அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மூன்றாவது ஆண்டு!

மூன்றாவது ஆண்டு ஆரம்பமாகிவிட்டது. திராவிடநாடு இதழுக்கு கொந்தளிப்பிலே பிறந்து, தத்தளித்துத் தள்ளாடி நடந்து வழுக்கு நிலத்திலே சருககி விழாது, அன்பர்களின் உதவி எனும் ஊன்றுகோலின் உறுதுணையால், கடமை எனும் களத்திலே, திராவிடநாடு முன்னேறி மூன்றாமாண்டெனும் இடத்திலே இன்று நின்று, கடந்து வந்த இடத்தை ஒரு கணம் பார்த்துவிட்டுப் பெருமூச்செறிகிறது, ஆனால் மறுகணம் புன்னகை கொள்கிறது. முன்னதன் காரணம் பட்ட கஷ்டம், புன்னகையின் காரணம், உமது ஆதரவு! இனிச் செல்லவேண்டிய இடம், சொல்லவேண்டிய பொறுப்பு, திராவிடநாடு நடைபெற உதவி புரிந்துவரும நண்பர்களுடையதே!
ஒரு கணம் நின்று பார்த்ததிலே, உள்ளத்திலே தோன்றித் தாண்டவமாடிய எண்ணங்கள் எத்துணை என்ற கருதுகிறீர்கள்! அசைத்த தலையும், சிமிட்டிய கண்களுமாக நின்று, கிழமை இதழையாவது இந்தக் காலத்திலே ஒரு தொண்டன் நடத்துவதாவது என்று கேலி பேசினவர்கள் கொஞ்சமா! அவர்களின் பயமுறுத்துதலை உறுதிப்படுததும் பிதத்திலே, பாராட்டுக் கடிதத்திலே கடைசி வரியாக, பணம் அடுதத மாதத்திலே பழைய பாக்கியுடன் சேர்த்தனுப்பி வைக்கிறேன் என்று எழுதியவர்களின் எண்ணிக்கை இல்லை என்ற கூறிவிட முடியுமா? காகிதப் பஞ்சமும பணமுடையும் நம்மைச் சீமான்களிடம் தஞ்சம் புக வைத்தே தீரும் என்று ராஜதந்திரம் பேசினவர்கள் உண்டு! விளம்பரமே இல்லை. இதுபோல், பத்திரிகை நடத்துவதால் வரும பெரும தொல்லை! கேளப்பா என் சொல்லை என்று புத்தி கூறினவர்கள் உண்டு. ஆம்! திராவிடநாடு, துவக்கத்திலே பட்ட தொல்லை கதட்சிக்காகவும் கொள்கைக்காகவும் நடத்தப்படும் எந்தப் பத்திரிகைக்கும், இயல்பாக ஏற்படக் கூடியதேயாகையால் நாம் மனமுடையவில்லை, என்ன நேரிடுமோ என்பபடி ஆகுமோ என்று மருளவில்லை, எவ்வளவோ உழைத்தும் உருவான பலனைக் காணோமே என்று சரித்துக கொள்ளவுமில்லை, கடமையைச் செய்வோம், விளைவுபற்றிய கவலை நமக்கு வேண்டாம், காலத்தின் கருவியாக இருப்போம், புரட்சிப் பொறியாக விளங்குவோம், புன்னகையில் இலயித்துவிடவும் வேண்டாம், பொல்லாங்கும் பொறுப்பு அன்பர்களுக்குரியது என்ற எண்ணத்திலே பணிபுரியலானோம், அன்பர்கள் கை கொடுத்தனர். கணக்குப் புத்தகம் இப்போதும் கடுகடுதத முகத்தைத்தான் காட்டுகிறது, ஏஜெணடு தோழரகளிலே பலர், இன்னமும பணத்தைச் சரியாக அனுப்பவில்லை. வாசகர்கள் பணத்தைச் செலுத்தவில்லை என்ற சமாதானம் கூறுகிறார்கள், இந்நிலையை வளரவிடுவது சரியில்லை என்று கூறாதிருக்க முடியவுல்லை. இந்தச் சரத்தை நாம் பெற்று, சித்தம் சிதைந்த நேரத்திலே, செந்தமிழ் நாட்டுத் தோழரகள் தந்த பேருதவியை நாம் என்றும் மறப்பதற்கில்லை. எனது நன்றியறிதலை அதற்கு ஈடாகத் தருவதாகக் கூறுவது, பெற்ற உதவியின் மதிப்பைச் சரிவர உணராத குற்றத்தின்பால் எம்மைச் சேர்க்கும் என்று அஞ்சுவதால், எந்த இலட்சியத்துக்காக திராவிட நாடு பணிபுரிகிறதென்று அன்ப கொண்ட உதவி அளிக்கப்பட்டதோ, அந்த இலட்சியத்தை வழுவிடா. காப்பாற்றம் கடமையிலே நாம் சளைக்க மாட்டோம் என்ற உறுதியைத் தெரிவிப்பதே சிறந்ததென்ற கருதுகிறோம்.

திராவிட நாடு தன்மான முரசாகத் திகழவேண்டுமென்பது நமது குறிக்கோள். சமுதாயக் கோளாறுகளை விளக்கி, புத்துலக ஆரவத்தைக் கிளப்பி, பீசுரரின் ஆதிக்கத்தை அழித்துத் திராவிட இன எழுச்சியை அடிப்படையாகக் கொண்ட இன அரசை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்கு உதவி செய்யும் விதமாகவே அரசியல் காரியம் இருக்கவேண்டும் என்பது நமது நோக்கம். இந்த இலட்சியத்துக்கு இடையூறாக இருக்கும் எதனையும் எடுத்தெறிந்துவிட்டு நடக்கவேண்டும் என்பது நமது வேலைத் திட்டம். இந்தக் காரியத்தைத் திராவிடநாடு செய்து வந்திருக்கிறது, இனியும் செய்யும், நெம்மையாகச் செய்ய முயற்சித்து வருகிறது. திராவிடநாடு இதழின், தோற்றத்திற்கு முதற் காரணம் நமது நண்பரும், செல்வமும் சுயமரியாதை ஆரவமும் நிரம்பியவரும் இளைஞருமாகிய தோழர டி.பி.எஸ்.பொன்னப்பனாரின் தூண்டுதல்தான்! பத்திரிகையின் ஆரம்ப காலக் கஷ்டங்களின்போது உதவி பலவிரிந்தவர். பார்சல் கட்டுவது முதற்கொண்டு பாரமான பேப்பர்க்கட்டுகளை புரட்டுவது வரையிலே பணிபுரிவது கண்டு ஆச்சரியப்பட்டவர்கள் சிலர், ஏன் இந்த ஆளுக்கு இந்தச் சிரமம் என்று ஆயாசமடைந்தவர்கள் பலர், இந்தப் பத்திரிகை வேலையில் இவர் ஈடுபட்டிராவிட்டால், நாம் இவருடன் இன்னம் அதிகமாகப் பொழுது போக்கலாமே என்று கருதிய சுகபோகிகள் சிலர் இந்தச் சுற்றுச்சார்புக்கும், அவர் மனதிலே இருக்கும் இலட்சியத்துக்கும் இடையே இடையறாதபோர்! ஒவ்வோர் சமயம் ஒவ்வோர் சக்தி வெற்றி பெறும். இந்த நிலமையை உணர்ந்து இலட்சியமே இறுதியில் வெல்லும் என்ற நாம் நம்பி வந்தோம், அதற்கேற்பவே, அவருடைய உதவியும் திராவிட நாடு தோன்றவும், வளரவும் காரணமாக இருந்தது. இன்றும், பணிமனை, அவருடைய இல்லத்திலேதான்.

மற்றும் காஞ்சியுலுள்ள தமிழரியக்கத் தோழரகள் பலரும், திராவிடநாடு பத்திரிகைக்கு அவ்வப்போது ஆறிறிவந்த உதவியை நாம் பாராட்டவும், நன்றிகூறவும் கடமைப்பட்டிருக்கிறோம். முக்கியமாகப் பணிமனையிலே இருந்துவரும் ஈழத்தடிகளின் உதவி குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் ஆண்டு ஆரம்பத்திலே, நாம், ஒரு நிரந்தர உதவி அமைப்புத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது அன்பர்களின் நினைவிலிருக்குமெனக் கருதுகிறோம். அதாவது, இயக்கப் பத்திரிக்கைகட்கு இடையறாத தொல்லைகள் நேரிட்டு வருவது இயல்வு. ஆதலால், இயக்க அன்பர்களின் உதவி பெற்றே தீரவேண்டிய அவசியமிருக்கிறது, இதற்காகத் தனியாக உதவி திரட்டுவதற்குப் பதிலாக பத்திரிகையின் உதவிநிதி திரட்டுவதுடன் பிரச்சாரமும் நடைபெறக் கூடிய விதத்திலே, ஒரு நாடகக் கழகம் நிறுவியுள்ளோம், அன்பர்கள் ஆங்காங்கு நாடகங்கட்கு ஏற்பாடு செய்வதென்மூலம், ஒரே சமயத்தில் இரண்டு நன்மை புருந்தவராவர் என்ற எடுத்துக்காட்டினோம். சந்திரோதயம் என்ற நானகம், இரண்டு மூன்று மாநாடுகளிலே காணக்கூடிய பிரச்சாரத்தைச் சிலமணி நேரங்களிலே புகுத்தக்கூடிய விதமானது. இதனை நடத்துவதன் மூலம், பத்திரிகைக்கு உதவி செய்வதுடன், கொள்கைகளைப் பரப்பும் பேருதவியும் செய்தவராவீர் என்று விளக்கி இருந்தோம். அன்பர்களும் இக்கருத்தைக் கொண்டு, திருவத்திபுரம் திருக்சி, சிதம்பரம், ஈரோடு, சென்னை ஆகிய இடங்களிலே நாடகத்தை நடத்தி வந்தனர், நல்லமுறையிலே. இவ்வாணடு மேலும் பல ஊர்களிலே நாடகம் நடத்தப்படவேண்டும். நண்பர்கள் இதற்கான உதவிபுரிய வேண்டுகிறோம்.

திராவிட நடிகர் கழகம் என்ற அமைப்பிலே இருந்து பத்திரிகைக்குப் பண உதவி கிடைக்கும்படி செய்துவரும் நண்பர்களக்க, நமது நன்றியைத் தெரிவித்துக கொள்கிறோம், சிலரை, உங்கட்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம், நாடகத்திலே ஆரியப் புரோகிதராக நடிக்கும் அண்ணாமலை எனும் நண்பர், வேடத்திலே வயோதிகராகத் தோற்றமளிப்பர்; வாலிபர், அழுகான ஆரிய நடை நடந்து காட்டுவார் நாடகத்திலே, வாழ்க்கையிலே தமிழ்ப் பண்புமிளிரும் விதத்திலே இருப்பவர். திடீரென முளைத்து காலை பயிராகி மாலையிலே கருகும் ஆரவக்காரல்ல, ஆழ்ந்தபற்று கொண்டவர், இந்தி எதிர்ப்புக் காலத்திலே சிறைசென்றவர், செந்தமிழில் ஆரவமும் பொதுப்பணியில் பிரியம்கொண்டவர், காஞ்சிவாசி, இயக்கத் தொண்டர்களின் விசுவாசி, வாழ்க்கையை நடத்த வாணிபத்துறையிலே ஈடுபட்டுள்ள ஒரு வீர இளைஞர். அவருக்கு மனைவியாக நாடகத்திலே! நடிக்கம் நண்பர் துரைக்கண்ணு என்பவர், கோவை நகரிலே, மின்சார அமைப்பொன்றிலே பணிவுரிபவர், நல்ல மனப்பாங்கும் இயக்கப் பற்றம் கொண்டவர். புரோகிதருக்கு உதவியாக வரும், சரவாதி வேடமணிபவர், நீண்ட நாளையச் சுயமரியாதைக்கார். குடிஅரசு வாசகர், முனிசிபல் உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்று, ஓய்வை இயக்கத்துக்குச் செலவிடும் வயோதிகர், பண்பிலல்ல. பருவத்தில் மட்டும் பெயர் பார்த்தசாரதி முதலியார் என்று குடும்பத்தினர் கூறுவர். அவருக்கு அந்த வால் கூடாது என்ற கொள்கை, ஆகவேதான் நாம் அதனைச் சேர்தோமில்லை. மிராசுதாரரும், முனிசிபல் கவுன்சிலராக இருந்தவரும், கள்ளமறியா உள்ளமும், பணி செய்கையில் பள்ளம் மேடறியாமல் பாஙயும் சுபாவமும் கொண்டவரும், இயற்கையான நடிப்புத்திறன் கொண்டவருமான தோழர் இராசகோபால் நாடகத்திலே புரோகிதரை ஆட்டிப் படைப்பதைக் கண்டவர்கள் மறக்க முடியாது, காணாதவர்கள் கண்டுதீர வேண்டும், அவ்வளவு அருமை அதிலே இருக்கிறது வாழ்க்கையிலே, புரோகிதத்தை நீக்க முயலுகிறார் என்ற அளவே கூறவேண்டியிருப்பதற்காக, வருந்துகிறோம்; மற்றும் சுந்தரேசன், கோவிந்தராஜன, நாராயணசாமி, முனுசாமி எனும் பல தோழர்கள், கழகத்திலே உள்ளனர். நாடகத்திலே கதாநாயகனாகக் காட்சி தரும் தோழர் சாமிநாதன், பத்தாம் வகுப்புத் தேறியவர், மேற்படிப்புக்குப் போக வேண்டியவர், நாடகத்திலே அபாரமான பிரியம் கொண்டவர், நமது இயக்கத்திலே பற்றுக் கொண்டவர், கதாநாயகியாக நடிப்பவர், சௌராஷ்டிரர் என்ற சொன்னால் பலர் நம்பமாட்டார்கள், தமிழ் அவ்வளவு தெளிவாகப் பேசுபவர், வாலிபத்தின் வாசற்படியிலே நிற்பவர், நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர், பொதுமேடைகளிலே பேசும் பக்குவம் வாய்ந்தவர், பெயர் வெங்கட்ராமன், ஈழத்தடிகளம், பொன்னப்பனாரும், முன்பே குறிப்புடப்பட்டுவிட்டதால் இந்தப் பட்டியிலே சேர்க்கவில்லை. வியாபாரத் தொழிலில் ஈடுபட்டவரும் கௌவர மாஜிஸ்ட்ரேட்டாக இருப்பவரும், சுயமரியாதைக் (சொல்லிலும் செயலிலும்) பெரியாரின் பெரும் படையிலே நெடுநாட்களுக்கு முன்பே சேர்ந்தவருமான தோழர போளூர் சுப்பிரமணியம், வேலைக்கார வீராசாமியாக நடிக்கிறார். ஆசாமி பலே வேலைக்காரன், என்ற புகழாதார் இல்லை. அவ்வளவு நடிப்புத் திறமை இயற்கையாகவே அமைந்திருககிறது இவரிடம் பக்திப் பிரபாவத்திலே பலநாள் இருந்து பார்த்துப் பின்னர், பகுத்தறிவே சிறந்த பாதை எனக்கண்டு, நமது இயக்கத்திலே புகுந்து சீர்திருத்தக்காரரின் திருமகனார், தோழர நீனுவாசன் என்பவர், மடாதிபதியாக நடிக்கிறார். இந்திரியங்களெனும் துட்டக் குதிரைகளுக்கு அறிவெனும் கடிவாளம் இட்டு அடக்க வேண்டும் என்று உபதேசம் புரிவார், தம்பிரான்கள் பாடங்கேட்கக் கூட வருவார்கள், அவ்வளவு திறமையாக நடிக்கிறார். மற்றும் பலர், இவர்கள் யாவருக்கும் திராவிடநாடு தனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கெள்கிறது. கட்டுப்பாடான அமைபின் மூலம், எத்தகைய பலனைப் பெறலாம் என்பதற்கு எடுத்துக காட்டாக கழகம் இன்று விளங்குகிறது. எம்.எஸ்பி.எஸ். சபையிலே பல வருடம் இருந்து இப்போது வெளியேறிய, வீரவாலிபர், பகுத்தறிவைப் பேச்சாலும் எழுத்தாலும, நாடகத்தாலும் நாட்டுக்கப் பரப்ப வேண்டும் எனற நோக்கமுடைய, நடிகர் நாராயணசாமி, கழுத்திலே சேர்ந்துள்ளார், பணிபுரிய, பல தோழரைப் பயிற்றுவிக்க இயக்கத் தலைவர்களின் பேருதவி பெற்றுத் தொழில் முறையிலே சீர்திருத்த நாடகக் குழு அமைக்க அவருடைய உதவி, திராவிட நடிகர் கழகத்தை வளப்படுத்தும் நாடக சமயத்திலே, ஆங்காங்கு உதவிவுரிந்த அன்பர்களுக்கெல்லாம் திராவிடநாடு நன்றி கூறுகிறது. நாடக சமயத்திலே சமயத்திலே நன்கொடை தந்தும் டிக்கட்டுக்கள் வாங்கியும் உதவிசெய்த நண்பர்களுக்கும், திராவிட நாடு பத்திரிகைக்கென்று தனியாகவே உதவி அனுப்பிய பேரன்பர்களக்கம் கட்டுரைகள் உதவிய எழுத்தாளர்கட்கும், கவிதைகள் தந்துதவிய கவி கனகசுப்புரத்தினம்(பாரததிதாசன்) அவர்கட்கும், எமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இயக்கப் பத்திரிகைகளை விற்பனை செய்வதிலுள்ள கிரமம், நாம் அறிந்ததே. அந்தச் சிரமத்தை ஏற்று நமக்கு ஏஜெண்டுகளாக இருந்துவரும் தோழர்கள் நமக்குப் புரியும் உதவிக்கா அவர்களுக்கு எமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம், பல சக்திகள் பல துறைகளிலே நின்று இயங்கம் நிலை தமிழகத்திலே உண்டானதற்கு மூல காரணமாக இருக்கம், பெரியார் அவர்கள் நமக்க அவ்வப்போது புரிந்துவரும் பேருதவிக்காக அவருக்கு எமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(திராவிட நாடு - 12.03.1944)