அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காஞ்சிபுரத்தில் சோதனை

3.3.48 ல் பெரியகாஞ்சிபுரம் திராவிடர் கழகத்தலைவர் தோழர் வி.கண்ணப்பர் அவர்களையும் தோழர் இ.ங.M அண்ணாமலை அவர்களையும், உள்ளூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டரும், சப்இன்ஸ்பெக்டரும், சில கான்ஸ்டேபிள்களுடன் சந்தித்து, நகரிலுள்ள திராவிடர் கழகங்களைச் சோதனையிட்டு, கருப்புச்சட்டை சம்பந்தமான ரிக்காடுகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டுமென்று கேட்டார்கள். அவர்கள் ஆட்சேபணையில்லை என“று கூறவே, புத்தேரிததெருவிலுள்ள திராவிடர் கழகத்தையும், பிள்ளையார்பாளையத்திலுள்ள திராவிடர் கழகத்தையும், சின்ன காஞ்சிபுரம“ திராவிடர் மறுமலர்ச்சிக் கழகத்தையும் சோதனையிட்டுக் கருப்புச் சட்டைகளையும், கழக ரசீதுப்புத்தகங்களையும் எடுத்துச் சென்றனர்.

திராவிடர் ஆராய்ச்சிக் கழகத்தில் சோதனை
சின்னக் காஞ்சிபுரத்திலுள்ள திராவிடர் ஆராய்ச்சிக் கழகமும் சோதனையிடப்பட்டு, கழக மினிட் புத்தகத்தைத் தோழர் கூ.க.கு பொன்னப்பா அவர்களிடமிருந்து வாங்கிச் சென்றனர்.

(திராவிடநாடு 7.3.48)