அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


முதலாளித்துவ முகாம்! முன்னோடும் பிள்ளைகள்!

நவீன பிரசார சாதனங்களில் பத்திரிகையும் ஒன்றாகும். முதலாளித்வ முறைக்கு மெருகிட்டு, மக்கள் கவனத்தைக் கவரும் வகையில் பலநிறங்கள் கூட்டி, நானாவிதமான கொள்கைக்கும் நாட்டில் செல்வாக்குத்தேட, பத்திரிகைச் சாதனத்தைக் காட்டிலும் இன்று வேறு பலம் பொருந்திய சாதனம் கிடைக்காது என்று கூறி விடலாம். செய்தி ஸ்தாபனங்கள் பெரும்பாலும் பணமூட்டைகளின் சொத்தாகும் தங்களுக்குச் சாதகமான, தங்கள் ஆதிக்கத்திற்கு அரணான செய்திகளை மிகைபடுத்திக் கூறவும், புறம்பான செய்திகளை மறைக்கவும், வெளியிட்டாலும் தவறான பொருள்படும்படி சுருக்கி ùளியிடவுமான தந்திர முறையைக் கையாளுகின்றன இச்செய்திகளைப் பிரசுரிக்கும் பத்திரிகைகளோ ஒன்று தவறாமல் முதலாளிகளுடையது இவைகளில் எழுத்தாளர்களாக இருப்பவர்களோ, சொந்த வாழ்வை மதிக்கினற் அளவிற்கு, மக்களின் சுகத்தைப் பெரிதென்று கொள்வதில்லை. கற்றவர்கள் என்பவர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பதற்கு நேர் விரோதமாக, இவர்கள் எழுத்து இருக்கும், பணமூட்டைகளையாவது, பார்த்த முதல் பார்வையிலேயே, தங்கள்இல்லாமையின் விளைவாக ஏற்படும் இயற்கையான ஏரிச்சலின் காரணமாகவ, புரிந்து கொள்வார்கள் அவர்களால் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை, பணமூட்டைகளுக்குப் பல்லிளித்துப் பல்லாண்டு கூறும் பேனா வீரர்களை, பிரசங்க பீரங்கிகளை மக்களால் அவ்வளவு சுலபத்தில் புரிந்துகொள்ள முடிவதில்லை. மயக்கம் கொள்வர், மீள வகையறியாது மயங்குவர்.

அறிந்து செய்வோரும் உண்டு, அறியாமலே இத்தொண்டு புரிவோரும் உண்டு. அறிந்து செய்பவன் ஆயோக்கியன், அறியாமல் செய்பவன் அப்பாவி. ஆனால் இரண்டு பேரின் செயலினாலும், மக்கக்குக் கிடைப்பத நல்வாழ்வு அன்று, நாசந்தான்.

இன்று, நமது நாட்டில் பெரிய பெரிய பத்திரிகைகள், ஆலை அரசுகளின் பாதுகாப்புப்டையாக இக்கப்பட்டு இருக்கின்றன. முதலாளித்துவ முறையை நிலை நிறுத்துவதுதான் அவைகளின் அருந்தொண்டு வெறும் முதலாளித்துவ முறையை மட்டும் போதிப்பது என்பது இந்தக் காலத்தில் எதிர்பார்க்கும் வெற்றியைக் கொடுக்கக் கூடியதன்று. எனவே மக்களுக்குள்ள மத நம்பிக்கையை, புராண இதிகாசங்கள் போதிக்கும் பொய் மலிந்த கொள்கைகளை, தன் நம்பிக்கையற்ற தாழ்வுணர்ச்சியை, தகுதியானது என்று சித்தரித்து, அதற்குப் பெயர், முன்னோன் கண்டமனுமுறை என்று கூறி, அதனை வழுவாமல் வாழ்க்கையில் அனுசரிக்க முயலுவதில்தான் உண்மையான இன்பம் இருக்கிறது ன்று இதாரங்களாகச் சில கதைகளை எடுத்துக் காட்டி, மக்களுக்கு ஞானமார்க்கம் காட்டுவதாக, பத்திரிகையை நிரப்புவர். மேலநாட்டினர், உலக சுகத்தை உதறித்தள்ளிவிட்டு, விஞ்ஞான உண்மைகள் வீண் கனவு என்று கண்டு கொண்டு, இந்திய ரிஷிகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்த மெய்ஞான வழியை மேற்கொள்ளத் துடியாகத் துடிப்பதாகத் தொடர்ந்து எழுதிவரும் இந்தஏடுகள், ஆனால் அதே நேரத்தில் விஞ்ஞானம் தந்த இயந்திரசாதனங்களை, உடனடியாக அமெரிக்கா அனுப்பி வைக்கவேண்டும் என்றும், தவறாமல் எழுதுவர். ஆசை வெட்கமறியாது என்பது மட்டுமல்ல, தங்கள் எழுத்தில் தெள்ளத் தெளியத் தெரியும் முரண்பாடு மக்கள் சிலரின் கண்களிலாவது படுமே என்று சிந்திக்கமாட்டார்கள். பாமர மக்கள் மந்தமதியிலே அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை, அச்சப்படுவதற்குப் பதில், ஆர்வத்தோடு எழுதுகிறார்கள்.

முதலில்லாது உழைப்பில்லாது உடலிலே வலுவில்லாது - மக்களின் உழைப்பை உறிஞ்சுவதற்கான முறை, ஆண்டவன் பெயரால் இங்கு அமைக்கப்பட்டிருப்பது, வேறு நாட்டில் இல்லாத விசித்திரம். மிருக பலத்தால் அல்ல - உற்பத்திச் சாதனத்தால் அல்ல - பிச்சை புகும் முறையால் அல்ல - இந்த அமைப்பு முறையின் கர்த்தாக்கள், சுகம் அனைத்தும் பெற்றது - பெற்று வருவது, ஆண்டவன் பெயரால் - பிறப்பின் பெயர் கூறி - அமைத்து வைத்திருக்கும் சுரண்டல் இயந்திரத்தால்தான் இவர்கள் சுகபோக வாழ்வு பெற்றுவர முடிகிறது. வரவினம். இவர்கள் ஏட்டிலே உண்டேயன்றி, செலவினமே கிடையாது. இவர்களின் வாழ்வைப் பெருக்க, உழைத்துப் போட்டவர்களுக்குக் கிடைத்த பலன் நாலுநல்ல வார்த்தைகூட கிடையாது ஏகாதிபத்தியத்திற்கு நல்ல பிள்ளைகளாக நடந்து கொண்டவர்களுக்காகவது, ஏதோ கௌரவப் பட்டங்கள் கொடுத்து கண்ணியப்படுத்தினார்கள். ஆனால் நமது நாட்டு முதலில்லாத வியபாரிகள், தங்களுக்குச் சுகத்தைத் தேடித் தந்திடுபவர்களுக்கு கொடுத்தபட்டம் இழிகுலத்தோன் மனிதனில் கடையன் என்ற பட்டயங்களாகும். உழைத்தவர்களுக்கு, இந்த இருபட்டம் கிடைத்த பின்னரும் தன்மதிப்புப் பெற்று, தகுதியற்ற திட்டத்தை நொறுக்கும் முயற்சியை மேற்கொண்டார்களில்லை. பாபி என்று அகம்பாவத்தோடு அழைத்ததை அன்புரை என்று கொண்டு, புகழ்ந்து பாடினர் அவ்வாறு கூறினவர்களை, அந்த அளவிற்கு, மக்களை ஆமதியிலிகளாக்கும் சக்தி அந்தச் சுரண்டல் இயந்திரத்திற்கு இருக்கிறது. பலநூறு ஆண்டுகளாக உழைக்காது ஒய்யார வாழ்வு வாழ்ந்து. அதற்கான ஒரு முயற்சியும் செய்யாது காலங்காத்து. பிறர் புகழால் உயர்வு கொண்டிருக்கிறவர்களிடம், கொஞ்சம் தந்திர புத்தி கூடுதலாக இருப்பதில் ஆச்சரியமொன்மில்லையல்லவா? ஒய்வு - அதுவும் கவலையற்ற ஒய்வு? அறிவுத்துலக்கத்திற்கு இன்றியமையாததன்றோ? முதல் போடாமல் வாழக் கற்றுக்கொண்டுள்ள இளம், முதலாளிகளின் முன்னோடும் பிள்ளைகளாக மாறி இருப்பது பொருத்தி முடையதுதானே? வாழ்வாவது மாயம் என்பது இவர்களுடைய தாரகம். தத்துவ சாஸ்திரியின் மறுபதிப்பு ஆம்! வாழ்வு மாயமானது, மயக்கத்தைத் தரக்கூடியது. இந்த உபதேசம் மக்களுக்குத்தான். முதலாளிகளுக்கு அல்ல. இந்த முடிந்த ஞானம், சொந்தத்தில் அனுசரிப்பதற்கு மல்ல. பாட்டாளிக்கு - உழைப்பவனுக்கு - உரிமைக்குப் போராட வேண்டிய மக்களுக்கு. இந்தத் தர்ம உபதேசம் செய்யப்படுகிறது. தங்கள் சுகத்திற்கு, மக்களால் முடிவு ஏற்படாமல் இருக்க இந்தக் கண்ணன் காட்டிய வழி தேவைப்படுகிறது!

அதிகார ஏடு - தத்துவசாஸ்திரி - பிரசாரஏடு? அனைத்தும் ஒரே அணியில் வச்சைகட்டி நிற்கிறது. எதிர் அணியில் மக்கள் - எலும்பும் தோலுமாக உள்ள மக்கள்! இவற்றிற்குத் துப்பாக்கியும், ஆண்டவன் அளித்ததாகச் சொல்லப்படும் மாயாவாதமுமா ஆயுதம்? மக்களுக்குச் சிந்தனையும் தன்னம்பிக்கையும் சிந்தனையும் கொண்டுள்ள மனிதன் நிலைத்து நிற்கக்கூடியவன். அவன் கண்டதுதான் இன்று நாம் காணும் உலகம் நல்லதாக அமைக்கவும், தீமை தேடிக்கொள்ளவும் மனிதனால் முடியும். இதுவே மனித வரலாறு போதிக்கும் படிப்பினை. உலகத்தின் நடுநாயகமாகத் தன்னை இக்கிக் கொள்வதற்கு, மனிதன் எடுத்துக்கொள்ளும் முயற்சியைப் பொறுத்துதான். கால அளவு குறுகுவதும் நீளுவதும் இருக்கிறது. நமது மக்கள் நிலையை மற்ற நாட்டவர்களோடு ஒப்பு நோக்கும்பொழுது, மனிதன் மனதனாக மாற எவ்வளவு காலம் பிடிக்குமோ? என்று பெரு மூச்செறிய வேண்டியதாக இருக்கிறது! முதலாளித்வத்துக்கு முன்னோடும் பிள்ளைகளாகப் பத்திரிகைகளும், பிரசாரப் போக்கும் இருக்கும் வரையில், ஏழை மக்கள் நல்வாழ்வு பெற முடியாது.

(திராவிடநாடு 27.3.49)