அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாரதவீரர்! சமரசத்தூதர்! சாணக்கியர்!
ஆச்சாரியார் அவதார லீலைகள்!
லீகை முறியடிக்க வீண் முயற்சி!
காரணமற்ற, கட்டுப்பாடற்ற, எல்லையற்ற தூற்றுதலே, ஜனாப் ஜின்னாவை முஸ்லிம்களின் போற்றுதலுக்குரிய தலைவராக்கிற்று. ஜனாப் ஜின்னா சுயராஜ்யம் வருவதைத் தடுக்கிறார், முட்டுக்கட்டையாக இருக்கிறார், என்று காங்கிரஸ் ஏடுகள் தூற்றியபோதெல்லாம், அந்தவசை மொழிகள், ஜின்னாவை அழித்துவிடும் என்று எண்ணினர். அரசமரத்தைச் சுற்றிய அம்மையி; அடிவயிறுகனக்க முடியுமா! அதுபோலாயிற்று அவர்களின் நினைப்பு! அதைவிட வேறோர் விசித்திரமான விளைவு, அவர்கள் துளியும் எதிர்பாராத விளைவும் ஏற்பட்டது. ஜனாப் ஜின்னா, சுயராஜ்யத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்று கூறினபோது, அவரைத் தூற்றுவதாகக் காங்கிரசார் எண்ணினர். உண்மையில் என்ன நேரிட்டது? மகாத்மாக்களும் பண்டிதர்களும் சர்தார்களும் சத்யாக்கிரகிகளும் பிர்லாபஜா ஜுகளும் அவர்களின் சல்லாபக்கருவிகளான பத்திரøக்காரர்களும், சகலரும் சேர்ந்துநடத்தும் ஒரு பெரிய இயக்கத்தை, ஒரே ஒரு ஆள் கெடுக்கமுடிகிறது! சுயராஜ்ய இரதத்தை இவ்வளவு பேர் சேர்ந்து இழுக்கிறார்கள். ஜின்னா எனும் ஒரேமுட்டுக் கட்டையின் பலனாக இரதம் நின்றுவிடுகிறது! என்று கூறப்படுகிறதே, இந்த ஒரு ஆசாமி எவ்வளவு பலவானாக இருந்தால், திறமையுள்ளவராக இருந்தால், இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்யமுடியும் என்று பலரைச் சிந்திக்கச் செய்தது. ஜனாப் ஜின்னா, காந்தியார், அவருடைய சீடகோடிகளின் அனைவரையும்விட, வல்லமை பொருந்தியர் என்ற எண்ணத்தை நிலைநாட்டிற்று தூற்றித் தீற்றி ஜனாப் ஜின்னாவை, மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். மக்கள் மட்டுமல்ல சர்க்காருங் கூடக் காங்கிரசை திணறச் செய்கிறாராமே இந்தத் தனிமனிதர்அப்படியானால் இவர் அபாரசக்தியுள்ளவராகத் தானே இருக்கவேண்டும், ஆகவே அவருடைய சமம்பெறாத அரசயில் திடடத்தைப் புகுத்திப் பயன் இல்லை என்று தீரு“மானங் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. காங்கிரஸ்களின் நிந்தனையே, வந்தனை வழீபாட்டுக்குரியவர் என்ற அளவுக்கு ஜனாப்ஜின்னாவைக் கொண்டுவந்தது.

படிப்படியாக முஸ்லிம் கோரிக்கை பாகிஸ்தான் எல்லைக்குச் சென்றது. இந்தப் பயணத்தைத் துரிதப்படுத்தினது, காங்கிரசின் ஆட்சிப் போக்கு. எனவேதான் காங்கிரஸ் ஆட்சி நீங்கியதும் ஜனாப்ஜின்னா, “விடுதலைவிழா” கொண்டாடினார். பாகிஸ்தான் தீர்மானம் லாகூரிலே உருவானதும், காங்கிரஸ், அந்தப் பிரிவினையைப் பலமாக எதிர்த்தது, எதிர்ப்புக் கட்சியின் தலைவராக இருந்து இராஜகோலாச்சாரியார், தீப்பொறி பறக்கப்பேசினார். பாரதமாதாவை வெட்டுவதா என்று கேட்டார். முஸ்லிம்களின் ஸ்தாபனமாலீக்? லீக்கிலேயா எல்லா முஸ்லிமும் உள்ளனர்? லீகை எதிர்த்துப் பலமுஸ்லிம் ஸ்தாபனங்கள் உள்ளன, தேசீய முஸ்லிம், அஹ்ரார், மஜ்லீஸ், மோமின், என்றுபல கட்சிகள் உள்ளன என்றார். அதாவது ஜனாப் ஜின்னா முஸ்லிம்களின் சார்பாகப் பேச உரிமையற்றவர் என்றும் லீக் முஸ்லிம்களின் பிரதி நிதி ஸ்தாபனமாகாது என்றும் கூறிப்பார்த்தார். ஆளும் கூட்டத் தாருக்கும், வெளிஉலகுக்கும் சொக்குப்பொடி வீசக் கருதிய காங்கிரஸ் மௌலானா அபுல்கலாம் அஜாது அவர்களைக் தலைவராகக் கொண்டது. இனி முஸ்லிம்கள், லீகில் இருக்க மாட்டார்கள், மௌலானாவைப்பின்பற்றி அவர்களும் காங்கிரசிலே சேருவர் என்று எதிர்பார்த்தனர். ஏமாற்றமே அடைந்தனர். மௌலானா அபுல்கலாம் அஜாத்காங்கிரஸ் தலைவரான பிறகும், முஸ்லிம் லீக் பலம் குன்றாமல் இருந்ததுடன், மேலும் ஓங்கிவளர ஆரம்பித்தது. இது உலகுக்கு, முஸ்லிம்களுக்கு லீகினிடம் உள் ளபற்றும், ஜனாப் ஜின்னாவிடம் உள்ள நம்பிக்கையும் மிக அதிகம், மகாத்மா - மௌலானா கூட்டுறவாலும் பிளச்சமுடியாத அளவு பலமுள்ளது என்பதை விளங்கிற்ற. பண்டித ஜவஹல், முஸ்லிம் மக்களோடு தொடர்பு வைத்துக் கொண்டால் ஜின்னா போன்ற தலைவர்களின் பிடிதானாகத்தனர்ந்து விடும் என்று தத்துவம் பேசினார், திட்டம் தயாரித்தார். பலிக்கவில்லை ஒவ்வொரு இடைக்காலத் தேர்தலிலும் லீக் வெற்றிபெற்றது. லீகின் சக்தி, மறைக்கமுடியாத அளவு வளர்ந்துவிட்டது. இதற்குக்காரணம், சில இடங்களிலே முஸ்லிம் மந்திரிசபைகள் இருப்பதுதான் என்ற எண்ணிய காங்கிரஸ், மந்திரிசபைகளில், ஆட்டம் உண்டாகும்படி பலதந்திரங்களைச் செய்தது, சிலசமயம் ஆட்டம் ஏற்பட்டது, லீகுக்கு அல்ல, மந்திரிசபைகளுக்கு. இந்நிலையிலே முஸ்லிம் லீக், ஓங்கிவளர்ந்துவிட்டது, இனி அதனை எதிர்த்துப் பயனில்லை என்று எண்ணினார் ஆச்சாரியார். உறவாடிப் பார்ப்போம் என்று யோசித்தார்! கனிமொழி பேசலானார். பாகிஸ்தானை ஆதரிக்கத் தொடங்கினார்!!

எந்த ஆச்சாரியார், பாகிஸ்தானைப் பழீத்துப் பேசினாரோ, அதே ஆச்சாரியார், பாகிஸ்தானுக்கு இணங்கித் தீரவேண்டும், நாடு சீர்படவும் சுயராஜ்யம் பெறவும், வேறு மார்க்கமில்லை, என்று பேச ஆரம்பித்தார். இந்தியா ஒருநாடல்ல, பலஇனங்கள் கொண்ட உபகண்டம், முஸ்லிம்கள் கேட்பது தவறல்ல, அதுதான் உண்மையான ஜனநாயகம், சுயநிர்ணய உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு, என்று பேசினார். பூகோளப்படத்தை நம்பி மோசம்போக வேண்டாம், இந்தியா எந்தக் காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை என்றார். ஜனாப் ஜின்னாவின் “பாகிஸ்தான் பாலபாடத்தை”ப்படித்துத் தேறினார் ஜனாப் ஜின்னாவுடன் பேசினார். பாகிஸ்தானுக்கான சமரசத்திட்டம் தீட்டினார். அதைக் காந்திருயாருக்குக் காட்டினார். காந்தியாரை ஜனாப் ஜின்னாவின் மாளிகைவாயற் படியிலே கொண்டு போய் நிறுத்தினார்! உலக முழுவதற்கும், பல கோடி ரூபாய் செலவிலே பிரச்சாரம் செய்யப்பட்ட விஷயம், இந்தியாவின் ஏகப்பிரதிநிதி காந்தியார்தான், அவருடைய சிறுவிரல் அசைந்தால் போதும், நாடே சீறி எழும் என்பதாகும். பெரும் செலவிலே நடத்தப்பட்ட பிரச்சாரம் வீண்விரயம் என்பது ஆச்சாரியார் உலகுக்குக் கூறாமற் கூறினார்!! காந்தியார், ஜனாப்ஜின்னா மாளிகைக்குச் சென்ற சமயம், சாதாரணமானதல்ல! அன்றையத்தினமே காங்கிர1“, நாட்டுக்கெல்லாம் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனம் என்ற மாயாவாதம், மாண்ட நன்னாளாகும்! பலவருஷகாலமாகக் காந்திரஸ் ஏடுகள் ஜனாப்ஜின்னாவை ஏசிய “பரபத்தைக்” காந்தியார் கழுவச்சென்றார்! 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி அதாவது காந்தியார் ஜனாப்ஜின்னாவைச் சந்தித்த தினம் - காங்கிரஸ் பிராயச்சித்த தினம்!! ஜின்னா ஒரு ஏகாதிபத்ய தாசர்! லீக் ஒரு பதவி வேட்டைக் கூட்டம்! ஜன்னாழஸ்லிம்களின் உண்மைத் தலைவராகார், பாகிஸ்தான் ஒருபாதகத்திட்டம்!இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக வேண்டிய சுயராஜ்யத்தை ஒத்திப் போடுவதா?

என்றெல்லாம் எழுதிய பேனாவீரர்கள், தங்கள் ஆராதனைக்குரிய காந்தியார், ஜின்னா மாளிகைக்குச் சென்றபோது.

நாட்டின் இருதலைவர்கள் சந்திப்பு. காந்தி - ஜின்னா சந்திப்பு வெற்றிபெற வேண்டும்.

என்று “வெட்கமின்றி” எழுதின!! வெற்றிக்காகப் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தினர் காங்கிரசார்! எவ்வளவு தூற்றினார்களோ முன்பு அவ்வளவுக்கும் நஷ்ட ஈடுதருவது போலப் புகழ் மாலைதொடுத்துத் தந்தனர்! இவ்வளவு படுபாதனாத தோல்வி பத்திரிகை உலகுக்கு வேறு எங்கும் எப்போதும் ஏற்பட்டதில்லை என்று கூறலாம்!

இந்தியாவின் விடுதலை விஷயமாக, ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியென்ற முறையில் வைசிராயும், மக்களின் தலைவர் என்ற முறையில் மகாத்மாவும், கூடிப்பேசுவதே முறை என்று எழுதிய காலம் போய்விட்டது. காந்தி - இர்வின் ஒப்பந்தம் என்று பெருமையுடன் பேசிய காலம் போய்விட்டது. காந்தி - ஜின்னா பேச்சு நடைபெற வேண்டிய நாள் பிறந்தது; நாட்டுக்குத் தலைவர், ஒருவரல்ல, இந்தியா இந்தியரின் நாடல்ல, இந்து முஸ்லிம் எனும் இரு இனங்கள் இங்கு உள்ளன; இந்தியாவின் எதிர்காலத்தை ஒருகாந்தியார் தீர்மானித்துவிட்டால் போதாது, ஜின்னாவின் முத்திரை தேவை - என்ற அடிப்படையான உண்மைகளை - சுமார் இருபது ஆண்டுகளாக மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு உண்மைகளை - செப்டம்பர் 9-ந்தேதி உலகின் முன்பு, நின்று காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. ஜனாப்ஜின்னா ஒருவர் பிடிவாதம் காட்டினால் அதற்காக வைசிராய் வேவல் தமது திட்டத்தைக் கைவிட்டு விடுவதா என்று இன்று கேட்கும் வீராதி வீரர்கள் இதை உணரவேண்டும் ஜானப்ஜின்னாவின் சம்மதமின்றி எந்த அரசியல் திட்டமும் பயன்பெறாது என்ற முடிவை, வேவல், அந்த 9-ந்தேதிச் சம்பவ மூலம்தான் தெரிந்துகொண்டார்! மகாத்மா வந்து தீரவேண்டிய நிலைமையை உண்டாக்கிய மாளிகையை மன்னரின் பிரதிநிதி, புறக்கணிக்க முடியுமா?

பதினெட்டு நாளுக்குப் பிறகு, காந்தி - ஜின்னா பேச்சு முறிந்துவிட்டது. ஆச்சாரியாரின் மனக்கோட்டை இடிந்துவிட்டது. காங்கிரஸ் ஏடுகளின் போக்கும் மாறிவிட்டது. மீண்டும் தூற்றல் பிரசாரம் தொடங்கப்பட்டது! உலகும், எட்டினால் குடுமி! எட்டாவிட்டால் கால்! என்ற கொள்கையே இந்த ஏடுகளுக்கு உள்ளன என்பதைத் தெரிந்து கொண்டது. மின்டோ மார்லி சீர்திருத்த காலம் முதற்கொண்டு, போர்க்காலத்திலே தரப்பட்டு, நிராகரிக்கப்பட்ட கிரிப்ஸ் திட்டம் வரையிலே காங்கிரஸ், ஆரம்பத்திலே லீகைத்தாக்குவதும், பிறகு தழுவித் தம்பிமுறைகொண்டாடுவதும், அந்தத் தம்பி தனக்குரிய பங்கு கேட்கத் தொடங்கியதும், துஷ்டன் என்று மீண்டும் தூற்றித் துரத்துவதுமாகவே இருந்துவந்திருக்கிறது. இதன் பலனாக லீக்பலம் கெடவில்லø வளர்ந்துவிட்டது; வளர்ந்துள்ள நிலையிலே வேவல் மூலம் வலைவீசப்பார்த்தனர் சிம்லா மாநாட்டிலே! தோற்றனர்! தோல்வியால் திகைத்த நிலையில் மறுபடியும் தூற்றலை ஆரம்பித்துவிட்டனர், இந்தச் சமயத்திலே ஆச்சாரியார், ஆபத்தைத் தரக்கூடிய போதனையைச் செய்கிறார், பிரிட்டிஷாருக்கு! முஸ்லிம் லீக், இணங்கிவரவிட்டால் போகிறது! லீகை ஒதுக்கித் தள்ளுவோம்! அதைப் பற்றிக்கவலை வேண்டாம்! லீகைத் தாண்டிச் செல்லவேண்டும்! - என்று ஆச்சாரியார் பிரிட்டிஷாருக்கு உபதேசம் செய்கிறார்! அதாவது, லீகைச் சட்டைசெய்ய வேண்டாம்! நாம் இருவரும் ஒன்றுசேரு வோம் வாரீர் என்று பிரிட்டிஷாரை அழைக்கிறார். லீக், முஸ்லிம்களின் ஒப்பற்ற பிரதிநிதி ஸ்தாபனம் என்பதையும், ஜின்னாவுடன் சமரசம் செய்து கொள்ளாமல் சுயராஜ்யம் கிடைக்காது என்பதையும், பாகிஸ்தானுக்கு இணங்கித்தான் ஆகவேண்டும் என்பதையும் பிரச்சாரம் செய்த அதே ஆச்சாரியார் லீகைக்கவனிக்காமல் சர்க்கார் காரியம் செய்யவேண்டும் என்று பேசுகிறார். இந்தத் துணிவு, ஆச்சாரியாருக்கு மட்டுந்தான் வரமுடியும்! ஆனால் இந்தத் துரோகத்தை முஸ்லிம் உலகம் மறக்காது!! துணிந்து, இந்தத் துரோகம் செய்யும் ஆச்சாரியார், ஒருமுக்கியமான விஷயாத்தை மறந்துவிட்டார். இன்று அவர் செய்யும் காரியம் என்ன? வெளி நாட்டாருடன் கூடிக்கொள்ச் சம்மதிப்பது மட்டுமல்ல, ‘தன்னாட்டுத் தோழர்கள்” என்று எந்த முஸ்லிம்களைப் பாத்யம் கொண்டாடி வந்தார்களே அவர்
களைப் புறக்கணிக்கும்படி வெளி நாட்டு ஆட்சியாளருக்குக் கற்றுக் கொடுக்கிறார் என்பது மட்டுமல்ல, எந்த முஸ்லிம் போல் பிரிட்டிஷாரின் தாசர்கள் என்று கூறினாரோ; அதே முஸ்லிம்களை முலையிலே விட்டுவிட்டு வருக, நாங்கள் இருக்கிறோம் கொஞ்சிக்குலவ; என்ற ரோஷமும், சுயமரியாதையும் எக்கேடாகிலும் கெடட்டும் என்றமுறையிலே பிரிட்டிஷாரை அழைக்கிறார். இதன் பொருள் என்ன?

இந்து - பிரிட்டிஷ் கூட்டு வாழ்க்கை! முஸ்லிம் மூலையில் நிற்கட்டும்! நாம் இருவரும் கூட்டுவாழ்க்கை நடத்தலாம் என்பதுதான். வெள்ளையனே வெளியேபோ! என்ற வீராப்புப் போய் விட்டது. வெள்ளையனே! முஸ்லிம் கிடக்கட்டும் டஒருபுறடம்! வா! நாமிருவரும் கூட்டுவாழ்க்கை நடத்துவோம் என்பதுதான், இந்த உபதேசத்தின் உட்கருத்து. இது பிரிட்டிஷாருக்குத் தெரியாமற்போகாது. காங்கிரஸ் அழைக்கிறது கூட்டுவாழ்க்கை நடத்த, முஸ்லிம் லீகைப் பொருட்படுத்தாதே என்று; சரி! அதே போதனையைச் சற்று விரிவுபடுத்தினால், இந்தியாவிலே உள்ள எந்த அரசியல் கட்சியையும் பொருட்டு படுத்தலாம் என்றுதானே பிரிட்டிஷாருக்குத் தோன்றும். ஆச்சாரியாரின் இந்த ஆபத்தான உபதேசத்தைக் காங்கிரசுக்கு எதிரிடையாகவே, இன்று இல்லாவிட்டால் நாளை, ஏன் பிரட்டிஷார் உபயோகிக்க முடியாது? இன்று, லீகைக் கவனிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கூறினது கேட்டலீக், நாளை, காங்கிரசைக் கவனிக்க வேண்டாம், லீகின் கோரிக்கைக்கு இணங்கினால் போதும் என்று லீக்கூறுமானால் அதிலே தவறு என்ன காணமுடியும்? ஆச்சாரியார், ஒருகட்சியøப் புறக்கணித்து விட்டு, வேறோர் கட்சியின் கூட்டுறவோடு வாழலாம் என்று ஆட்சியாளருக்குக் காட்டுகிறார். அதேபோது, சமயம் நேருகிறபோது மற்றக்கட்சியை ஒதுக்கிவிட்டு ஆள்பவருடன் கூடிக் கொள்ளலாம், என்று இங்குள்ள மற்றக் கட்சிகளுக்குச் சாணக்கிய போதகாசிரியராகிறார். இப்போதே பிரிட்டிஷார், ஆச்சாரியார் உபதேசத்தின் விரிவான போக்கை அனுசரித்து, இந்தியாவிலே உள்ள கட்சிகள் அனைத்தையும் (ஆதூஞுணீச்ண்ண்) பொருட் படுத்தாது. தாண்டிச் செல்ல வேண்டும், என்ற பத்திரிகை கூறுகிறது.

சமயத்திலே காலைவாரிவிடவும், எதிரியின் முகாமுக்குக் காவடி தூக்கவும், தயாராக உள்ள காங்கிரசின் போக்கிலே ஜனாப் ஜின்னா சந்தேகப்பட்டதிலே தவறு என்ன? பாகிஸ்தான் கிடைத்தாக வேண்டும், இல்லையேல் இஸ்லாமியரின் எதிர்காலம் இருண்டுவிடுமு“ என்று எச்சரிக்கைவிடுத்திலேதவறு என்ன? காங்கிரசின் கருத்துக் கபடமானது என்பதைத் தெரிந்து கொண்டதால்தான் ஜனாஜின்னா பாகிஸ்தான் இலட்சியமே முஸ்லிம்களின் பிறப்புரிமை என்று கூறினார் அந்த இலட்சியத்திலே இலயித்துள்ள இஸ்லாமியை, ஆச்சாரியார் சாணக்கியம் அசைந்ததது டிசம்பர் 9-ந்தேதியோடு காங்கிரஸ் தான் கனவு கலைந்து விட்டது; பாகிஸ்தான் கிடைப்பது உறுதி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

(திராவிட நாடு 26-8-1945)