அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கலைவிழி!
கலைத்துறை இன்று செழிப்புடன் வளர்ந்து கொண்டு வருகிறது, சிறப்புடன் என்று கூறாமல் செழிப்புடன் என்று கூறுவது, பொருளாதாரத் துடன்தான். செழிப்பான வளர்ச்சியே, சிறப்பு என்று கொள்ள விரும்புகின்றவர்களை நான் தடுக்கவில்லை!

கலைத்துறையுடன் மக்களுக்கு உள்ள தொடர்பு வளர்ந்தவண்ணம் இருக்கிறது. நடை உடை பாவனையில் கலையின் வண்ணம் அறிந்தோ அறியாமலோ ஏறி இருந்திடக் காண்கிறேன்.

அழகுக் கலையிலிருந்து ஆடுக்களைக் கலைவரையில், ஒரு புதுமையும் வளமையும் மின்னிடக் காண்கிறோம். மின்னுவதெல்லாம் பொன்னல்லதான், ஆனால் மங்கிக் கிடப்பதுதான் மாண்புக்கு ஆடையாளம் என்றும் தீர்ப்பளித்துவிட முடியாதல்லவா?

கலைத்துறை குறித்து எண்ணுவதும் பேசுவதும், ஏய்ந்தறிவதும் எழுதுவதும், வளர்ந்து வருகிறது. ஏராளமான ஏடுகள்! இதழ்கள்! மலர்கள்! துண்டு வெளியீடுகள்! எல்லா இதழ்களுமே, கலைக்காக ஒரு இடம் அமைத்துக் கொண்டுள்ளன, கலைக்காக என்றே உள்ள இதழ்கள் பல வெளிவருகின்றன. இந்த இதழ்கள், கலை குறித்து எண்ணி உதவுகின்றன, மக்கள் கலைபற்றி எண்ணுவதைத் துணைக்கொண்டு இதழ்கள் பயன்பெறுகின்றன, ஒரு நல்ல தொடர்பு ஏற்பட்டுக் கொண்டு வருகிறது.

கலை, சமுதாயத்தின் நிலையை உயர்த்துகிறது என்பார் உள்ர், இல்லை, சமுதாயத்தின் நிலையைக் கலை தாழ்த்தி வருகிறது என்று கூறுவார் உள்ர், இருசாரார் கூறுவதினின்றும், நிலையை மாற்றும் வலிமை கலைக்கு இருப்பது புலானகிறது, அதிலே ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது, ஏனெனில், கலையின் வலிமை போயே விட்டது என்றும், கலையின் மூலம் காணக்கிடைத்த பலன்களை இன்று காணமுடிவில்லை என்றும், கூறிக் கவலையைக் காட்டகிறார்களே, சிலர், அவர்தம் ஊரை உண்மை அல்ல என்பது விளங்குகிறதல்லவா! கலை, வலிவுள்ளதாக இருக்கிறது, பொலிவு வளருகிறது, மக்களிடம் உள்ள தொடர்பு வேகமாகப் பெருகி வருகிறது, செழிப்பாகவும் இருக்கிறது.

வலிவும், பொலிவும், மக்கள் தொடர்பும் செழிப்பும் கொண்டதாகக் கலை இருக்கும்போது, அந்தத்துறையை அலட்சியப்டுத்துவதோ, அதன் வளர்ச்சியையும் வகையையும் இயற்கைக்கு விட்டு விடுவதோ, அதன் மூலம் பெற வேண்டியவைகள் ஏவை ஏவை என்பது குறித்துப் பொறுப்புக் காட்டாதீருப்பதோ, நல்லதல்ல.

மலடிக்கு மகவுடன் கொஞ்சத் தெரிகிறதா இல்லையா என்பது பற்றி அதிகக் கவலை கொள்ளத் தேவையில்லை, பெற்ற செல்வத்தைப் பேணி வளர்த்திடும் ஆற்றல் அன்னைக்குட இருக்கிறதா என்று அறிந்தாக வேண்டுமல்லவா?

கலை, மலடி அல்ல, படக்காட்சி பாஷையில் கூறுவதானால், கலை மக்களைப் பெற்ற மகராசி எனவே, கலை மூலம் கிடைப்பது கிடைக்கட்டும், பெறுவோர் பெறட்டும் என்று இருந்துவிடக் கூடாது. மக்களைப் பெறக்கூடிய மகராசி என்று தெரிந்தான பிறகு, சீராட்ட, பாராட்ட சிறப்புடன் வளர்ந்திட வழிவகையுடன் மகராசி இருந்திடத்தக்க ஏற்பாடு இருந்தாக வேண்டுமே.

நல்லதங்காள் கூடத்தான் மக்களைப் பெற்ற மகராசி ஆனால் பாபம், கிணற்றில் போட்டல்லவா குழந்தைகளைக் கொல்ல வேண்டி நேரிட்டது.

அதுபோலத்தான், கலை, பல்வேறு பலன்களை உன்றெடுக்கும் வளமுள்ளது என்பது உணரப்பட்டான பிறகு, அதன் போக்குக் கவனிப்பாரற்றதாக, இருந்துவிடச் செய்வது கூடாது என்கிறேன்.

கலை, வலிவுடையதுதான், ஆனால் அந்த வலிவு, அழிவு வேலைக்கா? இக்க வேலைக்கா?

கலை, பொலிவுடையது, மறுப்பாரில்லை, ஆனால் அந்தப் பொலிவு, உள்ளத்திலே இசாபாசங்களை மூட்டி விடவா? அல்லது தூய்மையைத் தழைத்திடச் செய்யவா?

கலை, மக்களிடம் நெருங்கிய தொடர்புடையதுதான், ஆனால் அந்தத் தொடர்பு இசான், மாணவன் என்ற விதமாகவா? போலீஸ்காரன் குற்றவாளி என்ற வகையிலா? தோழர்கள் என்ற போக்கிலா? தொடர்பு எங்ஙனம் இருத்தல் வேண்டும்?

கலை, செழிப்புடையதுதான், ஆனால் அந்தச் செழிப்பு, மக்களின் வளத்தை - உடல் - உள்ளம் - பொருள் - பண்பு - ஆகிய எல்லா வளங்களையும் - பெருக்கும் விதத்தில் இருத்தல் முறையா? அல்லது, உடுபட்டோரைச் செழித்திடச் செய்வதுடன் மட்டும் இருந்திடல் போதுமா?

இன்னோரன்ன கேள்விகள் ஏழுகின்றன.

எவரும் இதுபோல ஏழுப்புதல் காணோமே, என்கிறீர்களா, கலைத்துறையிலே உடுபட்டவர்களுக்குள்ளே அடிக்கடி காணப்படும் சச்சரவுகள் கலைத்துறையினருக்கும் மற்றத் துறைகளில் உள்ளோருக்கும் உள்ள வேறு பாட்டுணர்ச்சிகள், இவை யாவுமே மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகள் உள்ளத்திலே எசாடுவதன் விளைவுதான், வேறென்ன?

முறைப்படுத்தி, பக்குவப்படுத்தி, விளக்கம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்தக் கேள்விகளை அணுகாததால், அணுகுவது கடினமாக இருப்பதால்தான், எளிதான வேறோர் வழியைக் கையாண்டு, கலை உலகிலுள்ளோர் ஐளனம் - ஐச்சு - பழித்தல் - சபித்தல் என்பன போன்ற கணைகளை ஒருவர் மீதொருவர் ஏவிக்கொள்கின்றனர்.

சச்சரவுகளாகி விடுகின்றன. இயற்கையாக எழுந்துள்ள பிரச்சனைகள்.

கலைத்துறையினர் எவரும் இந்தப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் முடியாது, இந்தப் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் ஒருவருக்கொருவர், வசை வழங்கிக் கொள்வதுமில்ல.

கலை, வலிவும் பொலிவும் கொண்டது, மக்களிடம் அதற்குள் தொடர்பு வளர்ந்தவண்ணம் இருக்கிறது, அதன் செழிப்பும் பளிச்சிடுகிறது. உண்மை! இந்த வாய்ப்பு எவ்வழி செல்லல் வேண்டும்?

உதென்ன கேள்வி? எவ்வழி செல்லவேண்டும் என்றால், நல்வழி செல்ல வேண்டும் - என்று பதிலளிப்பீர்கள், பதிலளிக்கிறார்கள், எளிதாகவும் நம்பிக்கையுடனும் பதிலளிக்கிறார்கள், பதிலிலே பாகு கலந்தும் அளிப்பவர்களைக் காண்கிறேன். நாராசத்தைக் கலப்பவர்களையும் பார்க்க நேரிடுகிறது.

இவ்வளவு எளிதான ஒரு பதில் இருக்கும்போது, கேள்வியில் ஐதோ கடினம் இருப்பதுபோல ஏன் காட்டிக் கொள்கிறீர்கள்? என்று என்னைக் கேட்க எண்ணுவீர்கள். தொடுக்கும் கேள்வியில் அல்ல, கிடைத்திடும் பதிலில்தான், நான் கடினம் எடுருவி இருந்திடக் காண்கிறேன்.

எவ்வழி செல்லவேண்டும் என்றால், நல்வழி என்கிறார்கள். மெத்த மகிழ்ச்சி.

நல்வழி எது,
நல்வழி என்பது, நம் காலத்துக்கு மட்டும் பொருந்துமா, என்றென்றும் நிலைத்து நிற்பதா?

நல்வழி இஅது என்று கூறுபவர், கூறிடத் தகுதி படைத்தோர்தான் என்று ஏற்றுக் கொள்வது எங்ஙனம்?

இவைகள், நீங்களும் நானும் எண்ணியெண்ணிப் பார்த்துப் பதில் தேடித் தீரவேண்டிய கேள்விகளிலே சில.

மலேரியா காய்ச்சல் இது, கொயினா தந்திருக்கிறேன்.

என்று மருத்துவர் கூறும்போது, இவருக்கு எப்படி இது தெரிந்தது? இவர் கூறுவதை நாம் எங்ஙனம், சரியானது என்று ஏற்றுக் கொள்வது? என்று எவரும் ஐயப்பாட்டுக்கு ஆளாவதில்லை, இம் என்கின்றனர் பணமும் தருகின்றனர்.

ஆஅதேபோல, குறிப்பிட்ட சிறப்பறிவுத் துறைகளிலே உடுபட்டிருப்பவர்களின் கருத்துக்கள் மற்றவர்களால், ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, மறுப்பார், ஐயறுவார், வழக்காடுவார் அதிகம் இரார்.
ஆனால் எது நல்வழி? என்பதற்கு, இன்னின்னவர் பதிலளிக்கும் தகுதி பெற்றார். பிறர் கேட்டு இûவு அளிக்கும் கடமையுடையார், என்று ஆறுதியிட்டுக் கூறிவிட முடியாது, கூடாது, தேவையுமில்லை.

எனவேதான், எது நல்வழி என்பதற்கு, அளிக்கப்படும் பதில், வாழ்க்கை முடிவுபெறச் செய்வதாக இலலை, புது வழக்குகளுக்கு வழி செய்கிறது.

இதற்கு முடிவுதான் என்ன?

உண்டு! நல்வழி, எது என்பதைப் பிறர் கூறக்கேட்டு, எண்ணிப் பாராமல் ஏற்றுக் கொள்வதோ, அல்லது மறுத்துப் பேசி மாச்சரியங்களை மலியச் செய்வதோ, உண்மையான பலனைத் தராது.

வெற்றி, பெற்றவர்களையே வீழ்த்தி விடுவதுண்டு, வாதியே பிரதிவாதியாகிவிடும் விசித்திரமும் எழக்கூடும்.

எனவே, நல்வழி என்பதற்குப் பொருள், பிறர் கூறவதைக் கொண்டும், நாமே எண்ணிப் பார்ப்பதைக் கொண்டும் மட்டுமல்லாமல், நாம் எங்கு செல்ல விரும்புகிறோம்? நமது சமுதாயம் எங்கு செல்லவேண்டுமென்று நமக்கு உறுதியாகத் தோன்றுகிறது? என்பது பற்றி ஒரு முடிவு கண்டு பிறகு, அந்த இடம் செல்ல, எவ்வழி சிறந்ததோ அது நல்வழி என்று கொள்ளவேண்டும்.

இதிலே இன்னல் அதிகம், ஆனால் இந்த முறையில் தேர்ச்சி ஏற்பட்டால், இனிமையும் கிடைக்கும்.

இனி, எங்கு செல்ல வேண்டும்? என்பதைத் தகுந்த முறையிலே காண வேண்டுமனானால், இன்று எங்கு இருக்கிறோம் என்பதனை அறிந்தாக வேண்டும். இன்றுள்ள, கேடுபாடுகள் யாவை என்பதையும் தெரிந்து கொண்டாக வேண்டும்.

வெயிலில் இருந்தவனுக்கல்லவா, நிழலின் அருமை தெரியும்?

இன்று, நாமும், சமுதாயமும் எங்கு இருந்து வருகிறோம்?

ஜாதியும் அதனாலாய பேதங்களும், மூட நம்பிக்கைகளும் அவைகளால் மூண்டுவிடும் நாசங்களும், பொருளாதார பேதங்களும் அவைகளால் கொதித்து ஏழும் குரோதங்களும், ஆட்சி மறை ஆலங்கோலங்களும், அவைகளால் ஆர்த்தெழும் இவேச உணர்ச்சிகளும், அவருருக்கத் தக்க நடவடிக்கைகளும் - தன்னம்பிக்கையற்ற தன்மையும், பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் போக்கும், சலிப்பும் குழம்பிக் கிடக்கும் இடத்திலே இருக்கிறோம்.

சேற்றிலுள்ள செந்தாமரையைக் காட்டினால், மலருக்குப் பெருமையை தவிர, சேறு சிறப்படைந்து விடாது. அதேபோல, இவ்வளவு இழி தன்மைகளுக்கிடையிலே, காணப்படும் கருத்துத் தெளிவுள்ளோரை, அவர் தம் பேச்சினைக் காட்டிவிடுவது, சமுதாயம் சிறந்த நிலையில் உள்ளது என்று காட்டுவதாகாது.

இந்த இழி தன்மைகளை நீக்கிக் கொண்ட, இவை ஒழிந்த, பண்புகள் நிறைந்த ஓர் நல்லிடம் செல்லவேண்டும்.

அதற்கான வழிதான், நல்வழி!

காசிக்குச் செல்ல எண்ணிக்கொண்டு, காஞ்சிபுரம், பஸ்ஸில் ஏறிப் பயன் என்ன?

பம்பாய் போகும் வண்டி பளபளப்பாக இருக்கிறது என்பதால், அதிலே ஏறிக்கொண்டு, பாபநாசம் எங்ஙனம் போய்ச் சேரமுடியும்?

அதுபோலத்தான், செல்லுமிடம் எது என்று ஏற்படுத்திக் கொள்ளுகிறோமோ, அந்த இடத்துக்குக் கொண்ட செல்லும் பாதை, எதுவோ, அதுதானே நம்மைப் பொறுத்தவரையில் நல்ல பாதை!

இந்த முறையிலே, ஒரு பக்குவம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள், பிறகு பாதையும் புரியும், பயணமும் எளிது.

ஐடெடுத்துப் படித்திடும்போது, பாடலைக் கேட்டு இன்புறும் வேளையிலும், இடலைக் கண்டு அகமகிழும் போதும், படக்காட்சி கண்டு பரவசப்படும் வேளையிலும், ஓவியத்தைக் கண்டு உள்ளத்தில் கிளர்ச்சி ஏழும்போதும், பேச்சுக் கேட்டுப் பேரின்பம் பெறும்போதும், அழகு கண்டு ஆனந்தமடையும் போதும், இந்த ஒரு நோக்கம் அளவு கோலாகவும், துலாக் கோலாகவும், ஊரை கல்லாகவும், இருந்திட வேண்டும், இந்தக் கலை நிகழ்ச்சிகளை இக்கித் தருவோருக்கும் , இது முழுதும் தேவை.

இந்த வகையிலே கலை கவனிக்கப்பட்டால், அதன் மூலம் செழிப்புக் கிடைக்கும், அந்தத் துறையும் செழிப்புடன் இருந்திடுவத மட்டுமல்லாமல், சிறப்புடன் திகழும்.

(திராவிட நாடு - 14-1-58)