அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குறிப்புகள் 1

“சென்னை மந்திரிசபை, உழவர்கள் கஷ்டத்தைப் போக்க, ஏதும் தெரியவில்லை. தானியக் கொள்முதலியோ, விவசாயிகளுக்கு வீண் தொல்லையாகிவிட்டது. மந்திரிகள், தந்ரிகள் தந்ததவறான அடிப்படைக் கொள்கைகளை வைத்துக் கொண்டு வேலை செய்கின்றனர். அதிகாரிகளோ தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.”

இன்று, மாஜிமந்திரி தோழர் குமாரராஜா, ட்.டூ.ச் அவனாசி தாலூகா விவசாயிகள் மாநாட்டிலே, நவம்பர் 23ந் தேதி பேசினார்.

தோழர் குமாரசாமி ராஜா, இவ்விதம், ஒரு மாநாட்டிலே, தமது கட்சி அமைத்து நடத்தி வரும் சபையின் போக்கைக் கண்டித்துப் பேசியது, கேட்டும், மந்திரி சபை, என்ன செயமுடிந்தது? திருடனைத் தேள் கொட்டியதுபோல் என்ன செய்வான்! மாஜி மந்திரி இவ்விதம் பேசினபோது, இன்றைய மந்திரி ஒருவரும் கேட்டுக்கொண்டுதான் வந்தார்! இந்தநாட்டிலே, நியாயமானதையும் எவர் கூறினாலும், தாக்கத் துடிக்கம் ‘பேனா வீரர்கள்’ - தங்கள் சந்தோஷத்தையும் அடக்கி“ கொண்டு, இதுபற்றி எழுதாமலே இருந்து விட்டனர் வெட்கமோ துக்கமோ நாமறியேன்.

மாஜிமந்திரியும், மந்திரிசபை மீது இவ்வளவு பலமான தாக்குதலைப் பகிரங்கமாகச் செய்தாரேயொழீய, இந்த நிலையை போக்க வழி என்ன என்பதைக் கூற மறந்த அவருக்கும் அச்சம் இருக்கும் போலும்! கட்டுப்பாடு! ஒழுங்கு நடவடிக்கை!! என்று மிரட்டியிருப்பார்கள் போலும்.
***

பாகிஸ்தானில் உள்ள காங்கிரஸ் கட்சி, இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனித்து இயங்க வேண்டுமென்ற எண்ணத்தை, சிந்து மாகாணத்திலுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கிறார். இதுபோலவே, திராவிடஸ்தான் பிரச்னை வெற்றிகரமாக நிறை வேறிவிட்டதால், இனி அகில இந்தியமுஸ்லீம் லீக் தீர்மானம் நிறைவேற்றத் தீர்மானித்திருக்கிறது. அவருக்குப் பிறகு படை கலைக்கப்படுவது பல வேலை முடிந்த பிறகு, இந்த தீர்ப்புகள்’ தேவைதான், என்றகருத்து உருவாகிவிட்டது. ஏற்கனவே பல இடங்களிலே, லீக் கலைக்கப்பட்டும் வருகிறது.
***

ஹைதராபாத் சமஸ்தானத்துக்க இந்திய சர்க்காருக்கும், நடைமுறை ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இதன்படி, இந்திய சர்க்கா, நிஜாமின் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அதிலே மிக முக்கியமானது, சமஸ்தானத்துக்கு ஆயுதசப்ளை செய்ய இந்தியசர்க்கார் ஒப்புக்ö காண்டிருப்பதாகும். ஹைதராபாத்சமஸ்தானம், இரகசியமாக, வெளிநாடு
களிலிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது என்றோர் வதந்தி முன்பு உலவிற்று. இப்போது இந்த வதந்தியை வீழ்த்த, இந்திய சர்க்கார், தாங்களே, ஹைதராபாத்துக்கு, ஆயுதம் வழங்க இசைந்திருக்கிறது.

ஓராண்டுக் காலத்திட்டமாக உள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஒரு அரசுகளுக்கும் இடையே நேசம் வளர வழி செய்ய வேண்டுமானால், இந்திய சர்க்கார், உடனடியாக நிலைமையைச் சிக்கலாக்கக் கூடிய எதனையும் அனுமதிக்கக் கூடாது.

சமஸ்தானத்திலே பொறுப்பாட்சிக் கிளர்ச்சி மும்முரமாக நடைபெற்ற வந்த நேரத்தில், வகுப்புக் கலக பீதி முற்றிய சமயத்தில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சமயத்திலே, மேற்கொண்டு, பொறுப்பாட்சிக் கிளர்ச்சி நடைபெறவேண்டுமா, எந்த முறையில், எந்த அளவில், என்பன வற்றை இந்திய சர்க்கார் பரிசீலனை செய்திருக்க வேண்டும் செய்ததாகத் தெரியவில்லை.

சமஸ்தானப் பொறுப்பாட்சிக் கிளர்ச்சிக்கு தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சர்க்கார் பாஷையிலே பேசுவது; பிரச்னை மீது புகைப்படலம் போடுவதேயன்றி வேறல்ல.

சமஸ்தானப் பொறப்பாட்சிக் கிளர்ச்சித் தலைவர் ராமதீர்த்தா பட்டவர்த்தனமாகவே பேசுகிறார், கிளர்ச்சி ஓயாது என்று - சென்னையிலும் டெல்லியிலும். காந்தியார் முதற்கொண்டு, காமராஜர் வரையிலே சந்தித்துப் பேசி இருக்கிறார், பணஉதவி தேவை என்று கேட்டிருக்கிறார்.

ஒருபுறம் ஒப்பந்தம் என்ற அமைதியும் நம்பிக்கையும் தரும் நிலைமை - மற்றோர் புறமோ கிளர்ச்சிக்குரல்.

இந்திய பூபாகத்திலுள்ள, எல்லா முக்கியமான சமஸ்தானங்களும், பொறுப்பாட்சி வழங்கியுள்ள நிலையில், நிஜாம் மட்டும் தர்பார் நடத்திக் கொண்டிருக்க முடியாது. இதனை இந்திய சர்க்கார், தெளிவுபடுத்தி, நல்ல யோசனைகள் கூறிவிடவேண்டும்.

அதுபோலவே, ஒவ்வோர் நாட்டிலும், பெருவாரியாக உள்ள மக்களுக்கே, அதிகாரத்தில் பெரும் பங்கும், சிறுபான்மை யோருக்கு சிறு அளவும் தரப்படுவதே, அரசியல் நடைமுறை நீதி என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் இந்தக் காலத்தில், ஜனத் தொகையில் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லீம் களுக்குச் சமஸ்தானத்திலே, நூற்றுக்கு 50 விகிதம் அதிகார இடங்கள் தரும்முறை, நிச்சயமாகக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்திவிட வேண்டும்.

இந்த ஒரு பிரச்னைகளும், உள்ளே ஊசலாடிக் கொண்டிருக்கும் மட்டும், எதிர்காலம் நிம்மதியை அளிக்காது. அந்த சமஸ்தானத்திலுள்ள,பழயதர்பார் போக்கும், அங்கு கோரப்படும் அரசியல் அநீதியான சிறுபான்மையோருக்குப் பெரும்பான்மை அதிகாரம் தரும் முறையும், கேடு பயப்பது மட்டுமல்ல, வீணாகப் பாமர மக்களின் மனதிலே குரோத எண்ணத்தை மூட்டவே உதவுகிறது. தர்பார் முறை ஏழை எவருக்கும் நன்மையோ, மதிப்போ, தருவது அல்ல. ஏழை மக்கள் ஈடேற, தர்பார்முறை உதவிசெய்யவே முடியாது பாமர மக்கள் பாராளும் காலமிது; எல்லோரும் இந்நாட்டு மன்னர், என்பனபோன்ற கோட்பாடுகளை எவரும் மறுப்பதற்கில்லை. எனவே, ஹைதராபாத் ஆட்சி முறையிலே, தர்பார் போக்குமாறி, ஜனநாயகம் வளருவதும், அந்த ஜனநாயத்தில் பெரும்பான்மை யான எண்ணிக்கையுள்ளவர்களுக்கு அதற்கேற்ற அளவு அதிகாரம் கிடைப்பதும், மொத்த நன்மைக்குத் தேவை - மக்கள் ஆட்சிமலர அதுவே வழி. இந்தக் கொள்கையை மறைத்து, இந்து - முஸ்லீம் என்ற பேச்சுக்கு முதலிடம் வைத்து, பேசியும் எழுதியும், மக்கள் மனதைக்குழப்பும் பேர்வழிகளிடமிருந்து, பொதுமக்கள் தப்பவேண்டும். எனவேதான், ஒப்பந்த விதிகளிலே, இவைகளைச் சேர்த்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இடைக்கால ஏற்பாடாக உள்ள இந்த ஒப்பந்த காலத்தை, இதற்குப் பயன்படுத்துவதுதான், நல்லறி வுள்ளோர், நாட்டு மக்களைக் கேட்டினிலே ஆழ்த்த விரும் பாதோரின் செயலாக இருக்கவேண்டும்.
***

ஆந்திரப் பகுதியிலே அமைக்கப்பட இருக்கும் ராமபாத சாகர் (அணைக்கட்டு) திட்டத்துக்கு,127 கோடி ரூபாய் செல விடப்படும் என்று மந்திரி பக்தவத்சலம் குறிப்பிட்டுவிட்டு, இதற்காக, சர்க்கார், கடன் பத்திரங்களை வெளியிடக்கூடும் என்று ஜாடைகாட்டி இருக்கிறார். இவ்வளவு பெரும் தொகை செலவிட்டுக் கட்டப்படும் திட்டத்துக்கு, கடன்வாங்கிச் செய்யப் படும் திட்டத்துக்கு, இப்போது, ஆர்வமும் அவசரமும் காட்டப்படுவதைவிட, ஆந்திர மாகாணப் பிரிவினை உருவாவதைத் துரிதப்படுத்தி, ஆந்திரருக்கு என்று அமையும் சர்க்காரிடம் இந்த பொறுப்பும் பாரமும் உள்ள காரியத்தை ஒப்படைப்பது, நல்லது என்பது நமது கருத்து. நாடாள்வோர் யோசிக்கவேண்டுகிறோம்.
***

மேற்கு வங்காளத்தில் (இந்திய யூனியன்) பொதுஜன அமைதிச் சட்டத்தை எதிர்த்து, பலத்த கிளர்ச்சி நடைபெறுகிறது. தோழர் சரத்சந்திப் போஸ், இதனை முன்னின்று நடத்துகிறார். போஸ் கட்சியினர், கம்யூனிஸ்டுகள், சோஷியலிஸ்டுகள் தொழிலாளர், மாணவர், மற்றும் பல முற்போக்குச் சக்திகள் யாவும், கூட்டாக இதிலே கலந்துள்ளன. சட்டசபை முன்னால் மறியல் நடைபெற்று, போலீஸ் தடியடியும், துப்பாக்கிப் பிரயோகமும் ஏற்பட்டிருக்கிறது. 20 பேருக்க மேல் காயமடைந் தனர். ஒருவர் மாண்டார். இங்கு காங்கிரசாட்சிதான் நடைபெறு கிறது. அன்பர் ஆச்சாரியார் தான் கவர்னர்!
***

அன்பர் ஆச்சாரியாரின் 70-வது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னையில் சிறப்பான முறையிலே விழாக் கொண்டாடப் பட்டது. முதலமைச்சர் உட்படப் பலரும், ஆச்சாரியாரின் அருங்குணங்களைப் பாராட்டினர். அவர்களுக்கு நன்றி கூறி, ஆச்சாரியார் எழுதிய பதிலில், எனக்கு 70 வயது ஆகவில்லை!! என்று குறிப்பிட்டிருக்கிறார்.

(திராவிட நாடு 14-12-1947)