அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மந்த நிலை

இப்போது சில நாள்களாகப் போர் முனைகளில் மந்தநிலையே காண்ப்படுகிறது, சஷ்யப்போர், இத்தாலியப்போர், சீனப்போர், பர்மாபோர் மணிப்பூர்போர் ஆகிய எல்லாப் போர்முனைகளிலும் இந்த மந்தநிலை காணப்படுகிறது. குறிப்பாக மணிப்பூர்ப் பகுதியில் நடக்கும் போர் மந்தநிலையை உண்டாக்கக் காரணமேயில்லை. ஏனென்றால் இந்தியாவில் தற்போதிருக்கும் படைபலம், எதிரிகளை இரண்டே நாளில் விரட்டியடிக்கக் கூடிய ஜப்பானியர் வந்து வாலட்டிக் கொண்டிருப்பதன் காரணம் என்னவென்பது தெரிவில்லை. ஜப்பானியருக்கு ஏமாற்றத்தை உண்டாக்குதற்காகவே இந்த முறை கையாளப் படுகின்ற தென்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது. ஜப்பானியர் மணிப்பூரை தவிர வேறு காரணம் எதுவும் இருக்கமுடியாது. ஜப்பானியர் மணிப்பூரை நோக்கிப் படையெடுத்து வந்த அதே நேரத்திலேயே அவர்கள் விரட்டியடிக்கப் பட்டிருக்க வேண்டியவர்கள், இவ்வளவு நாள்களுக்கு அவர்களின் நடமாட்டத்தை விட்டுவைத்திருப்பது, பிரிட்டிஷாரின் பலக்குறைவினால்தான் என்று எவரும் சொல்ல முடியாது.

நாற்பது கோடி மக்களைக் கொண்ட ஒரு பெரிய நாட்டையும், அதனைப் பாதுகாத்து, அதனால் பயன் அடையவேண்டும் என்ற நினைப்போடு கூடிய பிரிட்டிஷார், மலையைக் கல்வி எலியைப் பிடிக்க எண்ணுவது போன்ற முயற்சியில் வந்துள்ள ஜப்பானியரை இன்றம் இந்த நாட்டில் நடமாட விட்டுக்கொண்டிருப்பது உண்மையிலேயே வருநதத்தக்க விஷயமாகும்.

மந்த நிலையை வளரவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு இது சமயமல்லவென்பதைப் பிரிட்டிஷார் உணர வேண்டும். இந்நாடு பலதுறைகளிலும் சிக்குண்டு துன்புறுவதை பிரிட்டிஷார் உணராமல் இருக்க முடியாது. உலகப் பஞ்சத்துக்கு உணவளிக்கும் ஒரு நாடு, தன்பசியையே தீர்த்துககொள்ள முடியாது அல்லற்படும நிலைமை ஏற்படுமானால் உலமை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதைச் சிந்தித்துப பார்க்கும்போது உண்மையிலேயே பயங்கரமாக இருக்கிறது. இந்த நிலையை இன்றம் வளரவிடாமல் தடுப்பதற்குரிய முறைகளைப் பிரிட்டிஷார் உடனடியாக கைக்கொள்வதே முறையாகும்.

இந்நாட்டின் பாதுகாப்பு, பிரிட்டிஷாரின் பாதுகாப்பு மட்டுமன்றி, உலகப் பாதுகாப்புமாகும் என்பதை நாம் பல முறை எடுத்துக் கூறியுள்ளோம். எனவே, மணிப்பூர்ப் பிரதேசப் போர் முனையில் ஏற்பட்டுள்ள மந்த நிலைக்கு ஒரு அந்தம் தேடி, ஜப்பானியர் இந்நாட்டீப் பக்கமே தலைகாட்ட முடியாதபடி செய்வது பிரிட்டிஷாரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும் என்பதை வற்புறுத்திக் கூறுகிறோம்.

(திராவிடநாடு - 28.05.1944)