அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இரட்டை நாவினர்!

அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போûயைக் கொடுக்கும். அதிகாரத்தைக் கையாண்டு ஒருமுறை அனுபவப் பட்டுவிட்டவர்கள். வெகு சுலபத்தில் அதனைக் கைவிடத் துணியார் என்றும் ன்னிடத்திலேயே அதிகாரம் சிரஞ்சீவியாக நிலைத்திருக்கப் பார்த்துக் கொள்வதில் மிக்க கவலை எடுத்துக்கொள்வர். அதிகாரம் தரும் மயக்கத்தில் சிச்கிக் கொண்டவர்கள் கண்களுக்குக் கூட்டுத்தோழர்கள் - நண்பர்கள் இடத்தும் கூடப் பகைமை கண்டு மிருளுவர். இந்நிலையில் ஒருசிறு எதிர்ப்பு தன் சொல்லுக்கு ஒரு மாற்றுச்சொல் - போக்கை மாற்றிக் கொள்வது முறை எனும் வேண்டுகோள் எதுவும், தனது கையிலுள்ள அதிகாரத்தை ஆபகரித்துக் கொள்ளும் நோக்கத்தோடு எழுந்தவை என்றே நம்பிக்கொள்வர். எனவே, முன் கூட்டியே, இத்தகைய நிலைமை ஏற்படாமல் இருக்கத்தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள முனைவர். இந்தப் போக்கு - கோட்பாடு அரசியலில் பெரியதோர் நோயின் அறிகுறியாகும். மக்கள் ஆட்சி முறைக்கு, இது முற்றும் புறம்பானது, இதனை முளையிலேயே நசுக்கி ஒழிக்க úவ்ணடியது, மக்கள் ஆட்சி முறையில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கிளன் நீங்காக் கடமையாகும்.

அன்பர் ஆச்சாரியாருக்கு, ஆகவை எழுபது ஆகிறது. அவருடைய அறிவு, ஆற்றல் ஆபரிமிதமானது என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது.

இன்று அவர் மேற்கு வங்கத்தின் கவர்னர் அதாவது ஆட்சிப் பீடத்தின் தலைவராக இருக்கிறார். அவர் கையில் அதிகாரம் கிடைத்தால், அந்த அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவார் என்பதை, நாம், சென்னை மாகாணத்தின் பிரதமராக அவர் இருந்த காலத்தில் அனுபவித்திருக்கிறோம். கட்டாய இந்தி நுழைப்பால், தமிழரிடையே ஏற்பட்ட கொதிப்புணர்ச்சியும், அதற்காக மக்கள் எடுத்தக் கொண்ட அமைதியான நடவடிக்கைகளை அடக்க அவர் அதிகார பீடத்திலிருந்து கொண்டு கையாண்ட அடக்குமுறைகûளுயம், இதற்குள் மக்கள் மறந்து விட்டிருக்கமாட்டார்கள். குட்டிக் கதைகள் பல கூறி, தமதுது கோணல் போக்கிற்கு ஆதரவு தேடினதையும், அது போதிய பயனளிக்காமல், ஏத்திக்கினும் பார்க்கின்றவர்களை எல்லாம் எதிரிகளாகக் கண்டு ஏரிச்சல் கொண்டதும், எந்தச் சட்டத்தை ஒழிக்கவேண்டுமென அதிகாரம் இல்லாத நேரத்தில் அன்பர் ஆச்சாரியார் ஆர்ப்பரித்தாரோ, அதே சட்டத்தை வெட்கம் துளியுமின்றி - நெஞ்சு நடுக்கமின்றி, கட்டாய ஹிந்தியை எதிர்த்தவர்கள் மீது பிரயோகித்து மகிழ்ச்சி அடைந்தார். பிரச்சார முனை ஆவரினத்தின் சொந்தக் சொத்தாக இருந்த காரணத்தினால், ஆவரின் ஆôத செயல் - அதிகார மமதை, அவனி எங்கும் கண்டனத்திற்கு உள்ளாகும் முறையில் விளம்பரப்படுத்தப் படாமல் மறைக்கப்பட்டுவிட்டது.

அவருடைய நிஜ உருவைப் படம் பிடித்துக் காட்டும் தன்மையில் இன்று வங்கத்தில் அவருடைய போக்கு இருக்கிறது. பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் ஒவ்வொரு மகாணாத்திலும், இன்று அதிகார பீடத்திலுள்ளவர்கள் புதிய சட்டமியற்றும் பணியில் முனைந்துள்ளனர். ஆபத்தானவர் என்று ஆளுவோர் தீர்மானித்துவிட்டால், ஒருவரைச் சிறையில் அடைக்கவும், வீட்டிலேயே காவல் வைக்கவும், போலீஸ் கெடுபிடிகளுக்கு உள்ளாக்குவும், பாதுகாப்புச் சட்டத்தில் இடமிருக்கிறது. இபோன்ற ஆள்தூக்கிச் சட்டத்தை ஏற்கெனவே ஏகாதிபத்திய அரசாங்கம் கையாண்டது. இன்று அதிகாரத்திலுள்ள காங்கிரஸ் தலைவர்களில் பலர் ஆக்கொடுஞ் சட்டத்தால் ஆவதிக்குள்ளானதும், அதனை ஒழித்துகட்ட வேண்டுமென இத்தலைவர்கள் இடையறாது உழைத்ததும், அதன் விளைவாக மக்களுக்கு ஆளுவோர் மீது வெறுப்பேற்பட்டுக் கொதிப்பேறிக் கிளர்ச்சி செய்ததும் வெளிப்படை இரகசியமாகும். நம்மவர் அதிகாரத்தில் அமர்ந்துள்ள இந்த நேரத்தில், அதே முறையான ஆக்கிரமச் சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியமென்ன? ஏகாதிபத்தியப் பிடியில் மக்களுக்கு ஏற்பட்ட இடுக்கண் பலவும்.

நம்மவர் ஆட்சியிலும் பரிகரிக்கப்படாமல் அப்படியே இருக்கும் என்பதா அதிகாரத்திலுள்ளவர்கள் நம்பிக்கை? மக்களுக்கு நலம் பல செய்யும் பண்புடையர்களாக அதற்கான திட்டங்கள் கொண்டவர்களாக இளவந்தார்கள் இருப்பார்களானால், ஏகாதிபத்தியம கைக்கொண்ட அதே முறையால், ஏன் ஆட்சிசெலுத்த நினைக்கவேண்டும்? ஏகாதிபத்திய அதிகார வர்க்கத்தின் கண்களுக்குத்தான், அதன் தாளடி தொழுது கிடந்தவர்களைத் தவிர்த்து மற்றவர்களெல்லாம், அரசாங்க விரோதிகளாகத் தெரிந்தனர். அதேபோக்கு, நம்மவருக்கும் ஏன் இருக்கவேண்டும்? ஏகாதிபத்தியம் கொண்டிருந்த கோட்பாடே, அதாவது மக்களைச் சுருண்டும் நோக்கமே, இன்று இளவந்தார்களின் இலட்சியமாக இருக்குமானால், அத்தகையவர்களுக்கு இதுபோன்று அதிககிரமச் சட்டங்களின் துணை அவசியம் வேண்டியதுதான்!

இன்றியமையாத தொழில்களில் வேலை நிறுத்தம் செய்யும் நிலைமை ஏற்பட்டு, அவ்வாறு செய்யத் தூண்டுபவர்களுக்கும், அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைத் தேவை பூர்த்தி அடைய வேண்டுமென்று சொல்லுகிறவர்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத தண்டனை, இச்சட்டத்தின்படி அளிக்கப்படும்.

இரப்பர் போன்று இழுத்த அளவிற்கு நீளும் போக்கிலுள்ள பலாத்கார மிரட்டல் எனும் மறைவில், ஒருவரை ஐந்து வருஷம் சிறையிலடைக்க இச்சட்டம் அனுமதிக்கிறது.

ஹெட்கான்ஸடேபிளும் எவரையும் விசாரணையின்றி கைது செய்யவும், ஒலி பெருக்கிகளை உபயோகிப்பதைத் தடை செய்யவும், பத்திரிகைகளில் வரும் செய்திகளை முன் கூட்டியே தணிக்கை செய்யவும், இதுபோல உரிமை பலவும் இப்பாதுகாப்புச் சட்டத்தின் மூலம்ட, மக்களிடத்திலிருந்து பறிக்கப்படுகிறது.

இதனைக் கண்டு வங்க மக்கள் கொதித்தெழுந்தனர். சட்டசபையை முற்றுகை ஆட்டனர். கண்ணீர்ப்புகையும், தடியடியும், துப்பாக்கி வேட்டும் பயனளிக்கவில்லை. சட்டசபைக் கூட்டத்தையே ஜனவரி 4ந் தேதி வரையில் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது பாதுகாப்பு மசோதாவை வியாஜ்யமாகக் கொண்டு, பொதுத்தேர்தல் நடத்த முன்வர வேண்டுமென, சரத் சந்திரபோஸ், மந்திரி சபையினருக்குச் சவால் விடுத்துள்ளார். வங்காளப் பாதுகாப்புக்கு எனும் பெயரால் மந்திரி சபையைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும், இதே மசோதாவை - இடைக்கால அவசரச் சட்டமாக லீக் மந்திரிசபை கையாண்டபோது இன்றுள்ள காங்கிரஸ் சட்டசபை அங்கத்தவர்கள் எதிர்த்தனர் என்றும், அதிகாரப் போதையில் வெறித்துப் போய் இருப்பவர்கள் அதனையே நிரந்தரச் சட்டாக்கத் தயங்கவில்லை என்றும் சரத்பாபு விளக்கிக் கூறுகிறார்.

சரத்பாபுவை, ஏகாதிபத்திய தாசர் ஏன்றோ, தியாகம் தெரியாத பதவி வேட்டையாக்காரரென்றோ, ஏவரம் கூறத் துணியார், நாட்டைப் பிறரிடம் காட்டிக் கொடுக்கும் பண்புடையவரும் அல்லர் அவர். அவரைத் தேசத் துரோகி என்று கூற ஏர் மனமும் ஒருப்படாது. அவர் கூறுகிறார் அதிகாரத்திலுள்ளோர், அதன் மயக்கத்தால் வெறி கொண்டுள்ளனர் என்று.

இளவந்தார்களிடத்தில் அன்பு காட்டாது, அவர்கள் ஆட்ட கட்டளைக்கும் சிரம் வணங்காது, அங்கு மக்கள் அதட்டிக் கேட்பதும் கிளர்சசி செய்வதும், ஆட்சித் தலைவரான ஆச்சாரியாருக்குத் திகைப்பையும் ஏரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆச்சாரிய புருஷரல்லவா அவர்! கீதோபாதேசம் செய்ய முனைந்துள்ளார்.

“தற்கால சமூக வாழ்க்கை தொழிலாளரைப் பொறுத்திருக்கிறது. ஸ்தாபன ரீதியாக ஒத்துழையாமை மேற்கொள்ளுவதில் தொழிலாளர்களுக்குள் பலமும் உண்ணா விரதங்களும், பொதுச் சேவையையே கறைப்படுத்தும் ஆர்ப்பாட்டக் கூச்சலும், நாசவேலை முறையும் தனிநபரின் சொந்த இவலைப் பூர்த்தி செய்வதற்குப் பயன்படும்.

இவ்வாறு கூறிவிட்டு ஆற்றல் அதிகமுள்ள ஆச்சாரியார், தேசபக்தி இல்லாத ;ஸதாபனங்களையும் சமூக எதிரிகளையும் அடக்குவதில் அதிகாரத்திலுள்ளோர் மேற்கொண்டிருப்பதை வரவேற்கிறார். இக்காலத்தில், சுதந்திரத்திற்குக் கொண்டுள்ள கோட்பாடுகளைப் பன்னிப் பன்னிப் பேசுவதற்கு இது தருணமல்ல எனவும் உபதேசம் செய்கிறார்.
தேசபக்தி எனும் வார்த்தைக்கு இச்சூழ்நிலையில் கொள்ளத்தக்க பொருள் எதுவென்றும், இன்று நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கட்சிகளில் எது எது அவர் கூறும் தேசபக்தி அளவுகோலுக்குப் புறம்பானது என்பதையும், ஆச்சாரியார் விளக்க முனைந்திருப்பதால், எவ்வளவோ நலமாக இருந்திருக்கும் ஆச்சாரியாருடைய அறிவிலும் ஆற்றலிலும் நம்பிக்கை கொண்டிருக்கும் நண்பர்களுக்கு.

பழைய அதிகார வர்க்கத்தினிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற விழைந்தவர்கள், அதிகாரம் தங்கள் கைக்கு மாறிவிட்ட பின்னர், ஏகாதிபத்தியும் கையாண்ட அதே அடக்குமுறைச் சட்டங்களைச் சற்று விரிவாகவும் கடுமையாகவும் கையாள முற்படுவது, ஏகாதிபத்தியப் போக்கிலும் நம்மவர் முறை மாறுபட்டது என்று ஏற்பட்டுவிடாது. அதற்குப் பதில் ஏகாதிபத்தியப் போக்கிற்கும் ஆள் மாற்றத்தைத் தவிர, அதிக மாற்றத்தை அடைந்தவிடவில்லை என மக்கள் நினைக்கவும், விடுதலயின் ஆரம்பக் கட்டத்திலிருக்கிறோம் எனும் எண்ணம் உண்டாகி, மேலும் உண்மையான விதலை ஆடைவதற்குக் கிளர்ச்சி செய்யவும் மக்கள் முந்துவர். இந்த மக்கள் விருப்பத்தை அடக்குமுறை கொண்டு தகைத்து விடமுடியாது. அடக்குமுறை பயனளித்து இருக்குமானால், இன்ற அதிகார பீடம் ஆச்சாரியாரை ஏற்றுக்கொண்டிருக்காது. பர்ணாசலை வாசம் தான் ஆச்சாரியாரின் புகலிடமாக இருந்திருக்கும். ஆதிருப்தி கொண்ட மக்களின் இவலைப் பூர்த்தி செய்வதற்குப் பதில், அடக்கு முறையால் விருப்பத்தையே இல்லாமல் அழித்துவிடத் தீர்மானித்துச் செயலாற்றுவது, ஆரம்பத்தில் வெற்றியை அளிப்பது போலக் காணப்பட்டாலும், மக்களின் உண்மையான குறைகள் போக்கப்படாத வகையில், மக்களின் உள்ளம் ஏரிமலையாகத்தான் இருக்கும். மக்கள் சக்தியை மதிக்காது மாநிலம் புகழ ஆண்டவர்களும், அடக்குமுறைக்குத் தூபதீபம் போட்டு வளர்த்து வந்தவர்களும், அடைந்த முடிவை வரலாற்று ஏடுகள் எடுத்துக்காட்டுவதை ஆச்சாரியார் அறியாரா?

காலத்தோடு சுதந்திரத்திற்குள்ள கருத்தும் மாறுபட்டே தீரும். ரிஷிகள் காலம் மலையேறி நீண்டநாள் ஆகிவிட்டது. கண்ணன் காட்டிய வழியோ, வியாசர் எட்டிய விருந்தோ காலத்தால் கவர்ச்சியற்றுப் போனவைகள். இன்னும் அதனை நாட்ட முயற்சிப்பது வீண். அதிகாரம் அதனைச் சாதித்துவிடாது. அதிகாரம் தரும் வெறியில் சித்த சுவாதீனம் ஆற்று இருப்பவர்களுக்கு, அடக்கு முறையிலே நாட்டஞ் செல்லுமேயன்றி, அன்பால் ஆணைக்கும் பண்போ, பிறர் கூறும் நல்லுரையோ பயனளிக்கும் முறையாகப் புலப்படுவதில்லை.

நாம், இன்று வசிப்பது இருபதாவது நூற்றாண்டின் மத்தியல், இந்தக் காலத்திற்குப் பொருத்தமான சுதந்திரச் சித்தாந்தங்கள்தான் நமக்குச் சிலாக்கியமானவை - ஒத்துவரக்கூடியவை காலத்துக்கொவ்வாத, மக்களுக்கு இதம் செய்வதற்குப் பதில் தீமை தரும், சென்ற கால சுதந்திரக் கோட்பாடுகளை - அது எப்வளவு சிறப்படையதாகத் தோன்றினும், தெய்வமே தீட்டினதாகக் கூறப்படினும், இன்றுள்ள மக்கள் மீது, அதனைத் திணிக்க ஆசை கொள்வதும், முற்படுவதும் விரும்பக்கூடியதல்ல. அந்தக் காலத்தில் சமுதாய ஐணியின் மேல்படியில் இருந்து வந்தவர்கள், தங்கள் நிலை என்றும் சரியாமல் இருப்பதற்காக, பரமாத்மாவின் பெயர் சொல்லியும் - வேதத்தின் சாரமென்று செப்பியும், யோக யாக ரிஷிகளின் இணை என்று அறிவித்தும், ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

இதனால், சிலருக்குச் சுகபோகச் பிராப்தியும், பலருக்கு நீங்கா இடும்பையும் ஏற்பட்டது. சோம்பேறிகளுக்கு இந்தச் சுகவாழ்வு என்றும் நிரந்தரமாக இருக்கவேண்டும் எனும் தீய சிந்தனையோடு, இன்னார் இன்னாருக்கு இன்னின்ன கடமை எனவும், இதனை எவரும் மீறுதல் கூடாதெனவும், மீறுபவர்களை எண்ணுதற்கே நடுங்கும் கொடுந்தண்டனைகளை விதித்தல் வேண்டுமெனவும் முறையை வகுத்தனர். இந்த ஆக்கிரம முறையை விவாதித்துக் கூறும் ஏடுகளுக்குத் தர்ம சாஸ்திரங்களெனப் பெயரிட்டனர். ஏற்படுத்தினவர்கள் மறைந்து எவ்வளவோ காலமாகியும், இந்த விதிகள், தங்கள் இனத்தவர்களுக்கும் தங்களைப் போன்றார்களுக்கும் நற்பயனை அளிப்பதைக் கண்டு, பின்சந்ததியார்களும், இந்தக் கொடுங்கோன் முறையை அழிய விடாமல் பார்த்துக்கொண்டனர். அதே தர்மங்களில் நம்பிக்கை கொண்டு, இன்றைக்கும், அவைகளால் ஏற்படும் துன்பங்களை எல்லாம் சகித்துக் கொள்ளவேண்டுமென்றும், ஆச்சாரியார் பேசுவதும், எதிர்த்தவர் மீது அடக்குமுறையை வீசுவதும், கடமையைச் செய்யுங்களெனக் கதறுவதும், ஆடாத செயல் ஏன்போம்.

மற்றோர் இடத்தில் அதே ஆச்சாரியார் பேசும்பொழுது, சகல துறைகளிலும் இருப்பவர்கள் தங்களுக்குத் தேவையானது கிடைக்கவில்லை எனக் கோபிப்பதாகவும், யாரோ கடமையைச் செய்யத் தவறிவிட்டதாகச் சகலரும் கருதுவதாகவும், கோபிப்பதனால் இந்தியாவின் முன்னேற்றம் தடைப்பட்டுவிடுமென்றும், எனவே கோபத்தைக் களைந்து பொறுமை எனும் நளினக் கலையை அனைவரும் போற்றி வளர்க்கவேண்டும் என்றும், உதவாத உபதேசத்தைத், தம்மால் மேற்கொள்ள முடியாத அறிவுரையை ஆள்ளி வீசியுள்ளார்.

மக்கள், பசி என்று பேசினால் இடை வேண்டுமே என்று அலறினால், வீடு இல்லையே என விம்மினால், வேலை கிடைக்காமல் வேதனை அதிகரிக்கிறதே எனக் கூவினால், பொறுமைப் பாதையைக் காடு;டுகிறார்கள் இளவந்தார்கள். இதோ, என்னைப் பார் - என்னைச் சுற்றியிருக்கும் பட்டாளத்தைப் பார் - அவர்கள் கையில் இருக்கும் குண்டாந்தடியைப் பார் - ஆதோ சிறைக் கூடத்தைப் பார் - என அடக்குமுறையை ஏவிவிடும் போக்கினருக்கல்லவா, இந்த அருமையான நளினக்கலை விருந்து தேவைப்படுகிறது. பிணியுண்டவனுக்கு மருந்து தருவதற்குப் பதில், நோய் இல்லாதவனுக்கல்லவா மருந்தளிக்க ஆச்சாரியார் முனைகிறார்.

“பொறுமை ஓர் நளினக் கலை” இதனை அதிகாரத்திலுள்ளோர் என்றும் பேசத் தவறினதில்லை. இன்று மட்டுமல்ல, எந்த நாட்டிலும் முடிவு என்ன? ஆண்டவன் பலம், படை பலம், அனைத்தும் மக்கள் விழிப்புணர்ச்சியின் முன் தலை காட்டாமல் தவிடு பொடியாகி, மக்கள் ஏவல்படி அதிகாரம் பணிந்ததுதான் முடிவு.

“பசி, பசி,” எனக் கதறும் நிலை மக்களிடை உள்ளவரையில் அவரக்ளிடத்தில் பொறுமையைப் பார்க்க முடியாது. “இங்கொருவனுக்குக் கூழில்லை எனில், கோலினை உடைத்திடுவோம்” எனும் புரட்சிக் கவிஞர் காட்டிய சிறந்த கலைதான், பசித்தவனுக்குப் பிரகாரம் தரக்கூடிய அருங்கலையாகும். அதனையேதான் மக்களுக்காற்றும் பெரும் பணியாக, நல்லாட்சி அமைக்க விரும்பும் எவரும் மேற்கொள்வர். அந்நிலையை ஏற்படுத்துவதன் மூலந்தான் இந்தியா அல்ல மற்ற எந்த நாட்டினையும் சிறந்த நாடாக மாற்றமுடியும். சமூகத்திலுள்ள சிலர் - வலுத்த வம்பர்கள் சிலர் - மற்றப் பெருவாரியான மக்களுக்கு என்று வகுத்துவைத்த வாழ்க்கை முறைக்கு ஏற்படுத்திய கடமை, சிறப்பிழந்து எத்தனையோ காலமாகிவிட்டது. அதனை மீண்டும் இப்புவியிடைப் புகுத்தி நிலை நாட்டப் பார்ப்பது நடைபெறாது. ஆண்டவன் பெயர் கூறினாலும், அந்தராத்மா இசீர்வாதம் கிடைத்தாலும், முன்னோர் வகுத்த வழி என முத்திரையிட்டாலும், அதிகாரத்தைக் காட்டி மிரட்டினாலும், சுடுகாடு தேடிச் சென்று கொண்டு இருக்கும் பிணத்திற்கு மீண்டும் புது வாழ்வு கிடைத்துவிடாது. சுட்டு எரித்துச் சாம்பலாக்கி ஆளும் அதிகாரத்தை அனைவருக்கும் பொதுவாக்குவதுதான் காலத்திற்கொத்த முறையாகும். இந்த நேரிய முறையையே விட்டுவிட்டு இரட்டை நாக்குக் கொண்டு பேசுவது, அடக்குமுறைகொண்டு மக்களை வீழ்த்துவதும், தங்கள் அதிகாரக் காலத்திற்கு விரைவில் முடிவேற்படுத்திக் கொள்வதற்கே பயன்படும்.

விடுதலைக் கிளர்ச்சியில் மக்களைத் தீவிரப்படுத்திய காலத்தில் விடுதலை கிடைத்த பின்னர் நலம் பலவும் ஏற்படும் என்று நம்பிக்கை கொண்டிருந்த மக்கள், ஆங்கிலேய அதிகார வர்க்கத்தின் அடக்கு முறைக்கு ஆளாகி இம்சைக்குள்ôன தவைர்களிடத்தில் பரிவும் பாசமும் காட்டிய மக்கள், ஜே கோஷம் போட்டதும் வரவேற்பளித்ததும் - வாழ்த்தினதும் - மாலை மரியாதைகள் செய்து மாற்றம் கூறுôது பின் தொடர்ந்ததும் - ஆச்சாரியார் போன்ற தலைவர்களுக்குத் தங்களைப் பற்றிய நினைப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

எதிர்பார்த்தபடி எதுவும் நடைபெறாமல், வாக்குறுதியளித்த புதுவாழ்வு கிடைக்காமல், ஏகாதிபத்திய முறையிலேயே ஆட்சிமுறை சென்றுகொண்டிருப்பதைக் கண்டு ஏமாற்றங்கொண்ட மக்களில் சிலர், ஆட்சியாளரின் போக்கில் தவறு கண்டாலும், இரண்டொன்றைத் திருத்திக் கொள்ள வேண்டுமென ஆசையை வெளியிட்டாலும், ஆட்சியுரிமையை ஆபகரிக்கவும் - பதிவிமோகங் கொண்டுதான் அவ்வாறு செய்கிறார்கள் என்றும் கூறச் சொல்கிறது. மக்களின் எதிர்ப் பேச்சை என்றும் காதால் கேட்காது. வாழத் தொலிகளையே கேட்டுக் கேட்டுப் பழகிப் போய் விட்டவர்களுக்கு, இன்று மக்களிடத்திலிருந்து சிறு எதிர்பபேற்úடினும், சினம் மிகுவதும், சிந்தனை குறைவதும் இயல்பேயாகும். அதிகாரம். அதுவும் பரிபூரணமான அதிகாரம் கையிலிருக்கும் காரணத்தால், அதனை உடனடியாகப் பிரயோகிக்கும் நினைப்பைத்தான் தரும். எனவேதான் இரட்டை நாக்கினால் பேச வேண்டியதாக இருக்கிறது. மக்களை மதிக்காது, மக்களை அடக்கியாளும் போக்கு, மக்கள் விழிப்படைந்து தேவையை உணர்ந்து, அதனைப் பெறுவதற்காகப் பணியாற்ற முற்படும்வரையில், இருந்தே தீரும், மக்கள் சக்தியை ஒன்று திரட்டுவதன் மூலந்தான் இந்த இரட்டை நாக்கினர்களுக்குத் தங்கள் போக்குத் தவறுடையது என்பதை உணர்த்த முடியும்.

(திராவிடநாடு - 28-12-47)