அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குன்றத்தூர்

குன்றத்தூர் கோரத் தாண்டவம் நடாத்திய அகிம்சா மூர்த்திகள், கொடுமையையும் புரிந்துவிட்டு நமது தோழர்கள் பலரைக் கைது செய்து, அவர்தம் மீது வழக்குத் தொடர்ந்து, நடத்தி வருவதைத் தோழர்கள் அறிவர். தோழர்கள் என்.வி.நடராசன் உள்ளிட்ட பல தோழர்கள்மீது தொடரப்பட்ட அந்த வழக்கு, இன்னும் முடிந்த பாடில்லை – பூந்தமல்லி, சைதாப்பேட்டை வேலூர் என்று ஒவ்வொரு என்று ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் கொண்டேயிருக்கிறது. குண்டுகளையும் வீசி, நம்மைக் கொடுமைக்கும் ஆளாக்கிவிட்டு, வழக்கும் தொடர்ந்த, இந்த விசித்திரம் பற்றி நாடே சிரித்தது – வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஆனால், காங்கிரஸ் ஆட்சிபீடமோ, உயிரிழந்த இத்ந நேரத்திலும், எதிர்க்கட்சிகளுக்குத் தாம் இழைத்த கொடுமைகளை எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை.

திராவிட நாடு – 17-2-52