அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இங்கே பாரீர்!

சேலம், மார்ச் 28.

அரூர் தாலுக்கா தாசரல்லி போர்டு பாடசாலையில் வேலை செய்து வரும் தலைமை ஆசிரியர் ஏ. தீத்தான் என்பவர் காலில் செருப்பு அணிந்து வருகிறார் என்ற காரண்ததை முன்னிட்டு அவ்வூர் ஜாதி இந்துக்களில் சிலரால் 25-2-52 நடுப்பகல் 11 மணிக்கு பாடசாலைக்குள்ளேயே தாக்கப்பட்டாராம் இது சம்பந்தமாக ஜில்லா போர்டு பிரசிடெண்டிற்கு ரிப்போர்டு செய்ததற்கு, ‘நீரே வழக்கை நடத்திக் கொள்ளும், எனக் கூறிவிட்டாராம். அவ்வூரிலிருந்து மாறுதல் கேட்டதற்கும் நிர்வாகம் மறுத்துவிட்டதாம்.

இதுபற்றி வழக்கு சப்-மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தும் அது 19-3-52ல் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாம்.

செய்தி – திராவிட நாடு – 6-4-52