அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கூனூரில் கூடாதாம்!

கூனூரிலுள்ள உணவு சத்து ஆராய்ச்சி நிலையத்தை ஹைதராபாத்துக்கு மாற்றும் யோசனையைக் கைவிடும்படி கேட்க 9-7-52ல் சுகாதார மந்திரியைப் பேட்டிக் கண்டனர். தமிழ்நா்டுட உறுப்பினர்கள் டில்லி மந்திரியாரோ, மறுத்துவிட்டார்.

தோழர் பேபி கந்தசாமியும், மற்றம் தோழர்கள் எஸ்.வி.இராமசாமி, வி.வி.ஆர்.என்., ஏ.ஆர்.நாகப்பா, சி.ஆர். நரசிம்மன். எம். சந்திரசேகர், பி.கக்கன், எஸ்.பாலசுப்பிரமணியம், கே.சக்திவடிவேல், பி.நடேசன், என்.சத்தியநாதன், ஏ.ஜெயராமன் ஆகியோரும் கையொப்பமிட்டு அனுப்பியிருந்த விண்ணப்பத்தின் கருத்தைக் கீழே காணுங்கள்.

“சென்னை ராஜ்ய உறுப்பினர்களான நாங்கள், கூனூரிலுள்ள உணவு சத்து ஆராய்ச்சி நிலையத்தை வேறொரு இடத்திற்கு மாற்றுவதை எதிர்க்கிறோம். இது சம்பந்தமாக சபையில், சுகாதார மந்திரி 23-6-52ல் 1131ஆம் கேள்விக்கு பதில் தரும் முகத்தான் தந்துள்ள காரணங்கள் தெளிவாகவோ, திருப்தி தருவதாகவோ, உண்மையானவையாகவோ தெரியவில்லை. மத்திய சர்க்காரின் பணஉதவியோடு நடைபெறம்நிலையம் சென்னை ராஜ்யத்தில் அது ஒன்றே ஒன்றுதான் என்று கருதுகிறோம். அது அங்கு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. ‘இந்து‘ பத்திரிகையில் இதுபற்றி எழுதப்பட்டுள்ளதால், இடம் மாற்றும் யோசனைக்கு எதிர்ப்பாகவே மக்கள் கருத்தும் இருக்கிறது. ஆகவே, இதுபற்றி மீண்டும் யோசைனை செய்து, இடம் மாற்றும் யோசனையைக் கைவிடும் படி வேண்டுகிறோம்.

விண்ணப்பம் சென்றது – அழைப்பு வந்தது, மந்திரி யாரிடமிருந்து சென்றனர் கண்டனர். ஆனால், முடியாது மாற்றித்தான் ீதுருவோம் என்ற மமதையான பதிலைக் கேட்டுத் திரும்பினர் திராவிடத்தின் நிலை இது – தெரிந்து கொள்ளுங்கள்.

திராவிட நாடு – 20-7-52