அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தணலில் தங்கமாயிற்று லீக்
தனி இன உணர்ச்சி அழியாது
இக்பால், எழுச்சிக் குரல்
இன்றைய லீக் நிலைமை

“இந்து - முஸ்லீம் ஒற்றுமை வேண்டும்! இந்துவும் முஸ்லீம் பாரதபுத்ரரே!” என்று பேசினதும் காங்கிரஸ் தலைவர்கள்தான். இந்து முஸ்லீம், பேதம் உள்ளவரையிலே நாடு உருப்பாடு என்று கூறினவர்களும் அவர்களே. இந்து முஸ்லீம் பேதம், பிளவு இருக்கும் வரையிலே, அன்னிய ஆட்சி இருந்தேதீரும் என்று கூறினவர்களும் அவர்களே. இந்து முஸ்லீம் ஒற்றுமைதான் முதலிலே வேண்டும், பிறகுதான் சுயராஜ்யம்! என்று பேசினவர்களும் அவர்களே. இந்து முஸ்லீம் ஒற்øறுமைக்காகவே பாடுபடுகிறேன் என்று கூறினதுடன், அதற்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று சொன்னவரும் காந்தியார்தான். அதாவது இங்கும் வெளி உலகிலும் உள்ளவர்க்கு, இந்து - முஸ்லீம் என்று தனி இனங்கள் இரண்டு இருப்பதைமட்டுமல்ல அவை வேறு வேறாகி இருப்பதை மட்டுமல்ல், அவை இரண்டுக்கும் பேதமும் பிளவும் இருப்பதை மட்டுமல்ல, பேதமும்பிளவும் நாட்டைப்பாழ் படுத்தி வருகிறது என்பதையும், இந்தப் பேதத்தைப்போக்குவது மிக மிக முக்கியம் என்பதையும், இந்தபேதம் போக்கப்பட்டால் தான், நாடு சீர்ப்படும், அடிமைத் தளை உடைபடும் என்பதையும், எடுத்துக் காட்டினவர்கள் காங்கிரஸ் தலைவர்களையாகும். அவ்வளவுதூரம், இந்தப் பிரச்னையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினபிறகு, இங்குள்ள அறிவாளிகளா கட்டும், வெளிஉலகமாகட்டும், ஆளும் வர்க்கமாகட்டும், இந்துமுஸ்லிம் பிரச்சனையைச் சாமான்யமான தென்றோ, மிகச் சிறிய சிக்கல் என்றோ, சுலபத்திலே தீர்ந்து போகக் கூடியதென்றோ, கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை அல்லவென்றோகருத முடியும்? கருதலாமா? கருதுவது, கருத்துக்குருடரோ, கபடநினைப்பினைரோ மேற்கொள்ளலாமே தவிர நாட்டு நலனைக் கோருபவரின் செயலாக இருக்க முடியுமா?

இந்து - முஸ்லிம் பிரச்னையின் முக்கியத்துவததை நாட்டுக்கும் நாடாள்பவருக்கும், வெளி உலகுக்கும், நன்கு எடுத்துக்காட்டியபிறகு காங்கிரஸ் தலைவர்கள் இந்து - முஸ்லீம் பிரச்னை தீர்ந்துபோகும்படியான வழி வகுத்தனரா? இல்லை! இந்துவுக்கு இந்து என்ற நினைப்பு வலுவடையவும், முஸ்லீமுக்கு முஸ்லீம்என்ற எண்ணம் உரமடையவும் வேலை செய்ததுடன் இருவரும் வேறு வேறு என்ற எண்ணம் வேண்கொள்ளவுஞ் செய்தனர். பாரதமாதா! ராமராஜ்யம்! பகவத்கீதை! வந்தேமாதரம்! தரித்திரநாராயணசேவை! போன்ற முழக்கங்கள் காங்கிரசாரால் கிளப்பப்பட்டன. இவை, முஸ்லீம்களின் செவிக்கோ சிந்தனைக்கோ, எப்படி இனிக்க முடியும்? ராமனையும் கிருஷ்ணனையும், அரசியல் மேடைகளிலே ‘பிரதிஷ்டை’ செய்யும் பிரசாரம் நடைபெற்ற போது, முஸ்லீம்களின் மனதிலே காலிபாவும், உதுமானிய சாம்ராஜ்யமும், எழாமலிருக்கமுடியுமா? நாட்டை நாமே ஆளமுடியும், என்பதை மக்களுக்குக் காட்டக் காங்கிரசார், அசோகனையும் அமரசிம்மனையும், குப்தனையும் கனிஷ்கனையும் மக்களுக்கு மேடைப்பிரசாரத்தின் மூலம் அறிமுகப்படுத்திவைத்தபோது, முஸ்லீம்களுக்கு அலாவுதீனும் அவுரங்கசீபும், குதபுதீனும் கோரியும் கவனத்துக்கு வராம்லிருக்க முடியுமா? நாட்டு அடிமைத்தனத்தைப்போக்க மக்களைத்தட்டி எழுப்ப வேண்டும், என்பதற்காக முன்னாள்சிறப்புகளை எடுத்துக் கூறுவதற்காகக், காளிதாசனையும் கம்பனையும் சாட்சிக்கு இழுத்தபோது, முஸ்லீம்களுக்கு இக்பாலும், உமரும், எழுச்சிக்குரிய சாதனங்களாகாதிருக்குமா? வானளாவிய கோபுரங்களைக் காட்டி மேடைப்பிரசாரம் நடந்தபோது, வையகம் போற்றும் வனப்புள்ள தாஜ், முஸ்லீம்களின் மனதிலே தோன்றாதிருக்க முடியுமா? புராணம், சரிதம், கலை, முதலிய எதைப்பற்றி மேடையிலே காங்கிரஸ் பேசினாலும், இந்துவின் பழைய நினைவாக இருந்தது; அதேசமயத்திலே முஸ்லீமுக்குத் தனக்கென்று இருந்து வரும், வரலாறு - கலை - கதை ஆகியவைகளிலே எண்ணம் பாய்ந்துதானே தீரும். பட்டத்தாரசர் இருந்தனர் பாரதநாட்டிலே, இன்று பரங்கிகள் உள்ளனர்! - என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசினர், எழுச்சியூட்ட வேண்டுமென்று. இந்துவின் செவிக்கு இன்பமாகத்தான் இரந்தது. ஆனால் அதேபேச்சு, பாதுஷாக்கள் இருந்தனர் பரிபாலனம செய்துகொண்டு! இந்து அரசர் பலரை வென்றனர் போரிட்டு! இன்று பக்கீராகிவிட்டனர்! என்ற நினைப்பைத் தானே முஸ்லீமுக்குத்தர முடியும்.

“இது டில்லி நகரம்! அன்னிய சர்க்காரின் ஆட்சிப்பீடம், அதாவது நமது அடிமைத்தனத்தின் சின்னம்! இங்கே, வெள்ளைக்கார சர்க்காரின் கட்டிடங்கள் உள்ளன! ஆனால் இதே இடத்திலே, நமது மாபெரும் மன்னர்கள் கொலுவீற்றிருந்தனர்! நமது ராஜாக்களின் அரண்மனைகள் இங்கு இருந்தன! இன்று வைசிராயின் மோடாரும், வெள்ளைக்கார அதிகாரிகளின் வண்டி வாகனங்களும் ஓடும் இந்த டில்லியிலே, பாரதநாட்டுப் பட்டத்தரசர்களின் இரதகஜதுரகபதாதிகள் கெம்பீரமாக உலவின! மகாஜனங்களே! இந்த டில்லியே பழைய அஸ்தினாபுரம்! தர்மராஜன் இருந்த இடம்! அரிச்சந்திரன் போன்ற அரசர்க்கரசர் செங்கோலோச்சிய இடத்திலே, அன்னியன் அரசாள்கிறான், என்று பேசிமுடிப்பார், வங்கத் தேசீயத்தலைவர், வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருப்பர் மக்கள், அவர்களிலே இந்துக்களாக உள்ளவர்க்கு அஸ்தினா புரத்தைப் பற்றிய கதைதெரியும், அவர்களின் புராணம், பஜனை, கீதம், கூத்து, சிற்பம், யாவும் அந்த எண்ணத்தைத் தந்திருக்கிற காரணத்தால். ஆனால் அதேசமயத்திலே ஒரு முஸ்லீமுக்கு, டில்லி என்ற உடனே, என்ன நினைப்பு வரமுடியும்? டில்லி, இந்துவுக்கு அஸ்தினாபுரம்! டில்லி, முஸ்லீமுக்கு, தெல்ஹி!! டில்லியை நினைத்த உடனே தர்மராஜனின் நினைவுவரும் இந்துவுக்கு, முஸ்லீமுக்கோ, பாபர், ஹுமாயூன், அக்பர், அவுரங்கசீப், ஷாஆலம், ஆகிய பாதுஷாக்களின் காலம் நினைவிற்கு வரும்! டார்ட்டாரி தேசத்துப்புரவிகள் மீது அமர்ந்து நமது மூதாதையர், நாட்டை ஆள்பவர்களாக நடமாடிய இடம் இது! நமது ஆட்சிப்பீடம்! நாம் இந்து ஆட்சியை வென்று,நமது ஆட்சிசை அமைத்த இடம்!! - என்ற நினைப்பு வரத்தானே செய்யும். அஸ்தினாபுரத்துக் கதைகளாவது, மிகப்பழங்காலத்தவை; புராணமேற்பூச்சுள்ள வரலாறு! தெல்ஹி விஷயம், நேற்றைய வரலாராயிற்றே! தர்மராஜனின் அரண்மனைக்குப்பதில் மண்மேடுதான் காணமுடியும், ஆனால் தாஜும், ஹுமாயூன் தோட்டமும் இப்போதுதான் அமைக்கப்பட்டவைபோல் காட்சி அளிக்கின்றனவே! எப்படி முஸ்லீம், “தெல்ஹி, தேஸ்அமாரா!” என்று எண்ணாமலிருக்கமுடியும்! எனவே நாட்டு விடுதலைக்காகத் துவக்கப்பட்ட பிரசாரம், இந்துவுக்கும் முஸ்லீமுக்கும், வேறு வேறான, தனித் தனியான, கூர்ந்து நோக்கினால் முரண்பாடான, மன எழுச்சியைத் தந்தது. இந்துவுக்கு அவனுடைய பூர்வபெருமையும், முஸ்லீமுக்குத்தன் முன்னாள் நிலையும் நினைவிற்குவந்தது. இரண்டு முகாம்கள், இயல்பாகவே அமைந்துவிட்டன!!

இங்ஙனம், முஸ்லீமுக்கு, இஸ்லாமியர் இந்தியாவை ஆண்ட வரலாறு நினைவிற்கு வந்தநேரமும், இஸ்லாமியரின் கூட்டுறவும் ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் இந்தியா உருப்படாது சுயராஜ்யமும் கிடைக்காது என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசிய நேரமும், ஒரேசமயத்திலே; எனவே, இஸ்லாமியரின் மனக்கண்முன்பு அன்று, இன்று நாளை என்ற முறையிலே நினைவுப்படங்கள் தோன்றலாயின. அன்று பாதுஷாக்கள், இன்று அடிமைகள், அந்த நிலையிலேயே நாட்டுவிடுதலைப் படையிலே சேருமாரு அழைப்புப் பெற்றிருக்கிறோம். இந்த விடுதலைப்போர் வெற்றிகரமாக முடிந்தபிறகு, நாளை நம்நிலை எப்படி இரக்கும்? என்று எண்ணலாயினர்! டில்லி அஸ்தினாபுரமாகுமா? தெல்ஹியாகுமா? என்ற கேள்வி பிறந்தது. லீக், கருவிலே தவழலாயிற்று! நாட்டுக்கு விடுதலை தேடுவதுமட்டுமல்ல, நமது வேலை. விடுதலை பெற்றநாடடிலே நமது நிலையாதாக இருக்கும் என்பதை நிர்ணயிக்க வேண்டியதும் நமதுபொறுப்பு என்ற எண்ணம் எழுந்தது. அடிமைத்தளைகள் உடைபட்ட பிறகு, அன்னை பாரததேவி அரசு செலுத்துவாள் என்று அறிவிக்கப்படுகிறதே, பாரததேவி, நம்மைத்தன் புத்திரராகக் கொள்ள முடியுமா? என்றசந்தேகம் பிறந்தது. சுயராஜ்யம் என்றால் அது இராமராஜ்யமாக இருக்குமென்ற காங்கிரஸ் கூறுகிறதே, போல இருக்கவேண்டும் என்று பேசப்படுவதிலிருந்து இருவரும் அண்ணன் தம்பி அல்ல என்று ஏற்படுகிறதே, அண்ணன் தம்பிக்குள்ளாகவே சொத்துசுகம் என்பனவற்றிலே சண்டை மூண்டுவிடுகிறதே, அரசு விஷயத்திலோ, படுகொலைகள் நடந்துள்ளனவே, இந்துவும் முஸ்லிமும், அண்ணன் தம்பி போல் இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறதே, போல இருக்கவேண்டும் என்று பேசப்படுவதிலிருந்தே இருவரும் அண்ணன் தம்பி அல்ல என்று ஏற்படுகிறதே, அண்ணன் தம்பிக்குள்ளாகவே சொத்துசுகம் என்பனவற்றிலே சண்டை மூண்டுவிடுகிறதே, அரசு விஷயத்திலோ, படுகொலைகள் நடந்தள்ளனவே, இந்தவும் முஸ்லிமும் அண்ணன் ம்பி போல இருந்தால், சுயஅரசாளும் நேரத்திலே, நிலைமை சரியாக இருக்குமா, நீதி நிலைக்குமா, பாதுகாப்புகிடைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டது. ஏற்படவே, கண்ணைமுடிக் கொண்டு காரியமாற்றக்கூடாது, நமது எதிர்கால வாழ்வுக்கான திட்டத்தைத் தயாரித்துக் கொண்டு, அதற்கான பாதுகாப்பு,வாக்குறுதிபெற்றுக் கொண்டு, பிறகே சுதந்திரப்போரிலே, ஈடுபடவேண்டும் என்ற யூகம் பிறந்தது. முஸ்லிம்களின் தனியான மார்க்கம், கலாசாரம், ஆகியவற்றுக்குப்பாதுகாப்புக்கோரப்பட்டது. இந்து ஆள்வதென்றும், அதிலே, முஸ்லிம், தன்சொந்த மதம், கலை ஆகியவை பாதுகாக்கப்பட்டு, வாழவழிவகுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆட்சி இந்துவுடையது என்பதும், அதிலே முஸ்லிம் சிறுபான்மையாக இருப்பது என்பதும், அரசயில் திட்டமாகப் பேசப்பட்டது. இவ்வளவுதானா நமது எதிர்காலம்? ஆட்சி இந்துக்களிடம், அவர்களின் நீதியான கோலின் கீழ் நாம் வாழ்வது என்பதுதானா, சுயராஜ்யத்தின் பொருள்? இப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கிறோம், இந்த ஆட்சியை ஒழிக்கக் காங்கிரஸ் காட்டும் களம் சென்று போரிட்டு வெற்றி பெற்ற பிறகு, பிரிட்டிஷ் ஆட்சிபோய், இந்து ஆட்சியிலே நாம் இருப்போம்! ஆளும் எஜமானவர்க்கம் மாறுகிறது நமது நிலைமையிலே என்ன மாறுதல் காணப்போகிறோம்? இந்த எதிர்காலம்’ பயனற்றதல்லவா? இதற்கா நாம், இவ்வளவு பாடுபடவேண்டும்? என்று முஸ்லிம் யோசிக்கத் தொடங்கினர். ‘இஸ்லாமியனே! நீ சிறுபான்மையுமல்ல, உன் பிறைக்கொடியின் பெரு நெறி பிரபஞ்சமெங்கும் ஆளக்கூடிய பெருமைக்குரியவனாக்கும் உன்னை, உன்நாடு உலகெங்கும் உண்டு!’ என்ற உணர்ச்சிப் பெருக்குடன், அதுசமயம் கவி இக்பால் பாடினார்.

“சீனோ அரப் அமாரே
இந்து1“தான் அமாரே!”

என்பது கவிஞரின் குரல் மட்டுமல்ல, இஸ்லாமிய இனத்தின் திருப்பள்ளி எழுச்சி!

பூர்வ பெருமைபேசப்பட்டுப் பூரிப்புடன் உலவிய இந்து, வெள்ளையனை, மதிக்க மறுப்பதையும், “வெள்ளைப்பரங் கியைத் துரை என்ற காலமும் போச்சே!” என்று கவிகள் பாடக்கேட்டும், கறுப்பு மனிதர் என்று ஏளனப் பேச்சுப்பேசி வந்த வெள்ளையர், இறுமாப்பு அடங்கி, இந்தியரைத் தட்டிக் கொடுத்து நிறபேதம் தவறுதான் என்று பேசுவதையும், கண்டும் கேட்டும் முஸ்லீம்களிப்படைந்தான் ஆனால் அதேசமயத்திலே, இந்து தன்னை நடத்தும் விதத்தைக் கண்டான், மனம் நொந்தான். நிறபேதம், “தேசியத்தாக்குதலால்” உடைபட்ட போது, “தேசியத் தழுவுதல்” ஏற்பட்டும், இந்து, முஸ்லீமைத் தாழ்ந்தவன் என்றும், அன்னியன் என்றும் கருதுவதும் நடவடிக்கைகளிலே காட்டுவதுமாக இருக்கக் கண்ட முஸ்லீமுக்கு வெட்கமும் துக்கமும் ஏற்படாதிருக்குமா? தெல்ஹியிலே அரசாண்ட வம்சத்தாராகிய நாம், ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருப்பது மட்டுமல்ல, இந்து வினாலுங்கூடத்தான் இழிவாக நடத்தப்படும் நிலைக்கு வந்துள்ளோம் என்பதைக் கண்டான்; வெகுண்டான் முஸ்லீம்பானி இந்துபானி! முஸ்லீம்ச்சாயா! இந்துச் சாயா! என்று ஊரெங்கும், ரயில்வேவிடுதிகளெங்கும், கிளம்பும் குரல், சீனோ அரப்அமாரா! என்ற இக்பால் கீ தம் பகுந்த அதே செவியில் வீழ்ந்தால், முஸ்லீமின் மனப்போக்கு எவ்விதமிருக்க முடியும்? நேற்று ஆண்டோம், இன்று அடிமையானோம், நாளை நம் கதிஎன்ன? என்றகேள்வி, உயிர்ப்பிரச்னையாகி விட்டது. முஸ்லீம்லீக் பிறந்தது.

முஸ்லீம்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளக் காந்தியார் எண்ணியதிலே, இராஜதந்திரம் இல்லாமற் போகவில்லை. வெள்ளையரிடம், சுயராஜ்யத்துக்காகப் போராடும் நேரத்திலே, இதுவெறும் இந்துக்கிளர்ச்சியல்ல கோபம், சாபம் என்ற அளவோடு நின்றுவிடாது இதிலே முஸ்லீம்கள் உள்ளனர். ஜாக்ரதை, என்று பிரிட்டிஷாரைமிரட்ட, இந்த ‘ஒற்றுமை’ பயன்பட்டது. எதிரிக்கு காட்டப்பயன்பட்ட அளவு, உள்நாட்டுப் பூசலைஒழிக்க இந்த “ஒற்றுமை” பயன்பட வில்லை. இன்றுகூட, இந்த ஒற்றுமைக்காகவே நான் உழைக்கிறேன் என்றுகூறும் காந்தியார், கொலுவீற்றிருக்கும், வாதா எனும் ‘திவ்ய க்ஷேத்திர” மிருக்கிறதே, அந்த ரயிலடியிலே, இந்துச்சாயா! முஸ்லீம்ச்சாயா! என்ற கீதம் கேட்கப்படுகிறது! வெளிநாட்டு நிருபர்களெல்லாம் வர்தா வருகிறார்கள்!! அவர்களெல்லாம், இந்தக்கீதத்தை, சுதந்திர இந்தியாவின் சிந்து என்று கொள்ளமுடியுமா? ஆளும் கூட்டத் துக்கு மட்டுமேயின்றி அகில உலகுக்குமே, தான் முஸ்லீம் நண்பர் என்று காட்டிக்கொள்ள விரும்பிய காந்தியார், கிலாபத் இயக்கத்தை நடத்தினார். அதாவது காலிபாவின் ஆட்சியை ஆதரித்து, இங்குள்ள முஸ்லீம்களைக் கொண்டு கிளர்ச்சி செய்தார். இயக்கம் வெற்றி பெறவில்லை, ஆனால், இஸ்லாமியருக்கு, இந்தியாவிலே மட்டுமல்ல உலகிலே பல்வேறு நாடுகளிலே, அரசுகள் உள்ளன என்ற உண்மையை முஸ்லீம்கள் தெரிந்து கொள்ளச் செய்தது கிலாபக் கிளர்ச்சி! நாம் நாடாண்டவர்கள் மட்டுமல்ல, நம்மவர்கள் பல்வேறு நாடுகளை இன்றும் ஆண்டு கொண்டிருக்கின்றனர், என்று முஸ்லீம்கள் தெரிந்து கொண்டதும் இப்படிப்பட்ட நம்மை, இந்துக்கள், இன்னொருவனுடைய பிடியிலே சிக்கியிருக்கும் இந்நாளிலே, இழிவாகநடத்துவதும், தாழ்வாகக் கருதுவதுமாக உள்ளனரே, இது என்ன கொடுமை, சுயாட்சியை இழந்ததுடன் சுயமரியாதையையும் இழந்து கிடப்பதா? அடிமைப்பட்ட நிலையிலேயே இந்துவுக்கு இவ்வளவு ஆணாவம் இருக்குமானால், விடுதலைகிடைத்து, சுயராஜ்யம் நடத்துகிற போது, நாம் சிறுபான்மையோராக அந்த ஆட்சியிலே இருக்க நேரிட்டால், நம்கதி...! என்று சிந்தித்தனர். அந்தச் சிந்தனை, “நாம் சிறுபான்மையோரல்ல! நாம் ஓர் தனி இனம்!” என்ற கொள்கையை ஈன்றெடுத்தது. இந்நிலையிலே, முஸ்லீம்களின் கிளர்ச்சியை அடக்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும், திருப்திப்படுத்தவும் என்ற பல்வேறு நினைப்புடன், முஸ்லீம்களுடன் பேரம் பேசுதல், கலந்தாலோசித்தல், வட்டு மாநாடுகள் நடத்துதல், லக்னோ ஒப்பந்தம், நேரு அறிக்கை, என்பன போன்ற பல வழிகளை அமைத்துப்பார்த்தனர் காங்கிரசார் சர்க்காரும், பல்வேறு வழிகளை வகுத்தபடி இருந்தனர். முஸ்லீம்களின் உணர்ச்சியோ, உருப்பெற்று, உரமாகிவந்து öõகண்டிருந்தது. தனியான இனம் என்ற சிறுகுழந்தைக்குத் தொட்டிலாக அமைந்தது தனித் தொகுதி! தனித்தொகுதியிலே தவழும் முஸ்லீம் இனம், காளைப்பருமை அடையு முன்பு, சுயராஜ்யத்தைப் பெற்றுவிட்டால், இந்து ஆட்சி நிருவிவிடலாம், என்று மனப்பால் குடித்தனர் காங்கிரசார் இன்று காளை, களத்திலே நிற்கிறான்! ‘எதிரிகள் தலைவாயலிலே நிற்கின்றனர், வெள்ளி வெடிகுண்டுகளைத் தாருங்கள் வேலையை நான்முடித்து விடுகிறேன்!” என்று ஜனாப் ஜின்னா, சென்ற கிழமை பம்பாய்க் கூட்டமொன்றிலே பேசினார். இந்த வளர்ச்சி காங்கிரசார் எதிர்பார்த்ததல்ல! தொட்டிலிலேயே குழந்தைகிடக்கும், பாலுக்கு அழுது அழுது, கவனிப்பாரற்ற மரணமடையும் என்று எண்ணினர்.

இந்த எண்ணம் கொண்டதால்தான், காங்கிரஸ் தேர்தலிலே வெற்றி பெற்று மந்திரிசபைகளை அமைத்ததும், பண்டித ஜவஹர், “நாட்டிலே இரண்டே கட்சிகள். ஒன்று காங்கிரஸ்; மற்றொன்று சர்க்கார்!” என்று மார்தட்டினார். காங்கிரஸ் சீட்டிலே கையொப்பமிட்டாலொழிய முஸ்லீமுக்கு மந்திரிசபையிலே இடம் கிடையாது என்றார் படேல்! வந்தே மாதரம் பாடத்தான் செய்வோம், கேட்க விருப்பமில்லா விட்டால் முஸ்லீம் மெம்பர்கள் வெளியே போகலாம், என்றார் ஆச்சாரியார்! இந்த “கப்சிப்” தர்பார், காலவரையறையின்றி நடக்கும் என்று கருதினர் கருப்புக்கண்ணாடியினர். இந்த அடக்கு முறையின்போது, காங்கிரசின் மேடைத் தத்துவங்கள் கூட மாறின. இந்து - முஸ்லீம் ஒற்றுமை தான் முதலிலே வேண்டும் பிறகு தான் சுயராஜ்யம்! என்று பேசினது போய், சுயராஜ்யம் முதலில் வேண்டும், பிறகுதான் இந்து முஸ்லீம் போன்ற சில்லரைப் பிரச்சனைகள்!! - என்ற பேச்சுக கிளம்பிற்று! இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாவிட்டால் சுயராஜ்யம் கிடைக்காது என்றுபேச்சு போய்விட்டது! சுபராஜ்யம் கிடைத்தால் தான், இந்து முஸ்லீம் பிரச்னை தீர்க்க முடியும்! என்றபுதுப்பேச்சு பிறந்தது. தனித்தொகுதி ஒழிய வேண்டும் என்ற கூச்சல் கிளப்பினர். ஜனாப் ஜின்னா, ஏகாதிபத்யதாசர் என்ற வசைமாரியைப் பொழிந்தனர். காங்கிரசாட்சி சாசுவதம் என்று பேசினர். பத்திரிகைகளிலே ஜனாப்ஜின்னாவை ஏசாத நாளில்லை. சென்றகிழமை சென்னையிலே பேசிய நண்பர் டாக்டர் எ. கிருஷ்ணசாமி, அழகாகக்கூறினார் ‘பத்திரிக்கைகாரர்கள், தங்களுக்குப் பிரமாதமான பலம் இருப்பதாக மனப்பால் குடிக்கிறார்கள், அது சுத்தத்தவறு. பத்திரிகைப் பிரசாரத்துக்கு அவ்வளவு பலம் இருப்பது உண்மையானால், எவ்வளவோ பத்திரிகைகளின் தூற்றலுக்கிடையே, சிக்கிய ஜனாப்ஜின்னா சிதைந்து போயிருப்பாரே! ஜனாப்ஜின்னா இன்று இந்தியாவின் ÷4õதியாகவன்றோ ஜொலிக்கிறார்! என்ன செய்ய முடிந்தது இந்தப் பத்திரிகைகளால்?”, எ“னறு கேட்டார் டாக்டர். அழகான பேச்சுமட்டுமல்ல, ஆணித்தரமான கேள்வி அது, ஜனாப்ஜின்னாவின் மீதுகக்கியகனல் கொஞ்சமல்ல! அஅதன் பலனாக லீக்கருகிவிடும் என்று எண்ணினர், லீகோ, தணலில் வெந்த தங்கமாகிவிட்டது.

(திராவிட நாடு - 19.8.1945)