அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காலவேகம்!
ரோம் நகரம் தீப்பற்றிக்கொண்டு எரிந்தபோது, நீரோ மன்னன் வீணை வாசித்துக் கொண்டிருந்தான். நீரோ மன்னனின் கொடுங்கோன்மையை விளக்க, மனிதத் தன்மையற்ற தன்மைநிலையை விளக்கூறுவர் இதனை
நீரோ மன்னன் மனம், இரும்போ, கல்லோ, தலைநகரம் தீ பிடித்துக் கொண்டபோது, மக்கள் மடிவரே என்பது பற்றிய கவலையுமற்று, நிம்மதியான வீணை வாசித்துக்கொண்டிருந்தானே என்று கூறுவர் - கண்டிப்பர்.

மிதுலா நகரம் தீப்பிடித்துக் கொண்டு எரிந்தது ஒரு சமயம். ஜனக மகாராஜா, அதுபோது, அரண்மனையில், வேதாந்தம் படித்துக் கொண்டிருந்தனர்.

ஜனக மகாராஜாவின், மனோதிடத்தை, உலகப் பற்றை ஒழித்து தன்மையை, ஞானத்தை விளக்கக் கூறுவர், இந்தக் கதையை ஊரே தீப்பிடித்துக் கொண்டது - உயிருக்கும் உடைமைக்கும் பெரும்சேதம் எனினும் அந்த ராஜரிஷி, மனம் குழம்பாமல், உலகை மறந்து வேதாந்த விசாரணையில் ஈடுபட்டிருந்தார். அவருடைய உள்ளம் அவ்வளவு உரமானது! அவருடைய ஞானம் அவ்வளவு உறுதியானது! நாற்புறமும் நெருப்புச் சூழந்து கொண்டிருந்த போதும் அவர் துளியும் கலங்காமல், இந்த மாயாப் பிரபஞ்சத்தைப் பற்றிய கவலையற்று, நித்தியமானதும், நிர்மலனை அறிய உதவுவதும், இம்மைக்கு ஏற்றதுமான, வேதாந்த விசாரணையில் ஈடுபட்டிருந்தார்! - என்று, ஜனகரின் செயலை, வியந்தும் புகழ்ந்தும் கூறுவர் இங்கு
* * * *

நீரோ, கொடுங்கோலன்!
ஜனகன், ராஜரிஷி!
ரோம் பெருநெருப்பில் சிக்கியபோது நீரோ வீணை வாசித்து மக்களின் கண்டனத்தையும், சரிதத்தில் இழிவிடத்தையும் பெற்றான்.

மிதுலை தீப்படித்தெரிந்தபோது ஜகன், வேதாந்தம் படித்து நம்நாட்டுப் பக்தகோடிகளால் பாராட்டுதலையும், புண்ய ஏட்டிலே புகழிடத்தையும் பெற்றான்.

சம்பவம், ஒரே விதமானதுதான் - ஆனால், சரித்திரம், நீரோவைக் கொடுங்கோலர் பட்டியிலே சேர்க்கிறது - புராணம், ஜனகரை, ரிஷிகள் பட்டியிலே சேர்க்கிறது. இத்தகைய விசித்திரங்கள் பலப் பல நமது நாட்டு மக்கள் மனதிலே, புராண மூலம், ஏற்றவைக்கப்பட்டுள்ளன. நாம் நீரோ மன்னனை நல்லவன் என்று கூறவோ, ஆவனது வீணை வாசிப்பு வியக்கத்தக்க செயல் என்று பாராட்டவோ, முன்வரவில்லை - சரிதம் அவனுக்குத் தந்துள்ளன. இடம், அவன் செயலுக்கும் குணத்துக்கும் ஏற்றதுதான். ஆனால், ஜனகருக்கு ஏன், நமது புண்ணிய ஏடு புகழிடம் தரவேண்டும் - அவரை ஏன் மகரிஷியாக்க வேண்டும் - நகரம் நெருப்பில் சிக்கியபோது கவலைப்படாமலிருந்த சம்பவத்தை. அவருடைய புகழ்பரப்பும் சம்பவமாக்குவது எந்த வகையான நியாயம் என்றுதான் யோசிக்கிறோம்.

சரிதம் தரும் தீர்ப்புக்கும் புண்ணிய ஏடு தரும் தீர்ப்புக்கும், ஏன் இவ்வளவு பெரிய, நேர்மாறு இருக்கிறது என்று கேட்கிறோம்.

புண்ணிய புருஷரும் ராஜரிஷியுமான ஜனகரின் ஆட்சியின்போது, மக்களை மடியச் செய்யும், கேடுகள் ஏற்படுவதே தவறல்லவா? கோல்கெடின்தானே குடின்மக்களுக்குக் கேடுசூழும் என்று நமது புண்ய ஏடுகள் புகலுகின்றன. ஜனகரோ, ராஜிரிஷி - தர்மவான் - அவர் ட்சிய்னபோது, வெள்ளத்தால் விபத்தோ, கொடு நோயால் கேடோ, தீயினால் ஆபத்தோ, பஞ்சத்தினால் பயமோ, ஏற்படக் கூடாதல்லவா? சாமான்யர்களின் ஆட்சியின் போது, அல்லது அக்ரமக்காரரின் ஆட்சியின்போது வேண்டுமானால், இத்தகைய ஆபத்துக்கள் ஏற்படக்கூடும். மிதுலையை ஆண்டுவந்தவர் ஞானி - ராஜரிஷி - சீதாதேவியாரையே திருமகளாகப் பெற்ற திவ்விய புருஷன் - அப்படிப்பட்டவரின் ஆட்சியின் போதோ, நகரை நாசமாக்கும் நெருப்புப் படைஏடுப்பது! முறையல்லவே! ராஜரிஷி ஆட்சியின்போதும், மக்கள் பெருவிபத்திலே சிக்கத்தான் வேண்டிவந்தது, என்றால் அவரக்ள், சாமான்ய மன்னனுக்கும் சற்குணவானுக்கும், என்ன வித்தியாசத்தைக் காணமுடியும்! சாமான்யர்கள் அரசாண்டால் மக்களுக்கு, இயற்கையின் கோலாகலத்தால் ஏதேனும் கேடுகள் நேரிட்டால் அவைகளை நீக்கும் ஆற்றல் அவர்களுக்கு இராதாகையால், மக்கள் ஆவதிப்படுபவர் - ஆனால் நற்குணவான்கள், நாதன் அருளைப் பெற்றவர்கள், ஞானிகள் அரசாண்டாலோ, அவ்விதமான கேடு நேரிடாது. மக்கள் மிகவும் சுகப்பட்டு வாழ்வர், அந்த நாட்டிலே, ஆகால மரணமோ, தரித்திரமோ தலைகாட்டாது. என்று கூறுகிறார்கள். இதே புண்யஏடுகளைத் தீட்டுபவர். ஆனால் அவரக்ளே, ஜனகனைப் புகழ, மிதுவை தீப்பற்றய சம்பவத்தை எடுத்துக்காட்டுகிறார் - ஏன், புண்யபுருஷன் ஆட்சியிலே, பாபியின் ஆட்சியிலே மட்டுமே ஏற்படக்கூடிய கேடு - சூழ்ந்தது, என்பது பற்றிய கவலையற்று, காரணம் என்ன இதற்கு? புண்ய ஏடுகளைத் தீட்டினவர்களிடம் ஒரு பழக்கம் மிகுந்திருந்தது - ஏதேனும் ஒரு தத்துவத்தைப் பலப்படுத்திக்காட்ட வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்து விட்டால், அந்த ஒரே நோக்கத்திலேயே ஈடுபடுபவர் மும்முரமாக, அதற்காகக் கதைகள் கட்டுவர். ஆனால் அதேகதை, தாமே வலியுறுத்திவரும் வேறு தத்துவங்களைத் தகர்க்கக்கூடியதாக, கேவலப்படத்தக்க கூடியதாக அமைகிறதே என்பது பற்றிய கவலையற் மான்விழிகொண்ட மங்கையின் ஓவியத்தைத் தீட்ட முனைந்தவன். நாம் இதிலே, விளக்கமாகவும் பிறர்கண்டு ஆச்சரிய்பபடும் விதமாகவும் தீட்டிக்காட்ட வேண்டியது. கண்களைத்தானே என்று எண்ணி, ஓவியத்திலே, வாய், காது, மூக்கு, நெற்றி, ஆகிய உறுப்புகளைத் தீட்டும்போது கவலையற்று, பொருத்தமாக இருக்கிறதா என்று யோசிக்காமலேயே ஐனோதானோ வென்று தீட்டிவிட்டு, கண்களை மட்டும் தன் கருத்தின் படியும் கலையழகு மிளிரும்படியும் தீட்டிக்காட்டினால் எப்படியிருக்கும் அந்த ஓவியம்! நமது புண்யகதைகள், இவ்விதமான ஓவியங்கள்! அவைகளைத் தீட்டினோர், கண்ணழகு காட்ட மற்ற உறுப்புகளைக் கலை உணர்வுமற்றுத் தீட்டிடும் ஓவியன் போன்றோர் ஆகவேதான், முரண்பாடுகள் மலிந்து காணப்படுகின்றன.

ஜனகரை, ராஜரிஷி என்ற காட்டகருதினார் - மக்கள் பாராட்டவேண்டும் என்பதற்காக, கருதியதும் ஒரு வேதாந்தியின் உள்ளம் எவ்விதம் இருக்கவேண்டும். என்பது பற்றிச் சிந்தித்து, வேதாந்தி என்பவன், தன்னை சுற்றிலும் ஆபத்துச் சூழந்திருப்பினும் ஆவதி நிறைந்திருப்பினும் கவலை கொள்ளான் - அவன் உள்ளம் சுகதுக்கம் இரண்டுக்கும் கட்டுப்படாது, என்று கண்டறிந்து, அவ்விதமான உள்ளம் ஜனகருக்கு இருந்தது என்றவிதமான கதை தீட்டுவதே சரி என்று கருதினார். ஆமாம், வேதாந்தி அவர் என்பதை விளக்க இக்கதை உதவும், ஆனால் அதேபோது, ஒரு அரசனுக்கு இருக்கவேண்டுமென்று நீதிநூற்கள் குறித்திடும் குணம், உத்தமனுக்குரிய உள்ளம், அன்புமயமாக இருக்கும், பிறர் கஷ்டம் காணச் சகியான், தொண்டு செய்வதையே கடமை என்று கொள்வான், என்று பலப்பல எடுத்து காட்டுகின்றனவே! ஜனகர் வேதாந்தி என்பதை விளக்குவதற்காக நாம் கூறும் சம்பவம், இந்த நீதி நூற்களின் பாடங்களை எல்லாம் பரிகசிக்கின்றனவே அவரை வேதாந்தியாக்கிக் காட்டவேண்டுமென்ற ஆர்வத்தால், அவரை வேந்தர் நிலையிலிருந்தும், கடமை யுணர்ந்த மனிதரின் நிலையிலிருந்து கூடக் கீழே தள்ளி விடுகிறோமே, என்பது பற்றிக் கவலைப்படவே இல்லை யார், இதனைக் கேட்கப் போகிறார்கள், என்ற ஒருவகை அசட்டுத் தைரியம் அப்படி ஏவனாவது துணிந்து கேட்டால், அவனை முடியுமானால் சபிப்பது இல்லையானால் வைவது, என்ற எண்ணம் மக்கள் கடைசி வரையிலே, ஏமாளிகளாகவோ இருந்துவிடுவர் - தெளிவு பிறக்காமலா போகும் பிறக்கும் போது, இவ்விதமான கதைகளை எடுத்து வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து, இப்படிக் கூறலாமா, இது பொருத்தமா, இது நீதியா, இது ஒழுங்கா, என்றெல்லாம் கேட்க ஆரம்பிக்கிறார்கள் - இப்போதுள்ள காலம் இத்தகையது ஊரைகல்லாகி விட்டது உள்ளம்!

சரித்திர பாடத்திலே, நீரோவைப் பற்றிப்படித்துவிட்டு, கொடுங்கோலன், மக்கள் மாள்வது பற்றிக் கவலையற்று இருந்த மாமிசப் பிண்டம், இவனுக்குச் சமயம் கிடைத்தது பார்த்தாயா, வீணை வாசிக்க என்றெல்லாம் கண்டித்துப் பேசும், மகன், இருக்கும் வீட்டிலே, தகப்பனார், மிதுலா நகரம் தீப்பிடித்துக் கொண்டபோதும், ராஜரிஷி ஜனகர், பதறாமல், குழப்பமடையாமல், வேதாந்தத விசாரணை யிலேயே ஈடுபட்டிருந்தார், என்று புராணம் படித்தால், சரிதம் படிக்கும் மகன், என்ன எண்ணுவான் - தகப்பனாரைப் பற்றி, அவர் படிக்கும் பழைய ஏடுபற்றி, அதிலே புகழப்பட்டிருக்கும் ராஜ ரிஷியைப் பற்றி, மகன் மூலம் நீரோவின் கொடுங்கோன்மையையும், கணவன் மூலம் ஜனகரின் வேதாந்த உள்ள மேன்மையையும், கேட்கும் மாதின் மனம், என்ன கதியாகும்! அத்தகைய குடும்பத்தின் நிலையில், இன்று நாடு இருக்கிறது! புராணத்தின் மூலம் மக்களுக்குப் புகுத்தப்படும் எண்ணங்கள், நீதிகள், முறைகள், திட்டங்கள், எல்லாம் புத்தறிவின் மூலம் மக்கள் பெறுவனவற்றுக்கு முற்றிலும் முரணாக அமைகின்றன - மனதிலே போராட்டம் மூண்டுவிடுகிறது. சிலரால், இந்தப் போரின் வேகத்தைத் தாங்கி கொள்ள முடிவதில்லை - அவர்கள் கிலி கொள்ளுகிறார்கள். இந்த மனப்போராட்டம் என்ன கேடுகளைச் செய்துவிடுமோ, என்று சிலர், தன்னலக்காரர்கள் - பழைமை நீடித்து இருந்தால் தான் தங்களுக்குப் பெருமை, பிழைப்பு, என்று எண்ணிக் கொண்டுள்ள ஏமாளிகள், அவர்கள், புத்தறிவு புகாதபடி மக்களைப் பழைமையிலேயே ஆழ்த்தி வைக்கப் பல வழிகளாலும் முனைபவர். புத்தறிவு பரப்புவரை, தாறுமாறாக ஏசுவதன் மூலம், தங்கள் தோல்வியையும் துயரத்தையும் காட்டிக் கொள்பவர்கள். ஆனால் சமுதாயத்திலே உள்ள பெரும்பாலான மக்களின் உள்ளத்திலே, இந்தப் போர் நடந்தவண்ணம் இருக்கிறது - போரும் கடுமையானதாகவே இருக்கிறது - வெற்றியோ, ஒவ்வோர் கட்டத்தின் போதும், புத்தறிவுக்குத்தான் கிடைத்து வருகிறது - பழைமை மடிகிறது - அதன் பக்கம் இருந்துகொண்டு சில பிணந்தூக்கிகள் பெருங்குரல் கொண்டு கூவினாலும், பிணம் பிணம் தான் - உயிர் பெறாது!! புராண மூலம் மக்கள் இனி, தமது வாழ்க்கைக்கு முறைகளை, நீதிகளைத் தேடமாட்டார்கள் - முடியாது - கவர்னர் ஜெனரல் ராஜகோ பாலச்சாரியார், புராணம் படித்தவர் - சில மடிசஞ்சிகளுக்குத் தெரிந்திருக்கும் வேத உண்மைகளைவிடச் சற்று அதிகமாகவே அறிந்தவர். - அவருக்கும், ராஜரிஷியின் கதை தெரியும் - தெரிந்த காரணத்தால், அவர் டில்லிப் பட்டணம் ஏக்காரணம் பற்றியோ தீப்பிடித்துக் கொண்டால், தான் ஒரு தலை சிறந்த வேதாந்தி என்பதைக் காட்டிக் கொள்வதற்காக மாளிகையிலே கவலைப்படாமலிருந்து கொண்டு, சாந்தி பர்வம் படித்துக் கொண்டு இருப்பாரா? இருந்தால், அவரை மானிலம் போற்றுமா? ஆட்சிப் பொறுப்பை மறந்தவர் என்றல்லவா தூற்றும்! ஆயிரம் மடிசஞ்சிகள் கூடிக்கொண்டு ஆச்சார்ய ஸ்வாமிகளின் போக்கைக் கண்டு தவறாக எண்ணாதீர்கள். அவர் கவியரசு ஜனகர் - ராஜரிஷி - இதிநாட்களில் மிதுலை தீப்பிடித்துக் கொண்டபோது ஜனக மகாராஜா எப்படி, எல்லாம் அவன் செயல் என்றெண்ணி இருந்துவிட்டாரோ, அதுபோல இருக்கிறார் - இது அவருடைய உத்தம குணத்துக்கு ஓர் உன்னதமான சான்று - அவருடைய வேதாந்த மனப்பான்மையை விளக்கும் சம்பவம் என்று கூவினாலும், யாராவது, அந்தக் கூச்சலைப் பொருட்படுத்துவார்களா! என்ன ஆணவமய்யா இதுகளுக்கு ஊர் நெருப்புப் பிடித்துக் கொண்டது. ஊராளும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர். மாளிகையில் இருந்துவிட்டார், மக்கள் துயர் தீர்க்க முன்வராமல் இதற்கு ஒரு காரணம் கூறுகிறார்கள். நம்மை ஏமாளிகள் என்று எண்ணி கொண்டு என்று மக்கள் கொதிப்புடன் கூறுவர். சந்தேகம் கொள்வோர் செய்து பார்க்கட்டும், பழைய ஏடுகளிலே கூறப்பட்ட முறைப்படியான நீதி சிலவற்றை நிலைநாட்டும் காரியத்தை!! சட்டமே குறுக்கிடும், பலவற்றிலே மற்றவற்றிலே, மக்களின் கோபம் குறுக்கிடும் எனவேதான், காலத்திற்கு ஒவ்வாததும் கவைக்கு உதவாததும், கருத்துக் குழப்பத்தை மூட்டக்கூடியதுமான, புராணக்கதைகளை, புண்ய கதைகள் என்று கூறி, இன்னமும் மக்களிடையே அவைகளுக்குச் செல்வாக்குத் தேடிடப் பார்க்கும் சிறுமதியை விட்டொழியுங்கள் என்று கூறுகிறோம். சீறிப்பயன் இல்லை - சிறுமதிகொண்டு பேசிப் பயன் இல்லை பழைமை மடியத்தான் செய்யும்.

வேதாந்தியின் உள்ளம் இவ்விதம் இருக்கவேண்டும் என்பதை விளக்க, பெருவிபத்து நேரிட்டபோதும், அரசன், தன் மக்களின் துயர்தீர்க்கும் பணியைச் செய்யாது, ஞானமார்க்கத்திலே ஈடுபட்டிருந்தான், என்று கூறும் புண்ய ஏடுகளே, அன்பு, இரக்கம் எனும் பண்புகளின் பெருமையினை விளக்க வேறு பல கூறி உள்ளன. இராவணனை இந்த இரக்கம் எனும் பண்பு இல்லாததாலேயே அழிக்க வேண்டிநேரிட்டது என்று கம்பர் கூறுகிறார். இரக்கம் எனும் ஒரு பொருளிலோ ஆரக்கன் என்று குற்றம் சாட்டுகிறார். குணத்துக்கு ஓர் உன்னதமான சான்று - அவருடைய வேதாந்த மனப்பான்மையை விளக்கும் சம்பவம் என்று கூவினாலும், யாராவது, அந்தக் கூச்சலைப் பொருட்படுத்துவார்களா! என்ன ஆணவமய்யா இதுகளுக்கு! ஊர் நெருப்புப் பிடித்துக் கொண்டது, ஊராளும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர், மாளிகையில் இருந்துவிட்டார், மக்கள் துயர் தீர்க்க முன்வராமல் இதற்கு ஒரு காரணம் கூறுகிறார்கள். நம்மை ஏமாளிகள் என்று எண்ணிக் கொண்டு என்று மக்கள் கொதிப்புடன் கூறுவர். சந்தேகம் கொள்வோர், செய்து பார்க்கட்டும், பழைய ஏடுகளிலே கூறப்பட்ட றைப்படியான நீதி சிலவற்றை நிலைநாட்டும் காரியத்தை!! சட்டமே குறுக்கிடும், பலவற்றிலே, மற்றவற்றிலே, மக்களின் கோபம் குறுக்கிடும். எனவேதான், காலத்திற்கு ஒவ்வாததும் கவைக்கு உதவாததும், கருத்துக் குழப்பத்தை மூட்டக்கூடியதுமான, புராணக்கதைகளை, புண்ய கதைகள் என்று கூறி, இன்னமும் மக்களிடையே அவைகளுக்குச் செல்வாக்குத் தேடிடப் பார்க்கும் சிறுமதியை விட்டொழியுங்கள் என்று கூறுகிறோம். சீறிப்பயன் இல்லை - சிறு மதிகொண்டு பேசிப் பயன் இல்லை பழைமை மடியத்தான் செய்யும்.

வேதாந்தியின் உள்ளம் இவ்விதம் இருக்க வேண்டும் என்பதை விளக்க, பெருவிபத்து நேரிட்டபோதும், அரசன், தன் மக்களின் துயர் தீர்க்கும் பணியைச் செய்யாது, ஞானார்க்கத்திலே ஈடுபட்டிருந்தான், என்று கூறும், புண்ய ஏடுகளே, அன்பு, இரக்கம் எனும் பண்புகளின் பெருமையினை விளக்க வேறு பல கூறி உள்ளன. இராவணனை இந்த இரக்கம் எனும் பண்பு இல்லாததாலேயே அழிக்க வேண்டி நேரிட்டது என்று கம்பர் கூறுகிறார். இரக்கம் எனும் ஒரு பொருளிலோ ஆரக்கன் என்று குற்றம் சாட்டுகிறார். இதனைக் கருத்துடன் படித்துணருபவர்கள், இரக்கத்தின் அவசியத்தையும், அந்தப் பண்பு இல்லாதவன் ஆரக்கனாகிறான், என்பதையும் அறிந்து கொள்கிறார்கள், என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் பிறகு ஓர் சமயம், ஜனகரின் கதையை, மிதுலை தீப்பிடித்து எரிந்தபோதும், அவர் வேதாந்தம் படித்த சம்பவத்தைப் படிக்க நேரிட்டால், என்ன எண்ணுவார்! அவர்கள் மனதிலே, கம்பர் பதியவைக்கிறார், பாடல் மூலம், இரக்கம் எனும் ஒரு பொருளிலாதார் ஆரக்கர் என்று அவர்களிடம் ஜனகரின் கதையும் கூறப்படுகிறது - இரண்டு தகவல்களையும் பெற்றால், இரக்கம் இந்த ஜனகருக்குத் துளியும் இருந்ததாகத் தெரியவில்லையே - இரக்கத்தை மறந்தோர் ஆரக்கர் என்று கம்பர் கூறுகிறாரே, அவ்விதம் பார்க்கும்போது, ஜனகரும் ஆரக்கர்தானே - ஏன் அவரை, ராஜரிஷி என்று புகழ்கிறார்கள். என்று கேட்பார்களா, மாட்டார்களா? கேட்கும்போது கோபம்வரத்தான் செய்யும், பழைமை விரும்பிகளுக்கு! வீட்டுக்குடையோன் விழித்துக் கொள்வது கண்டு, கள்ளன் கூடத்தான் கோபிக்கிறான் சமயம் கிடைத்தால் கல்லைத் தூக்கிக்கூடப் போடுகிறான் வீட்டுக்குடையவன் தலைமீது! அதனாலே, அவனுடைய கோபத்தைக் கிளறக்கூடாது என்று, சட்டம் சும்மா இருந்துவிடுமா! அதுபோல, புத்தறிவும், இந்தப் பழைமை விரும்பிகள் பதறுகிறார்கள். பகைக்கிறார்கள் பழி பல கூறுகிறார்கள், என்பதற்கஞ்சி, தன் பணியினைச் செய்யாமலிருக்குமா! இரக்கம் சிறந்த பண்பு அதனைக் கொள்ளாதவர் ஆரக்கர்! இராவணனிடம் இரக்கம் இல்லை - ஐதோ ஒரு காரணத்தால்! ஜனகரிடமும் இரக்கம் இல்லை - இன்னோர் காரணத்தால் - இரக்கமற்ற இராவணன் ஆரக்கன் என்று கண்டிக்கப்படுகிறான் - இரக்கத்தைப் பற்றிக் கவலை கொள்ளாதிருந்த ஜனகன் ராஜரிஷி என்று, போற்றப்படுகிறான் - இது எந்த வகையான நியாயம் என்று கேட்கமாலிருப்பார்களா? மகாபாபி ஜனக மகரிஷியைக் கூடக் கேவலமாகப் பேசுகிறானே. இவன் நாக்கு அழுகாதோ, என்று அழுகுரல் கிளப்பி என்ன பயன்? விளக்கம் கேட்கும் காலம் இது - பொருத்தமற்றவைகளை நீக்கும் காலம் - பழைய கதைகளை நம்பி வாழ்க்கையை நடத்த முடியாத காலம் - இந்தக் காலத்திலே கபடரோ கயவரோ, கருத்துத் தெளிவற்றவரோ, ஏதேனும் ஒரு விஷயத்திலே கருத்தைச் செலுத்தி மற்றதை மறந்தவரோ, யாராக இருப்பினும், அவர்கள் அன்று தீட்டிய கதைகளைச் சுமந்துகொண்டு, காலவீரனுடன் போரிடக் கிளம்புவது, பயனற்ற காரியம், கால் வீக்கம் கொண்டவன் தனக்கு யானைப் பலம் இருக்கும் என்று நம்பினால், சரியாகுமா! நான் புராணம் படித்தவன், சாஸ்திரம் அறிந்தவன், சாமம் தெரியும் யஜ÷ர் தெரியும், சாணக்கிய பரம்பரை, என்று இவைபோன்ற பெருமைகளைக் கூறிக்கொண்டு, போரிட - முன் வருபவர், யானைக்கால் வியாதி கொண்டவன், தனக்கு யானையின் பலம் உண்டு என்று எண்ணும் ஏமாளிக்குச் சமமாவான். காலமறிந்து நிலையறிந்து நடந்து கொள்ளத் தெரியாத சுபந்தங்களைச் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. புத்ததறிவு வெல்கிறது - பழைமை மடிகிறது.

(திராவிடநாடு - 20.2.49)