அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்

மறுமலர்ச்சி வைபவம்

19.07.1944 நகைச்சுவை அரசர் தோழர் என்.எஸ்.கிருஷ்ணன், செயல் துறையிலே நுழைந்தார், வைபவமாக!

சென்னையிலே, இலட்சுமி காந்தன், இழந்த காதல், பம்பாய் மெயில், முதலிய நாடகங்களை நடத்திவரும், மங்கள பாலகான சபையார், தமது சபையை விரிவுபடுததி, விமரிசையாக நடத்தவும், நடிகர்களின் நிலையை உயர்த்தவும் விரும்பினர். இந்த மறுமலர்ச்சிக்குக் கைகொடுத்தார், நமது என்.எஸ்.கே. கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். நிதியும் மதியும் அளித்த கம்பெனி என்ன கதியாகுமோ என்ற சஞ்சலத்தை ஒழித்தார். ஆனால் முதலாளித்தனம் எனும் சதிச் செயலுக்கு அல்ல! நடிகர்களின் வாழ்வு நல்லவிதமாக அமைதல் வேண்டும் என்ற நன்னோக்கத்துடன்.

இந்த மறுமலர்ச்சி வைபவம் ஒற்றைவாடை தியேட்டரில் 19.07.1944 மாலை 5 மணிக்குத் தோழர் சி.என்.அண்ணாதுரையின் தலைமையில் நடிகர்களும், குழுமியிருந்தனர். தேனீர் விருந்துக்குப் பிறகு, மறுமலர்ச்சி விழாவுக்குத் தோழர அண்ணாத்துரை தலைமை வகித்து, கலை, காலத்துக்கேற்றபடி மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசி, நடிகர்களின் நலனைப் பாதுகாக்க முன்வந்த தோழர் என்.எஸ்.கே. அவர்களைப் பாராட்டிப் பேசினார். மங்கள பாலகான சபாவின் நடிக நாயகம் தோழர். டி.கே.சந்தானம், அவர்கள் தோழர் என்.எஸ்.கே. அவர்கட்கு ஒரு வாழ்த்திதழ் அளித்தார். நாடக ஆசிரியரும், எண்ணற்ற பலநடிகர்களைத் தமிழ்நாடு அடையுமாறு செய்தவரும், கலைக்குச் சலியாது உழைப்பவருமான தோழர் டி.பி.பொன்னுசாமிபிள்ளை அவர்கள், கம்பெனி நிர்வாகத்தைத் தோழர் என்.எஸ்.கே. அவர்கள் ஏற்றுக்கொள்வதால் உண்டாகக்கூடிய நலன்களை விளக்கி உணர்ச்சி ததும்பப் பேசினார்.

இராபம் முழுவதும் உங்களுக்கு நஷ்டம் வந்தால் நான் ஏற்றுக்கொள்வதால் உண்டாகக்கூடிய நலன்களை விளக்கி உணர்ச்சி ததும்பப் பேசினார்

இலாபம் முழுவதும் உங்களுக்கு நஷ்டம் வந்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன். இக்கம்பெனிக்கு நான் அல்ல முதலாளி, இதிலே உள்ள 100 நடிகர்களுமே முதலாளிகள், நாடகக் கலை மாநாட்டிலே நான் கூறியவற்றைச் செயலிலே காடட இது எனக்கு ஓர் வாய்ப்பு என்று கூறினார் நகைச்சுவை அரசர் நன்றி கூறலுடன் மறுமலர்ச்சி வைபவம் முடிந்தது.

(செய்தி - திராவிடநாடு - 23.07.1944)