அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இவர் கவர்னராம்!

ஆச்சாரியார் சென்னைப் பிரதமராகப் பணியாற்றுவதற்காக, சம்பளம் ஏதும் பெறவில்லை – இப்படிக் கூறியவர் சாதாரண ஆளல்ல. ‘போலோ பாரத் மாதாகி‘ போடும் கொடி தூக்கி குப்பனல்ல, குமரனல்ல – கவர்னர் இந்த ராஜ்யத்தின் தலைவர் பிரகாசா கூறினார். சேலத்தில், இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஆனால், சென்னையில் பொதுக் கூட்டத்தில் ஆச்சாரியார், தான் கவர்னர் ஜெனரலாக இருந்ததற்குத் தரப்படும் ஆயிரம் ரூபாய் அலவன்சும், மாகாணப் பிரதமராக உள்ளதற்குரிய சம்பளத்தையும் வாங்கிக் கொள்வதாகவும், இதனை மறுத்துக் கூறுபவர் எவராயினும், நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். நாட்டைக் கட்டியாளும் கவர்னருக்குத் தெரியவில்லை. பிரதமர் சம்பளம் பெறுகிறாரா இல்லையா என்பது – அப்பாவி மனிதர் – இவர் நமக்கு கவர்னர் என்ற சேதிதான் நம்மை வாட்டுகிறது – வெட்கமோ பிடுங்கித் தின்கிறது!

திராவிட நாடு – 20-7-52