினாலும் வழக்குத் தொடுக்க வழி இருக்கிறது. துரைத் தனத்தின்மீது ஆபாண்டம் சுமத்தினாலும் வழக்குத் தொடுக்க வழி இருக்கிறது! இதுவரையில் திராவிடர் கழகத்தவரின் சொற்பொழிவுகளிலே, இப்படி வழக்குத் தொடரக்கூடிய விதமாக இருந்ததாக இருந்திருந்தால், தாராளமாகச் செய்திருக்கலாமே!

ஆட்சியில் இருப்பவர்கள் காங்கிரசாராம், அவர்கள் சுதந்திரப் போர் நடத்தியவர்களாம், எனவே அவர்களû யாரும் குறைகூறக் கூடாதாம்! எப்படி, இவர்கள் வாதம்? பத்து வருஷ காலம் பத்தினியாக இருந்தவளாயிற்றே, இப்போது ஐதோ நடந்துவிட்டது என்பதற்காக, என்னைக் கண்டிப்பதா, தண்டிப்பதா என்று வழுக்கி விழுந்தவள், வாயாட ஆரம்பித்தால், எப்படி இருக்கும், அந்த வாதம் அந்த ரகமான வாதமாக இருக்கிறது, இந்த மந்திரிமார்கள், மார் தட்டிக்கொண்டு, நாங்கள் மகாத்மாவின் தலைமையிலே நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்திலே கலந்து வேலை செய்த வெற்றி வீரர்கள், கபர்தார், எங்களையா, கண்டிப்பது! என்று பேசும்போக்கு, அன்று போராட்டத்திலே இவரக்ள், கேடயந்தாங்கினவர்களோ, கத்தி தீட்டினவர்களோ, நால்வகைப் படையிலே எதிலே சேர்ந்து என்னென்ன ஆற்றல் காட்டிய ஆண்மையாளர்களோ, என்பதுகூட அல்ல இப்போது நாம் ஆராய்வது - என்று போராட்டத்திலே கலந்து கொண்டவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, இவர்கள் தங்கள் கரத்திலே சிக்கிய அதிகாரத்தைக் கொண்டு என்னென்ன சீரழிவுகள் செய்தாலும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா? வரிமேல் வரிகளை ஆடுக்கிக் கொண்டே இருந்தாலும், அடக்குமுறையை அவிழ்த்துவிட்ட வண்ணம் இருந்தாலும், அவசரக் கோலத்தை ஆள்ளித் தெளிப்பது போலப் பல காரியங்களைச் செய்தாலும், இவர்கள் செய்யும் காரியங்களினால், நாடு நலிந்தாலும், தொழில் நாசமானாலும், பாட்டாளி பதைத்தாலும், பொது மக்களின் நலன் நசுக்கப்பட்டாலும், என்ன கேடு நேரிட்டாலும், யாரும், ஏன் என்ற கேட்கக்கூடாது. ஒயோ என்று ஆழவும் கூடாது. ஆகுமா? என்று கெஞ்சிக் கேட்கவும் கூடாது. ஏனெனில் இவர்கள், அன்றோர் நாள் ஆம்பெய்தி ஆசுர வெள்ளையனை அழித்திட்ட ஆசகாய சூரர்களாம்! இதுவா நியாயம்? நியாய அநியாயம் கூட ஒருபுறம் இருக்கட்டும், இதுவா, ரோஷ உணர்ச்சியுள்ளவர்கள், கையாள வேண்டிய வாதம்! போரிலே மட்டும் புலிகள் என்று எண்ணாதீர் எம்மை, ஆட்சியிலேயும் ஆற்றல் உண்டு, எமது ஆட்சியில் விளைவுகளைக் காணீர் என்று கூறி, எமது ஆட்சியிலே, ஏதேனும் குறைகள் இருப்பின், தைரியமாக எடுத்துக் கூறட்டும் யாராக இருப்பினும் தவறான திட்டம், கேடு பயக்கும்சட்டம், மக்களை வாட்டும் வரித்திட்டம் இன்னின்னவை என்று எடுத்துக் காட்டிடஎவருக்குத் துணிவிருப்பினும் வரட்டும், மக்கள் மன்றம் ஏறிக் கூறட்டும், நாங்கள் நாட்டைப் படித்தாட்டிய ஏகாதிபத்தியவாதிகள் போல, இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்று ஆர்ப்பரித்து, பேச்சுரிமையைப் பறிக்கும் பேயர்கள் அல்ல, உண்மையை ஊருக்குரைத்துவிட்டால் ஆட்சிப்பீடம் ஆட்டம் கொடுத்துவிடுமே என்று எண்ணித் துடிதுடித்து அடக்குமுறையை ஏவி, பேசத் துணிபவர்களைத் தீர்த்துக்கட்டும் தீயர்களல்ல, நாங்கள் காந்தீயர்கள், எனவே, எவரும், என்ன நேரிடுமோ என்று அஞ்சாமல், எமது ஆட்சியிலே குறைகள் இருப்பதாகக் கண்டால், எடுத்துக் கூறலாம், நாங்கள் அதனை வரவேற்கிறோம், என்றல்லவா கூறவேண்டும்! வேண்டுமென்றே, குரோத புத்தியுடனேயே, ஏதேனும் குறைகூறாவிட்டால் தூக்கம் வராது என்ற போக்குடனேயே, எதிர்க்கட்சியினர், ஏதேதோ எடுத்துப் பேசுகிறார்கள் மக்களிடம், என்றே வைத்துக் கொள்வோம் - இந்த ஆண்மையாளர்கள் - ஒரு நொடியிலே, உண்மையை விளக்கிக் காட்டி, எதிர்க்கட்சியினரின் வாதங்களைத் தவிடு பொடியாக்கி, ஐளனத்தை ஏவி, எதிர்ப்பை முறித்திடலாமே! இதைத்தானே செய்வார்கள், எவரும் - அறிவாற்றலில் நம்பிக்கை உள்ளவர்கள்! ஏன், இந்த முறையைக் கையாளாமல், நாங்கள் சுயராஜ்யம் வாங்கித் தந்தவர்கள், ஆகவே எம்மைக் குறைகூறக் கூடாது, யாரும், என்றா வாதாடுவது. பத்துப் பயல்வான்களை, குத்துக்கு ஒருவனாகக் கீழே வீழ்த்திய, படே வஸ்தாதாக இருப்பினும், அவன், இசை அரங்கம் ஏறி ஐதோ இரைச்சலிட்டுவிட்டு, இது காம்போதி, என்று கூறினால், படே வஸ்தாது என்கிற காரணத்துக்காக “ஆமாம், ஆமாம் இதுதான் காம்போதி, சித்தூராரும் பிறரும் கூட இனி இவரிடமே பாடம் கேட்பது நல்லது” என்றா கூறுவர். இசை அறிந்தவர்கள்! அதுபோல, கண்ணுக்குப் பளிச்செனத் தெரிகிறது, இவர்களின் ஆட்சியின் விளைவுகள், கண்கலங்கி நிற்கிறார்கள் பொதுமக்கள் அந்த வேதனையால், இந்த நிலையை எடுத்துக்காட்டி, ஏனய்யா இப்படித் தவறுகளைச் செய்கிறீ;கள் என்று கேட்டால், மீசையை முறுக்கிக் கொண்டு ஓசையைக் கிளப்பிவிட்டு, ஆஹா! யாரிடம் இம்மாதிரி பேசுகிறாய்? நாங்கள் சுயராஜ்யம் பெற்றுத் தந்தவர்கள், தெரியுமா! என்று ஆர்ப்பரிப்பதா! மந்திரிமார்களையும் அவர்களைத் தாங்கிக்கொண்டு வாழும் தாண்டவ மூர்த்திகளையும், பராக்குப் பாடும் பர்மிட் தேடிகளையும், கைகாட்டி நிற்கும் காண்டராக்ட் தேடிகளையும், கேட்கிறோம், எத்தனைக் காலத்துக்குத்தான், இந்த ஒரு காரணத்தைக் காட்டிக்கொண்டு வாழ்வது என்று திட்டமிட்டுவிட்டீர்கள்! ஒரு கணக்காவது தெரிந்தால், நொந்து கிடக்கும் பொதுமக்களுக்கு, ஓரளவு மன ஆறுதல் ஏற்படக்கூடும் என்பதற்காகக் கேட்கிறோம்! புலியை ஊரைவிட்டுத் துரத்திய வீரன், “பேராபத்தினின்றும் உங்களை மீட்ட நமக்கு, ஒவ்வோர்நாளும், ஒருமணங்கு நரமாமிசமும் பத்துக்குடம், மனித இரத்தமும், படைத்தாக வேண்டும்” என்று கேட்பானா - கதையிலே கூடக் காணோம் - கேட்பான் போலல்லவா இருக்கிறது, நமது நாட்டுக் கனம்களின் புத்திசாலித்தனம், அப்படிப்பட்ட வீரனுக்கு இருந்தால்!

வெள்ளைக்காரப் புலியை வேட்டையாடித் துரத்திய வீரர்கள் என்கிற வாதத்துடன், வேறொன்றும் கூட்டிக் கொள்கிறார்கள். நாம், அதாவது, திராவிடர் கழகத்தாராகிய நாம், அந்தப் போரின் போது, இவர்களை எதிர்த்தவர்களாம்! ஏன், எதிர்த்தோம், எப்படி எதிர்த்தோம் - என்கிற பழங்கதை கிடக்கட்டும் - இவர்கள் கூறுகிறபடி, வெள்ளைக்காரனை இவர்கள் எதிர்த்தபோது, இவர்களுடன் சேராதிருந்தோம் என்று வைத்துக் கொண்டே பேசுவோம், அதனாலே, இவர்கள் எது செய்தாலும், ஏன் என்று கேட்கிற உரிமையே, நமக்குக் கிடையாதா! நம்மிடம் வரி வசூலிக்காமலிருக்கிறாரக்ளா? நாம் இவர்களுடைய ஆட்சியின் மீது இல்லாமல், எங்காவது சிங்களம், சாவகம், சென்றுவிட்டோமா! இங்குதானே வாழ்கிறோம் - வரி செலுத்துகிறோம் இவர்கள் ஆட்சியினால் விளையும் சுகதுக்கங்கள் நம்மைப்பாதிக்காமலுள்ளனவா! எப்படி, நாம், குறை கண்ட இடத்து எடுத்துக் கூறாமலிருக்க முடியும் - ஏன் கூறாமலிருக்க வேண்டும்? நாடாள இவரக்ள் வந்ததும், நமது நாக்குகளை எல்லாம் அறுத்தெடுத்துக் காணிக்கையாகப் பெற்றுக் கொண்டார்களா? இவர்கள் ஆட்சித் திட்டம்தான் என்ன? எமது இஷ்டப்படிதான் ஆளுவோம், மாள்கிறார்களே மக்கள் என்று கூட ஏவனும் கேட்கக்கூடாது, கேட்பவனின் மாறுகை மாறுகால் வாங்கி, மலையுச்சியிலிருந்து உருட்டிவிடுவோம், என்று கொக்கரிக்கும் கொடுங்கோலர்கள் காலமா இது! அந்தக்காலத்திலே கூட, இமைகளாகச் சில பலநாள் இருந்த மக்கள், புரட்சி செய்து வீழ்த்தியிருக்கிறார்களே, கொடுங்கோலர்களை! குடி அரசுக் கோட்பாடுள்ள இக்காலத்திலா, இவர்கள் இவ்விதம்,எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது!

சுதந்திரப் போராட்டத்தின்போது இவர்களுடன் சேர்ந்திராதவர்களை, துச்சமென்று கருதுகிறார்களா, உண்மையில்? தங்கள் ஆட்சிப் போக்கின் விளைவுகளே, யாராவது பொதுமக்களிடம் விளக்கிக் கூறிக் கொண்டிருந்தால், கணக்குக் கேட்க, ஆரம்பிப்பர் மக்கள் என்ற பயத்தினால் இளவந்தார்கள், பீடிக்கப்பட்டிருப்பதனால், எந்தச் சாக்குக் கூறியாவது, உண்மையை எடுத்துரைப்பவரை, நாட்டிலே நடமாடாதபடி செய்துவிட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் சாக்குகளிலே ஒன்று, சுயராஜ்யத்தை வாங்கித தராதவர்கள், எமது ஆட்சியைக் குறை கூறுவதா என்று பேசுவது, உண்மை நிலைமையோ வேறு! சுயராஜ்யத்துக்காக இவர்கள் நடத்திய போரிலே கலவாத, அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத, ஏற்றுக்கொள்ளாத துடன் எதிர்த்துப் பேசிய பலருடைய, கூட்டுறவும் ஒத்துழைப்பும், தோழமையும், இப்போது காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் இன்று, ஏராளமாக இருக்கிறது - இந்தப் புதிய உறவு நாளுக்குநாள் வளர்ந்து கொண்டும் வருகிறது, சுயராஜ்யப் போரிலே கலவாதிருந்த காரணத்துக்காக, இவர்களின் ஆட்சிமுறையிலே உள்ள கோளாறுகளை எடுத்துக் கூறவும் உரிமை இல்லை என்று நம்மை மிரட்டும் இந்த ஊக்கிரசேனகர்கள், காங்கிரசிலே அன்றும் சேராமலிருந்த, இன்றும் சேராமலிருக்கிற, எவ்வளவோ, கனவான்களை, எப்படிச் சேர்த்துக் கொண்டார்கள். பத்தினித்தனம் கெட்டுவிட, ஏன் அனுமதித்தார்கள். இவர்களின் அதிகார பீடத்தின் மூலஸ்தானம் இருக்கிறதே. டில்லி, அங்கு துரைத்தனம் நடத்துபவர்கள் அனைவருமா, ஊப்புச் சத்தியாக்கிரகம் செய்வரக்ள்? சர். கோபாலசாமி ஐயங்கார், எத்தனை தடவை தடியடிபட்டவர்? தடியடி தர்பார் நடத்தியவர், காஷ்மீர் திவானாக இருந்தபோது! இப்போது அவருக்கு, ஆட்சிப் பீடத்திலே இடம் கிடைத்ததே! எப்படி? ஏன்? அவர் மட்டுந்தானா? இருந்துவிட்டு வந்துள்ள சர். சண்முகம் கோவைக்குக் காந்தியார் வந்தபோது, அவருக்கு அளித்த உபசாரப் பத்திரத்திலேயே காந்தியாரின் சத்யாக்கிரகத் திட்டங்களையும் காங்கிரசின் போக்கையும் எதிர்த்தவர். இப்போதும், அவர் தக்ளி சுற்றிக் கொண்டில்லை? வசந்தாமில்லைத்தான் நடத்திக் கொண்டு இருக்கிறார்! ஆவரிடம் கொடுத்து வைத்தார்களே, பொக்கிஷத்தை! இப்போது அதற்குக்காவலராக அமர்ந்திருக்கும், மத்தாய், மகாத்மாவின் சீடரா, பர்தோலி சர்தாருக்கோ, அல்லது வேதரண்யத்துக் சர்தாருக்கோ, சீடரா? எப்படி இருக்க முடிகிறது. அவரால்! சுயராஜ்யப் போரின்போது நாம் இவர்களுடன் இல்லை என்ற ஒரு காரணத்துக்காக, நமக்கு இவர்களின் ஆட்சியிலுள்ள குறைபாடுகளை எடுத்துக் கூறவே உரிமை கிடையாது என்று பேசுகிறார்களே, உத்தமர்கள், இவர்கள், எப்படி, மத்தாயையை அனுமதிக்கிறார்கள்? சீக்கிய இயக்க முனனணி நின்று பணிபுரிந்து, அதன் காரணமாகக் காங்கிரசுடன் எதிர்த்துக் கொள்ளவேண்டிய நிலைமையிலும் இருந்த பலதேவ் சிங்கிடம், பட்டாளங்களை ஒப்படைத்துவிட்டு, இங்கு, இவர்களின் ஆட்சியிலே உள்ள தவறுகளை எடுத்துக்காட்டும் போது, மட்டும், நம்மை “ஓஹோ இவர்கள் முன்பு, சுயராஜ்யப் போர் முகாமில் இல்லாதவர்கள், எனவே இவர்கள் பேசிடப் பொறுத்திட்டோம்” என்று கொக்கரிப்பதா? நேர்மை தானா இது! சட்டம் டாக்டர் ஆம்பேத்காரிடம், பட்டாளம் பலதேவ் சிங்கிடம், தொழில் முகர்ஜிடம், பொக்கிஷம் மத்தாயிடம் - இவர்களெல்லாம் யார்? நாகபுரி கொடி சத்யாகிரகம், நீலன்சிலை சத்தியாக்கிரகம், வரிகொடா இயக்கம், கள்ளுக்கடை மறியல், அன்னியத் துணி கொளுத்துதல், ஆகஸ்டுப் புரட்சி என்பவைகளிலே உடுபட்டவர்களா? ஆட்சி திறமையாக இருக்கவேண்டும், வெளி நாடுகளிலே உள்ளவர்கள், இந்திய நிர்வாகம், திறமையும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருக்கிறதே தவிர, கிளர்ச்சியிலேயே, காலமுழுவதும் செலவிட்டவர்களிடம் இல்லை, என்று தெரிந்து, அதன் பயனாக நம்பிக்கை பிறக்கவேண்டும், என்பதற்காகத் தானே, அவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு “ஞானஸ்தானம்” செய்வித்துச் சேர்த்துக் கொண்டோம், என்று கூடக் கூறித் திருப்தி கொள்வதற்கில்லையே அந்தக் கனவான்கள் இப்போதும் காங்கிரசல்லவே! அவரக்ளை அனுமதிக்கும், அன்பர்கள், கள்ளுக்கடை மறியலில் குடும்பத்துடன் சிறை சென்று, வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புப் போருக்காகச் சிறை சென்று, ராஜத்துவேஷமாக எழுதினார் என்பதற்காகத் தண்டிக்கப்பட்டுச் சிறை சென்று, கதர் சுமந்து விற்று, காங்கிரசை வளர்த்து, தமிழ்நாடு காங்கிரசுக்குத் தலைமை தாங்கி நடத்தி வந்து, பிறகு, அந்த சக்தி எந்தெந்தக் கருவி கிடைப்பினும், தமது ஆதிக்கத்துக்குப் பார்ப்பனருக்குப் பயன்படுவதுகண்டு மனம் வெதும்பி விலகி, சமவுரிமைப்போர் தொடுத்து நடத்திவரும் பெரியாரும் அவர்தம் படையினரும் மட்டும், பேசவும் கூடாது, இவர்களின் ஆட்சிப் போக்கிலே உள்ள கோளாறுகளைப் பற்றி, என்று நெஞ்சிலே நீதி நியாயமற்றுப் பேசுவதா? நேர்மையாளர்கள் அமைச்சர்களின் வாதத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்களா, என்று கேட்கிறோம்?

தைரியமிருந்தால், யார் எத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறினால் மக்கள் மன்றமேறி, தமது மாசுமருவற்ற தன்மையை நிலைக்கச் செய்ய முடியும் என்று கூறுவர்?

அமைச்சர்களுக்கோ அச்சம்! ஏனெனில், நாம் மக்களிடம் எடுத்துக் கூறும் உண்மைகளை அவர்களால், மறுக்கமுடியாது! மக்கள் வேக வேகமாக உணர ஆரம்பித்து விட்டனர், ஆட்சியின் தவறுகளை எனவேதான், அமைச்சர்கள், நமது பிரசாரத்தைக் கண்டு பீதி கொள்கிறார்கள். அச்சம் அவரக்ளை எதைஎதையோ, பேச வைக்கிறது. ஆனால் நாடு சிரிக்கிறது, இவர்கள் காட்டும், காரணங்களைக் கேட்டு.

இவ்வளவு ஏக்காளமிட்டு வரும் கனம்களின் போக்குப்பற்றி காங்கிரசுக்குள்ளாகவேயாவது, திருப்தி இருக்கிறதா என்று பார்த்தால், நித்த நித்தம் கண்டனமும் கேலியும் வெளிவந்தபடியே உள்ளன. ஆசை வெட்கமறியாது என்பார்கள். அதன் காரணமாகத்தான் ஆட்சியாளர்கள், தங்கள் சொந்தக் கட்சியினரின் சூடுகளையும தாங்கிக் கொள்ளுகிறார்கள். வெளியே சொன்னால் வெட்கக்கேடு, என்று எண்ணிப்பல நாட்களாகப் பொறுத்துப் பார்த்துப் பார்த்து, கடைசியில், இனிப் பொறுக்க முடியாது என்ற நிலைக்கு வந்தவர்கள், இன்று, ஆட்சியாளர்களைப் பலவகையிலே கண்டித்துப் பேசியும் எழுதியும், கேலிச் சித்திரங்கள் தீட்டியும் வருகிறார்கள்.

உலகிலேயே, வேறு எந்த ஆட்சிக் குழுவும், எந்தக் கட்சியிலிருந்து குழு அமைக்கப்பட்டதோ, அதே கட்சியினரால், இன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கண்டிக்கப்படுகின்ற அளவிலும் முறையிலும் கண்டிக்கப்பட்டதே இல்லை.

ஆட்லிய்ன போக்கைச் சர்ச்சில் கண்டிப்பது, எதிர்பார்க்கக்கூடியது, ஆனால் ஆட்லியின் போக்கை அவரை முதலமைச்சராக்கிய, தொழில் கட்சியே கண்டிக்கிறது என்றால், ஐளனத்தக் குரியதல்லவா!

காங்கிரசாட்சியை, எந்தப் பெருந்தலைவர், இதுவரை குறைகூறாமலிருந்து வந்திருக்கிறார்? அந்தக் கண்டனக் கலம்பகத்தை எடுத்துக் கூறிவந்தாலே போதுமே, திராவிடகழகம் - தனியாகத் தேடிக்கண்டு பிடிக்கக்கூட வேண்டியதில்லையே.

பெருந்தலைவர்கள் ஒரு புறத்திலே கண்டிக்கிறவர்கள் - ஊழியர்கள் மற்றோர் புறத்திலே, உள்ளம் வெதும்பிக் கண்டிக்கிறார்கள் - ஒருவருக்கொருவர் ஓயாமல், உபதேசம் செய்து கொள்கிறார்கள்.

ஒரு இடத்திலே தலைவர்கள், தொண்டர்களுக்குத் தியாகத் தத்துவத்தை விளக்குவதும், மற்றோர் இடத்திலே, தொண்டர்கள், தலைவர்கள் பதவி மோகத்துக்கு ஆளாகி, பாழாகி வருவதைக் கண்டிப்பதும், இன்னும் சில இடத்திலே, உன்னாலே நான் கெட்டேன் - என்னாலே நீ கெட்டாய், என்று தவறு செய்த தெருக் திண்ணைப்பள்ளி மாணவர்கள், கூறிக்கொண்டு அழுவது போலவுமல்லவா, நடந்து வருகின்றன!

தியாகத்துக்கு விலை கேட்காதே! எல்லோரும் அமைச்சராக முடியாது எனவே அதிகாரத்தில் ஆசை வைக்காதே! என்று, பெருந்தலைவர்கள், கூறுகிறார்கள், மக்கள் நலனைக் கவனிக்க மறுக்கும் போக்கிலே காரியமாற்றும், இந்த ஆட்சியைக் காணத்தானா, இவ்வளவு பாடுபட்டோம் என்று மனம் குமுறும் தொண்டர்களைப் பார்த்து.

இந்த இலட்சணத்தில் இருக்கிறது குடும்பம் - கூக்குரல் வெளியே கேட்க ஓட்டாதபடி தடுக்க, ஆக்கம் பக்கத்தார்காதிலேவிழழமலிருக்க, ஒவ்வோர் மாகாணத்துக்கும், வீரகானம் பாட ஒரு காமராஜர் தேவைப்படுகிறார் - இவர்களுக்குத் தானய்ய, மூக்குச்சிவந்து விடுகிறது. நாம், ஏதேனும் குறை கூறினால் - உடனே, “நாம்” யார் என்பதற்கான ஒரு நிந்தனை நாமாவளியைத் தயாரித்துக் கொண்டு, கிளம்பிவிடுகிறார்கள், கர்ஜனைபுரிய.

நம்மை நிந்திக்கும் இந்த நற்குண வான்களைப் பற்றி, நாடறியக் கண்டித்துள்ளவர் களின் பெயர் பட்டியலைக் கண்டாலே, வெட்கம், மனதைப் பிய்த்திருக்க வேண்டும்.

கொண்டா வெங்கடபய்யா, கிருபளானி, பாபு புருஷோத்தமதாஸ் தாண்டன், போன்றவர்கள், ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளைகளல்ல, அதிகாரியைக் கெஞ்சி, வீரத்தியாகி இனவர்களல்ல, அவர்களின் கண்டனம், இலேசான அளவிலேயோ, மறந்துவிடக் வடியமுறையிலேயோ இருக்கவில்லை.

பாபு புருஷோத்தம தாஸ், சிறு குழந்தைபோல் அழுது கொண்டே, இன்றைக் காங்கிரசின் நிலைபற்றிப் பேசினார், என்று தேசிய ஏடுகளே, தீட்டிக்காட்டின, நாட்டு மக்களுக்கு.

இந்த நிலையிலே இவர்களின் நடவடிக்கை இருக்கும்போது, அரசியல் வேட்டையை நோக்கமாகக் கொள்ளாமல், அறிவுத் துறையிலே புர்சியை உண்டாக்கும் அடிப்படை வேலையிலேயே நாட்டம் கொண்டு பணிபுரியும் திராவிடர் கழகம், அரசியலிலே நடைபெறும், நடவடிக்கைகளிலே, கேடானவைகளைக் கண்டித்தால், கனம்களுக்குக் கோபம் கொந்தளிக்கிறது.

இதே நேரத்தில், அமைச்சர்களிலே சிலர் மீது, முன்னாள் முதலமைச்சர் பிரகாசம், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதும், அவருடைய ஆட்சியின்போது இருந்த ஆலங்கோலங்களைப் பற்றிய குற்றப் பத்திரிகையை இன்றுள்ளவர்கள் படிப்பதும், இரு குற்றப்பத்திரங்களையும் பற்றி மேலிடம் விசாரணை செய்ய முனைவதுமான நிலை இருந்து வருகிறது.

“வழக்கமன்றமேறியும் கூறத் தயார்” என்று கூறுகிறார், பிரகாசம்.

விசாரணை நடத்தினால், இவர் ஆட்சிக்காலத்து நடவடிக்கைகள் பலப்பல, அம்பலத்துக்கு வரும் என்கின்றனர், இன்றைய ஆட்சியளேரின் ஆதரவாளர்கள்.

யார் கூற்று உண்மையாக இருப்பினும், காங்கிரஸ் ஆட்சியாளரின் போக்கும் தன்மையும், நேர்மையற்றதாக இருந்திருக்கிறது என்பதை, மறைப்பதற்கில்லை, மகாணாம் இப்படிப்பட்ட மாகானுபவர்களின் ஆட்சியிலே இருந்திருக்கிறது - இருந்துவருகிறது - எனினும், யாரும் இவர்கள் போக்கைக் கண்டிக்க கூடாதாம்!

“அமைச்சர்களிடமும் துரைத்தன அதிகாரிகளிடமும் இலஞ்ச இலாவணம் ஏராளமான அளவிலே இருக்கிறது என்பதை நான் கூறமுடியும். நிர்வாகத் திறமையும் ஓரளவுக்குக் குறைந்துதான் போய் விட்டது.”

எப்படி இருக்கிறது இந்தக் குற்றச்சாட்டு
“ ஒ ஸ்ரீஹய் ள்ஹஹ் ற்ட்ஹற் ற்ட்ங்ழ்ங் ண்ள் ஆர்ழ்ழ்ன்ல்ற்ண்ர்ய் ர்ய் ஹ ப்ஹழ்ஞ்ங் ள்ஸ்ரீஹப்ங் ஹம்ர்ய்ஞ் ம்ண்ய்ண்ள்ற்ங்ழ்ள் ஹய்க் ஏர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ர்ச்ச்ண்ஸ்ரீண்ஹப்ள். பட்ங்ழ்ங் ட்ஹள் ஹப்ள்ர் க்ஷங்ங்ய் ஹ ஸ்ரீங்ழ்ற்ஹண்ய் ஹம்ர்ன்ய்ற் ர்ச் க்ங்ற்ங்ழ்ண்ர்ழ்ஹற்ண்ர்ய் ண்ய் ங்ச்ச்ண்ஸ்ரீண்ங்ய்ஸ்ரீஹ்.”

இது குற்றச்சாட்டு?பகிரங்கமான குற்றச்சாட்டு - இதைக் கேட்டுச் சகித்துக் கொள்ளும், சீலர்கள் தான், பொதுவாக ஆட்சிமுறையைப் பற்றி விளக்கம் கூறி, கண்டிக்க வேண்டியனவற்றை மட்டுமே கண்டிக்கும், திராவிடர் கழகத்தினர் மீது தீ மொழி வீசுகின்றனர்.
இதோ வெளிப்படையாக, தைரியமாக, இந்த அமைச்சர்களைப் பற்றி அச்சமோ கவலையோ ஆற்று, இவர்களின் கோபவேச நடவடிக்கையும் வீராவேசப் பேச்சும் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது, என்ற துணிவுடன், தூயவர் ஒருவர் கூறுகிறார் - ஆர்ழ்ழ்ன்ல்ற்ண்ர்ய் ர்ய் ஹ ப்ஹழ்ஞ்ங் ள்ஸ்ரீஹப்ங் என்று! எங்கோ கொஞ்சம், கண்டும் காணாததுமாக அல்ல, ர்ய் ஹ ப்ஹழ்ஞ்ங் ள்ஸ்ரீஹப்ங் பெருவாரியாக அளவிலே இருக்கிறது, இலஞ்ச இலாவணம் என்று கூறுகிறார்.

சீறிடும் வீரர்கள், என்ன சொல்லுகிறார்கள் இதற்? இதைப் பொது மக்கள் எங்கே என்றிக் கவனிக்கப் போகிறார்கள், கவனித்தாலும் அவர்களுக்குள்ள எவ்வளவோ தொல்லைகளிலே, இதை எத்தனை நாளைக்கு மறவாமல் இருக்கப் போகிறார்கள், மறவாமலிருப்பினும், நம்மை எப்படிக் கேட்க முடியும், என்ற தைரியம் தானே இளவந்தார்களுக்கு!

இலஞ்ச இலாவணம் ஏராளமான அளவிலே இருக்கிறது, அமைச்சர்களிடம்! - என்று கூறியதைக் கேட்டுக் கோபமோ வெட்கமோ, வரவில்லை, நாம் ஏதேனும் கூறமுற்பட்டால் சல்லடம் கட்டிக்கொண்டு கிளம்பும் கனம்களுக்கும், அந்தக் கனம்களைத் தாங்குபவர்களுக்கும்.

இந்தக் குற்றச்சாட்டு, எப்போது வெளியிடப்பட்டது? யாரால்? ஏவரிடம்? என்பதை அறிய ஆவாவிருக்கும் பலருக்கு.

குடி அரசு - விதலையில், கறுப்பு சிகப்பு சட்டையினர் தீட்டிய கட்டுரையிலிருந்து எடுத்ததல்ல இந்து மேமாதம் 15-ந் தேதி இதழில், முதல் பக்கத்தில் ஐந்தாவது காலத்திலே, அழகுற அச்சிட்டு வெளிவந்திருப்பது குற்றச்சாட்டு.

கூறினவர், பாபுராஜேந்திர பிரசாத் - அரசியல் நிர்ணய சபையின் தலைவர் - அண்ணல் காந்தியாரின் அறநெறி நிற்கும் பண்பினர் - அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவர் - அவர் கூறுகிறார், பத்திரிகை நிருபரிடம், அமைச்சர்களிடமும் அரசாங்க அலுவல் பார்ப்போரிடமும் அதிகமான அளவு இலஞ்ச இலாவணம் தாண்டவமாடுகிறது, என்று, இதைக்கேட்டு வாய்பொத்திக் கிடக்கும் வீரர்கள், நாம் இத்தகு குற்றச் சாட்டுகளை அல்ல, அரசியலில் நிகழும் நடவடிக்கைகளைப் பற்றிய நமது கருத்துரைகளை வெளியிட்டால் கர்ஜனை புரிவதா! நியாயமா?
பதவிமோகம் அவர்களை ஆட்டி வைக்கிறது, பாபம், அவர்கள் நல்லவர்கள்தான், புது மோகத்தால் கொஞ்சம் கெட்டு விட்டார்கள், நாளாகவாகத் திருந்துவார்கள், என்று, பாபு ராஜேந்திரபிரசாத், தைரியம்கூடத் தரவில்லை!

நாட்டு மக்களெல்லாம் ஒழுக்க முள்ளவர்களானால் தான் இத்தகைய ஊழல்களெல்லாம் ஒழியும், என்று நன்னெற பாடுகிறார் - அதாவது, இந்த அமைச்சர்கள், கண்டிக்கப்பட்டாலும், வெளிப்படுத்தப்பட்டாலும் கூடத்திருத்தமாட்டார்கள், என்று அவர் நம்புகிறார் - எனவேதான் உபதேச அளவிலே நின்று விடுகிறார்.

காங்கிரசிலே உயர் நிலையில் உள்ளவர், இங்ஙனம், வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்.

நமது மாகாணத்தைப் பொறுத்தமட்டில், மந்திரிமார்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வளவுக்கும் பிறகும், இவர்களுக்கு, நாம் பேசுவதும் எழுதுவதும், கோபத்தை, ரோஷத்தை, ஆத்திரததைக் கிளப்பிவிடுகிறது. ஆஹா! விட்டேனா பார்! - என்று மிரட்டுகிறார்கள். இந்து இதழ் உலகில் பல இடங்களுக்குச் செல்லும் நிலைபெற்றது - அதிலே, இருக்கிறது பாபுராஜேந்திர பிரசாத்தின் பகிரங்கக் குற்றச்சாட்டு பல்வேறு நாட்டுப் பாராளுமன்றங்களிலும், இது படிக்கப்படும் - உலகப்புகழ் பெறுகிறார்கள் கனம்கள் - இதை மறந்து, நம்மீது பாய்கிறார்கள், ஒழித்துவிடுவோம் என்று கூவுகிறார்கள்.

நம்மைத்தானே! தாரளமாகச் செய்யட்டும் - ஆனால் இவர்களின் நற்பெயர் ஒழிகிறதே பாபுராஜேந்திர பிரசாத் போன்றோரின் குற்றச்சாட்டுகளால் அதற்கு என்ன செய்யப்போகிறார்கள்!
ஏதாவது செய்தாக வேண்டுமே! காங்கிரஸ் மந்திரிகளைக் குறை கூறவே அஞ்சுவர், பலர், அதிலும் இலஞ்ச இலாவணக் குற்றம் சுமத்தப் பலருக்குப் பிரியமே வராது, துணிவும் ஏற்படாது. நாட்டுக்கு இன்னமும் நல்ல பிள்ளைகளாக இருக்கும் நிலை, காங்கிரஸ் தலைவர்களுக்கு இருக்கிறது. அப்படிப்பட்டவர்களைக் குறித்து இவ்வளவு பலமான குற்றச்சாட்டு வெளிவருவதென்றால் சாமான்யமா? அதிலும், வெளிவந்தது, குறைகூறும் ஏடுகளில் அல்ல - எதிர்க்கட்சி ஏடுகளில் அல்ல - இந்து வில்!

இந்துவுக்கு இந்தச் செய்தியை, யாரோ, வழிப்போக்கரோ, வம்பு தும்பு செய்பவரோ, இதார அதிகாரம் பெறாதவரோ, அனுப்பியிருப்பரா - அப்படிப்பட்டவர் அனுப்பியதாக இருந்தால் இந்து கண்ணெடுத்தாவது பார்த்திருக்குமா!

இந்து வில் வெளிவந்ததிலிருந்தே, அந்தச் செய்தி, எதிர்க்கட்சியினரோ, பொறுப்பற்றவர்களோ, அனுப்பியதல்ல என்பது விளக்கமாகிறது.

இந்துவிலேயே இந்தச் செய்தி வருகிறதென்றால் - வேறு யாராவது குற்றம் குறை கூறினாலும் சல்லடம் கட்டிக்கொண்டு சண்டைக்குக் கிளம்பும் இந்துவிலேயே இந்தச் செய்தி வெளிவருகிறதென்றால், சாமான்யமா?

இந்தவுக்காவது, பாபுவின் பேச்சா இது - காங்கிரஸ் மந்திரிமார்கள் மீதா இந்தக் குற்றச்சாட்டுக் கூறப்படுவது - என்ற துடிதுடிப்போ, சந்தேகமோ ஏற்பட்டிருந்தால், வெளியிட்டிருக்குமா செய்தியை!

துளியாவது சந்தேகம் இருந்தாலும், உடனே, பாபுவுக்கு, ட்ரங் டெலிபோன் செய்து, இப்படி ஒரு செய்தி கிடைத்திருக்கிறதே, உண்மைதானா என்று, கேட்டு, விளக்கம் பெற வசதி இல்லையா? செய்ததா? செய்யவேண்டுமென்ற எண்ணம் கொள்ளாமல், ùச்யதியை வெளியிட்டிருக்கிறது.

இதிலிருந்து என்ன ஏற்படுகிறது. இந்துவும் இது சகஜந்தான் என்ற அளவிலேயே இருந்திருக்கிறது, என்பதுதானே.

மந்திரிமார்கள் வட்டாரத்திலும் அரசியல் அதிகாரிகளிடமும் இலங்ச இலாவணம் ஏராளமாக இருக்கிறது என்று பாபு ராஜேந்திர பிரசாத் கூறியதாக, மே 15-ந் தேதி இந்துவில் வெளிவந்த செய்தி, செந்தேள் போலாகிப் பலரைக் கொட்டியிருக்கிறது. ஓடி இருக்கிறார்கள், போலும் பாபுவிடம், “என்னய்யா இது, இருக்கிற தொல்லை போதென்று, நீர் தொல்லையை உண்டாக்குகிறீர். இப்படியா, நிரூபர்களிடம் கூறுவது” என்று கேட்டிருக்கிறார்கள் போலும், மே 19-ந் தேதிய இதழில், பாபுவின் மறுப்புக் குறிப்பொன்று அதே இந்துவில் வெளிவருகிறது!

அதிலும், என்ன கூறுகிறார் பாபு! எங்கள் மந்திரிமார்கள் மாசு மருமற்றவர்கள், அவர்கள் இலஞ்சம் இருக்கும் திக்கும் நோக்காத திருமேனிகள், அவர்களைக் றை கூறுவது மகா பாபம் - என்றா! இல்லை - இல்லை - நான் அப்படிச் சொல்லவில்லையே! நிரூபர் என்னைப்பல கேள்விகள் கேட்டார், அவைகளுக்கெல்லாம் பதில் கூறினேன், அவர் கேட்ட கேள்விகளிலே ஒன்று, இந்த இலஞ்ச இலாவணத்தைப் பற்றியது. சென்ற சில மாதங்களாகவே, நான் செல்லுமிடமெங்கும், மந்திரிமார்களைப் பற்றி இது போலக் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. அங்கெல்லாம்,என்ன பதிலைக் கூறுவந்தேனோ, அதே முறையிலேதான் நிரூபரின் கேள்விக்கும் பதில் கூறினேன் - அதாவது பிறரைக் குற்றம் குறைகூறி என்ன பயன்! ஒவ்வொருவரும் ஒழுக்கமாக நடந்து கொள்ளவேண்டும் - அப்போதுதான் இலங்ச இலாவணம் ஒழியும், என்று சொன்னேன். இலஞ்ச இலாவணம் இருக்கிறதென்றால் நாம் அனைவருமேதான் குறை கூறப்பட வேண்டியவர்கள் - ஒழுக்கம் வளர வேண்டும். அப்போதுதான் இந்தக் கேடு ஒழியும் என்று சொன்னேன். நிரூபர் வெளியிட்ட விதமான வார்த்தைகளை நான் கூறவில்லை - என்று பாபு தெரிவிக்கிறார். ஓரளவுக்கு மன ஆறுதல் ஏற்பட்டிருக்கக் கூடும். இளவந்தார்களுக்கு, பாபுவின் மறுப்புரை கண்டு - ஆனால் அந்த ஆறுதல், அவர் அறிக்கையை மேலேழுந்தவாரியாகப் பார்த்தால் மட்டுமே ஏற்படும் - கூர்ந்து கவனித்தால், உண்மை துவங்கிவிடும்.

இலஞ்ச இலாவணமே, கிடையாது என்று பாபுராஜேந்திர பிரசாத் கூறவில்லை.

மந்திரிமார்கள் ஒழுக்க சீலர்கள், அப்பு அழுக்கற்றவர்கள் என்றும் கூறவில்லை.

மந்திரிமார்கள் மீது யாரோ வேண்டுமென்றே, ஆபாண்டமாகப் பழிசுமத்து கிறார்கள் என்றும் கூறவில்லை.

உலகிலே, பெரியவர்கள், சர்வ சாதாரணமாகக் கூறுவார்களே, உபதேசம், அந்த முறையிலே, பேசுகிறார். இலஞ்ச இலாவணம் இருக்கிறதென்றால், அதற்கு எல்லோரும் தானே பொறுப்பாளிகள் - உலகம் அவ்வளவு கெட்டுப் போய்விட்டது - ஒழுக்கம் குன்றிவிட்டது - என்று பேசுகிறார்.

இலஞ்சம், வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும்தானே குற்றம் - வாங்குவது கொடுப்பது, மட்டுமல்ல, உடந்தையாக இருப்பது, தெரிந்தும் வெளியே தெரிவிக்காமலிருப்பது, எல்லோமும் குற்றந்தானே - அந்த முறையிலே எல்லோருமே குற்றவாளிகள்தானே, என்று வாதம் புரிகிறார், பாபு ராஜேந்திரபிரசாத்.

மந்திரிமார்களின் அப்பழுக்கற்ற தன்மையை அல்ல, அவர் கூறுவது, மற்றவர்கள் மட்டும் என்ன, மகாயோக்கியர்களா, பொதுவாகவே ஒழுக்கம் குன்றிவிட்டது, என்று குறைப்படுகிறார்.

இது எந்த விதத்திலே, மந்திரிமார்களின் மாண்பை உயர்த்துவதாகுமோ, நாமறியோம்.

இலஞ்ச இலாவணம் நடைபெறுவதாக, வதந்தி பலமாகி விட்டது - நாட்டுமக்களால் பேசப்படுகிறது, என்பது, பாபுவின் அறிக்கையின் மூலமே, விளக்கமாகத் தெரிகிறது.

அவரே கூறுகிறார், “போகுமிடமெல்லாம், இந்த இலஞ்ச இலாவணம் பற்றிய கேள்வி கிளம்பியவண்ணம் இருக்கிறது” - என்று.

என்ன இதன் பொருள்? அவ்வளவு சிரிப்பாய்ச் சிரிக்கிறது, சீலர்களின் நடவடிக்கை.

போகுமிடமெல்லாம், பாபுராஜேந்திரபிரசாத் போன்ற பெருந்தலைவர்களிடம், இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள், மக்கள்.

போதாதா இது, இவர்களின் இலட்சணத்தை விளக்க!

பாபுவையும் நாம் கேட்கிறோம், உலகம் கெட்டுவிட்டது, எல்லோருக்கும் பாபத்தில் பங்கு இருக்கிறது, ஒழுக்கம் குன்றிவிட்டது, என்ற பொது போதனை புரிவது, இருக்கட்டும், ஒழுக்கத்துக்கு இருப்பிடம் என்றும், தூய்மையின் பிறப்பிடம் என்றும், தியாக ஊற்றென்றும், மக்கள் நலன் தவிர வேறொன்று அறியாப் பராபரங்களென்றும் போற்றப்பட்டவர்கள் இளவந்த பிறகு இலஞ்சஇலாவணக் குற்றம், ஏன் இருக்கிறது? இருக்கலாமா?

முன் கோவலன் - பின் கோவலன் என்று நாடகமாடுவார்கள் - நமது மாகாணத்திலேயோ, மந்திரி சபை அமைப்பு நாடகத்திலே, மூன்று கோவலன் - இதற்குள் நாடகம் முடியவில்லை, இன்னும்! பெருமைக்குரியதுதானா? பேசாமல் தான் இருக்க வேண்டுமா, இந்தக் காட்சியைக் கண்டு, பொது மக்களுக்கு இந்த விஷயமாக, சிந்திக்கவும் பேசவும் உரிமையே கூடாதா?

மந்திரி சபைகள் மாறலாம் - அரசியலிலே அது நேரிடக் கூடாததல்ல, ஆனால் நமது மாகாணத்திலே நேரிடுவது போலவா!

கொள்கை - வேலைத்திட்டம் - இவைகளில் கருத்து வேற்றுமை ஏற்பட்டா, மந்திரிசபை மாறுகிறது!

யாராருக்கு எந்தெந்தச் சமயத்தில், வலிவும் வாய்ப்பும், கிடைக்கிறதோ, அவர்கள் அமைச்சர்களாக வேண்டியது! அவர்களை அமைச்சர்களாக்கி வைக்க வேண்டியது! ஸ்பெஷல் டிராமா கண்ட்ராக்டர், ஒரு ஊரிலே, கராராக கனவே கானகலாதர சுந்தரபாகவதரை ராஜபார்ட்டாக்கி நாடகம் நடத்துவதும், அதிலே கஷ்டமோ நஷ்டமோ ஏற்பட்டால், உடனே, நவரச நாடக திலக ஓரடி நாராயண பாகவதரைக் கொண்டு நாடகம் நடத்துவதுமாக இருப்பதுபோல, மந்திரி சபைகளை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் - இந்த இலட்சணத்துக்கு, கோபம் வேறு - மிரட்டல் வேறு!

நாடு முழுவதும் சிரிப்பாகச் சிரிக்கிறது! நாலுபேர் கூடினதும், முதல் பேச்சு இதுவாகவே இருக்கிறது, நற்பண்புள்ளவர்கள், நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போலிருக்கிறது என்று கூறி ஆயாசப்படுகிறார்கள் - இந்த ஆலங்கோலத்துக்கிடையே, ஒரு ஆணவ இரப்பரிப்பு நமது கழகத்தைப் பற்றி.

கேலி செய்யாதவர்கள் உண்டா, இவர்களை - எத்தணை சீச்சி சிந்துகள் எவ்வளவு கேலிப் படங்கள் இவர்களின் நிலையைப் பற்றி - நமது கழகப் பத்திரிகைகளிலே அல்ல - இவர்கள் இராதிக்கும் காங்கிரசிலே இராதனை செய்யும் ஏடுகளிலே.

இதோ கல்கி பிரித்துப் பார்த்ததும், என்ன காண்கிறோம் - காங்கிரஸ் இளவந்தார்கள் பெருமைப்படக்கூடிய சிந்திரங்களா! இல்லையே! கேலி செய்யும் படங்கள்.

படத்தில் மண்டை ஏன் அவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? மாபெருந் தலைவருக்கு மண்டைக் கர்வமாம்! - விளக்கமாகவே கல்கி தீட்டுகிறது, காங்கிரஸ் தொண்டரால் தலைமைப் பதவிக்கு வந்த மாபெரும் தலைவர், மண்டைக் கர்வம் கொண்டு மானத்தைப் பார்க்கிறார்.

மண்டைக் கர்வம்! - இதைப் படம் போட்டுக் காட்டிப் பரிகாசம் செய்கிறது கல்கி - மாபெருந் தலைவர்களுக்கு சாந்தமும் புன்னகையுந்தான் தவழுகிறது, நாம் இவ்வளவு ஆணவத்தோடு அல்ல, இவர்களை இணைத்து அணைத்துக் கொண்டு போகும் போக்கிலே, நியாயம்தானா நீர் சொல்லும் ஏன்கறி பாணியிலே, பேசுகிறோம், உடனே, மாபெருந்த தலைவர்களுக்கு, காரமான கோபம் வந்தவிடுகிறது, காட்டுகிறோம் எமது பலத்தை என்று கர்ஜனை புரியத் தொடங்குகிறார்கள்! எப்படி இருக்கிறது பாருங்கள். இவர்கள் பாவம், சட்டாம்பிள்ளை தலையிலே குட்டும் போது, சகித்துக் கொண்டிருக்கும் மாணவன், வகுப்புக்கு வெளியே வந்ததும், நோஞ்சலான பிள்ளையிடம் வம்புக்கு நிற்கிறானே, அதே போக்கல்லவா இது!

நோஞ்சலான பிள்ளை - என்றால் உண்மையிலேயே என்றல்ல பொருள் - நோஞ்சலாக இருப்பது போலக் காணப்படும் பிள்ளைகள்.

கல்கியின் இந்தக் சேலிச் சித்திரம். கலாரசனையை எட்டுகிறது - நமது பிரசாரமோ, இந்தப் பிரமுகர்களுக்கு, தீயாகச் சுடுகிறதாம்!

மாபெருந் தலைவருக்கு மண்டைக் கர்வம் பிடித்திருக்கிறது, என்று படம் போட்டுக் கேலி செய்யும், உரிமை இருக்கிறது கல்கிக்கு - அதைக்கண்டு கோபப்படாத பெருந்தன்மை இருக்கிறது, மாபெருந்தலைவர்களுக்கு - ஆனால், நாம், என்றாலோ, அவர்களுடைய வீரதீர பராக்கிரமம் வீறிட்டெழுந்து விடுகிறது - விட்டேனோ பார் என்று கர்ஜிக்கிறார்கள்.

கல்கி - சட்டசபை அங்கத்தினர்களையும், விட்டுவிடவில்லை. இதோ கல்கி வெளியிட்ட படத்தைப் பாருங்கள், சட்டசபை அங்கத்தினரை! - எதிரே நிற்கும் வாக்காளரையும் பாருங்கள்!
வாக்காளர் தயவினால் சட்டசபை அங்கத்தினராக வந்த எம்.எல்.ஏ. பிரபு, அந்த வாக்காளரைத் துச்சமாக மதிக்கிறார் - என்று தீட்டுகிறது கல்கி.

இதையெல்லாம் கண்டு கனம்களுக்குச் சினம் பிறப்பதில்லை - கலை ஓவியங்களை வளர்க்கிறது என்ற உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது - நம் பிரசாரம் என்றால் உடனே, போடு 144 - என்று கூறம், தர்பார் நடக்கிறது. இந்தப் போக்குக்கு, என்ன பெயர்? ஆகராதியின் உதவி போதவில்லை - நிச்சயமாகத்தான்.

காங்கிரசின் பேரால் சட்டசபைக்குள் நுûôந்திருப்பவர்களைப் பற்றி, கல்கி, என்ன கத்து கொண்டிருக்கிறது - மதிப்புத் தருகிறதா அவர்களுக்கு, என்பதை விளக்கும் முறையிலே, மே முதல் தேதி ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டிருக்கிறது - நம்மீது சீறும் வீரர்கள், ஒருமுறை பார்க்கட்டும் யோசிக்கட்டும்.

எம்.எல்.ஏ., யாக உள்ளவர், பொதுமக்களின் நன்மைக்காகப் பாடுபடுவதாகக் கூறிக்கொண்டு ஏய்க்கிறார், என்று, படம் தீட்டிப் பரிகாசம் செய்கிறது கல்கி.

“அசெம்பிளிக்கு நான் உங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், பிறகு நான் ஸ்ரீ.டி. பிரகாசத்தைப் பிரதம மந்திரிப் பதவியில் அமர்த்தியதும், பிறகு அவரைப் பதவியிலிருந்து வெளி ஏற்றியதும, அந்த ஸ்தானத்தில் ஸ்ரீ ஓமந்தூர் ரெட்டியாரை உட்காரச் செய்ததும், அந்த ரெட்டியாரைப் பலமுறை தேடிச்சென்று பேட்டிக்காண முயன்று பலிக்காமற் போனதும், பிறகு ஏன் மூளை வேலை செய்ய ஆரம்பித்ததும், அதன் பலனாக ஸ்ரீ ஓமந்தூரார் தாமாகவே பதவியை விட்டுப் போகும்படி நேர்ந்ததும், அந்தப் பதவியில் ஸ்ரீ குமாரசாமி ராஜாவைப் பலவந்தப்படுத்தி உட்கார வைத்ததும், இவ்வளவுக்கும் பிறகு இராப்பகலாகத் தூக்கமின்றி ஏங்கியதும், எல்லாம் உங்களுடைய நன்மைக்குதான், ஆகையால் பொது ஜனஸ்வாமி! உங்களுடைய நன்மைக்காக எனக்கு ஒரு டெபுடி மந்திரிப் பதவியோ, பார்லிமெண்டரி காரியதரிசி பதவியோ கொடுக்கும்படி சிபாரிசு செய்யுங்கள்!”

இப்படிக் கேட்கிறாராம் எம்.எல்.ஏ.!!

இவ்விதம் கேலி செய்கிறது கல்கி! எந்த எம்.எல்.ஐ க்குக் கோபம் பிறக்கிறது! பிறந்துதான் என்ன பலன்? - கல்கி, இந்தக் கோபத்தைக் கண்டு பயப்படவேண்டிய நிலையில் இல்லையே! கவர்னர் ஜெனரல் வேறு, கல்கி வேறு!! கனம்களும் கனம்களாகக் கூடிய எல்.எல்.ஐக்களும் கல்கி சூட்டும் போது, வலித்தால் கூட, வாய்விட்டு ஆழ முடியுமா?

கேலியும் கண்டனமும் சரமாரியாக, பல திக்ககளிலிருந்தும் தாக்கியபடி உள்ளன - தலைமேலே படேலின் பலாயுதம் தயாராக இருக்கிறது - மந்திரி சபைத் தகராறுகளைக் கண்டு, மேலிடம் 93வது செக்ஷனைப் பிரயோகித்து, அமைச்சர்களை ஆவினாசியாக்கிவிடக் கூடிய பேராபத்து இருந்தபடி இருக்கிறது, இவ்வளவுக்கும் இடையே, கர்ஜனை செய்கிறார்கள் இந்தக் கனம்கள், இவர்களின் அரசியல் வேட்டையிலே, போட்டிக்கு நின்றோ, பங்கு கேட்டோ, தொல்லை தராமல், நாட்டு மக்களுக்கு நல்லறிவூட்டப் பாடுபடும் நமது கழகத்தின் மீது.

உரத்த குரலால் உண்மையை மறைத்துவிட முடியாது. உருட்டும்விழி உரிமை முழக்கத்தை அடக்கிவிடாது என்பதைக் கர்ஜனை புரியம் கனம்கள் உணரவேண்டுகிறோம்.

(திராவிடநாடு 22.5.49)