அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


முப்புரியின் சக்திப்பொறி!

முப்புரியினர், முனிவர் காலந்தொட்டு ஆதீக்கம் செலுத்தி வந்தது போன்றே முன்ஷி காலத்திலும் இருக்க வேண்டுமென்றும், கருதியிருக்கும் போக்கினை விளக்கியும் கண்டித்தும் நாம் எழுதுங்காலையிலெல்லாம், பல்லைக் காட்டிப் பாகுபோல் சொல்லை கூசிடும வல்லவராம் ஆரியரிடம் சொக்கிச் சிக்கிச் சீரழிவுபடும சிறுமதியினருக்குச் சீற்றம் பிறப்பதுண்டு. ஏடா, மூடா! என்றோ ஓர் நாள் அந்த ஆரியர் ஆரப்பரித்தனர், இதுகாலை ஏது அந்த நிலை, கொட்டம் ஏதுதிட்டம் ஏது, திட்டமூ விளையும் மட்டமாக்கப்பட்டு விட்டதை அறியாது, ஆரிய ஆதிக்கம், ஆரிய ஆதிக்கம் என்று கூவுகிறாயே, வேறுபணி புரியாயா, பிணிக்கோர் மருந்து தேடாயா, என்று கூறுகின்றனர், பழை போதை பார்ப்பனரிடம் இன்று இல்லை என்று கூறுகின்றனர், பழைய போதை பார்ப்பனரிடம் இன்று இல்லை என்று கருதிடும மனப்பான்மையினர். இந்தப் போக்கு அவர்களின் புத்தி பழுது பார்க்கப்படவேண்டிய அளவு பாழ்பட்டுக் கிடக்கிறது என்பதனைத் தான் விளக்குகிறது என்று கூறுவர், கோபிபர், கூத்தாடுவர், எனவே குறைமதி கொட்டோர் என்று அவர் தம்மைக் கூறாது, நிந்த வெருங் குணவான்களான இவர்கட்கு, நிலைமையும், அந்த ஆரிய இனத்தின் நினைப்புன் தன்மையும் தெரியவில்லையே என்ற இரக்கத்துடன் இயம்புகிறோம் எந்தக் காரியத்திலே ஆரியர் ஈடுபட்டிருப்பினும், அவர்களின் நோக்கம் எப்படியேனும் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவேண்டும என்பதுதான், சர்வபரித்தியாகம் செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்ட பர்ணசாலைகளிலே இருக்கின்றனர். முப்புரி தரித்து, மும்மலம் நீக்கப்பட்டு மும்மூர்த்திகளைக் கண்டறிந்த முனிபுங்கவர்கள் என்று, புராண காலத்திலேகூறியது, முடியுடை வேந்தரை ஆரியரின் அடிபணியச் செய்திடத்தான்! சகல கலாவல்லபர், தியாக மூர்த்திகள், சட்ட நிபுணர்கள், எமது சர்மாக்கள், என்ற கூறிச் சர்க்கார் மாளிகயைலே நின்று ஊகாதிபத்தியத்துக்குச் சாமரம் வீச ஆரியரில் ஒரு பிரிவினர் இருப்பதும், தமது இனத்தின் உயர்வை இருப்புக் கோட்டையாக்கும் செய்தியைத்தான் அந்த அஞ்சாத நெஞ்சினன் அறிவிலலே மிஞ்சிட ஆளில்லா வல்லுனன், தேசியப் பஞ்சாமிருதமன்றிப் பிறிதோல் சுவைவேண்டாப் பான்மையோன், மகாத்மாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவன், என்று கூறிக்கொண்டு ஆரியரின் ஒருசாரார் தேசிய வாசஸ்தலத்தில் பேசிக் கிடப்பதும், அந்தப் போர்முனையின் மூலம், தமது ஆரிய ஆதிக்கத்தை நிலைத்திடச் செய்யத்தான், இதிலே சந்தேகமிருப்போர், நான் மகாத்துமாவின் சீடன்! என்ற நூலாசிரியரும், முப்புரி தரித்தவரும் முன்னாளில் காங்கிரஸ் மந்திரியாகப் பம்பாயில் காட்சி தந்தவரும், இந்நாளில் உன் உயிருள்ள மட்டும பாகிஸ்துன் தரமாட்டேன் முஸ்லீம்களுக்கு என்று எக்காளமிடுபவரும், விக்கிரமாதித்ய காலத்தை எண்ணி எண்ணி விம்மிக் கிடப்பவருமான ஸ்ரீஜத் முன்ஷி என்பவர், இரு கிழமைக்கு முன்னர் அமிர்தசரசிலே அகில இந்திய பிராமண மாநாட்டிலே ஆற்றியுள்ள சொற்பொழிவை கேட்க கேட்டுக்கொள்கிறோம். பார்ப்பனலால்லாதார் கிளர்ச்சி என்றும், திராவிட இயக்கமென்றும், தகாதன செய்கின்றனரா, மார்தட்டுகின்றனரா, மண்டபத்திலே தமது ஆட்சியே நிலவவேண்டுமென்று, முழக்கமிடுகின்றனரா, என்ற நம்மைச் சிலர் கேட்பதுணடு. பொருளற்ற கேள்வி அது, எனினும் வெள்ளையாக விளங்கும் இந்த விஷயமேனும் அவர்கட்கு, விவேகம் வழங்கும் என்று நம்புகிறோம். இந்த 1944-ல் ஏப்ரல் திங்களில், பத்துப பதினைந்து நாள்களுக்கு முன்னர் பஞ்சாப் மாகாணத்தில், அமிர்தசரஸ் என்ற நகரிலே, ஆரியர், அகில இந்திய பிராமண மாநாடு நடத்தியிருக்கிறார்கள். மாயூ நதிக்கரையிலும் மணிப்பூர் அருகேயும் தீப்பர் நதிக்கரையிலும் பிற இடங்களிலும், வீரர் ஆயிரமாயிரவர் தமது குருதியை நெய்யாக்கி, உடலைச் சமித்தாக்கி வீரயாகம் புரியும் இதே வேளையிலே, ஆரியர் விலாப்புடைக்கத் தின்னவும் வீரரைக் கோழைகளாக்கவும், அறிவை அழிக்கவும், செல்வத்தைச் சீரழிக்கவும், கங்கை நதி தீரத்திலும் சிந்துநதி தீரத்திலும், யாகம் நடத்தினர். இங்ஙனம் யாகம் நடத்துவதும், ஆரிய சுகவோகத்துக்கு ஆதரவு திட்ட மாநாடு நடத்துவதும், எதனை உணர்த்துகிறது!

ஆரியப் பண்பு இருக்கிறதே அது ஆலயத்தோடு நின்றுவிடுவதல்ல, அரண்மனைக்கும், போர்க்களத்துக்கும், மோட்ச சாம்ராச்சியத்துக்கும் வழிகாட்டும வல்லமைகொண்டது ஆரிய நாகரிகம் என்று ஸ்ரீஜத் முன்ஷி கூறியிருக்கிறார். இது எந்தக் காலத்து மனப்பான்மை? ஆரிய கலாசாரம் அவனி எங்குமாதிக்கம் செலுத்தவேண்டும்; அதற்கு ஆவன செயல்வேண்டும் என்று கூறினாராம்! ஆறாயிரம் ஆண்டுகளாக ஆரிய ஆதிக்கம அப்பு அழுக்கின்றி இருந்து வந்திருக்கிறது, இன்றும் அதன் வளம் கெடவில்லை என்று செப்பினாராம். அம்மட்டோ! ஆரிய ஆதிக்கத்தைக் குறையாதிருக்கச் செய்யும் கடமையை ஆரிய அணங்குகள் மேற்கொள்ளவேண்டுட்ம, என்று யோசனை கூறினாராம். சேல்விழியும், வில்போன்ற புருவமும், செம்பொன் மேனியும், துடியிடையும், தொட்டால் துவளும் போக்கும் கொண்ட அணங்குகளின் அபாரசக்தியை, யார் அறியாதார்! சாம்ராஜ்யங்கள் பல, சல்லாபிகளின் உல்லாசத்துககு அடகுவைக்கப்பட்ட வரலாறும் உண்டு! ஆரிய அணங்குகளின், சீரிய அழுகும் கூரிய மதியும், தேறிய திறனும், ஆஸ்ரம வாழ்விலே, ஆண்டவரை வரவழைத்திருக்கிறது. கணவன் இருக்கும் நேரத்திலும், சில பர்ணசாலைகளிலே கணவர் இல்லாத, நேரத்திலும், அரண்மனைகளை பர்ணசாலைகளிலே கணவர் இல்லாத, நேரத்திலும், அரண்மனைளை ஆட்டிப்படைத்திருக்கிறது, மன்னர்களின் மதியையும் வீரர்களின் விழியையும் கலக்கி இருக்கிறது, அதரமெனும் வில்லைலே புன்சிரிப்பு எனும் பாணத்தைத் தொடுத்து அவர்கள் போரிட்டுப் பெற்ற வெற்றிப்பெருமிதங்கள். புராண இதிகாசங்களிலே பல பல காணக்கிடைக்கும். ஆரிய தேவனே மோகினி எனும் ஆரணங்காக வேடமிட்டுத்தானே, அசுரரை அழித்ததாகக் கதை கூறுகின்றனர். ஆகவே முப்புரிதரித்த முன்ஷி, சக்திப் பெறிமூலம், தமது இனத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியும் என்று நம்பியதிலும், அந்த யோசனையை மாநாட்டிலே வெளியிட்டதிலும், ஆச்சரியமில்லை!

மாதரசிகளே! உமது மணாளரோ, மகனோ, மார்க்கத்தை மறந்து மதிமருண்டிடின் அவர்தனை, இழுத்துவந்து, மதத்திலே சேருமின்! என்று ஆரிய அணங்குகளுக்கு முன்ஷி யோசனை கூறினாராம். அதுமட்டுமா! பாஞ்சாலமெனும் இப்பதியிலே, பார்ப்பன, ஆடவரும் பெண்டிரும், தேவபாஷையிலே இலயிக்காமல், ஆங்கிலமும, பிரஞ்சும் கற்று அவலமாக்கினரே, அந்தோ என்னே இவர்தம் செயல், என்றுகூறி ஏங்கினாராம். விழிமின்! எழுமின்! உமது சக்தியை எங்கும் பரவிடப் பணிபுரிமின்! என்று கூறினாராம்! இதேபோது, பெர்லின் நகரிலே ஒரு பேயன் அவனி முழுதும் ஆரிய ஆதிக்கத்திலிருக்க வேண்டும். ஜெர்மானியர் ஆரியர். எனவே ஜெர்மானியரிடம் இந்த ஜெகமே சரணடைய வேண்டும் என்று கூறுகிறான். அவனிடமாவது பீரங்கியும் கப்பலும், வீரரும் விமானமும் உண்டு! புராணமும் புரட்டும புல்லும் செல்லரித்த ஏடும் தவிர வேறோர் ஆயுதமுமின்றி, இங்கு, இந்நாளில், இவ்வளவு விழிப்பும், பகுத்தறிவும் மிள்ர்ந்துங்கூட, முன்ஷி உலகை ஆரிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவேன் என்று பெருத்த குரலிலே பேசுகிறார். சக்திப்பொறியின் மகத்துவத்திலே நம்பிக்கை வைத்திருக்கிறார். இன்னமும் இங்கு சிலர் ஆரீயராவது திராவிடராவது. அதெல்லாம் பழங்கதை, என்று கூறிக் கண்மூடிக் கொள்கின்றனர். அறிவே! அவரின் விழியைத் திறவாயா?

பார்ப்பனர்களுக்கு இன்றைய நிலையிலே, ஏதாவது வசதிக்குறைவு இருக்கிறதா, மாநாடு கூட்டி முழக்கமிட! ஒடுக்கப்பட்ட மக்கட்கு உரிமை தரமறுக்கம் இந்தத் தொங்கு வயிற்றினருக்கு எங்கும் ஏகபோக மிராசு இருக்கும் இந்நாளிலே மாநாடு ஒரு கேடா!! இந்து மார்க்கத்தைக் காப்பாற்றவும் இந்துக்களை இரட்சிக்கவும், நான் இருக்கிறேன். என்று சர்க்கார் சல்லடம் கட்டுகிறார், ஆரிய சமாஜம் வேலை செய்கிறது, பிரம்மசமாஜம் பணி புரிகிறது. இவ்வளவு இருந்தும, பிராமணர்கள் தனியாகக் கூடித் தமது ஆதிக்கம் தழைக்க வேண்டுமென்று பேசுகின்றனர். அமிர்தசரசில் கூடிய பிராமண மாநாட்டுத தலைவர், வேதவேதாந்த ஞானத்தின் பாதுகாவலராகப் பிராமணர்களே இருக்க உரிமை பெற்றவர்கள் என்று கூறினார். இந்த மாநாட்டுக்கான ஆதரவைச் சங்கராச்சாரியரும் தந்தராம். வேதவேதாந்த விற்பன்னர்களாக இருககும் உரிமை தமக்கே உண்டு என்று விப்பிரர்கள் விளம்பட்டும, நமக்கு விசாரம் இல்லை. ஆனால் இது உண்மையானால், வேதமோதிக்கொண்டு, பாதசாரியாகிப், பர்ண சாலைகளிலே இருந்துகொண்டு, பரலோகம் புகும் நேரத்தை எதிர்நோக்கி இருப்பதைவிட்டு, ஏன் மற்றத் துறைகளிலே புகவேண்டும? குள்த்தங்கரைக் கொக்குகளாகவும், ஆற்றோர நாரைகளாகவும் இருப்பதற்கு அமிர்தசரசில் பார்ப்பனத் திட்டம் வகுத்ததிருநதால் நமக்கு ஆயாசமில்லை! ஆனால் அங்கு அவர்கள் கூடியதும் பேசியதும, ஆரிய குலம் அவனியை ஆளவேண்டும் என்ற ஆணவத்தை வெளியிடவன்றோ! இது அடுக்குமா? உலகிலே வறு எங்கும் காணமுடியாத ஜழதி அகம்பாவம், இந்தியாவில் இருக்கிறது. அங்கு குடியேற்ற நாட்டு அந்தஸ்து தந்தால், பார்ப்பன ஆட்சிதான் ஏற்பட்டுவிடும், என்று சென்றகிழமை இலண்டனில், பார்லிமெண்டிலே ஒருவர் பேசினார். நிலைமையை, நெடுந்தூரத்திலுள்ள ஒருவர் தெரிந்து பேசியிருக்கிறார், இங்கோ, நாள்தோறும் நேரடியாகவே, ஆரிய ஆதிக்கத்தைக் கண்டும் சிலர், இது ஒரு பிரமாதமா என்று பேசுகின்றனர். இவர்களின் போக்கை என்ன்பது! இவ்விதமான தாசர்களின் தொகை குறையக் குறைய, முப்புரிகளின் சக்திப் பொறி பயனற்றப் போகும் என்பதை உணர்ந்தே ஸ்ரீஜத் முன்ஷி, அமிர்தசரசிலே, கச்சையை வரிந்து கட்டுகிறார்!

(திராவிடநாடு - 30.04.1944)