அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கண்டேர்கார்!

கலை என்றால், வானவில்லிலே தோன்றி மறைந்திடும் அழகை எப்போதும் மக்கள் கண் எதிரே கொண்டு வந்து நிறுத்தும் ஒரு மாயாஜாலத் தந்திரம் என்றும், எனக் கண்ணுக்குப் புலப்படாத உருவ அழகுகளைக் கலைக் கண் கொண்டு கண்டறிந்து, மற்றவரின் பார்வைக்குக் கொண்டு வரும் மந்திரவாதியின் வேலை என்றும் கூறி, கலையைச் சாதாரண மக்களுக்குச் சம்பந்தமேயற்ற அதியற்புதப் பொருôளாக்கினர். கலையை ரசிப்பதற்கே தனியானதோர் பண்பு வேண்டும் என்றனர். இவ்வளவு சுற்றுச்சுவர் ஏழுப்பி, இவர்கள் வளர்த்த கலை, எதற்குப் பயன்பட்டு வந்தது என்று கவனித்தால், சுகபோகிகளின் சுந்தரிகளை வர்ணிக்கவும், சூரர்களைப் பாராட்டவும் மற்றும் இயற்கை எழில், செயற்கை அழகு என்பன போன்றவைகளை விளக்கவும் பயன்பட்டதேயன்றி, வாழ்வுக்குப் பயன்படவில்லை.

கலையிலே திறம், கலையின் நிலையிலே உயர்வு, கலையிலே பல வகை என்று கூறுவதிலும், கலை கலைக்காகவே என்று பேசுவதிலும், பூரிப்பும் பெருமையும் அடைந்தனர். கலை, நோக்கமற்ற நேர்த்தியாகக் கருதப்பட்டது. கலை, வெறும் அழகு விளக்கமா? என்ற கேட்டால், இல்லை என்பர். கலை, மன எழுச்சிக்குக் சாதனமா என்று கேட்டால், அதுமட்டுமல்ல என்பர், கலையை விளக்குங்கள், அதன் தன்மை எப்படி இருக்க வேண்டும்? அது பயன் கருதும் செயலா? அல்லது விளைவு இல்லாததா? என்று கேட்டால், கலை, மணம்போல், அழகுபோல், உண்மைபோல், முழுவதும் விவரிக்க முடியாத வியக்கத்தக்க சக்தி என்பர். அழகு, சுவை, மணம் இவைகளால் பயன் உண்டே, அதுபோல் கலையினால் பயன் உண்டன்றோ! அங்ஙனம், கலையினால் பயன் உண்டு என்றால், யாருக்குப் பயன்தருவது கலை எனக் கருதப்படவேண்டும் என்ற கேட்டு விட்டாலோ, கலாரசிகர்களுக்கு முகம் கடுக்கும். கலை, கலைக்காக என்பர்.

காண்டேர்கார், கதாசிரியர் மட்டுமல்ல, கலாசிரியர். அவர் கருத்து, கவிஞர் பாரதிதாசனின் கருத்தப் போன்றதே. கலை, கலைக்காக என்று பேசுபவர்களின் பகட்டுரை அவருக்குப் பிடிக்காது. கலைக்காக வாழ்கிறேன் என்ற பொருளற்ற பேச்சுக்காரரல்ல காண்டேர்கார் புரட்சிக்காரர் கவிகைளில் கூறுவதைக் காண்டேர்கார், உரைநடையில், கதைவடிவிலே கூறுகிறார். புரட்சிக்கவிஞர் போலவே, காண்டேர்கார், முற்காலத்தவர் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஆகியவ்றû மீறுபவர். கலை, வாழ்வுக்காக! வாழ்வு செம்மைப்பட, மக்கள் வாழ்வை அனுபவிக்க வாழ்வு கருகும் நிலை பெறாமல் மலர்ந்து மணம் பரப்புவதற்குக் கலை பயன்படவேண்டும் என்ற கொள்கையினர் தென்றல் போன்ற இனிமையும், சிறுதூறலுகுள்ள ஜிலுஜிலுப்பும், ஆசைக்கு உள்ள எழுச்சியும் மக்களுக்கு, வெறும் மாளிகைவாசி களுக்கு மட்டுமல்ல, உழைத்து அலுக்கும் மக்களுக்குப் பயன்படவேண்டும் என்பது காண்டேர்கார் கொண்டுள்ள கொள்கை, அவருடைய கதை அமைப்பு முறை, கதைகளிலே கூறப்படும் நிகழ்ச்சிகள், கதையைக் தீட்டிச் செல்லும்போக்கு ஆகியவற்றிலே, கலைவாழ்வுக் காக என்பதனைக் காண்டேர்கார் அழகுபட விளக்கியிருக்கிறார். செல்வான்கள், சுகபோகிகள், கொண்டுள்ள கலை உணர்ச்சி, கலப்படம் நிறைந்தது. அந்தக் கலாரசிகர்கள் ஏழைகளை உறிஞ்சி, இன்பம் பெற்று ஆறுமாந்து கிடப்பவர்கள் என்பதை நன்கு உணர்ந்து, சமுதாயத்திலே எதை எதையோ கூறி, என்னென்ன காரணமோ காட்டி உழைக்கும் கூட்டத்தைப் பாடுபடாத கூட்டம் ஏய்து; வந்தது போலவே, கலையையும் இந்தச் சுரண்டும் காரியத்துக்குச் சுகபோகிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறார் காண்டேர்கார்.

கலைத்துறையிலே, நடைபெற்றுவரும் புரட்சியிலே, காண்டேர்காரின் முயற்சிக்கு ஓர் முக்கியமான பங்கு உண்டு.

காண்டேர்கார், மராட்டிய சுயமரியாதைக்காரர், சமதர்ம நோக்குடையவர். அவருக்கு மற்றவர்களிடம் மட்டற்ற அன்பு மட்டுமல்ல, வற்றாத நம்பிக்கை இருக்கிறது. கொடுமைகளைக் களைய வீரர்கள் வாள் எடுத்துக் களம் புகுவது போலக் காண்டர்கார், பேனாவைக் கருவியாகக் கொண்டு, சுகம் எங்கே? இருதுருவங்கள், கருகிய மொட்டு, வெறுங்கோயில் முதலிய பல ஏடுகள் மூலம் நாட்டுக்குப் பணிபுரிந்து வருகிறார்.

கலை, கோயிலுக்கு, இல்லையானால அரண்மனைக்கு, என்ற நிலை மாற்றிய பாரதிதாசன் போலவே கதை மூலம், கலையை, நாட்டுநிலையை விளக்கவும், அதனைத் திருத்தவும், காண்டேர்கார், உபயோகிக்கிறார், கலை கலைக்காக அல்ல, கலை மக்களுக்காக, மக்களின் வாழ்விலே மணம் பரப்புவதற்காக சிக்கலை ஆறுக்க, கலை ஓர் கருவி, கால வேகத்தையும் மீறக் கூடியது, அதனை நாட்டுப் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு ஆர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, திட்டத்தோடு, வேலை செய்கிறார், இந்தக் கலாசிரியர். ஆகவேதான் இவருடைய கதைகளிலே ஜீவசக்தி ததும்புகிறது, எழுச்சிக்கு வழிகாட்டும் எழிலுடை ஏடுகளாக உள்ளன.

கதை, வெறும் பொழுது போக்குக்காகக் கட்டப்படுமட், சில நிகழ்ச்சிகளின் தொகுப்பு என்பதை மட்டுமல்ல, காண்டேர்கார் மாற்றியது, புதுக்கருத்துக்களைத் தாங்கும் புரட்சி ஏடுகளை இக்கதைகளின் மூலம் தந்திருக்கிறார். கதைகளிலே, அவர் காட்டும் பாத்திரங்களின் பண்புகள் அவ்வளவும், வாழ்க்கûயிலே நமக்கு ஏற்படும் மனப்போராட்டங்களை விளக்கும சித்திரங்களாக உள்ளன. காதலால் உருகிய கன்னியர், கட்டுக்கு அடங்காத காளை, கபடத்தால் உயிர் வாழ்பவன் என்று பலவகையானர்களை எத்தனையோ, கதாசிரியர்கள் தத்தமது ஏடுகளிலே, காட்டியுள்ளனர். அவைகளைப் படிக்கும்போது ஏன் பத்மா இப்படிப் பதைத்தாள்? சேகர் ஏன் இவ்வளவு சஞ்சலப்பட்டான்? குமாருக்கு இவ்வளவு குரூர குணமா? என்று கேள்விகள் படிப்பவர் மனதிலே ஏழுமேயொழிய, அந்தச் சூழ்நிலையிலே யார் இருப்பினும் இப்படித்தான் நடந்தேறி இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுவது இல்லை. காண்டேர்கார், சூழ்நிலை, நமக்கு உண்டாக்கும் எண்ணங்கள் உள்ளனவே, அவைகளையே, பாத்திரங்களாக்கிக் காட்டுவதால், கதை உண்மையில் கருத்தோவியமாகின்றது.

காண்டேர்கார் புதுமையை விரும்புபவர், புதுமையின் பளபளப்பை அல்ல, அதன் ஆழ்ந்த பாடத்தை, அவருடைய முயற்சி அவ்வளவும், திறமை முழுதும், முன்னால் ஏற்பட்ட எண்ணங்கள், ஏற்பாடுகள், முறைகள், ஆகியவற்றை முறியடித்து, மனிதத் தன்மையின் மேன்மையை உணர்த்த வேண்டும் என்பதுதான். அவருடைய கதாநாயகிகளின் கண்ணீர் காலடியிலோ அல்லது பூஜா பாத்திரங்களிலோ பெரும்பாலும் விழுவதில்லை, இணின் ஆணவம் என்னும் தீயை ஆணைக்கவே, சிந்தப்படுகிறது. பிரபஞ்சம் மாயை என்று கூறும் பழைமை வாதிகளைக் கண்டிப்பவர் பொதுவாகவே சமூக அமைப்பு முறையிலே, மிகப் புரட்சிகரமான மாறுதல் வேண்டும் என்பதற்கான போர்முரசு, காண்டேர்காரின் கதைகள்.

சுகம் எங்கே? என்று கேட்டால் ஏழை செல்லவான், உயர்ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பேதங்கள் ஒழிந்து, ஆண், பெண்ணை அடிமை கொள்ளும் பழக்கம் ஒழிந்து, மக்கள் நிம்மதி ஆடைகின்ற தன்மை இருக்கிறதே, அதுவே சுகம்! பெண்களின் வாழ்க்கையை, குடும்பப் பெரியவர்கள் சிக்கலுள்ளதாக்குவதைக் கண்டேர்கார் மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார். மராட்டிய நாட்டிலே, இவருடைய மறுமலர்ச்சி தரும் ஏடுகள் போற்றப்படுவது போலவே தமிழ்நாட்டிலும், இவருக்குப் பாராட்டுதல் வளர்ந்து வருகிறது.

வாழ்க்கை! இது, மதவாதிகள், வேதாந்திகள் மட்டுமல்ல கலைவாதிகளும் மறக்க வேண்டிய ஒன்று என்பது, ஓர் வைதீகக் கோட்பாடு, ஆனேகருடைய ஆபூர்வமான திறமை, வாழ்க்கையைப் பரீக்க, ஊதாசீனப்படுத்த, அதன் மாய்கை, மோசம், நிலையாமை ஆகியவற்றை வற்புறுத்தவே பயன்பட்டது. காண்டேர்கார், புரட்சி எழுத்தாளர் கூட்டத்தைச் சேர்ந்தவர், உரைநடை பாரதிதாசன், ஆகவே அவர் வாழ்க்கை யைப்பற்றி விளக்க, அதிலே வரக்கூடிய சிக்கல்களைத் தெரிவிக்க, அந்தச் சிக்கல்களின் காரணத்தை அறிவிக்க, அவைகளைப் போக்கும் மார்க்கத்தைத் தீட்டத் தமது திறமையைப் பயன்படுத்தகிறார்.

வாழ்க்கை என்பது ஒரு புஷ்பம். அந்தப் புஷ்பத்தின் உயர்வு எது? வண்டைக் காணப்பொழுது மயங்க வைக்கும் மதுத்துளியா? செ! அது அல்ல! ஒவ்வொரு விநாடியும் காற்றலை மீது குதித்து ஓடும் மதுரமான நறுமணம் என்று காண்டேர்கார், ஏரி நட்சத்திரம் எனும் நூலில் எழுதி இருக்கிறார்.

வண்டை மயங்க வைக்கும் மதுபோன்றது வாழ்விலே மக்கள் கொள்ளும் பிரேமை - இது வேதாந்திகள் கூற்று, வாழ்வை வெறுக்க வேண்டுமென்று உபதேசிக்கும் போக்கு, மலரிலே மது இருப்பது போல, வாழ்விலே, மயக்கமூட்டும் தன்மை மட்டுமே இருப்பதாக வேதாந்திகள் கூறுவர். மலரின் முழுப்பயனையும் கண்டறியாதது போலவே வாழ்வின் முழுத் தன்மையையும் அவர்கள் கண்டறியாது போலவே வாழ்வின் முழுத் தன்மையையும் அவரகள் கண்டறியா கூறிய பேச்சு அது. அவர்களின ஊரை, மேதைகளின் மதிமொழி என்று கருதப்பட்டு, கவிதை கதை, கூத்து, எதுவாயினும் இதே கருத்தினையே பலரும் தீட்டித் தீட்டி, வாழ்வு, வெறுக்கப்பட வேண்டுவதொன்று என்ற எண்ணத்தை மக்கள் மனதிலே பதியச் செய்துவிட்டனர். காண்டேர்கார், இந்த எண்ணத்தை எப்படிச் சாடுகிறார், பாருங்கள் மதுவா, புஷ்பத்தின் உயிர்? செ! அது அல்ல! என்கிறார். மயக்கமூட்டும் தன்மைதானா வாழ்வின் நோக்கம் விளைவு? செ! அது அல்ல!

வேறு என்ன? காண்டேர்கார் கூறுகிறார். ஒவ்வொரு விநாடியும காற்றலைமீது ஓடும் மதுரமான நறுமணம் புஷ்பத்தின் உயிர்.

பலருக்கு இன்பம் தரும் காரியமாற்றும் தன்மை, சக்தி, வாழ்வுக்கு உண்டு. அதனைச் செய்தலே, வாழ்வின் நோக்கம் என்பதை ஆழகாக விளக்கிவிட்டார். வாழ்வு ஓர் சுமை அல்ல, வாழ்வு ஓர் சந்தர்ப்பம் - பயன்படுத்திக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் காண்டேர்கார், இந்தக் கருத்தைப்பல இடங்களிலே வலியுறுத்தி இருக்கிறார். வாழ்வு பெரிதல்ல, கலைதான் பெரிது என்று பேசுபவர்களுக்குக் காண்டேர்கார், நிலமும் இகாயமும் என்ற ஓர் உவமை மூலம் அறிவுறுத்தும் தன்மை, ரசமாக இருக்கும் அவர் கேட்கிறார்.

“வாழ்க்கை என்றால் நிலம். கன்னங்கரிய மேடும் பள்ளமுமான சத்தையும் கூளமும் நிரம்பிய நிலம். ஆனால் அதிலிருந்துதான் தானியம் விளையும், கலை என்பது இகாயத்தைப் போன்றது. இகாயத்தில் நட்சத்திரங்கள் பிரகாசித்தாலும், பழங்கள் பூமியில்தான் பழுக்கின்றன.

ஆனால், அவைகளைப் பழுக்க வைப்பது எது? இகாயத்திலிருந்து மழையே பெய்யாவிட்டால்?

இகாயத்துக்கு மழை எங்கிருந்து போகிறது? பூமியிலிருந்து தானே? என்ன பதில் கூற முடியும், வறட்டு வேதாந்தக்கார்கள்!!

வாழ்க்கையைப்பற்றி முக்யத்துவம் கொடுத்துப் பேசலாம், எழுதலாம் ஐயா! ஆனால் வாழ்க்கை இன்பம் சூழ்ந்ததாக இருக்கவேண்டுமே, அதற்கு என்ன வழி? வாழ்க்கையிலே எப்படி இன்பம் வரச் செய்வது, என்று கேட்வர்கள் உண்டல்லவா, அவர்களுக்குக் காண்டேர்கார், வாழ்க்கைக் கீதத்தை விளக்குகிறார், ஓரிடத்தில்.

“வாழ்க்கைச் சங்கீதம் இரண்டு கம்பிகளின் இன்னிசையால் நிறுவப்படுகிறது. ஒன்று தொண்டு, மற்றொன்று அன்பு, தொண்டு உலகத்தைக் களிக்கச் செய்கிறது, அன்பு மனத்தைக் களிக்கச் செய்கிறது.”

இந்தத் தொண்டும் அன்பும்தான், வாழ்க்கைக் கீதத்தின் நரம்புகள், புஷ்பத்தின் உயிர், நறுமணம், வாழ்வின் மேன்மையும், அன்பு தொண்டு ஆகியவற்றிலே இருக்கிறது எவ்வளவு ஆழ்ந்த பொருள் உள்ள கருத்து.

வாழ்க்கைக் கீதத்தை விளக்கிவிட்டு, வெறும் இலட்சியவாதியாக இருந்துவிடவில்லை. காண்டேர்கார் இன்றைய சமூகத்தின் நிலை அவருக்கு விளங்காமற் போகவில்லை இன்று சுகம் அனுபவிப்பவர்கள் யார் என்பதையும் அவர் தெரிந்து கொள்ளாமல் இல்லை. நொந்த மனதுடன், நீங்களும் நானும், வாழ்க்கையின் ரசத்தைப் பருகும் வீணர்களைப் பற்றி என்ன கூறுவோமோ அதனைக் காண்டேர்கார் அழகுபட சுகம் என்பது ரசவாதிகளின் ரசக குளிகையைப் போல், கிடைப்பதற்கு அரிய ஒரு பொருள். அது கேவலம் கவிதையின் கற்பனையில்தான் கிடைக்கக்கூடியது. இவ்வுலகில் மனிதத் தன்மைக்கும் சுகத்துக்கும் சம்ப்நதமே இல்லை. இவ்வுலகில் சுகமாக இருக்கவேண்டுபவன் புலியைப் போல மற்றவர்களின் ரத்தத்தைக் குடிப்பதையே ஆனந்தமாகக் கருதவேண்டும். நியாயம், தியாகம் கடமை, மனிதத்தன்மை, நாணயம், நம்பிக்கை ஆகிய சொற்களை மறக்க முடியாதவன் இந்த உலகத்தில் சுகம் அனுபவிக்கத் தகுந்தவனல்ல! என்று கூறுகிறார். ஆஹா! எவ்வளவு சரியான சவுக்கு, பிறர் உழைப்பிலே சுகம் தேடுபவர்களுக்கு.

வாழ்க்கை, ஏழை மக்களுக்கு, பாட்டாளிக் குடும்பங்களுக்கு, எப்படி இனிப்பாக இருக்க முடியும்? சுகம் எது? சுபீட்சம் எது? நெஞ்சுருக்கும் அந்த நிலைமையைக் காண்டேர்கார் படம் பிடிக்கும் திறமையைப் பாருங்கள். ஒரு குடிசை வாசலில் காலியான மண்ணெண்ணெய்ப் புட்டியை வைத்துக் கொண்டு ஒரு ஸ்திரி உட்கார்ந்திருந்தாள், விளக்கு ஏரிப்பதற்குக்கூட அவளிடம் எண்ணெய் இல்லை.

மற்றொரு மண் வீட்டின் ஆசுத்தமான முற்றத்தில ஒரு குழந்தை தட்டிலிருந்த ரொட்டித் துண்டொன்றைக் கடித்துக் கொண்டிருந்தது. அதைச் சாப்பிட்டபின்பு தாய் அதற்குத் தண்ணீர் கொடுத்தாள். தட்டில் வேறு ஒன்றும் மிச்சமில்லை. தாய் தண்ணீரைக் குடித்துத் தன் வயிற்றை நிரப்பினாள்.

மூன்றாவது இடத்தில் பாதையில் விழுந்து கிடந்த வாழைத் தோலுக்காக இரண்டு குழ்நதைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. கடைசியில் பெரிய மனிதர்களும் வந்து சண்டையில் கலந்து கொண்டனர். அந்தச் சண்டையைத் தீர்ப்பதற்குள் எனக்குப் போதும் என்றாகி விட்டது.

மற்றொரு வீட்டில் ஒரு குழந்தைக்குக் கொதிக்கும் ஜ÷ரம். அதன் பெற்றோர்கள் ஆண்டவனை நோக்கிக் கைதொழுது கொண்டும், கலகலவென்று கண்ணீர் வடித்துக் கொண்டும் இருந்தனர்.

ஒருநாய் ஓர் எச்சிலையை வாயில் கவ்விக் கொண்டு போயிற்று. ஒரு பிச்சைக்காரன் அதைத்துரத்திக் கொண்டு ஓடினான். அந்த நாய் பாவம், ஆலையைப் போட்டுத் தாவி ஓடியது. பிச்சைக்காரன் அந்த ஆலையிலிருந்த எச்சிற் பருக்கையை வாயில் போட்டுக் கொண்டான்.

இவை சுதேசி சினிமா! நாம் நித்தம் காண்பது இவைகளுக்குக் காரணம் என்ன? கலாவாணர்கள் ரோஜா, மலருவதற்குக் காரணம் கண்டுபிடிக்க முனைந்தனர், அந்திவானமே! உனக்கு அழகு தந்தது யார், என்று கேட்க முனைந்தனர். எச்சில் ஆலை நாயோடு போராடும் மனிதனே! நீ இந்தக் கதிக்கு ஆளானது ஏன் என்று கேட்க மறுத்தனர். கேட்கக் கூடாதாம், கேட்டுவிட்டால் கலைகெட்டு விடுமாம், கேவலம், பிரச்சாரமாகி விடுமாம்! இந்தக் கலவாணர்களுக்குக் காண்டேர்கார், சரியாக்க கசையடி தருகிறார்.

அப்பா கலைவாணா! இப்படி வா! உன் கலை இருக்கிறதே, அது எங்கே இருந்து வந்தது? என்று கேட்டுப் பதிலும் கூறுகிறார். கலை கலை என்று கூவுபவர்கள் நாணும்படி.

“தொழிலாளிகளின் வாழ்க்கையில் பாலியம், இளமை, மூப்பு என்ற படிகளே இல்லை. கை, கால்களை ஆசைக்கத் தெரிந்ததோ இல்லையோ உடனே ஒவ்வொரு ஜீவனும் வேலை செய்ய ஆரம்பித்துவிட வேண்டும், இந்த வேலை கைக்கால்களில் ஆசைவு நிற்கும் வரையில் நடக்க வேண்டியது, செக்கைப்போல உழைக்க வேண்டியது. இந்தச் செருக்கிலே எருதுகள் உழைப்பதோடு போவதில்லை. இட்டும் கொப்பரைக்கும் எருதுகளைப் போலவே இரத்தமும் மாமிசமும் உண்டு. இதிலிருந்து இடி எடுத்த எண்ணெய் எதற்குத் தெரியுமா? கலை என்ன, சாஸதிரம் என்ன, தர்மம் என்ன, கலைப்பண்பு என்ன - இவற்றை எல்லாம் பற்றிச் சிந்தனைகள் செய்து செய்து கொதித்துப்போன உயர் வகுப்பாரின் மூளையைச் சாந்தமாக்குவதற்கு அந்த எண்ணெய் வேண்டும்.

கூழுக்கே தாளம்போடும் இடத்திலே கலை எது? கல்வி எது? குழந்தைகள் முதல் கிழவர்கள் வரையல் வேலை செய்துங்கூடச் சாப்பாட்டு நேரத்துக்குத் தகறாருதான். ஆகவே, பணம் செலவழித்துக் கல்வி கற்கும் சக்தி எத்தனை பேரிடம் இருக்கும்? இப்படிக் கோடிக்கணக்கான னங்கள் மிருகங்களைப் போலக் காலம் தள்ளுவதால்தான் உயர் வகுப்பினரின் கலையும் சுகபோகங்களும் நடக்கின்றன. சில நோ;யகிளல் நோயாளியைப் பிழைக்க வைப்பதற்காக ஜனங்கள் தம் ரத்தத்தைக் கொடுப்பது உண்டு. தொழிலாளி வர்க்கம் தலைமுறை தலைமுறைகளாக உயர் வகுப்பாருக்கு இந்த இரத்தத்தை வேண்டிய மட்டும் கொடுத்து வந்திருக்கிறது. ஆனால் அப்படி இரத்தத்தைக் கொடுத்துக் கொடுத்து இப்போது இதுவே சாவை நீட்டிவிட்டது அல்லவா?

பாட்டாளிகளின் இரத்தமப்பா, உன் காவியம், சிற்பம், ஓவியம் என்பன போன்றவை! கலையின் நலைபற்றிக் களிப்புடன் பேசுகிறாயே, அந்தக் கலைக்குத் தண்ணீர், பாட்டாளியின் பச்சை இரத்தம், பரம்பரை பரம்பரையாக அந்த இனம் கொட்டிய குருதியிலே உன் கலை, முளைத்தது, தெரிந்து கொள் என்று எச்சரிக்கிறார்.

கலாரசிகர்களுக்கு, இதவன் உதயம், நிலவின் எழில், மலரின் அழகு போன்றவைகளிலதானே பிரேமை. அதே, காட்சிகளையே காண்டேர்கார் காட்டுகிறார், அவர்களுக்குப் பாடம் கற்பிக்க, சுகந்தப் புஷ்பங்களைக் காட்டிக் கூறுகிறார்.

“தொழிலாளிகள் யாவருமே இந்த ஸø÷ரங்கி மொட்டுக்களைப் போன்றவர்களே அல்லவா? உலகில் பிறப்பதும் யாருக்காவது தன் உடலிலுள்ள ரத்தத்தைக் கொடுத்துவிட்டுச் சாவதுமே அவர்கள் வாழ்க்கை பூவின் வாழ்விலுள்ள ஆனந்தம் இந்த மொட்டுக்களுக்குக் கணநேரமாயினும் கிடைத்திருக்கமா?

படி ஓரணா விலைக்கு இந்த மொட்டுகள் யார் மடியிலும் போய்விழும். நாளைக்கு இவற்றிலிருந்து அத்தர் இறங்கியதும், அதை வாங்குவன் இஹஹா! அத்தரின் மணம் எவ்வளவு நேர்த்தி! என்று போற்றுவான். அவனுடைய அந்தப் போற்றுதலினால், பலியான இந்த மொட்டுக்களுக்கு என்ன உபயோகம்?

பிறருக்குப் பயன்பட்ட பரம்பரையல் உதித்த பாட்டாளிகளுக்குத் தங்கள் சக்தி தங்களுக்கே தெரியவில்லை அல்லவா? காண்டேர்கார் கூறும் இந்த வாசகங்கள், அவர்களை விழிப்பும் எழுச்சியும் பெறச் செய்யுமல்லவா! புரட்சி வாடை வீசும் செற்கள், காண்டேர்காரின் ஏடுகளிலே ஏராளம். அவை பாட்டாளிகளின் வெற்றிக்குத் தேவையான புது முறுக்குத் தரும் சக்தி வாய்ந்தவை.

உயர் வகுப்பினரின் வாழ்க்கை நிலவுபோலத்தானே இருக்கிறது? இந்த நிலவு பார்ப்பதற்கு எவ்வளவு ஆழகாக, எவ்வளவு சாந்தமாக இருக்கிறது ஆனால், சூரியனே இல்லாவிட்டால் சந்திரனுக்கு ஒளி எங்கிருந்து கிடைக்கும்? ரத்தத்தை நீராக்கும் தொழிலாளிகள் இல்லாமற் போனால் உயர் வர்க்கத்தினரின் சுகபோகங்கள் நடக்குமா? கலை சௌந்தர்யம், கலைப்பண்பு இந்த பொற்சகலசம் பார்ப்பதற்கு அழகுதான் ஆனால் கீழே கோயில் முழுவதும் உறுதியும் கரடு முரடுமான கற்களாலேயே கட்டவேண்டி இருக்கிறது. அந்தப் பொன்னைப் போலவே - இன்னும் கேட்டால் அதையும்விட அதிகமாக - இந்தக் கற்களையும் கவனிக்க வேண்டியதுதான், என்று கூறுகிறார், பாட்டாளிகளின் உழைப்பின்மீதே உன்னதமானத என்று பலரும் போற்றும் கலை கட்டப்பட்டிருக்கும், உண்மையை புரட்சிக் கவிஞரின், கவிதை மணம், காண்டேர்காரின் உரைநடையிலே தவழ்கிறது என்று கூறலாம்.

தொழிலாளி என்றால் உயிருள்ள ஒரு யந்திரம்! இந்த உயிருள்ள யந்திரத்துக்கு உயிரில்லாத யந்திரத்துக்குப்படும் அவ்வளவு அக்கரைகூட யாரும் எடுத்துக் கொள்வதில்லை அவனுடைய சாப்பாடு துணிமணிகள் வைத்தியம் மருந்துகள் எல்லாம் எவ்வளவு மோசமானவை. ஏழைமை பரம்பரையாகத் தொடர்ந்து வரும் நோய். இந்த ஒரு நோயிலிருந்து துர்ப்பழக்கம், திருட்டு, துர்ப்புத்தி முதலிய 72 வகையான நோய்கள் உண்டாகின்றன.
பணம் இல்லாதவன் மிருகம் - பணம் படைத்தவன் ராட்சதன் உலகத்தில் உண்மையான மனிதன் கண்ணுக்குத் தென்படுவதான் அரிதாக இருக்கிறது. குடி, கூத்தி, பந்தயம், போட்டி, இவ்வெல்லாத் துர்ப்பழக்கங்களுக்கும் வேர் இந்தப் பணவிசனமே. வேறுபாட்டுக்குக் காரணம் பணம், தன்னலத்துக்குக் காரணம் பணம், உலகத்திலுள்ள எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பேர்களின் கையில் உருளும் பணந்தான். இன்றயை உலகத்திலள்ள பணம் சிறு குட்டையில் தேங்கிய நீரைப்போலல்லவா இருக்கிறது? குடிப்பதற்கு இந்த நீர் உபயோகம் இல்லை. மாடுகளுக்கு உபயோகம் இல்லை, ஊர் வந்து செல்லும் சதுசதுப்பான விஷக் கிருமிகளின் முட்டைகள் மடடுமே இதில் நன்றாக வளர்கின்றன. இந்தக் கிருமிகள் பரவிய உடனே, இதன் அக்கம்பக்த்திலுள்ள ஜனங்கள் நொடி நேரத்தில் பொட்டுப் பொட்டென்று சாவில் வியப்பு எது? என்று கேட்கிறார் காண்டேர்கார். மனிதனல்ல, யந்திரம் பிறருக்குப் பயன்படும் யந்திரம் என்று பாட்டாளி உலகுக்கு அறிவித்து, அவர்களைப் புரட்சி உருவனராக்கும் பணியினை அருமையாகச் செய்கிறார் . வாழ:வு பொய்யல்ல, நிஜம்! வாழ்வு மாய்கையல்ல, நல்லது பெறச் சந்தர்ப்பம், வாழ்வுக்கு இரு நரம்புகள், ஒன்று தொண்டு மற்றொன்று அன்பு, இவை இரண்டு மீட்டப்படுவதால் வாழ்க்கைக்கீதம் கிளம்பும் ஆனால் அந்த இன்னசûயை அனுபவிக்க முடியாதபடி, சமூகத்திலே இருபரம்பரைக்ள, இருதுருவங்களிலே இருப்பதால், வாழ்வு வெறுங் கோயிலாகி, களிப்பு கருகிய மொட்டாகிய விடுகிறது, மக்கள் சுகம் எங்கே? என்று தேடி அலைகிறார்கள், எங்கும் ஏரிநட்சத்திரமே காண்கின்றனர், புயலும் படகும் போல, சுயநலமும் இலட்சியமும் போதுவது காண்கின்றனர் - இதுவே காண்டேர்காரின் கருத்து. உஷா ஆனந்தன் முத்தண்ணா, கருப்பன் என்று பலப்பல காதபாத்திரங்களை நம் முன்கொண்டுவந்து நிறுத்தி வைத்து அவர்களûக் கொண்டு கூற வைக்கும் கருத்து, இவைகளே கதாபாத்திரங்கள் அவ்வளவும், காண்டேர்கார் அமைக்கும், மேடைமீது ஏறி நின்று, புரட்சி முழக்கம் செய்யும் பிராசகரகர்கள்!

இவ்வளவு கொடுமைகள் இருந்தும், ஏன் இந்த மக்கள், பிறரால் சுரண்டப்பட்டு, சுருண்டுபோகிறார்கள்? ஏன் புரட்சி உணர்ச்சி தோன்றவில்லை? இதே கேள்விகள் நமக்குப் பல தடவை தோன்றுகின்றதல்லவா? இதுவரைக் கலைத் துறையின் காவலர்களாக இருந்தவர்கள், இதெல்லாம் கர்மம் என்றனர், சிலர், வெறும் மனப்பிராந்தி என்றனர், புரட்சிக்கவி பாடினார் பாரதிதாசன் அவ்விதமே உரைநடையில் கூறுகிறார் காண்டேர்கார்.
புரட்சி செய்ய வேண்டியதுதான், கொடுமைகள் பொடிபட, புது உலகு தழைக்க ஆனால், அவர்களால் முடியாது என்று காண்டேர்கார் உள்ளம் உருகும் முறையிலே எடுத்துக்கூறி அவர்களால் டியாது என்பதானல், கைகட்டிக் கொண்டு வாய்பொத்திக் கொண்டு நீ இராதே, இந்தப் பணி உன்னுடையது, மகத்தான வேலை உன்முன் இருக்கிறது, என்று நமக்கெல்லாம் அறிவுறுத்தும் முறையில் கூறுகிறார்.

புரட்சி செய்வதற்கும், போரும் சச்சரவும் நிகழ்த்தி அதில் வெற்றி பெறுவதற்கும் வேண்டிய தைரியம் இவர்களிடம் எது? தம் வேலைக்காரர்கள் பயங்கொள்ளிகளாக இருப்பதற்கு வேண்டிய முயற்சிகளையே எஜமானர்கள் எப்போதும் செய்து வருகிறார்ள். கஷ்டப்பட்டு வாழும இந்த மனிதர்களுக்கு எழுதப்படிக்கத் தெரிவதில்லலை. மனிதனின் விதி அவனுடைய தலை எழுத்தில் இல்லை. அவனடைய மனோபலத்தில்தான் இருக்கிறது என்ற விஷயம் இவர்களுக்குப் புரிவதில்லை. ஆண்டவனுக்கு எப்போதாவது நம்மீது இரக்கம் பிறக்கும் என்ற பைத்யக்கார ஆசையும் இவர்களை விட்டு விலகுவதில்லை. அப்படி இருக்க, எந்தச் சமுகத்துக்காக நாம் செத்துச் சுண்ணாம்பு ஆகிறோமோ அந்தச் சமூகம் நாம் உயிர் வாழ்வதற்குரிய சாôரணமான சுகங்களைக் கூட நமக்கு அளிப்பதில்லை, என்பதைப் பற்றிக் கிளர்ச்சி செய்யும் அறிவு எங்கிருந்து வரும்?

மிதிப்பட்ட ஜனங்களை விழிக்கச் செய்வது, மனிதரக்ள் என்ற முறையல் அவர்கள் தமக்கு உரிமையானவற்றைப் பெறுவதற்காக்ச் சச்சரவும் நெருக்கடியும் போரும் விளைவிக்கவும், சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தாற்போல், அப்போர்களிலே, தங்கள் உல்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் அவர்களைத் தயார் செய்வது, எவ்வளவு பெரிய வேலைகள், நம் தலைமுறைக்கு இருக்கின்றன. என்று கூறுகிறார்.
இவ்வளவு விளக்கமாக கூறினாலும், நம் நாட்டு மேதைகள் கல்வி பரவினால், எல்லாப்பிணியும் ஆகலும், என்று கூறுகிறார்களல்லவா! காண்டேர்கார் அவர்களையும் விடவில்லை, கல்வி வரட்டும் என்று காத்திருந்து பயன்இல்லை, கல்வி வராதபடி ஒரு தடை இருக்கிறது என்று காட்டுகிறார்.

கல்வி என்பது தண்ணீர்! அதைச் சமூக விருட்சத்தின் வேரில் ஊற்றினால் நம்வேலை ஆகிவிட்டது என்று நினைத்தேன். ஆனால் இந்த மரத்தின் வேரிலுள்ள ஜாதித் துவேஷமும், பேதபுத்தியும் பணத்துக்கு அடிமைத்தனமுமாகிய புழுக்களா அதை வளரவிடப் போகின்றன? இந்தப் புழுக்கள் சாகவேண்டும். ஆவற்றைக் கொல்ல வேண்டும் என்று கூறுகிறார். இனி என்ன வேண்டும், காண்டேர்கார் மராட்டிய பாரதிதாசன், உரைநடைப் பாரதிதாசன் என்று உவகையுடன் கூற.

(திராவிடநாடு - 21.7.46)