அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மொழியும் வாழ்க்கை வழியும்!

முகஸ்துதி
ஸ்தோத்திரம்
அர்ச்சனை
ஆராதனை
ஆபிஷேகம்

இவை தமிழ்ச் சொற்கள் அல்ல, வடமொழிச் சொற்கள் என்று எடுத்துக்காட்டுவதேகூட தேவைய்றறதாக, தீது பயப்பதாக உள்நோக்கம் கொண்டதாகக் கருதப்பட்டு வந்த நாட்களும் உண். இந்தப் போக்கு வகுப்புவாதம் என்று கண்டித்திடுவதில் பலர் முனைந்து நின்றனர். அந்தப் போக்கினரே இன்று மருந்துக்குக்கூட இல்லை என்று கூறிடமுடியாது. அத்தகையோரின் தொகை குறைந்து விட்டிருக்கிறது. வேகம் மட்டுப்பட்டுப் போய்விட்டிருக்கிறது.

சுவாமி வேதாசம் என்ற தமது பெயரை மறைமறை அடிகள் என்று தனித்தமிழாக்கிக் கொண்டபோது எழுந்தது போன்ற கசப்புணர்ச்சியும் கோபப்புயலும், அமைச்சர் - மன்றம் கழகம் - பொறியியல் - பல்கலைக்கழகம் - வேட்பாளர் - என்ற தமிழ்ச் சொற்கள் தரப்பட்டபோது எழவில்லை.

சுவாமி வேதாசலம், மமைறை அடிகளானது மட்டுமல்ல, நடைபெற்ற நிகழ்ச்சி, சூரிய நாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் இனதும் நடைபெற்றது.

தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து பயன்படுத்தத் தொடங்கிய கட்டத்திலிருந்து அதன் தொடர்பான அடுத்த கட்டம் சென்றி முனைவதும் துவக்கத்தில் என்னமோ போலத் தோன்றினாலும், நாளாவட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும் என்பதிலே ஏள்ளளவும் ஐயமில்லை.

தனித் தமிழச் சொற்கள், சில பொருள்களுக்கு, சில நிலைமைகளுக்குச் சில முறைகளுக்கு இல்லை என்பது, தமிழ் மொழியின் வளமற்ற தன்மைககு எடுத்துக் காட்டு அல்ல, தமிழருடைய எண்ணக் களஞ்சியத்தில், அந்தப் பொருள்கள், நிலைமைகள், முறைகள் இருந்திடவில்லை என்பதற்கான விளக்கமேயாகும். பெங்குவின் எனும் பிராணிக்குரிய சொல் தமிழ்மொழியிலே இல்லை என்பதால் தமிழ்மொழியும் தாழ்ந்துவிடாது, பெங்குவினும் உயர்ந்துவிடாது.

தமிழர்க்கு உரியனவற்றினை உணர்த்தப் போதுமான சொல் வளம் தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்குச் சான்றுகள் நிரம்ப.

தமிழ் மொழியிலே மற்ற மொழிகள் சிலவற்றிலே காணக்கிடக்கும் சில சொற்கள் இல்லை என்பதற்குக் காரணம், தமிழர்க்கு அவை தேவைப்படவில்லை என்பதாக இருக்கக்கூடும், இருக்கவேண்டும் என்றே கூறலாம்.

வேற்று மொழிகளில் உள்ள சில சொற்கள் என்ன பொருளை அல்லது முறையை, அல்லது தன்மையைக் குறித்திடுகிறதோ அதே பொருள், மறை, தன்மை தமிழர்க்கும் உரித்தானதாக இருந்திடும்போதும், அவைகளுக்கான தனித் தமிழ்ச் சொற்கள் இருந்து வந்திருக்கின்றன. ராஜாவுக்காக மன்னன் இருப்பதும் சபைக்காக அவை இருப்பதும் நட்சத்திரத்துக்காக விண்மீன் இருப்பதும், அறிகிறோம்.

ஆகவே, தமிழ்ச் சொற்களால் குறிப்பிடப்பட்ட முடியாதன யாவுமே தமிழகத்தில் இருந்ததில்லை என்றும் முடிவு செய்துவிட முடியாது. சில, தமிழர்க்கே உரியன என்ற நிலையின! சில தமிழர்க்கும் பிற மொழியாளர்க்கும் உரியன. சில தமிழர்க்கு உரியன அல்ல. பிற மொழியாளர்க்கு உரியன!

உரியன என்று குறிப்பிடும்போது, தகுதி, பயன் ஆகிய எதனையும் குறிப்பிலே கொள்ளவில்லை.
தகுதி கருதியும் பயன் கருதியும், தமிழரல்லாதாரிடமிருந்து பெறப்படத் தக்கனவற்றைத் தள்ளிவிடவேண்டும் என்ற வறட்டுப் போக்குத் தேவையில்லை. எங்கு கிடைப்பினும், ஏவரிடமிருந்து பெறப்படுவதாயினும், எம்மொழியில் உள்தெனினும், பயன் தரக்தக்கதெனின் கொள்ள வேண்டும். ஊர்க்கோடியில் உள்ளது, நம் இல்லத்துக் கொல்லையிலே அல்ல என்பதாலே ஆறு சென்று நீராடாதிருத்தல் அறிவாளர் மேற்கொள்ளத்தக்க போக்கு அல்ல. ஆனால், ஆறு ஆழகாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இல்லத்திற்கு ஆள் அனுப்பி கிணற்று நீரைக் கொண்டு வரச்செய்துதான் குறிப்பேன் - என் இல்லத்துக் கிணற்று நீரன்றிப் பிறிதோர் நீர் வேண்டேன் என்று கூறுவது அறியாமை.

மன்னன் என்ற தமிழ்ச் சொல்லுக்கு ராஜா என்ற வடமொழிச் சொல் இருப்பதுபோல, வேறு பல தமிழ்ச் சொற்களுக்கு ஒப்ப வடமொழிச் சொற்கள் உள்ளன என்பது, இரு வேறு மொழியினரும் ஒருசேர ஆச்சொற்களுக்கு உரிய பொருளையோ, நிலையையோ, முறையையோ கொண்டிருந்தனர் என்பதனை விளக்கிக் காட்டுகிறது.

அந்த முறைப்படி, வடமொழிச் சொல்லான முகஸ்துதி என்பதற்கு ஒப்பான தமிழ்ச் சொல் உண்டா என்று எண்ணிப் பார்ப்பது சுவையும், பயனும் தரத்தக்கது மொழிப் புலவர்கள் இதுபற்றிய கருத்தறிவித்திடவே பொருத்தமாக இருக்கும்.

பொதுவாகப் பேசும்போது, அந்த முகஸ்துதி எல்லாம் என்னிடம் வேண்டாம் என்றும், உன் முகஸ்துதியிலே மயங்குபவன் நான் அல்ல என்றும், குறிப்பிடுகிறார்கள். முகஸ்துதி என்பது வேண்டப்படாதது, தேவைப்படாதது, தரம் குறைந்தது என்ற எண்ணம் கொண்டே, இந்த முகஸ்துதி வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

முகஸ்துதி - மயக்கமூட்டத்தக்கது என்ற கருத்தும் அந்தப் பேச்சிலே தொக்கி நிற்கிறது.

இந்த முகஸ்துதி என்பதும் புகழ்தல் - பாராட்டுதல் என்பன போன்ற தமிழ்ச் சொற்களும் ஒரே பொருளுடையனவா என்பதுப்றறி எண்ணிப் பார்ப்பதும் சுவையும் பயனும் அளித்திட வல்லதே.

முகஸ்துதி எதையோ எதிர்பார்த்து மேற்கொள்ளப்படுகிறது என்பதும், முழு உண்மையை அடிப்படையாகக் கொண்டு கூறப்படுவது அல்ல, மகிழ்ச்சி எட்டிடத்தக்க இனிப்பினைக் கூட்டித் தந்திடும் முறை என்றும் அறிகிறோம்.

புகழ்தல் - பாராட்டுதல் - வியந்துரைத்தல் - என்று கூறிடும்போது, முகஸ்துதி ஏன்றிக சொல்லைக் கேட்டதும் ஏழுகிற விதமான எண்ணம் எழக்காணோம்.

ஏனப்பா புகழ்கிறாய்? என்று கேட்பது, எதற்காக இந்த முகஸ்துதி? என்று கேட்டிடுவதற்கு ஒப்பானதாகத் தோன்றவில்லை. ஏன் இந்த முகஸ்துதி? என்று கூறும்போது பெறப்படும் கருத்தின் முழு அளிவனைப் பெற் வேண்டுமானால் ஏன் புகழ்கிறாய் என்று அல்ல, ஏன் இந்த வீண் புகழ்ச்சி? என்று கூறிடவேண்டி வருகிறது. இதிலிருந்து முகஸ்துதி என்பதற்கு, வீண் புகழ்ச்சி என்று தமிழில் கூறிடலாம் என்று தோன்றுகிறது ஒரு ஆடைமொழி சேர்த்துக் கொள்ள வேண்டி வருகிறது.

ஒருவர் மற்றொருவரைப் பற்றி வேறொருவரிடம் புகழ்ந்து பேசலாம், ஆனால், முகஸ்துதி அவ்விதம் அல்ல, ஒருவர் மற்றொருவரிடம் அவரைப் பற்றியே ஸ்துதி பாடிட வேண்டும் இது ஒரு நுண்ணிய வேறுபாட்டினை எடுத்துக் காட்டுகிறது.

இது குறித்து இவ்வளவு ஏன் கிளறவேண்டும் என்றுகூடத் தோன்றும். ஆனால், இதிலே தெளிவு ஏற்படுவது பயன் அளிக்கத்தக்கது.

தமிழ் மரபு புகழ் உட்டிடல் - இசைபட வாழ்தல் ஆஅது பண்புகளிலே ஒன்று, வாழ்க்கையில் கொள்ளத்தக்க குறிக்கோளில் ஒன்று. எனவே புகழ் பெற்றிட முனைவதும், பெறும்போது மகிழ்ச்சியில் திளைப்பதும், புகழ் உட்டிட வேண்டுமெனப் பிறர்க்குப் ஊரைப்பதும், தமிழர் கொண்டிடத்தக்க நெறி.

அந்தப் புகழ் பெறும்போது, முகஸ்துதி என்பதும் புகழ்ச்சி என்பதும் முழுக்க முழுக்க ஒன்றல்ல என்ற நினைவு இருந்திட வேண்டும் என்பதனை வலியுறுத்தவே, புகழந்துரைத்தல் - முகஸ்துதி எனும் இருவேறு மொழிச் சொற்களும், இருவேறு மொழிகளை மட்டுமல்ல, ஆறுவேறு முறைகளைக் குறிக்கின்றன என்பதனை விளக்க வேண்டி வருகிறது.

புகழ் பெற்றிட வேண்டும். அந்த நோக்கத்துடன் வாழ்வின் முறை அமைய வேண்டும்.

தோன்றிற் புகழொடு தோன்றுக!

என்றல்லவா வள்ளுவர் கூறியிருக்கிறார். தமிழர் முயன்று பெறவேண்டிய புகழ் என்பதற்கு உரிய தனித் தன்மையிலிருந்து, தரத்திலிருந்து இழிந்து முகஸ்துதி எனும் நிலைக்குச் சென்றுவிடக்கூடாது என்பது குறித்து மறாவதிருக்க வேண்டியதும், புகழ்பெற முயற்சிப்பது போலே தேவையானதாகும். முக்கியமானதாகும். நிலத்தைக் குடைந்திடுவது, நெளியும் புழுக்களைப் பெறவா? இல்லையல்லவா! அதுபோன்றே புகழ் உட்டிடும் பொறுப்பான முயற்சியில், முகஸ்துதி எனும் நச்சு நிலை குறுக்கிடாதபடி பார்த்துக் கொண்டாக வேண்டும்.

பிறர் புகழ்ந்திடக் கேட்டிடல் என்பதற்கும் பிறருடைய முகஸ்துதியில் சுவை காண்பது என்பதற்கும் நிரம்ப வேறுபாடு இருந்திடினும், அது குறித்துக் கவலைப்படாமல், புகழ் பெறுவதாக எண்ணிக் கொண்டு, முகஸ்துதியைப் பெற்று மகிழ்வது, நலன் அளித்திடாது.

ஆனால், பிறர் நம்மைப் பாராட்ட வேண்டும், புகழ்ந்துரைத்திட வேண்டும் என்ற நினைப்பு கொள்ளாத மாந்தர் இல்லை என்று கூறிடலாம். ஆஅது தவறானதுமல்ல, தேவைப்படுவதெல்லாம், புகழ்ந்துரைப்பது என்பதற்கும் முகஸ்துதி என்பதற்கும் ஒரே வகையான பொருள் இல்லை என்பது பற்றிய தெளிவுதான்.

புகழ் மயக்கமூட்டாதாக, எதனையும் எதிர்பார்த்துச் சொல்லாததாக, எந்தவிதமான தொடர்பும் ஆற்ற நிலையிலேயும் கூட மகிழ்ந்து உள்ளுணர்வுடன் கூறப்படுவதாக அமைதல் வேண்டும். உள்ளத்தைத் தொடும் இசை, ஓவியம் கேட்டும் கண்டும் வியப்படைகிறோம். அந்தக் கலைஞர்களைப் புகா;ந்து பேசுகிறோம், அவர்களிடம் நேசத் தொடர்பு ஆற்ற நிலையில்கூட, எந்த ஒரு பொருளையும் அவர்களிடம் பெறாமலே, எதிர்பார்க்காமலே கூடப் புகழ்ந்து பேசுகிறோம். ஏனெனில், அவர்கள் நமக்கு இனித் தரவேண்டியது என்று ஒன்றுமில்லை, ஏற்கனவே அவர்கள் தமது திறனைக்காட்டி நமது உள்ளத்துக்கு உவகை அளித்துள்ளனர், அதிலே மலர்ந்த மகிழ்ச்சியில் நாம் அவர்களைப் பாராட்டுகிறோம். மகிழ்கிறோம்.

விண்வெளியை வட்டமிடும் வித்தகர் குறித்துப் புகழ் பாடுகிறோம், நமக்கும் அவர்கட்கும் என்ன தொடர்பு! ஒன்றுமில்லை! எனினும் அவர்கள் பெற்ற ஆற்றல்மிகு வெற்றியால் அவனிக்குப் பயன் கிடைத்திட இருக்கிறது என்ற எண
்ணம் நமக்கு ஓர் மகிழ்ச்சியைத் தருகிறது, புகழ்ந்திடத் தோன்றுகிறது.
மேலதிகாரிய்ன எழுத்துத் திறனைப் புகழ்ந்து அவருடைய புன்னகையை ஆச்சாரமாகப் பெற்றிடுவது முகஸ்துதி.

மேலதிகாரியின் திறமையைப் பற்றி வேறோரிடத்தில் பேசி மகிழ்வது, புகழ்ந்துரைத்தல் - அந்த வேறோரிடம் மேலதிகாரிக்கு அஞ்சல் துறையாக இருத்தலாகாது!

தனித்தமிழ் என்பதிலே ஆர்வம் காட்டுவதன் மூலம் மொழித் தூய்மை பெறுவது மடடுமல்ல, தமிழரின் நெறியை அறிந்து கொள்ளவும் இயலும், மொழி, எண்ணுவதை எடுத்துரைக்கும் கருவி மட்டுமல்ல, எண்ணத்தை உருவாக்கும் கருவியாகும். மொழி மூலம் ஆம்மொழியாளரின் வாழ்க்கை வழியையும் உணர்ந்திட முடியும். தமிழரின் நெறியை நன்கு உணரத் தமிழ்மொழி - தனித் தமிழ் நிச்சயமாகப் பயன்படும்.

(காஞ்சி - 14-1-66)