அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கவனியுங்கள்! கவனியுங்கள்!

தி.மு.க நண்பர்களே!

நமதியக்கத் தோழரான காஞ்சி மு.பாலசுந்தரம் அவர்களின் முருகன் அன் கோ என்கிற துணிக்கடையிலிருந்து ரூ.25,000 மதிப்புள்ள பல பட்டு ரகச்சேலைகள், வெண்பட்டு வகைகள், களவு போயிருக்கின்றன.

இந்தப் பட்டு வகைகயில் எம்.பி. என்ற சீலும், சில சேலைகளில் இந்த ‘சீல்‘ இல்லாமலும் இருக்கும்.

எங்காவது தனிப்பட்ட நபர்கள், இத்தகைய பட்டுரகச் சேலைகள் ‘பில்‘ எதுவுமின்றி விற்க முயன்றால் தயவு செய்து அவர்களை, அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டு நமக்கும் !திராவிடநாடு) தகவல் தருமாறு வேண்டுகிறோம்.

துணிக்கடைகளுக்கும் வந்து இந்த ரகங்களை, களவாடிய நபர்கள் விற்க முயலலாம். வெளியூர் ஜவுளிக்கடை நண்பர்கள், சொத்து இழந்து பரதவிக்கும் தோழருக்கு, கள்ளனை பிடிக்க, மேற்குறிப்பிட்டவாறு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

“திராவிட நாடு“, காஞ்சிபுரம்

திராவிட நாடு – 4-5-52