அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மூன்றாவது முறை ‘சவுக்கடி’ வழக்கு!

தங்கப்பழம், சிவசாமிமீது அடக்குமுறை!
சர்க்காரின் கேலிக்கூத்து!

தோழர்கள் சிவசாமி, தங்கப்பழம் ஆகியோர் எழுதி வெளியிட்ட “சவுக்கடி” என்ற புத்தகம் மீது ஏற்கனவே ஒருமுறை வழக்குத் தொடரப்பட்டு பின்னால் அது தள்ளுபடி செய்யப்பட்ட விபரமும். தள்ளுபடி செய்த மறுநாளே மீண்டும் சம்மன் சார்வு செய்து வழக்கைத் திரும்பவும் விசாரணைக்கு எடுத்ததும், அதை ஆட்சேபித்துச் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர்கள் அப்பீல் செய்து வழக்கைத் திரும்பவும் எடுக்கக் கூடாது என்று குtச்தூ Oணூஞீஞுணூ வாங்கியதும் நாம் அறிந்தவையே!

உயர் நீதிமன்ற விசாரணையிலும் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார்கள். மீண்டும் இந்த சர்க்காரால் சும்மா இருக்க முடியவில்லை. மூன்றாவது முறையாக வழக்கைத் தொடர்ந்து விட்டார்கள். ஆச்சர்யம்! 153 ஏ. 292, 295 ஆகிய மூன்று செக்ஷன்களை பிரயோகித்து சம்மன் சார்பு செய்துவிட்டார்கள். விசித்திரம்! 16.10.50 ல் தூத்துக்குடி அடிஷனல் மாஜிஸ்டிரேட் முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது.

(திராவிடநாடு 15.10.50)