அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மக்கள் தீர்ப்பு - மகத்தான பாடம்!
மகிழ்ச்சி! நன்றி! மக்களாட்சியின் மாண்பு காத்திட்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். கொள்கையாளர்களை மதித்த குணவான்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மாவட்ட ஆட்சி மன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அரசியல் ஒழுக்கம் காக்கவும், இலட்சியப் பாதுகாப்புக்காகவும் நடைபெற்ற அறப்போரால், நமது தோழர்கள், அறிவாற்றலுடன் ஈடுபட்டு, வாகைசூடினர். அவர்தம் வெற்றி, என் உள்ளத்தைப் பூரிக்கச் செய்கிறது - நீதிக்கும் நேர்மைக்கும், அரசியல் நாணயத்துக்கும் மக்கள் தொண்டுக்கும் நாடு மதிப்பளிக்கும் நிலைமை பட்டுப்போகவில்லை என்பது இந்த வெற்றிகள் மூலம் விளக்கமாகி இருக்கிறது - எனவே, புதியதோர் எழுச்சியும் நல்லதோர் நம்பிக்கையும் கொள்கிறேன்.

மாவட்ட ஆட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளிவந்துவிட்டன.

பெருவாரியான இடங்களைக் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி விட்டது.

காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்பதும், அதற்கான வலிவும் துணிவும், வாய்ப்பும் வழி காணும் திறனும், ஆக்கட்சிக்கு உண்டு என்பதும் அனைவருக்கும் தெரியும், குடியாத்தம் தேர்தல் மூலம் படர்ந்த ஒரு சூழ்நிலை, இந்த வெற்றிக்கு மேலும் உதவிற்று.

திராவிட முன்னேற்றக் கழகம் (பெரியாரிடம் பெற்ற பாடத்தின்படி) ஊராட்சி மன்றங்கள், நகராட்சி மன்றங்கள், மாவட்ட ஆட்சி மன்றங்கள் எனும் அமைப்புகளுக்கான தேர்தலில், அரசியல் கட்சிகள், கட்சி முறையில் ஈடுபடுவது பொருளற்றது, தேவையற்றது, தீது தருவது என்ற கருத்துக் கொண்டிருக்கிறது.

எனவே, மாவட்ட ஆட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க. ஈடுபடவில்லை.

தேர்தலில் ஈடுபடாதற்கு சமாதானம் தேடி, மனதைச் சாந்தி செய்து கொள்வதற்கோ, பிற கட்சிகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஏதேனும் சாகசம் கூறலாம் என்பதற்காகவோ கூறப்படும் வாதமல்ல இது - உண்மையான நிலைமை.

அரசியல் கட்சிகள் ஈடுபடவேண்டிய பொதுத் தேர்தலில் மட்டும், தி.மு.க. என்ன தாவிக் குதிக்கிறதோ! என்று நையாண்டி செய்வோர் உள்ர். அவர்களின் கேலிப் பேச்சு தாக்குமோ என்று நாம் உண்மையைக் கூறாமலிருக்கத் தேவையில்லை. தன் வலியும் மாற்றான் வலியும் அறிந்திருப்பது மிகமிகத் தேவை என்பதை வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்திக் கூறியிருக்கிறார். எனவே, நமது நிலமை நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். பொதுத் தேர்தலில் ஈடுபடுவதற்கான தண்டு தளவாடம், இன்று நம்மிடம் இல்லை - போதுமான அளவு. அதைப் பெறுவதற்கான முயற்சியில் நாம் ஈடுபடவில்லை - இன்னமும் ஈடுபடும்போது புத்தம் புது பகைகளும் பூசல்களும் அதிகரிக்கும் - எப்போதும் உள்ள ஏசல், வேகமும் விறுவிறுப்பும் அடையும், குத்திக் குடலெடுக்கும் குணவான்கள் கூவுவர், தாவுவர் ஏவுவர்!

இந்நிலையில், தி.மு.க. மாவட்ட ஆட்சி மன்றத் தேர்தலில் ஈடுபடவில்லை.

கழகத் தோழர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபடுவதை இரு கழகங்களும் அனுமதித்தன. பலர் தேர்தலில் ஈடுபட்டனர்.

திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் சிலர் வெற்றி பெற்றுள்ளனர் - அவர்களை வாழ்த்துகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் சிலபலர் வெற்றி பெற்றுள்ளனர் - மகிழ்கிறேன்.

பெற்ற வெற்றிகள், பெருமைக்குரியன, அரிய பாடம் தருவன! வடார்க்காடு மாவட்ட தி.மு.க. செயலாளர் தோழர் ஏ.எல்.சி. கிருஷ்ணசாமியும், பொதுக்குழு உறுப்பினர் ஏடப்பாடி தோழர் தாண்டவனும், திருஓற்றியூர் தோழர் கணபதியும் வெற்றிபெற்று, நமக்கெல்லாம் பெருமை தந்துள்ளனர், மற்றும சிலரும் மகிழத் தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளனர்.

நமது கழகத் தோôர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே இந்தத் தேர்தலில் ஈடுபட்டார்கள் என்ற போதிலும், தி.மு.கழகத்துக்கு இத்தகைய அமைப்புகளிலும் இடமளிப்பது, சிறுபொறி பெரு நெருப்பு எனத்தக்கதாகி விடும் என்று அஞ்சிய கட்சிகள், முளையிலேயே கிள்ளிவிட வேண்டும், மூக்கறுத்து முக்காடிடச் செய்து மூலையில் உட்காரச் செய்ய வேண்டும் என்று முனைந்து நின்று எல்லா வகையான எதிர்ப்பையும் உருட்டித் திரட்டித தாக்கின. எனினும், சில குறிப்பிடத்தக்க வெற்றிகள் நமக்குக் கிடைத்துள்ளன.

எதிர் நீச்சலிடுவது போன்ற செயலில் இறங்கி, வெற்றி பெற்றனர் என்ற முறையில் நமது தோழர்கள் பாராட்டுதலுக்குரியவராகின்றனர்.

காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்தலின்போது கையாண்ட முறைகளும் கண்டறிந்த வழிகளும் இந்தக் கட்சிக்கோ, பொதுத் தொண்டுத்துறைக்கோ பெருமை தருவதாக இல்லை.

கள்ளமார்க்கட்காரர்களுக்குக் கைலாகு கொடுத்து சுதராடை கட்டிக் கொண்டு வருகிறேன் என்று அவர்கள் கூச்சத்துடன் கூறிட, அதற்கென்ன இப்போது அவசரம், முதலில் ஒரு கையொப்பம் போடுங்கள் என்று கெஞ்சி, ஆள் சேர்த்தது காங்கிரஸ் கட்சி.

எந்தக் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் காரியலாயத்துக்கு, தேவாலயம் செல்லும் பக்தர்கள் போலத் தேர்தல் விரும்பிகள் சென்று காத்துக் கிடந்தனரோ, அந்தக் காங்கிரஸ் கட்சி, யாரார் பசை உள்ளவரக்ள், ஏவரெவர் ருசி அறிந்தவர்கள் என்று மோப்பம் பிடித்தறிந்து, அவர்களிடம் சென்று முறுவல் காட்டி, முகமன் கூறி, முன்னாள் நிலைமைகள்ம நடவடிக்கைகள் ஆகியவற்றை மறந்து, காங்கிரஸ் ஆபேட்சகராக தத்து எடுத்துக் கொண்டது.

கள்ளுக்கடை வியாபாரம் கூடத்தான் இப்போது இல்லையே, கொஞ்ச காலம் காங்கிரஸ் வியாபாரம் செய்து பார்க்கலாம் என்று கணக்குப் போட்டுக் களம் சென்றவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி, கண்காட்டிக் காதல் எட்டிற்று.

பணம் முன்னணியில் குணம் மூலையில் என்றாயிற்று.

குடியாத்தத்தைக் காட்டிக் குடிலர்கள், எல்லாக் கட்சிகளுக்கும் குழிபறிக்க முனைந்தனர்.

கொள்கை மறந்தவர்கள், திறந்த வீட்டில் நுழைபவர்கள், விளைந்த காட்டுக் குருவிகள், விலைபேசிக் கொண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.

பெரியாரைப் பார்! குடியாத்தம் தேர்தலில் காமராஜருக்காக அவர் கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு, வேலை செய்து வெற்றி தேடித்தந்தார் - பொருள் என்ன இதற்கு? புரியவில்லையா இந்தப் போக்கு? இனி எல்லோரும் காங்கிரசில் சேரத்தான் வேண்டும்ம என்று வாதாடினர், இதாயம் தேடிடும் அரசியல் சூதாடிகள்.

இந்த வட்டாரத்துக்கு நான்தான் காமராஜ் - ஏன் என்னை ஆதரிக்கக் கூடாது என்றே கேட்டாராம், பெருநிதியும் சுரள்மதியும் படைத்த ஓர் கோவைப் பிரமுகர்!

அரசியல் ஒழுக்கம் அவசியமற்றது என்று எண்ணப் படும் அளவுக்குக் கட்சியில் தடுமாற்றங்கள் தலைவிரித்தாடின.

எந்தச் சமயத்தில் யார் கட்சி மாறுவாரோ, என்ற அச்சத்துடனேயே, எவரையும் கவனிக்க வேண்டி இருந்தது.

பெரு வெற்றி பெற்ற படைத்தலைவன், எந்த நேரத்தில் எந்த இல்லம் நுழைந்து, எந்தக் குமாரியைச் சிறை எடுத்துச் சென்று, சிற்றின்பக் கூடத்துச் சிங்காரியாக்கி வீடவானோ என்ற அச்சம் பிடித்துக் கொண்ட நிலையில், ஒவ்வொரு கட்சியும், எந்தச் சமயத்தில், யாரைக் காங்கிரஸ் கட்சி சிறைப்பிடித்துச் செல்லுமோ என்று அஞ்சிடும் நிலைமை இருந்து வந்தது.

குடியாத்தம் முடிந்தது, கொள்கைகள் மடிந்தன என்ற நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தைச் சாகடிக்கும் வகையில், நமது தோழர்கள், கொள்கையை மறவாமல், கோணல் பாதை புகாமல், நாணயத்துக்கு என்றென்றும் மதிப்பு உண்டு என்ற நம்பிக்கையுடன், நாடெல்லாம் காங்கிரக்குப் பராக்குக் கூறுகிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், காலமெல்லாம் காங்கிரஸ் ஏதேச்சாதிகாரத்தைக் கண்டித்து வந்த பெரியாரே, கதர் கட்ட வேண்டியது மட்டும்தான் பாக்கி என்று கேலி பேசப்பட்டாலும் கடமையைக் கலங்காது செய்தல் வேண்டும் என்ற கண்ணியத்துடன், இந்தத் தேர்தலில் நமது தோழர்கள் சிலர் ஈடுபட்டனர் - வெற்றியும் கண்டனர். எனவேதான் நூற்றுக்கணக்கான காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்றதிலே, காங்கிரசுக்கு ஏற்படாத பெருமை, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் நமது தோழர்கள் வெற்றி பெற்றதால், நமது கழகத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

இரண்டு தொகுதிகள், எல்லா வகையிலும் கோட்டைப்போர் போன்று இருந்தன - எல்லாக் கட்சிகளின் கவனத்தையும் உர்த்தன.

ஒன்று, லால்குடி வட்டம் மற்றொன்று காணை - கஞ்சனூர் வட்டம்.

இந்த இரு தொகுதிகளிலும் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

காணை - கஞ்சனூர் தொகுதியில், உழைப்பாளர் கட்சி மூலம் அரசியல் உலகில் உயர் இடம் பெற்று, நமது உள்ளத்தில் மதிப்பான இடம்பெற்று, பிறகு அரசியல் சபலத்துக்கு ஆட்பட்டு, ஆதரித்தவர்களை அம்பலத்தில் விட்டுவிட்டு, நம்பிக்கிடந்த குலமக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டு, காங்கிரசுடன் கள்ளக்காதல் நாடகம் நடத்தி, பதவிக் குழந்தையைப் பெற்றெடுத்த பரிதாபத்துக்குரிய கனம் ராமசாமியாரின் ரதகஜ துரகபதாதிகள் அனைத்தும், ஒரு ஏழையின் மீது பொது மக்கள் பணியன்றி வேறோர் அணிகலனோ படைக்கலனோ பெற்றிராத ஒரு சாமான்யர் மீது, நமது கழகப் பொறுப்பாளராகப் பணியாற்றிய அருங்குணவாளர் தோழர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. அவர்களின் மீத பாய்ந்தன!

சாய்ந்து போகின்றான் பார் என்னை எதிர்க்கத் துணிந்த இந்த அற்பன்.

ஒழிந்து போகிறான் பார் எனக்கு அரசயில் ஒழுக்கம் கற்பிக்கத் தணிந்த இந்தப் பஞ்சை.

ஓடஃட விரட்டி அடிக்கிறேன் பார், கொள்கை பேசும் இந்தக் கோவிந்தசாமியை!

மந்திரிப் பதவி எனும் பெரிய இடத்தில் குடியேறிய எஸ்.எஸ். ராமசாமியாரின், வீராவேசப் பேச்சிலே, சில துளிகள் இவை.

உண்மையிலேயே, இந்தத் தொகுதியில், மந்திரியான ராமசாமியாரின் மானம் மரியாதை ன்பவைகளுக்கு குழிபறிக்கப்படுமா அல்லது கோவிந்தசாமியின் ஊûôப்பு, உயர் குணம் சிறந்த உள்ளம் இவைகள் குப்பை மேட்டுக்குத் தூக்கி ஏறியப்படுமா, மக்ள் எதற்கு மதிப்பளிக்கப் போகிறார்கள், உழைப்பாளிக்கா உல்லாச வாழ்வினருக்கா, கொள்கையாளருக்கா, வேளைக்கோர் வேடமிடும் இலாபச் சூதாடிடுவோருக்கா, பாதசாரிக்கா, பங்களாவாசிக்கா, இன்மொழிக்கா, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கனருக்கா, மக்கள் எதை மதிக்கப் போகிறார்கள் என்ற பெரும் பிரச்சனை எழுந்தது - தமிழகம் இவலுடன் இந்தத் தொகுதியை நோக்கி நின்றது. அமைச்சர் பெருமான், இடினார் இடம்பரக் கோலத்தில், கிராமம் கிராமமாக ஓடினார், பாலம் வரும் பள்ளிக்கூடம் வரும், பங்கு வரும் பவிசு வரும் என்றெல்லாம் ஆசை காட்டினார், கோவிந்தசாமி கோயில் வேண்டாம் என்று கூறுபவன் நானோ காளிமகமாயி கோயிலுக்குப் பூசை நடத்தும் பக்தன், கோவிந்தசாமி அரசியல் பாலைவனத்தில் நடந்து செல்பவன், நான் காங்கிரஸ் சோலையிலே உலவுகிறேன், என்னைப் பின்பற்றுங்கள்! ஏற்றம் பெறுங்கள் என்றெல்லாம் பேசினார்.

அமைச்சரின் ஏடுபிடியாக இருப்பது கிடைத்ததற்கரிய பேறு என்று எண்ணிடும் பிரமுகர்கள் புத்தாடை அணிந்து, பச்சை நோட்டுகளைப் பக்குவமாக மடித்துச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, யாரார் எதெதில் மயங்குவர் என்று குறிப்பேட்டுடன் கிளம்பினர். கோவிந்தசாமியைச் சூழ்ந்து கொண்ட படை சாமான்யமானதல்ல! எதற்கும் அஞ்சாத படை! பின்புறமிருந்து குத்தவும் பின்வாங்காத படை!

காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மட்டுமல்ல, அதிலே குடிபுகுந்த கனம ராமசாமியாரின் செல்வாக்கும், கூட்டாகிக் கூர்வாளாயிற்று! இந்தக் கூர்வாள் போதாதென்று, திராவிடர் கழகத்திடமிருந்து, குத்துவாள் பெற்றனர்!

திராவிடர் கழகம் இந்தத் தொகுதியில்தான் தன் ஆபேட்சகருக்காக அல்ல ஆதரவு தேடக் கிளம்பியது.

தோழர் கோவிந்தசாமியை இங்கு எதிர்த்து நின்றவர் காங்கிரஸ்காரர். கனம் ராமசாமியால் நிறுத்தி வைக்கப்பட்டவர்.

இவர், கல்வித் திட்டத்தை எதிர்த்தொழித்து திராவிடர் கழகத்தின் அன்புக்குப் பாத்திரமானவரல்ல!
இவர், இந்தி எழுத்தினைத் தார் கொண்டு அழித்து, திராவிடர் கழகத்தின் அபிமானத்தைப் பெற்றவரல்ல.

இவர், பிள்யைôரை உடைத்துக் காட்டி, திராவிடர் கழகத்தின் பாராட்டுத்லைப் பெற்றவரல்ல.

இவர், பார்ப்பானே வெளியேறு என்ற வீரமுழக்கமிட்டு, விடுதலை வீரர் பட்டியலில் இடம் பெற்றவரல்ல.

சினமாவை விடு! சிலம்பம் ஏடு! என்ற சீரிய சித்தாந்தம் பேசி திராவிடர் கழகத்தின் மனதை வசியப்படுத்தியவருமல்ல. காங்கிரஸ்காரர்! மாடுதான் இவர் சின்னம்! எனினும் அவருடைய ஜாதகப் பலனை முகபாக்யத்தûப் பாருங்கள். திராவிடர் கழகப் பேச்சாளர்கள் முகாம் அமைத்தக் கொண்டு அவருக்கு ஆதரவு திரட்டி வெற்றிப் பாதை அமைத்துத் தருவோம். கவலை விடுக! களிப்புப் பெறுக! என்று கூறினர். வாழ்க அந்த ஆபத்பாந்தவர்கள்! வாழ்க இந்த ஆனாதரட்சகர்கள்!
இப்படி ஒரு படை அமைத்து விட்டால் ஜனநாயகத்துக்கு என்ன குறை!

கொத்தலாவலைக்கும் சேனாநாயகாவுக்கும் தேர்தல் போரா, எழுதுக. விபரம் கூறுக. நிபந்தனைகளைப் பேசிக் கொள்க. ஆறு பேர் வருகிறோம். மும்மூன்று மணிநேரம் பேசக்கூடியவர்கள், முழு நீளக்கத்திக்கும் அஞ்சாத தீரர்கள், பெரியாரின் கழகத்தவர்கள், சினிமாக் கட்சி அல்ல, சிலம்பக் கூடத்தார் என்று அறிவிப்பு வெளிவந்தால்கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை. காணைகஞ்சனூர் தொகுதியில் திராவிடர் கழகப்பேச்சாளர்கள் அவ்வளவு அற்புதமான அரசியல் லாவகம் காட்டினர்!

இதோ காணுங்கள் அரசியல் கண்ணியத்தை விளக்கும் அத்தாட்சி - திராவிடர் கழகப் பேச்சாளர்கள் மாட்டுப் பெட்டிக்காக மார் உடையப் பாடுபட்டதற்கான இதாரச் சீட்டு தேர்தல் கூட்ட நோட்டீஸ், (நகல்வெளியிடப்பட்டது)

பெரியார் தோழர் கோவிந்தசாமியை எதிர்க்கும்படி கூறவில்லை.

எனினும் பெரியார் கீறிய கோ;டினைத் தாண்டாத, தொண்டர் குழாம், கோவிந்தசாமியைக் கவிழ்க்கக் கிளம்பினர்!

கண்ணை மூடிக்கொண்டு பெரியாரைப் பின்பற்றுவோம் என்று பெருநெறி பேசிடும் சீலர்கள், பெரியார் இந்தப் பிரச்சனைப்பற்றி வாயை மூடிக்கொண்டு இருப்பது கண்டும், புயல் வேகப் பிரசாரம் புரிந்தனர். காங்கிரசுக்கு!

காரணம் என்ன? கோவிந்தசாமி ஒரு கண்ணீர்த்துளி! எனவே ஒழிக்கப்பட வேண்டியவர்! அவர்களை ஒழிக்கப்பாடுபடுவது, பெரியாருக்குச் செய்யும் பெருந்தொண்டு! அவர் மனம் குளிர வேண்டுமானால், கண்ணீர்த்துளிகள் மீது கனல் கக்கவேண்டும்! இப்படி ஒரு விசித்திரமான மனப்பான்மை இருக்கிறது, திராவிடர் கழகப் பேச்சாளர்களில் சிலருக்கு.

இத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து, பெருமிதமான வெற்றி பெற்றார், வீரர் கோவிந்தசாமி.

கனம் ராமசாமியார் கட்சியையும் குலத்தையும் காட்டிக் கொடுத்தார் என்பû எடுத்துக் காட்டிவிட்டனர்.

பசுட்டுக்கு மயங்கமாட்டோம், பதவி கண்டு பல்லிளிக்க மாட்டோம், என்று வீரத்தீர்ப்பு அளித்து விட்டனர், காணை-கஞ்சனூர் வட்ட வாக்காளர்கள்.

மந்திரிப் பதவி கிடைத்ததும் குல மக்களில் கூண்டுக்கிளிகளாக உள்ளவர்களிடம் பதவி மூலம் பெறக்கூடிய வசதிகள் பற்றி வகைவகையாக ஆளந்திட ராமசாமியாரால் முடிந்தது. அவர் பதவி பெற்றதன் மூலம் பல ஆண்டுகளாகப் பாடுபட்டு, பகை பலவற்றுக்கு அஞ்சாமல் வளர்த்த உழைப்பாளர் கட்சி உருக்குலைக்கப்படுகிறது என்ற உண்மை உணர்ந்து கொள்ளவே கால் தேவைப்பட்டது. குல மக்கள் அதிர்ச்சி அடையக்கூடாது என்பதற்காக ராமசாமியார் மிகமிகப் பக்குவமாக, கோழி கொல்லப்பட இருப்பதைக் கூறாமலேயே இருந்து வந்தார், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்புதான் கோழி கொல்லப்பட்ட செய்தியே வெளியே தெரிந்தது. திடுக்கிட்டுப் போயினர். எனவே, நிதானமாகவும் முறைப்படியும மக்களிடம் உண்மையைக் கூறி, புதிய கட்சியை அமைத்திட நேரம் கிடைக்கவில்லை.ஆகவேதான் புதிதாகத் துவக்கப்பட்ட உழவர் கட்சி வெற்றி பல காண முடியாமல் போய்விட்டது. தோழர்கள் திருக்குறளார், கோபால கவுண்டர், கோவிந்தசாமி ஆகியோர் புதிய கட்சி அமைத்தபோது மக்கள் பேரார்வம் காட்டினர் என்றாலும் போதுமான காலமும் வசதியும் இல்லாததால், மந்திரியாரால் வெற்றி காணமுடிந்தது. எனினும் ஜில்லா போர்டுக்கே இந்தப் பாடுபடவேண்டி வந்ததே, பொதுத் தேர்தல் என்றால், எவ்வளவு சிரமமோ, என்னென்ன கஷ்ட நஷ்டமோ, எத்தகைய ஏமாற்றங்களோ என்று அமைச்சர் எண்ணி ஆயாசப்படாமலிருந்திருக்க முடியாது. தோழர் கோவிந்தசாமி அமைச்சரை அவ்வளவு வேலை வாங்கி விட்டார்.

திறமை முழுவம் செலவிட்டும் கோவிந்தசாமியை ஒழித்துக் கட்ட முடியவில்லையே என்ற எண்ணம் வேறு அமைச்சர் மனதைக் குத்திக் குடைந்த வண்ணம் இருக்கத் தான் செய்யும். அவர் மட்டுமல்ல, அவரை அமைச்சராக்கிய காமராஜரும் கலங்கியிருப்பார்.

யாராவது ஒருவரக்குப் பதவி கொடுத்தால், காங்கிரஸ் எதிர்ப்பாளர்களை வீழ்த்தி விடலாம் என்ற காமராஜீயம், நிலையானதல்ல, நேர்மை தருவதுமல்ல என்பதை விளக்கிவிட்டனர்.

வெற்றி கோவிந்தசாமிக்கு அல்ல நேர்மைக்கு வெற்றி, அரசியல் ஒழுக்கத்துக்கு வெற்றி, உண்மைக்கு வெற்றி, உழைப்புக்கு வெற்றி, ஏழைக்கு வெற்றி, மக்கள் ஊழியருக்கு வெற்றி! பொறாமையும் பொச்சரிப்பும் கொண்டு போகும் பாதை சரியா என்பது பற்றிய கவலையுமற்று, அரசியலில் பொறுப்புண்ர்ச்சிகூடத் தேவையில்லை உரத்த குரலும் உழைக்கும் திறனும் இருந்தாலே போதும் என்று எண்ணியவர்களுக்கு, மக்கள் தக்க பாடம் கற்பித்தனர், கொள்கைப் பற்றும் நேர்மைத் திறனும் கொண்டு, சபலத்துக்கு ட்படாமல் எதிர்ப்புக்கு அஞ்சாமல், எதிர்ப்பக்கம் இருப்போரின் மோடடார் மெருகு, ஏடுபிடிகளின் ஏக்காளம் பணப்பெட்டியின் கனம், பதவியால் கிடைக்கும் பராக்கு இவைகளைக் கண்டு பயப்படாமல் பொது மக்களிடம் நம்பிக்கை வைத்து, உண்மையை உரைத்தால், ஏழையும் வெற்றி பெறமுடியும் என்பதை, காணை காஞ்சனூர் தொகுதி விளக்கிவிட்டது. சிட்டு, வல்லூறை வீழ்த்திவிட்டது.

நான் எப்படி எப்படிக் கட்சி மாறினாலும், காட்டிக் கொடுத்தாலும், பதவி வேட்டை இடினாலும், ன் குல மக்கள், என் வார்த்தûயைத்தான் வேதமாகக் கொள்வார்கள், நீங்கள் எவ்வளவுதான் அரசியல் தத்துவங்களை ஆடுக்கடுக்காக எடுத்துரைத்தாலும் அவைகளை வெட்டிப் பேச்சு என்றுதான் தள்ளிவிடுவார்கள் என்று - எண்ணிட அமைச்சருக்கு ஆசை எழும், ஏனெனில் அரசியல் ஒழுக்கக் குறைவாக அவர் நடந்து கொண்டபிறகும், தன்குல மக்களிடம் செல்வாக்கை, எப்படியோ திரட்டி இலாபம் பெற முடிகிறது. ஆனால், இந்தச் செல்வாக்கு நிலையானது என்றோ, நீண்டகாலப் புகழ் தேடித் தரக்கூடியதென்றோ அமைச்சர் கருதுவாரானால் அரசியல் இயக்க வரலாறு அறிந்தவர்கள், ஏள்ளி நகையாடுவர். இவர், தமக்கு இருப்பதாகக் கூறிகொள்ளும் செல்வாக்கைவிட, தரத்தில் எவ்வளவோ உயர்ந்த செல்வாக்கு, காமராஜருக்கு இருக்கிறது என்று எவரும் கூறுவர், ஏனெனில், காமராஜ நாடார், நாடார்களின் தொகுதியில் அல்ல, நாடார்களின் ஆதரவைத் திரட்டி அல்ல, குடியாத்தம் தேர்தலில் வெற்றி பெற்றது! எனவே, அமைச்சர் இராமசாமியாருக்குக் கிடைத்தவரையில் இதாயம் என்று கூறிக்கொள்ள மட்டுமே வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இத்தகைய வாய்ப்புப் பலருக்குப்ப ல சமயங்களில் கிடைத்து, பிறகு இடிக்காற்றுப் பஞ்சான கதை அனைவருக்கும் தெரியும்.

மக்கள் மனதை உர்த்த மற்றோர் தொகுதி, லால்குடி.

“திராவிடத் தந்தை உ.வெ.ராமசாமி அவர்களின் பொது வாழ்விலே லால்குடி வட்டம் ஆவரின் தாயகம் போன்றதாகும். 1923-ம் ஆண்டில் அவர் முதன்முதல் சுயமரியாதை இயக்கம் - மாநாடு கண்டது லால்குடி உயர்நிலைப் பள்ளியிலேயாகும்.”

தலபுராணம் போலிருக்கிறதா! நான் கூறுவது அல்ல. லால்குடி தொகுதியில் நின்ற காங்கிரஸ் ஆபேட்சகர் தோழர் ராஜாசிதம்பரம் அவர்களை ஆதரித்துப் பெரியார் தொண்டர் என்ற பெயரினர் வெளியிட்ட துண்டுத் தாளில் உள்ள மணிவாசகம்.

இப்படிப்பட்ட தொகுதியில காங்கிரஸ் ஆபேட்சகராக நின்ற ராஜா சிதம்பரத்தை, உங்களில் பலர் பார்த்திருக்கக்கூடும், பெரிய உருவம், பிரமுகர் கோலம், பெருநிலக்கிழார், வெற்றிலைப் பெட்டியும் கையுமாக வருவார், பெருங்குரலில் பேசிச் சிரிப்பார் கண்கள் பேசும், கட்டியம் கூறுவோர் உடன் வருவர், கனமான சரீரம், ஆயினும் அரசியல் கனம் ஆகவேண்டும் என்ற ஆசை அவரைப் பிய்த்துப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தது. அவர் ஓர் செல்வவான் - செல்வாக்கும் படைத்தவர்.
மகனிடம் சில மாண்புப் குறைவுகள் இருப்பினும், தந்தையாரின் பெருங்குணம் இருக்கிறதே, ராஜா முகத்தைப் பார்க்காவிட்டாலும் அவருடைய தந்தையாரின் முகத்தைப் பார்க்க வேண்டுமே என்று தொகுதி மக்கள் பாசத்தோடு பேசுவர். எடுத்தெறியப் பணம் உண்டு! ஏடுபிடிகள் ஏராளம்! அவருக்குச் சொந்தமான செந்நெல் விளையும் வயலின் வளம்கண்டு வசீகரம் பெற்றோர் ஆனேகர். அவர்தான் நின்றார், தோற்றார்! வெற்றி பெற்றவர், திராவிடர் கழகச் சிலம்பக் கூட வீரரிடம் சிக்கினால், தூக்கிக் கர்லா சுத்துவார்கள். அப்படிப்பட்ட கச்சலான உருவம், கிராமவாசி அம்பில் தர்மலிங்கம்.

ராஜா சிதம்பரத்துக்கு அம்பில் தர்மு, கைத்தடி என்று கூடப் பேசினர், அந்த அளவுக்கு இருவருக்கும் நட்பு ராஜா சிதம்பரம் அரசியலில் நல்ல செல்வாக்குப் பெறவேண்டும் அவர் மூலம் மக்களுக்கு நலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர் தர்மு. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் உழைப்பாளர், உழைத்துவிட்டு எனக்கென்ன பங்கு என்று கேட்டவரல்ல, ராஜா சிதம்பரம், சென்ற பொதுத் தேர்தலின் போது, காங்கிரசினால் நாடு அடைந்த கேடுகளைப் பேசி எதிர்த்த நின்று வெற்றி பெற்று, ஒக்ய முன்னணியில் அமர்ந்து, சட்டசபையில் காங்கிரசாட்சியின் போக்கினைக் கண்டித்துப் பேசி வந்த கண்ணியர்.

அவர், இப்போது காங்கிரஸ் ஆபேட்சகரானார்! காரணம் கூடக் கூறினார்! வழுக்கி விழுந்த வனிதையும் பிடிபட்ட கள்ளனும்கூடத்தான் காரணம் காட்ட முடியும். ஆனால் பாபம், ராஜா சிதம்பரத்துக்கு உள்ள துணிவு அவர்களுக்கு எது!

அவர் கூறினார், காங்கிரஸ் கட்சிதான் நல்ல கட்சி என்று கண்டு கொண்டேன். எனவே, அதிலே சேர்ந்து கொண்டேன். முன்பு காங்கிரசை வீழ்த்தச் சொன்னேன். செய்தீர்கள். இப்போ காங்கிரசை ஏழுப்ப வாரீர், என் சின்னம் மாடு. அதற்கு ஆதரவு தாருங்கள், சின்னம் எதுவாக இரந்தால் என்ன, கேட்பவன் நான், தெரிகிறதா ராஜ சிதம்பரம் கேட்கிறேன், இக்கவும் அழிக்கவும், மாற்றவும் மாய்க்கவும் திறனும் உரிமையும் படைத்த ராஜா கேட்கிறேன்! என்று துணிந்து கூறினார், மிக மிக நம்பிக்கையுடன் களம் நுழைந்தார்.

அம்பில் தர்மலிங்கும், தேர்தலில் ஈடுபடக்கூடிய வசதி படைத்தவரல்ல, அதற்கான நிலைமைகூட இப்போது அவருக்கு இல்லை. கல்லக்குடி அறப்போரில் ஈடுபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் கிடத்தப்பட்டு, உயர்நீதி மன்றத்தில் வழக்காட முயற்சி எடுக்கப்பட்ட காரணத்தால், வெளியே வந்திருப்பவர்.

எந்த நேரமும் அவருக்கு அழைப்பு வரக்கூடும் சிறைபுக.

ராஜா சிதம்பரம், கட்சி மாறினார், காட்டிக் கொடுக்கிறார், வாக்காளர்களைத் துச்சமென்று எண்ணுகிறார் என்பது கண்டு தர்மு வெகுண்டெழுந்தார், ராஜாவிடம் சென்று அரசியல் ஒழுக்கம்பற்றிப் பேசிக் பார்த்தார். அவர் பெருஞ்சிரிப்பைப் பதிலாக அளித்தார், கருஞ்சேட்டை வீரரே! வணக்கம்! என்று பேசினார், காங்கிரஸ் ஆபேட்சகராகி விட்டார்.
சீறிப் பயனென்ன, கண்ணீர் சிந்திப் பயனென்ன, ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் போக்கைக் கண்டித்துப் பேசி மட்டும் பயனென்ன, அவர் அறிய, நாடு உணர, அவரைத் தோற்கடித்தே காட்ட வேண்டும் என்று துணிந்தார், தேர்தலில் ஈடுபட்டார், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் தர்மலிங்கம்.

இவருக்கு தர்முவா போட்டி! என்னய்யா வேடிக்கை இது! அவருஒடய செல்வாக்கு எங்கே, இந்த வாலிபன் எம்மாத்திரம் என்று கூறினார். பிரச்சார பீரங்கிகள் முழங்கின! பிரமுகர்கள் ராஜா பக்கம் அணிவகுத்து நின்றனர்! மலை அசைகிறது, எலி என்ன செய்யும்! பணம்படை எடுத்திருக்கிறது, பஞ்சை என்ன செய்ய முடியும்! ராஜா வருகிறார், தர்மு எதிர்த்து நிற்பது எங்ஙனம்? என்று பேசிக் கொண்டனர், பலரும்.

ராஜா சிதம்பரம் சொந்தச் செல்வாக்கு, காங்கிரஸ் செல்வாக்கு இவற்றுடன், திராவிடர் கழகத்தின் செல்வாக்கும் ஆதரவும் எனக்கு உண்டு என்று கூறிக்கொண்டு கிளம்பினார். பெரியாரைப் பேட்டி கண்டார், பிறரிடம் சென்று பெரியார் பெரியார்தான், இந்தச் சில்லறைகள் போலவா, சென்றேன, கண்டேன், பேசினேன், நிலைமையைச் சொன்னேன், புரிந்து கொண்டார் என்று பெருமிதத்துடன் கூறிக் கொண்டார்.

தர்மு யார்? கண்ணீர்த்துளி! நான் யார் என்பது கிடக்கட்டும், தர்மு ஓர் கண்ணீர்த்துளி! கவனமிருக்கட்டும்! கண்ணீர்த்துளியை ஒழிப்பதுôனே பெரியாருக்கு நீங்கள் செய்யக்கூடிய பெருந்தொண்டு எனவே, வாருங்கள் என் பின்னாலே என்று திராவிடர் கழகத்தாரை அழைத்தார். முற்பகுதி பிடிக்கிறது, பிற்பகுதி அச்சம் தருகிறது என்றனர் சிலர் - சிலரோ கெட்டதுதான் கெட்டுவிட்டாய், கிட்டே வாடி மகளே! என்று அழைத்த கிழக்காமுகன் போக்கில் அவர் பின்னோடு சென்றனர்!

தீர்த்துக் கட்டிவிட்டேன், இந்த தி.மு.க.வை என்று துந்துபி முழக்கினார்.

“திராவிடர் கழகத் தலைவர் பெரியார் உ.வெ.ராமசாமி அவர்கள், ஆவரின் முதல் நெம்பர் விரோதி கண்ணீர்த் துளிகள் வெற்றியைக் கனவிலும் விரும்ப மாட்டார் - மாறாக வரின் பேச்சிலும் எழுத்திலும் கண்டித்துள்ளார்.”

ராஜா சிதம்பரத்தின் ஆதரவாளர் வெளியிட்ட துண்டுத்தாளில்ம உள்ள திருவாசகம் இது.

“ராஜா சிதம்பரம் வெற்றியைக் காமராஜ நாடார் விரும்புகிறார். பெரியார் உ.வெ.ரா மனப்பூர்வமாக இசி கூறுகிறார்.”

இதுவும் அது!!

“...திராவிடத் தந்தை பெரியார் உ.வெ.ரா. அவர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் - திராவிடத்தின் பிறவி எதிரிகளோடு கூடிக் குலவுகிறார்கள் - ரியர்களை அணைத்தக் கொள்ளுவோம் என்று ஆகத்தை பேசுகிறவர்கள்..” இப்படி நமக்கு அர்ச்சனை ராஜாவின் ஆதரவாளரிடமிருந்து.
மனதுக்கே அதிர்ச்சி தரத்தக்கதானே முறையிலே பிரச்சாரம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள், இப்படியும் துண்டு நோட்டீஸ் வெளியிட்டனர்.
“இவர் (தர்மு) வெற்றிபெற்றால் லால்குடி வட்டம் பெரியாருக்கல்ல - எங்கள் அறிஞர் அண்ணாவுக்கு என்பார்.”
எழுதிய நண்பர், தனது திறமையைத் தானே பாராட்டிக் கொண்ருப்பார் - இது அணுகுண்டு - இதனை வீசியான பிறகு தர்மு எப்படித் தப்பிப் பிழைக்க முடியும், யாருக்கு ஓட்டு, பெரியாருக்கா? அண்ணாத்துரைக்கா? என்று ஒரு போடு போட்டிருக்கிறேன். பயல்ல்கள் திக்கித் திணறி திக்காலொருவர் ஓடிவிடுவர், தேர்தலில் ராஜா ஜெயிப்பார், எல்லாம் என் பிரசார பலம், மக்கள் என்றால் என்ன பெரிய பிரமாதமா, மகுடி எதுவதைப் பொறுத்திருக்கிறது என்று பெருமையாகப் பேசிக்கொண்டிருப்பார், அரசியல் பிழைகளை ஆடுக்கடுக்காகச் செய்து கொண்டு, அதன் மூலம் அந்தஸ்து உயரும் என்று இவலோடு இருக்கும் அந்த அன்பர்! திட்டவட்டமாகக் கேட்கிறார். நோட்டீஸ் மூலம், கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டு.

லால்குடி வட்டம் பெரியாருக்கு ஆதரவு அளிக்கிறதா?

இனத்துரோகிகள் - காட்டிக் கொடுத்தவர்கள் - கண்ணீர்த் துளிக்கு ஆதரவளிக்கப் போகிறதா?

இதுதான் இன்றைய லால்குடி தேர்தல் பிரச்சனை.

தி.மு.க. கண்ணீர்த் துளி - கம்யூனிஸ்டு - ஆரியர் - நம் பரம விரோதிகள் என்கிறார் திராவிடத் தந்தை, இதில் முதல் நெம்பர் விரோதி கண்ணீர்த் துளிகள்.

இப்போது உங்கள் ஓட்டு யாருக்கு?

பெரியார் தொண்டன் கேட்கிறார்!

இதற்கு என்ன பதில் தரப்போகிறார்கள் - நிச்சயம் ராஜா சிதம்பரத்துக்குத்தான் எங்கள் ஓட்டு என்பது தவிர வேறு என்ன பதில் இருக்க முடியும் இதற்கு என்று, மக்களை உணர முடியாத அந்த நண்பர் எண்ணிக் கொண்டிருந்திருப்பார் பாபம் ஏமாந்தார்!!
பெரியாரின் பெயரை இழுத்து, வைத்து இவர்கள் பேசியதை மக்கள் எப்படி நம்புவார்கள், அவர்தான் இந்தத் தேர்தலில் எனக்குத்துளியும் அக்கரை இல்லை என்று கூறிவிட்டாரே என்று கேட்கத் தோன்றும்.
பெரியார், ராஜா சிதம்பரத்தை ஆதரித்துப் பேசவில்லை, எழுதவில்லை, அதுபோலவே, ராஜா சிதம்பரத்தை ஆதரித்த திராவிடர் கழகத் தோழர்களைக் கண்டிக்கவில்லை. அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாரில்லை.
மக்கள் மனதிலே குழப்பம் மூளத்தக்க வகையில், திராவிடர் கழகத் தோழர்களில் சிலர் பேசியதைப் பெரியார் கண்டிக்காது விட்டது ராஜா சிதம்பரத்தின் துணிவை அதிகப்படுத்தி விட்டது. ஒருபடி மேலே சென்று, தனது தேர்தல் விளம்பரத்தை விடுதலையில் வெளியிடவே செய்தார். உண்மையிலேயே இது, ராஜா சிதம்பரம் பெற்ற வெற்றிகளில் முக்கியமானது.

எங்கு நோக்கினும் மூவர்ணக்கொடி, எவரைப் பார்ப்பினும் கதருடை, எங்கும் காங்கிரசாட்சியின் செல்வாக்கு என்று இருந்த நேரத்தில் துணிந்து தனிக்குரலாகக் கிளம்பிய ஏடு விடுதலை! அதைத் தீண்டுவது தேசத் துரோகம் என்று ஏசினர். விடுதலை விற்பனையாளர்கள் தாக்கப்பட்டனர். எனினும் நெஞ்சு உரத்துடன், காங்கிரசைக் கண்டித்து எழுதிய ஏடு விடுதலை. திராவிடரின் விடுதலை முரசாக இதயநாதமாக விளங்க வேண்டுமென்பதற்காக, அந்த ஏடு தளிர் நடைபோட்ட போது ஆதரவு எட்டிய அன்பர்கள் பலர். அப்படிப்பட்ட விடுதலையில், மாட்டுப்பெட்டிக்கு ஓட்டுப் போடுங்கள் என்ற விளம்பரம் வெளிவரச் செய்தார் ராஜா சிதம்பரம் என்றால், உண்மையிலே பெரிய வெற்றிதான்! நமக்கெல்லாம் தலை இறக்கம்! ஆவரோ, மார்பை நிமிர்த்தி நடந்தார், விடுதலையைக் கண்டீர்களா என் தேர்தல் அறிக்கையைப் படித்தீர்களா என்று கேட்டார். உன் கண்ணைக் குத்திய கத்தி இதுதான், தடவிப்பார் இதன் கூர்மையை என்று ராஜா கூறினார். பெரியாரின் பெருந்தொண்டர்கள், என்னென்ன எண்ணினார்களோ நானறியேன், இருந்துவிட்டு வந்தவன் என்ற முறையில் நான் கலங்கினேன்.

ராஜா சிதம்பரம் வெளியிட்ட தேர்தல் விளம்பரமும், மிகச் சாமர்த்தியமாகத் தயாரிக்கப்பட்டது. அதைப் படிப்போருக்கு, பெரியாரின் இலோசனையின்படியும், அனுமதியின் பேரிலும், ஆதரவுடனும்தான், ராஜா சிதம்பரம் காங்கிரஸ் ஆபேட்சகராக நிற்கிறார் என்று தோன்றும். பெரியாரால் பாராட்டப்பட்ட இரூடம் ஆறுமுகம் பிள்ளையிடம் ஐந்து கேள்விக்கு ஒரு ரூபாய் அனுப்பி விடைபெற்றுக் கொள்ளலாம் என்று ஓர் விளம்பரம் விடுதலை வெளியிட்டால் என்ன எண்ணுவோம். ராஜா சிதம்பரம் இதையும் மிஞ்சும்படியான செயலலை மிகமிகச் சாமர்த்தியமாகச் செய்துவிட்டார். அவர் வெற்றி அது ஆனால் மக்கள் தந்த தீர்ப்போ, வேறு! அது மகத்தானதோர் பாடம்!!

ராஜா சிதம்பரம் திராவிடர் கழகம் நமக்கு எப்படியும் ஆதரவு தந்ததுôன் தீரும், ஏனெனில், திராவிடர் கழகத்துக்கு முன்னேற்றக் கழகம் என்றால் ஏட்டி, என்று ஓர் தவறான கணக்குப் போட்டார். மக்கள் வேறு ஓர் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ராஜா சிதம்பரம் போன்ற, காற்றடித்த பக்கம் திரும்பும் கனவான்கள், மக்களாட்சியின் மாண்புக்கே கேடு செய்பவர்கள், இத்தகையவர்களை ஒழித்துக் கட்டத் தான் வேண்டும் என்று முடிவு செய்தனர் - செய்து காட்டினர். மலை தகர்ந்தது, சிற்றுளி வென்றது! ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது.

என் தொகுதி மக்கள் என்னை அறிவார்கள் - மிக நன்றாக!

என் தொகுதி மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு - நான் அறிவேன்.

இந்த மாவட்டத் தேர்தலில் எனக்கு என் தொகுதி மக்கள், பெருவாரியான வாக்களித்து வெற்றி அளிக்கப்போகிறார்கள். அதிலிருந்தாவது அண்ணாத்துரை கூட்டத்தார் என் செல்வாக்கை அறிந்து கொள்ளட்டும் என்று அன்பர் ராஜா சிதம்பரம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினாராம்.

இப்போது, அதே தத்துவத்தின்படி அவர் என்ன செய்யவேண்டும்?

இந்தத் தேர்தலில் அவர், ஏக்காரணத்தாலோ வெற்றி பெற்றிருந்தால், பெருஞ் சிரிப்பாலேயே, நம்மை நையாண்டி செய்திருப்பார்!
நான் காங்கிரசில் சேர்ந்ததை மக்கள் ஆதரித்து விட்டார்கள் - தெரிகிறதா தெளிவற்றவனே! - என்று ஏசுவார்.
இப்போது, அவர் தோற்கடிக்கப்பட்டதால், அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததை, அந்தத் தொகுதி மக்கள், எந்தத் தொகுதி மக்கள் அவரை எம்.எல்.ஏ,. இக்கினரோ அதே மக்கள் கண்டிக்கிறார்கள் என்பதுதான் பொரள் நம்பிக்கை இல்லை என்று மக்கள் கூறிவிட்டனர்.
அரசியலில் நாணயம் இருக்கவேண்டும் என்ற கொள்கையில் ராஜாவுக்கு நம்பிக்கை இருக்குமானால், ரோஷத்தோடு தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, அதே தொகுதியில் காங்கிரஸ் ஆபேட்சகராகத் தேர்தலில் நிற்கவேண்டும். அதுதான் நேர்மை, பொது மக்களுக்குப் பொறுப்புணர்ந்தவர்கள் காட்ட வேண்டிய மரியாதை.

காங்கிரஸ் எதிர்ப்பாளர் என்ற முறையில்தான் ராஜாவுக்கு, லால்குடி வட்ட வாக்காளர்கள் முன்பு பெருவாரியான ஓட் அளித்தனர்.

அமைச்சர் இராமசாமியாவது, கதர்ச்சட்டையோ பட்டுச்சட்டையோ, கட்சிக்காக அல்ல. நான் என் குலத்துக்கு நன்மை செய்பவன் என்ற காரணத்தால், எனக்கு என் குலமக்கள் வெற்றி தேடித் தந்தனர் என்று (அரசியல் தத்துவமல்ல) அரசியல் அங்காடிப் பேச்சுப் பேசலாம்! ராஜா சிதம்பரம் அதுபோலவும் பேசமுடியாது ரெட்டியார்கள் தொகுதி அல்ல. லால்குடி!

ஆகவே, ராஜா அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததன் காரணங்களை விளக்கித் தொகுதி மக்களுக்குக் கூறிவிட்டு, காங்கிரஸ் ஆபேட்சகராகத் தேர்தலுக்கு நிற்க வேண்டும். முடியுமா என்று கேட்கின்றனர்! அறை கூவியும் அழைக்கின்றனர், அம்பில் தர்மலிங்கத்துக்கு வெற்றி தேடித்தந்த வாக்காளர்கள்!

மகத்தான அரசியல் பாடம் கிடைக்கும்படிச் செய்த தர்முவைப் பாராட்டுகிறேன். வெற்றிக்கு உழைத்த அன்பர்களுக்கெல்லாம் வணக்கம் கூறிக் கொள்கிறேன்.

அம்பில் தர்மலிங்கம், தோழர் கோவிந்தசாமி ஆரக்கோணம் கிருஷ்ணசாமி, ஏடப்பாடிதாண்டவன், திருவொற்றியூர் கணபதி போன்ற தோழர்களிடம் இவ்வளவு புயலுக்கு இடையிலும் பொதுமக்கள் நம்பிக்கை வைத்து ஆதரவளித்த மாண்பு எண்ணி எண்ணிப் பூரிக்கத்தக்கது. அந்த நம்பிக்கை மேலும் வளரும் வகையிலே, கிடைத்துள்ள வாய்ப்பைக் கொண்டு நமது நண்பர்கள் பணியாற்றி நற்பெயரெடுத்து, அதன்மூலம், கழகத்துக்கும் பொலிவும் வலிவும தேடித்தர வேண்டுகிறேன்.

மக்கள் தீர்ப்பின் மூலம் தேர்தலில் வெற்றிபெற, பொதுமக்களிடம் நெருங்கிய தொடர்பும் தோழமையும் மெத்தப் பயன்படும் என்ற பாடம் கிடைத்திருக்கிறது.

இந்த அரிய பாடத்தை ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள நமது கழகத் தோழர்கள் கூர்ந்து கவனித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.
ஒரு அரைடசன் பேர்வழிகள் எப்படியோ வெற்றி பெற்றுவிட்டார்கள். பூ! பூ! இது என்ன பிரமாதம்! இதற்கு ஏன் இவ்வளவு பீத்திக் கொள்கிறார்கள் என்று பேசித் தமது நெஞ்சு வலியைத் தீர்த்துக் கொள்ள முயலும் திருவாளர் என் மனக்கண்முன் தெரிகிறார்!

நான் மகிழ்வ, மாவட்ட ஆட்சி மன்றங்களைக் கழகம் கைப்பற்றி விட்டது என்று அல்ல - காங்கிரசிடம் தான் மாவட்ட ஆட்சி மன்றங்கள் சிக்கிவிட்டன - நான் மகிழ்வதற்குக் காரணம் அரியபாடம் பெறத்தக்க வகையிலே சில வெற்றிகள் கிடைத்துள்ளன என்பதால்.

இதே மாவட்ட ஆட்சி மன்றத் தேர்தலில், முன் கூட்டியே, நாம், திட்டமிட்டு, வசதிகளைத் தேடிக்கொண்டு, பணியாற்றி இருந்தால், பல இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும்.

ஆனால், அங்ஙனம் நாம் ஈடுபட்டிருந்தால், பெரியாரிடம் நம்மைப்பற்றி நயமாகவும் பயமாகவும் பேசி, அவரைக் கொண்டு நம்மை எதிர்த்தொழிக்கச் செய்யும் சீரழிவான செயலில் சிண்டுமுடிந்துவிடும் சிறுத்தொண்டர்கள் முனைந்து வேலை செய்திருப்பர். பூசல்கள் முளைத்திருக்கக் கூடும். ஏசலைத் தாங்கவேண்டி இருந்திருக்கும். எனினும் வெற்றி, பல இடங்களில் கிடைத்திருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறேன், எனினும், பகையும் பூசலும் கிளம்ப வேண்டும், பண்பு அழிந்தொழிய வேண்டும் என்று எண்ணும், கூடிக் குடி கெடுப்போரிடம் பெரியார் தம்மை ஒப்படைத்துவிட்டிருப்பதால், விபரீதம் கூடாது என்பதற்காகவே, விலகி இருப்பது நல்லது என்று கருதினேன். இல்லையெனில் மேலும் சிலபல வெற்றிகள் கிடைத்திருக்கும்.

ஏசல்மூலம் பூசல் ஏற்படவேண்டும் என்று எண்ணிடும் அவசரசாமிகளின் போக்கை ஏற்றுக் கொள்ள மறுத்து, லால்குடி, கஞ்சனூர் தொகுதிகளில் திராவிடர் கழக்தினரில் பலர், நமது தோôர்களுடன் ஒத்துழைத்த பண்பைப் பாராட்டுகிறேன். அவர்கள் காட்டிய நேர்மைக் குணத்துக்கு என் நன்றி.

இந்தச் சிறிய வெற்றியைக் கண்டு, தாவிக் குதிக்காதே! இது சகஜம் ஏழெட்டு இடங்களில், எப்படியோ சிலதுகள் தப்பிப் பிழைப்பதுண்டு என்று ஏளனம் பேசி, மன ஏரிச்சலுக்குச் சாந்தி தேடிடும் சிலர், உள்ர் இந்த வெற்றிக்கு நான் மகிழ்வதற்குக் காரணம், அபராமான அரசியல் தெளிவும், இரூடவல்லமையும் இருப்பதுபோல எண்ணிக் கொண்டு, ஒரு அவசரசாமி விடுதலையில் ஜில்லாபோர்டு தேர்தலில் ஒரு நல்ல பணவேட்டையும் பதவிவேட்டையும் ஆடிப்பார்த்து விடலாம் என்று மனக்கோட்டை கடடினார்களே கழகத்தைப் பிளந்து பாழாக்கிய கோடாரிக் காம்புக் கூட்டத்தார், இன்று அந்த மனக்கோட்டை என்னவாயிற்று? மறைமுகமான (முக்காடிட்டு) ஓட்டு லேபில்களில் தலைநீட்டுகின்ற 7,8 பேர்வழிகள்கூட மண்ணைக் கவ்வப் போகிறார்கள் என்று 23-9-54ல் தீட்டினார். இந்த இரூடத்துக்குப் பிறகு, இரூடமோ, சாபமோ நானறியேன்! நமது தோழர்கள் வாகை சூடினர் என்றால் மகிழாமலிருக்க முடியுமா! ஏதேதோ எண்ணத்தான் தோன்றுகிறது, ஆனால் ஊசல் நடையில் ஏசி உயிரை வாங்கிவிடுகிறேன் மாதம் அதற்காக மூன்று நூறாவது தந்தால் போதும் என்று கூறிப் பெற்று, மகத்தான தியாகம் செய்து வரும் மாவீரர் ஏழெட்டுச் சிறுவர்களா! உங்களுக்கு இத்தனை எண்ணங்களா, என்று கேட்பார்.

நமது எண்ணம், திராவிடத்துக்குப் பணியாற்றும் வாய்ப்பு நமக்கு அளிக்கப்டவேண்டும் என்பதுதான். அதை அளிக்கும் பொது மக்கள் மாவட்ட ஆட்சிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பு நமக்கு அளிக்கப்படவேண்டும் என்பதுதான், அதை அளிக்கும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சி மன்றத்தில் பணிபுரியவும் நம்மில் சிலருக்கு வாய்ப்பளித்துள்ளனர். அதுகண்டே அகமகிழ்கிறோம். ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி கூறிக் கொண்டு, வெற்றி பெற்ற தோழர்களை வாழ்த்துகிறேன். வணக்கம்.

(திராவிட நாடு - 17.10.54)