அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இரும்பு மனிதர் தரும் கரும்புச்சாறு!
பர்மாவில் உள்ள கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, இங்கு குழப்ப நிலையை உண்டாக்க, இந்நாட்டுக் கம்யூனிஸ்டுகள் சதித் திட்டம் தயாரித்திருந்தனர் என்றும், இந்தத் தகவலைச் சர்க்கார் கண்டறிந்து முளையிலேயே கிள்ளிவிட்டதாகவும், புதுடில்லியிலிருந்து அறிவிக்கப்படுகிறது.

பர்மாவிலுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு சீனாவிலுள்ள கம்யூனிஸ்டுகளின் தொடர்பும் உதவியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மலேயாவிலே, பல பகுதிகளிலே கம்யூனிஸ்டு முகாம்கள் அமைக்கப் பட்டிருப்பதாகவும், பலாத்காரம் தலைவிரித்தாடு வதாகவும் கூறப்படுகிறது.

சயாமில், கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் புகுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன என்றும், கருவிலேயே இந்த முயற்சி அழிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்தோனேஷியாவிலே, விடுதலைப்போர்ப் படையிலேயே பிளவு ஏற்பட்டுவிட வேண்டிய முறையிலே, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு ஓங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

திபெத்-நேபாளம் - இப்கானிஸ்தான் - போன்ற எல்லை நாடுகளிலே, கம்யூனிஸ்டுகள், முகாம்கள் அமைத்துக்கொள்ள முயற்சிகள் நடைபெறுவதாக, விஷய மோப்பம் பிடிப்பவர்கள், திடுக்கிடும் தகவல்களை வெளியிடுகிறார்கள்.

ஹைதராபாத் சமஸ்தானத்திலே சில பகுதிகளிலே, கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம், காங்கிரஸ்காரரின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய விதமாக வளர்ந்துவிட்டதாகக் கூறப்பட்டு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடிப் பிடிக்க, போலீஸ், ராணுவ, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஹைதராபாத்தில் தங்கள் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள இடத்திலே கம்யூனிஸ்டுகள் இதுவரை 250 காங்கிரஸ்காரர்களைக் கொலை செய்ததாக சர்தார்படேல் கூறுகிறார்.

சயாமில் கம்யூனிஸ்டு! பர்மாவில் கம்யூனிஸ்டு! ஹைதராபத்தில் கம்யூனிஸ்டு! இங்கு அங்கு, எங்கு பார்ப்பினும் கம்யூனிஸ்டுகளின் கரம் வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது - அந்தக் கரம், இரத்தக் கறை படிந்திருக்கிறது என்று அறிவிக்கப்படுகிறது - இந்த ஆபத்தை அறிந்து இவன செய்க, என்று ஆட்சியாளர்கள் கூறியபடி உள்ளனர் - எச்சரித்த வண்ணம் உள்ளனர்.

ஹைதாரபாத்திலே, விமான மூலம், துண்டுப் பிரசுரங்கள் வீசப்படுகின்றன பொதுமக்களுக்கு, கம்யூனிஸ்டுகளால் ஏற்படக்கூடிய பேராபத்தை விளக்கி, உயிர்போக்கு! ஊûமை போக்கு! உரிமைபோக்கு! குடும்பம் நாசமாகும்! சட்டம் சரியும்! சாந்தி குலையும்! இரத்தம் ஓடு! என்று மக்களுக்குக் கூறப்படுகிறது. தலைவர்களின் பேச்செல்லாம், கம்யூனிஸ்டு ஆபாயத்தைத் தடுக்கவேண்யடிதன் அவசியத்தைப் பற்றியதாகவே இருந்திடக் காண்கிறோம். பலாத்காரம், குழப்பம். உள்நாட்டுப்போர், போட்டி சர்க்கார், ஆகிய முறைகள் நிச்சயமாக, ஒரு நாட்டை, அதிலும் விடுதலையைப் பெற்று அதிக காலமாகாத இந்திய போன்றதோர் பெரிய தேசத்தை நாசமாக்கிவிடும். என்பதை எந்த நல்லறிவாளரும் மறுக்க முடியாது. சீனாவின் சீரழிவும், பர்மாவின் குப்பநிலையும், ஒரு நாட்டுக்கு வேதனையையும் வீழ்ச்சியையும் தரக்கூடிய ஆபத்துகள் என்பதில் காட்ட முடியாத வண்ணம், தக்க வடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது, எந்த பொறுப்புள்ள சர்க்காருக்கும் இன்றியமையாத கடமைதான். எனவே, பலாத்காரத்தினால் ஏற்படக்கூடிய கொடுமைகளையும், நாட்டிலே குழப்பநிலை மூண்டுவிட்டார், மக்களுக்கு உண்டாக்கக்கூடிய வேதனைகளையும், எடுத்துக்காட்ட வேண்டியதும், மக்கள் விவரமறியாமல், அவ்விதமான அழிவுப்பாதையில் சென்றுவிடாதபடி பார்த்துக் கொள்வதும் ஆட்சியாளர்களின் பொறுப்புதான் - ஆனால், கம்யூனிஸ்டுகள் குழப்பநிலை உண்டாக்கினால் ஏற்படக்கூடிய பயங்கரங்களைக் கூறுவதே போதும், கம்யூனிஸ்டு செல்வாக்கைக் கறுவறுக்க என்று கருதினால், சர்க்காரின் போக்கு, பைத்யக்காரத்தனமாகத்தான் இருக்கும்.

கம்யூனிஸ்டுகளால் விளையக்கூடிய ஆபத்துக்களைப் பன்னிப் பன்னிப் பேசுவதிலே, உலகிலே முதற்பரிசு சர்ச்சிலுக்கு! இரண்டாவது இடம் அமெரிக்கத் தலைவர்களுக்குக் கிடைத்து வருகிறது. அவர்கள் பேசுகிற முறையிலேயே, இங்கு பயங்கர விளைவுகள் ஏற்படும் - நாசம் நர்த்தனமாடும் - இரத்தம் இறாக ஓடும் என்று பேசுவது, ஏகாதிபத்யப் பல்லவியைக் குருவிடம் கற்றுப்பாடும் சீடரின் கீதம்போல இக்கிவிடக் கூடாது என்று ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம்.

கம்யூனிஸ்டுகளால் நாசம் விளையும் என்பதையே பிரமாதப்படுத்திப் பேசினால், பயனில்லை - அவர்களை வேட்டையாடிக் கூண்டிலே தள்ளி விடுவதால் மட்டும் பயன் கிடைக்காது - பொதுவுடமை ஆட்சியைவிட இராமராஜ்யம் சிலாக்கியமானது என்று தத்துவ விளக்கம் கூறினால் மட்டும் பயன் ஏற்பட்டுவிடாது - கம்யூனிஸ்டுகள் எந்தக் காரணங்களால் செல்வாக்குப் பெறுகிறார்கள், அவர்களின் செல்வாக்கு வளருவதற்கு என்ன காரணம், என்பதைக் கண்டறிந்து ஆவன செய்வதே, அறிவும் திறனும் கலந்து செயலாகும்.

தீப்பிடித்தெரியும் நகரம், திக்கு பலவற்றுக்கும் திகைத்து ஓடும் மக்கள், காய்ந்துபோன வயல்கள், அங்கு பிணங்கள், அவைகளைக் கொத்தித் தின்னும் வல்லூறுகள், எனும் இத்தகைய பயங்கரக்காட்சிகள் ஏற்பட்டுவிடும் கம்யூனிஸ்டுகளின் திட்டமான குழப்பம் நேரிட்டால், என்று கூறுவதுதான், பலன் தரக்கூடிய பிரச்சாரம் என்று ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள் மிக மிகத் தவறான போக்கு இது.

எப்போதோ எவராலோ நேரிடக்கூடிய ஆபத்துக்களைப் பற்றிப் பிரமாதப்படுத்துகிறீரே, பிரமுகர்களே! வருங்கால விபத்துகள் கிடக்கட்டும், இப்போது ஏ;னன வாழுகிறது இங்கே! உணவு இல்லை - உடை இல்லை - வீடு இல்லை. வாசல் இல்லை - வேலையில்லை வாழ்க்கையில் துளியும் வளமில்லை - வதைகிறோம் - இது கண்முன் இருந்து கலக்கும் காட்சியாக இருக்கிறது - நாங்கள் இந்தப் பாடுபடும்போது, நிஜாமும் அவருடைய நகரத்னங்களும், மகாராஜாக்களும் அவர்களின் தர்பார் மந்தகாசங்களும், முதலாளிகளும் அவர்களின் பணமூட்டைகளும், இருக்கவும் தான் காண்கிறோம் - எங்கள் மனம் குளிரும் என்றா எண்ணுகிறீர்கள் இந்த நிலை கண்டு! வீணாக எம்மை மிரடட்டாதீர், எப்போதோ ஏதேதோ ஆபத்து வரும் என்று கூறி, இப்போதுள்ள நிலையை நாங்கள் இனியும் சகித:துக் கொள்ளத்தான் வேண்டும் என்று வாதாடுவது முறையல்ல - புலி உறுமுகிற சத்தம் கேட்கிறதா - அதைக் கவனி - அதன் கோரப்பற்களை எண்ணிப்பார் வேலையைச் செய்து கொண்டிராதே என்று ஓநாய் உபதேசம் செய்வது முறையாகுமா! ஆட்சியாளர்களே! எமது கண்முன் தெரியும். வாழ்வை வதைக்கும் கொடுமைகளைக் கவனியுங்கள் - வறுமை எனும் ஓநாயை ஓட்டுங்கள், அதனை உலவவிடும் சுறண்டல் காட்டை அழியுங்கள்! என்று ஏழைகள் பேச முடியாது - ஆனால் எண்ணுகிறார்கள்.

அந்த எண்ணம் தான் கம்யூனிஸ்டுகளுக்கு சக்தி வளரும் காரணம் அந்தக் காரணம் பொது ஜன பாதுகாப்புச் சட்டம் புலன் விசாரிக்கும் போலீஸ், குறி தவறாது கடும் இராணுவ, இவைகளுக்கு மேலான வேகமும் திறனும் கொண்டது.

எனவே ஆட்சியாளர்கள், வருங்கால வித்துக்களை, மதவாதிகள் நரகலோக வணர்னையைக் கூறுவது போலக் கூறிக்கொண்டே இருந்துவிட்டால் போதும் என்று இருந்து விடாமல் கண்முன் தெரிவதும் கம்யூனிஸ்டுகள் எடுத்துக் காட்டுவதும், மக்களின் மனதிலே உறங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தைக் கிளப்பிவிடக் கூடியதுமான, கொடுமையும் மடைமையும் நிரம்பிய நிலைமைகளை மாற்றத் துணிவுடன் முயற்சிக்க வேண்டும்.

ஸ்தாபனபலம், பிரசாரபலம், ஆட்சிபலம் இவைகளே போதும், கம்யூனிஸ்டுகளை, ஒழித்துக்கட்ட என்று எண்ணுவது, ஏகாதிபத்திய முறை நமது நாடடுத் தலைவர்கள் ஆம்முறையைக் கையாளாமல், உடனடியாகத் திட்டமிடு. பணிபுரியக் கிளம்பவேண்டும், பெரும்பான்மையினரின் வாழ்க்கையிலே உள்ள வேதனைகளைப் போக்க கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு வளர்ந்தால், பலாத்காரம் தலைவிரித்தாடும். இரத்தம் ஓடும், ஆகவே பொதுமக்களே! கம்யூனிஸ்டுகளை வேட்டையாடுங்கள்! என்று பிரசாரம் செய்வதை விட, இந்திய துணைக்கண்டத்திலே உள்ள ராஜாக்கள். ஜெமீன்தாரர்கள், முதலாளிகள், சுறண்டல் யந்திரக் காவலர்கள் ஆகியோருக்குக் கூறவேண்டும், கம்யூனிஸ்டுகளின் கரம் வலுத்தால், உன் மகுடமும் இராது, ஆலை அரசும் இராது, மிட்டா மிராசு இராது, பெட்டி பேழையில் தூங்கும் தங்கப் பாளங்கள் இராது. ஆகவே திருந்து முறையை மாற்று, சுரண்டலை நிறுத்து! என்று இடித்துரைக்க வேண்டும் - வருங்கால ஆபத்தை எடுத்துக்காட்டி, இன்று ஆட்சியாளர்களைத் திகைக்கச் செய்யும் சுகவாசிகளை வழிக்குக் கொண்டுவர வேண்டும்! பயங்கர நிலைமையினால் புரட்சியினால், ரஷியச் சீமான்கள் உயிர் தப்பினால்போதும் என்று ஒரோப்பியாவில் பல பாகங்களுக்கும் ஓடிய சேதியைக் கூறிட வேண்டாமா, நேருவையும் படேலையும், நில்! நமது கேள்விக்குப் பதில் சொல் என்று கேட்கும் அளவுக்குத் துணிவு கொண்டுவிட்டு, சுறண்டல் போக்கினருக்கு!

இந்த முறையைக் கையாளாமல் இடிக்கறக்க வேண்டிய மாட்டை அடித்தும், அடித்துக் கறக்கவேண்டிய மாட்டின் முன் இடியும் வருகின்றனர் தலைவர்கள்.

அவர்களின் இடிமுழக்கம் - தீப் பொறிப்பேச்சு - கட்டளை - தாக்கீது - யாவும் பாட்டாளிகளின் கூட்டத்திலே - பொமக்களிடம்!

இன்சொல் - விளக்கஊரை - கோரி;கû - வினயம் - வேண்டுகோள் - யாவும், மேட்டுக்குடியினர், காட்டுராஜாக்கள் முன்னிலையில்!

இதுவா, கம்யூனிசத்தைத் தடுக்கும் முறை!!

எவ்வளவு துணிவும் புது நம்பிக்கையும் இருந்தால், தொழிலாளர்கள், வெளிப்படையாக கூறுவர். இலாபமே எமது நோக்கம் - இதனைக் குறைக்கும் முறையைச் சர்க்கார் கொண்டால், நாங்கள் பணம் போட்டுத் தொழில்நடத்த மாட்டோம் - என்று!

உபசாரத்துக்குக் கூட அவர்கள், கூற மறுக்கிறார்களே இப்போது, நாங்கள் நாட்டு மக்களுக்காக உழைக்கிறோம் என்று.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் - நேற்று சர்தார் முன்னிலையில் பேசியது போலவே - தொழிலாளர்கள், துணிவுடன் பேசுகிறார்கள்.
1. சர்க்காரே, தொழில்களை எடுத்து நடத்தப் போவதாகப் பேசக்கூடாது.
2. வரி, குறைக்க வேண்டும்.
3. தொழிலாளரை அடக்க வேண்டும்.

என்று துணிவாகக் கூறுகிறார்கள்! இவைகளைச் செய்யாவிட்டால், வேலை நிறுத்தம் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள் பணம் போட மாட்டார்களாம் தொழிலில்! தொழில்களிலே அக்கறை ஏற்படாதாம்! நிலை இருக்காதா! பண்டங்கள் உற்பத்தியாகதாம்! பட்டவர்த்தனமாகப் பேசுகிறார்கள்! படேல், அவர்களிடம் என்ன பேசி இருக்கவேண்டும்? - என்ன பேசினார், சென்னையில்?

சர்க்கார், தொழில்களைத் தானே எடுத்து நடத்தாது - பயப்படாதீர்கள் - என்னை நம்புங்கள் என்று கூறினார். கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைக் கருவறுக்க இந்தப் பேச்சும் போக்கும் உதவுமா? துளியாவது? பிரசாரப் பீரங்கிக்கு மற்றோர் குண்டு கிடைத்தது என்று தானே மகிழ்வர், கம்யூனிஸ்டுகள்!

தொழில்களை நீங்களே நடத்துங்கள் - சர்க்கார் உங்கள் ராஜ்யத்திலே நுழையாது - இப்படியா உறுதிமொழி கூறுவது, உலக அறிவாளிகளால் கண்டிக்கப்படும், சுறண்டல் முறையினருக்கு!

உறுதிமொழி அளித்ததோடு இல்லை - காரணமும் காட்டிப் பேசி இருக்கிறார் சர்தார்.

அகழி உடைந்து விட்டது - கோட்டை கலனாகிக் கிடக்கிறது - படையிலே கலகம் - பட்டத்து இளவரசனுக்குப் படுகாயம் ஆகவே படை எடுத்து, விடாதே, எமது ராஜ்யத்தின் மீது, என்று ஓலையிடும் அரசர் உண்டோ?

சர்தார் கூறுகிறார், தொழிலாளர்கள் கூட்டத்தில், “சர்க்கார் தொழில்களை கலவரம் சர்க்கார் உடைமைகளாக்கி விடும் என்று பயப்படவேண்டாம். சர்க்காரால் முடியாது. அதற்கான திறமையும் ஆள் வசதியும் சர்க்காரிடம் கிடையாது. நிர்வாகம் நடத்தலே, போதுமான திறமை சாலிகள், அனுபவசாலிகள் இல்லை - இந்நிலையிலே தொழில்களை எடுத்து எப்படி எங்களால் நிர்வாகம் செய்யமுடியும்! ஆகவே அச்சம் வேண்டாம்! இம் முறையில் பேசுகிறார், இரும்பு மனிதர் என்று புகழப்படும் சர்தார், தருகிறார் இந்தக் கரும்புச்சா, தொழிலாளர்களுக்கு, கம்யூனிஸ்டுமீதும், காங்கிரஸ் ஊழியர்கள் மீதும், பாட்டாளிகள் மீதும் இரும்பு, விழுகிறது, தொழிலாளர்களுக்கோ, கரும்புச்சாறு கிடைக்கிறது.

சர்ச்சில், கனல் கக்கும் முறையிலே முன்பு பேசியிருக்கிறார், சுயராஜ்யம் கேட்கிறீர்களே! இளத்தெரியுமா உங்களுக்கு - ஆளும் திறமை உண்டா - நிர்வாகம் நடத்திப் பழக்கமாகவில்லையே - படைப்பலம் இல்லையே - பகை நாடுபாய்ந்தால் தடுத்துக்கொள்ள சக்தியும் சாதனமும் இல்லையே - ஆகவே நீங்கள் சுயராஜ்யத்துக்கு இலாயக்கற்றவர்கள் - ஆகவே உங்கள் நன்மைக்காகவே, நாசத்திலிருந்துத உங்களைத் தப்பி வாழச் செய்யவே, பிரிட்டிஷார் ஆட்சி செய்கிறார்கள் என்று.

என்ன விதமான பதிலளித்தோம் அதற்கு! வீரம், தீரம், கெம்பீரம் தொனித்ததே அந்தப் பதிலில். இளவும் முடிகிறதே. இசியாவின் பிரச்னையைக்கூட அல்லவா கவனித்து இவன செய்யமுடியும் என்று இன்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு பெரிய துணைக் கண்டத்தின் நிர்வாகப் பொறுப்பை, ஏற்று நடத்தும் அறிவும் ஆற்றலும் நமக்குக் கிடையாது என்று ஆணவமாகப் பேசிய சர்ச்சிலுக்குச் சாட்டை தருவதிலே சர்தாராக இருந்த படேல் தொழிலரசர்களிடம், நிர்வாக நிபுணர்கள் எம்மிடம் இல்லை - திறமை இல்லை - ஆகவே துரைத்தனத்தார் தொழில்களை எடுத்து நடத்தாது, என்றா பேசுவது! ஏன் பேச வேண்டும்? பேசக்கேட்டபோது, தொழிலரசர்கள், முன்பெல்லாம், பயந்து பயந்து பேசுவர், சர்க்காரே தொழில்களை எடுத்து நடத்துவது சரியானமுறை அல்ல தொழில்களை நிர்வாகிக் கூடியவசதியும் திறமையும், சர்க்காரிடம் இருக்காது என்று உடனே, பதில் கிடைக்கும் அவர்களுக்கு சவுக்கடி போல! சர்தாரே கூறுகிறார் - எம்மால் நிர்வாகம் செய்யமுடியாது - திறமையும் வசதியும் இல்லை, என்று இந்த முறையிலே பேசுவதும், இவ்விதமான போக்கும், நிச்சயமாக, பொது மக்களிலே தீவிர நோக்கமுடையவர்களுக்கு கொஞ்சநஞ்சம் இருந்து வரும், நம்பிக்கையும் நாசமாக்கவே உதவும்.

இரும்பு, தம்மீது விழும் என்று பயந்து கொண்டிருந்த தொழிலரசர்கள், இப்போது, ஆறுமாப்படையாமல் இருப்பரோ! விடுதலைப் போராட்டத்தின் போது நமது தியாகமும் உழைப்பும் பயன்பட்டது. நமது கஷ்டமறிந்தவர்கள் ஆட்சிப்பீடம் ஏறிவிட்டனர். நாம் சுரண்டப்படும் விதத்தையும், நமது உழைப்பால் கொழுப்போரின் ஆதிக்கத்தையும் அவர்கள் நன்கு அறிவார்கள், எனவே நமக்கு இழைக்கப்படும் கொடுமையைப் போக்க இலாபவேட்டைக்காடாக இன்றுள்ள தொழில்களை எல்லாம் சர்க்கார் உடைமையாக்கி, சக்திக்கேற்ற ஊûôப்பு. தேவைக்கேற்ற வசதி எனும் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவார்கள் என்று நம்பியபாட்டாளிகளின் மனம், இன்றைய ஆட்சியாளரின் போக்கைக் கண்டு பதறாதா!
தொழிலாளர்கள், சிப்பந்திகள் ஆகியோரின் துயரத்தை நீக்க இந்திய சர்க்காருக்கு விருப்பம் இல்லை. என்பதும், அவர்களால் முடியவில்லை என்பதும் சென்ற சில மாதங்களாகத் தெரியவருகிறது. தொழிலாளர்கள் தங்களுடைய நிலைமையைச் சீர்திருத்திக்கொள்வதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பது என்று இந்திய சர்க்கார் உறுதி கொண்டுவிட்டனர். அவர்களுடைய அடக்குமுறை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அடக்குமுறையைப் போன்றதல்ல. ஆனால் இட்லர் கையாண்ட அடக்குமுறைகளைப் போன்றதாகும்.

இந்தியத் தொழிலாளர்களை முழுக்க முழுக்க அடிமைத் தொழிலாளர்களாக மாற்றிவிடுவதற்கான சட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

பணப் பெருக்கத்தை ஒழிப்பதற்காக வெகு சமீபத்தில் சர்க்கார் தயாரித்த கொள்கையானது முதலாளிகளுக்கு பெருவாரியான சலுகைகளை அளிக்கிறது. இது முதலாளி வர்க்கத்துக்குக் கிடைத்த பரிசு!

குழப்பம் விளைவித்து, பலாத்காரத்தைத் தூண்டிவிடும் கம்யூனிஸ்டு பேச்சல்ல, மேலே பொறித்திருப்பது - கம்யூனிஸ்டுகளை ஒழித்தாக வேண்டும் என்று கூறும் ஜெயபிரகாஸ் நாராயணன் பேசுவது! சர்க்காருக்கு வீணாகச் சங்கடம் விளைவிக்கக்கூடாது. பொதுமக்களுக்கு தொல்லை தரக்கூடாது. உணவுப் பிரச்சனை உள்ளத்தைவாட்டும் இந்தச் சமயத்தில் ரயில்வேவேலை நிறுத்தம் செய்வது ஆடுக்காது, என்ற பொறுப்புணர்ச்சியுடன், நடந்துகொண்டு, வேலை நிறுத்தம் வேண்டாம் என்று கூறியுள்ள, ஜெயப்பிரகாஸ் நாராயணனே, இன்றைய ஆட்சியாளர்கள் தொழிலாளருக்குத்தரும் தொல்லையையும், முதலாளி வர்க்கத்துக்குத் தரும் பரிசையும் எடுத்துக்காட்டி, வருத்தப்படாதிருக்க முடியவில்லை! ஆட்சியாளர்களின் போக்கைத் தமக்குச்சாதமாக்கிக்கொள்ள கம்யூனிஸ்டுக்கு இந்தப்போக்கு தான் இடமளிக்கிறது. இலபம் குறையக் கூடாது! இலாப நோக்கத்தைக் குறைகூறக் கூடாது! எந்தச் சமயத்திலே சர்க்கார், திட்டமாக உறுதிகூற வேண்டும். இலாபத்திலே பெரும்பகுதியை வரியாகக் கொண்டுவிடக் கூடாது! இவ்வளவும் கேட்கிறார்கள் தொழிலாளர்கள் - கிடைக்காவிட்டால், பணப்பெட்டியைப் பூட்டிவிடுவார்களாம், தொழில் செய்யமாட்டார்களாம்! இப்படிப் பேசுபவரின் ஆறுமாப்பை முறியடிக்கப் பயன்படுத்தப்படவேண்டிய சக்தியை, வறுமையில் தாக்கப்பட்டு நொந்துகிடக்கும் உழைப்பாளியின் மீது உபயோகிப்பதா, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு பரவாதிருக்கச் செய்யும் திட்டம்!

(திராவிடநாடு - 27.2.49)