அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காஞ்சிபுரத்தில்

23.8.48 ல் காஞ்சிபுரத்தில் சென்னை சர்க்கார் திராவிடர் கழகத்தலைவர்களைச் சிறைப்படுத்தியதைக் கண“டிக்கும் முறையில் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அன்று, காஞ்சிபுரத்திலுள்ள ஆண்டர்சன் உயர்நிலைப்பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி, சோமசுந்தர கன்யா வித்யாலயம், வன்னியர் சங்கம் பள்ளிக்கூடங்களும், ஆடிசன் பேட்டையிலுள்ள இரண்டொரு காங்கிரசன்பர்களின் கடைகள் நீங்கலாக எல்லாக் கடைகளும் மூடப்பட்டன. ஊர்வலமும் பொதுக்கூட்டமும் அமைதியாக நடைபெற்றது.

(திராவிடநாடு 29.8.48)