அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நிகோலாஸ் தீர்ப்பு!

இந்தத் துரைமகனை யார் அழைத்தார்கள் தாம்பூலம் வைத்து?
இவருடைய தீர்ப்பை யார் கேட்டார்கள்!
துஷ்டன்! துடுக்குத்தனமாக எழுதிவிட்டான்,
பிரிட்டிஷ் பிரச்சாரம்! இவன் அமெரியின் கூலி!
மேயோவின் தம்பி! அவள் போலே ஒரு அபத்தக் களஞ்சித்தை எழுதினான்.
நிகோலாஸ் ஒரு நிந்தனைக்காரன்!

ஒரு பேனா! அதை மறுக்க நாட்டிலே பலருடைய பேனா முனைகள், முழுத் திறமையைக் காட்டிவிட்டன. ஒரு புத்தகம்! அதை மநத்துக் கத்தைக் கத்தையாக எழுதித் தள்ளிவிட்டனர், தேசபக்தியால்!

பீவர்நிக்கோலாஸ் எழுதிய இந்தியாவைப் பற்றித் தீர்ப்பு என்ற புத்தகத்துக்குப், பலமான கண்டனம்! ஆம! பலமான என்ற பதமே பொருத்தமானது, எனெனில் கண்டனத்திலே பலம் இருக்குமளவு, நியாயம் காணோம்! வேண்டுமானால், பலமான கண்டனம் என்பதுடன், இது சகஜம், என்று சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் நிக்கோலஸ் யாராருடைய குட்டுக்களை வெளிப்படுத்திவிட்டாரோ, அவர்களுக்கு, அவர்மீது கோபம் பிறப்பதும், கோபங்காரணமாக அவரைத் தாக்க முற்படுவதும் சகஜம்! ஆனால் கண்டனத்தைக் கக்கியவர்கள், நிக்கோலாஸ் கூறியவை தவறு என்ற காரணம் காட்ட முடிந்ததா? இல்லை! முடியாது போனது, கண்டனக்காரர்களின் திறமைக் குறைவைக் காட்டுவதல்ல! உள்ளதைக் கூறினால் நிக்கோலாஸ், உறுமல் தவிர வேறு அதற்கு எதிரிடையாக அகையும் கூறுவதற்கில்லை.

என்ன செய்வது? ஊமையை, ஊமை என்றால், அந்த மொழியிலேயே அவன் கத்தித் தன் கோபத்தைக் காட்டத்தான் செய்கிறான். நான் கெட்டால் கெட்டுப் போகிறேன். நீ மகாபதிவிரதை! போதும் போடி, வாயை மூடிக்கொண்டு என்று பேசாத தூர்த்தையின் தொகை குறைவுதானே! அதிலும் ஒரு நாட்டைப் பற்றியும், பண்டைப் பெருமை வாய்ந்த (!) நாட்டை குறித்தும் ஒரு காட்சியைப் பற்றி, பலமான பிரச்சார யந்திரத்தைப் பக்க பலமாக வைத்துக்கொண்டிருக்கும் கட்சியைப் பற்றியும், பல ஒனங்களை அடக்கி ஒடுக்கிய ஒரு மதத்தைப் பற்றியும் நிக்கோலாஸ், மனதிற்பட்டதை, அச்சம் தயை தாட்சணியமின்றிக் கண்டித்தால், அந்தக் கட்சி, அந்த மதம், அந்த நாட்டுப் பெயர் கூறி நாடகமாடும் ஆரிய வீரர்களக்க கோபம் வராமலா இருக்கும்.

கோபம் வரலாம், அதுகூடச் சகஜம்! ஆனால் கோபத்தோடு கூடக் கொஞ்சம் வெட்கமும் பிறக்கவேண்டுமே! பீவர்லி நிகோலாஸ் எழுதியதைப் படிக்கும்போது கோபமாகத்தான் இருக்கும், அதிலும் ஒரு வெள்ளைக்காரன் இப்படி எழுதுவதா என்று ஆத்திரமாகத்தான் இருக்கும், ஆனால், இப்படிக் கண்டவர்கள் கேலி செய்யும்படியான ஆபாச நியிலேதானே நாம் இருக்கிறோம் என்ற எண்ணமும், வெட்கமும் தேதான்ற வேண்டாமா? அப்போதுதான் திருத்தத்திற்கு வழி ஏற்படும்?
மேயோவின் இந்தியதாய் என்ற நூலுக்குக் கண்டனக் கணைகள் சரமாரி! காந்தியார், காக்கடைப் பரிசோதகரின் பஞ்சாங்கம் மேயோவின் புத்தகம் என்று எழுதினார். ஆனால் மேயோவைத் திட்டிய அளவோடு தேசபக்தர்கள் திருப்தி பெற்றனரே ஒழிய, அந்தச் சாக்கடையைப் போக்கினாரா? ஒரு சிலர், தமது ஆடையிலே, வாசனை பூசிக்கொண்டு, அதே சாக்கடை ஓரத்திலே உலாவிக்கொண்டு மணம் இங்கும் உண்டு என்று பேசி வருகின்றனர்! சாக்கடை அப்படியேதான் இருக்கிறது! நிக்கோலாஸ், அதைத்தான் எடுத்துக்கூறுகிறார். முன்பு கோபித்தது போலவே, இப்போதும், சாக்டையைக் கிளறாதே! என்று கூறுவது தவிர, வேறு என்ன கூறமுடிகிறது. கண்டனக் காரரால்! நிக்கோலாஸ் இந்தக் கண்டனத்தைக் கண்டு திகிலடையவுமில்லை, எதிர்பார்தே எழுதினார். தமது புததகத்திலேயே, அதை, பீவர்லி தீட்டியிருக்கிறார்.

எனக்கு உபசாரமளித்னர் பல இந்தியர்; சிறப்பாக இந்துக்கள்! அவர்கள் இந்தப் புத்தகத்திலே ஆரம்ப முதல் இறுதி வரை உள்ளவற்றை வெறுக்காமலிருக்க முடியாது, எனக்கே கூடக் கொஞ்சம் வெறுப்பாகத்தான் இருக்கிறது. என்ன செய்யலாம்! நான் இந்தியாவைப் பற்றி ஏதேதோ எழுதலாம் என்ற பலமான நம்பிக்கையுடன், இலட்சியங்களடன் வந்தேன். நான் கண்டதோ? அதைக் கூறுவானேன், நீங்களே பாருங்கள் புத்தகத்தை என்று நிகோலஸ் முனனுரையிலேயே கூறியிருக்கிறார், காட்சிகள், கண்றாவியாக இருந்தன, எனவே தீட்டினது அதுபோல இருக்கிறது! கோபம் வந்து பயன் என்ன?

அவன் அரசன்! சித்திரக்காரனின் சிறப்புப் பற்றிக் கேள்விப்பட்டான், அவன் தீட்டிய சித்திரங்களைபும் கண்டான்; களித்தான்; சபைக்கு அழைத்து உபசரித்தான்; தன் உருவைத் தீட்டித்தரச் சொன்னான். ஓவியக்காரன் தீட்டித்தந்தான். கண்ட மன்னன் கடுங்கோபங்கொண்டான்.
ஏ! சைத்சீகா! இது என்ன கோரமான படம்! முகத்திலே இவ்வளவு அலலட்சணமா இருப்பது? கண் ஒன்று பழுதுற்றுக் காணப்படுகிறது. கன்னத்திலே குழி. தலை, வழுக்கை! முன் வரிசைப் பற்களிலே மூன்று கானோம்! இது என்ன ஆபாசமான படம்! உன்னைப் பெரிய சித்திரக்காரன் என்று ஊரெங்கும் புகழ்ந்தார்களே! உன் யோக்யதை இதுதானா? திறமையற்றவனே! ராஜசபைக்கு இவ்வளவு ரசாபாசமான படமா தயாரிப்பது? என்று ஏசினான், வாளை வீசினான். சித்திரக்காரன் சிரித்தான். அரசே! எனக்கே சிற்சிலசமயங்களிலே சந்தேகம் தோன்றுவதுண்டு, உண்மையிலே நாம், உள்ளதை அப்பயே தீட்டுமளவு திறமை பெற்றிருக்கிறோமா இல்லையா என்று. இன்று அச்சந்தேகம் அறவே நீங்கிவிட்டது. நான் அடைய வேண்டும் என்று எண்ணிய திருபதி ஏற்பட்டுவிட்டது. ஆகவே, மரணதண்டனையை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன், சூனால், என்னுடைய கடைசி வேண்டுகோள் ஒன்று. தயவுசெய்து என்னை வாளால் வெட்டுமுன்னம், தங்கள் உருவத்தை நிலக்கண்ணாடிமுன் நின்று நீர் ஒரு முறை பார்த்துவிட்டுவாரும் என்றான். மன்னன், கண்ணாடி முன் நின்றான், ஒரு கணம்! தலைகுனிந்தான். கூப்பிடு காவலரை என்றான். ஓவிய்ககாரனை, மன்னித்துவிட்டோம், போகச்சொல் என்றான். படுக்கை அறை சென்றான் படுத்தான் புரண்டான்! தன் உருவம், ஓவியக்காரனின் தீட்டுகாலுக்கு இலாயக்கற்றது என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

அவலட்சணத்தோடு கூடிய அந்த அரசனுக்கு, ஆத்திரம் பிறந்தது, ஆனால் அறிவு அதனை அடக்கிற்று. தேசீயம், தெளிவு தன்னை அண்டச் சகிப்பதில்லை. எனவே தான் பீவர்லிமீது கண்டனம் குவிகிறது.

நிக்கோலாஸ், எழுதியதிலே எவையெவை அபத்தம் என்று விளக்கி விட்டிருப்பின், யாருக்கும் மகிழ்ச்சி இருந்திருக்கும். அது முடியாத காரியம் என்பது அறிந்து மௌனமாக இருந்திருப்பின், கூத்தையாவது பாராட்ட இடமேற்பட்டிருக்கும். இரண்டுமின்றி, நிக்கோலாசைத் தூற்றினால், அவன் தீட்டிய விஷயங்களை மறைத்துவிட முடியும் என்று கருதுகிறார்கள் - இது ஏமாளித்தனம்!

அவன் அமெரியின் கூலி! இது ஒரு தூற்றல்! இருக்கட்டுமே அப்படியே! கூலி வைத்து எழுதாவிட்டாலும் அமெரியே எழுதத் தொடங்கினாலும், நாம் அஞ்சவோ, வெட்கப்படவோ காரணம் இராது, நம்மிடம் அப்பு அழுக்கு இல்லாது இருந்தால்! மடியிலே கனமிருக்கும்போது, வழியில் பயமேற்பட்டுவிடுகிறது! என்ன செய்வது?
நிக்கோலாஸ் எழுதுகிறார், ஐயா! நான் அமெரியைக் கண்டதில்லை, அவர் பேசிக் கேட்டதில்லை, அவரோடு கடிதப் போக்குவரத்து நடத்தியதில்லை என்று. ஆனால் தேசியத்தாட்கள் ஏசலை விட்டுவிடுமோ? பம்பாய் சென்டினல் பத்திரிகை போட்ட தாம் ஒரு பாணம், வைசிராய் வேலையை ஏற்றுக்கொள்ளும்படி பீவர்லிநிக்கோலாசைக் கேட்டுக்கொட்து சர்க்காரதர் என்று! இவ்விதமான அபத்த அஸ்திரங்களை ஏவி என்ன பயன்? அவனுடைய மொழி! தீட்டப்பட்டுள்ள தகவல்! விளக்கப்பட்டுள்ள விஷயம்! பொறிக்கப்பட்டுள்ள புள்ளி விவரம், அவைகளுக்கல்லவா பதில் கூறவேண்டும்! எங்கே அந்தப் பதில்? எப்படி முடியும் பதிலுரைக்க? இல்லததை எழுதியிருந்தால்தானே! நிக்கோலாஸ்தான், மறுக்க முடியாதவைகளைத் தீட்டிவிட்டாரே!

பத்திரிகைக்காரர் இப்படிப் பாணம் விடுவதற்கு வேறோர் காரணமும் இருக்கிறது. நிக்கோலாஸ் பத்திரிகைகாரரின், அதாவது இந்து இன ஆதிக்கத்துக்காகப் பாடுபடும் பத்திரிகைக்காரரின், போக்கைத் தாட்சணியமமிறிக் கண்டித்து எழுதிவிட்டார். எனவே, பேனாவீரர்கள் பெருங்கோபம் சொண்டு, நிக்கோலாஸ்மீது பாய்ந்தனர். நிக்கோலாஸ் வந்தான் தொட்டு, நிந்தாஸ்துதியோ, நீண்ட புரளிகளோ, விசித்திர வதந்திகளோ தன்னைப்பற்றி அந்த ஏடுகளிலே வெளிவரக் கண்டார். அப்பத்திரிகைகளின் யோக்யிதையை உணர்ந்து கொண்டார். உண்மையை வெளியே உரைத்துவிட்டார். உள்ளத்தைச் சொன்னால்தான் . . . ! இந்தப் பத்திரிகைகளின் போக்கை பீவர்லி கண்டித்தபோதும், காரணம் காட்டமலிக்கவில்லை, ஆதாரம் கூறாவிடவில்லை.

இந்தப் பத்திரிகைகள் துரோகமாகப் புளுகுப் பிரச்சாரத்தை சுறுசுறுப்பாக செய்துவருகின்றன. மறைப்பது அல்லது உருமாற்றி உரைப்பது, இல்லாததைக் கூறுவது, ஒன்றை மற்றொன்றாகத் தோன்றும்படி பூசிவிடுவது, குரோதமுள்ள கண்டனம், கண்ணியமற்ற கேலி, எதிர்க்கட்சியை ஏளனம் செய்வதிலே எந்த வரம்புக்கும் கட்டுப்படமறுப்பது, ஆகிய திருக்கலியாண குணங்கள் இப்பத்திரிகைகளுக்கு உண்டு என்று எழுதினார். கோபமாகத் தான் இருக்கும்? ஆனால் அவர் குறிப்பிடும் கோணற் சேட்டைகளை, இல்லை என்று யார் மறுக்க முடியும். ஜெர்மன் கெப்பள்ஸ் இதைவிட அதிகமாக அபத்தம் எழுதுகிறாரே என்று வேண்டுமானால் கூறலாமேயொழிய, நாங்கள் உண்மைக்கு உயரிடம், உரிய இடமளிக்கிறோம். மனச்சாட்சியின்படி நடக்கிறோம். அண்டப்புளுகு கூறுவதில்லை அதிர்வேட்டு போடுவதில்லை. எதிர்க்கட்சி நடவடிக்கைகளை அடியோடு மறைத்து விடுவதில்லை, என்று எந்தத் தேசீயத்தாள் பொதுஜனப் பத்திரிகை, (நெஞ்சு இருந்தால் கைவைத்துக்) கூறமுடியும்? அந்தப் பத்திரிகைகள் எவ்வறவு கட்டுப்பாடாக, காட்டுமிராண்டிக் கண்டித்தன - கண்டித்து வருகின்றன. ஒரு பெரிய இனத்தின் உரிமைக்காகப் போரிடும் ஜனாப் ஜின்னா, அந்த ஏடுகளிலே பிரிட்டிஷ் கையாளாக, ஏகாதிபத்திய தாசராக, பதவிப்பிச்சைக் கிண்ணம் ஏந்துபவராகத் தீட்டப்பட்டார். டாக்டர் அம்பேத்கர், பெரியார் ராமசாமி, சர்.ராமசாமி, எம்.என்.ராய், டாக்டர். கரே நரிமன், யார் மீது பாயாமல் இருந்தன அந்த ஏடுகள்? தேர்தல் காலத்திலே எவ்வளவு திடீர்ப்புளுகுகள்! சர்.ராமசாமி முதலியார், தாலி அறுத்தவரானார்! பெரியார் ராமசாமி நாஸ்திகரானார்! டாக்டர் அம்பேத்கார், ஆரிதத் திராவிடரைக் காட்டிக்கெகாடுப்பவரானார், இந்த ஏடுகளின் கண்முன்! வீர்லி நிக்கோலாஸ், அறியார், இப்பத்திரிகைகளின் முபத்திறமையை. அற்ந்தால், அவர் இதற்கே ஒரு தனிப்பித்தகம் எழுதி இருக்கக் கூடும்!

நிக்கோலாஸ், இப்பத்திரிகைகளின் யோக்கியதையைத் தமக்கு நேரிட்ட ஒரு அனுபவத்திலிருந்தே தெரிந்துகொண்டார். அவர் தமது புத்தகத்திலே குறிப்பிடும் ஓர் எடுத்துக்காட்டு, இப்பத்திரிகைகள் புளுகுப் பிரசாரத்தை எவ்வளவு தந்திரமாகச் செய்கின்றன என்பதை மிக விளக்கமாகக் காட்டுகிறது. நிக்கோலாஸ் நோய்வாய்ப்பட்டிருந்தார். இந்திய சைத்தியர்களம் சிகிச்கை செய்தனர். அவர்களைப் பாராட்டியும், பொதுவாகத் தமக்கு நேரிட்ட நோய்பற்றியும் ஒரு கட்டுரை அனுப்பினார் பிரிட்டனுக்கு. அதே கட்டுரையை, இந்தியாவிலே சில பத்திரிகைகள் வெளியிட்டன. அப்படி வெளியிட்டபோதுதான், தங்கள் யோக்கியதையை வெளிப்படுத்திவிட்டன. நிக்கோலாஸ் தமது கட்டுரையின் இறுதியில், இந்திய மருத்துவத்துககு எதிர்காலத்திலே நல்ல கிராக்கி இருககிறது, அது அபிவிருத்தி அடைய வேண்டும், ஆங்கிலேயரால் மட்டுமல்ல இந்தியராலேயே அந்த அபிவிருத்தி ஏற்படவேண்டும் என்று எழுதியிருந்தார் அதாவது, ஆங்கிலர் இந்தியர் இருவரும் அந்த அபிவிருத்திக்கு உழைக்கவேண்டுமென்ற கருத்தை வெளியிட்டார். ஆங்கிலத்திலே அவர் எழுதியது இது.

"There is a great future for Indian medicine provided that it is allowed to develop frely. not only by the British but by the Indians themselves", இக்கட்டுரையை வெளியிட்ட இந்தியப் பத்திரிகைகள் என்ன செய்தன? ஒரே ஒரு பதத்தை விழுங்கிவிட்டன! அதன் விளைவு என்ன? நிக்கோலாஸ் எந்தக் கருத்தோடு எழுதினாரோ அதற்கு நேர்மாறாகக் கருத்து தொனித்தது, அதன் பயனாக நிக்கோலாஸ் மீது பழியும் பிறந்தது. சந்தைக் கடையிலே சன்னக் கத்திரிக்கோல் வைத்திருப்பவன், அதிகச் சிரமப்படுவதில்லை; ஒரு சிறுவெட்டு! ஆனால் நடப்பது என்ன? மணிபர்ஸ் காணாமற்போகும்! பாம்பு, கர்ஜஐன செய்துகொண்டு, முன்னாலும் பின்னாலும் தாவிப்போர் முழக்கம் செய்வதில்லை. மெள்ள நகர்ந்து வந்து, தன்பல்லை வைத்து அழுத்தும்! விளைவு? மரணம்! அதுபோல, இப்பத்திரிகைக்காரர். அதிகக் கஷ்டப்படாமல் ஒரே பதத்தை, நிக்கோலசின் வாசகத்திலிருந்து நீக்கிவிட்டனர், அதன் விளைவு, அவர் எதைக்கூற எண்ணினாரோ அதற்கு நேர்மாறு! இந்த வெட்டு ஒட்டு வேலையிலே, இப்பததிரிகைகளுக்கு இணை கிடையாது. தவலை போறிற்று, என்று எழுதுவதற்கு ஒரு தற்குறி வ என்ற எழுத்தை மறதியால் விடுத்ததன் பலன், கடிதத்தைப் பெற்றவர்கள் தலைபோயிற்று என்று எண்ணிக்கோவெனக் கதற நேரிட்டது அது தற்குறித்தனத்தின் விளைவு. இது தந்திரத்தின் முதிர்ச்சி, வேண்டுமென்றே பொருளை வேறாக்கும் நோக்குடன், ஒரு பதத்தை நீக்கிவிடுவது. ஆங்கிலேயர் மட்டுமல்ல, இந்தியரும் அபிவிருத்திக்கு வேலை செய்ய வேண்டும் என்று எழுதினாரல்லவா நிக்கோலாஸ். இதிலே, இந்தியப் பத்திரிகைக்காரர், ஆங்கிலேயர் மட்டும அல்ல என்ற தொடரிலே மட்டும் என்ற பதத்தை மட்டும் நீக்கிவிட்டனர். நீக்கிப் பாருங்கள், நிக்கோலாஸ் கூறியதாக இவர்கள் வெளியிட்டதற்கும் உள்ள மாறுபாடு தெரியும். அவர் ஆங்கிலர் மட்டுமல்ல என்றார், இவர்கள் ஆங்கிலர் அல்ல, இந்தியர் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று வெளியிட்டனர்.

Not only by the British ஆங்கிலச் சொற்றொடரிலே only பதத்தை எடுத்துவிட Not by the British என்றாகிவிட்டது. இந்திய வைத்தியத்தை இந்தியரே அபிவிருத்தி செய்யவேண்டும், பிரிட்டிஷார் அல்ல, என்ற பொருள் ஏற்பட்டுவிட்டது. இது அவர் சொல்லாதது மட்டுமல்ல அவ்ர சொன்னதற்கு நேர் மாறானது. குலைந்தது கற்பு அல்ல என்ற சொற்றொடரில் அல்ல என்ற ஒரே பதத்தை நீக்கிவிட்டால், என்ன பொருள் ஏற்படும்? எவ்வவு விபரீதம்! திடீரென்று ஓர் நாள் பத்திரிகையிலே கொட்டை எழுத்திலே காந்தி மீரா சரசம்

என்று ஒரு தலைப்பு வந்தால், தேசீயவாதிகள் எவ்வளவு திடுககிடுவர், தூற்றுவர், கண்கண்ட தெய்வத்தையும் கடல் கடந்து வந்த அன்னையையும் இப்படி அவமதிக்கலாமா? என்று எவ்வளவு கோபிப்பர்? அவர்களின் கோபத்தை அடக்க ஐயா கொஞ்சம் அச்சுப் பிழை வேரிட்டுவீட்டது பொறுத்திடுக.

காந்தி மீரா சமரசம் என்று வெளியாகியிருக்கவேண்டும். எப்படியோ தவறி சமரசம் என்பதிலே ம என்ற ஒரே ஒரு எழுத்து விடுபட்டுப்போனதால், காந்தி மீரா சரசம் என்று வெளிவந்துவிட்டது என்று என்ன சமாதானம் சொன்னாலும் ஏறுமா, தேசீயச் செவிக்கு? அது போலத்தானே இருக்கும் நிக்கோலசுக்கும். எவ்வளவு திடுக்கிட்டுப் போயிருப்பார் இந்தக் கத்தரி வேலையைக் கண்டு. எனவேதான், இந்தப் பத்திரிகைகளைப் பற்றி அவர் மிகக்கேவலமாக மதிப்பிடலானார்.

அவர் தமது புத்தகத்திலே ஒளிக்காமல் உரைக்கிறார் நான், இந்த ஏடுகளைக் கொஞ்சமும் மதிக்க மறுக்கிறேன் என்று. என்னய்யா விசேஷம்? ஏன் வந்துர்கள்? நான் என்ன கூறுகிறேன் என்பதைக் கேட்கும் வழக்கமோ உங்களுஙக்குக் கிடையாது. அப்படிக் கேட்டாலும் புரிந்துகொள்வதில்லை. புரிந்துகொண்டாலும், பத்திரிகையிலே வெளியிடும்போது திரித்துத்தான் தீட்டுவீர்கள். இரண்டே காரணங்களே உள்ளன நீங்கள் இங்கே வர என்னை ஏதாவது புளுகச் சொல்லலாம், அல்லது நாம் ஏதாவது புளுகிவிட்டுபபோகலாம் என்ற இருகாரணங்கள்தானே என்று நிக்கோலாஸ் அந்தப் பத்திரிகைப் பிரதிநிதிகளைக் கேட்பாராம்.

எங்களைப்பற்றிக் கேவலமாக மதிப்பிடுகிறீரே என்று அந்தப் பிரதிநிதிகள் கூறுவராம்.

கேவலமா? மிகக் கேவலமாகத்தான் மதித்தேன் என்பாராம் அவர். அந்தக் கோபத்தைத்தான், கக்கியுள்ளன பெரும்பாலான ஏடுகள், கோபம் வந்து பயன் என்ன?

Susila's message to Mahatma என்ற தலைப்புடன், மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகைக்கு வார்தாவாசி ஒரு செய்தி அனுப்பி, அது Susila's massage to Mahatma என்று ஒரு சிறு எழுத்துப்பிழையுடன் (ஆனால் வினோதமான பொருள் வேறுபாடுபடுமபடி) வெளிவந்தால், சீமை ஏட்டினை எவ்வளவு கண்டிப்போம்? ஆஸ்ரம விஷயம் வேண்டாம். அரசியல் விஷயமே எடுத்துக்கொள்வோம். Not only the japs but the British should quit India என்ற செய்தி மைப்பத்திரிகைக்கு அனுப்பப்பட்டு அங்கே only என்ற பதம் சிதைக்கப்பட்டு Not the japs but the British should quit India என்று வெளிவந்தால், என்னென்ன கூறுவோம் அந்த ஏடுகளைக் கண்டித்து, ஏன் அந்த மதி, தேசீயநிதியைப் பெற்றிருப்பதாகக் கருதும் ஏடுகளுக்கு இல்லாமற்போய்விட்டது! கத்தரிவேலை கஷ்டமானதல்ல, ஆனால் கண்ணியமான காரியமல்ல. அது கண்டனத்துக்குரியது. நிக்கோலாஸ் கண்டித்ததிலே தவறு என்ன?

(04.03.45 திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலும் தொடர்ந்தது)

தேசிய ஆர்வத்தை ஊட்டிவிடுவதனாலேயே, அடிமைத் தனத்தை ஒழித்துவிடமுடியுமமென்ற எண்ணம், பலருக்கு, அன்னிய ஆட்சியை ஒழிக்க, ஆண்மை வேண்டுமே, அந்த ஆண்மை எனும் அருங்குணம், நமது மக்களிடை படிப்படியாகப் பாழ்பட்டுவிட்டதே பல்வேறு காரணங்களால், அக்காரணங்கள் யாவை எனக்கண்டு, அவை போகமருந்து உட்கொண்டு, மன மாசுபோக்கிக் கொண்டாலன்றோ, வெளிநாட்டவனை விரட்டும வீரம், விவேகத்துடன் தோழமை கொண்ட வீரம், தோன்ற முடியும், என்ற எண்ணம், பலருக்கு இனிப்பதில்லை. சிந்தனை என்றாலே, பலருக்குக் கஷ்டம், எனவேதான், இந்நாட்டுப் பத்திரிகைகள், தேசீயக கனலை மூட்டிவிடுவதே திருப்பணி என்ற கருதுகின்றன. அந்தச் சேவை செய்வதிலே, சத்தியம், நேர்மை, யூகம், அறிவு முதலிய எதைப்பற்றியும் கவலை கொள்ளக்கூடத் தேவையில்லை, எவ்வழி சென்றேனும், காரியத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும், முடிவு முக்கியமே தவிர முறை முக்கியமல்ல என்ற கருதுகிறார்கள். இது அவர்தம் கருததுக் கோளாறு என்ற அளவோடு இருந்துவிட்டால் கவலை இல்லை, இதன் பயனாக நாட்டு நலிவு நாளாவட்டத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது, வெளிநாட்டானுடைய பிடி பலமாகிறது.

முறைபற்றிக் கவலை வேண்டாம் என்ற கருத்துடன் காரிய மாற்றும். காகிதக் கணையாளர்களே, நிக்கோலாஸ் சாடினார், தக்க காரணம் காட்டி. கோபத்தினால், அவ்ர காட்டிய உண்மையை மறந்துவிட முடியாதல்லவா! விஷயமறியா மக்களிடை வேண்டுமானால், நிக்கோலாஸ் ஒரு நீசன் என்ற தூற்றி வைக்கலாம், ஆனால் அறிவுள்ளவர்கள் அனைவரும, உள்ளதை மறைப்பது, உருமாற்றி உரைப்பது, இல்லாததைத் தீட்டுவது என்ற இன்ன பிறவற்றை பணியாகப் பூண்டுள்ள பத்திரிகைக்காரர் ஒரு பரங்கி கண்டிக்கும் அளவு அக்ரமச் செயலிலே ஈடுபட்டுத்தானே உள்ளனர் என்று வெட்கித் தலை குனிகிறார்கள், வேறென்ன செய்வது, லோபியைக் கொடை வள்ளலென்று கொண்டாடுவது, இல்லாமையினால் ஏற்பட்ட இருதய நோய்! அது இல்லை நிக்கோலசுக்கு. எனவே வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்கிறது.

நிக்கோலாஸ், எழுதுகிறார், ஐயா! நான் இந்தியா சென்றேன், இந்தியனைக் காண, அங்கு இந்தியன் இல்லையே! என்கிறார். இந்தத் துரைமகனின் துடுக்குத்தனத்தைப் பாருங்கள்! இந்தியனைக் காணவில்லையாமே! இவன் குருடன் போலும்! இங்கே நாம். 40 கோடிக்குமேல் இருக்கிறோம், இந்தியர்கள்! நாம் அவர் கண்களுக்குத் தெரியவில்லையாமே!! என்ன ஆணவம் இந்த ஆசாமிக்கு - என்று நமது நாட்டுப் பற்றுடையார்கள், காட்டுத்துயிலே சிக்கிக் கொண்ட புலியென உறுமுகின்றனர்.

உங்களை எங்கேயோ பார்த்தது போலிருக்கிறதே? நீங்கள் . . .

எங்கே பார்த்துர்கள், ஆரணியிலா, ஆற்காட்டிலா?

இல்லைங்க, கவனம் வந்தது, பொன்னேரியிலே. . . ஓ! நம்ம சரவணமுதலியார் மக கலியாணத்துக்கு வந்திருந்தேன். அங்கே கண்டிருப்பீர்கள்

ஆமாய்யா. ஆமாம்! சரவண முதலியார் வீட்டுக் கலியாணத்திலேதான். அவருக்கு நீங்கள் பந்துக்கள்தானே
சேச்சே! நாங்க, ஆற்காட்டாராச், நமக்குச் சரவண முதலியார் பைத்துவழி, வியாபார வகையிலே . ..
நீங்க, என்ன நாயுடுங்களா-
சேச்சே! முதலியார்தான், ஆற்காட்டு வகையறா. அது வேறே, பொன்னேரி வேறே இல்லையா.
ஆமாம்! சிலபேர் சொல்வாங்க அதுபோல, முதலியார் என்றார் எல்லோரும் ஒன்றுதான் என்று பேசுவாங்க, ஆனால் எப்படி எல்லாம் ஒன்றாகும்

அதைச் சொல்லுவாங்க, தொண்டை மண்டலம் துளுவவேளாளர், சீரை கட்டி, கொண்டைகட்டி, கொங்கு வேளாளர், அவத்திகீரையார், ஆலந்தூராரு, வெற்றிலைக் கிள்ளியாரு, வில்லிவாக்கத்தாரு, தொழில் வேளாளர், பொன்னேரியார், பேட்டை முதலியாரு, பூந்தமல்கிகாரர், ஆற்காட்டு வகையறா, ஆரணி முதலிமாரு, சீயாழியார், சிதம்பரத்தார், கார்காத்தார், கோட்டை வேளாளர், நரங்குடியார், அரும்பூரார், திருநெல்வேலியார், திருவொற்றியூரார், குந்தள முதலியார், குண்ணத்தூரார், மாங்காட்டார், மணிமங்கலாத்தார் என்ற எவ்வளவோ தினுசான முதலியார்கள் உண்டு நாட்டிலே. முதலியாருன்னா எல்லாம் ஒன்று என்று எப்படி கூறுவது.

இது நம் நாட்டு, உரையாடலிலே, சகஜமானது, முதலியார் என்ற வகுப்பு, இங்குள்ள பலப்பல வகுப்பகளிலே ஒன்று பெரும் பிரிவகளிலே ஒன்று, இந்தப் பிரிவிலே இத்தனை பிரிவுகள் அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் ஆயிரம் சிறுமளிகள் இருப்பதுபோல முதலியார் என்ற ஒரு குலத்துக்குள்ளே, இவ்வளவு! அதுபோலவே, முதலி, முதலியார், உடையார், கவுண்டர் பிள்ளை, செட்டி, பூசாலி என்று அந்த ஒரே குலத்துக்குப் பலப்பல பட்டங்கள். இந்த ஒரு வகைக்கும் கிடையாது. ஒருவரை மற்றவர், கெஞ்சம் மாற்றுக்குறைவு, மட்டம், அப்படி இப்படித்தான்என்று பேசாவிட்டார் திருப்தி எற்படுவதில்லை, அதுமட்டுமா? அவர்கள் ஆற்காட்டாருதான். நாங்களும் ஆற்காடுதான் ஆனாலும், அவர்கள், பொன்னேரியிலே பெண் பொடுத்துவிட்டார்களே. இனி எப்படி அந்த இடத்திலே சம்பந்தம் வைத்துககொள்ள முடியும்? என்று ஆறகாட்டாரைப் பற்றி ஆற்காட்டாரே பேசுவார். பேசிவிட்டுப் பரமதிருப்தியமடைவார்.

பிரிவுக்குள் பிரிவு இருப்பது, முதலியார் பிரிவு ஒன்றிலே மட்டுமா என்றால், இல்லை. உனக்கு நான் என்ன மட்டமா? என்ற முறையிலேதான் இருக்கும். ஒவ்வொரு குலத்திலேயம், முதலியார், நாயுடு, பிள்ளை, செட்டியார், நாகரர், கள்ளர், மறவர் தேவர், என்ற இன்ன பிற! இவைகளேயன்றி, கப்பு, கம்மா, வெலமா, ரெட்டி பலிஜா, பந்துலு என்று பல ஆந்திரதில், நம்பூதிரி, நாயர், ஈழவர், தீயர், புலையர், நாயாடி என்று பல வகுப்புப் பிரிவினைகள் கேரளத்தில், வட நாட்டிலே பலப்பல; இவ்வளவும் ஒரே பட்டியிலே சேரும். இந்து என்ற ஒரே பட்டியில்! இந்து ஒரு தனி, பெரிய பிரிவு, அதுபோல முஸ்லீம், கிருஸ்தவர், பார்சி சீக்கியர் என்று பல பிரிவுகள்! இந்த நிலையிலே இருக்கும் இடம், இந்தியா எண்ணித் தொலைக்க முடியாத ஜாதிகள்! ஒன்றுக்கொன்று தொன்றுதொட்டு பேதங்கள்! அந்தப் பேதங்களை மக்கள் மனதை விட்டுப்போக முடியாதபடி இருக்கச் செய்ய, இதிகாச புராணாதிகள்! ஒன்றை ஒன்று தாழ்த்திப் பேசவும் குறைவாக மதிக்கவும், குத்தலாகப் பேசவம், தூண்டி விடும் குலபுராணங்கள்! இதுதான் இந்தியா! இங்கே ஆற்காட்டு முதலியார் உண்டு, அனந்தபூர் கப்பு உண்டு, பாலக்காட்டு நம்பூதிரியும், பழய கோட்டைக் கவுண்டரும், திருச்சிதேவரும், திருநெல்வேலிப் பிள்ளையும், மைசூர் உடையாரும் மங்களூர் ஷெட்டியிம், மாரிக்குப்பம் ஆதிதிராவிடரும் மகாராஷ்டிரத்துப் பண்டிட்ஜீயும், வங்கத்து குப்தாவும், பீரி ஒரியாவும், பாஞ்சாலரத்துச் சீக்கியனும், கோலாப்பூர் மராட்டியனும், கொங்கணத்து ஐயனம். பீகாரன் ஆதிபாசியும், அசாம் ஆதி குடியும், ஆக்ரா முஸ்லீமும், பம்மாய் பனியாவும், குஜராத்துச சேட்டும், ராஜபுத்திரரும், பார்சியும், கிருஸ்தவரும் பிறரும் உண்டு. அவரவர்கள், உள்ளூர எண்ணுவது, தாம் என்நத உட்பிரிவு என்பதன்றி வேறல்ல. அந்தந்த உட்பிரிவு, வேறு உட்பிரிவினால் உயர்வானது என்றோ, தமக்குச் சமமானது என்றோ கருதுவது கிடையாது. கருத முடியாதபடி, கருத்துவளர, ஏடுகள் உள்ளன! இது இந்தியா! உலகிலே மற்ற இடங்களிலே போனால், இப்படி இராது, ஜெர்மனியிலே போனால் ஜெர்மானியன் இருப்பான். பிரான்சு போனால் பிரன்ச்சுக்காரனைக் காணலாம். இத்தாலி போனால் இத்தாலியனைக் காணலாம். இங்கே வந்தால், இந்துவையோ, முஸ்லீமையோ, கிருஸ்துவரையோ, சீக்கியரையோ, பார்சியையோ காணலாம்! அதுமட்டுமா? இந்துவிலே எண்ணாயிரம் பிரிவு! ஆகவே இங்கு முதலியாரையோ, முல்ட்டானியையோ, சர்மாவையோ, குப்தாவையோ காணமுடியுமே தவிர, இந்தியன் என்ற ஒரு ஆளைக் காண முடியாது.

தாங்கள் யார்? என்ற கேள்விக்கு நான் இந்தியன் என்ற பதில் இங்கே பொருந்தாது - பொருள் விளங்காது. ஏனெனில் இந்தியன் என்று ஒரு இனம் கிடையாது எனவேதான் நிக்கோலாஸ், நான் இந்தியா வந்தேன் இந்தியனைக் கண்டேனில்லை என்றார். உண்மைதானே, தமிழனை, வங்காளியை, மராட்டியனை, பஞ்சாபியை, அசாமியை, மார்வாடியைக் காணமுடிந்திருக்கும்! இந்து, முஸ்லும், சீக்கியர், ஆதீத்திராவிடர் என்பர்களைக் கண்டிருக்க முடியும்! இந்தியனைக் கண்டிருக்கத்தான் முடியாது. மதம், மொழி, ,இடம், இனம், எனும் பலவகையிலே, வேறுவேறாக உள்ள கூட்டங்களும், அந்தக் கூட்டங்களிலோ, பல உட்பிரிவுகளும் மலிந்து கிடக்கும் இந்த நாட்டிலே, எப்படி, இந்தியனைக் காணமுடியும்! எனவே தான் நிக்கோலஸ் எழுதினார். ஐயா! இந்தியா சென்றேன். இந்தியனைக் காணவில்லை என்று. அதற்குக் கோபித்துப் பயன் என்ன?

தம்பி! டவுன் ஹாலிலே சகல ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன. வா, புறப்படுவோம். கூட்டம். நிறைந்துவிட்டிருக்கும் என்று கூப்பிட்டார், வயோதிகர் ஒருவர், ஒரு வாலிபனை. அவன் ஆச்சரியமுற்று, டவுன் ஹாலா? அங்கென்ன அலுவல் எனக்கு என்று கேட்டான், வயோதிகர், அலுவலா? அழுகுதான்! என்னடா தம்பீ! நான் இன்று அங்கு நடனக்கச்சேரி ஏற்படுத்தியிருப்பதை நீ அறியாயா? என்று கேட்டார். அறியேன்! யார் நடனமாடப் போவது? என்று கேட்டான் வாலிபன். கொஞ்சம் கோபத்துடன் வயோதிகர், தம்பி! விளையாடிக் கொண்டிராதே நேரமாகிறது வா என்று அழைத்தார், வருகிறேன். யார் நடனம்? அதைக் கூறுமே என்று கேட்டான். அதென்னப்பா விசித்திரமான கேள்வி கேட்கிறாய். நீதான் நடனமாட ஏற்பாடாகி இருக்கிறது என்று வயோதிகன் சொன்னதும வாலிபன் வயிறு குலுங்கச் சிரித்துவிட்டு பெரிய விகடகவி ஐயாநீர்! என்ன சென்னீர், நான் நடனமாட வேண்டுமா? நானா! நாட்டியக் கச்சேரியா? ஐயோ, ஐயோ, இப்படியும் ஒரு வேடிக்கைக்காரர் உண்டா? என்று கேட்டான். வயோதிகர் தம்பி! உன் பெயர் என்ன? என்று கேட்டார் அதிகாரக் குரலிலே. வாலிபன் என் பெயரா? என் பெயர் நடனசபாபதி! என்றார். உடனே கிழவர் நடனமாட முடியாது என்கிறாயே, இதென்ன விந்தை என்று கேட்டார். பெயருக்கேற்றபடி குணமும மணமும், செயலும் இயல்பும் இருக்கும் என்று எண்ணிய ஏமாளியின் கோமாளித்தனத்தைக் கண்ட வாலிபன் மேலும் சிரித்தான். அதுபோல, நிக்கோலாஸ் மட்டுமல்ல, இங்கேயுள்ள சில பாரத வீரர்கள் கூட, இந்தியன், இந்தியன் என்று கூறிவருகிறார்கள் குறிப்பற்ற பொருளற்ற முறையிலே அதைப் பொருளள்ளதாகக் கருதி. எங்கே இந்தியன் அவனை நான் பார்க்கவேண்டும்! என்று தேடியானல், நிச்சயமாக நிக்கோலாஸ் போலவே, எவரும் ஏமாறவேண்டியதுதான். இங்கே இந்தியன் இல்லை, ஏனெனில் இந்தியன் என்றோர் இனம் இல்லை! தாமரைக்கண் அந்தத் தையலுக்கு என்று கவி வர்ணித்ததும், அக்கண்ணிலே, குளிச்சி காணச் சென்று, செருக்குக்கக்கும் கண்களை அந்தச் செல்வி கொண்டிருககக் கண்டு, கோபித்துப் பயன் என்ன? அதுபோல, இந்தியன் என்ற பொருந்தாத பெயரைச் சூட்டிக்கொண்டு, இந்தியன் எங்கே என்று, எண்ணாயிரும் குலங்களைக் கொண்டிருக்கும் குப்பை மேட்டிலே, கூடிக்கூடித் தேடினாலும் காணமுடியாது, கூவிக்கூவி அழைத்தாலும், பதில் பெற முடியாது. எனவேதான், நிக்கோலாஸ் இந்தியனைக் காணவில்லை என்றார். இதற்காகக் கோபம் பிறந்து பயன் என்ன? நமக்குரிய பெயரைச் சூட்டிக்கொள்ள இது வழிகாட்டுமே. நாம் முஸ்லீம் என்ற கூறிக்கொள்ள இரு பெருங்கூட்டத்துக்கு வாய்ப்பும், வசதியும் வழியும் வகையும் கிடைத்துவிட்டது. திராவிடருக்கும் அப்படியே! ஆனால் கொஞ்சம் மெள்ள மெள்ள ஏற்பட்டு வருகிறது. ஆரியருக்கு ஆதிநாள் தொட்டு இருக்கிறது! ஆகவே, அந்தந்த இனத்தை அதனதன் இடத்திலே இருக்கச் செய்தால், தேடிப் போகிறவனுக்கு, அங்கே இருப்பது தெளிவாகத் தெரியும். கடல்நீரிலே கன்னல் சுவையைக் காண முடியுமா? காட்டுக் கூச்சலிலே கலியாணி இராக ஆலாபனத்தைக் கேட்க முடியுமா? அதபோலத்தான், எண்ணணத் தொலையாத பிரிவுகளும் பிளவுகளும், கொண்டுள்ள இடத்திலே, ஏட்டிலே, நாட்டை அறியாதார், துட்டிவைத்துள்ள, பொருளற்ற பதமான இந்தியன் என்பதை, நம்பிச் சென்று, இந்தியனைக் காணலாம் என்று முயற்சித்தால், பலன் கிட்டாது. நிக்கோலாஸ் மற்ற இடங்களிலே உள்ளது போலவே இங்குமிருக்கும் என்றுதான் முதலிலே எண்ணினார். இந்தியனைத் தேடினார். கிடைக்கவில்லை. எனவேதான், இந்தியாவிலே இந்தியனைக் காணவில்லை, என்ற துர்ப்பளித்தார். இதிலே தவறு என்ன? உண்மையை அவர் உரைத்தது குற்றமா? உள்ளதைச் சொன்னது கேட்டு அவரை விட்டேனா பார்! என்று மிரட்டுவது அறிவுக்குச் சான்றா, அன்றி ஆத்திரத்தின் விளைவா, என்பதை அனைவரும் ஆர அமர யோசித்துப் பார்க்க வேண்டும்.

18 கோடி மக்கள், பண்டை நாட்களிலிருந்து வாழ்ந்து வருகிறார்களே, அவர்கள் இந்தியர்களன்றோ என்று தோன்றும். ஆனால், ஜாதியிலே தாழ்த்தப்பட்டுக் கிறடக்கும், 7 கோடிக்கு மேற்பட்ட, ஆதித்திராவிடர்களைக் கண்டார், அவர்களும் இந்தியர் தானோ! ஆயின், அவர்களின் நிலை அங்ஙனம் இருத்தல் அறமாமோ! இந்தியரையே இந்தியர், தீண்டுவது, இழிவாகும் என்ற கருத்து எழலாமோ? எங்கேனும் ஒரு நாட்டு மக்களிலே ஒரு பிரிவினர் மற்றோர் பிரிவினரைத் தொடுவதும, கூடாது என்று கருதும் கொடுமை, சகிக்கக் கூடியதா? தீண்டப்படாதவ்ர! என்ன பெயர் அது! அவர்கள் தொட்ட தண்ணீர் குடித்தால் தோஷமாம்! அவர்களிலே சிலரைக் காண்பதே குற்றமாம். தீண்டாமை மட்டுமல்ல, பாராமையுமன்றோ இருந்திடக் காண்கிறோம். இவ்விதம், ஒரு கூட்டத்தினரை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலேயுள்ள வெள்ளைக்காரர் எவ்வளவு எண்ணிக்கை இருப்பரோ அந்த அளவு ஏறக்குறைய இருக்கும் ஆதித்திராவிடர்கள் மிருகத்திலும் கேவலமாக நடத்தி வருவதைக் காணும், எந்த மேனாட்டானுக்காவது, கொடுமை செய்பவனையும், கொடுமைக்கு ஆளாகின்றவனையும், சேர்த்து இந்தியன் என்று ஒரே பெயரிட்டு அழைக்க மனம் வருமா?

இந்துக்கள் கிடக்கட்டும், முஸ்லீம்களைப் பார்ப்போம். அவர்கள் 10 கோடி மக்களாவர். அவர்கள் நாங்கள் வேறு. இந்துக்கள் வேறு! நாங்கள், பிரிட்டிஷ் சாம்ராஷ்யத்தைப் போலவே, முன்பு ஒரு சாம்ராஷ்யத்தை அமைத்து ஆண்டவர்கள். எங்கள் மார்க்கம் வேறு - மனப்பண்புக்ள் வேறு - சமூக அமைப்பு முறை வேறு - எங்கள் ராஷ்யம் எமக்குத் தேவை - அதிலே நாங்கள் வாழ விரும்புகிறோம். பாகிஸ்தான்! பாகிஸ்தான்! என்று முழக்கம் செய்கின்றனர். ஆகவே முஸ்லீம்களை இந்தியர் என்று ஒப்புக்கொண்டார், இந்துக்கள் இந்தியராக முடியாது, அதுபோலவே இத்துககளை இந்தியர் என்ற கூறுவது கொருந்தாது. இந்த இருபெரும் கூட்டத்தினரும், தாங்கள் வேறு வேறு என்பதை உணருகிறார்கள், ஒன்றாக எண்ண ஒருப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, ஒரே ஆட்சியிலே இருக்கவோ, ஒரே இடத்தைத் தங்கள் இருவருக்கும் நாடாகக் கொள்ளவோ கூட ஒப்பவில்லை. எனவே, இந்த இருவரும், இந்தியர் என்றழைக்கப் படுவது கூடாத காரியமாகிறது.

பெரிய தொகுப்புகள்தான் இவவளவு தொல்லை தருவனவாக உள்ளன. இந்தியாவிலே, மிகக்குறைவான தொகையினராக உள்ள பாரிசிகள் நிலைமையைப் பார்போமென்றால், அங்கும் வேடிக்கைதான்! பார்சிகள், 90 ஆயிரம் பேர் இருபபர் இந்தியாவிலே, ஆனால் அவர்கள் பொருளாதாரத் துறையிலே கொண்டுள்ள ஆதிக்கமோ, கோடி, கோடியாக உள்ள கூட்டத்தவரின் பாழ்க்கையைத் தங்கள் கரத்திலே கொண்டு கெலுததும் விதமாக இருக்கிறது. இந்தியாவிலே எங்கெங்கு இயற்கைச் செல்வம் அமோகமாகக் காணப்படுகிறதோ அங்கு காணலாம் அந்தச் சிறுகூட்டத்தை. தொழில் மலம் செல்வத்தை வளர்க்கும் வேலையிலே அபாரமான சுறுசுறுப்புடன் அவர்கள் உள்ளனர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலேயே மிகப்பெரிய எஃகுத் தொழிற்காலை, டாடா கம்பெனி, அது ஒரு வார்சி கம்பெனி. செல்வவான்களாகவும், கலாசசிகர்களாகவும், போக போக்யித்தை அனுபவிக்கும் சுகிகளாகவும், அதேபோது, சமுதாய சேவைகளான பள்ளிக்கூடம் நிறுவுதல், மருத்துவமனை அமைத்தல் ஆகிய காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டும. இச்சிறுகூட்டம் சீரும் சிறப்புடனும் ஜெழலிக்கிறது. செல்வம் ஈட்டும் வேரையில் மட்டுமல்ல, பத்திரிகை உலகிலேயும் பல பார்சிகள் பார்த்திபர்களாக உள்ளனர். இந்தப் பார்சிகள், இந்தியரா? அவர்களிலே பெரும்பாலோம் அவ்விதம் கூறிக்கொள்வதில்லை. தாங்கள் ஓர் தனி இனம் என்ற கூறிக்கொள்கின்றனர். அவர்களின் நினைப்பு மட்டுமா! இந்தியாவிலே உள்ள பெருங்கூட்டத்தினர் இந்தப் பார்சிகளை, இந்தியர் என்று ஏற்றுக்கொள்வதில்லை, அவர்கள் பார்சியர்கள், வெளிநாட்டார். இங்குவந்து எங்கள் செல்வத்தைச் சுரண்டிவிடுவார்கள். சுயராஜ்யம் வரட்டும, இவர்களை ஒரு கை பார்க்கிறோம் என்ற பேசுகின்றனர். இந்தப் பார்சிகளின் மதமே, தனி! ஜோராஸ்டர் என்பவர் இவர்கட்கு வழிகாட்டி (கிருஷ்ணனோ, கிருஸ்துவோ, நபிகள் நாயகமோ அல்ல) கலாச்சாரமும் தனி! பிணத்தை இவர்கள் அடக்கம் செய்கிற முறைகூடத் தனித்தான்! பிணங்களைப் புதைப்பதுமில்லை, பொசுக்குவதுமில்லை, கழுகுகளுக்கு இரையாகும்படி வீசிவிடுகின்றனர், குறிப்பிட்ட ஓரிடத்தில். ஆகவே, பார்சிகள், இந்தியர் என்று கூறுவதற்கில்லை. அவர்களும் ஒப்புக்கொள்வதில்லை, மற்றவரும் அப்பட்டத்தைச் சூட்டிக்கொள்ளப் பார்சிகள் அருகதையற்றவர்கள் என்று கூறுகின்றனர். இனி யார்தான் இந்தியர்? எங்கே காண்பது இந்தியனை? எங்கே இருக்கிறான் இந்தியன்? இந்நித்தான் இவ்வண்ணத்தான் என்று எழுதிக்காட்டொணாதவனாக இருக்கிறானே! சரி! இதோ சீக்யிர் உள்ளனர். அவர்கள் இந்தியரா என்று பார்ப்போம்! வீரமுள்ள கூட்டத்தினர், இந்தச் சுக்கியர், இவர்களின் குரு, நானக். இவர் சீக்கிய மார்க்கத்தை வகத்ததே, இந்துமார்க்கத்திலே காணப்படும் பார்ப்பன ஆதீக்கத்தை வெறுத்ததால்தான்! எனவே இந்துக்களென்று இவர்களைக் கூற முடியாது. இவர்கள் நிலை என்ன? முஸ்லீம்களுக்குப் பாகிஸ்தான் தந்தால், எங்களக்க அகாலிஸ்தான் தரவேண்டும் என்று கூறுகின்றனர். இந்தியாவிலே, தாங்கள் ஓர் தனி இனம் என்று மார்தட்டுகின்றனர். முஸ்லும்களிடம் நீங்காப் பகை கொண்டுள்ளனர். இஸ்லாமுமல்ல, இந்துமார்க்கமுமல்ல, இவர்களுடைய மார்க்கமே தனியானது. நடை உடை பாவனை முறைகளும், வேறாகக் காணப்படுகிறது. இலட்கியமும் வேறுதான்! இவர்கள் இந்தியரா? எப்படி முடியும்? இவர்களை இந்தியர் என்றால், இவர்களினின்றும் முற்றிலும் வேறுபட்டுக் காணப்படும மற்றவர்கள் யார்? எங்கே இந்தியன்! என் கண்களுக்குப் புலனாகவில்லை! நான் இந்தியா சென்றேன், இந்தியனைக் கண்டேனில்லை!

இது, நிக்கோலசின் கருத்து, தமது புத்தகத்திலே அவர் துட்டி இருப்பது. இதிலே எது தவறு? நீங்களேதான் யோசித்துக் கூறுங்கள், யார் இந்தியன்?

இந்தியா சென்றேன், இந்தியனைக் காணவில்லை! என்ற நிக்கோலசின் வாசகத்தைக் கண்டு கோபங்கொண்டுள்ளவர்கள், இங்கே உண்மையிலேயே இந்தியன் இல்லை, என்பதை உணர்ந்தால், வீண்கோபம் நீங்கப்பெற்று விவேகம் பெறுவர். அது வேர்களுடைய விருப்பத்தைப் பொறுத்தது. நிக்கோலஸ், இவ்வளவு நிந்தனைக்கு ஆளானதற்க மற்றோர் முக்கிய காரணம், தேசீயத் தலைவர்களும் தாசர்களும் சேர்ந்து எந்த விடுதலை வீரனைப்பற்றி, உரிமைப்போர்த் தளபதியைப்பற்றித் தவறான கருத்தைப் பரப்பி வைத்தார்களோ, அந்த டாக்டர் அம்பேத்காரை, இவர் புகழ்ந்துவிட்டார் எப்படி இருககும் அந்தப் பேச்சு! காதில் வீழ்ந்ததும் காந்தீயர்களுக்கு உள்ளம் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. உரையிலே, உண்மை உளதா என்பதை உணரும் நிலைமையும் இழந்து உளறுகிறார்கள். டாக்டர் அம்பேத்கார் ஒரு மட்டமான ஆள், பதவிப் பித்தர், ஜாதி வெறியர், ஏகாதிபத்யதாசர், என்று, தேசீயவாதிகள் திட்டிவைத்திருக்கிறார்கள், அத்தகைய திருமுகங்களையே, மேனாட்டினர், அதிலும் குறிப்பாக, ஆளும் வர்க்கத்தினர், படித்திருக்கின்றனர். அப்படித் தூற்றலுக்கு ஆளான டாக்டர் அம்பேத்காரைக் கண்டு பேசியபின்னர், நிக்கோலஸ்டாக்டரின் நற்பண்புகளைத் துட்டினார். இது கண்டதும், சரியான படப்பிடிப்புக் கிடைத்துவிட்டதே, இனி அம்பேத்காரின் அறிவாற்றலை அனைவரும் அறிந்துகொள்ள நேரிடுமே, அம்மட்டோடின்றி, துவேஷத்தினால் நாம் அவரைத் துற்றினோம் என்பதும் தெரிந்து விடுமே, ஆகவே நிகோலசின் தீட்டுகோல் காட்டிடும் டாக்டரைக் கண்டால் அவருடைய மேன்மையும் நமது ஈனத் தனமும் ஒரே சமயத்திலே விளங்கிவிடுமே, என் செய்வது, என்று கலங்கிய காந்தீயர்கள், இக்கஷ்டத்திலிருந்து நீங்க ஒரு சூட்சமம் கண்டு பிடித்தனர். டாக்டரின் பெருமையும், தமது சிறுமையும், வெளிவராதிருக்க ஒரே வழி, இவைகளை வெளிப்படுத்திய நிக்கோலசை, ஒரே அடியாகத் திட்டிவிடுவது! இந்தச் சூட்சமத்தோடுதான், சுடச்சுட நிக்கோலசின் மீது, வசைக் கணைகளை வீசினர், தேசீயவாதிகள்.

செட்டியாரே! என்னய்யா இது. அந்தப் பலசரக்குக் கடையிலே பாக்கு நன்றாக இராதது என்ற சொன்னீரே, பாக்கு, முதல்தரமாக இருக்கிறதாமே என்று, வாடிக்கைக்காரர், வேறோர் கடைக்காரரின் சரக்கு நன்றாக இருக்கிறது என்று கூறக் கேட்டால், வாடிக்கைக்காரர், அந்த வேறோர் கடைக்குப்போய் விட்டால் என்ன செய்வது என்று பயந்த செட்டியார், என்ன செய்கிறார்?

யாரய்யா சொன்னது அந்தக்கடையிலே பாக்கு நன்றாக இருப்பதாக என்று செட்டியார் கேட்பார்.

செட்டியாரே! எங்கள் எதிர்வீட்டுக்காரர் இருக்கிறாரே, ஏகாம்பர முதலியார், அவர்தான் சென்னார். அவர் போயிருந்தாராம், அந்தக் கடைக்கு, கரக்கைப் பார்த்தாராம். முதல் தரமாக இருக்கிறதாம் என்று வாடிக்கைக்காரர் சொல்வார். உடனே செட்டியார்; ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டடு, ஏகாம்பரமா சொன்னது! சரிதான்! அந்த ஆள்தானே சொன்னான்! ரொம்பச் சரி என்று கூறுவார்.

என்னப்பா! ஏன் சிரிக்கிறீர்? என்று வாடிக்கைக்காரர் கேட்பார். செட்டியார், வாடிகக்கைக்காரரை வலையிலே வீழ்த்திவிட்டோம் என்ற சந்தோஷத்துடன் அந்த ஏகாம்பரத்தின் பேச்சைக் கேட்டு ஏமாறாதே. அவன் அண்டப்புளுகள். சுத்த அபத்தம் பேசுபவன். அந்தப் பலசரக்குக் கடைக்காரனிடம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறான் என்று கூறுவார். உடனே வாடிக்கைக்காரர், செட்டியார் கடையிலேயே, பாக்கு அரைவிசை கொடுக்கச்சொல்லி வாங்கிப்போவார்.

இதுபோலத்தான், எந்த டாக்டர் அம்பேத்காரை, இவர்கள் இழித்தும் பழிதத்தும் பேசினார்களோ, அதே அம்பேத்காரை, நிக்கோலஸ், நாட்டினர் காணும்படி, நற்பண்புகள் தெரிய ஓர் ஓவியம் துடியதும், தேசியச் செட்டியார்கள், நிக்கோலசை ஒரே அடியாகத் தூற்றுவதன் மூலம், டாக்டர் அம்மேத்காரின் நற்குணங்களை நாட்டினர் தெரிந்துகொள்ள முடியாதபடி செய்துவிடாலம் என்று சூது செய்கின்றனர்.

தேசீய இயக்கத்தைச் சார்ந்தவர்கள், டாக்டர் அம்பேத்காரைத் தூற்றிப் பேசியதைக் கேட்டிருக்கிறோம். எழுதியதைப் படித்திருக்கிறோம். டாக்டர் அம்பேத்கார் எப்படிப்பட்டவர் என்று நிக்கோலஸ் கண்டரிந்தார் என்பதைப் பார்ப்போம்.

யார் தெரியுமா டாக்டர் அம்பேத்கார்? 18 கோடி இந்துக்களின் கண்களிலே, அவர் ஓர் தீண்டப்படாதவர்! என்று கூறுகிறார், நிக்கோலாஸ். உண்மையா, அல்லவா அது? இந்துக்களின் நினைப்பு என்ன? நினைப்புக் கிடக்கட்டும், நிலைமை ஓரளவு, சிறிதளவு அந்த நினைப்பை மாற்றக்கூடும். இந்தக்களின் புண்ய ஏடுகள், எந்த நினைப்பைத் தரும்? டாட்ர் அம்பேத்கார் ஓர் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்கள், தீண்டாத ஜாதியினர் என்றுதானே சரித்திரம் சாற்றுகிறது. இல்லையா? தீண்டாத சாதி என்ற நாசுக்க மொழிகூடக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. இந்துக்களின் பழைய அகராதிப்படிப் பேசுவதனால், டாக்டர் அம்பேத்கார், ஒரு சண்டாளர்! லண்டன் சர்வ கலாசாலையினர் அவரை ஒரு எம்.ஏ.வாக்கினர், கொலம்பியா பல்கலைக்கழகத்தினர் அவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழக்கினார். ஆனால் அவருக்கு இங்கே, இந்துக்கள், சனாதனச் சர்வகலாசாலையினர் சூட்டும பட்டம், சண்டாளர்! என்பது, நெஞ்சு வேகாதா, இதைச் சிந்திப்பவருக்கு!

பழைய விஷயமல்லய்யா, கட்டுக்கதையல்ல, புராணமல்ல, 1944ம் ஆண்டு விழயம் நான் சொல்வது என்று நிக்கோலஸ் கூறுகிறார். ஏன்? மனிதனை மனிதன் தொட்டால் துட்டு என்ற தத்துவத்தைக் காட்டுமிராண்டிக் காலத்திலே இந்தியாவிலே கொண்டிருந்தனர் போலும், என்றே வெளிநாட்டார் கருதுவார்கள், அறிவு ஆட்சி செய்யும் இந்தக் காலத்திலே, தீண்டாமை எனும் கொடுமை இந்தியாவிலே இருக்கிறது என்று கூறினால் நம்பவும் மாட்டார்கள், என்று எண்ணித்தான், நிக்கோலஸ் கூறுகிறார், இக்கொடுமை இன்றம் இருக்கிறது என்று. வெளிநாட்டவர் கூறட்டும், நிலைமை வேறு எப்படி இருக்கிறது? துண்டாதார் என்ற நிலைமை போய்விட்டதா? லண்டன், கொலம்பியா, முதலிய எங்கு சென்று என்னென்ன பட்டம் பெற்றாலும், எத்தகைய பதவிகள் பெற்றாலும் டாக்டர் அம்பேத்காரை, எந்த ஜாதி என்று இந்துக்கள் கூறுகின்றனர். நெஞ்சில் கைவைத்து, நேர்மையை மதித்து பதிலுரைக்கட்டும், இந்த நிலைமை இன்றுவரை இருபபது தகுமா? நிக்கோலாஸ் போன்றவர்களுக்கு, இந்தியாவிலே, இந்து மார்க்கத்தவர்களிலே ஒரு பகுதியினர் என்று குறிக்கப்படும், 6 கோடிக்கு மேற்பட்ட மக்களை, அதே இந்து மார்க்கத்திலேயே உள்ள் மற்றோர் கூட்டம் தொடுவதே தோஷம் என்று எண்ணுவதும், இந்த ஈனத்தனமான எண்ணத்துக்கு, ரிஷிசிரேஷ்டர்களின் ஏடுகளை ஆதாரமாகக் கொள்வதும், மனிதாபிமானமற்ற இச்செயலை, சதாசாரம் என்றும், சுதர்மம் என்றும், அயன் ஆணை என்றும், கூறிப் பெருமை அடைவதும், உண்மையிலேயே ஆச்சரியத்தைத்தானே தரும். ஒரு கூட்டம் மற்றோர் கூட்டத்தைப் பிறவியின் காரணமாகவே பேதமாகக் கருதி, இழிவாக நடததுவதைக் கண்டே நிக்கோலசுக்குக் கோபம் பிறந்தது. இது என்ன விந்தையான மதம், ஒரு பகுதியை தேவராக்கி வேறோர் பகுதியைச் சண்டாளராக்கிக் காட்டுகிறதே, என்று திகிலும் அடைந்திருப்பார், ஆனால், இந்த மப்பான்மையின் பயனாக நாட்டிலே அவ்வப்போது நடந்துவரும் அநாகரிகங்களை, அக்ரமங்களை, மிருகச் செயல்களையும் காணநேரிட்டால், நிக்கோலஸ், ஒரு புத்தகமல்ல, ஆயுட்காலமெல்லாம், அழுதிக்கொண்டிருக்கலாம், இந்த அநீதியைக் குறித்து.

தீண்டாதாரின் வாழ்க்கையை இதோ படம் பிடித்திருக்கிறார் பாருங்கள்.

தீண்டாரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? சர்வம் இல்லை மயமாக இருக்கிறது. பொதுக் கிணறுகளை அவர்கள் உபயோகிப்பதில்லை! எந்த அழுக்குநீர் கிடைக்கிறதோ அதைப் பருகவேண்டியதுதான்.

ஆதித்திராவிடப் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களிலே நுழைய முடியாது - ஐழைந்தாலும் வெளியே உட்காரவேண்டும்.

குளங்களிலே குளிக்கக்கூடாது, ஆகவே அவர்கள் அழுக்கப் படிந்து காணப்படிநேரிடுகிறது. கோயில்கள் மூடப் பட்டுள்ளன. சில இடங்களிலே, கோயில்களைத் திறந்தனர், உடனே வைகீத்துக் கும்பல், கோயிலையே சண்டாளத்வம் பெற்றதெனக் கூறிவிட்டது!

இவர்கள் மலம் கூட்டுகிறார்கள்! கூடைகளிலே, மலத்தைக் கொட்டிச் சுமந்து செல்கிறார்கள்.

என்ன செய்வது! அது அவர்களுடைய பூர்வீக கர்மானுசாரமாக ஏற்பட்டது என்று இந்துக்கள் கூறுகின்றனர். சௌகரியமான சித்தாந்தம் - உயரிடத்திலே உரித்தவர்களுக்கு!

இதைக் கூறிவிட்டு நிக்கோலாஸ் முடித்துவிடவில்லை. சில காட்சிகளையே தீட்டிக்கொட்டுகிறார். இதோ ஒரு காட்சி.

இடம்: ஒரு பங்களா. சாப்பாடு முடித்துவிட்டு, உட்கார்ந்தோம். ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியும் வந்து சேர்ந்தார். என்ஜினீயர்கள் பயிற்சி பெற இந்தியர்களைத் திரட்டுபவர் அவர். அன்ற கவலையுடனும் சோர்வுற்றும் காணப்பட்டார்.

ரொம்ப அலுப்பா இன்று?

சரியான சிக்கல்! என்று கூறிவிட்டு நாற்காலியிலே சாய்ந்தபடி, ஆள் சேர்ப்பதிலே தொல்லை வந்துவிட்டது என்று கூறினார்.

ஆட்கள் கிடைக்கவில்லையோ, போதுமானபடி

ஓ! போதுமான ஆட்கள் வருகிறார்கள். ஆனால் அவர்களை நான் திருப்பி அனுப்பிவிடுகிறேன். அதோ அங்கே பார்

இரண்டு பேர் நிற்கின்றனர். கட்டுமஸ்தான உடல். நல்ல உடை.

அந்த ஆசாமிகளைப் பார்த்தாயா? இதுவரை வந்தவர்களிலே, உடல் அமைப்பும் உள்ளப் பண்பும் விசேஷமாகக் பண்வர்கள் இவர்கள், அவர்கள் சேரவிரும்புகிறார்கள். எனக்கு அவர்களைச் சேர்த்துக்கொள்ள விருப்பமே. ஆனால் சேர்த்துக்கொள்ள முடியவில்லை

ஏன் அப்படி?
தீண்டாதவர்கள்!
இது என்ன மகாமோசம்!

தடை இல்லமல்! ஆனால் இது இந்தியாவாயிற்றே! இவர்களைச் சேர்த்துக் கொண்டால், தீர்ந்தது, என்னிடம் உள்ள ஆள்கள், வேலையை விட்டுவிட்டுப் போய்விடுவார்களே!

அவர்களின் மேலதிகாரியல்லவோ நீ. நீ கட்டளையிடலாமே.

முடியாது! அவர்கள் வரப்போகிறார்கள் என்ற வதந்தி வந்ததும், இங்கே ஒரே அமர்க்களமாகிவிட்டது. விலகிவிடுதல், கெர்வமாக நடப்பது! எதிர்த்துப் பேசுவது இப்படி நடந்தன, சரி, என்று இணங்கினேன். மற்றோர் சிப்பாய்க கலகம் துவக்க நான் விரும்பவில்லை.

இதுபோன்ற காட்கிகளைத் தீட்டுகிறார் நிக்கோலஸ். இவ்வண்ணம், உயர் ஜாதி இந்துக்களின் கொடுமைக்கு ஆளாகித் தவிக்கும் பழங்கடி மக்களின் பரிதாப றிலையை மாற்றி, அவர்கள் மனித உரிமை பெற்று வாழ மார்க்கம் காண்பதையே மகத்தான சேவை என்ற கருதும் மாவீரர் டாக்டர் அம்பேக்கார். குகைக்குள்ளே சீறிக்கொண்ருக்கிறது புலி, பசியுடன் வாலைச்சுற்றிப் பூமியிலே அடிக்கிறது, பற்களை நறநறவெனக் கடிக்கிறது. அது தெரியாமல், குகைக்குள்ளே சென்று, தங்கிச் சுகம் பெறலாம் என்று எண்ணிக்கொண்டு, செல்கிறது மான்கூட்டம்! அதைத் தடுத்துப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும, முடியுமானால், குகைக்குள்ளிருந்தே புலியுடன் மல்யுத்தம் செய்தது, அதனைக் கொல்லவேண்டும், ஆயுதமில்லை, ஆபத்து அதிகம்! புலிக்கு இரை கிடைக்காதபடி செய்து, அதனைப் பட்டினிபோட்டுச் சாகடிக்கலாம். அது தந்திரமான திட்டம், குகையைவிட்டு வெளிக்கிளம்பி, புலி இரைதேடுவதைத் தடுக்க, அந்தக் குகையின் வாயிலை அத்துவிடலாம். இங்ஙனம், ஏதேனும் ஒரு முறை தேவை, எப்படியேனும், புலியால் நேரிடக்கூடியப் பேராபத்திலிருந்து, தப்பவேண்டும். குகைதான் இந்துமதம்! புலிதான், ஆரியக்குரு! டாக்டர் அப்பேத்கார், அந்தப்புலியுடன் போரிடும வீரன்! அவரை நிக்கோலாஸ் புகழ்ந்துரைத்தால், பூசுரக் கூட்டம் பொறுத்துககொள்ளுமா! பிடி சாபம்! என்று மிரட்டுகின்றன, துரைமகனை நோக்கி.

இந்துக்களிலே உயர்ஜாதி என்று கூறிக்கொள்ளும் கூட்டத்தினர், ஆதித்திராவிடர் விஷயமாக நடந்துகொள்ளும் அக்ரமத்தை இவர் மட்டுமல்ல, வேறு பலரும கண்டித்துளளனர். காந்தியார் கூடத் தீண்டாமை போகவேண்டும் என்று கூறிடும்வரையிலே, முற்கோக்குள்ளவராகத்தான் இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் போன்ற மதச்சீர்திருத்தவாதிகளும், தீண்டாமை போகவேண்டுவதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறினர். அவர்கள் கூறினர், டாக்டர் அம்பேத்கார், போரிடுகிறார்! வாயுரையாளர்களை, வேதாந்தி என்றும், மதரட்சகரென்றும், அவதாரமென்றம் புகழ்கிறார்கள். ஆனால் , சொல்லளவிலே நில்லாதே சோர்வின்றிப் போரிடு, அக்ரமத்தை விரட்டு, அநீதியை அழித்தொழி என்று அஞ்சாது கூறிச் சீறிப் போரிடும் வீரர் டாக்டர் அம்பேத்காரை, சுயராஜ்ய வைரி என்று தூற்றுகின்றனர்.

1933ம் ஆண்டிலே பண்டிதர் மாளவியா, எல்லைப் புறத்திலே நடைபெற்ற ஒரு விருந்தின்போது, பழததைக்கூடத் தொடவில்லைப் பயந்துகொண்டு! குலாசாரம் கெட்டுவிடும் என்று அவர் அஞ்சினார், விருந்து வைத்தவர், பிராமணரல்ல, எனவே அந்த விருந்திலே கலந்து கொள்வது, மாளவியா மனதுக்கு அருவருப்பாக இருந்தது. இந்தச் சம்பவத்தை நிக்கோலாஸ் கூறிவிட்டு, இதுபோல ஜாதிவெறி, இருக்கலாமா என்ற கேட்கிறார். தவறா? நாகரிக நோக்கமுள்ள யார்தான் கேட்கமாட்டார்கள்! இந்துக்களின் மனப்பான்மையின்படி, மேனாட்டிலே ஒரு விருந்து நடப்பதாகக் கொள்வோம். எப்படி இருக்கும் அதன் இலட்சணம்! - என்று ஒரு கற்பனைக் கேள்வியைக் கிளப்புகிறார் பீவர்லி. அதையொட்டி ஒரு கற்பனைச் சித்திரமும் தீட்டுகிறார்.

சர்ச்சில், ரூஸ்வெல்ட், ஸ்டாலின், சியாங்கேஷேக், ஆகியோர்கூடி ஓர் மாநாடு நடத்துகிறார் என்ற வைத்துககொள்வோம். இந்து வைதிக முறைப்படி என்ன நடைபெறும்? ரூஸ்வல்ட் தொட்டு எழுதிய பேனாவினால், சர்ச்சிலும் கையொப்பம் துட்டிவிடுவார், உடனே ஓடுவார் ஸ்நானம் செய்ய - தீட்டாகிவிட்டிருபபாரல்லவா! சியாங் கொடுத்த தேநீரை, ஸ்டாலின், எங்கோ நினைவாக இருந்ததால், கவனியாது, வாங்கிப் பருகிவிட்டிருப்பார், அடுத்த விநாடி தெரிந்ததும், திடுக்கிட்டு ஓடுவார், பருகிய தேநீரை வாந்தி எடுக்க!

இவ்விதமாகவன்றோ இருக்கும், என்ற கேலி செய்கிறார் நிக்கோலஸ். கேலி செய்கிறாரே என்ற கோபம் வருகிறதே தவிர, இந்தக கொடுமையான, கேவலமான விலைமையை அனைவரும் ஒன்றுகூடிச் சாடிட வேண்டும் என்ற எண்ணம் எங்கேற்படுகிறது. பழமை என்றும், சம்பிரதாயம் என்றும் பலப்பலப் பேசி - இந்தப் பாகத்தை நிலைத்திருககச் செய்கின்றனர். இந்தக் கொடுமையைக் களையக் கடுமபோரிடும் வீரரே. டாக்டர் அம்பேத்கார்! அவர் பீவர்லி நிகோலசிடம் கூறினார், இந்தியாவிலே இதுவரை தோன்றியவர்களுள், காந்தியாரே, மிகப்பெரிய எதிரி, தீண்டாதாருக்கு என்று. அரிஜன சேவாசங்க கர்த்தாவை, துண்டாமை ஒழிக்கத் திருவுள்ளம் கொண்டுள்ள தேனை, தனித்தொகுதி சென்று தவிக்காதீர், உம்மைவிட்டுப் பரிந்தால் நான் உயிர்வாழேன் என்றுரைத்துப பட்டினி கிடந்த காந்தியாரைத் தீண்டாதாருக்கு முதல் நம்பர் விரோதி! என்று கூறுவதா? தகுமா, முறையா? என்று தேசீயவாதிகள் தேம்பக்கூடும. ஆனால் டாக்டர் அப்பேத்காரின் அந்தத் தீர்ப்பு பல வழக்குகளைக் கண்டு ஆராய்ந்து, ஆரஅமர யோசித்துத தரப்பட்டதேய்ன்றி, அவசரத்திலே அள்ளி வீசப்பட்டதல்ல! காந்தியார், துண்டாதாரின் முதல் நம்பர் எதிரிதான், அதில் சந்தேகம் இல்லை. எப்படி?

டாக்டர் அம்பேத்கார் விஷயம்கத் தேசீய வீரர்கள் பரப்பி வைத்த இருட்டடைப்பை நீக்கினதுகண்டு, பலரும் நிக்கோலாஸ் முது பாய்ந்தனர்! பழங்குடி மக்களின் பாதுகாவலனாக, உள்ளவரும், நற்பண்புகள் மிகுந்தவரும், வாயுரை வீரராக மட்டும் திகழம் ஒரு சிலர் போலன்றிக் கொள்கையின்படி நடப்பதில் வீரமிக்கவருமான டாக்டர் அம்பேத்காரின் எண்ணத்தை, அவருடன் உரையாடித் தெரிந்துகொண்ட பிறகே, நிக்கோலாஸ், அவரைப் பாராட்டினார், விஷயமுணரா முன்பல்ல, விருதுபெற வேண்டுமென்றுமல்ல. நிக்கோலாஸ், டாக்டர் அம்பேத்காரைப் பாராட்டினதற்குப் பதிலாகக் காந்தியாரையோ, அவருக்குப் பால்தரும வெள்ளாட்டையோ, ஜவஹரையோ, அவருடைய சகோதரியையோ, பாராட்டியிருந்திருந்தால், நிக்கோலாசின் புகழைக் காங்கிரஸ் ஏடுகள் களிப்புடன் பரப்பு இருக்கும்! எத்தனை புகழ்மாலைகள், எவ்வளவு தலையங்கங்கள்! எத்தனை இடங்களிலே வரவேற்புகள் நடந்திருக்கும்! நிக்கோலாசின் படங்கள், விதவிதமாக வெளியிடப்பட்டிருக்கும்! அவருடைய நடை அழுகு பாராட்டப்பட்டிருக்கும்! அவருடைய அரசியல் அறிவுபற்றிப் புகழ்ந்திருப்பார்! இப்படிப்பட்ட அறிவாளிகள் அல்லவா அமெரி இன்றிருக்கும் இடத்திலே இருக்கவேண்டியவர்கள் என்று தீட்டியிருப்பார்! நிக்கோலசுக்கு இது தெரியாதா? தேசீய இயக்கத்தாரின் அதிகாரத்தின் கீழ் பல பத்திரிகைகள் இருப்பதை அவர் அறியாதவரா? பிரிட்டனிலே பிடி, அமெரிக்காவிலே ஆள் அம்பு வைத்திருக்கும் அளவு, காந்திக் கூட்டத்துககுச் செல்வாக்கு இருப்பது அவருக்குத் தெரியாது. அந்த வசீகர வட்டாரத்தின் வாதத்தைப் பெற வெளிநாட்டு நிருபர் எந்தத் தந்திர முறைகளைக் கையாண்டவர் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கும். நிக்கோலாஸ் சேவாகிராமத்துக்குச் சென்று, காந்தியாரின் பூஜைவேளையில் உடனிருந்துவிட்டு, ஒரு சிறு குறிப்பு, காந்தியாரைக் கண்டேன். ஏசுவே அவராக உணர்ந்தேன் என்று எழுதி விட்டால் போதுமே, வார்த்தா வரவேற்கும், பூரிக்கும், ஆமதாபாத் ஆர்த்தி எடுக்கும். குஜராத் குதூகலமடையும், சேவகிகள் அவருக்குக் குங்குமம் வைத்துத் திருஷ்டிகழிப்பர், தேச சேவாதிகள் அவருக்குத் தேநீர் விருந்து அளிப்பர். நிக்கோலசின் புகழைப் பரப்பியிருப்பார்கள். ஏன் அவர், இந்த அளிய முறையிலே, கஷ்டமின்றிப் பெறக்கூடிய வாழ்த்துரை விருந்தைப் பெற முயலாமல், காங்கிரசாரின் கடும் வார்த்தை வீச்சை வாங்கித் தருமென்று தெரிந்திருந்தும், டாக்டர் அம்பெத்காரைப் பாராட்டி எழுதினார், நிக்கோலாஸ், எதிர்ப்புக்கு அஞ்சாதவர், புகழை இலஞ்சமாகப் பெற்று இலக்கிய விபசாரம் செய்ய மறுப்பர், எனவேதான், கனல் கக்கிகள் தன்மீது பாய்வர் என்பது தெரிந்திருந்தும், கலங்காது, கவரைப்படாது, மனதிலே சரியெனப்பட்டதை, விளைவு பற்றிய விசாரமின்றி, வீரமாக உரைத்தார். அந்தக்காரம், தேசீயத் தோழர்களுக்கு எரிச்சலை உண்டாக்கிவிட்டது. தேசீயத் தோழர்களின் தாக்குதலுக்கு மட்டுமல்ல, ஆங்கிலோ - இந்தியரின் எதிர்ப்புக்கும் ஆளானால். சென்ற கிழமை டில்லி சட்டசபையிலே, ஆங்கிலோ - இந்தியப் பிரதிநிதி மிஸ்டர் அந்தோனி, நிக்கோலாஸ், தன் சமூகத்தவரை எள்ளி நகையாடினார், இல்லாததும் பொல்லாததுமாக ஏதேதோ எழுதினார், இந்தியரை அவமதித்தார், இறுமாப்புக் கொண்டிருக்கிறார் என்று சரமாரியாகப் பேசினார். தேசீத் தாள்களிலே, நிக்கோலாசுக்கு அந்தோனியின் சவுக்கடி என்று அலங்காரத் தலைப்புகளுடன் செய்தி வெளியிடப்பட்டது. அந்தோனியின் ஆத்திரத்துககுக் காரணம் நிக்கோலாஸ் சட்டைக்காரரின் போக்கை அச்சமின்றிக் கண்டித்ததுதான், சட்டைக்காரர்களின் சுபாவம், எப்படியேனும் தாங்கள் அசல் ஐரோப்பியர் என்று கூறிப்பலரும் அதனை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்பதுதான், இதற்காக, அந்தச் சமூகம், படாத பாடுபடுகிறது பேசாத பொய் கிடையாது. தங்கள் பூர்வோத்திரத்தைப் பற்றிப் புரளிகள் விடுவர். பிரிட்டனிலே முபபாட்டன இருந்தான் என்பர். ஸ்பெயினிலே, தாய்வழியினர் வாழ்ந்தனர் என்பர். எதையேனும் கூறி, தாங்கள் ஓர் கலப்பு என்பதை மறைத்து, அசல் என்று கூறுவர். இதனைக் கூறினார் நிக்கோலாஸ், கொஞ்சம் அனுதாபத்தோடுங்கூட. இது மிஸ்டர் அந்தோனிக்குக் கோபமூட்டிவிட்டது. நிக்கோலாஸ், சட்டைக்காரரின் சுபாவத்தை எடுத்து கூறியதிலே கோபம் பிறந்ததேயொழிய, தவறாகச் சொன்னார், திரித்துக் கூறினார் என்று மிஸ்டர் அந்தோனியால் ருஜுப்பிக்க முடியவில்லை. அவேரேகூட, அதே சட்டசபையிலே, தன் சமூகத்தவர் சிலரிடையே, தமது சமூக நிலையை மறைத்துக் கொண்டு, ஐரோப்பியர் என்ற பாத்தியம் கொண்டாடும்